• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
3351. சி'ஷ்ய: = சீடன், படிப்பவன், பலவந்தம் செய்தல், கோபம்.

3352. சி'க்ஷக: = கற்பவன், கற்பிப்பவன்.

3353. சி'க்ஷணம் = கற்றல், கற்பித்தல்.

3354. சி'க்ஷா = படித்தல், கற்றல், கற்பித்தல், வேதங்களில் ஒன்று சிக்ஷை.

3355. சீ'க்3ர = சீ'க்3ரிய = விரைவான, வேகமான.

3356. சீ'க்3ரம் = சுறுசுறுப்பான, வேகமான.

3357. சீ'தா = சீ'தல = குளிர்ச்சியான, குளிரும், குளிரால்
உறைந்த.

3358. சீ'தலம் = குளிர், சந்தனம், முத்து, தாமரை, குளிர்காலம்.

3359. சீ'தல: = சீதாம்சு = சந்திரன், கர்ப்பூரம்.

3360. சீ'தலா = சீதலீ = அம்மை, வைசூரி.
 
3361. சீ'ர்ண = குறைந்து போன, மெலிந்த, ஒடிந்த, காய்ந்த, அழுகின, வீணான.

3362. சீ'ர்ஷம் = தலை, மண்டையோடு, இரும்புத் தொப்பி, தலைப்பாகை, குல்லாய், தீர்ப்பு, தலையங்கம்.

3363. சீ'லம் = இயற்கை, ஒழுங்கு, ஸ்வபாவம், நடத்தை, நற்குணம், அழகு, நல்ல உருவம் கொண்டிருப்பது.

3364. சு'க: = கிளி, சுக முனிவர்.

3365. சு'க்தி: = சிப்பி, முத்துச் சிப்பி, சங்கு, குதிரையின் பிடரி மயிர்.

3366. சு'க்ர: = சுக்ரன், சுக்ராச்சாரியார், நெருப்பு, அக்னி.

3367. சு'க்ரம் = வீர்யம்.

3368. சு'க்ரவார: = வெள்ளிக் கிழமை.

3368. சு'க்ல = வெண்மையான, சுத்தமான, பிரகாசமான.

3370. சு'க்லம் = வெள்ளி, புது வெண்ணை, கஞ்சி, வெளிச்சம்.

 
3371. சு'சி = சுத்தமான, நிர்மலமான, வெண்மையான, பிரகாசமான, புனிதமான, உண்மையான.

3372. சு'சி: = புனிதத் தன்மை, சுத்தம், உண்மையான நடத்தை, குற்றமற்றது, வெண்மை, நற்குணம், புனிதமானவன், சுத்தமானவன், கோடைக்காலம், சூரியன், சந்திரன், அக்னி, சுக்ரன் என்னும் கோள், எருக்கு, ஆகாயம், ஸ்ருங்கார ரசம்.

3373. சுண்டி2 : = சுண்டீ2 = சுக்கு.

3374. சு'ண்டா3 = யானைத் துதிக்கை, மதுபானம், கள்ளுக்கடை, வேசி, கூட்டிவைப்பவள்.

3375. சு'த்3த4 = சுத்தமான,தெளிவான, புனிதமான, குற்றமற்ற, களங்கமற்ற, வெண்மையான, ஒளியுடைய,நேர்மையான, ஒழுக்கமுள்ள, உண்மையான, சரியான, எளிமையான.

3376. சு'த்3தி4:= சுத்தத் தன்மை, நிர்மலத்வம், புனிதம், பிராயச்சித்தம், பிரகாசம், சுத்தம் செய்தல்.

3377. சு'னக: = சு'னி: = ச்'வன் = நாய்.

3378. சு'ப4 = சோ'ப4ன = மங்களகரமான, பிரகாசமான,
அழகான, நல்ல, நற்குணமுடைய, அதிர்ஷ்டத்துடன் கூடிய.

3379. சு'ப4ம் = மங்களம், நல்ல அதிர்ஷ்டம், அணிகலன், தண்ணீர்.

3380. சு'ப்4ர = வெண்மையான, பிரகாசிக்கும்.

 
3381. சு'ல்க: = சு'ல்கம் = சுங்கம், வரி, திருமண உபகாரப் பணம், கன்னிகைக்காகக் கொடுக்கப்படும் பணம்.

3382. சு'ச்'ரூஷக: = வேலையாள், பணிவிடை செய்பவன்.

3383. சு'ச்'ரூஷணம்= சு'ச்'ருஷா = பணிவிடை, கேட்க விருப்பம்.

3384. சு'ஷ்க = உலர்ந்து போன, காய்ந்து போன, வறண்ட, மலிந்த, உபயோகமற்ற.

3385. சூ'கர: = பன்றி.

3386. சூ'ன்ய = இல்லாத, காலியான, தனியான.

3387. சூ'ன்யம் = ஆகாயம், விண்வெளி, பூஜ்யம்.

3388. சூ'ர : = வீரன், போர் வீரன், சூரன், சிங்கம், பன்றி,
சூரியன்.

3389. சூ'ர்ப = சூர்பம் = முறம்.

3390. சூ'ர்பகர்ண: = யானை, விநாயகர்.

 
3391. சூ'ல:= சூ'லம் = கூர்மையான ஆயுதம், திரிசூலம், வேல், வலி, வயிற்று வலி.

3392. சூ'லின் = சிவன், சூலம் ஏந்தியவன், முயல்.

3393. ச்'ருகா3ல: = நரி, வஞ்சகன், கெட்டவன்.

3394. ச்'ருங்க3ம் = கொம்பு, மலையுச்சி, சிகரம், உயர்வு, உயரம், பீச்சாங்குழல்.

3395. ச்'ருங்கா3ர: = காதல், புணர்ச்சி, அடையாளம், ஒரு காவியச் சுவை.

3396. ச்'ருங்கீ3ன் = மலை, யானை, சிவன், சிவனின் பணியாள் ஸ்ருங்கீ.

3397. சே'கர: = கொண்டை, கிரீடம், உச்சி, சிகரம், முக்கியமானது, மேலானது.

3398. சே'வலம் = சை'வல: = நீர்ப்பாசி.

3399. சே' ஷ: = சே ஷம் = மீதியானது, பாக்கி, முக்தி.

3400. சே' ஷ: = ஆதிசே ஷன், பலராமன், முடிவு, சாவு.
 
3401. சை'ல: = மலை, பாறை, பெரிய கல்.

3402. சை'லீ = போக்கு, நடை, ஒழுக்கம், முறை, நடத்தை.

3403. சோ'க: = துக்கம், துன்பம்,வேதனை, அழுகை.

3404. சோ'ண : = சிவப்பு, நெருப்பு, சோனை நதி, செங்கரும்பு, சிவப்பு நிறக் குதிரை.

3405. சோ'ணம் = ரத்தம், சிந்தூரம்.

3406.
சோ'த4னம் = சுத்தம் செய்தல், தவறு நீக்கல், கடன் தீர்த்தல், பிராயச்சித்தம், துத்தம், மலம்.

3407. சோ'ப4னம் = காந்தி, அழகு.

3408. சோ'பா4 = காந்தி, பளபளப்பு, அழகு, அலங்காரம், அணிகலன், மஞ்சள், நிறம்.

3409. சோ'பி4த = அழகுவாய்ந்த, பிரகாசிக்கின்ற, அலங்கரிக்கப்பட்ட.

3410. சோ'ஷ: = உலர்ந்து போதல், க்ஷயரோகம்.

 
dear madam!
3397. சே'கர: = கொண்டை, கிரீடம், உச்சி, சிகரம், முக்கியமானது, மேலானது.
after reading this i am able to understand the full meaning of sasi sekaran,gnanasekaran,gunasekaran etc.
 

chnadra sekhar = sasi sekhar = Sivan.


dear madam!
3397. சே'கர: = கொண்டை, கிரீடம், உச்சி, சிகரம், முக்கியமானது, மேலானது.
after reading this i am able to understand the full meaning of sasi sekaran,gnanasekaran,gunasekaran etc.
 
3411. சோ'ஷணம் = உலர்ந்து போதல், வறண்டு போதல், மெலிந்து போதல், உறிஞ்சுதல், களைப்பு, சுக்கு.

3412. சௌ'சம் = நன்னடத்தை, சுத்தமான தன்மை, சுத்தமாக்குதல்.

3413. சௌ'ச்சகூப: = மலம் கழிக்கும் இடம்.

3414. செள'ரி: = விஷ்ணு, பலராமன், சனிகிரஹம்.

3415. சௌ'ர்யம் = பராக்கிரமம், பலம், சூரத்தனம்.

3416. ச்'மசா'னம் = மயானம்.

3417. ச்'மச்'ரு = மீசை, தாடி.

3418. ச்'யாம = கருப்பான, கருநீலமான.

3419. ச்'யாம: = கருப்பு, மேகம், பச்சைநிறம், குயில், அக்கூ
பக்ஷி.

3420. ச்'யாமா = இரவு, இருள் சூழ்ந்த இரவு, யௌவன ஸ்த்ரீ, கறுப்பு ஸ்த்ரீ, நிழல், பசு, துளசிச்செடி, மஞ்சள், யமுனை நதி.

 
3421. ச்'யால : = மைத்துனன்.

3422. ச்'ரத்3தா4= நம்பிக்கை, மதச் சடங்குகளில் ஊக்கம், மன அமைதி, வலுத்த ஆசை.

3423. ச்'ரம: = சிரமம், செயல், உழைப்பு, முயற்சி, கஷ்டம் துக்கம், பயிற்சி, சாதனை, களைப்பு.

3424 ச்'ரவ: = கேட்டல், காது.

3425. ச்'ரவண: = ச்'ரவணம் = காது, முக்கோணத்தின் கர்ணம், சிரவண நக்ஷத்திரம்.

3426. ச்'ரவஸ் = காது, செல்வம், புகழ், நதி, ஓடை, புகழ்க்கவிதை.

3427. ச்'ரவிஷ்டா = சிரவண நக்ஷத்திரம், அவிட்ட நக்ஷத்திரம்.

3428. ச்'ராத்3த4ம் = இறந்துபோன முன்னோருக்குச் செய்யும் சடங்கு.

3429. ச்'ராந்த = களைப்படைந்த, அமைதியான.

3430. ச்'ராவ்ய = கேட்கத் தக்க, தெளிவாகக் கேட்கும்.

 

3431. ஸ்ரீ = செல்வம், சொத்து, மகிமை, லக்ஷ்மி, அழகு, காந்தி, நற்குணம், மேன்மை, தாமரைப் பூ, வில்வ மரம்.

3432. ஸ்ரீகண்ட: = சிவன்.

3433. ஸ்ரீசக்ரம் = பூ மண்டலம், தேவியின் ஸ்ரீ சக்ர யந்த்ரம்.

3434. ஸ்ரீத4ர: = ஸ்ரீனிவாஸ: = ஸ்ரீபதி: = ஸ்ரீ வத்ஸ: =
ஸ்ரீ வத்ஸாங்க: = விஷ்ணு.

3435. ஸ்ரீமத் = செல்வம் படைத்த, அழகான, புகழ்வாய்ந்த, பாக்கியசாலியான, சுகமாக உள்ள.

3436. ஸ்ரீமத் = விஷ்ணு, குபேரன், சிவன், அரசமரம்.

3437. ச்'ரு = செல்ல, அசைய, ஆட,
கேட்க, படிக்க,
தொண்டுபுரிய.


3438. ச்'ருத = கேட்கப்பட்ட, காதில் விழுந்த, புரிந்து கொண்ட,
தெரிந்து கொண்ட, புகழ் வாய்ந்த.

3439. ச்'ருதம் = வேதம், அறிவு, கேட்கப்பட்டது.

3440. ச்'ருதி: = கேட்டல், செய்தி, வதந்தி, வேதம், குரல், சப்தம், காது, புனித அறிவு, பேச்சு, பெயர், புகழ், இசையில் சுருதி.
 
3441. ச்'ரேணி: = ச்ரேணீ = வரிசை, கோடு, கூட்டம், சங்கம்.

3442. ச்'ரேயஸ் = நற்குணம், நல்ல காரியம், சுபம், மங்களம், ஆசி, மோக்ஷம், நல்ல தருணம்.

3443. ச்'ரேயஸ்கர = சுபமான, மகிழ்ச்சியளிக்கும், மங்களகரமான.

3444. ச்'ரேஷ்ட = மேலான, பிரியமான, சிறந்த, மேன்மையான.

3445. ச்'ரேஷ்ட: = அரசன், அந்தணன், விஷ்ணு, மேலானவன்.

3446. ச்'ரோணி: = ச்'ரோணீ = இடுப்பு, பிட்டம்.

3447. ச்'ரோதஸ் = காது, புலன், துதிக்கை, நீரோடை,
நீரோட்டம்.

3448. ச்'ரோத்ரு: = கேட்பவன், மாணவன், சீடன்.

3449. ச்'ரோத்ரம் = வேதம், காது.

3450. ச்'ரோத்ரீய: = வேதம் அறிந்தவன், கற்றறிந்தவன்.

 
3451. ச்'ரௌதம் = வேள்வி அக்னி ( மூன்று அக்னிகள்), வேதத்தில் கூறப்பட்ட கர்மா.

3452. ச்'லக்ஷ்ண = மிருதுவான, வழவழப்பான, சிறிய, நேர்த்தியான, மெல்லிய, அழகான, நேர்த்தியான, மேன்மையான.

3453. ச்'லாகணம் = ச்லாகா = புகழ்தல், துதி செய்தல்.

3454. ச்'லாக்ய = புகழத்தக்க, மேலான.

3455. ச்'லிஷ்ட = தழுவிக் கொள்ளப் பட்ட, ஒட்டிய, ஒட்டிக் கொண்ட, இரட்டைப் பொருளுடன் கூடிய.

3456. ச்'லே ஷ : = தழுவிக்கொள்ளல், ஒட்டிக்கொள்ளல், பின் பற்றல் சேர்க்கை, கூடுதல், சிலேடைச் சொல்.

3457. ச்'லேஷ்மன் = கபம்.

3458. ச்'லோக: = செய்யுள், கவிதை, முதுமொழி, தோத்திரம், துதி, புகழ்.

3459. ச்'வன் = ச்'வான : = நாய்.

3460. ச்'வசு'ர: = மாமனார்.
 
3461. ச்'வச்'ரூ: = மாமியார்.

3462. ச்'வஸ் = சுவாசித்தல், பெருமூச்சுவிடுதல், மூச்சு திணறல், இரைத்தல்.

3463. ச்'வஸ் = நாளை, மறுநாள், வருங்காலத்தில்.

3464. ச்'வஸனம் = மூச்சு.

3465. ச்'வாஸ: = காற்று, மூச்சு, பெருமூச்சு.

3466. ச்'வேத = வெண்மையான.

3467. ச்'வேத: = வெண்மை வர்ணம், சுக்ரன், சோழி, சங்கு,
வெண்மேகம், ஜீரகம்.

3468. ச்'வேதம் = வெள்ளி.

3469. ச்'வேதச்ச2த3: =அன்னப் பறவை, வெண் துளசி.

3471. ச்'வேதா = வெண் நொச்சி, சோழி, வெண் அருகம் புல், படிகம்.
 
res madam !
vey nice words.learning more and more words.it is sounding to my ears while reading the neatly typed letters and it will be more helpful if it produced with Devanagari script
cheers
 
Dear Sir,

A very good suggestion. I can type in Sanskrit itself but I guess the number of people who can read Tamil script will definitely be greater than the number who can read Sanskrit/ Devanagari.

The idea is to to benefit maximum number of people.

When we were kids, we were denied the chance to learn Hindi and Sanskrit. So I am apprehensive of posting in Sanskrit and Hindi.

with warm regards,
Visalakshi Ramani.



res madam !
vey nice words.learning more and more words.it is sounding to my ears while reading the neatly typed letters and it will be more helpful if it produced with Devanagari script
cheers
 
3471. ச்'வேதா = வெண் நொச்சி, சோழி, வெண் அருகம் புல், படிகம்.

3472. ஷட்கம் = ஆறு கொண்டது.

3473. ஷட்கர்மன் = அந்தணனுக்கு விதிக்கப்பட ஆறு கர்மங்கள்.

3474. ஷட்கோணம் = அறுகோணம்.

3475. ஷட்சக்ரம் = உடலில் உள்ள ஆறு சக்கரங்கள்
(மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா)

3476. ஷட்பத3: = ஷட்சரண: = தேனீ, வண்டு, பேன்.

3477. ஷட்பதீ3 = ஆறு வரிகள் கொண்ட செய்யுள், பெண் வண்டு.

3478. ஷட்3வக்தர: = ஷட்3வத3ன: = ஷடா3னன: = ஷண்முக2: =
ஷண்மாதுர: = முருகன், ஆறுமுகக் கடவுள்.

3479. ஷண்ட3: = எருது, பேடி, ஆண்மையற்றவன், கூட்டம், குவியல்.

3480. ஷஷ் = ஆறு என்னும் எண் உரிச்சொல்.
 
3481. ஸக்2ய= ஸகி = நண்பன், தோழன்.

3482. ஸகீ = தோழி, தாதி.

3483. ஸக்2யம் = நேசம், நட்பு.

3484. ஸகு3ண = நற்குணங்கள் உள்ள, உலகத்தொடர்புள்ள.

3485. ஸங்கடம் = குறுகிய பாதை / சாலை , துன்பம், கவலை, கடினமான .

3486. ஸங்கர: = கலப்பு, இணைப்பு, ஜாதிகளின் கலப்பு.

3487. ஸங்கர்ஷணம் = இழுத்தல், உழுதல், வசீகரித்தல்.

3488. ஸங்கலித = ஒன்று சேர்க்கப்பட்ட, குவிக்கப்பட்ட,
கலக்கப்பட்ட.

3489. ஸங்கல்ப: = நோக்கம், மனவலிமை, குறிக்கோள், உத்தேசம், எண்ணம், விருப்பம், எண்ணம், நினைப்பு, கற்பனை, திட்டம்.

3490. ஸங்கீர்ண = ஒன்றுடன் ஒன்று கலந்த, குறுகிய, சுருங்கிய, ஒழுங்கற்ற, சிதறிய, தெளிவற்ற, கலப்படமான.

 
3491. ஸங்கீர்த்தனம் = துதித்தல், புகழுதல், பஜனை.

3492. ஸங்குசித = சுருக்கப்பட்ட, மூடப்பட, குறுகிய.

3493. ஸங்குலம் = குழப்பமான கூட்டம், சேர்க்கை, முன்னுக்குப்பின் விரோதமான பேச்சு.

3494. ஸங்கேத: = ஜாடை, குறிப்பு, அடையாளம், ஒப்புதல், நிபந்தனை.

3495. ஸங்கோச: = பயம், வெட்கம், கட்டுதல், சுருக்குதல், கட்டுதல்.

3496. ஸங்க்ரமணம் = போக்கு, மாறுதல், சூரியன் ராசி மாறுதல், மஹா சங்கராந்தி, ஒப்பு, ஒத்திருத்தல்.

3497. ஸங்க்2யா = எண், எண்ணிக்கை, கணக்கிடுதல், காரணம், வழி, முறை, சிந்தித்தல்.

3498. ஸங்க3: = தொடர்பு, பற்று, பாசம், நட்பு, பிரியம், சேர்க்கை.

3499. ஸங்க3த = இணைக்கப்பட்ட , சேர்க்கப்பட்ட, திருமணத்தால் இணைந்த.

3500. ஸங்க3தி: = சேருதல், சந்தித்தல், சேர்க்கை, புணர்ச்சி, கூடுதல், தொடர்பு, சம்பவம், அறிவு, தகுதி.

 
3501.ஸங்க3ம: = சந்தித்தல், சேருதல், கூடுதல், சஹவாசம், தகுதி, சண்டை, நதிகள் ஒன்று சேருதல்.

3502. ஸங்க3ர: = வாக்களிப்பு, அங்கீகாரம், போர், சண்டை, துன்பம், விஷம், அறிவு.

3503. ஸங்க3வ: = பகலின் இரண்டாவது பாகம்.

3604. ஸங்கீ3தம் = பாட்டு, இசை.

3505. ஸங்க்3ரஹ: = பிடித்தல், குவித்தல், சேர்த்தல், மொத்தம், குவியல்.

3506. ஸங்க3: = கூட்டம், சமூஹம்.

3507. ஸங்க்3ராம: = போர், சண்டை.

3508. ஸசி: = நட்பு, சிநேகிதன்.

3509. ஸசிவ: = நண்பன், தோழன், மந்திரி, காரியதரிசி.

3510. ஸஜ்ஜ = சித்தமான, தயாராக உள்ள.

 
3511. ஸஜ்ஜித = ஆடை அணிந்த, தயாராக உள்ள, அலங்கரிக்கப்பட்ட, கவசம் பூண்டு போருக்குத் தயாராக உள்ள.

3512. ஸஞ்சய = குவித்தல், ஈட்டல்.

3513. ஸஞ்சார: = போக்கு, பிரயாணம், அலைதல், வழி, பாதை, பரவுதல்.

3514. ஸஞ்சித = குவிக்கப்பட்ட, திரட்டப்பட்ட.

3515. ஸஞ்ஜாத = பிறந்த, உண்டான.

3516. ஸத் = இருக்கின்ற, உண்மையான, நல்ல, சிறந்த, அழகிய,
பரம்பொருள்.

3517. ஸஜ்ஜன: = நல்ல மனிதன், நற்குணங்கள் உடையவன்.

3518. ஸததம் = ஸந்ததம் = எப்போதும், தொடர்ந்து.

3519. ஸதீ = கற்புடைய மாது, பார்வதீ.

3520. ஸதீர்த்த2: = ஸதீர்த்2ய: = கூடப் படித்தவன்.
 
3521. ஸத்கார: = கௌரவித்தல், வெகுமானம், விருந்தோம்பல்.

3522. ஸத்க்ருதி: = நல்ல குணம், நற்செய்கை, கௌரவித்தல்.

3523. ஸத்தா = இருப்பு, உண்மை, மேன்மை.

3524. ஸத்யம் = உண்மை, பிரதிக்ஞை, சபதம், கிருதயுகம், பரம்பொருள், தண்ணீர்.

3525. ஸத்ரம் = யாகம், வேள்வி, அக்னியில் அர்ப்பணிக்கப்படும் பொருள், வீடு, ஆசிரமம், காடு, செல்வம், நன்கொடை, தானம், மறைப்பு.

3526. ஸத்வம் = இருப்பு, இயற்கை, ஸ்வபாவம், உண்மை, சாமர்த்தியம், வலிமை, சக்தி, உயிர் , பிராணி, பூதம், பிசாசு, நற்குணம், மனம், புத்தி, உணர்ச்சி , செல்வம், வஸ்து, கர்ப்பம், மூலதத்வம், சூக்ஷ்ம உடல்.

3527. ஸத்வரம் = வேகமாக, சீக்கிரமாக.

3528. ஸத3ஸ் = சபை, இருப்பிடம்.

3529. ஸத3ஸ்ய: = சபையில் உள்ளவன்.

3530. ஸதா3 = எப்போதும்.
 
3531. ஸத்3ருச' = சமமான, தகுந்த, தக்க, ஒரேவிதமான.

3532. ஸத்3ருஸ் = உடனடியாக, இன்று.

3533. ஸநாதன = சாஸ்வதமான, முன் காலத்திய, திடமான.

3534.
ஸநாத2 = கூடிய, சேர்ந்த, கணவனுடன் கூடிய, கணவன் உள்ள.

3535. ஸந்தான: = ஸந்தானம் = ஸந்ததி: = குலம், வம்சம், பரம்பரை, குழந்தை, நீட்டுதல், விஸ்தாரம், குடிமக்கள்.

3536. ஸந்தர்ப்பணம் = மகிழ்வித்தல், திருப்தி செய்தல்.

3537. ஸந்தாப: = வெப்பம், துக்கம், கோபம், தவம், வேதனை, பீடை.

3538. ஸந்துஷ்டி: = ஸந்தோஷ; = திருப்தி, மகிழ்ச்சி, ஆனந்தம்.

3539. ஸந்த3ர்ப்ப4: = கலப்பு, சேர்க்கை, கட்டுரை, படைப்பு, சந்தர்ப்பம், சமயம்.

3540. ஸந்தி3க்3த4 = பூசப்பட்ட, மெழுகப்பட்ட, மறைக்கப்பட்ட, நிச்சயமற்ற, சந்தேகமான, குழப்பமான.
 
3541. ஸந்தி3ஷ்ட = குறிக்கப்பட்ட, முன்சொல்லப்பட்ட.

3542. ஸந்தே3ச': = செய்தி, உத்தரவு, கட்டளை,சமாசாரம்.

3543. ஸந்தே3ஹ: = சந்தகம், அபாயம், நிச்சயமற்றது.

3544. ஸந்தி4: = சேருமிடம், கலப்பு, ஒப்பந்தம், நட்பு.

3545. ஸந்த்4யா = இணைப்பு, பாகம், எல்லை, பிரதிக்ஞை,
காலை சந்தி, மாலை சந்தி.

3546. ஸன்னத்3த4 = தயாராக உள்ள, கவசம் அணிந்த, கட்டப்பட்ட.

3547. ஸந்நிதா4னம் = ஸந்நிதி4: = அருகாமை, எதரே இருத்தல், தோற்றம், கூட்டு, சேர்க்கை, பெறுதல், எடுத்துக் கொள்ளல்.

3548. ஸந்நிவேச' : = கூட்டம், இணைப்பு, ஒழுங்கு, பற்று, நிலை, அருகாமை, உருவம், இடம், இருப்பிடம், மைதானம், சந்தர்ப்பம், சூழ்நிலை.

3549. ஸந்நிஹித = அருகிலுள்ள, பொருந்திய, எதிரிலுள்ள, தயாராக உள்ள.

3550. ஸன்யாஸின் = துறவி, உலகப்பற்றைக் களைந்தவன்.
 
3551. ஸபத்னி = சக்களத்தி.

3552. ஸபர்யா = பூஜை, பணிவிடை.

3553. ஸப்தன் = ஏழு என்னும் எண் உரிச்சொல்.

3554. ஸப்தம = ஏழாவதான.

3555. ஸபா4 = சபை, குழு, சமாஜம்.

3556. ஸபா4ஜனம் = வணங்குதல், வரவேற்பு, தொண்டு, கௌரவித்தல்.

3557. ஸம = சமமான, ஒரே உருவம் உடைய, மேடுபள்ளம்
அற்ற, சமதளமான, நடுவில் உள்ள.

3558. ஸமதா = ஸமத்தவம் = சமமானது, ஒரே மாதிரியானது.

3559. ஸமன்வய = ஒழுங்குமுறை, கருத்து ஒற்றுமை, கோர்வை.

3560. ஸமன்வித = தொடர்பு கொண்ட, தொடர்பு பெற்ற, தழுவப்பட்ட.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top