• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Knowledge is invariably a matter of degree: you cannot put your finger upon even the simplest datum and say this we know.

T.S.Eliot
(1888-1965)


And knowledge keeps growing too!

We can never know anything fully.

The more we learn the more is being discovered!

It is said that a specialist is one who knows

more and more about less and less.

So one fine day he will know everything about nothing! :rolleyes:
 
சும்மா இருக்கச் சுகம் சுகம் என்று கருதியெல்லாம்

அம்மா நிரந்தஞ் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே

பெம்மான் மௌனி மொழியையுந் தப்பியென் பேதமையால்

வெம்மயக் காட்டில் அலைந்தேன் அந்தோ! என்விதிவசமே!

தாயுமானவர்.

சும்மா இருப்பதே சுகம் ...சோம்பேறியாக அல்ல!
 
ஆவித் துணையே அருமருந்தே என்தனை நீ
கூவி அழைத்து இன்பம் கொடுத்தால் குறைவாமோ?
தாயுமானவர்
 
இன்ப நிட்டை எய்தாமல் யாதெனினுஞ் சென்று மனந்
துன்புறுத்தல் வன்பிறவித் துக்கம் பராபரமே.
தாயுமானவர்.

தெவிட்டாத இன்பம் தெய்வம் ஒன்றே. இன்பம் உலகப் பொருட்களைச் சாரும் போது தெவிட்டும் இன்பம் ஆகிவிடும். தூயநிலையில் இருக்கும் தெய்வ இன்பம் பேரின்பம்.
உலகப் பொருட்கள் தரும் இன்பம் சிற்றின்பம்.
 
பொய்ச்சார் புர மூன்றும் எய்தாய் போற்றி!
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி!
அப்பர்.

கனவு, நனவு, சுஷுப்தி என்னும் மூன்று அவஸ்தைகளில் நாம் உழல்கின்றோம்
இவை மூன்றும் இறைவனை மறைத்து விடுகின்றன.
இவற்றை அழித்தால் நம் இறைவனை அறியமுடியும்
திரிபுரம் எரித்த இறைவன் துணையோடு
நாம் இந்த திரிபுரங்களை அழிக்க வேண்டும்.
 
Ennangalin Vannak Kalavai - Visalakshi Ramani


நான்கு நிலைகள்


“உறங்குவது போலும் சாக்காடு”, நாம் அறிவோம்.
உறங்கும் போது, நாம் ஆன்மாவில் ஒடுங்குவோம்.
இடம், பொருள், ஏவல், காலம் எல்லாமே,
இடமில்லாது அப்போது மறைந்து போகுமே!

கனவுலகு புகுந்ததும், நாம் கடவுள் ஆகின்றோம்!
நினைத்தைப் படைக்கும், திறன் அடைகின்றோம்!
“வானம்!”, என்றவுடன் நீல வானம் வந்திடும்!
“வனம்!” என்றவுடன் பச்சை வனம் உருவாகிடும்!

ஆதவன், சந்திரன், தாரகைகள் எல்லாம்,
பேதமில்லாமல் ஓடி வரும், அழைத்ததும்!
எந்தப் பொருளும், இடமும், காலமும்,
எந்த விலங்கும், மனிதனும், பறவையும்,

நினைத்த நொடியில் உருவாகிடுவர்;
நினைத்த போது மறைந்து செல்லுவர்!
நினைத்த படியே பேசிப் பழகுவர்;
நினைத்த செயல்களையே புரிவர்.

நம் சின்ன அறிவும், சிறிய அனுபவமும்,
நம் சின்னத் திறனும், சிறிய சக்தியும்,
சொன்னபடி உருவாகும் ஒரு பெரும்
மன்னுலகம்; ஒரு பெரும் மாய உலகம்!

கண்களை விழித்தால், காணவே காணோம்,
கற்பனையில் உருவான அந்த மாய உலகம்!
கனவைத் தாண்டினால், கனவு பொய் ஆகும்.
நனவு நிலையில், கனவுகள் பொய் ஆகும்.

நனவைத் தாண்டினால்… என்ன ஆகும்?
நனவைத் தாண்டினால், நனவும் பொய் ஆகும்!
நிறைந்த அறிவும், அளவில்லா அனுபவமும்,
குறைவில்லாத் திறனும், குவிந்த ஞானமும்,

செறிந்த அந்த உயரிய இறைவனின்,
சிறந்த கற்பனையே நம் நனவுலகம்!
கனவுலகு நம் கற்பனையின் படைப்பு,
நனவுலகு அவன் கற்பனையின் படைப்பு !

கனவைத் தாண்டினால், கனவு மறைவதுபோல்,
நனவைத் தாண்டினால், இவ்வுலகே மறையும்!
எங்கும் நிறைந்த இறைவனே இருப்பான்.
எல்லாப் பொருட்களும் அவனாக இருக்கும்!

நாம, ரூப, பேதம் இன்றி எல்லாம் அவனே.
நாம் காண்பதெல்லாம் எங்கும் பிரம்மமே.
இந்த அற்புத நிலையே துரியம் ஆகும்.
இந்த நிலை அடைந்தால் துயரம் போகும்!

உறக்கம், கனவு, நனவு, உறக்கம் என்றே,
கிறங்குகின்றோம் நாம் வாழ் நாளெல்லாம்;
உறக்கத்தையும், கனவையும் கடப்பது போல் ,
நனவையும் கடந்து, துரியத்தை அடைந்தால் ….

இல்லை பயங்கள் , இல்லை பாவங்கள் ,
இல்லை மொழிகள், இல்லை செயல்கள் ,
இல்லை பேதங்கள், இல்லை தொல்லைகள்
இன்பமே எங்குமே ! இன்பமே என்றுமே !

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
அருளானோர்க்கு அகம்புறம் என்று உன்னாத
பூரண ஆனந்தமாகி
இருள் தீர விளங்குபொருள் யாது? அந்தப்
பொருளினையாம் இறைஞ்சி நிற்பாம்.
தாயுமானவர்.

எங்கும் நிறைந்த பரம்பொருள் நமது உள்ளும் புறமும் ஓயாது ஒளிரும்.
மனத்தின் இருளை அகற்றும். அந்தப் பொருளை நாம் இறைஞ்சி நிற்போம்.
 
அன்பர்பணி செய்ய எனை
ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானே வந்து
எய்தும் பராபரமே.
தாயுமானவர்.

சித்த சுத்தி உண்டு பண்ணுவது சேவை.
அஹங்காரத்தை அகற்றுவது சேவை.
ஜீவபோதத்தை ஒடுக்குவது சேவை.
பரபோதத்தை வளர்ப்பது சேவை.
பணிவிடை செய்பவன் வள்ளல் ஆகிறான்.
அவனுடைய வாழ்வுப் பெரு வாழ்வாகிறது.
 
தூய அறிவான சுகரூப சோதிதன்பால்
தீயில் இரும்பெனத் திகழுனாள் எந்நாளோ?
தாயுமானவர்.

தீயில் இட்ட இரும்பு தீப் போலவே மாறிவிடும்
தீயின் உஷ்ணத்தையும், நிறத்தையும் அடைந்துவிடும்.
உன்னுடன் கலந்து நான் உன்னைப் போலவே மாறுவதற்கு
எனக்கு நீ உதவி புரிவாய் என் தூய அறிவான பராபரமே.
 
தூயநிறை சாந்த தேவதையாம் உனக்கே
தொழும்பன் அன்பு அபிஷேக நீர்.
தாயுமானவர்.

உள்ளக் கொதிப்பு அடங்கி நான் சாந்தமாக இருக்க அண்ணலே நீ அருள் புரிவாய்.
விலங்குத் தன்மை இருக்கும்போது மனிதன் சாந்தமாக இருக்க மாட்டான்.
உள்ளம் மேன்மை பெரும் அளவுக்கு சாந்தம் தானே வந்து அமைகிறது.
சாந்தத்தை நம்முடைய வாழ்வில் நிலைத்து இருக்கச் செய்ய வேண்டும்.
 
Visalakshi Madam back here due to an electric fault in One phase of my apartment could not log in much .Now that problem has been rectified and so can log on easily .

Try not to become a man of success, but rather try to become a man of value." -- Albert Einstein
 
Visalakshi Madam back here due to an electric fault in One phase of my apartment could not log in much .Now that problem has been rectified and so can log on easily .

Try not to become a man of success, but rather try to become a man of value." -- Albert Einstein

Cool isn't that a man as highly successful as the :thumb:

great Einstein realized the value of values??? :clap2:
 
Dear Mr. M. Krishna,
Sometimes I start feeling lonely in the forum,
with everybody being so silent and invisible!!!
Well Visalakshi Madam

As for me I am not an active debater in any forums but only contribute what I feel worthy of contributing i.e quotes etc .Right now I am on a study of Bhagavad Gita and use Swami Dayananda's Gita Home Study Course and find it very enriching .I am making some important points of the same and will share it here regularly as and when I progress in my study .
 
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி
ஊனத் தவிர்க்கும் பிரானே போற்றி.
அப்பர்.

உன் பொருட்டு நான் நைந்து உருக வல்லேன் எனில் நான் உன்னை நிச்சயமாக அடைந்துவிடுவேன். மனிதன் எதன் பொருட்டு முயலுகின்றனோ அதை அடைகிறான்.
அடையப் படும் பொருள் பெரியது என்றால் நாட்டமும் பெரியது ஆக வேண்டும்.
 
Well Visalakshi Madam

As for me I am not an active debater in any forums but only contribute what I feel worthy of contributing i.e quotes etc .Right now I am on a study of Bhagavad Gita and use Swami Dayananda's Gita Home Study Course and find it very enriching .I am making some important points of the same and will share it here regularly as and when I progress in my study .

Gita has something for every human being.
Hope you will share the fruits of your study with us here.
 
Swami Dayananda on Human Strength and Human weakness :

The factual response is the approach to situations of a truly practical person .One is most practical when one sees situations objectively .This is the real human strength . Human strength is not found in powerful miracles but in the quiet mind of the one who faces situations as they are . Such a one is a strong person . Human weakness is the inability to accept situations , to face facts . Human strength is the strength of reducing situation to simple facts .

Swami Dayananda Saraswathi
 

Latest ads

Back
Top