• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
3081. விலாஸ: = விளையாட்டு, ஆனந்தம், அழகு, பளபளப்பு.

3082. விலேப: = விலேபனம் = பூச்சு, மெழுகு, தைலம்.

3083. விலோசனம் = கண்.

3084. விவாத3: = தர்க்கம், விவாதம், வழக்கு, கட்டளை.

3085. விவாஸ: = விவாஸனம் = வெளியேற்றுதல், நாடு கடத்துதல்.

3086. விவரணம் = விரிவுரை, வெளிப்படுத்துதல், விவரித்தல்.

3087. விவர்த: = சுற்றுதல், சுழலுதல், உருமாறுதல், திரும்புதல்.

3088. விவஸ்வத் = சூரியன், அருணன், ஒரு மனுவின் பெயர்,
தெய்வம், எருக்கு இலை/ செடி.

3089. விவாஹா: = திருமணம்.

3090. விவிகத = பிரிக்கப்பட்ட, தனித் தனியாக்கப்பட்ட, வேறான, புனிதமான, குற்றமற்ற, சுத்தமான.
 
3091. விவித4 = பலவிதமான.

3092. விவேக: = பகுத்தறிவு, ஆராய்ந்து தீர்மானிக்கும் சக்தி.

3093. விவேசனம் = ஆராய்தல், பகுத்தறிதல், நிர்ணயித்தல்.

3094. விச்' = நுழைய, அடைய, சேர, உட்கார.

3095. விச'த3 = சுத்தமான, தூய்மையான, தெளிவான,
வெண்மையான, ஒளியுடன் கூடிய.

3096. விசா'க2: = முருகன், சிவன்.

3097. விசா'கா2 = ஒரு நட்சத்திரத்தின் பெயர்.

3098. விசா'ரத3 = புகழ் வாய்ந்த, கற்றறிந்த, கெட்டிக்கார,
திறமை வாய்ந்த.

3099. விசா'ல: = பரந்த, பெரிய, புகழ் வாய்ந்த, அகலமான,
விசாலமான.

3100. விசி'ஷ்ட= மேலான, அசாதாரணமான, லக்ஷணங்களுடன் கூடிய..
 
good attempt. many will benefit by it. you can give the meaning of words like
pramaadam which is normally taken as a praise. In sanat sujatheeyam (maha
bharat ), the sage says pramaatham is mrithyu. Pramaatham means in tamil
nilai thavaruthal, thadumaarram , in other words falling from your SELF.

Apoorvam means no poorvam , that is beginningless, normally referred to
Paramatma.
 
1951. ப்ரமாத3 : = அசட்டை, கவனக் குறைவு, போதை, வெறி, அபாயம், துன்பம், பயம்.

31. அபூர்வம் = புதிய, வினோதமான, ஒப்பற்ற, இதற்கு முன் கண்டிராத.
 
3101. விசு'த்3த4 = சுத்தமான, தூய்மையான, களங்கமற்ற, பாபமற்ற.

3102. விசே' ஷ: = வித்தியாசம், தனிப்பட்ட குணம், அவயவம், விதம் ,வகை மென்மை, நெற்றியில் இடும் பொட்டு.

3103. விச்'வம் = எல்லா உலகமும், சுக்கு, விஷ்ணு.

3104. விச்வேச': = விச்'வேச்'வர: = பரம்பொருள், சிவன்.

3105. விச்'வதஸ் = எல்லா இடத்திலும், எங்கும், எப்பக்கத்திலும்.

3106. விச்'வம்ப4ர: = பரம்பொருள், விஷ்ணு, சிவன்.

3107. விச்வாஸ: = நம்பிக்கை, ரஹசியம்.

3108. விஷம் = விஷம், தண்ணீர்.

3109. விஷம = சமமில்லாத, கடினமான, கஷ்டமான, துக்கம் தரும், பயங்கரமான, பருமனான, கெட்ட, எதிரிடையான, அயோக்கியத்தனமான.

3110. விஷய: = புலன்களுக்கு உரிய விஷயம், பொருள், வஸ்து, நிலம், ராஜ்ஜியம், நாடு, சிற்றின்பம்
 
3111. விஷாத3: = சோகம், துக்கம், சோர்வு, உத்சாஹமின்மை, ஆசையின்மை.

3112. விஷூசிகா = விஸூசிகா = காலரா, வந்தி.

3113. விஷ்கம்ப4: = தடை, தாழ்ப்பாள், தூண், கம்பம், மரம்,
பரப்பு, விஸ்தாரம், வட்டம்.

3114. விஷ்டா = மலம், வயிறு.

3115. விஸர்க3: = தள்ளல், விடுதல், எறிதல், போடுதல், காணிக்கை, தானம் செய்தல், விட்டு விடுதல், மலம் கழித்தல்,
" : " என்னும் குறி.

3116. விஸர்ஜனம் = அனுப்புதல், கொடுத்தல், மலம் கழித்தல், விடுதல், வெளியேற்றல், ஆவாஹனம் செய்த தேவதையைத் திருப்பி அனுப்புதல்.

3117. விஸர்ப: = பரவுதல், நகருதல், தோலில் தோன்றும் படை நோய்.

3118. விஸ்ருத = பரவிய, சொல்லப்பட்ட, விஸ்தரிக்கப்பட, உச்சரிக்கப்பட்ட.

3119. விஸ்ருஷ்ட = உண்டான, வெளியாகிய, அனுப்பப்பட்ட, விடுபட்ட, தள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட, எறியப்பட்ட, வெளியேற்றப்பட்ட.

3120. விஸ்தர: = பரவுதல், விவரணம், விஸ்தாரம், விரிவு, கூட்டம், அதிகம், படுக்கை, ஆசனம்.

 
3121. விஸ்தார: = பரவுதல், அகலம், பரந்த அமைப்பு, புதிய இலைகள் உள்ள கிளை, வட்டத்தின் விட்டம், விவரித்தல்.

3122. விஸ்தீர்ண: = விஸ்த்ருத = பரப்பப்பட்ட, அகலமான, விசாலமான, பெரிய.

3123. விஸ்போ2ட: = கட்டி, பரு, அம்மைநோய்.

3124. விஸ்மய: = ஆச்சரியம், கர்வம்.

3125. விஸ்மித = ஆச்சரியமடைந்த, கர்வம் அடைந்த.

3126. விஸ்மரணம் = விஸ்ம்ருதி: = மறத்தல், மறதி.

3127. விஹக3: = விஹங்க3: = பறவை, மேகம், அம்பு, சூரியன்,
சந்திரன்.

3128. விஹங்கம: = பறவை.

3129. விஹாயஸ் = ஆகாயம், விண்வெளி.

3130. விஹார: = அப்புறப்படுத்துதல், வெளியேற்றுதல், விளையாட்டு, கேளிக்கை, சிதறுதல், தோட்டம், பூங்கா, கோவில், ஆச்ரமம், பௌத்த மடம்.

 
3131. விஹித = தீர்மானிக்கப்பட்ட, நிர்மாணிக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, செய்யப்பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட.

3132. விஹீன = இல்லாத, இல்லாமல், இழிவான.

3133. விஹ்வல = பயந்த, நடுக்கமுற்ற, துக்கமடைந்த, கலக்கமடைந்த, அமைதியற்ற, இளகிய, நெகிழ்ந்த.

3134. விக்ஷேப: = எறிதல், அனுப்புதல், குழப்பம், பயம்.

3135. வீக்ஷணம் = வீக்ஷணா = பார்த்தல், பார்வை.

3136. வீக்ஷணம் = கண், கோள்களின் பார்வை.

3137. வீசி: = வீசீ = அலை, மகிழ்ச்சி, ஓய்வு, ஒளிக்கிரணம்,
கடல்.

3138. வீணா = வீணை, மின்னல்.

3139. வீதி2: = வீதீ = சாலை, தெரு, வரிசை, கடை, கடைவீதி,
சந்தை.

3140. வீர: = போர் வீரன், வீரன், மகன், கணவன், வேள்வித்தீ.

 
3141. வீர்யம் = பராக்கிரமம், வலிமை, ஆண்மை, சக்தி, திறன், திடத் தன்மை.

3142. வ்ருத்தம் = செய்தி, சமாசாரம், விஷயம், ஒழுக்கம், முறை, உருண்டை, வட்டம், விருத்தம், நிகழ்ச்சி, சரிதம்.

3143. வ்ருத்தி: = இருப்பு, வாழ்தல், இருத்தல், போக்கு, முறை, நிலை, நடத்தை, நிலைமை, தொழில், விரிவுரை, சுற்றளவு.

3144. வ்ருதா2 = இலாபமற்று, பொருளற்று, அவசியமிலாத, வீணான.

3145. வ்ருத்3த4 = வயது முதிர்ந்த, வளர்ச்சியடைந்த.

3146. வ்ருத்3த4: = கிழவன், முனிவர்.

3147.
வ்ருத்3தா4 = கிழவி.

3148. வ்ருத்3தி4: = வளர்ச்சி, மலருதல், செழுமை, சொத்து, குவியல், குவிப்பு, இலாபம், வட்டி.

3149. வ்ருச்சிக: = தேள், விருச்சிக ராசி.

3150. வ்ருஷ்ண: = அண்டம்.
 
3151. வ்ருஷ: = வ்ருஷப4: = எருது, காளை, விருஷப ராசி, ஒரு வர்க்கத்தில் மேலானது, சிவபிரானுடைய வாஹனம், நந்தி.

3152. வ்ருஷத்4வஜ : = வ்ருஷபதி: = வ்ருஷப4த்4வஜ : = சிவனுடைய பெயர்கள்.

3153. வ்ருஷலீ = கன்னிப்பெண், மாதவிடாயில் உள்ளவள், சூத்திரனுடைய மனைவி.

3154. வ்ருஷாகபி: = விஷ்ணு, சிவன், சூரியன், அக்னி தேவன், இந்திரன்.

3155. வ்ருஷ்டி: = மழை.

3156. வ்ருஷ்ணி: = கிருஷ்ணனின் முன்னோர்களில் ஒருவர்,
கிருஷ்ணன், மேகம், செம்மறியாடு, ஒளிக்கிரணம், இந்திரன், அக்னி, காற்று.

3157. வேக3: = வேகம், மனவேகம், நடை, பிரவாஹம், வெள்ளம், ஓட்டம், வலிமை, சக்தி, காதல், அன்பு, வீரியம்.

3158. வேணி: = வேணீ = தலைப் பின்னல், ஓட்டம், நீரோட்டம்.

3159. வேணு: = புல்லாங்குழல், மூங்கில், நாணல்.

3160. வேதனம் = சம்பளம், கூலி, வாடகை, பிழைப்பு, தொழில்.

 
3161. வேதஸ: = நாணல், பிரம்பு, கொடி, எலுமிச்சம் பழம்.

3162. வேதாள: = பூதம், பிசாசு, வேதாளம்.

3163. வேத்ரு: = அறிந்தவன், முனிவர்.

3164. வேத்ர: = வேத்ரம் = பிரம்பு, தடி.

3165. வேத3: = அறிவு, நான்கு வேதங்களில் ஒன்று.

3166. வேதி3: = வேதீ3 = யாக மேடை, முத்திரை மோதிரம், சரஸ்வதி, நிலப்பகுதி.

3167. வேத்3ய = அறியத் தக்க, மணம் புரியத் தக்க.

3168. வேத3ஸ் = பிரமன், விஷ்ணு, சிவன், அறிவாளி, சூர்யன்.

3169. வேபனம் = நடுக்கம்.

3170. வேலா: = காலம், வேலை, பருவம், அலை, வெள்ளம், எல்லை, அளவு, கடற்கரை
 
This is an excellent dictionary, it would be of use if it is published in the form
of a booklet.

About visooshika, there is one story in yoga vasistham, it is called karkadi or
visooshika kathai. She is a demon and seeks a boon to enter into the bodies of
men like a needle and drink their blood. In a commentary, the meaning is given as
cholera and in some , the meaning is blood cancer.
 
Our ancestors knew about these diseases and how they are caused.
Demons are ready to reduce to the size of a needle -
to have their quota of human blood!
Scary isn't it? :scared:

This is an excellent dictionary, it would be of use if it is published in the form
of a booklet.

About visooshika, there is one story in yoga vasistham, it is called karkadi or
visooshika kathai. She is a demon and seeks a boon to enter into the bodies of
men like a needle and drink their blood. In a commentary, the meaning is given as
cholera and in some , the meaning is blood cancer.
 
These words are from a Sanskrit Dictionary in four languages...English, Tamil, Hindi and Sanskrit.

I am not sure whether the book is in print now.

It was gift to my sons by my father when they took Sanskrit as third language.

Since the words are in alphabetical order, people can access the required word by entering the thread and looking it up.

So it will a dictionary-not a hard copy-but one stored in the P.C.
 
3171. வேச': = வே ஷ: = உடை, வே ஷம், நுழைவு, நுழைதல், நுழை வாயில், வேசியின் வீடு.

3172. வேச்'யா = விலை மாது.

3173. வேஷித = சுற்றப்பட்ட, மூடப்பட்ட, சூழப்பட்ட, தடுத்து நிறுத்தப்பட்ட.

3174. வைகுண்ட2: = துளசிச் செடி, விஷ்ணு.

3175. வைகுண்ட2ம் = விஷ்ணு லோகம்.

3176. வைகரீ = பேச்சு, பேசுதல், பேச்சுத்திறன், தெளிவான உச்சரிப்பு.

3177. வைகு3ண்யம் = குற்றம், மாறுபாடு, குணமற்ற தன்மை, எதிரிடை.

3178. வைசித்ர்யம் = ஆச்சரியம், எதிர்பாராமல், பலவிதமானது.

3179. வைஜயந்தி =
விஷ்ணு
வின் மாலை, விருதுக்கொடி, முத்திரை, அடையாளம், மாலை, ஒரு அகராதி.

3180. வைதி3க = புனிதமான, வேத சம்பந்தமுள்ள.

 
3181. வைது3ஷ்யம் = அறிவு, படிப்பு.

3182. வைதே3ஹீ = சீதை.

3183. வைத்ய: = வைத்தியன், அறிவாளி.

3184. வைனதேய = கருடன், அருணன்.

3185. வைப4வம் = பராக்கிரமம், வல்லமை, புகழ், மகிமை, செல்வம்.

3186. வைமாத்ர: = வைமாத்ரக: = வைமாத்ரேய: = மாற்றாந்தாயின் மகன்.

3187. வைமாத்ரா = வைமாத்ரீ = வைமாத்ரேயீ = மாற்றாந்தாயின் மகள்.

3188. வைரம் = விரோதம், வெறுப்பு, சூரத்தன்மை, பராக்கிரமம்.

3189. வைராக்3யம் = பற்றின்மை, துக்கம், சோகம்,
திருப்தியின்மை.

3190. வைரின் = எதிரி, வீரன்.

 
3191. வைரூப்யம் = அவலக்ஷம், அழகற்ற தன்மை.

3192. வைவஸ்த: = ஒரு மனுவின் பெயர், யமன், சனி.

3193. வைசா'க2: = வைசாக மாதம், மத்து.

3194. வைசேஷ்யம் = சிறப்பு, விசே ஷத் தன்மை.

3195. வைச்'ய: = வைஸ்யன்.

3196. வைச்'ரவண: = குபேரன்.

3197. வைச்'வாநர: = அக்னி தேவன், ஜீரணம் செய்யும் அக்னி.

3198. வ்யஜ: = வ்யஜனம் = விசிறி.

3199. வ்யக்தி: = உருவம், தனிப்பட்டதன்மை, விளக்கமாகத்
தெரிதல், தனி மனிதன்.

3200. வ்யஞ்ஜனம் = தெளிவாக்குதல், மாறுவேடம், விவரித்தல், சின்னம், மிகுதி, தொடு சுவை, மெய்யெழுத்து, தாடி.
 
3201. வ்யதிகர: = சேர்க்கை, சேருதல், கூடுதல், கலவை, கலப்பு, நிகழ்ச்சி, தருணம், வாய்ப்பு, சங்கடம், கஷ்டம், ஒன்றுக்கு ஒன்று கொண்டுள்ள தொடர்பு.

3202. வ்யதிக்ரம: = மிஞ்சுதல், தவறுதல், அதிக்ரமித்தல், மாறுபாடு, தலை கீழானது, பாவம், துயரம், துரதிர்ஷ்டம்.

3203. வ்யதிரிக்த = பிரிக்கப்பட்ட, தனியான, மேலான, இல்லாத.

3204. வ்யதிரேக: = பிரிவு , வித்தியாசம், தவிர்த்தல், மேன்மை.

3205. வ்யதா2 = பீடை, துன்பம், கவலை, பயம், நோய், அமைதியின்மை.

3206. வ்யய: = நாசம், அழிவு, இடையூறு, மறைவு, செலவு, வீழ்ச்சி, உபயோகித்தல்.

3207. வ்யவஸாய: = தீர்மானித்தல், முயற்சி, தொழில், வேலை, செய்கை, நடத்தை, யுக்தி, உபாயம்.

3208. வ்யவஸ்தா2 = வ்யவஸ்தி2: = வ்யவஸ்தா2னம் = நிலை, ஒழுங்கு, நிச்சயமான தன்மை, நன்கு அமைக்கப்பட்ட, திடத்தன்மை.

3209. வ்யவஸ்தி2த = ஒழுங்கு செய்யப்பட, ஸ்தாபிக்கப்பட்ட, உறுதியான.

3210. வ்யவஹார: = ஒழுக்கம், நடத்தை, தொழில், வேலை, வியாபாரம், வழக்கு, ஒழுங்கு, வழக்கம்.
 
3211. வ்யஸனம் = கேடு, நஷ்டம், அழிவு, வீழ்ச்சி, குற்றம், குறை, துக்கம், கெடுதி, அபாயம், காற்று, தண்டனை, பிரித்தல்.

3212. வ்யாகரணம் = சமஸ்கிருத இலக்கணம்.

3213. வ்யாக்2யானம் = வ்யாக்2யா = விவரித்தல், வர்ணனை, விரிவுரை, உரை.

3214.
வ்யாக்4ர: = புலி, சிறந்தவன்.

3215. வ்யாக்4ரீ = பெண் புலி.

3216. வ்யாஜ: = கபடம் சூது, யுக்தி, உபாயம், பொய்க்காரணம், சாக்குப் போக்கு.

3217. வ்யாத4: = வேடன்.

3218. வ்யாதி4: = நோய்.

3219. வ்யாபக = பரவும், பரவலாக உள்ள.

3220. வ்யாபன்ன = பயனற்ற, சேதமடைந்த, துன்பமடைந்த, இறந்த.
 
3221. வ்யாபார: = தொழில், வேலை, முயற்சி, காரியம், வியாபாரம், செயல்.

3222. வ்
யாபாரீன் = வியாபாரி.

3223. வ்யாப்தி: = பரவுதல், நிறைவு, அடைதல், எங்கும் உள்ள தன்மை.

3224. வ்யாமிச்'ர = கலந்த, கலந்துள்ள.

3225. வ்யாமோஹ: = மயக்கம், கலக்கம், குழப்பம்.

3226. வ்யாயாம:= உடற்பயிற்சி, நீட்டுதல், முயற்சி, செயல், களைப்பு.

3227. வ்யால: = பாம்பு, புலி, சிறுத்தை, துஷ்ட யானை, கெட்ட மனிதன், அரசன், விஷ்ணு.

3228. வ்யாஸ: = பிரித்தல், பங்கு போடுதல், பரவுதல், வியாச முனிவர், அகலம், விட்டம், ஒழுங்கு படுத்துபவன், சேர்த்தி இயற்றுபவன்.

3229. வ்யாஹ்ருதி = சொல், பேச்சு, உச்சரித்தல், மந்திரங்களின் முற்சேர்க்கைச் சொற்கள்.

3230. வ்யாக்ஷேப: = தடை, தாமதம், மனக் கலக்கம்.
 
3231. வ்யுத்பத்தி = உற்பத்தி, ஆரம்பம், மூலம், முழு அறிவு.

3232. வ்யுத்பன்ன = உண்டான, உண்டாக்கப்பட்ட, பூர்த்தியான, முழுமை அடைந்த, நன்கு கற்றறிந்த.

3233. வ்யூதி: = நெய்தல், நெசவு, தைத்தல்.

3234. வ்யூஹ: = போர்ப்படை, அணிவகுப்பு, பகுதி, பிரிவு,
கூட்டம், அமைப்பு, உடல், பகுத்தறிதல், தர்க்கம்.

3235. வ்யோமன் = ஆகாயம், விண்வெளி, அப்ரகம், தண்ணீர், சூரியனின் கோவில்.

3236. வ்யோமசாரின் = தேவன், பறவை, மஹான், நட்சத்திரம், கோள்.

3237. வ்ரஜ: = பசு மாட்டுத் தொழுவம், இருப்பிடம், இடைச்சேரி, கூட்டம், சமுதாயம், வழி, மேகம், பாதை.

3238. வ்ரண: = வ்ரணம் = காயம், புண், கட்டி.

3239. வ்ரத: = வ்ரதம் = நோன்பு, மதக்ரியை, பிரதிக்ஞை, செயல், காரியம், பயிற்சி.

3240. வ்ராத்ய: = வீழ்ச்சியுற்றவன், மட்டமான மனிதன்.
 
3241. வ்ரீட3: = வ்ரீடா3 = வெட்கம்.

3242. வ்ரீஹி: = நெல், அரிசி.

3242. ச'கட: = சகடம் = வண்டி.

3244. ச'குன: = பறவை.

3245. ச'குனம் = நல்ல / கெட்ட சகுனம்.

3246. ச'குனி: = பறவை, கழுகு, ராஜாளி, சகுனி மாமா.

3247. ச'குந்த: = நீலாங்கப் பக்ஷி.

3248. ச'க்த = கெட்டிக்கார, சக்தி வாய்ந்த, சாமர்த்தியம் உள்ள.

3249. ச'க்தி: = வலிமை, பராக்கிரமம், தகுதி, திறமை, திறன்.ஈட்டி, வேலாயுதம்.

3250. ச'க்ய = செய்யத் தக்க, சுலபமான.

 
3251. ச'க்ர: = இந்திரன், ஆந்தை, கேட்டை நக்ஷத்திரம், மருத மரம்.

3252. ச'க்வர: = எருது.

3253. ச'ங்கர: = மங்கள
ம் தருபவன், சிவன், சங்கராச்சாரியார்.

3254. ச'ங்கரீ = பார்வதி.

3255. ச'ங்கா = சந்தேகம், பயம், ஐயம், ஆசை, நம்பிக்கை, நிச்சயம் அற்ற தன்மை.

3256. ச'ங்கித = சந்தேகமான, நிச்சயம் அற்ற, நம்பக் கூடாத, நடுக்கம் அடைந்த, பயத்துடன் கூடிய.

3257. ச'ங்க: = ச'ங்கம் = சங்கு, நெற்றியில் புருவ மத்தி எலும்பு, ஒரு வாசனைப் பொருள், யானையின் இரு துதிக்கைகளுக்கு இடையே உள்ள பகுதி.

3258. ச'சி = ச'சீ = இந்திராணி.

3259. ச'ட2: = ஏமாற்றுபவன், முட்டாள், சோம்பேறி, நடுநிலையாளன்.

3260. ச'ண்ட3:= சண்ட4: = அலி,எருது, காளை.

 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top