• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
அன்புள்ள ரா ரா

கடித்து விட்டு
படித்து பார் என்றால்
வடிப்பது எல்லாம்
புதுக்கவிதை ஆகிவிடுமா!

புதுக்கவிதை மனதில்
பதுக்கும் கருத்தை
செதுக்கி வரவேண்டும்
அகத்தை அசைக்க வேண்டும்.

புதுக் கவிதையிலும்
ஒதுக்க முடியாது இலக்கணத்தை
மறுக்க முடியாது புதுக்கருத்தை
இலக்கணமாய் இருக்கும் கவிதையிலும்.
 
Dear R.S,

எல்லோருமே உபதேசம் செய்ய ஆரம்பித்தால், சிரிக்க விஷயமே இல்லாது போய்விடுமே!

இலக்கணப் பிழையுடன் தமிழ் எழுத நான் நினைக்கவில்லை!

நட்புடன்,

ராஜி ராம் :)
 

அறிவொளி - 55


ஏமாற்றினாயா?
____________________


புதிய ரேடியோவை

வாங்கிய அறிவொளி


அன்று மாலையே


சென்று சண்டை போட,


'ஜப்பானில் செய்த நல்ல


ரேடியோதானே தந்தேன்'


என்று கடைக்காரன் கூற,


கோபமாகக் கேட்டான்,


'
பின் ஏன் இது எப்போதுமே


ஆல் இண்டியா ரேடியோ


என்றே சொல்லுகிறது!


நீ ஏமாற்றினாயா?'

:rant:

 
அறிவொளி - 56

ஏன் அம்மா?
__________________


அறிவொளிக்கு

ஐந்து வயது.


அம்மாவின் வயிறு


பெரிதாக இருப்பது


அரிதான விஷயமே

அவனுக்கு! எனவே


காரணம் வினவ,


அவனுக்கு ஒரு


சின்னத் தம்பி


இருக்கின்றான்
என்று

அம்மா கூற,


'தம்பியை உனக்குப்


பிடிக்காதா அம்மா?' என


இவன் மீண்டும் வினவ,


'மிகப் பிடிக்குமே', என்று


அம்மாவும் கூற,


அவன் உடனே கேட்டான்,


'அப்படியானால்


தம்பியை நீ விழுங்கியது


ஏன் அம்மா?'



:hungry:

 
அறிவொளி - 57
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]யோகா வகுப்புக்குச் [/FONT]
[FONT=arial, sans-serif]
சென்றான் அறிவொளி!
[/FONT]

[FONT=arial, sans-serif]
தலைகீழாக நிற்கும்
[/FONT]

[FONT=arial, sans-serif]
சிரசாசனம் கற்றுக்கொண்டு
[/FONT]

[FONT=arial, sans-serif]
சந்தேகம் கேட்டான் ஆசானிடம்,
[/FONT]

[FONT=arial, sans-serif]
வௌவால் யோகா செய்தால்
[/FONT]

[FONT=arial, sans-serif]
இதை எப்படிச் செய்யும்?

:decision:
[/FONT]

 

இறையின் சக்தி!


குறைகள் தீர்க்கும்


இறையை வேண்ட


முட்டி மோதிச்


சென்றாலும், நம்


உடல் சேதமின்றி


வெளியே வருவது


ஏன் தெரியுமோ?


அதுதான்


இறையின் சக்தி!

:hail:

 

இறையின் சக்தி!


குறைகள் தீர்க்கும்


இறையை வேண்ட


முட்டி மோதிச்


சென்றாலும், நம்


உடல் சேதமின்றி


வெளியே வருவது


ஏன் தெரியுமோ?


அதுதான்


இறையின் சக்தி!

:hail:


Dear raji,

I agree there is mysteries involved with ardent முட்டி மோதி fervent. After I have seen it during thaipoosam in tamil nadu, and thaali pili functions in my own Malabar bhagavathi temples.

But I don’t know if it is fair to God and our own expectations, for குறைகள் தீர்க்கும் mode and expectations, as a tit for tat for our prayers. sounds much like the bible preacher, who makes 'the blind see'

What if unforeseen catastrophes and disasters happen right out of the blue?

I have seen in my own family, when hit with surprise calamities, the extreme reaction of the folks. In one case, a young cousin, the bread winner, with 8 dependents, died in his late 30s. the family literally turned anti god, stopped lighting the lamps and laid away the pooja room stuff. They were angry with God for putting them through this level of abjectness.

And this was a ritual observing family with regular bhagavathi sevais and navagraha pujas. and i guess, they figured, if they did these things, no harm would fall on the family. and these are good people.

Which brings me to my own sort of comfortable position, ie not to seek explanations for all that is happening to us, or around us. These are the mysteries of the faith that we live by and beyond our comprehension. I need my God to give me the strength to see through those troubles and come out without permanent damage, either to myself, my kith and kin, and above all, my faith.

Dear raji, I know I have been remiss of your requests, and I do hope to be a regular visitor to your threads. I should confess I enjoy them, or otherwise I would not be here. hope you dont mind my banter back. :)

haveapleasantday
 
அறிவொளி - 58


காசேதான்...
________________

அறிவொளிக்குப்

பெரிய ஐயம்


வந்துவிட்டது!


காசேதான் கடவுள்


என்றால் ஏன்


கடவுளுக்கே


கடவுளைப்


போடுகிறோம்?

:noidea:
 
அறிவொளி - 59
________________

பட்டாசு வைத்த

அறிவொளி,


முதலில் ஒளி


தெரிவதையும்,


அதன் பின்னே


ஒலி வருவதையும்


அறிந்தான்.


காரணம் கண்டான்!


நம் முகத்தில்


கண்ணுக்குப் பின்தானே


காது இருக்கின்றது!

:decision:
 

வியர்வைத் துளி
!

பனிக் காலம்

முடியும் முன்பே,


கோடைக் கால


வரவை உணர்த்தவா,


புல்லின் நுனியில்


வியர்வைத் துளி?


உருண்டையான


அந்தப் பனித்துளி!

:smow:

 

இதென்ன சூதாட்டம்?

பணம் வைத்துப்

பகடை உருட்டுவதுதான்

சூதாட்டமா, என்ன?

கிரிகெட் ஆட்டமே

சூதாட்ட களம் ஆனதே!

அலைபேசியுடன், ஆர்வமாக.

வானொலிப் பெட்டி அருகில்

இளசுகள்; ஏன் தெரியுமோ?

ஒரு ஓவரில் எடுக்கப் போவது

எத்தனை ஓட்டங்கள்

என்று
யூகித்துச்

சரியாகச்
சொன்னால்

பரிசாம்,
ஆயிரங்களில்!

மாணவமணிகளின்

படிப்பைக் கெடுக்க

இன்னொரு புது வழி!

:phone:
 
அறிவொளி - 60

பங்காளி!

பங்காளிகள் தம்

தாத்தாவின் சொத்தில்

பங்கு கேட்பார்கள்

என்று அறிந்த

அறிவொளி கேட்டான்,

'எங்கள் தாத்தா

சொத்து சேர்க்காது


கடனை வாங்கினார்;

அவர் வாங்கிய

கடனை அடைக்க

எல்லாப் பங்காளிகளும்

வருவார்களா?'

:ballchain: . . . :grouphug:
 
Last edited:
அறிவொளி - 61

கண்ணாடி இல்லையேல்!
-----------------------------------------

உங்கள் எடை எவ்வளவு

என்ற கேள்விக்கு

விடை தந்தான் அறிவொளி,

'கண்ணாடி அணிந்தால்

எண்பது கிலோ' என்று!

அத்தனை கனமான

கண்ணாடியா என்று

வியந்த மருத்துவர்,

'கண்ணாடி இல்லையேல்'

என்று தன் அடுத்த

கேள்விக் கணை தொடுக்க,

சிரித்தபடிச் சொன்னான்,

'அதைத்தான் என்னால்

பார்க்கவே முடியவில்லையே!

:cool:
 
வயது!

நாம் எண்ணுவதே
நம் வயது!

எண்ணுவது ஆண்டுகளில் வேண்டாம்;
எண்ணுவது இளமையாக வேண்டும்!

வயதாகிவிட்டது என்ற எண்ணம்
தலைதூக்க ஆரம்பித்தால்...

வேலையில் வேகம் குறையும்;
வேளையில் தூக்கம் வராது;

மனம் எண்ணத் துவங்கும்
தினம் எமனின் தரிசனத்தை!

மணி விழாக் கொண்டாடிய
இனிமையான தமிழறிஞர் சொன்னார்,

'வரும்போது பேருந்தில் வந்திட,
ஒரு வேக ஓட்டம் ஓடி வந்தேன்!

மணிவிழா எடுத்ததால், என் வயதை
இனி என் மனம் எண்ண ஆரம்பிக்கும்!

இல்லம் திரும்பும்போது, என்னால்
செல்ல முடியுமோ, ஓடிப் பேருந்தில் ஏற?'

இனிய எண்ணங்களை மனதில்
கனியச் செய்திடுவோம்!

வயதை எண்ண மறப்போம்!
பயனுள்ள வாழ்வு வாழ்வோம்!

:thumb: . . . :peace:
 
எண்ணுவது என்பது எண்ணிகையைப் பார்ப்பது எனவும்,

எண்ணங்களை ஓட்டுவது எனவும் பொருள் தரும்! :)
 
அறிவொளி - 62

இரட்டைக் கட்டணம்!
__________________

அறிவொளி அழகாக

ஆண்களுக்கென ஒரு


சிகை அலங்காரக் கடை


ஆரம்பித்தான்! அதில்


வழுக்கை மனிதர்களுக்கு


சிகை அலங்கரிக்க


இரட்டைக் கட்டணம்


வசூலித்தான்! ஏனென்று


நண்பன் வினவ,


பதில் வந்தது,


தேடித் தேடி அலங்கரிக்க


அதிக நேரம் ஆகுமே!


:fish2:

 
என்ன காரணம்?

இளமையில் நல்ல


நிறம் கொண்டவர்,


முதுமையில்


நிறம் குறைவாகத்


தெரிவது ஏன்?


நண்பரின் விளக்கம்:


கரிய முடியின் கீழே


முகத்தின் நிறம்


வெண்மை;


நரைத்த முடியின் கீழே


முகத்தின் நிறம்


கருமை!


எல்லாமே ஒப்புமைதானே!

:decision:

 
அறிவொளி - 63

சொந்தம்தானே!
__________________

அறிவொளியின் மனைவி


மிகவும் புத்திசாலி!


ஒரு முறை


ஏதோ சண்டை வர,


மனைவி மௌனம்!


அதைக் கலைக்க,


காரில் கூட்டிச் சென்ற


அறிவொளி,


பன்றிக் கூட்டம்


ஒன்றைப் பார்த்து,


'இவர்கள் எல்லோரும்


உன் சொந்தம்தானே?'


என்று நக்கல் செய்ய,


மனைவி பதில் சொன்னாள்,


'ஆமாம்!
சொந்தம்தான்,


என் திருமணத்திற்குப் பிறகு!'

:bump2:
 

புதியன புகவேண்டும்!


பழையன கழிதலும்


புதியன புகுதலும்


என்றும் உலக இயல்பு!


எதிர்ப்புக்கள் பல


நான் சந்தித்தபோது,


ஊக்குவித்த நல்ல


நெஞ்சங்களுக்கு நன்றி!


புதிய கவிஞர்கள்


வளரட்டும்;


புதிய கவிதைகள்


தொடரட்டும்.....


உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :)

 

வறட்சி!


புதுக் கவிதைகள்


தொடருமென


நம்பினால்,


புதுக் கவிஞர்கள்


வருகையைக் காணோம்!


இலக்கியப் பகுதியில்


வறட்சி!


கவியரசர்


அன்றே சொன்னார்:


'இல்லையென்போர்


இருக்கையிலே


இருக்கிறவர்


இல்லையெனக்


கூடாது!'

:popcorn:

 
நீரோடு நிலம் பிணங்கியது
வறட்சி அதன் வாரிசானது
கடலோடு அலை பிரிந்தது
சவக் கடல் என்றே ஆனது
தமிழோடு நா தனித்தது
தமிழன் மரபணு சிதைந்தது
 

இனிய கவிதைக்கு நன்றி, சண்முகம் சார்!


உங்கள் பயண அனுபவங்கள் உங்கள் நூலில் தொடரட்டுமே! :typing:

 

அறிவொளி - 65

தண்டனை!
____________


அறிவொளிக்குக்


கணக்குப் பாடம்


என்றால் எட்டிக்காய்!


ஒரு நாள் பணிவாகத்


தன் ஆசிரியையிடம்


வினவினான்,


'நான் செய்யாத


வேலைக்கும்
கூட,


தண்டனை தருவீர்களா?'


'இல்லையே! தரமாட்டேனே!'


என்று அந்த ஆசிரியை


உறுதி அளித்ததும்,


இன்னும் பணிவாகக் கூறினான்,


'நான் இன்று வீட்டுப் பாடத்தின்


கணக்குகள் எதுவுமே


செய்யவில்லை, டீச்சர்!'

:dance:

 

அறிவொளி - 66


திட்டுவது ஏன்?
________________

அம்மா செய்த இனிப்பை

அறிவொளி எடுத்து


ருசித்து உண்ண,


தனக்குத் தெரியாமல்


எடுத்துவிட்டதால்,


அம்மா அவனைத் திட்ட,


அறிவொளி கேட்டான்,


'கண்ணன் திருடினால்


"வெண்ணை திருடி கோவிந்தா"


என்று பாடிப் பரவசமாவாய்!


நான் கேட்காமல் எடுத்தால்,


அதற்கு மட்டும் திட்டா?'

:blah:

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top