God does not incarnate merely for the destruction of the wicked. Truly speaking, God incarnates primarily for the sustenance of the faithful, the devoted, the virtuous and the good. But even the faithless and the bad, use the chance for their own purpose. In the Bhagavatha, stories of wicked persons intervene amidst the accounts of the Glory and Grace of God. These stories do not make the Bhagavatha any less holy. When the sweet juice has been squeezed out of the sugarcane, the bagasse is discarded. When the sweetness of Divine Majesty has been tasted, the pulp can be thrown out. The cane has both bagasse and sugar; it cannot be only sugar. So too, devotees have to be amidst the faithless; they cannot be without the others.
-Bhagavatha Vahini, Chap 28, "The Enchanting Story".
Selfless Service is the fastest way to reach God. - Baba
( translated into Tamil by Mohan Manikkam )
கடவுள் கொடியவர்களை அழிப்பதற்கு மட்டும் அவதரிப்பதில்லை. உண்மையில்
சொல்லப்போனால், கடவுள் பிரதானமாக நம்பிக்கை, பக்தி, நல்குணங்கள்
கொண்டவர்களையும், நல்லவர்களையும் காத்து வளர்க்கவே அவதரிக்கிறார். ஆனால்
நம்பிக்கையற்றவரும், கெட்டவர்களும், கடவுள் அவதரிக்கும் வாய்ப்பை தங்கள்
காரியத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். பாகவத புராணத்தில், கடவுளின்
புகழ் மற்றும் அருள் பற்றிய வர்ணனைகளுடன், கொடியவர்களின் கதைகளும்
இடையிடையே வருகின்றன. இந்தக் கொடியவர்களின் கதைகள், பாகவத புராணத்தின்
புனிதத்தை எவ்விதத்திலும் குறைப்பதில்லை. கரும்பிலிருந்து இனிய சாறு
பிழிந்தெடுக்கப்பட்ட பின் சக்கை எறியப்படுகிறது. அதேபோல், கடவுளின்
இனிமையும் கம்பீரமும் ருசிக்கப்பட்டபின், கொடியவர் கதை என்ற சக்கையை
எறிந்துவிடலாம். கரும்பிற்குள் இனிப்பும் சக்கையும் ஆகிய இரண்டுமே உள்ளன.
அது இனிப்பு மட்டுமே அல்ல. அதுபோலவே, பக்தர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள்
இடையே இருந்தே ஆக வேண்டும். நம்பிக்கையற்றோர் இல்லாமல் பக்தர்கள் இருக்க
முடியாது.
-பாகவத வாகினி , பதிவு 28, "ஒரு வசிய கதை".
கடவுளை அடையும் சுருக்கமான வழி ,எதையும் எதிர்பார்க்காமல் சேவை செய்யுங்கள் . - பாபா