• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
அறிவொளி - 67

எப்படிக் கோபிப்பார்?
----------------------------------------


ஆசான் நீதி வகுப்பில்

கேட்டார்,


'ஜார்ஜ் வாஷிங்டன்


சிறுவனாக இருந்தபோது


தம் தோட்டத்தில் இருந்த


செர்ரி மரத்தைக்


கோடாரியால் வெட்டினார்;


உடனே அதை மறைக்காது


தன் தந்தையிடம் சொல்ல,


அவரின் தந்தை அவரைக்


கோபிக்காமல்


பாராட்டியது ஏன்?'


உடனே அறிவொளி


உரைத்தான்,


எப்படிக் கோபிப்பார், ஐயா?


மக
ன் கையில்தான்

கோடாரி இருந்ததே!'

:behindsofa:


 
7c.jpg
நாங்கல்லாம் 7 C
 

அறிவொளி - 68


வரும் முன்பே!
__________________


வகுப்பு ஆரம்பித்துச்

சில நிமிடங்கள்


சென்ற பின்பு


அறிவொளி வந்து


உள்ளே நுழைய,


'ஏன் நேரம் கழித்து


வந்தாய்?' என்று


ஆசான் காரணம் கேட்க,


பதில் வந்தது


பணிவாக,


'நான் வரும் முன்பே


தாங்கள் வகுப்பை


ஆரம்பித்ததுதான்!'


:pray:

 

அறிவொளி - 69

கனமான பட்டன்கள்!
----------------------

தம்பிக்கு ஆசையாய்

நல்ல ஸ்வெட்டர்


வாங்கினான் அறிவொளி.


பார்சலில் அனுப்பியபோது


ஒரு குறிப்பு எழுதினான்.


'அன்புத் தம்பி!


ஸ்வெட்டர் பட்டன்கள்


கனமாக இருப்பதால்

பார்சல் அனுப்ப

அதிகம் செலவாகும்;


அதனால்
அவற்றைத்


தனியே எடுத்துவிட்டேன்!


அவை ஸ்வெட்டரின்


வலது பாக்கெட்டில்


பத்திரமாக உள்ளன!'

:lock1:


 

அறிவொளி - 70


உதவியாளன் தேவை!
------------------------


நகலகம் ஒன்றை

நடத்த ஆரம்பித்த


நம் அறிவொளி,


ஒரு உதவியாளன்


வேண்டும் என்றான்!


ஏனென நண்பன் வினவ

பதில் வந்தது,


'நகல் எடுத்த


ஒவ்வொரு தாளையும்


அசலுடன் வைத்து,


எல்லா வரிகளிலும்


உள்ள சொற்களைச்


சரி பார்ப்பது என்
பது

என்
ஒருவனால் முடியுமா?'

:ballchain:

 
அறிவொளிகளின் வேட்டை மேலும் தொடரும்! :fish2:
 

அறிவொளி - 71


'ஸ்மைல் ப்ளீஸ்!'
--------------------

புதிதாக
ப் புகைப்படக் கடை

ஆரம்பித்தான் அறிவொளி!


ஒரு நாள், சிலர் வந்து


அன்று இறந்த போன


பணக்காரரின் வீட்டில்


கூடிய
உறவினர்களைப்


படம் பிடிக்கச் சொல்ல,


இறந்த வீட்டின்


முக்கியஸ்தர் அந்த


இறந்த மனிதரே


என்று எண்ணிய


அறிவொளி,


அவர் அருகில் சென்று


'ஸ்மைல் ப்ளீஸ்!' என்று


கெஞ்சிக் கொண்டிருந்தான்!


:photo: . . . :becky:
 
post 283
dear madam !
if stop with smile please ok .he may say keep your face this side ,that side up ,down etc.in extreme condition he may ask expression.he will declare ponam as savukrakki
guruvayurappan
 

அறிவொளி - 72



என்ன காரணம்?
------------------------------


மனைவி பாடும்போது

அறிவொளி சென்று


பால்கனியில் நிற்பான்!


மனைவி

காரணம் கேட்க,


பதில் வந்தது,


'நான் அடித்து


நீ அழுகிறாய்


என்று எவரும்


நினைக்காது இருக்கவே!'

:whip: . . .
:eek:
 
Hello RR Mam, he must be a TOO SMART husband variety.there are many guys in this nature. it reminds me a crazy mohan stage play ,when his wife sings same your statement ,but when its his office manager s wife in navarathy sings,in abaswaram, he keeps recite all play back singers names.:noidea:
 
Hello RR Mam, but this is what happens any where and every where. probably to their level,ideas ,the JAALRAA differs, but that pay way for many things to this materialist world.:doh:
 

அறிவொளி - 73


டெல்லி போக வேண்டும்!
_____________________


தான் கல்லூரியில் சேர

விண்ணப்பப் படிவம்


பூர்த்தி செய்ய விழைந்த


அறிவொளி, உடனே


ரயில் நிலையம் சென்று


டெல்லி போக வேண்டும்


என்று டிக்கட் வாங்கினான்!


காரணம் என்னவெனில்,


அந்தப் படிவத்தை


CAPITAL -இல் பூர்த்தி


செய்ய வேண்டுமாம்!!

:decision:

 

அறிவொளி - 74


காத்திருப்பேன்!
_____________


அழகிய பெண்ணைக்

கண்டான் அறிவொளி;


உடனே காதல்


கொண்டான்!


தன்னை மணக்கச் சொல்ல,


'முடியாது! உன்னைவிட


ஐந்து வயது


பெரியவள் நான்'


என்று அவள் சொல்ல,


உடனே உரைத்தான்,


'பரவாயில்லை கண்ணே!


நான் ஐந்து ஆண்டுகள்


காத்திருப்பேன்!'

:decision: . . . :clock:


 

அறிவொளி - 75


எளிய வழி
---------------------

குடும்ப வாழ்வில்


இனிய இல்லத்திலே


ஒரே பெண்ணையே


அனுதினமும்


காண வேண்டுமே!


இதை வெறுத்த


நண்பன் ஒருவன்


நல்ல யோசைனையை


அறிவொளியிடம் கேட்க,


அவன் சொன்னான்,


'பல பெண்களின்


அன்பைப் பெற்றிட


எளிய வழி


உள்ளது நண்பனே!


சாமியாராகப் போ!!'

:grouphug:
 

அறிவொளி - 76


நான் கடவுளா?
----------------


அறிவொளிக்கு ஐயம்

தான் கடவுளா என்று!


ஏன் தெரியுமோ?


அவன் எப்போது


தன் நண்பனின்


வீட்டுக்குச் சென்றாலும்,


'அடக் கடவுளே! நீயா?'


என்று கேட்பானாம்!


:angel:

 

அறிவொளி - 77


வேறு நிறத்திலே!

-------------------

நம் தேசீயக் கொடி


தன் சீருந்தில்


வைக்க விரும்பிய


அறிவொளிக்குக்


கடைக்காரர்


பல அளவுகளில்


கொடிகளைக் காட்ட,


அவன் சலித்தபடி


அவரைக் கேட்டான்,


'எல்லாம் ஒரேபோல


இருக்கின்றனவே!


வேறு நிறத்தில்


இல்லையா?'


:bump2:
 

அறிவொளி
- 78


ஏன் வேகம்?
-----------------------


நண்பனின் காரைத்


தானே ஓட்டுகிறேன்


என்று சொல்லி


அறிவொளி

படு வேகமாக ஓட்ட,

'வண்டியில் பிரேக்


இல்லையே!' என்று


நண்பன் மிரண்டு போக,


அறிவொளி சொன்னான்,


'தெரியுமே, எனக்கு!

அதனால்தான்
வேகமாக


வண்டி ரிப்பேர் செய்யும்


கடைக்குப்
போகிறேன்!'


:car:
 
வணக்கம் திருமதி ராஜிராம்.

எனக்கு ஒரு சந்தேகம். பின்வரும் வரி எப்போது ஒரு புதுக்கவிதையாகிறது?

"நிஜங்கள் நிராகரிக்கப்படும்வரை நிழல்கள் நம்பப்படும்."

இப்படி எழுதும்போது இந்த எளிய சொற்றொடரில் இல்லாத பொருட்செறிவுகள், அதே எளிய சொற்றொடரை

"நிஜங்கள்
நிராகரிக்கப்
படும்வரை
நிழல்கள்
நம்பப்படும்."

என்று சொல்வீழ்ச்சியாக எழுதும்போது அது எப்படி ஒரு புதுக்கவிதையாகிறது?

என் கருத்து என்னவென்றால்: இலக்கணத்தோடு அமைந்த உரைநடைச் சொற்றொடர்கள் கவிதையாகப் பிரிய முற்படும்போது, உரைநடையின் அந்த எளிமையும் இயற்கையும் மாறாமல் அத்துடன் (இயன்றவரை) கவிதையின் இலக்கணச் செறிவும் சேர்ந்துகொள்ளும்போது அது ஒரு கவிதையாகலாம்.

இப்படிப்பார்க்கும்போது, பாரதியின் இந்தக் கவிதை ஒரு அற்புதம்:

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே--அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே--அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே--இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ?--இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

பின்குறிப்பு: நான் உங்களுடைய கவிதை முயற்சிகளை விமரிசிப்பதாக எண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
 
.......... பாரதியின் இந்தக் கவிதை ஒரு அற்புதம் ....
பாரதியின் கவிதைகள் நிஜக் கவிதைகள், எதுகை மோனைகளோடு. 'எண்ண அலைகள்' என்ற நூலில் கொஞ்சம்

புதிய பாணியில், எதுகை மோனைகளோடு எழுத முயன்றுள்ளேன்! இந்த நூலில், புதுக் கவிதை வடிவம்!

கடிக் கவிதைகள் - இப்போது எழுதும்
அறிவொளித் தொடர்!!

 
எனக்கும் கவிதை எழுதவரும் போலிருக்கிறதே!
இது புதுக்கவிதையா, கடிக்கவிதையா?

உனக்கு என்னதான் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக்கொண்டாள்.
உனக்கு என்னத்தான் பிடிக்கும் என்று சொன்னேன் என்றேன்.
ஸ்மார்ட் என்று நினைப்போ என்றாள்.
தொடர்ந்து, எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
இப்போது என் முகம் சுருங்கியதைப் பார்த்து,
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்று சொன்னேன் என்றாள்!

*****
 
Last edited:
........
உனக்கு என்னதான் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக்கொண்டாள்.
உனக்கு என்னத்தான் பிடிக்கும் என்று சொன்னேன் என்றேன்.
ஸ்மார்ட் என்று நினைப்போ என்றாள்.
தொடர்ந்து, எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
இப்போது என் முகம் சுருங்கியதைப் பார்த்து,
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்று சொன்னேன் என்றாள்!
ஸூப்பர் கடிக் கவிதை!

நான் இப்படி எழுதுவேன்:


என்னத்தான் பிடிக்கும்!
-------------------------

'உனக்கு என்னதான்


பிடிக்கும்?' என்றேன்;


கோபத்தில் சிவந்தாள்!


'உனக்கு என்னத்தான்


பிடிக்கும்' என்றேன்;


'ஸ்மார்ட் என்று


நினைப்போ', என்றாள்!


உடனே சொன்னாள்,


'எனக்கும் என்னத்தான்


பிடிக்கும்' என்று;


என் முகம் சுருங்க,


சிரித்தபடி உரைத்தாள்,


'எனக்கும் என்னத்தானைப்


பிடிக்கும் என்றேன்!' :blah:

ஹா, ஹா, ஹா! :pound:

 
Last edited:

அறிவொளி - 79

எந்த எண்?

------------

சமையல் அறைக்குச்


சென்ற மனைவி,


'நான் செய்த கேக்கைத்


திருடன் தின்றுவிட்டான்!'


என எட்டுக் கட்டையில்


அலறி,
ஓடிவர,

அறிவொளி கேட்டான்


அமைதியாக,


'எந்த எண்ணில்


அழைக்க வேண்டும்?


நூறா, நூற்றியெட்டா?


:lock1: . . . :sick:
 

அறிவொளி - 80

ஏன் அழுக்கு?

----------------

அறிவொளி சிறுவனாக


அரிச்சுவடி கற்றபோது,


ஆசான் ஒரு நாள்


கடிந்தார் அவனை,


'என் உடைகள்


எத்தனை சுத்தம்!


உன் உடைகள் ஏன்


இத்தனை அழுக்கு' என்று!


தயங்காது பதில் வந்தது,

'உங்கள் சட்டையை விட

என்னுடைய சட்டை,


மண்ணுக்கு அருகில்


இருக்கின்றதே!'
' :heh:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top