• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

இசை விற்பன்னர்கள்!

களை கட்டும் சிங்காரச் சென்னை, மார்கழியில்;
கலை பலவும் அரங்கேறும், பற்பல அரங்குகளில்!

குருகுல வாசம் செய்த காலம், இன்று மலை ஏறியது!
குருவின் கணினி வழிப் பாடங்களும் உருவாகிறது!

மனப்பாடம் செய்யப் பலவிதப் பயிற்சிகள், அன்று;
தனக்கென்று 'லாப் டாப்' வைத்துப் பாடுவார், இன்று!

'பேப்பர்' ஆராதனை, ஸ்ரீ தியாகராஜருக்கே நடக்கும்;
'பேப்பர்' பார்த்துப் பாடுவது, கச்சேரிகளில் அடக்கம்!

நேற்று நடந்த காமெடி, பகிர்ந்து கொள்ள அருமை;
போற்ற வேண்டிய ஒரு பாடல், மறந்தது கொடுமை!

ஏற்றமுடைய ஒரு அரங்கில், கச்சேரி நடக்கிறது ;
ஏற்றமுடைய இரண்டாம் பஞ்சரத்தினம் வருகிறது!

நோட்டை நோட்டமிட்டபடிப் பாடிக்கொண்டே வர,
நோட்டின் பக்கங்கள், காற்றில் பறந்து மாறிப் போக,

கடைசி சரண வரிகள் மறந்து போய்விட, நோட்டைத்
தடவித் தடவி, தொலைந்த பக்கத்தைத் தேடியிருக்க,

திரும்பத் திரும்பப் பல்லவியை பாடியும், பக்கமும்
திரும்பக் கிடைக்காது, வேடிக்கை காட்டியிருக்க,

பாடலை முடித்தனர், அந்தச் சரணத்தைப் பாடாமலே;
பாடல் வரிகள் தர முடியாது, 'வயலின்' பரிதவிக்கவே!

நோட்டுப் பார்த்தே தாம் பாட வேண்டுமானால், அந்த
நோட்டுப் பக்கம் பறக்காதிருக்க, ஏற்பாடு செய்யலாம்!

சங்கீத விற்பன்னர், சங்கீதத்தை விற்பதற்கு மட்டுமா?
சங்கீதப் பாடல்களை மனனம் செய்தல் வேண்டாமா?

இன்னிசை வளர்க, :lalala:
ராஜி ராம்
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 65

பேதைமை!

தன் மனைவியைத் தவிர மற்ற மங்கையரை,
தன் உடமையாய் நோக்குதல் ஆகாது என்பதை,

நன்கு வலியுறுத்திக் கூறும் வள்ளுவர், இதுவே
பண்பு மிக்க வாழ்வுக்கு உறுதுணை என்கின்றார்!

இதிகாசங்களிலும், பிறன் மனை விழைந்தவரை,
இழிவாகவே சித்தரிப்பதை, யாவரும் அறிவோம்!

அற நூல்கள், பொருள் நூல்களை நன்கு அறிந்தோர்,
பிற மங்கையரைக் கெட்ட மனத்துடன் நோக்கார்!

'பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்', என்பது வள்ளுவம்.

மேலும், தன் அன்பான நண்பனின் மனைவியை, ஒரு
நாளும் அடைய முனைதல் கூடாது என்றுரைத்து,

எவன் அவ்வாறு பாதகமாக எண்ணுகின்றானோ,
அவன், பிணமாகவே கருதப்படுவான், என்கிறார்!

'விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்', என்பதே அக் குறள்!

:rip:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 66

நீங்காத நான்கு!

மதிப்பு மிக்க பெரியோர்கள் பலர் கூறும் அறிவுரைகள்
சிறப்பு மிக்க வாழ்க்கைக்கு உறுதுணையாக வரும்!

எத்தனை பெரியவராயினும், பிறன் மனை விழைவோர்,
அத்தனை புகழும் இழந்து, கீழான நிலையை அடைவார்.

தினை அளவும் சிந்தித்துப் பாராது, அவ்வாறு இழிசெயல்-
தனைச் செய்வோர், மதிப்பு இழந்து போய்விடுவார். இதை

'எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்', என்று அழகாக உரைக்கின்றார்!

நீங்காது, பகை, பாவம், அச்சம், பழி ஆகிய நான்கும்
தீங்காகப் பிறன் மனையை அடைய விழைபவரை!

'பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்', இது குறள்.

தனக்குப் பகைவர் வாராதும், பாவம் சேராதும்,
தன் மனம் அஞ்சாதும், பழி வாராதும் இருக்க,

மனக்கட்டுப்பாடு வளர்த்து, பெண்மையைப் போற்றி,
தனக்கென்று நல்வழியை, மக்கள் நாடுதல் வேண்டும்!

:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 67

வலிமையில் வலிமை!

மன்னிக்கும் பண்பை உயர்வாக உரைக்க, வள்ளுவர்,
மன்னிப்பது பூமியின் பொறுமை போல, என்கிறார்!

'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை', என்பது குறள்.

தன்னைத் தோண்டுபவரையே தாங்கும் பூமி போல,
தன்னை இகழ்பவரையும் பொறுப்பது உயர்ந்த பண்பு!

வறுமையில் வறுமை விருந்தோம்ப முடியாமை;
வலிமையில் வலிமை அறிவிலிச் செயல் பொறுப்பது!

'இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை', என்கின்றார் அவர்.

எவர் பல குணநலன்கள் பெற்று விளங்கினாலும்,
அவர் நிறைவடைவது, பொறையுடைமையாலே!

'நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்', என்பது ஒரு அரிய குறட்பா.

பொறையுடைமை போற்றிக் கடைப்பிடித்து, நல்ல
அருமையான, நிறைவான பண்பு பெறுவோம்!

:angel:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 68

பொறையுடைமையின் சிறப்பு...

ஒருநாள் இன்பம் கிடைப்பதை வேண்டுவதைவிட,
எந்நாளும் இன்பத்தையே யாவரும் வேண்டுவர்.

மன்னிக்காது தண்டிப்பவர்களுக்கு, ஒருநாள் இன்பம்;
மன்னித்து மறப்பவர்களுக்கு , வாழ்வே இன்ப மயம்.

'ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்', என்கிறார் வள்ளுவர்.

கொடுஞ் சொற்கள் வரம்பு மீறினாலும், பொறுப்பவர்,
அருந் துறவிகளைப் போலத் தூய்மையானவர்களே!

'துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்', என்பதே குறள்.

உண்ணாது விரதம் இருப்பது அரியது; அதைவிட
இன்னாச்சொல் கேட்டும் பொறுப்பது, மிக அரியது!

'உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்', என்கிறார்.

துறவறத்தைவிட மேன்மையாக விளங்குகின்ற,
பொறுத்து மன்னிக்கும் தன்மையை வளர்ப்போம்!

:grouphug:
 
One can only pray to God to give ethical mentality to doctors who own nursing homes and hospitals. They should not put money and earnings above the patient. But are ethically minded doctors shown their due regard and respect by society? A doctor who is conscientious will necessarily be not rich and will be conducting themselves with great simplicity and dignity. People will not readily take to them. Such is the state of Kali Yuga!
All patients who are near extremis and have no reasonable chance of survival in ICU should be allowed to pass on peacefully by the close ones, who should request all unnecessary life support to be withdrawn. That way the departing one will be allowed a dignified death and the relatives will be spared agony and much bloated medical bills!
 
You are right Sir!

But, the doctors go to some extent of 'emotional blackmail'. By that phrase, I mean to say that they talk in suck a way that the emotional group of very close ones to the patient, feel as if they are 'mercy killing', by withdrawing the life support!

In my close family circle, the two sons based in the US were told that their father will be alive, if they spend about one lakh every day! And they decided to go for this kind of treatment, to keep their mother 'a sumangali'. It is very difficult for the sons to decide to stop life support, especially when their mother is alive!

Regards,
Raji Ram
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 69

அழுக்காறு எனும் பொறாமை!

ஆமைகள் வீட்டில் நுழைந்தால் கேடு எனக் கொண்டு, நிஜ
ஆமைகளை வீட்டருகே கண்டால், கொல்லுபரும் உண்டு!

கல்லாமை, பொறாமை போன்றவை அந்த ஆமைகள் எனச்
சொல்லாமல் சொன்னதை,அறியா அறிவிலிகள் அவர்கள்!

அழுக்காறு அறவே கூடாது என்பதைப் பல குறட்பாக்களில்
அழகாக, நயமாக வள்ளுவர் உரைத்து, வலியுறுத்துகிறார்!

நல்ல மனத்துடன் உதவி செய்த பொருளைக் கண்டு, எவரும்
பொல்லாத மனத்தினராகப் பொறாமை கொள்ளக் கூடாது.

எவர் அவ்வாறு அழுக்காறு நிறைந்த மனத்தை உடையவரோ,
அவர் மட்டுமல்லாது, அவரின் சுற்றமும் வறியதாகிவிடும்!

உணவும் உடையுமே முதல் தேவைகளென அறிவோம்; அந்த
உணவும் உடையும் கூட இல்லாது போய்விடுவார், என்கிறார்!

'கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்', என்பதே அந்தக் குறள்.

மேலும், பொறாமை கொண்டவர் வீட்டில், திருமகள் ஒரு
நாளும் இராது, தன் மூத்த சகோதரியை வர வைப்பாள்!

'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்', என்று உரைக்கின்றார்!

தீ, எரித்து அழிக்கும் தன்மையுடையது; பொறாமையை,
தீ என்று, அதன் அழிக்கும் தன்மையால் கூறுகிறோமோ?

:flame:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 70

வறுமையில் நேர்மை!

அறவழி தவறிப் பொருள் சேர்ப்பது பெருந்தவறு என
அறவழி காட்டும் வள்ளுவர், பலவாறு கூறுகின்றார்.

பிறர் பொருளை அறவழி தவறிப் பெற முனைந்தால்,
அவர் குடி கெடுவதோடு, தீராப் பழியும் வந்து சேரும்!

'நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே வரும்', என்பது எச்சரிக்கை.

நடுவு நிலை தவறுதல் கூடாது என எண்ணுபவரே,
தடுமாறி, பழிக்கப்படும் செயல்களைச் செய்யார்!

'படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்', என்பது குறள்.

வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவராது,
பெருமை பெறுவார், புலனடக்கம் மிகுந்த தூயவர்.

'இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்', எனத் தெரிவிக்கிறார்!

அரசியல்வாதிகள் படித்தறிந்து, இவ்வழி நடந்தால்,
அரசாங்கத்துடன், மக்களும் மேன்மை அடைவாரே!

:high5:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 71

செல்வம் சேரும்!

செல்வம் சேர்க்க விழையாதார் உலகில் யார் உளார்?
செல்வம் சேர்க்கும் நல்வழி உள்ளது, வள்ளுவத்தில்!

செல்வம் குறையாதிருக்க வேண்டுமானால், பிறர்
செல்வத்தை அடைந்திட முயலாதிருக்க வேண்டும்.

'அஃகாமை செல்வத்திக்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்', என்பதே குறட்பா.

பிறன் பொருளுக்கு ஆசைப்படுவது, ஒருவருக்குத்
தன் பொருளையே குறைத்திடும் வழி, என அறிக!

மற்றவர் செல்வத்தில் ஆசைப்படாத நல்ல அறிஞர்,
பெற்றிடுவார், மேலும் தம் ஆற்றலுக்கேற்ப, செல்வம்!

'அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு', என்கிறார் வள்ளுவர்.

விளைவுகளை எண்ணாது பிறர் பொருள் விரும்ப,
விளையும் அழிவு; எண்ணாவிடில், வரும் வெற்றி.

'இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு', இது குறள்!

:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 72

கொடிய குணம்!

புறங்கூறுதல் கொடிய குணம் என்பதைத் தெளிவாய்,
அறங்கூறும் வள்ளுவர், குறட்பாக்களில் கூறுகிறார்.

அறவழியில் செல்லாது இருப்பவர்களுக்கும் இனியது,
புறங்கூறித் திரியாமல் இருப்பதே, என்கிறார் அவர்.

'அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது', இது குறள்.

நேரில் பார்த்தால் பொய்யாகச் சிரித்துவிட்டு,
நேரில் இல்லாவிடில், பொல்லாங்கு சொல்வது,

அறவழியை விட்டு விலகிச் சென்று, தீமையான
பிறவழியில் செல்வதைவிடக் கொடுமையானது!

'அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை', என்கின்றார்.

புறங்கூறிப் பொய்யாக நடந்து வாழ்வதைவிட, கூறாது
வரும் வறுமையை ஏற்று, இறப்பது மேலானதாகும்!

'புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்', என்பது குறள்.

பொல்லாங்கு பிறரைப் பற்றி உரைக்காது, உலகில்
வாழ்வாங்கு வாழ்ந்து, பற்பல சிறப்பு எய்துவோம்!

எங்கள் ஊரில் புறங்கூறுதல், 'புறணி போடுவது';
தங்கள் புலமையால் போற்றுதல் 'பரணி பாடுவது'.

'புறணி போடுவது நன்றன்று வையகத்தில்
பரணி பாடுவதே நன்று'; இது என் குறள்!!

:typing:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 73

பூமித் தாயின் அறம்!

பொறுமைக்கு உவமையாக உரைப்பது பூமித்தாயை!
பொறுமையும், அறமும் உள்ளதால்தான், இவ்வுலகில்

பொல்லாங்கு கூறிக்கொண்டு, திரியும் குணமுள்ள
பொல்லாத மனிதரின் உடலை, அவள் சுமக்கிறாள்!

'அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கி
புன்சொல் உரைப்பான் பொறை' என்பது அக் குறள்.

இவனைச் சுமப்பதும் அறமே, என்ற எண்ணத்தால்,
அவனையும் சுமக்கிறாள், என்கின்றார் வள்ளுவர்.

புறங்கூறாது மனத்தைக் கட்டுப்படுத்தவும், வழியை
திறன் மிக்க வள்ளுவர், தானே கொடுக்கின்றார்.

குற்றத்தைப் பிறரிடம் காண்பதற்கு முன்னர், தம்
குற்றத்தைப் பார்க்கும் வழக்கம் கொண்டால்தான்,

கொடிய குணமான புறங்கூறல் வராது போகும்;
நெடிய இவ்வுலக வாழ்வில், நிம்மதியும் வரும்!

'ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு'; இதுவே அறிவுரை!

விரல் ஒன்று சுட்டிக் குறை கூறும்போது, மூன்று
விரல்கள் நம்மை நோக்குவதை நினைப்போம்!

:director:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 74

மனிதப் பதர்!

பயன் இல்லாச் சொற்கள் பேசினால், வாழ்வும்
பயன் இல்லாது வீணாகப் போய்விடும்; உலகில்

பலர் முன்னிலையில், வெறுக்கும் வகையிலே
பயனில்லாது பேசுபவரை, எள்ளி நகையாடுவர்!

'பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லோரும் எள்ளப் படும்', என்பது குறள்.

பயனில்லாத சொற்களையே பேசியிருப்பவன்,
பயனில்லாத பதராவான்; மனிதனல்ல அவன்!

'பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்', என்கிறார் வள்ளுவர்.

சொன்னால் பயனுள்ளதை சொல்லவேண்டும்;
சொல்லாது விடவேண்டும், பயனிலாச் சொல்.

'சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்'; இது அறிவுரை!

சிறந்த பொருள் பொதிந்த சொற்களைப் பேசி,
பிறந்த பயன் பெற, வாழ்வாங்கு வாழுவோம்!

:blabla: ==> :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 75

நிழல் போல!

தொடர்ந்து நம்முடன் நம் நிழல் வருவதுபோல்,
தொடரும் தீமையும், நாம் தீவினை செய்தால்!

'தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று', என்பது அக்குறள்.

பகை நேரடியானால் கூட, தப்பிவிட முடியும்;
பகை தீவினையால் வந்தால், தப்ப முடியாது!

'எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்', என்பது எச்சரிக்கை.

தாம் நலவாழ்வு வாழவேண்டுமென நினைத்தால்
தாம் தீய செயல்களையே நெருங்குதல் கூடாது!

'தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்', என்பது அறிவுறுத்தல்.

கேடு தம்மை அணுகவே கூடாது என விழைவோர்,
கேடு பிறருக்குத் தாம் செய்யாதிருந்தால் போதும்!

'அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்', என்கின்றார்.

தீவினை அஞ்சும் நல்ல பழக்கத்தை ஏற்படுத்தி,
தீவினைகளைச் செய்யாது வாழ்ந்து, உய்வோம்!

:evil::whip:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 76

செல்வத்தின் பயன்

பெற்ற செல்வத்தையெல்லாம், தானே ஆளாது
மற்ற எளியவருக்கு அளிப்பதுதான் மிக நல்லது.

அத்தனை செல்வத்தையும் ஈயாது சேர்த்தவனை,
செத்தவன் போலவே மற்றவரெல்லாம் கருதுவார்.

'ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்', என்பது வள்ளுவம்.

நிறைந்த கிணற்றில் உள்ள நீர், மக்களுக்கெல்லாம்
சிறந்த பயனைத் தருவது போல, அறிவாளியிடம்

சேர்ந்த செல்வமும், எல்லோருக்கும் பயன் தரும்;
தேர்ந்த நல்வழியில் எளியவருக்கும் உதவிடும்.

'ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு', என்பது அறிவிப்பு!

நெஞ்சில் ஈரம் கொண்டவன் செல்வந்தன் ஆயின்,
நெஞ்சார உதவி செய்து, பலருக்கும் பயன்படுவான்.

பெரிய மரம் கனிகள் நிறைந்து, உள்ளூரில் இருந்தால்,
அரிய உதவியாகப் பலரின் பசியைத் தீர்த்துவிடும்.

அதுபோல, நெஞ்சில் நயமுள்ளவன் சேர்த்த செல்வம்,
பொதுநல சேவையில் யாவரையும் சென்றடையும்.

'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்', என்பது ஒப்புமை!

:grouphug: ==> :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 77

ஈகை அறிவோம்!

பொருள் நிறைந்தவருக்கே மேலும் கொடுப்பது, வேறு
பொருள் வேண்டி நாம் செய்யும் செயலே ஆகும். இதை

'வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து', என்று கூறுகிறார்.

ஈகையின் சிறப்பே, இல்லாதவருக்கு அளித்து, அந்த
ஈகையின் பயனை அவர்கள் அனுபவிப்பதே ஆகும்.

நல்ல வழியில் வந்தாலும் எதுவும் ஏற்கலாகாது;
நல்ல வானுலகம் கிட்டாவிடினும் ஈதலே நன்று!

'நல்லா றெனினும் கொள்ளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று', என்கிறார் அவர்.

நல்ல குலத்தில் பிறந்தவர், ஏழ்மையிலும் தமக்-
குள்ள பொருளை ஈகை செய்து, மனம் மகிழ்வார்.

'இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள', என்பது குறள்.

இறப்பதே ஒரு பெருந்துன்பம்; அதனினும் பெரிது,
இரப்பவருக்கு ஈயாதிருந்து பெறும் மனத் துன்பம்.

'சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
'ஈதல் இயையாக் கடை', என்பதே குறட்பா.

வறியவருக்கு ஈந்து அவர் துயர் துடைபோம்,
பெரிய வானுலகப் பதவியே இல்லாவிடினும்!

:Cry:..:help:...:grouphug:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 78

புகழ்

புகழ் பெற விழையாதவர் உலகிலே இல்லை;
புகழ் இன்றியமையாதது என்கிறது வள்ளுவம்!

இல்லாதோருக்கு ஈவதும், அதில் பெறும் புகழும்
அல்லாது வேறு பெருமையும் உலகில் இல்லை.

'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு', என்கிறார்.

போற்றுவார் போற்றிச் சொல்லுவது எல்லாமே
ஏற்றமுடைய ஒருவரின் ஈகையைக் குறித்தே!

'உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்', என்று உரைப்பது இக்குறள்.

பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும்; இல்லையேல்
பிறக்காதிருத்தல் நன்று என்று சிலர் கூறுவார். ஆனால்,

தோன்றுவது எத்துறை ஆயினும், புகழ் பெறாவிட்டால்,
தோன்றாமல் இருப்பதே நன்று, என்பதே இதன் பொருள்!

'தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று', இது குறள்!

:first:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 79

எவர் வாழ்வது வீண்?

நல்ல பெயர் பெற்று வாழாவிட்டால் இவ்வுலகில்
நல்ல மானுடப் பிறவி பெற்ற பயன்தான் என்ன?

தம் காலத்துக்குப் பின் நற்பெயர் நிலைக்காவிடில்,
தம் வாழ்வையே பழியாக வையத்தார் சொல்வார்!

'வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்', என்று அறிவுறுத்துகிறார் அவர்.

வெறும் புகழ் இல்லாத உடல்களைச் சுமந்தால், பூமி
வெறும் தரிசு நிலம் போலவே கருதப்படும். இதை,

'வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்', எனக் கூறுகிறார்!

தீய செயல் புரிந்து, பழி ஏற்றுக்கொண்ட மனிதர்
தூய நற்பெயரின்றி, உலகில் இகழ்ச்சி அடைவார்.

வாழ்வில் நற்செயல் புரிந்து புகழ் அடையாதவர்,
வாழ்ந்தும் வாழாதவர் போலவே கருதப்படுவார்!

'வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்', என்பது எச்சரிக்கை ஆகும்!

:humble: ... :blah:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 80

உயர்ந்த செல்வம்!

அற வழியில் செல்வம் சேர்ப்பதே உயர்ந்தது என்றாலும்,
பிற வழியில் செல்வம் சேர்க்கவும் மனிதர் உள்ளனரே!

எந்தச் செல்வம் உயர்வானது என்பதைத் திருவள்ளுவர்,
இந்தக் குறட்பாவில், கோடிட்டு நமக்குக் காட்டுகின்றார்.

'அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள', என்பதே அவரின் அருள் மொழி.

அருட்செல்வமே சிறந்த செல்வம், ஏனெனில் நிறைந்த
பொருட்செல்வம் இழிந்த மக்களிடமும் இருப்பதால்!

செல்வத்தை இழந்தாலும், மீண்டும் பெறலாம்; அருட்-
செல்வத்தை இழந்தால், மீண்டும் பெறுதல் மிக அரிது!

'பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது', என எச்சரிக்கை!

தன்னைவிட எளியவரைத் துன்புறுத்த நினைக்கும்போது,
தன்னைவிட வலியவரை அஞ்சுவது எண்ணவேண்டும்!

'வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து', என்பது குறள்.

என்றும் உயர்வான அருட்செல்வத்தைப் பெருக்கி, நாம்
என்றும் எளியோரை வருத்தாது, பூவுலகில் உய்வோம்!

:fish: <== :nono:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 81

கொல்லாமை

தன்னுடைய உடலை வளர்க்க வேண்டி, உயிரை
இன்னொரு உடலிலிருந்து போக்கி, ஊன் உண்டால்,

எப்படி அவர் அருள் உள்ளம் கொண்டவர் ஆவார்?
எப்படி பிற உயிர் பறிப்பதைச் சரியென நினக்கிறார்?

கருணை உள்ளவர்கள், இது போன்ற செயல்களை
ஒரு போதும் செய்யமாட்டார்; குறளில் கேட்கிறார்,

'தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?', என்ற தன் ஐயத்தை!

பொருளைப் பேணிக் காத்திடத் தெரியாதவர்கள்,
பொருள் உடையார் எனப் பெயர் பெற மாட்டார்.

பிற உயிர் கொன்ற பின், அதன் ஊனை உண்பவர்கள்,
அருள் உடையார் எனப் பெயர் பெற மாட்டார். இதை

'பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு', என்று கூறுகிறார்.

கருணை இல்லாத நெஞ்சராக, பிற உயிர் பறித்து,
அருமையாக உடல் வளர்ப்பதை, நிறுத்துவோம்!

:pound:... :nono:
 

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 82

புலால் மறுத்தல்.

புலால் மறுத்தலை வலியுறுத்தும் திருவள்ளுவர், தம்
சொல்லால் அழகுறக் குறட்பாக்கள் அமைக்கின்றார்.

புலாலை வேறோர் உடலின் புண்ணென நினைத்தால்,
புலாலை உண்ணுதலை எவருமே விழையமாட்டார்.

'உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றின்
புண்ணது உணர்வார்ப் பெறின்', என விளக்குகிறார்.

நெய் விட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட,
மெய் விட்டு ஓருயிர் பிரித்து உண்ணாமையே மேல்!

'அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று'; இது குறள்.

உயிர்கள் கொல்லாது, புலால் உண்ணாதிருப்போரை,
உயிர்கள் எல்லாம் வாழ்த்தி வணங்கும்; உண்மை.

'கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்', என்று உரைக்கிறார்.

புலால் மறுக்க வள்ளுவம் தெளிவுறச் சொல்வதால்,
புலால் மறுத்து, அற வழியில் சென்று சிறப்போம்!

:hail:...:angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 83

தவத்தின் வலிமை

கானகத்தில் சென்று செய்வதே தவம் என்பதில்லை;
தான் அகத்தில் தூயவராய், எந்தத் துன்பம் வரினும்,

அதையும் தாங்கும் இதயம் பெற்று, பிற உயிர்கள்
எதையும் துன்புறுத்தாது இருந்தால், அதுவே தவம்.

'உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு', என்கின்றார் திருவள்ளுவர்.

விரும்பியதை விரும்பியவாறு அளிப்பதால்தான்,
விரும்பியே, நல்ல நோன்பை முயலுகின்றார்கள்.

'வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்', என்பது உலக நடப்பாகும்.

மனக் கட்டுப்பாட்டுடன் தவம் செய்பவரே, என்றும்
தனக்கென உள்ள கடமைகளைச் செய்வார்கள்.

அவ்வாறு இல்லாத மற்றவர்கள் எல்லோரும், தம்
வெவ்வேறு ஆசைக்காக வீண் செயல் புரிவார்கள்.

'தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு', என எச்சரிக்கை!

:whip:
 
இதுவும் தவமே!

மனம் கட்டுப்பாட்டில் இருக்க, செய்யும் நற்செயல்கள்
தவம் எனத் திருவள்ளுவர் வரையறுத்து இருப்பதால்,

கல்வி கேள்வி ஞானங்கள் இள வயதில் வளர்ப்பதும்,
கல்வி பயனுறுமாறு நற்பதவியில் அமர்ந்து சிறப்பதும்,

கணவன் மனைவியை மதித்துப் போற்றிக் காப்பதும்,
கணவனின் சுற்றத்தை மனைவி பேணி இருப்பதும்,

வாரிசுகளை நல்வழிகளில் செலுத்த முயலுவதும்,
தரிசாகி அவர்களின் வாழ்வு போகாது உயர்த்துவதும்,

பெற்றோருக்கு மன மகிழ்ச்சி இறுதிவரை தருவதும்,
உற்றாருக்கு உற்ற நேரத்தில் உதவி, அரவணைப்பதும்,

வையகத்தில் தவமாக எண்ணி அவரவர் செய்தால், இவ்
வையகமே உயர்நிலைக்குச் சென்று, உய்வடையுமே!

:grouphug: ... :first:
 

Latest ads

Back
Top