• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Why roast coconut on first day of Aadi month?

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள்.

மாதங்களை பொறுத்தவரை உத்திராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தட்சிணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் காலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

ஆடி மாதம் சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்திராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்தி கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாற்றி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது. இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலை கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு.

ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்த காலத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாகலட்சுமி பூஜை, வரலட்சுமி நோன்பு ஆகிய தினங்களில் விரதம் இருந்து அம்மனை தரிசிப்பது மிகவும் நல்லது.

ஆகையால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு நல்ல ஆரோக்கியத்தைப் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்..!!

ஆடி மாத சிறப்புகள் :

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாக இருக்கின்றன. ஆடி மாதத்தின் சிறப்புகளையும், அம்மனை வழிபட வேண்டிய முறைகளையும் காணலாம்.

ஆடி மாதத்தில் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குவதால் மேன்மை உண்டாகும்.

அம்மனை வழிபடும்போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

ஆடி மாதத்தை பீடை மாதம் என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், பீட மாதம் என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே சரியானது.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.

ஆடி பௌர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்பு பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தை பிள்ளையாராக பிடித்து செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூரியோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன்மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும்போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு தனிச்சிறப்பு கொண்டவையாக கருதப்படுகின்றன.

ஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்?

ஆடி மாதம் முதல் நாளில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தேங்காய் சுடும் பண்டிகையானது மகாபாரதப் போருடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றது.

அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில் மகாபாரத போர் நடைபெற்றது. இந்தப் போரானது ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று மகாபாரதப் போர் ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது.

இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1ஆம் தேதி மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டி பூஜை செய்கிறார்கள். மேலும், இந்த பூஜையின்போது தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், புதியதாக திருமணமான தம்பதியர், தீய எண்ணங்களை முழுமையாக அகற்றிவிட்டு நல்ல எண்ணங்களை விதைத்து மகிழ்ச்சியான வாழ்வினை தொடங்கவும், செல்வம் பெருகவும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியாக இருக்கவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
 
Last edited:

Latest ads

Back
Top