Raji Ram
Active member
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 84
பயனில்லாத் துறவு
உலகை ஏமாற்றித் துறவுக் கோலம் பூண்டு திரிவோர்,
உலகை அன்றே வலம் வந்தனர் என்பதை அறிவதற்கு,
திருவள்ளுவர் அமைத்த 'கூடா ஒழுக்கம்' என்ற இந்த
ஒரு அதிகாரமே சிறந்த ஆதாரமாக விளங்குகின்றது.
தன் மனத்தில் குற்றம் என அறிந்தும் அதைச் செய்பவர்,
தன் தவக்கோலத்தால் பயன் எதுவும் அடையமாட்டார்!
'வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின்', என்று உரைக்கின்றார்.
தன் மனத்தை அடக்காதவர் துறவுக்கோலம் பூணுவது,
தன் மீது புலித்தோல் போர்த்து மேயும் பசு போன்றது!
'வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று', என்கிறார்.
வஞ்சனையாக வலை விரித்து, தான் புதரில் மறைந்து,
நெஞ்சில் ஈரமின்றிப் பறவைகளைப் பிடிக்கும் வேடன்,
செய்யும் செயலைப் போன்றதே, தவ வேடத்தில் தம்
மெய்யை மறைத்து ஏமாற்றும், தவசிகளில் செயல்.
'தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று', இது அவர் வாக்கு.
கபட நாடகமாடும் துறவுக் கோலத்தினரை அறிந்து,
கபட வலையில் சிக்காது, நல்வாழ்வு பெறுவோம்!
:boink: