• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Gita has something for every human being.
Hope you will share the fruits of your study with us here.


Sure will do .Here is a start of the same :
Swami Dayananda on the Study of Bhagavad Gita

One is disturbed by so many happenings around. To be insulated from the disturbances, one shouldknow the greater purpose of life. Study of Bhagavad Gita will help one have proper attitude and clear knowledge - Swami Dayananda Saraswati
 
My guru used say the same thing in a much simpler way.
Just like Day and night, good and bad always coexist.
We never ever make any one of them disappear.
But we can protect ourselves from the bad by prayers
and pari poorna saranaagathi to our ishta deivam. :pray:...:hail:
 
காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்
அகண்டா காரசிவ போகமென்னும் பேரின்ப
வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய்,
ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிட
நாம் இனியெடுத்த தேகம் விழுமுன்
புசிப்பதற்குச் சேர வாரும் சகத்தீரே!
தாயுமானவர்.

தேவதேவா! உன் சன்னதியைச் சேருவதற்கு எந்த நேரமுமே நல்ல நேரம் எனில் நான் வீணே காத்திருப்பது எதற்காக?
பரமபதத்தின் வாயில் திறந்தே வைக்கப்படுள்ளது . ஆனால் நாம் தான் அதில் நுழைவதற்கு மறுக்கிறோம்.
விஷயங்களில் பற்று உள்ளவரைக்கும் இதுவே தொடரும்
உலக விஷயங்களை விட்டு விட்டு இறைவனைச் சிக்கெனப் பற்றிக் கொண்டால் சிவபோகம் என்னும் ஆனந்தப் பெருவெள்ளத்தில் இப்போதே நீந்திக் களிக்கலாம்.
 
குற்றங் குறையக் குணமேலிட அருளை
உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே.
தாயுமானவர்.

தீயைச் சார்ந்த இரும்பும் தீயாக மாறிவிடுகிறது.
நல்லவர் இணக்கம் நமக்கு நலனைத் தருகிறது.
சிறு நூலை ஒரு சிறுவனும் துண்டாக்கி விடலாம்.
பல நூல்களை முறுக்கினால் கிடைக்கும் வடத்தில்
யானையையும் கட்டமுடியும்.
நல்லவர் சகவாசம் முறுக்கின கயிற்றைப் போன்றது.
ஒற்றுமையும், உறுதியும் உடையது.
அறநெறியிலிருந்து வழுவாமல் நம்மைக் காப்பது
 
தந்தது உந்தன்னைக் கொண்டது எந்தன்னைச்
சங்கரா! ஆர்கொலோ சதுரர்?
அந்தமொன்றில்லாத ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால் ?
மாணிக்க வாசகர்.

ஒரு படி மேலே போகக் கீழே இருப்பதை விட வேண்டும்.
மேலானதைப் பெறக் கீழானதை விட்டு விட வேண்டும்.
சிறுமையை அகற்றுபவருக்குப் பெருமை கிடைகிறது.
அஞ்ஞானத்தை விட்டவருக்கு மெய்ஞானம் கிடைக்கிறது.
சுயநலத்தை விட்டவனுக்கு எல்லாம் சொந்தம் ஆகிறது.
நான் எனது என்பதை ஒதுக்கினால் தெய்வீகத்தைப் பெறலாம்.
பொருளுக்கு ஏற்ற விலை கொடுக்கக வேண்டும் அல்லவா?
ஒப்பற்ற இறைவனை அடைய ஒப்பற்ற விலை கொடுக்க வேண்டும்.
 
வாக்கால் மனத்தால்
மதிப்பறியாய்! நின்னருளை
நோக்காமல் நோக்கிநிற்கும்
நுண்ணறிவு காண்பேனோ?
தாயுமானவர் .

மனத்தில் மனிதன் கொடுக்கும் மதிப்புக்கு ஏற்றவரே வெளியுலகில் வேலை நடைபெறுகிறது. இன்ப துன்பங்கள் வெளியுலகில் இல்லை. மனத்தின் இன்பமும் துன்பமுமே வெளியுலகில் உள்ளதைப் போலத் தோன்றுகின்றன. மனது கொடுக்கும் மதிப்புக்கு மேலே புறவுலகுக்கு மதிப்பு எதுவும் இல்லை.
 
வஞ்சனையும் பொய்யும்உள்ளே
வைத்து அழுக்கா றாய்உளறும்
நெஞ்சனுக்கும் உண்டோ
நெறிதான் பராபரமே.
தாயுமானவர்.

தன்னிடம் உள்ள குற்றம் குறைகளை மறைத்து வைக்கும் மனப்பான்மை மனிதனிடம் உள்ளது.
அவற்றை எவரேனும் சுட்டிக் காட்டினால் அவனால் அதைப் பொறுக்கவே முடியாது.
தன் குற்றம் குறைகளைப் பிறர் ஆராய்ச்சிக்கு உட்படுத்துபவனே அவற்றைக் களைய வல்லவன் ஆகின்றான். உலகையெல்லாம் ஒழுங்கு படுத்தும் முன்பு தன்னைத் தானே ஒழுங்கு படுத்திக் கொள்ளவேண்டும்
 
Do not derive satisfaction that you have done a puja well simply because you have oferred fragrant flowers, special perfumes and a variety of eatables as Naivedhya. Without offering one’s mind, no amount of other offering will make the Puja complete.- Sri Sri Bharati Tirtha Mahaswamigal
 
பக்தி வலையில் படுவோன் காண்க.
மாணிக்க வாசகர்.

மனிதனை இறைவனோடு பிணைத்து வைப்பது பக்தி.
பக்தியைப் பெறுவதும் இறைவனைப் பெறுவதும் ஒன்றே.
பக்தன் தனக்கு என்று எதையுமே கேட்பது இல்லை.
தன்னிடம் உள்ளவற்றையும் உவந்து அளிக்கின்றான்.
உயிர்களுக்குத் தன்னுடைய அன்பை வழங்குகிறான்.
தெய்வத்துக்குத் தன்னையே வழங்குகிறான்.
கடவுளையே கடன்காரன் ஆக்கிவிடுவான் பக்தன்.
 
[h=1]நாற்றம், நறுமணம்[/h]
அடிக்கும் அலைகடலில் படகேறி,
பிடித்து வந்த மீன்களை எல்லாம்,
எடுத்துச் சென்று அலைந்து திரிந்து,
கொடுப்பார் செம்படவப் பெண்டிர்.

இருண்டு, கறுத்து, உறுமும் வானமும்,
திரண்டு பொழியும் மேகமும் கண்டு,
இருக்க நல்ல இடம் தேடி ஓடியவர்க்கு,
இருக்க இடம் தந்தான் ஒரு பூக்காரன்!

மல்லிகை, முல்லை, ரோஜா மலர் என,
மணக்கும் பூ வகைகளை வைத்திருந்த,
அறையினை அளித்தான் அவர்களுக்கு;
அறையில் அமர்ந்தனர் அப்பெண்கள்.

“என்ன நாற்றம் தாங்கவில்லையே!”
என்று முதலில் ஒருத்தி கூற, “ஆமாம்,
எனக்கும் மூச்சு முட்டுகிறது பூ நாற்றம்!”
என்று மற்றவர்களும் கூறலாயினர்.

உள்ளவர்களில் அறிவு மிகுந்த பெண்
உள்ளத்தில் உதித்தது ஒரு எண்ணம்;
மீன் கூடையை எடுத்து முகர்ந்தால்,
மீன் வாசனையில் பூ நாற்றம் போகும்!

அனைவரும் தம் தம் மீன் கூடைகளை,
ஆசையுடன் எடுத்து முகர்ந்து கொண்டு,
மழையும் நின்று மழை மேகங்களும்,
மறையும் வரையில் காத்து இருந்தனர்.

மணமும், நாற்றமும் அவர் அவர்களின் ,
மனத்தை பொறுத்ததே அறிந்திடுவோம்!
பழகிய நாற்றமும் நறுமணமே ஆகும்;
பழகாத நறுமணமும் நாற்றமே ஆகும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
மண்புழு, ஒட்டுண்ணி


மண்புழுவும் ஒட்டுண்ணியும் ஒருபோல
மற்றவற்றைச் சார்ந்து வாழ்ந்தாலும்,
நன்மைகள் பல செய்யும் மண் புழுக்கள்;
நாசம் செய்துவிடும் ஒட்டுண்ணிகள்.

மண்ணை உண்டு வெளியேற்றி அதன்
மாண்பைப் பெருக்கும் மண்புழுக்கள்.
உள்ளே காற்றுப் புக வழிகள் செய்து,
உழவனின் நண்பன் எனப் பெயர் பெறும்!

ஒட்டுண்ணிகள் ஒட்டிப் பிழைப்பவை;
ஒட்டிக்கொண்ட இடத்தையே நன்றாக
உறிஞ்சி உறிஞ்சி அவ்விடத்தில் உள்ள
உயிர்ச் சத்தையே அழித்து விடுபவை.

மனிதரிலும் உண்டு இவ்விரு வகை,
மனத்தையே தாக்கும் இவ்வுண்மை!
சேர்ந்த இடத்தை சிறப்புறச் செய்பவர்,
சேர்ந்த இடத்தை நாசம் செய்பவர் என!

தன் உயிர் அளித்தேனும் காப்பர் சிலர்
தனக்கு இடம் அளித்த பெருமக்களை;
தான் உயிர் வாழ வேண்டித் தன்னைத்
தாங்குபவரையே அழித்துவிடுவர் சிலர்.

சேர்க்கும் முன்பே நன்கு சிந்தியுங்கள்,
சேர்த்தபின் ஏதும் செய்ய இயலாது!
சேர்க்கப் போவது மனித உருவில் உள்ள
சிறந்த மண் புழுவா அன்றி ஒட்டுண்ணியா?

வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி.













 
Supreme Godhead declares Himself as the begetting Father who impregnates the seeds of living entities in the womb of Mother Nature who in turn gives birth to all varieties of living species. So the plain truth is that the Supreme Godhead is the Father, the Nature is the Supreme Mother and all living entities are so many children of Almighty Father Godhead and the Mother Nature. The whole arrangement is therefore a family unit and one should wonder as to why there is so much anomaly in this universal family affair.



Sri La sri Prabupadha
 
1. A murderer is condemned to death. He has to choose between three rooms. The first is full of raging fires, the second is full of assassins with loaded guns, and the third is full of lions that haven't eaten in 3 years. Which room is safest for him?

2. A woman shoots her husband. Then she holds him under Chemical Liquid for over 5 minutes. Finally, she hangs him. But 5 minutes later they both go out together and enjoy a wonderful dinner together. How can this be?

3. What is black when you buy it, red when you use it, and gray when you throw it away?

4. Can you name three consecutive days without using the words Wednesday, Friday, or Sunday?

5. This is an unusual paragraph. I'm curious as to just how quickly you can find out what is so unusual about it. It looks so ordinary and plain that you would think nothing was wrong with it. In fact, nothing is wrong with it! It is highly unusual though. Study it and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching!



THE ANSWERS TO ALL FIVE THE RIDDLES ARE BELOW:

1. The third room. Lions that haven't eaten in three years are dead. That one was easy, right?

2. The woman was a photographer. She shot a picture of her husband, developed it, and hung it up to dry (shot; held under Chemical Liquid and hung).

3. Charcoal, as it is used in barbecuing.

4. Sure you can name three consecutive days, yesterday, today, and tomorrow!

5. The letter, which is the most common letter used in the English language, does not appear even once in the paragraph.

 
தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்றலது
பின்னை ஒரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே.
தாயுமானவர்.

இறைவா! உன்னை அடைய விரும்பும்போதே நான் புதிய பிறவி எடுத்துவிடுகிறேன்.
இரு பிறப்பாளன் என்று அப்போது என்னை இயம்புவது பொருத்தமாகும்.
புதிய வீடு கட்ட வேண்டும் என்றால் பழைய வீட்டை அகற்ற வேண்டும்.
கோணலை நிமிர்த்திவிட்டால் மனம் நேராகிறது
கோபத்தை நீக்கிவிட்டால் சாந்தம் அடைகிறோம் .
முன்கோபம் போனால் அமைதி அடைகிறோம்.
தற்பெருமையை நீக்கினால் பணிவு வந்து சேருகிறது.
பொறாமை நீங்கினால் மனம் தூய்மை அடைகின்றது.
மனமாசுகள் நீங்கினால் புதிய மனிதன் தோன்றுகிறான்
இரு பிறப்பு என்பது இதுவே ஆகும்.
 
துன்பக் கண்ணீரில் துளைந்தேற்குஉன் ஆனந்த
இன்பக் கண்ணீர் வருவது என்னால் பராபரமே.
தாயுமானவர்.

களிமண்ணைத் தண்ணீர் பக்குவப்படுத்துகிறது
நம் உள்ளத்தை கண்ணீர் பக்குவப்படுத்துகிறது
துன்பக் கண்ணீர் உள்ளத்தைச் செப்பனிடுகிறது.
உள்ளம் ஞான விளைச்சலுக்கு ஏற்றதாகிறது.
துன்பம் அதை மிருதுவாக்குகிறது.
விசாரம் உள்ளதை உழுகின்றது.
பின்பு அங்கு ஞானம் விளைகிறது.
 
Ref # 1414

Sure you can name three consecutive days, yesterday, today, and tomorrow!

It becomes even simpler in Hindi where we can just say

kal, aaj, kal using just two words.

Or go for kal, aaj, parsoom - if we want to make use of three words.

 
ref #1414

1. A murderer is condemned to death. He has to choose between three rooms. The first is full of raging fires, the second is full of assassins with loaded guns, and the third is full of lions that haven't eaten in 3 years. Which room is safest for him?


With three dead lions rotting for three years, will the room be really safe to enter??? :bolt:
 
ref #1414

2. A woman shoots her husband. Then she holds him under Chemical Liquid for over 5 minutes. Finally, she hangs him. But 5 minutes later they both go out together and enjoy a wonderful dinner together. How can this be?

The future generation will never be able to understand this puzzle.
297.gif


With the film-less photograph taken digitally, they may not :photo:

understand this unless explained in a great detail. :blah:
 
ref #1414

5. This is an unusual paragraph. I'm curious as to just how quickly you can find out what is so unusual about it. It looks so ordinary and plain that you would think nothing was wrong with it. In fact, nothing is wrong with it! It is highly unusual though. Study it and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching!

If writing one paragraph needs so much recognition how about an entire book written without using the letter e even once???? :first:
 
Source: 184. Laudable Lipogram | The wonderful world we live in

[h=1]Laudable Lipogram[/h]

Books in which certain letters of the English alphabets are omitted deliberately are called Lipograms. Writing such a book is difficult by itself. But imagine writing a novel, without the use of the letter “e”– the most used alphabet in English!

But the American author Ernest Vincent Wright has performed this miraculous task. He had written 300 pages long novel “Gadsby” containing more than 50,000 words, without using the vowel “e” even once!

Wright had taped down the key with “e” on it, so that it would be impossible to use it. He chose his words carefully and succeeded in writing a novel, in which words seem to flow freely and naturally and are not noticeably forced or strained!

It took him 165 days to write this unique book. Not a single word of the text contains the letter “e”! However the strain of writing such a book was too much for him. He died on the very day of the publication of his book!

Gadsby has become highly prized by the collectors of rare books. Today a copy can be sold for more than 1000 U.S Dollars!

Wright’s willful wrestling with words was not wholly wasted after all!

Visalakshi Ramani
 
[h=5]The Lord has the entire world under His control. He creates, preserves and destroys it; He gives the appropriate results for all our actions. It is towards Him that we must develop bhakti. If we are unable to do anything else, we can chant the Lord’s name. This is the best Dharma, and through it we can achieve the aim of our life. We can attain shreyas. - Sri Sri Bharati Tirtha Mahaswamigal[/h]
 
Lord Krishna says he is the japa yagna among all the yagnas.
Doing Japam is easy and it can be done anywhere, at any time by anyone.
In fact if we can relate to our breath, then we will be doing constant japam all our lives!!!
 
Last edited:
[h=1]அனைத்தும் அவனே[/h]
அனைத்துப் பொருட்கள் மட்டுமின்றி
அனைத்து உயிர்களும் நம் இறைவனே;
ஆயினும் அவன் பெருமையைத் தெரிவிப்பன
அரிய பொருட்களாகின்ற அவன் தன்மையே.

அகர முதல எழுத்து என அறிவோம்; அதில்
அகரமாக உள்ளவன் அந்தக் கண்ணனே!
மந்திரங்களில் சிறந்த பிரணவத்திலும்
மறைந்து ஒளிர்பவன் அந்தக் கண்ணனே!

மனுச் சக்ரவர்த்தியாக அரசர்களுக்குள்ளும்,
முனிவர்களில் சிறந்த நாரதர், பிருகு ஆகவும்,
அசுரர்களில் சிறந்த பிரஹலாதனாகவும்,
பசுக்களில் சிறந்த காமதேனுவாகவும்,

பறவைகளில் சிறந்த கருடனாகவும்,
பாம்புகளில் சிறந்த அனந்தன் ஆகவும்,
நதிகளில் சிறந்த கங்கையாகவும்,
துதி செயும் அந்தணருள் பலியாகவும்,

அனைத்து யாகங்கள், யக்ஞங்களிலும்
அனைவரும் செய்ய வல்ல ஜபமாகவும்,

படை வீரரில் சிறந்த அர்ஜுனனாகவும்,
பக்தர்களில் சிறந்த உத்தவராகவும்,

புஜ பலசாலிகளின் நிஜ பலமாகவும்,
தேஜஸ்விகளின் நல்ல தேஜஸ் ஆகவும்,
காணும் இடமெல்லாம் அரிதாய் உள்ளவை
கண்ணனின் வடிவமே, அழகே, பலமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
கள்ளார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.
திருக்குறள்.

இயற்கையே களவுக்கு ஏற்ப தண்டனை வழங்குகின்றது.
உழைக்காமலேயே உண்பவன் ஒரு கள்வன்.
அவனுக்கு அஜீரணம் என்னும் தண்டனை கிடைக்கிறது.
மிகைப்பட உண்பவன் மற்றொரு கள்வன்.
அவனுக்கும் ஜீரணமின்மை என்னும் தண்டனை கிடைக்கிறது.
பயன்படுத்தாமல் பொருட்களைச் சேகரித்து வைப்பவர்
மனக் குமுறல் என்னும் தண்டனைக்கு ஆளாகிறார்கள்.
உலகப்பொருட்களை நாடுவது களவு!
இறைவனை நாடுவது கள்ளாமை!!
 

Latest ads

Back
Top