Why is JJ chosing 23rd for swearing in...What is Budhan orai?
சிறப்பு தரும் புதன் ஓரை
சொத்து குவிப்பு வழக்கில், நீதிபதி குன்ஹா தீர்ப்பு கூறிய நாள், லட்சுமி நரசிம்மர் அவதரித்த தினம். எனவே, அதற்கு பரிகாரமாக, அனைத்து நிகழ்ச்சிகளும், புதன் ஓரையில் நடத்தப்படுகிறது. எம்.எல்.ஏ.,க்கள் கூட்ட அறிவிப்பு, 15ம் தேதி, புதன் ஓரை வரும் நேரமான, காலை, 8:30 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., வெற்றிவேல், 17ம் தேதி காலை, 8:30 மணிக்கு, புதன் ஓரையில், தன் பதவியை, ராஜினாமா செய்தார்.அன்று மாலை, 4:00 மணிக்கு, புதன் ஓரையில், ஆர்.கே.நகர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு மேல், புதன் ஓரையில், ஜெயலலிதா 22ம் தேதி, தலைவர்கள் சிலைக்கு, மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அறிவிப்பு வெளியானது. வரும் 22ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, புதன் ஓரையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அன்று பகல், 2:00 மணிக்கு, புதன் ஓரையில், தலைவர்கள் சிலைக்கு, மாலை அணிவிக்க உள்ளார்.மறுநாள், 23ம் தேதி காலை, 11:00 மணிக்கு, புதன் ஓரையில், பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.தற்போது ராசி எண், 5 என்பதால், 23ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அவருடன், 32 அமைச்சர்கள் பதவியேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Jayalalithaa to became as cm 5th term | ???????? ??????? ???????? ???? ??????? ??., : 32 ?????????????? 23?? ???? ???? ???????? | Dinamalar