• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

thought+provoking.png

But thinking about them will ruin the present -

even if they are not included in the future!!!
 
தாக்கு நல்லானந்த ஜோதி - அணு
தன்னிற் சிறிய எனைத்தன் அருளால்
போக்கு வரவற் றிருக்குஞ் - சுத்த
பூரண மாக்கினான் புதுமைகாண் மின்னே.
தாயுமானவர்.

அலைகள் கடலுக்கு அன்னியமாக எப்போதுமே இருப்பதில்லை.
சிறிய அலையாகினும் சரியே, பெரிய அலை ஆகினும் சரியே,
அவை எப்போதும் கடல் மயமாகவே இருக்கின்றன.
ஜீவன் எத்தனையோ உபாதிகளுடன் பொருந்தி உள்ளது.
எத்தனையோ வரைமுறைகளுக்கு உட்பட்டு இருக்கின்றது.
ஆயினும் ஜீவன் எப்போதும் பூரணத்திலேயே புதைந்து கிடக்கின்றது.
இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்து கொண்டால்,
நாம் எப்போதும் பூரணத்திலேயே நிலைத்து நிற்பதை உணர்ந்து கொள்வோம்.
 
கண் மேலும் கண்ணொன்று உடையாய் போற்றி
கயிலை மலையனே போற்றி போற்றி.
அப்பர்.

கண்ணில்லாத கழுகு வெறும் சிறகின் உதவியால் பறக்க முடியாது.
ஞானக் கண் இல்லாமல் செய்யும் கர்மங்களும் அத்தகையதே.
இறைவா! எனக்கு ஞானக் கண்ணைத் தருவாயாகுக.
 
நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய் பராபரமே!
தாயுமானவர்.

மனதின் பரிபக்குவத்துக்கு ஏற்ப ஒருவனின் வாழ்வில்
மேன்மையும் கீழ்மையும் வந்து அடைகின்றன.

நரக்கத்தைச் சுவர்க்கம் ஆகுவதும் மனதே.
சுவர்க்கத்தை நரகம் ஆகுவதும் மனதே.

பண்பட்ட மனமும் சீரிய வாழ்வும் ஒன்றே ஆகும்.
 
குடியைக் கெடுத்துக் குடும்பத்தை
விரட்டி விட்ட இருவர் இப்போது
கரிய முகத்துடன் பேச ஆளின்றித்
திரிவது முற்றிலும் உண்மையே!
 
The other way of putting this idea is
"The tough get going when the going gets tough."

Man prefers CHOICE-LESS existence since
it MAKES him to do THINGS which he CAN do
and he does them because he has to do them.
 
[h=5]“Time passes unhindered. When we
make mistakes, we cannot turn the
clock back and try again. All we
can do is use the present well.”

~Dalai Lama~
[/h]
 
தோல்விக்குத் துணை சோர்வும், சோம்பலும். :bored:....:sleep:

வெற்றிக்கு வித்து வீரமும், தீரமும். :thumb:....:ballchain:
 
வாழாது வாழவே இராமனடியால் சிலையும்
மடமங்கை யாக வில்லையோ?
தாயுமானவர்.

அறியாமையால் அகல்யை ஒழுக்கம் தவறினாள்.
அதனால் கல்லாகும் படிச் சபிக்கப் பட்டாள்.
கல்லாகவே கிடந்தாள் அவள் நெடுங்காலம்.
பெண்ணாக மாறினாள் ராமன் காலடி பட்டதும்.
அறியாமையால் நாம் தெய்வப் பெற்றியை இழந்துள்ளோம்.
அதை இழந்து எத்தனை காலம் ஆனதோ அதையும் அறியோம்
தெய்வச் சிந்தனையால் தீண்டப்பட்டவுடன் நாம்
தெய்வத் தன்மையை மீண்டும் பெறுவது உறுதி.
 

Latest ads

Back
Top