• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Strength in numbers!

There is no denying the fact that there is strength in numbers.

The one who has no family - but her wayward son- managed to gather

quite a crowd of friends, friends' friends, distant relatives living close by.

The confrontation had the desired effect. The noisier team won in the

verbal battle. The (dubious) owner won over the tenant.

Dubious since the flat is owned by a man, who is owned by the mam.

The tenants have to either become deaf, dumb and blind or quit

with whatever honor they could muster now. :bolt:


 
Last edited:
Recent development.

Now the Ro and Ju do not need their mobiles any more.
He stands below her
உப்பரிகை and makes a strange sound like வெண்ணிற ஆடை மூர்த்தி and she comes running to the
உப்பரிகை openly and they talk loudly.
Is this what people means when they say
"குளிர் விட்டுப் போச்சு"???
:noidea:
 
Jubilation

The louder crowd managed to win the verbal battle. They are celebrating since their next move is to talk to the owner of the house of the loners and get them evicted at the earliest. Whether they will go off with the girl or leave her behind it still a suspense to ME!! :decision:
 
Hemoglobin

The hemoglobin factor of an anemic lady was very low. My doctor brother advised her husband to give her nutritious food and fruits.

The man hesitated over the expenses involved. When my brother said it was question of life and death the husband grinned from one ear to the other and replied nonchalantly,

"இந்தக் களுதை போனா இன்னொரு களுதை கிடைக்கும்.
பணம் போன யாரு குடுப்பாங்க? நீங்களே சொல்லுங்க!" :faint:


 
We, the students of Yoga Dharshan, promised to our guru that
we will not chit chat or talk in the verandahs or on the stair cases
or underneath them.
No wonder I am oblivious to all the happenings around...
since I am not connected in the local network any more.
 
வரம் கேட்கும்போது
...........
'இந்த சைஸ் எறும்பு இதைக் கேட்கலாமா?'
தந்தார் வரத்தை எறும்பு வேண்டியபடி!!!

ஆனால்...யார் சாகவேண்டும் என்று
எறும்பு கேட்கவில்லையே வரத்தில்.

அன்று முதல் எறும்பு சாகலானது
யாரையேனும் அது கடித்த பிறகு!

இன்றும் பாருங்கள் எறும்பு கடித்த ஒருவர்
கையால் நசுக்கி எறும்பைக் கொல்வதை!!!

Now see my version of this story! [posted long long back :) ]

இரு வரங்கள்!

உலகே தன்னைப் பார்த்ததும் அஞ்சிட,
உலகில் சிலரும் கொள்வார் ஆவல்!

அதுபோல் ஆவல், அரணை கொண்டு,
மெதுவாய் இறைவன் அருகே சென்று,

'இறையே! பாம்பு பெற்ற விஷத்தை,
நிறைய எனக்குத் தந்து அருள்வாய்!

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்;
பாம்பைப் போலவே நானும் ஆகணும்!'

இறைவன், 'அதுபோல் செய்ய இயலாது;
இரண்டு ஜீவன்களை, ஒன்று போலவே!

கேட்டது அளிப்பேன்; கூட இன்னொரு
கேட்காததும், நீ அறியாது அளிப்பேன்!'

என்று உரைக்க, விஷம் கிடைத்ததே
என்று, மனத்தில் மகிழ்ந்த அரணை,

'அப்படியே செய், எந்தன் இறைவனே!
எப்படியோ விஷம் வரணும்!' என்றது.

வீரமாக விரைந்த அரணையும், வெகு
நேரமாக நின்றது, மனிதன் வரவுக்கு.

தெருவில் ஒருவன் வந்திட, அவனை
விரைவில் அணுக விரைந்து செல்ல,

அருகில் சென்றதும் மறந்தது, தான்
விரைவில் வந்தது எதற்கு, என்பது!

வரத்தை கேட்டபடி அளித்து, கேளாத
வரமாய் அளித்தார், அதன் மறதியை!

குறும்பு எறும்பு இக்கதை கேட்டதும்,
குறும்பாய் வேறொரு யோசனை வர,

'நானும் இறையிடம் விஷம் கேட்பேன்!
ஆனால் இறையிடம் ஏமாற மாட்டேன்!

நான்கு சொற்களில் வரத்தைக் கேட்டு,
நன்கு பெறுவேன், கொடிய விஷத்தை!'

என்றே சென்றது, இறைவனைத் தேடி!
அன்றே இறையைக் கண்டது; கேட்டது

தான் சிறந்த புத்திசாலி என்றெண்ணி,
'நான் கடித்தால், உடனே இறக்கணும்!

நான் கேட்கும் வரத்தினை அளிப்பாய்;
நான் கேட்பதை மட்டுமே அளிப்பாய்!'

'அப்படியே ஆகட்டும்!' என்று சொல்லி,
அப்பொழுதே மறைந்தான், இறைவன்!

தான் பெற்ற வரத்தினை சோதித்திட,
தான் பார்த்த மனிதனையே கடித்திட,

'ஐயோ' என்றலறி, அவனும் அடித்திட,
'ஐயோ' என்றலறி, அதுவும் இறந்து!

வேகமாக இறையிடம் சென்ற எறும்பு,
கோபமாக இங்கு நடந்ததைச் சொல்ல,

தான் சிரித்தபடி, இறைவன் கேட்டான்,
'நான் கடித்தால், உடனே இறக்கணும்!

என்று தானே வரத்தைக் கேட்டாய்!
நன்கு அளித்தேன், கேட்ட வரத்தை!'

:angel:

 
இதை நான் இதற்கு முன்பு படித்து இல்லை.

இது மிகவும் அருமையாக இருக்கிறது!!! :clap2:

அரணைக்கு ....மறதி !!!
எறும்புக்கு........குறும்பு!!!
பல்லிக்கு ........????
பாம்புக்கு..........????
தேளுக்கு..........????
குளவிக்கு.........????
சிந்தித்துக் கண்டு பிடிப்போம் இவற்றையும்! :)
 
Today the most influential persons who have a lot of contacts
and influence to give recommendations to them are surprisingly
The priests, the pundits, the purohits, the politicians, the caterers
and the other Professional "P" whom I will rather not name here.
 
[h=1]சிபாரிசு![/h]
ஏழை அந்தணன் ஒருவன் வேலையைத் தேடி,
எல்லா இடங்களுக்கும் நடையாய் நடந்தான்;

“நாளை வா! நாளை வா!” என்று தினமும்
நடக்கச் செய்தார்களே அன்றி, ஒருவர் கூட

வேலை தருவதே இல்லை! மனமுடைந்து,
“வேளை இன்னமும் வரவில்லை!” என்றான்.

“கச்சேரியில் ஒரு உத்தியோகம் கிடைக்குமா?”
“கச்சேரி மேனேஜரிடம் சிபாரிசு கிடைக்குமா?”

நல்ல நண்பன் ஒரு நல்ல வழி கூறினான்;
“நாடக நடிகை ரோஜாமணியிடம் சொல்!

நாளையே உனக்கு வேலை நிச்சயம்!”
நம்பி நடிகையிடம் உதவி கோரினான்.

ஆச்சரியம்! கச்சேரியிலிருந்து சேவகன்
அடுத்த நாள் காலையில் வந்துவிட்டான்!

“மிகவும் திறமைசாலி இவர்” என்றபடியே
மிக நல்ல வேலை அளித்தார் மேனேஜர்.

“ராஜாவானால் என்ன? மந்திரியானால் என்ன?
ரோஜாமணிகள் இருக்கும்வரை என்ன கவலை?”

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Some people cause happiness wherever they go!
Some others cause happiness whenever they go!!
Either way it is good to cause happiness to all!!!
I am deeply impressed and very happy to note the
hyperactivity in the general Discussions of the forum. :)
 
th
th


உன் எண்ண அலைகள் + என் எண்ண அலைகள் = Interference patterns!!!
 
"மனசை விட்டு பேசுங்க மச்சான் அவளோட" :blah:

மாப்பிள்ளையின் அறிவுரை அருமை மச்சானுக்கு! :)

பேசிப் பேசித் தான் சந்தி சிரிக்கிறது என்று இன்னமும் :gossip:

புரியவில்லை அந்த புத்திசாலி மாப்பிள்ளைக்கு. :loco:
 
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது ஏன்???

அரசல் புரசலாக கேள்விப்பட்டவுடன்
அப்போதே வீடு மாறியிருக்க வேண்டும். :bolt:

மாறினார்கள் ......ஆனால் அவன் எதிர் வீட்டுக்கே!
நெருப்பையும், பஞ்சையும் ஒன்றாக வைத்தார்கள். :frusty:

வம்பை வளரவிட்டு விட்டு முயல்கின்றான்
தும்பை விட்ட தம்பி வாலைப் பிடிப்பதற்கு! :tsk:
 
There is ALWAYS scope for improvement! :thumb:

Towards more picturesque speech.........! :laser:

The flat was possessed by the man. :hat:

The man was possessed by the mam. :mmph:
 


113 (a). பூவுக்குள் புயல்.
113 (b). Storm in a tea cup.
After the storm in a tea cup now it is the calm after the storm!
But for how long...??? :noidea:
 
அவன்: டேய் உன் பொண்ணை அனுப்பு! :shocked:

அவள் : நான் அப்படித்தான் போவேன்!! :shocked:

அப்பன் வாயடைத்துப் போய்விட்டான்! :tape:

அம்மை அவளை அடித்ததன் பலன்

அவள் கை வலித்தது தான் மிச்சம்.

அப்பன் வீட்டில் இருப்பாளாம்.

அப்பன் பெட்ரோலுக்குப் பணம் தரவேண்டுமாம்.

அப்பன் மொபைல் ரீசார்ஜ் பண்ண வேண்டுமாம்.

அப்பன் காலேஜ் பீஸ் கட்டவேண்டுமாம்.

அப்பன் சோறு போட வேண்டுமாம்.

அப்பன் டிரஸ் வாங்கித் தர வேண்டுமாம்.

அம்மை சமைத்துப் போட வேண்டுமாம்.

அவள் துணிகளைத் துவைத்துத் தர வேண்டுமாம்.

வேண்டியது எல்லாம் பார்த்துச் செய்ய வேண்டுமாம்.

"எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாத பயல் உனக்கு வேண்டாம்!"
என்று சொல்ல மட்டும் உரிமை இல்லையாம்!!! :faint:
 
இப்படித்தான் வாழ வேண்டும் என்பவர்கள் :laser:

சில பல இடைஞ்சல்களைச் சந்திப்பார்கள். :sad:

"எப்படி வேண்டுமானாலும் வாழலாம்!" என்றால் :heh:

தப்பு, ஒப்பு என்று எதுவுமே கிடையாது அவர்களுக்கு! :whistle.
 
ஒண்ட வந்த பிடாரியும், ஊர்ப் பிடாரியும்!

ஒண்ட வந்த பிடாரி கூறிற்று மகனிடம், :gossip:

"ஊர்ப்பிடாரியை உள்ளே அனுமதிக்காதே!" :nono:

இப்போது கலி காலம் அல்லவா? :pout:

இப்போது காலிகளின் காலமும் கூட!! :whip:
 
கல்லாப் பெட்டியும், கில்லாடிப் பயலும் !

ஊர் சுற்றுவதற்குத் தேவை நிறையப் பணம்! :popcorn:
பெட்ரோல் விலை வானளவா ஏறிப் போச்சு!!

தீனி விலையும் ரொம்பவே ஏறிப் போச்சு;
மாவாட்டிக் கழிக்கவும் முடியாது போல.

படிப்பறிவே இல்லாத ஒரு அம்மா!
வேலை செய்யவும் உடல் வணங்காது!! :couch2:

படித்துவிட்டு ஊர் சுற்றும் பையன்.
"வேலை எல்லாம் எவன் செய்வான்?"

ராஜாவீட்டுக் கன்னுக் குட்டின்னு நினைப்பு!
கெட்ட கேட்டுக்கு கேர்ள் பிரண்டு வேறே!! :kiss:

தினமும் போராட்டம் பணத்துக்கு!!!
ஏசல், பூசல், உரசல், கோபம், தாபம்...

அப்பா போல பாதுகாக்கும் அந்த ஏமாளியின்
கல்லாப் பெட்டியில் உட்கார வைத்து விட்டால்!!!

ஆறாக ஓடுகிறது! நீயும் குடி! நானும் குடிக்கிறேன்.
கணக்குப் பார்த்த ஆள் விழுந்தால் எழ மாட்டான். :faint:
 
[h=1]இவர்களும் திருடர்களே[/h]
முகமூடி அணிந்து, கத்தியும் கையுமாக
முன் வந்து நிற்பவன் மட்டும் திருடனல்ல!
மற்றவர் பொருளை விரும்பி விழையும்
மனிதர்கள் அனைவரும் திருடர்களே!

“பெற்றோர் என்போர் பணம் காய்ச்சி மரம்;
மற்றோர் எல்லாம் தன் ஊழியர் படை;
தானே அண்ட சராசரங்களின் மையம்;
தனக்கெனவே பிறந்தது இப்பரந்த பூமி!”

இங்ஙனம் எண்ணியபடி, பிறருடைய
உழைப்பு, நேரம், திறமை, பொருள்
இவற்றை மனச் சஞ்சலம் இன்றியே
உறிஞ்சுபவர்களும் இங்கு திருடர்களே!

தினை விதைத்தால் தினைதான் முளைக்கும்.
வினையை விதைத்தால் என்ன முளைக்கும்?
மனித நேயம், நேர்மை, பண்பு இவற்றை
மனத்துள் இளமையில் விதைக்க வேண்டும்.

ஞானம் என்பதே இல்லாமல் வளர்த்தால்,
ஊனம் கொண்ட மனத்துடனேயே வளர்ந்து,
நேரம் பார்த்து நெஞ்சில் உதைப்பார் தம்
நெருங்கிய உறவினரின் கூட்டத்தையே!

தன் பங்கைவிட அதிகம் எடுத்துக்கொண்டு,
தன் சுற்றதையே ஏய்க்கும் கயவர்களும்,
தர்மத்தின் அளவுகோலின்படி, உலகின்
தரம் கெட்ட திருடர்கள் என்பது உண்மையே!

பணம், பணம் என்று பேயாய் அலைந்து,
குணம் என்பதைத் தூக்கி எறிந்தவர்கள்,
பணத்தாலேயே பலமாக அடிக்கப்பட்டுப்
பரிதவிக்கப் போவது உறுதியான ஒன்று!

பணம் தேவைதான் உலகில் நாம் வாழ!
குணம் தேவை நல்ல மனிதனாக வாழ!
அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் பெற்று
அப் பணமே பகைவனாகாமல் பார்த்திரும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 

Latest ads

Back
Top