# 3. குட்டி ராணி.
திருப்பதியில் மொட்டை போட்டதில்
முகமே முற்றிலும் மாறிவிட்டது.
கரடிக் குட்டி போல கண்களை மறைக்கும் முடி
போனதால் இப்போது பால முருகனாக மாறிவிட்டாள்!
எத்தனை அருள் அந்த சிறிய முகத்தில்!
அழவே இல்லை - அவளை
பலவந்தமாகத் தூக்காதவரை.
ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விளையாட்டு.
அக்காவின் கன்னத்தை
அணில் பல் வைத்துக் கரண்டுவாள்
என்னைப் பார்த்தவுடன் பாடச் சொல்லுவாள்
"பாப்பா பாப்பா கதை கேளு" என்ற
காக்கா, நரியின் கதை ரொம்பப் பிடித்துவிட்டது.
ஒவ்வொரு லைன் நிறுத்தும் போதும்
ஓயாது "உம்" கொட்டி
தொடர்ந்து என்னைப் பாடச் சொல்லுவாள்.
பாட்டு முடிந்தவுடன் இரண்டு கைகளையும்
தாமரைப் பூ போல விரித்துக் காட்டுவாள்.
அதற்குப் பல பொருள்கள் உள்ளன!
"Finished!" "All done!" "இல்லை!" "காணோம்"
சமய சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி
நாம் பொருள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
கைக்குட்டையைத் தூக்கி தன் தலைக்குப் பின்னால்
போட்டுவிட்டு காணோம் என்று கையை விரிப்பாள்.
நாம் எடுத்துத் தந்தால் மீண்டும்... மீண்டும்...