அலையும், கடலும்.
“வாழ்க்கையே அலை போலே …
நாம் எல்லாம் அதன் மேலே ……
ஓடம் போல ஆடிடுவோமே வாழ்நாளிலே!”
எத்தனை உண்மையான வார்த்தைகள்!
மண ஆண்டு நிறைவு நாள் அன்றே
கணவன் இறந்தார் அந்தப் பெண்மணியின் !
மனத்தைத் தேற்றிக் கொண்டு மூத்த மகனின்
மகள் பிரசவத்தில் கவனம் செலுத்தினாள்.
கொள்ளுப் பேரனைக் கண்டு மகிழ்வதா?
கணவனை எண்ணியபடி அழுவதா?? ?
“பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும்!”
மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆனது!
தன் மகளுக்கு மணம் பேசி வந்த இளைய மகன்…
தன்னை உள்ளங்கையில் தாங்குவான் என்று எண்ணிய இளைய மகன்…
தன் மகளைப் பெரிய டாக்டர் ஆக்கிய இளைய மகன்…
கண் இமைக்கும் நேரத்தில் கண் மூடினான்
மாரடைப்பு என்னும் “silent killer” காரணமாக!
உறைந்தும், உடைந்தும் போனவளின் கண்களும்
உறைந்து போய்விட்டனவா? அழவே இல்லையாம்!
முதியவர் இருக்க, இளையவர் மறைந்து செல்வது
முட்டாள்தனமாகத் தெரியவில்லையா இறைவா?
ஒரு வரம் கேட்பேன் நான் உன்னிடம் ray:
இனி ஒரு முறை இந்தக் கொடுமையை
எந்தப் பெண்ணுக்கும் அளிக்காதே!