[h=1]செவிடன் காது![/h]
ஒருமுறை கேட்டேன் அறியாமையால்,
குருவிடம் நான் ஒரு சிறிய கேள்வி!
“பாங்குடன் உலகைக் காக்கும் கைகளில்,
சங்கு, சக்கரம், கதை, தாமரைகள் ஏன்?”
சிறு குழந்தைக்குச் சொல்வது போல,
சிரித்தபடியே சொன்னார் எங்கள் ஆசான்.
“இறைவன் நல்வழி நடப்பவர்களுக்கு,
சிறந்த தாமரை மலரினைத் தருவான்.”
தவறு செய்வோரைச் சங்கொலி எழுப்பி,
கவனத்துடன் நடக்கும்படிச் சொல்வான்.
செவிடன் காதில் ஊதிய சங்கானால்,
செவிட்டில் அடிப்பான் கதையினால்!
தடுத்தும் மீண்டும் வரம்பு மீறினால்,
எடுப்பான் சக்கராயுதத்தை!” என்றவர்
“உங்களுக்கு வேண்டியது தாமரையா,
சங்கா, சக்கரமா?” எனக் கேட்டார்!
கனியிருக்கக் காய்களைக் கவருவோமா?
இனிய தாமரை இருக்க மற்றவை எதற்கு?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
ஒருமுறை கேட்டேன் அறியாமையால்,
குருவிடம் நான் ஒரு சிறிய கேள்வி!
“பாங்குடன் உலகைக் காக்கும் கைகளில்,
சங்கு, சக்கரம், கதை, தாமரைகள் ஏன்?”
சிறு குழந்தைக்குச் சொல்வது போல,
சிரித்தபடியே சொன்னார் எங்கள் ஆசான்.
“இறைவன் நல்வழி நடப்பவர்களுக்கு,
சிறந்த தாமரை மலரினைத் தருவான்.”
தவறு செய்வோரைச் சங்கொலி எழுப்பி,
கவனத்துடன் நடக்கும்படிச் சொல்வான்.
செவிடன் காதில் ஊதிய சங்கானால்,
செவிட்டில் அடிப்பான் கதையினால்!
தடுத்தும் மீண்டும் வரம்பு மீறினால்,
எடுப்பான் சக்கராயுதத்தை!” என்றவர்
“உங்களுக்கு வேண்டியது தாமரையா,
சங்கா, சக்கரமா?” எனக் கேட்டார்!
கனியிருக்கக் காய்களைக் கவருவோமா?
இனிய தாமரை இருக்க மற்றவை எதற்கு?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி