• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Both the good and the pleasant present themselves to a man.The calm soul examines them well and discriminates.Yea, he prefers the good to the plesant;but the fool chooses the plesant out of greed and avarice.1 .2. 2

Katha Upanishad
 
Does this mean that a

thing can never be both pleasant and good???


May be this statement will be more agreeable if

the choice is given between peace and pleasure

since peace and pleasure NEED NOT go in hand.

Pleasure a sting of pain on its tail!
 
போக்குவர வற்றவெளி போல்
நிறைந்த போதநிலை
நீக்கமறக் கூடி நினைப்பறுவ
தெந்நாளோ.

தாயுமானவர்



மனிதன் தன் உள்ளத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும்.

தூய்மை, அன்பு, அறிவு, இரக்கம் அதன் நான்கு சுவர்கள்

அமைதி அதன் கூரையாக வேண்டும்.

சிரத்தை அதன் தளமாக வேண்டும்.

இறை வழிபாடு அதன் வாயில்!

அருள் அதனுள் வீசும் காற்று.

ஆனந்தம் அங்கு கேட்கும் இசை!.
 
"Get around people who have something of value to share with you. Their impact will continue to have a significant effect on your life long after they have departed." -- Jim Rohn
 
969436_261371214019906_2046752991_n.jpg
 
"Get around people who have something of value to share with you. Their impact will continue to have a significant effect on your life long after they have departed." -- Jim Rohn

Greatness kind of rubs on us (amalgam?)
when we associate with great people.

In Tamil it is said,

Poovudan serntha naarum maNakkum.

(The string used to make the garland
takes on the fragrance of those flowers)

Meruvil uLLa kaakkaiyum pon niram.

Even the crow seen on the Mount Meru is golden in color.
 
மாணிக்கத்துள் ளொளிபோல்
மருவியிருந்தாண்டி
பேணித்தொழுமடியார்
பேசாப் பெருமையன் காண் .
பட்டினத்தார்.

குப்பையில் கிடந்தாலும், அழகிய பெட்டியில் இருந்தாலும் மாணிக்கம் மாணிக்கமே.

நற்குணங்கள் மிகுந்த சான்றோன் எப்போது சான்றோனாகவே இருக்கின்றான்.

தன்னைத் தூற்றுபவர்களிடமும் சரி, தன்னைப் போற்றுபவர்களிடமும் சரி.

(How very topical???!!!)
 
எண்ணிறைந்த மேன்மைபடைத்
தெவ்வுயிர்க்கு மவ்வுயிராய்க்
கண்ணிறைந்த சோதியைநாங்
காணவா நல்லறிவே!'
தாயுமானவர்.

பசித்திருப்பவனுக்கு இப்போதே உணவு தேவை.
அருட்பசி எடுத்தவனுக்கு இப்போதே அருள் தேவை.

என்றோ கிடைக்கும் என்றிராமல்
இன்றே முயற்சி செய்ய வேண்டும்.
 
நினைப்பும் மறப்பும் அற நின்றபரஞ் சோதி
தனைப்புலமா என்னறிவிற் சந்திப்ப தெந்நாளோ?
தாயுமானவர்

நினைப்பும் மறப்பும் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதவை.
இறைவனின் சந்நிதானத்தில் நினைக்கவோ மறக்கவோ என்ன இருக்கமுடியும்?
 
சென்றதைப்பற்றி வருத்தப்படவேண்டாம் ,அதனால் வருங்காலத்தில் செய்யவேண்டிவை தடைப்படும் ..வில்சன்
 
விட்டே னுலகம் விரும்பே னிருவினை வீணருடன்

கிட்டே னவருரை கேட்டுமி ரேன்மெய் கெடாதநிலை

தொட்டேன் சுகதுக்க மற்றுவிட்டேன் தொல்லை நான்மறைக்கும்

எட்டே னெனும்பர மென்னிடத் தேவந்திங் கெய்தியதே.

பட்டினத்தார்.


உலகத்தைத் துறந்து விட்டேன்.
வீணருடன் உறவாட விரும்பவில்லை.

மெய் கெடாத நிலை அடைந்தேன்.
சுக துக்கத்தைத் தாண்டி விட்டேன்.

நான்கு மறைகளும் அறியாத பரம்பொருள்
தானே என்னை வந்து அடைந்துவிட்டதே!
 
சென்றதைப்பற்றி வருத்தப்படவேண்டாம் ,அதனால் வருங்காலத்தில் செய்யவேண்டிவை தடைப்படும் ..வில்சன்

The Past is dead and gone!

The Future is yet to be born!!!

Concentrate in Future which you can plan,

rather than the Past which is already gone!
 

Latest ads

Back
Top