ழகரம் தமிழின் சிகரம்!
ழகரம் என்பது சிகரம் தான்!
தமிழ் மற்றும் மலையாளத்தில்
மட்டும் என்று எண்ணாதீர்கள்!
ழகரம் உண்டு மேலும் பல இடங்களிலும்
ழகரம் உண்டு மேலும் பல மொழிகளிலும்!
அமெரிக்க ர / ற = ழ என்றறிவீர் !!!
ர, ற என்று உச்சரித்தால் உங்களை
ஏற இறங்கப் பார்ப்பார் விநோதமாக!
ஃ போழ், ழூம், டெழ்ழிஃ பிக் என்று
தயங்காமல் பேசினால் நீங்கள் 1 சிடிசன்!
தண்ணீருக்கும் ழகரதுக்கும் உள்ளது
தவிர்க்க முடியாத நெருங்கிய பந்தம்.
காவிரித் தண்ணீர் தருமோ என்னவோ
கர்நாடகம் வளர்க்கிறது ழகரத்தை.
ழ, ழா. ழி, ழீ இத்யாதி இல்லாமல்
பேசுவது கடினம் பெங்களூருவில்.
ழகரம் வாழ்க! தமிழ் வாழ்க!!
கவின் மலையாளம் வாழ்க!!!
அமெரிக்க ஆங்கிலம் வாழ்க!
கர்நாடகத் தண்ணீர் வாழ்க!!!
ழகரம் என்பது சிகரம் தான்!
தமிழ் மற்றும் மலையாளத்தில்
மட்டும் என்று எண்ணாதீர்கள்!
ழகரம் உண்டு மேலும் பல இடங்களிலும்
ழகரம் உண்டு மேலும் பல மொழிகளிலும்!
அமெரிக்க ர / ற = ழ என்றறிவீர் !!!
ர, ற என்று உச்சரித்தால் உங்களை
ஏற இறங்கப் பார்ப்பார் விநோதமாக!
ஃ போழ், ழூம், டெழ்ழிஃ பிக் என்று
தயங்காமல் பேசினால் நீங்கள் 1 சிடிசன்!
தண்ணீருக்கும் ழகரதுக்கும் உள்ளது
தவிர்க்க முடியாத நெருங்கிய பந்தம்.
காவிரித் தண்ணீர் தருமோ என்னவோ
கர்நாடகம் வளர்க்கிறது ழகரத்தை.
ழ, ழா. ழி, ழீ இத்யாதி இல்லாமல்
பேசுவது கடினம் பெங்களூருவில்.
ழகரம் வாழ்க! தமிழ் வாழ்க!!
கவின் மலையாளம் வாழ்க!!!
அமெரிக்க ஆங்கிலம் வாழ்க!
கர்நாடகத் தண்ணீர் வாழ்க!!!
Last edited: