• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 296. "Mrs. Rao ! Take your plate with you!"

கணவன் 'பெரிய' officer.
வசித்து வந்தது 'பெரிய' வீட்டில்.

மொத்தம் நான்கு வேலைக்காரகள்,
வீட்டுவேலைக்கு , துணி துவைக்க,
தோட்டக்காரன், சமையல்காரன்.

உண்டி சுருங்காமல், உடல் உழைப்பைச் சுருக்கி
உடல் எடையை பெருக்கினார் ஆபீசர் மனைவி.

முதல் மகன் காதல் திருமணம் செய்து கொண்டான்.
பெண் வேறு யாரும் அல்ல ஒரு original tam bram girl!

இங்கே செய்வது போல சாப்பிட்ட தட்டை
மேஜையில் விட்டுவிட்டு சீமாட்டி கை கழுவச் சென்றார்.

அப்போது மருமகள் சொன்னாள்,
"Mrs. Rao ! Take your plate with you!"

அமெரிக்காவில் எந்த வேலைக்காரி இருக்கிறாள்?
இவர் இப்படிச் செய்து இருக்க வேண்டாமே!

அடுத்த நாள் பட்டுப் புடவையைக் கொடுத்து
பெட்டி போட்டுத் தரச் சொன்னார் மருமகளிடம்.

"உங்கள் வேலைகளை நீங்களே செய்து கொள்ளுங்கள்!
எனக்கு நிறைய வேலைகள் ஏற்கனெவே உள்ளன."

கோபம் வந்து விட்டது சீமாட்டிக்கு.

குளிப்பதற்கு மாடி ஏறிச் செல்ல வேண்டும்
(ground floor இல் பாத் ரூம் இராது.)

பற்றாக்குறைக்குத் தன் வேலைகளைத்
தானே செய்து கொள்ள வேண்டுமாம்!

என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறாள் இவள் என்ற
கோபத்தில் ஒரு சபதம் செய்தார் அப்போதே

"இனி எந்த காரணத்துக்கும் அமெரிக்கா வரமாட்டேன்!"

I bet these were these were sweetest words
she could have uttered to her dear D. I. L!
 
Never give explanations for your actions or inactions.
your friends don't need them - since they KNOW you!
Your enemies won't believe them anyway.
So why waste your precious time??
People tend to project their own thoughts into the actions of the others around them.
AND There is nothing we can do about it!
 
Today's link and a small introduction to the blog.

https://visalakshiramani.wordpress.com/

The world we live in, is filled with marvelous things, both God-made and man-made. If we retain our childlike curiosity, we can still wonder at hundreds of things around us.

I try to admire these and want you too to do so. So this is just an attempt to impress you with what impressed me in the first place.

I have written articles on 261 topics under 18 different subheadings-so that everyone is sure to find something interesting to read!

Happy reading! Send back your comments and suggestions!
 
# 297. Metal detector turned into a howling wolf!

மகனின் நண்பனின் பெற்றோர் வந்திருந்தனர்.
கதைத்துக் கொண்டிருத்போது இதைச் சொன்னார்.

வரும் போது நல்ல காஞ்சிபுரம் புடவை
கட்டிக்கொண்டிருந்தாராம்.

அவர் வரும்போதே மெடல் detector wolf whistle
அடிக்கத் தொடங்கியதாம்.

உள்ளே நுழையவிடவில்லை அவரை.

வேறு வழியின்றி சேலையைக் கழற்றி வீசிவிட்டு
metal detector வழியாக உள்ளே வந்தாராம்!

துச்சாதனனின் மறு பிறவியோ அது?

அது சரி ஓரு சின்ன embroidery யே என்னை
அந்தப் பாடு படுத்தியபோது கனமான பட்டு
ஜரிகைச் சேலை என்ன பாடு படுத்தாது?

Moral:

DO NOT wear brocade sari or dresses with metallic decorations when you fly.
 
# 298. A cricket player with a good aim.

நெருங்கிய உறவில் ஒரு திருமணம் நிச்சயம் ஆனது.

மணமகன் நமது உறவு.
மணமகள் ஒரு கிரிக்கெட் பிளேயர்!

அதுவும் spin bowler! செந்தமிழில் சொன்னால்
"பாலைத் திருப்புற சுந்தரி!"

நல்ல உடல் கட்டு, பலம், உயரம் இத்யாதி...
பயல் நோஞ்சான் - இள வயது நாகேஷ் போல!

எதை வைத்து ஜோடி பாத்தார்கள் / சேர்த்தார்கள்??
அந்தச் செந்தில் ஆண்டவனுக்கே வெளிச்சம்!

A little incompatibility might be O.K!
இந்த வித்தியாசம் மிகவும் gross.

மற்ற சராசரிப் பெண்கள் கோபம் வந்தால்
சாமான்களை விசிறி அடிப்பார்கள் random ஆக!

இவள் நன்கு குறி பார்த்து அடிப்பாளே!
"பயல் என்ன பாடு படப் போகின்றானோ?" என
நான் மிகவும் கவலைப்பட்டேன்! :sad:

உப்புச் சப்பு இல்லாத காரணத்தால்
திருமணம் நின்று போனது.

பயல் அதிர்ஷ்டக்காரன். பிழைத்தான்!
அவள் என்ன ஆனாள் தெரியவில்லை.

வேறு யாராவது குறிக்கு (landing in USA at any cost)
இலக்கு ஆனார்களா அதுவும் தெரியவில்லை. :brick:

நமக்குத் தெரியாதவரைப் பற்றிக் கவலைப்பட்டு
என்ன பயன் கூறுங்கள்.

"எல்லாம் நம்மைக்கே" என்பதை இந்த நிகழ்ச்சி
மீண்டும் ஒருமுறை உறுதி செய்தது!
 
Today's link and introduction to the blog:

கந்த புராணம்

இது ஒரு மாக் கடல் தான்!
இது ஒரு பாக் கடலும் கூட!

மொத்தம் ஆறு காண்டங்கள்;
நூற்று நாற்பத்தொரு படலங்கள்;

பதினாயிரத்து முன்னூன்று
நாற்பது ஐந்து ‘பா’க்கள்!

கந்த புராணத்தை எழுத
கந்தனே அருள வேண்டும்!

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

ஆனை முகனும், ஆறு முகனும், அன்னையும்
அருள் புரிந்தால் எல்லாமே சாத்தியம் ஆகும் .

இது வேதம் கூறும் சத்தியம்.
நம்பிக்கையுடன் தொடர்ந்து படிப்போம்
நம்பியின் கதையை நாம் அனைவரும்!



Kandapuranam blogs:

1. Kanda Puraanam (Urppathik Kaandam)
 
With less than 10 weeks left before we have to return to USA, I am trying to catch up with pending stitching and house cleaning.
I can post after I had finished my daily quota of this extra work.
 
# 299. "இப்போவே ஈயம் பூசின பாத்திரம் வேணும்!"

பெண்ணின் தந்தை அரசாங்கத்தில் பெரிய ஆபீசர்.
நல்ல செல்வாக்கும், செல்வமும், மதிப்பும் உடையவர்.

அப்பழுக்கு இல்லாமல் தன் அதிகாரத்தைத்
துஷ்பிரயோகம் செய்யாமல்
நல்ல பெயருடன் இருந்து வந்தார்.

அவருக்கு வந்தது வாழ்க்கையில் ஒரு திடீர் சோதனை
மகள் திருமணத்தின் போது,
சம்பந்தி அம்மாள் வடிவத்தில்.

சீர் பாத்திரங்களைப் பார்த்தவர் முகம்
சுண்டிவிட்டது சுண்டைக்காய் போலவே!

புது பித்தளைப் பாத்திரங்களில்
ஈயம் பூசும் வழக்கம் இல்லை!

புழங்குவதற்கு முன்பு நாம் பூசிக் கொள்ள வேண்டும்.

ஈயம் பூசி இருந்தால் பழையபத்திரம் என்று
ஐயப்படுபவர்களும் உண்டு.

இவர் அந்த ராத்திரியில் சொல்கிறார்,
"இப்போவே ஈயம் பூசின பாத்திரம் வேணும்!"

மகளை அவர்களுடன் அனுப்புவதற்கு முன்பு
ஈயம் பூசித் தருகிறேன் என்று எவ்வளவோ
சொன்னபோதும் கேட்கவில்லை அம்மையார்.

இப்போதே என்று மூன்று கால் முயல் பிடித்தவர்

ஆனார்.

வாழ்க்கையிலேயே முதல் முறையாகத்
தன் பதவியைப் பயன்படுத்தி
இரவோடு இரவாக அத்தனை பத்திரங்களுக்கும்
ஈயம் பூச ஏற்பாடு செய்த்தார் அவர்.

மணம் முடிந்துவிட்டால் யாரும் சீந்த மாட்டார்கள் என
மணத்துக்கு முன்பே அவர் அதிகாரத்தை
நிலை நாட்டினார் அம்மையார்!

இந்த மாதிரி மாமியாரிடம் நாட்டுப் பெண்
எப்படி அன்பு செலுத்த முடியும்?
 
# 300. "ஈயச் சொம்பு எங்கே ?"

எப்போதும் தண்ணீர் ஊற்றிய பிறகே ஈயச் சொம்பை
அடுப்பின் மேல் வைப்பது வழக்கம் அல்லவா?

அன்று அம்மா ஞாபக மறதியாக சொம்பை
அடுப்பில் வைத்துவிட்டு
தண்ணீரை எடுத்து ஊற்றுவதற்குள்
சொம்பு மாயமாக மறைந்து விட்டது.

"நெருநல் உளன் ஒருவன்..." கேட்டிருக்கிறோம்
ஒரு நொடியில் என்ன ஆகி இருக்க முடியும்?

ஒருவேளை வைக்க மறந்து விட்டோமோ என்று
அடுக்களை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

அது மரப்பொடியில் எரியும் அடுப்பு.
அப்போதெல்லாம் காஸ் அடுப்புக் கிடையாது.

விறகு அடுப்பு, கரி அடுப்பு, மரப்பொடி என்று
வேறு வேறு அடுப்புகளில் ஏற்றிச் சமைத்த காலம்.

அடுத்த நாள் சாம்பலைக் கொட்டும்போது
அதில் புதையல் போல பளபளக்கும்
ஒரு வெள்ளி உருண்டை! :love:

சொம்பு மாயமானதன் மர்மம் அப்போது விளங்கியது!

அம்மா எப்போதும் போல ஒரு புது யுக்தியைக்
கண்டு பிடித்துக் கையாண்டார் சமைக்கும்போது.

ஈயத்தில் ரசத்தை கொதிக்க வைப்பதற்கு பதிலாக
ரசத்தில் ஈயத்தை போட்டுக் கொதிக்க வைத்து
அதே ருசியையும் சுவையையும் உண்டாக்கினார்.

நாங்கள் அதை வைத்து விளையாடுவோம்
காகிதத்தில் அழகாக எழுதுவோம்.
(the original agmark lead pencil)

உருகியபிறகு அதன் உபயோகம்
அதிகரித்தது உண்மை. :rolleyes:
 
Women do have a higher paingate than men.

Extroverts do have a higher paingate than an introvert.

Those who keep their mind well occupied do have a higher paingate than a lousy and lazy person.

So an extrovert busy woman might have her paingate high in the air compared to an introvert man given to brooding.

How sad indeed!!!
 
# 1. கலாட்டா கல்யாணங்கள்.

பெரியவன் தானே தன் மணமகளைத் தேர்வு செய்தான்.
பெரியவர்களின் ஒப்புதலோடு அந்தத் திருமணம் நடந்து,

மனதால் இணைந்த அந்த இருவர்களை முறையான - திருமணத்தால் இணைக்க நாடினேன் நான் நம்பும் மாருதியை.

சுந்தரகாண்டம் பாராயணம் செய்தால் நடக்கும் அற்புதங்கள்.
எந்தப் பிரச்சனைக்கும் வாழ்வில் இதுவே எனக்குத் தீர்வு.

சின்னவன் தானும் தேடிக்கொள்ளாமல்,
எங்களை நம்பி பெண் தேடும் பொறுப்பை
எங்களுக்குத் தராமல் இருந்ததில்
வயது முப்பது ஆகிவிட்டது விளையாட்டுப்போல.

வயது < 30 என்றால் இளமையாகத் தோற்றுகிறது.
வயது > 30 என்றால் முதுமையாகத் தோற்றுகிறது.

அவன் நண்பர்கள் சிலர் வாழ்வில் மணமுறிவு ஏற்பட்டதால்
அவனுக்கு arranged marriage இல் நம்பிக்கை குறைந்தது.

ராஜி ராம் மகனின் நிச்சயதார்த்த C. D. பார்த்த பிறகே
பெண்தேட எங்களை முழு மனத்துடன் அனுமதித்தான்.

அந்தத் தேடலின் போது சந்தித்தேன் விந்தை மனிதர்களை
அந்த மனிதர்களின் விந்தை விந்தையான கோரிக்கைகளை.

நாளை முதல் தொடரும் "சிந்தையில் நிற்கும் விந்தைமனிதர்கள்"
 
Even today some women expect the D.I.L to become pregnant on the very first month after the wedding!

Otherwise she will be branded /labeled and called names. Sometime the whole clan may be called names!

It used to happen 50 years ago. But I am shocked to learn that it is still happening now.

LIVE AND LET LIVE!
 
Just like we have a National bird, aimal, flower etc we also have a National rAgam for moaning. It is used when the nation is moaning on the loss of one of great Indians.

It is called Subha panthuvarALi and really if played on an instrument or sung properly it CAN wring one's heart inside out!

Listen to a song composed by my grandfather Sri HaridhAsa nArayanan and sung with the correct bhAvam by Smt. Raji Ram.

If you are not able to shed a tear or two, then in all probability our are stone hearted!

Click on the blue link given below to go to that page which has the song. Click on the blue link given in that pge to listen to the song.

https://haridasanarayanan.wordpress.com/e-lord-siva/05-தில்லை-நடராஜர்/
 
# 2. கலாட்டா கல்யாணங்கள்.

ஒரு காலத்தில் பெண்களை
அதிகம் படிக்க வைக்கவில்லை.

தமிழ் /ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்.
கதைப் புத்தகங்கள் படிக்கத் தெரிந்தால் போதும்.

எங்கள் மாணவப் பருவத்தில் மிகவும் போராடி நாங்கள்
கல்லூரியில் நுழைய முடிந்தது. ஆனாலும்

பெண் என்றால் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு
வீட்டோடு இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்தது.

இப்போது பெண்கள் நிறையப் படிக்கிறார்கள்,
நன்றாகவும் படிக்கிறார்கள்,
நல்லவேலையில் அமர்கிறார்கள்.

ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கிறார்கள்.
அதில் தான் பிரச்சனைகள் தொடங்குகின்றன.

"உன் வேலையை விட்டு விட்டு நான் இருக்கும் இடத்துக்கு வா!"
என்று இருவரும் கோரும் போது மணவாழ்வு "?" ஆகிறது.

நாங்கள் அனைவரும் மிகவும் தெளிவாக இருந்தோம்
மணப்பெண் "must be willing to relocate "என்று.

முதல் கண்டிஷன் அது தான்.
ஒரே கண்டிஷனும் அது தான்!

மகன் சம்பளத்தில் தாரளமாக வாழமுடியும்.

வேலைக்குப் போவதானால் போகலாம். அவள் இஷ்டம்.
ஆனால் அது மகன் வசிக்கும் இடத்தில் இருக்கவேண்டும்!

எனக்குத் தெரிந்த சில பையன்கள் "பூம்! பூம்!" என்று
பெண்ணிடம் எல்லாவற்றுக்கும் தலையை

உற்சாகமாக ஆட்டிவிட்டு அகப்பட்டுக் கொண்டு
விழிப்பதை நான் already பார்த்திருந்தேன்.
 
# 3. "உன் பாடு! உன் ஆத்துக்காரர் பாடு!".

ஹிந்து matrimonial , தமிழ் பிராமின் ஜாதகப் பரிவத்தனை
நிலயம், ஸ்ருதிவாணி என்று பல source ஜாதகத்துக்கு.

ஃபாமிலி ஜோசியர் ஒருவர் பாலக்காட்டில் இருக்கிறார்.
அவரைச் சென்று கன்சல்ட் செய்வோம்.

மதராஸ் பெண்ணாக இருந்தால் ராஜி ராம் அவர்கள் முதல் interview செய்து "தேறுமா தேறாதா?" என்று சொல்லுவார்.

முதல் ரௌண்டில்யே பலர் அவுட் ஆகிவிட்டனர்
பல வேறு காரணங்களால்.

ஒரு முறை முதல் interview வின் போது
நாங்களும் சென்னையில் இருந்தோம்.

ஒரு குட்டி மாமா...என்னையும் விட உயரம் குறைவு!
சோடப்புட்டிக் கண்ணாடி, வேஷ்டி, சட்டை,

நரைத்த கிராப்பு, கொஞ்சம் நாகேஷ் போல இருந்தார்.

இவரையும், அவரையும் பக்கத்தில் நிறுத்தினால்
பயங்கரக் contrast. போகட்டும்.

"என் பெண் நல்ல படிப்பா!
அவளுக்கு PhD செய்யணும்னு ஆசை.
அவகிட்டச் சொல்லிட்டேன்
உன் பாடு உன் ஆத்துக்காரர் பாடு."

கல்யாணம் செய்து கொண்டு குடித்தனம் செய்ய
நாம் பெண்ணைத் தேடினால்

அவர்களோ தன் பெண்ணை அமெரிக்காவில் படிக்க வைக்கும் ஹிமாலய ஏமாளியைத் தேடிக் கொண்டு வருகிறார்கள்.

இப்போதே மகனுக்கு வயது முப்பது ஆகி விட்டது.

இவள் ஐந்து வருடங்கள் படித்துவிட்டு, படிப்பு வீணாகாமல் இருக்க வேலைக்கும் சென்றால்
... பேரன், பேத்தியை நாம் காண்பது எப்போது???

ஒரே வாக்கியத்தில் தன் அபிலாசைகளைத் தெரிவித்த அவருக்கு மனத்தில் நான் கோடி கோடி நன்றிகள் சொன்னேன்.

தாலி கட்டிய பிறகு ஒவ்வொரு கண்டிஷன் ஆக
வந்திருந்தால் என்ன செய்வோம்?

அதற்கு இது தேவலை அல்லவா?
பிறகு ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்து
சிரிப்பையும் தந்தது.

"Do not marry a pretty girl thinking that
you will get a baby who takes after her.
In all probability it might take after your mother in law. "

தன் அப்பாவை விடவும் உயரமான என் மகனுக்கு
இவர் போல ஒரு மகன் பிறந்தால் .......!
 
Today I witnessed an unusual event while traveling in the call taxi.
An ambulance rushed past very fast. The taxi driver slowed down the car and prayed for a few seconds.
Another ambulance came from the front. He did the same ing again. A Third ambulance also rushed by and he did the same thing.
He was praying for the welfare and speedy recovery of the unknown person - a total stranger- who was being rushed to the hospital!
It did have a deep impact on me. Many people do not pray at all. Those of us who do pray seek the welfare of our own near and dear ones i.e our own kith and kin.

In the return trip also we came across three ambulances and the drives of this taxi also did the same thing. The sixth ambulance was an 'amarar oordhi!'
WHY did we have so may ambulances and emergencies today???
 
பல்லவி

நெக்க்-உருகி ஊன்னை பனித குல்ல் |
-னெஜ்ஜம் என்னக்க்-அருல்ழ்யை முருக || (நெக்க்-உருகி)

அனுபல்லவி

,திக்கு வெர்-இல்லை டெஅன்ன ஷரன்னை |
டெவர்-முனிவர் பானி ஸுப்ரமன்ய || (நெக்க்-உருகி)

கரநம்

முஉக்-கன்னன் உமை-ஈன்ட்ர மக்ஹனெ ஷன் |
-முகனெ மாயூஒன் மருகுனெ ||
ஸிக்கல் ஷின்க்ர வெல்ல-குஹனெ வல்லி |
-டைவயானை மனவல உன்னை னெனைன்து | (நெக்க்-உருகி)


தேச பந்து என்று கூறிக் கொண்டு
தமிழுக்கும் தமிழிசைக்கும் பச்சைத்
துரோகம் செய்பவர்களை
என்ன செய்யலாம் கூறுங்கள்!
 
# 4. கலாட்டா கல்யாணங்கள்.

சாமர்த்தியத்துக்குப் பேர் போன ஊர் அது.
ஊரைக் கேட்ட உடனேயே ஒதுக்கிவிட நினைத்தோம்.

பிறகு,"ஜாதகம் பார்க்கலாம்;
வேண்டாம் என்றால் விட்டு விடலாம்!"
என்று நினைத்தோம்!

முதல் ரவுண்டு தங்கை ராஜி ராம் போனில் பேசினார்.

"உங்கள் அக்காவும் அத்திம்பேரும்
அங்கே (U.S.A) அடிக்கடி போவார்களா?
மகனோடு தங்குவார்களா ?" என்று கூடக் கேட்காமல்,

"உங்க அக்காவும் அத்திம்பேரும்
அங்கே போக மாட்டா தானே?

அவா பசங்களோடே தங்க மாட்டா தானே?
அவா இந்தியாவிலேயே இருப்பா தானே?"

என்ற ரீதியில் கேள்விக் கணைகள் தொடுக்கவும்
அவர்கள் வாயாலேயே அவர்களைப் பற்றித்
தெரிந்துவிட்டது.

ஜாதகம் கேட்கும் போதே இத்தனை சோத்தியங்கள்!
திருமணம் என்று ஒன்று நடந்தால்...

1. we are not welcome to visit USA .

2. We are not welcome to stay with our son.

3. In future he may not be allowed to visit us.

4. Since we can't go there, the girl's parents may go

and settle down their daughter and my son.

ஸ்டாம்ப் பேப்பரில் கை எழுத்துப் போடச்
சொல்லுவார்களோ என்று கூடத் தோன்றியது!

மூத்தோர் சொல் பொய் அல்ல
என்றும் நிரூபணம் ஆயிற்று.

இவர்கள் சாமர்த்தியத்துக்கு நம்மை
ஊதித் தள்ளிவிடுவார்கள்.

போனில் பேசின உடனேயே தங்கை சொன்னார்,
"அக்கா! இது தேறாத case என்று!"
 
# 5. NOMADS OF U.S.A?

அடுத்து வந்தது ஒரு all-girls-family.
மூன்று பெண்களாம் இவர்களுக்கு.

ஒரு பெண் இருந்தாலே கையில் பிடிக்க முடியாது.
முதல் இரண்டு பெண்களையும் அமெரிக்காவுக்கு
பாக் செய்து அனுப்பியாயிற்று திருமணம் செய்து.

மூன்றாவது மாப்பிள்ளையும் அமெரிக்காவிலேயே
வேண்டும் என்று ரொம்பவும் தீவிரமாக இருந்தார்கள்.

காரணம்...

"அவளைக் கல்யாணம் பண்ணின கையோடு
நாங்களும் அங்கேயே போய்விடுவோம்.

மூன்று பெண்கள் அங்கே இருக்கும்போது
இங்கே எங்களுக்கு என்ன வேலை?
நாலு நாலு மாசம் இருந்த நாள் ஓடிப்போகாதோ?"

ஒரு மகன் (பெற்றிருந்தால்) பார்த்துக் கொள்ளுவானோ இல்லையோ

மூணு மாப்பிள்ளைகள் ஜாம் ஜாம் என்று போட்டி போட்டுக் கொண்டு

மாமனாரையும், மாமியாரையும் உள்ளங்கையில் தாங்குவார்கள்!

இல்லாவிட்டால் இரவில் மனைவி முரண்டு பிடிப்பாளே!

எப்போதாவது நாம் மகனிடம் செல்வதாக இருந்தால்
இவர்கள் அனுமதி பெறவேண்டும்.

இவர்கள் பெரிய மனது பண்ணி permission கொடுத்து,
வேறு மகள் வீட்டில் இருக்கும் போது தான்
நம்மால் செல்ல முடியும்!

ஆயுசுக்கும் அட்டைபோல ஒட்டிக் கொண்டு
சாது மகனை ஒரு வழி ஆக்கி விடுவார்கள். :heh:

"நோமட்ஸ்? நோ! நோ!" என்று
அப்போதே அதைக் கைவிட்டோம்.
 
I have been told to eat citrus fruits everyday since they are liver friendly.

I believe that when we pay through the nose for buying the fruits - it is only fair that we inspect the fruit after picking it.

Yesterday was the worst day for fruit shopping. Golden oranges had dirty green patches on their peel and copper sufate blue patches inside.

The surest way to get admitted in the nearest hospital would be to taste/ eat one of them.

Were those fruits picked up from the section kept for tossing away of giving to stray cows/ horses/ goats!!!
 

Latest posts

Latest ads

Back
Top