ஸ்வபாவத்தை மாற்ற முடியுமா?
நீருடன் அடித்துச் செல்லப்படும்
ஒரு தேளை எடுத்து காத்தான்!
காக்கும் கரங்களைக் கொட்டி,
நோக்கம் இன்றியே ஓடியதால்
மீண்டும் விழுந்தது அந்நீரிலேயே!
மாண்டே போய்விடும் அந்தத் தேள்!
மீண்டும் அதனைக் காப்பாற்றினால்
மீண்டும் அவனைக் கொட்டுகின்றதே!
தேள் என்று தெரிந்த பின்னரும்
தேடித் தேடி ஏன் உதவுகின்றான்?
கொட்டுவது தேளின் ஸ்வபாவம்!
உதவுவது அவனுடைய ஸ்வபாவம்!
ஸ்வபாவத்தை மாற்ற முடியுமா?
ஸ்வபாவம் என்பதே நம் இயற்கை.
ஏணியாகவும், தோணியாகவும்
பணியாற்றுவது சிலர் ஸ்வபாவம்!
நீருடன் அடித்துச் செல்லப்படும்
ஒரு தேளை எடுத்து காத்தான்!
காக்கும் கரங்களைக் கொட்டி,
நோக்கம் இன்றியே ஓடியதால்
மீண்டும் விழுந்தது அந்நீரிலேயே!
மாண்டே போய்விடும் அந்தத் தேள்!
மீண்டும் அதனைக் காப்பாற்றினால்
மீண்டும் அவனைக் கொட்டுகின்றதே!
தேள் என்று தெரிந்த பின்னரும்
தேடித் தேடி ஏன் உதவுகின்றான்?
கொட்டுவது தேளின் ஸ்வபாவம்!
உதவுவது அவனுடைய ஸ்வபாவம்!
ஸ்வபாவத்தை மாற்ற முடியுமா?
ஸ்வபாவம் என்பதே நம் இயற்கை.
ஏணியாகவும், தோணியாகவும்
பணியாற்றுவது சிலர் ஸ்வபாவம்!