[h=1]குரங்குப்பிடி, தர்மஅடி[/h]
ஆசைதான் எல்லாத் துன்பத்திற்கும் காரணம்,
ஆர்தான் மறுக்க முடியும் இந்த உண்மையை?
பாசம் என்றால் கயிறு, நம்மை பலவாறு
பந்தப் படுத்தும் பார்க்க முடியாத கயிறு!
எது எதையெல்லாம் விட்டு விடுகிறோமோ,
அது அதனால் நமக்குத் துன்பம் இல்லை!
“யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்” அல்லவா?
காலைப் பற்றி தொங்கும்போதே நம்மை
காலால் எற்றும் உரிமையை அளிக்கிறோம்.
வைக்கும் இடத்தில வைக்கப்பட்டால் தான்,
கைப்பாவையாய் நம்மை ஆட்டிப் படையார்.
குறுகிய வாயுடைய ஒரு சிறிய ஜாடி,
பொரி கடலையால் நிரம்பி மணக்கும்;
மறு எண்ணம் இல்லாமல் கையை விட்டு
நிரம்ப அள்ளும் அறியாக் குரங்கு!
கையும் மாட்டிக்கொண்டது ஜாடியில்,
மெய்யும் மாட்டிக்கொண்டது மனிதனிடம்!
கையை விட்டால் தான் விடுதலை.
கையை விட்டால் இல்லை கடலை!
கடலையா அல்லது விடுதலையா? என்று
உடனடி முடிவு எடுக்க வேண்டும் குரங்கு.
ஒன்று கிடைக்காமலே போகலாம்,
இரண்டுமே கிடைக்காமலும் போகலாம்!
மரத்திடம் சென்று வலியப் பற்றிக் கொண்டு ,
மரம் எனை விடுவதில்லை என்பது போல;
உலகை நாமே வலியப் பற்றிக்கொண்டு,
உலகம் நம்மை விடவில்லை என்போம்!
யாருக்காகவும் எதுவுமே நிற்காது,
உருண்டு ஓடும் உலகம் முன்னோக்கி!
தான் இல்லாத உலகம் நின்றுவிடும் என்று,
தன்னைத் தானே ஏய்த்துக் கொள்வானேன்?
“பந்தமா முக்தியா”? முடிவு நமதே.
“பாசமா பக்தியா”? முடிவு நமதே.
“குறையா நிறையா”? முடிவு நமதே.
“சிறையா விடுதலையா”? முடிவு நமதே.
“இன்பமா துன்பமா”? முடிவு நமதே.
“இவ்வுலகமா வீடு பேறா”? முடிவு நமதே.
இத்தனை முடிவுகளும் நம்மிடம் இருக்க,
பித்தரைப் போல துயர் அடைவதேன்?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
ஆசைதான் எல்லாத் துன்பத்திற்கும் காரணம்,
ஆர்தான் மறுக்க முடியும் இந்த உண்மையை?
பாசம் என்றால் கயிறு, நம்மை பலவாறு
பந்தப் படுத்தும் பார்க்க முடியாத கயிறு!
எது எதையெல்லாம் விட்டு விடுகிறோமோ,
அது அதனால் நமக்குத் துன்பம் இல்லை!
“யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்” அல்லவா?
காலைப் பற்றி தொங்கும்போதே நம்மை
காலால் எற்றும் உரிமையை அளிக்கிறோம்.
வைக்கும் இடத்தில வைக்கப்பட்டால் தான்,
கைப்பாவையாய் நம்மை ஆட்டிப் படையார்.
குறுகிய வாயுடைய ஒரு சிறிய ஜாடி,
பொரி கடலையால் நிரம்பி மணக்கும்;
மறு எண்ணம் இல்லாமல் கையை விட்டு
நிரம்ப அள்ளும் அறியாக் குரங்கு!
கையும் மாட்டிக்கொண்டது ஜாடியில்,
மெய்யும் மாட்டிக்கொண்டது மனிதனிடம்!
கையை விட்டால் தான் விடுதலை.
கையை விட்டால் இல்லை கடலை!
கடலையா அல்லது விடுதலையா? என்று
உடனடி முடிவு எடுக்க வேண்டும் குரங்கு.
ஒன்று கிடைக்காமலே போகலாம்,
இரண்டுமே கிடைக்காமலும் போகலாம்!
மரத்திடம் சென்று வலியப் பற்றிக் கொண்டு ,
மரம் எனை விடுவதில்லை என்பது போல;
உலகை நாமே வலியப் பற்றிக்கொண்டு,
உலகம் நம்மை விடவில்லை என்போம்!
யாருக்காகவும் எதுவுமே நிற்காது,
உருண்டு ஓடும் உலகம் முன்னோக்கி!
தான் இல்லாத உலகம் நின்றுவிடும் என்று,
தன்னைத் தானே ஏய்த்துக் கொள்வானேன்?
“பந்தமா முக்தியா”? முடிவு நமதே.
“பாசமா பக்தியா”? முடிவு நமதே.
“குறையா நிறையா”? முடிவு நமதே.
“சிறையா விடுதலையா”? முடிவு நமதே.
“இன்பமா துன்பமா”? முடிவு நமதே.
“இவ்வுலகமா வீடு பேறா”? முடிவு நமதே.
இத்தனை முடிவுகளும் நம்மிடம் இருக்க,
பித்தரைப் போல துயர் அடைவதேன்?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.