tbs
0
hi iyyarooran,வாஷிங்டனில் திருமணம் எழுதிய "சாவி" யின் வாசனை அடிக்கிறது!!
வாஷிங்டனில் திருமணம் நடத்தியவன் அடியேனும் கூட....
Last edited:
hi iyyarooran,வாஷிங்டனில் திருமணம் எழுதிய "சாவி" யின் வாசனை அடிக்கிறது!!
Ref: Post # 24.
I was taken aback for a moment when I saw so many lines in RED INK!!
Sri. Mahakavi is yet to know that ONLY the moderators can use that color!! :ranger:
You are new to this forum, sir. Not a big problem. You can edit it even now to some other color!Sorry! I was used to answering questions in email using red to answer specific points raised in the email. I know the standard here now.
Thanks.
1997 இல் என் பெண் கல்யாணத்தின்போது விவாஹ மந்திரங்களின் பொருள் என்ற சிறு கையேடு ஒன்றை அச்சிட்டேன். விவாஹத்துக்கு வந்த பிராமணர்களுக்கெல்லாம் 400 பிரதிகள் நானே என் கைப்பட விநியோகித்தேன். ஸாஸ்திரிகள் உள்பட. மறுநாள் மண்டபத்தைக் காலி செய்யும் போது நாற்காலிகளின் கீழிருந்தும், ஜன்னல்கள், கதவு இடுக்குகளிலிருந்தும் கசங்கிய நிலையிலும் புத்தம் புதிதாகவும் கிடைத்த கையேடுகளின் எண்ணிக்கை 390. மீதிப் பத்துப் பேராவது படித்திருப்பார்கள் என்ற நம்பிக்கை தான் என்னை தளரவிடாமல் காப்பாற்றியது.
அஸ்ய தர்மஸ்ய உத்தரோத்தரம் வ்ருத்திரஸ்து.கர்நாடக மாநிலத்தில் .......விவாஹத்தின் போது சாஸ்த்ரிகள் வேத மந்திர சடங்குகளை ஆரம்பிப்பதற்கு முன் அந்த சடங்கின் முக்கியத்தையும் மந்திரங்களின் அர்த்தத்தையும் கன்னடத்தில் விளக்கிகூறுகிரார்கள். ....... இப்பொழுது இந்த முறையை பின்பற்றுவதை தமிழ் நாட்டிலும் காண்கின்றேன் . நல்லதொரு முயற்சி.
.....
அறுபதுகளை எட்டும் தாய்க்குலம் இப்படிச் சொன்னாலும், இருபதுகளில் உள்ள தாய்க்குலம் ஒப்புக்கொள்ள வேண்டுமே!!............ தாயக் குலம் என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
Donation was given also!! :thumb:one and a half lakh for an ayushomam? my goodness!
iruppavargalukku laddu murukku taruvadai vida illaathavargalukku saatham sambar kodukkalaame? Just a suggestion - not specific to the instance quoted by Smt.RR.
I find it difficult to accept the argument that money spent on festivities can be given to charity. This argument can be extended to any of our activities - eating out in restaurants, going on holidays or such luxuries.
A better approach may to be to spend equivalent amount on veda parayanam, sponsoring prasadams in temples for distribution or donation to other noble causes.
hi vikraman sir,உயிருள்ள சமுதாயத்தின் அடையாளம் பற்றி ஆர்னால்ட் டாயன்பீ கூறுகிறார்- யாரேனும் ஒருவர் துணிந்து ஒரு புதுமை செய்தால் பத்துப் பேர் அவரைப் பின்பற்றுவார்கள். பத்துப் பேர் அவரைக் கடுமயாக எதிர்ப்பார்கள். மீதி 80 பேர் மதில் மேல் பூனையாக நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். புது முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் இந்த 80 பேரில் பெரும்பாலானோர் புதுமையை ஏற்றுக் கொள்வார்கள்.தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் தலைவன் சொன்னது தான் சட்டம். அதை மீறி எவனும் புதுமை செய்ய முடியாது.
பிராமண சமுதாயத்தை முற்கூறிய இலக்கணப்படி ஒரு உயிருள்ள சமுதாயம் என்று ஏற்றுக் கொள்ளலாம். நம்மில் யாரேனும் ஒருவர் துணிந்து உபநயனம் விவாஹம் போன்றவற்றை எளிமையாக, கேளிக்கைத் தன்மை இல்லாமல், அதன் வைதிகத் தன்மை கெட்டுப் போகாமல், நடத்தினால் சிறுகச் சிறுக சமுதாயம் முழுவதும் மாற வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்?
உங்களுக்கு உபநயன வயதில் பையன் இருந்து, அவனுக்கு நீங்கள் இது போன்று வைதிகத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முறையில் உபநயனம் செய்து வைக்கத் தீர்மானித்தால் முத்ல எதிர்ப்பு உங்கள் இல்லாளிடமிருந்து தான் வரும்.
நன்னா...இருக்கு. நமக்கு இருக்கறது ஒரே புள்ளை. விமரிசையாகச் செய்யாவிட்டால் எப்படி?இதைச் சாக்கிட்டுத் தானே நம் வீட்டுக்கு நாலு பந்துக்கள் சினேகிதாள் வருவா. அவாளுக்கெல்லாம் மரியாதை பண்ணி புடவை வேஷ்டி வாங்கித் தர வேண்டாமா. எல்லாரும் வந்தா இந்த வீடு போறுமா? உங்க கஞ்சத்தனத்தை எல்லாம் இப்போ தான் காட்டறதா ................. என்று நீட்டி முழக்குவார். நீங்கள் சொல்ல வந்ததையே முழுவதுமாகச் சொல்ல விடமாட்டார்.
சமஷ்டி உபநயனங்களில் செலவு குறைகிறதே அன்றி ஆடம்பரங்கள் குறைவதில்லை.
நம் வீடுகளில் எல்லாம் மதுரை மாடல் நிர்வாகம் தான். (எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியத்தை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன வெட்கம்?)
எனவே எந்த சீர்திருத்தமும் தாய்மார்களிடமிருந்து தான் ஆரம்பிக்கவேண்டும். உபநயனத்தை ஆயுஷ்ஹோமம், மங்கல நீராடட்ல் போன்று வீட்டளவில் செய்ய வேண்டும். பையன் தொடர்ந்து சந்தியா வந்தனம் செய்யக் கூடிய வகையில் வைதிகத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மந்திரங்களை அர்த்தம் சொல்லி நிதானமாகச் சொல்ல வேண்டும். பையன், தகப்பனார் அந்த மந்திரத்தைத் திரும்பச் சொல்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது தாய்மார்களால் தான் முடியும்.
தாயக் குலம் என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
hi vikraman sir,
just for information....நான் என் பையனுக்கு ஒன்பது வயதில் சமஷ்டி உபநயனம் தான் செயேதேன்..அமெரிக்காவில் இருந்து வந்து சென்னையில் செய்தேன்.....வெறும் என் தாய்
மற்றும் மனைவி மட்டும்.....மாமியார் அழைக்கவில்லை...கொஞ்சம் தாய் குலத்திற்கு வருத்தம் தான்....வைதிக செலவு மட்டும் தான்....அடாம்பர செலவு
இல்லை.....மாமியார் சொன்னார்....வசதி இருந்தும் சமஷ்டி உபநயனம் செய்வார்களோ? .....என்னுடைய பதில் இது தான்...என் மகன் உபநயனம் ....என் இஷ்டம் தான்.....கொஞ்சம் கஷ்டம் தான்...கொஞ்சம் துணிச்சல் வேண்டும்....இது மாதிரி என் மகள்
திருமணம் எளிமையாக செய்ய விரும்புகிறேன் ....even without மாமியார்...
அதற்க்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும்.....பெரியோர்கள் ஆசிர்வாதம் தேவை....ஆனால் அவர்களின் இன்வோல்வேமென்ட் தேவை இல்லை....
\
Isn't that cruel? You can do simple ceremony. But why should that be the reason to dis-invite the mAmiyAr? You could have told her "don't expect pomp" but just come and confer your blessings. Same with the wedding too. If she refuses to come in the absence of expensive show let her be the one to choose so.
Dear Sir,I do not find the logic in asking the people who have money to simplify their expenses. Money has no value unless it changes hands or spent. Money should be spent lavishly, then only it will get distributed among the have-nots.
...................... By this I am not advocating lavish spending by borrowed money. Let us restrict our expenses within our means. ....