• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.
மழலைப் பேச்சு - 1

விமான நிலையம்;

ஆகாய விமானம்

புறப்பட்டு

மேலே எழும்புகிறது;

உயரம் தொட

விழைந்து

ஏறுமுகமாகச் செல்ல,

அதோ பார் கண்ணா

ஏரோப்ளேன்

என்று நான் கூற,

மழலை கேட்டது,

இறங்கோப்ளேன்

எப்போ வரும் அம்மா?

:plane:
 
மழலைப் பேச்சு - 2

கதை ஒன்றை

சுவாரசியமாகச்

சொல்லும்போது,

அந்தத் திருடனிடம்

தப்பிக்க வேண்டி

அந்த மாமி

அவன் கண்ணுல

மொளகாப்பொடி

போட்டாளாம்

என்று உற்சாகமாய்

நான் சொல்ல,

மழலை கேட்டது,

எண்ணெய் ஊத்தலையா

அம்மா?


:peace:
 
மழலைப் பேச்சு - 3

மழலை

பள்ளியில்

சேர்ந்த புதிது;

ஆங்கில எழுத்துக்கள்

அனைத்தும்

அத்துப்படி;

தெருவில் நடந்து

செல்லும்போது

அதோ பார் கண்ணா

SMALL DOG

என்று நான் கூற,

மழலை கேட்டது,

CAPITAL DOG

எங்கே, அம்மா?

:peace:
 
மழலைப் பேச்சு - 4

ஒரு நாள்

மிக அவசரமாக

மோல்லியோ - ன்னா

என்ன அம்மா என்று

மழலை வினவ,

என்ன மொழியென்று

புரியாது

நான் தவிக்க,

தமிழ்தான் அம்மா,

பெரியம்மா கேட்டாளே

உனக்குத்

தெரியுமோல்லியோ - ன்னு

என்று சிரித்தது!

:bump2:

 
மோல்லியோ

மழலைப் பேச்சு - 4

ஒரு நாள்

மிக அவசரமாக

மோல்லியோ - ன்னா

என்ன அம்மா என்று

மழலை வினவ,

என்ன மொழியென்று

புரியாது

நான் தவிக்க,

தமிழ்தான் அம்மா,

பெரியம்மா கேட்டாளே

உனக்குத்

தெரியுமோல்லியோ - ன்னு

என்று சிரித்தது!

:bump2:

பிள்ளைத் தமிழோ ! இல்லை கிள்ளை மொழியோ ! என்று இருந்தது வழக்கிடை மொழி ''மோல்லியோ'' ஆகிவிட்டதோ ?

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

நன்றி !
 
Last edited:
மழலைப் பேச்சு - 5

வேலைக்காரன்

பழக்காரன்

தோட்டக்காரன்

கடைக்காரன்

பால்காரன்

இஸ்திரிக்காரன்

என்று வரிசையாக

அறிந்துகொண்ட

மழலை சொன்னது:

அம்மா குளிக்கறகாரன்;

அப்பா சட்டைக்காரன்!

:bathbaby:
 
மழலைப் பேச்சு - 6

பெயருக்கு எல்லாமே

அர்த்தம் உண்டு

என்று நான் சொல்ல,

ஒவ்வொரு பெயராக

அர்த்தம் கேட்டது

மழலை;

கொஞ்ச நேரத்தில்,

சு - ன்னா நல்ல,

சுகன்யா அக்கா

அதனால்

நல்ல பொண்ணு என்று

நான் சொல்ல,

மழலை கேட்டது,

அப்பாவோட

ஆபீஸ்ல இருக்கற

டொகன்யா மாமா

டொக்குப் பொண்ணா

அம்மா?


:decision:
 
வேண்டுதல்!

ஆண்டவனை வேண்டினால்

அனைத்தும் செய்வான்

என்று ஒருநாள்

அன்னை சொன்னாள்

சின்ன மகனின்

மனத்தில் பதியும்படி;

அடுத்த சில நாட்களில்

வேண்டினான் அவன்

ஆண்டவனை,

இப்போதே நம்

இந்தியாவின் தலைநகர்

சென்னையாக

ஆகவேண்டும் என்று;

வியந்த அன்னை

ஏன் எனக் கேட்க,

உரைத்தான் சிறுவன்,

நான் வேண்டினால்

உடனே அந்த

ஆண்டவன்

செய்வானே அம்மா;

அப்படிச் செய்தால்தான்

இன்று நான் எழுதிய

பதிலுக்கு

எங்கள் டீச்சர்

முழு மதிப்பெண்

போடுவார்!

:pray:
 
புத்தகம்...

வெளியே சென்று

திரும்பிய கணவன்

தேடினான்

கொஞ்ச நேரம்

ஹாலில்;

இங்கு வைத்த

புத்தகத்தைக்

காணவில்லை

என்று கத்தினான்

மனைவியிடம்;

நான்தான் ஒளித்தேன்

உங்கள் அம்மாவின்

கண்களில் படாமல்

என்றாள் தர்ம பத்தினி;

புத்தகத்தின் தலைப்பு

நூறு ஆண்டுகள்

வாழ்வது எப்படி?

:lock1:
 
எங்கே இரண்டு ரூபாய்?

வங்கி ஒன்றில்

கணக்கு எழுதியவர்

ஒரு வாரம்

விடுமுறையில் செல்ல

மறுநாள் கணக்கில்

இரண்டு ரூபாய்

துண்டு விழ

அத்தனை ஊழியர்களும்

குழம்பிப் போய் நிற்க

ஒரு புத்திசாலி

முடிவில் கண்டார்

கூட்டிய எண் இரண்டு

விடுமுறையில் சென்றவர்

பக்தியுடன் போட்ட

பிள்ளையார் சுழி என்று!


:faint2:
 
புத்திசாலி...

தெருவோரத்தில்

மர நிழலில்

சிறுவன் ஒருவன்

வெண்டைக்காய்

நுனிகளையெல்லாம்

உடைத்துக் கொண்டிருக்க,

இதைக் கண்ட

பெரியவர் ஒருவர்

ஏன் இங்கு வந்து

காய் இளசா என்று

சோதிக்கிறாய்

எனக் கேட்க,

அவன் சொன்னான்

கடையில்

நுனிகளை உடைத்தால்

கடைக்காரன் திட்டுவான்;

நுனி உடைக்காவிட்டால்

வீட்டிற்குப் போனதும்

அம்மா திட்டுவாள்!

:peace:
வெண்டைக்காய் வாழ்க!
 
ஒன்றுதானே!

இரட்டைச் சகோதரக்

குழந்தைகள்

ஒரே வகுப்பில் படிக்க,

நாயைப் பற்றிக்

கட்டுரை எழுதுமாறு

ஆசிரியர் பணிக்க,

உழைத்துப் படிக்கும்

பெரியவன்

அழகாகக்

கட்டுரை எழுத,

குறும்புச் சின்னவன்

அழகாக அதையே

காப்பி அடிக்க,

ஏன் இருவரும்

ஒரேபோலச்

சொற்களையே

எழுதினீர்கள்

என்று ஆசான்

கடிந்துகொள்ள,

புத்திசாலிச் சின்னவன்

சொன்னான்

ஐயா எங்கள்

இருவருக்கும்

இருக்கும் நாய்

ஒன்றுதானே!

:nod:
 
கேள்வி யாருக்கு!

பெருமையாகத் தன்

விலை உயர்ந்த

நாயுடன் நடந்தார்

பணக்காரர் ஒருவர்;

எதிர்ப்பட்டார்

அவரின் வேண்டாத

அலட்டலை வெறுப்பவர்;

'என்ன இது

குரங்குடன்

நடைப் பயிற்சியா?'

என வினவ,

கோபம் கொண்ட

பணக்காரர்,

'உமக்குக்

கண் தெரியாதா?

இது என்

விலை உயர்ந்த

டைகர்' எனச் சொல்ல,

சிரித்தபடியே

பதில் வந்தது,

'நான் கேள்வியை

டைகரிடம் அல்லவா

கேட்டேன்!'

:bump2:
 
எனக்கா?

ஆனந்தமாகச்

சுற்றுலா முடித்து

நடு வயதுத் தம்பதியர்

திரும்பும்போது,

எதிர்பாராத விதமாகப்

பெரிய விபத்து;

மனைவிக்கு

பலத்த அடி;

மயங்கிக் கிடந்த

அவளைக் கண்டு

மனம் வருந்திய

கணவரிடம்

மருத்துவர்,

'எத்தனை நாட்கள்

மயக்கம் தொடருமோ

தெரியாது;

நீங்களே

அவள் வயதைச்

சொல்லுங்கள்'

எனக் கேட்க,

நாற்பத்தைந்து

என இவர் கூற,

துள்ளி எழுந்த

மனைவி கத்தினாள்,

'எனக்கா நாற்பத்தைந்து!

முப்பத்தொன்பதுதானே!'

:laser:
 
உலக மகா கஞ்சர்...

எங்கும் எதிலும்

மிச்சம் பிடிக்கும்

உலக மகா கஞ்சர்,

சேமிப்புப் பத்திரத்தில்

தாம் வைத்த தொகையைத்

திருப்பி எடுக்க விழைய,

வங்கி ஊழியர்

'ஸ்டாம்பு' ஒட்டிக்

கையெழுத்துப் போடுமாறு

அவரைப் பணிக்க,

ரெவின்யூ 'ஸ்டாம்ப்' விலை

ஒரு ரூபாய் என்பதால்,

கையெழுத்துப் போட்டாராம்,

தன்னிடம் இருந்த

ஐந்து பைசா

'ஸ்டாம்பை' ஒட்டி!

:decision: . . :madgrin:
 
மழலைப் பேச்சு - 7

கடல் அலைகளில்

விளையாடியது மழலை;

ஆதவன் அஸ்தமனமாகிக்

கடலில் சென்ற நேரம்;

அலைகள் கொஞ்சம் வெப்பமாக,

மழலை சொன்னது,

சூரியன் முங்கினதாலே

கடல் சுடறது அம்மா!

:flame:
 
மழலைப் பேச்சு - 8

முதல் முறையாக

ஐஸ்க்ரீம் பார்த்த

மழலை

அதில் ஆவி போல

மேலே எழுவது கண்டு

சொன்னது,

எனக்கு வேண்டாம் அம்மா!

ஐஸ்க்ரீம் சுடறது!

:puke:
 
சிறந்த அறிவுரை!

சிறு வயது என்றாலே குறும்பு செய்யும் பருவம்;
சிறு வயதுக் குழந்தைகள் விளையாடும் நேரம்.

ஒருவர் மீது ஒருவர் மண் வாரி வீசி, மகிழ்ந்து,
வேறு ஓர் உலகிலே சஞ்சரித்த, இனிய வேளை!

குறும்புச் சிறுவன் ஒருவன், அழகான முகத்தில்
அரும்பும் சிரிப்பை மறைத்து, குரலை மாற்றிக்

குரங்கு, கரடி, சிங்கம், புலி என்று வரிசையாகச்
சிறந்த வர்ணனையுடன், அஷ்ட கோணலாக,

மற்ற பசங்களுக்கு வேடிக்கை காட்டி இருக்க,
உற்ற நேரத்தில், ஆசிரியை வந்து சேர்ந்தாள்!

தன் அடக்கு முறையைக் காட்டிட விழைந்தாள்;
தன் உபதேசத்தை, அப்பொழுதே ஆரம்பித்தாள்!

'குழந்தைகள் எல்லாம் இப்படிச் செய்யும்; நானும்
குழந்தையாக இருந்தபோது செய்தேன்! ஆனால்,

அஷ்ட கோணலாக நம் முகத்தைக் காட்டினால்,
அஷ்ட கோணல் அப்படியே தங்கிவிடுமாம்! என்

சின்ன வயதில், தாத்தா என்னிடம் சொன்னார்;
சொன்ன விஷயம் புரிந்ததா?' என்று கேட்டாள்!

குறும்பு கூறியது, 'நீங்கள் சொன்னது எனக்கும்
விரும்பும் விதமாகவே உள்ளது டீச்சர்! ஆனால்

ஒரு சின்ன சந்தேகம்! நீங்கள் நல்ல குழந்தையாக
இருந்தும், ஏன் தாத்தா சொற்படிக் கேட்கவில்லை?

:whip: . . . :baby:

குறிப்பு:

இது யாப்பிலக்கணத்தை ஓரம் கட்டாத புதுக்கவிதை! :thumb:
 
மழலைப் பேச்சு - 9

பழனி மலையில்

'வின்ச்'- ல் ஏறி

அமர்ந்த நேரம்;

மழலை கொஞ்சம்

பயந்து விடுமோ எனப்

பெற்றோரின் அச்சம்;

'பயப்படாதே கண்ணா'

என்று தைரியம் சொல்ல,

மழலை கேட்டது,

'எந்துக்கு பயம்?

சாமிதானே இழுக்கறா!'



நிஜமான பக்தி வாழ்க! :hail:
 
மழலைப் பேச்சு - 10

குட்டி வகுப்பில்

கணிதப் பாடம்

முடித்து வந்த

மழலை ஆர்வத்துடன்,

'அம்மா எங்க டீச்சர்

அண்ணா பாடுவானே

அந்த 'சார் - சார்' பாட்டை

இன்னைக்குச்

சொல்லிக் கொடுத்தா',

என்று சொல்ல,

அதென்ன 'சார் - சார்' பாட்டு

என அன்னை விழிக்க,

மழலை சொன்னது,

'அதுதான் அம்மா!

டூ ஒன் சார் டூ

டூ டூ சார் ஃபோர்

டூ த்ரீ சார் சிக்ஸ்

டூ ஃபோர் சார் எய்ட்'

என்று அடுக்கியது! :blah:


கணிதம் வாழ்க!
 
மழலைப் பேச்சு - 11

மழலை அடிக்கடி

ஓடி ஓடிச் சென்று

சமையல் அறையில்

சர்க்கரை டப்பாவைப்

பார்த்தது!

ஏனென்று

அன்னை வினவ,

'உனக்கு உதவி

செய்யறேன் அம்மா!'

என்று சொல்ல,

அன்னை ஒன்றுமே

புரியாது விழிக்க,

மழலை

'நேத்து டாக்டர் மாமா

உன்னை அடிக்கடி

'ஷுகர்' செக் பண்ணச்

சொன்னாரே', என்றது!

:spy:


உதவி வாழ்க!!
 
Last edited:
குழல் இனிதா? யாழ் இனிதா?
மழலைமொழிகள் இனியவா?

"எய்த்து , பங்கா, இயா!"
என்னவென்று புரியவில்லை
என்பது எனக்கும் தெரியும்!

அருமை மகனின் மழலையில்
முறையே இவ்வினிய சொற்கள்
"லைட், பங்கா (fan) and நிலா (moon)!

மொட்டை மாடியில் இருந்து கொண்டு,
முட்டைக் கண்களை விழித்துப் பார்ப்பது,
வட்ட நிலவே! வானத்தில் திரியும்போது!

அன்று ஒருநாள் அமா
வாசை தினம்!
நின்று தேடி
ப் பார்த்தாலும் எங்கும்
காணவே காணோம் அந்த நிலவு!

கண்ணன் என்னிடம் கேட்டது
என்னெவென்று தெரியுமா?
" இன்னைக்கு கரண்ட் கட்டா?"

அவனை பொறுத்தவரையில்
அனைத்துமே கரெண்டில் தான்
உலகில் ஒளி தருகின்றன!

பின்குறிப்பு:

இன்று நானும் இலக்கணத்தை
மென்று விழுங்கிவிட்டேன் !

மூன்று வரிகளே கொண்ட
ஆறுபத்திகள் எழுதிவிட்டேன்!
 
Last edited:
மதி மயங்கும்...

மழலை நினைவு வந்தால்,

மதி மயங்குவது நிஜமே!

இலக்கணமாவது,

இலக்கியமாவது!

தேவையே இல்லை!!

மழலை மொழி வாழ்க!! :baby: ...:blah:
 
................
கண்ணன் என்னிடம் கேட்டது
என்னெவென்று தெரியுமா?
" இன்னைக்கு கரண்ட் கட்டா?"
...............
Re-written:

மழலைப் பேச்சு - 12


பௌர்ணமியன்று

மழலை வெளியே செல்ல,

அம்மா அன்புடன்

முழு நிலவைக் காட்ட,

அது என்னவென்று

மழலை கேட்க,

வேடிக்கையாக

அதுதான்

சாமி போட்ட விளக்கு

எனச் சொல்ல,

இன்னொருநாள்

நிலவைக் காணாத

மழலை கேட்டது,

அம்மா! சாமி வீட்டில்

'கரன்ட்' இல்லையா?

:peep:

நிலவு வாழ்க!
 
When I went to live in Visakhapatnam in 1975, I had a neighbor who would scold

his wife, daughter and son using the same word 'vethavaa" :shocked:

I used to feel hurt and sorry to see the husband calling his wife 'vethavaa'.

Later I learnt that the word just meant 'a useless fellow'.

Even that meaning was befitting, since a 'vethavaa' IS useless in many

ways! :(

Dear Visalakshi,

For most of us here Sanskrit is an alien tongue unfortunately. The word Vidhava does not mean useless. It means 'belonging to the space'. Because her beloved husband has vanished into the space this word is used to call her as the one who belongs to the space. This meaning was given to me by a learned Sanskrit scholar. Of course this will not be acceptable to those who swear by womens lib of modern times.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top