[h=1]தனித்திரு! பசித்திரு![/h]
உலக வாழ்வில் முன்னேற விரும்புவோர்களின்,
உன்னதத்துக்கு உள்ளன மூன்று மந்திரங்கள்;
ஆட்டு மந்தையில் ஒருவனாகாதே – “தனித்திரு!”
அறிவுப் பசியை என்றும் ஒழியாதே – “பசித்திரு!”
எது வந்த போதிலும் எதிர்கொள்ள வேண்டி,
எப்போதும் விழிப்புடனேயே இரு – “விழித்திரு!”
தனித் தன்மையுடனும், அறிவுப் பசியுடனும்,
விழிப்புடனும் இருந்தாலும், மிகவும் தேவை
கொஞ்சம் தனிமை, பசி, உறங்கா விழிப்பு!
விஞ்சும் நம் வாழ்வு, இவற்றால் சிறப்புற்று!
தனித்து இருக்கும்போது மட்டுமே ஒரு
மனிதனின் பல மன அலைகள் அடங்கும்;
உலகத்தில் ஓசைகளில் இருந்து விலகி,
உள்முகமாக அவன் பயணிக்க முடியும்.
உள்முகமாகச் செல்லும் போது தான் அவன்
உள்ளம் தெளியும், உண்மைகள் துலங்கும்.
உய்யும் வழிகள் புரியும்; தானும் உய்ந்து
உலகையும் முயன்று உய்விக்க முடியும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமே!
அளவுடன் உண்டு ஆரோக்கியம் பேணினால்,
அழகுற அமையும் செய்யும் செயல்களும்,
அழகிய தவமும், உய்யும் முயற்சிகளும்.
இல்லம் துறந்து வனம் சென்று, தவம்
இல்லதினரால் புரிய முடியாது அன்றோ?
ஓசைகள் ஒடுங்கிய நேரத்தில் அவர்கள்,
ஓசை இல்லாமல் தவம் செய்ய வேண்டும்.
இந்த மூன்று தாரக மந்திரங்களையும்,
சொந்தம் செய்து கொண்டால் போதும்!
மனிதப் பிறவியின் மாயங்கள் விலகிப்
புனிதமான வாழ்வு நாம் வாழ்ந்திடலாம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
உலக வாழ்வில் முன்னேற விரும்புவோர்களின்,
உன்னதத்துக்கு உள்ளன மூன்று மந்திரங்கள்;
ஆட்டு மந்தையில் ஒருவனாகாதே – “தனித்திரு!”
அறிவுப் பசியை என்றும் ஒழியாதே – “பசித்திரு!”
எது வந்த போதிலும் எதிர்கொள்ள வேண்டி,
எப்போதும் விழிப்புடனேயே இரு – “விழித்திரு!”
தனித் தன்மையுடனும், அறிவுப் பசியுடனும்,
விழிப்புடனும் இருந்தாலும், மிகவும் தேவை
கொஞ்சம் தனிமை, பசி, உறங்கா விழிப்பு!
விஞ்சும் நம் வாழ்வு, இவற்றால் சிறப்புற்று!
தனித்து இருக்கும்போது மட்டுமே ஒரு
மனிதனின் பல மன அலைகள் அடங்கும்;
உலகத்தில் ஓசைகளில் இருந்து விலகி,
உள்முகமாக அவன் பயணிக்க முடியும்.
உள்முகமாகச் செல்லும் போது தான் அவன்
உள்ளம் தெளியும், உண்மைகள் துலங்கும்.
உய்யும் வழிகள் புரியும்; தானும் உய்ந்து
உலகையும் முயன்று உய்விக்க முடியும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமே!
அளவுடன் உண்டு ஆரோக்கியம் பேணினால்,
அழகுற அமையும் செய்யும் செயல்களும்,
அழகிய தவமும், உய்யும் முயற்சிகளும்.
இல்லம் துறந்து வனம் சென்று, தவம்
இல்லதினரால் புரிய முடியாது அன்றோ?
ஓசைகள் ஒடுங்கிய நேரத்தில் அவர்கள்,
ஓசை இல்லாமல் தவம் செய்ய வேண்டும்.
இந்த மூன்று தாரக மந்திரங்களையும்,
சொந்தம் செய்து கொண்டால் போதும்!
மனிதப் பிறவியின் மாயங்கள் விலகிப்
புனிதமான வாழ்வு நாம் வாழ்ந்திடலாம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி