• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

மன்னிக்கவும்

நீங்கள் கொடுத்துள்ள மு. வ. உரையின் குறள்:

'அகமலர்ந்து ஈதலின் நன்றே முகமலர்ந்து
இன்சொல னாகப் பெறின்.'
கனியிருப்பக் காய் கவர்வது வேறு!! :peace:

தவறுதலுக்கு மன்னிக்கவும்:sad:


மு.வ உரை:

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 172

சிறந்த சொல்....

சிறந்த சொல் எது என்று உணர்த்த, ஒரு குறட்பாவில்,
உயர்ந்த இரு தன்மைகளைக் குறிக்கிறார், வள்ளுவர்.

கேட்பவரை ஈர்க்கும் தன்மை; மற்றும் அதுவரையில்
கேளாதவரைத் தேடி வந்து கேட்க வைப்பதும், அவை.

'கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்', என்பது குறட்பா.

திறனை அறிந்து சொல்லும் சொல்லின் வன்மைபோல்
அறனும், உண்மைப் பொருளும் வேறிலை என்கின்றார்.

'திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்'. இது குறள்.

எந்தச் சொல்லைச் சொல்லினும், வேறு எந்தச் சொல்லும்,
அந்தச் சொல்லை வெல்ல இயலாது சொல்ல வேண்டும்!

'சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து', என்பது அறிவுரை.

நல்ல வலிமையான, பொருள் பொதிந்த சொற்களையே
சொல்ல அறிந்து, வாழ்வில் உயர்வு அடைந்திடுவோம்!

:angel: ... :blabla: ... :thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 173

சொல்லின் பயன்...

தம் கருத்துக்களைப் பிறர் உணருமாறு சொல்லுவதும்,
தாம் பிறர் சொற்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதும்,

அறிவுடையோரின் செயல்கள் ஆகும் என்று, நாம் நன்கு
அறியும்படி, தம் குறட்பாவில் வள்ளுவர் உரைகின்றார்.

'வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்', என்பது அந்தக் குறள்,

மற்றவர் நம்மை வெல்லாதிருக்கவே வேண்டுவோம்;
உற்ற ஒரு உபாயத்தை, குறள் அமுதம் காட்டுகின்றது!

சொல்லில் ஆற்றல் கொண்டு, சோர்வு அறியாதவராக,
நெஞ்சில் அச்சம் இல்லாது இருப்பதுவே, அந்த உபாயம்!

'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது', என்பது குறட்பா.

கரைப்பர் கரைத்தால் கல்லும் கரையும், என்பதுபோல,
உரைப்பார் உரைத்தால், பணிகள் நன்கு நிறைவேறும்!

சொல்லுவதை வகைப்படுத்திச் சுவை குன்றாது சொல்ல
வல்லவர் சொன்ன பணிகளை, உலகு செய்ய முனையும்!

'விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்', என்கிறார் அவர்.

சொல்லின் பயன்களை உணர்ந்து, நம்முடைய சொல்,
வல்லமை குன்றாது இருக்க, விரும்பி முயலுவோம்!

:thumb: ... :director:
 
ஒரு ஒப்புமை!

இள வயதில், எங்கள் இசை ஆசிரியர் திரு. வெங்கட்ராமன்,

கற்பனை ஸ்வரம் வசிப்பது பற்றி இவ்வாறு கூறுவார்:

"சளசள-ன்னு ஸ்வரம் வாசிச்சு படுத்தக் கூடாது!

வளவளத்த வையாபுரி பேசின மாதிரி ஆயிடும்!"

இன்றும் என் இசை மாணவிகளிடம் பகிர்ந்துகொள்ளும் விஷயம் இது! :grouphug:
 
ஆசிரியர் திரு. வெங்கட்ராமன் பற்றி ...

அறுபது ஆண்டுகள் நிறைந்த பின், எங்கள் தந்தை ( டாக்டர் ) அவரிடம்

வயலின் இசைக்கக் கற்றுக் கொண்டார்! ஆசிரியர் பேச்சில் வல்லவரே!

அறுபது நிமிட வகுப்பில், இருபது நிமிடமே வாசிப்பார்கள்!

முதல் முறை எங்களைச் சந்தித்தபோது, கனிவுடன் அம்மா அவரிடம்,

'சாப்பிட்டாச்சா சார்?' என வினவ, அவரின் பதில்,' சாப்பிட்டா ஆச்சு!'

:clap2:
 
அமைதி வேண்டும்

ஒரு ஒப்புமை!

இள வயதில், எங்கள் இசை ஆசிரியர் திரு. வெங்கட்ராமன்,

கற்பனை ஸ்வரம் வசிப்பது பற்றி இவ்வாறு கூறுவார்:

"சளசள-ன்னு ஸ்வரம் வாசிச்சு படுத்தக் கூடாது!

வளவளத்த வையாபுரி பேசின மாதிரி ஆயிடும்!"

இன்றும் என் இசை மாணவிகளிடம் பகிர்ந்துகொள்ளும் விஷயம் இது! :grouphug:



அமைதி வேண்டும் என்ற தலைப்பில்
பேச வேன்டியே அன்புடன் அழைத்தனர்
விழாக் குழுவினர்நம் அருமைத் தலைவரை!
ஆவலுடன் எழுந்து அவரும் வந்தாரே..
அமைதியாய் அரை நாளிகை நின்றாரே !
அத்துடன் பேச்சை முடித்து அமைதியாக

இருப்பிடம் தேடி அவரும்தான் சென்றாரே!:laugh:
 
Last edited:
அரை நாழிகை என்பது பன்னிரண்டு நிமிடங்கள்!

அதை அமைதியுடன் நின்று கழித்தது, அதிசயமே! :tape:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 174

மாசற்ற சொல்...

எதிலுமே மாசு இல்லாது இருப்பதைத்தான் உலகில் பலரும்,
என்றுமே விரும்புவது இயற்கையே ஆகும்; தாம் சொல்லும்

குறையில்லாத சில சொற்களால், தெளிவான விளக்கத்தை,
நிறைவாகத் தர முடியாதவர், பல சொற்களைப் பல முறை

திரும்பத் திரும்பச் சொல்ல விழைந்திடுவார்; இதை உலகு
விரும்பாது! இதை அழகான குறட்பாவில் உரைக்கின்றார்.

'பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்'. இது குறள்.

மணம் பரப்பாத மலர் இருந்தால், அதனால் பயன் இல்லை;
மணம் இல்லாத மலர் கொத்தாக மலர்ந்ததைப் போன்றதே,

தாம் கற்றதை மற்றவர் புரிந்துகொள்ள, விரிவாகக் கூறத்
தாம் வேண்டும் சொல் வளம் இல்லாமையும், என்கிறார்.

'இணரூழ்த்து நாறா மலரனையர் கற்றது
உணர விரிந்துரையா தார்', எனக் குறள்.

மாசற்ற நல்ல சொற்களின் மேன்மை அறிந்திடுவோம்;
மாசற்ற சொற்கள் பயன்படுத்த அறிந்து, சிறப்புறுவோம்!

:first:
 
சொற்களின் சிறப்பு....

சொற்களின் சிறப்பை, பல வகைகளின் அழகாய் உணர்த்தும்

சொற்களின் அழகினால், போற்றினேன் முழு அதிகாரமும்! :hail:
 
சொல்லும், செயலும்....

சொற்களின் குணமும், பயனும் விரிவாக உரைத்தவர்,

பற்பல குறட்பாக்களில், செயல்கள் பற்றி உரைக்கிறார்.

திறமையுடன் செயல்களைச் செய்து முடிக்க, நாமும்
திருவள்ளுவரின் அறிவுரைகளை ஏற்க முயலுவோம்! :high5:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 175

தூய செயல்...

தூய மனமும், சொற்களும் நலம் தருவதுபோல,
தூய செயல்களும், என்றும் நமக்கு நலம் பயக்கும்.

நல்ல துணைவர்களால், நம் வலிமை பெருகிவிடும்;
நல்ல செயல்களை அவர்களுடன் கூடிச் செய்தால்,

எல்லா நலன்களுமே கிடைக்கும்; இதைக் குறளில்
எல்லோரும் அறியுமாறு, வள்ளுவர் உரைக்கிறார்.

'துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்', என்பது குறட்பா.

புகழ், நன்மை இரண்டும் தராத தூய்மையற்ற செயல்,
இகழ் தருவதால், என்றும் செய்யாது விட வேண்டும்.

'என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை', என்று அறிவுரை.

தெளிந்த அறிவும், உறுதியும் கொண்டவர்கள், என்றும்
இழிந்த செயல் செய்யார், துன்பமே தமக்கு வந்தாலும்!

'இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்', என்கிறார் அவர்.

துன்பமே நேரினும், இழி செயல்கள் செய்யாது, நாம்
தூய்மையான செயல்களையே செய்து, உயருவோம்!

:angel:
 
தூய மனமே அடிப்படை!

தூய மனத்தில் தூய எண்ணம் வரும்;

தூய எண்ணத்தால் தூய சொல் வரும்;

தூய சொல்லால் தூய நட்பு வரும்;

தூய நட்பால் தூய செயல் வரும்;

தூய செயலால் தூய விளைவு வரும்;
தூய விளைவால் தூய வாழ்வு மலரும்! :clap2:
 
நாழிகை சரி

அரை நாழிகை என்பது பன்னிரண்டு நிமிடங்கள்!

அதை அமைதியுடன் நின்று கழித்தது, அதிசயமே! :tape:


உங்களிடம் இருந்து எந்த
எழுத்துப் பிழையும் தப்ப
முடியாது !
நாளிகை தவறு...
நாழிகை சரி.
 
நன்றி

:rockon:
தூய மனமே அடிப்படை!

தூய மனத்தில் தூய எண்ணம் வரும்;

தூய எண்ணத்தால் தூய சொல் வரும்;

தூய சொல்லால் தூய நட்பு வரும்;

தூய நட்பால் தூய செயல் வரும்;

தூய செயலால் தூய விளைவு வரும்;
தூய விளைவால் தூய வாழ்வு மலரும்! :clap2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 176

இழி செயல்கள் செய்யாமை..

தன்னை ஈன்றவளைக் காப்பது மகனின் கடமையாகும்.
தன்னை ஈன்றவளே பசியினால் வருந்தி இருந்தாலும்,

அந்த வேதனை தணிப்பதற்காக, சான்றோர் பழிக்கும்
எந்தச் செயலும் செய்யாதிருக்க வேண்டும், என்கிறார்.

'ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோ பழிக்கும் வினை', என்பது குறட்பா.

பழிக்கு அஞ்சாமல், செல்வத்தைத் திரட்டுவதற்காக,
இழிவான செயல்களைச் செய்வதைவிட, தங்களை

வறுமை வந்து தாக்கினாலும், கவலையே கொள்ளாது,
நேர்மை தவறாது, சான்றோர் வழி நடப்பது மேலானது.

'பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை', என்பது அந்தக் குறள்.

அருட்செல்வம் தேட முனையாது, இன்ப வாழ்விற்குப்
பொருட்செல்வம் போதும் என்று முனையும் காலமிது!

எந்த நிலையிலும் நேர்மை தவறாது இருக்கவேண்டும்;
இந்த அறிவுரையை ஏற்று, வாழ்வில் நன்கு சிறப்போம்!

:angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 177

செல்வம் செல்லும்!

தகாதவை என ஒதுக்கிய செயல்களை, செய்வதற்குத்
தகாதவை என ஒதுக்காது, நிறைவேற்ற முனைந்து,

ஒருவேளை அவை நிறைவேறிவிட்டாலும், துன்பமே
வரும், என்று தெளிவாக உரைக்கிறார், திருவள்ளுவர்.

'கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்', என அந்தக் குறட்பா.

பிறரை வருந்தி அழவைத்துச் சேர்த்த செல்வம், சேர்த்த
அவரை வருந்தி அழவைத்துச் சென்றுவிடும், என்கிறார்!

நல்ல வழியில் சேர்த்த செல்வம் போயினும், மீண்டும்
நல்லவரை வந்து சேர்ந்துவிடும் என்றும் உரைக்கிறார்.

'அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை', என்பது அந்தக் குறள்.

இச்சையுடன் தீய வழியில் சேர்த்த செல்வம் காத்தல்,
பச்சை மண் கலத்தில் நீரைப் பாதுகாத்தல் போன்றதே!

'சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று', என்று கூறுகிறார்.

பொல்லாத வழிகளில் சேர்த்த செல்வம், என்றுமே
நில்லாது சென்றுவிடும் என்பதை, நாம் அறிவோம்!

:evil: . . :bolt:
 
Last edited:
தீர்க்கதரிசி!

திருவள்ளுவர் ஒரு தீர்க்கதரிசியே; உண்மைதான்!

திருக்குறளில், அமைச்சியலில் வருகின்ற அழகிய

குறட்பாக்களில், மூன்றாம் அதிகாரத்தில் வருகின்ற

குறட்பாக்களிலேயே, என்னவெல்லாம் கூறுகிறார்!

கோடிகளில் பணம் புழங்கும் என்பதை, தாம் சென்று

நாடி பிடித்துப் பார்த்ததுபோல, நன்றாக உரைக்கிறார்.

'மக்களை அழ வைத்துப் பெரும் பொருள் பெறுவாரே!'

இக்கதையை அறிந்து கொண்டார், அந்தக் காலத்திலே!

:decision: ... :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 178

மனதில் உறுதி...

மனதில் உறுதி கொள்வது அனைவருக்கும் தேவையே.
மனதில் வேண்டிய உறுதியைப் பற்றிக் கூறும்பொழுது,

உறுதியாக எச்செயலை முடிக்க வேண்டினாலும், மன
உறுதியே தலையாயது; மற்றவை வேறே; என்கிறார்.

'வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற', என்பது அந்தக் குறட்பா.

நல்ல வகையில் செயல்களை நிறைவேற்ற, இரண்டு
நல்ல வழிகளைச் சொல்லுகிறார். அவை முறையே,

இடையூறு வரும் முன்னரே நீக்குவது; மீறி வந்திடும்
இடையூறை உறுதியுடன் நீக்குவது, என்பவை அவை.

'ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்', என்பது அவர் மொழி.

செய்து முடிக்கும்வரை, ஒரு செயலைப் பற்றிக் கூறாது,
செய்து முடித்த பின் வெளிப்படுத்துவது, நல்ல வழியே!

முதலிலே தெரிவித்தால், அதை முடிக்க இயலாதவாறு,
இடையிலே இடையூறுகள் வந்து கெடுக்க வழியாகுமே!

'கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்', என எச்சரிக்கை விடுக்கின்றார்!

செயல் எது செய்தாலும், மன உறுதி பூண்டு, இறுதியில்
செயல் வெற்றியில் முடிந்து சிறக்க, நாம் முயலுவோம்!

:thumb:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 179

சொல்லுவதும், செய்வதும்...

சொல்லுவதற்கு நாவன்மை இருந்தாலே போதும்; ஆனால்
செய்வதற்கு, மனத்திண்மை, செயல்வன்மை இவை தேவை!

எந்தச் செயலையுமே, செய்வதாகச் சொல்லுவது மிக எளிது;
அந்தச் செயலைச் செய்து, வெற்றியாக முடிப்பது, மிக அரிது!

'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்', என்கின்றார்.

எண்ணியதை எண்ணியபடியே நிறைவேற்ற, எண்ணியவர்,
திண்ணிய மனத்தினராக இருத்தல், மிகவும் அவசியமாகும்.

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்', என்கின்றார் அவர்.

உருவில் சிறு குறுமுனி, பூமியைச் சமனமாகச் செய்தாரே!
உருவில் சிறியவர் என்பதால், எவரையும் இகழ்தல் கூடாது.

பெரிய தேர்ச் சக்கரத்தை ஓடச் செய்வது, சிறிய அச்சாணி;
சிறிய உருவம் உடையோருக்கும், வல்லமை இருக்கலாம்.

'உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து', என அறிவுறுத்துகின்றார்.

:decision:
 
யதார்த்த வாழ்வில் ஒரு துன்பம்!

கருணையா? கொலையா?


மக்கள் சேவையே மகேசன் சேவை என எண்ணியவள்,
மக்களைக் காக்கும் செவிலியாகப் பணியில் சேர்ந்தாள்.

துள்ளித் திரியும் இளய வயதில், ஒரு கொடிய காமுகன்,
அள்ளிச் சென்றான் அவளின் இன்ப வாழ்வை, நொடியில்.

கழுத்தில் சுற்றிய கம்பி, மூளையை ஸ்தம்பிக்க வைத்து,
அழுத்தி, அவளை ஒரு பயனில்லா உருவமாய் ஆக்கியது!

தன் நிலையே மறந்தாள்; உணர்ச்சியும் இன்றிப் போனாள்,
தன் மூச்சு மட்டுமே அவளது உயிர்த் தன்மையைக் காட்ட!

முப்பத்தியெட்டு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட, அவள்
இப்போது முதுமையில் பல அடிகள் வைத்துவிட்டாள்!

மயங்கியே கழிக்கும் இவ்வாழ்விலிருந்து முடிவளிக்க,
தயங்கியே முறையிட்டார் ஒருவர், உயர் நீதிமன்றத்தில்!

கருணைக் கொலைக்கு முன்வைத்த மனுவை, நீதிபதி,
கருணை மனம் கொண்டு, நிராகரித்துத் தீர்ப்பளித்தார்!

அவளைப் பராமரிக்கும் செவிலித் தோழிகள், தீர்ப்பினை,
அவள் வாயில் இனிப்பு இட்டு, மகிழ்ந்து கொண்டாடினர்!

முதுமை வந்து, உபாதைகளால் அங்கமெல்லாம் தேய்ந்து,
பதுமை எலும்புக்குத் தோல் போர்த்தியதுபோல ஆனாளே!

சாதிக்க வேண்டிய இளசுகள் பலரை அழைக்கும் இறைவன்,
பாதிக்கப்பட்ட இவளுக்கு, என்று விடுதலை தருவானோ?

கருணைக் கொலை, கருணையா, கொலையா எனக் கேட்டு,
இதனைச் சிந்தித்தால், விடையும் கிடைக்குமா? அறியேன்!

:noidea:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 180

விரைவும், துணிவும்...

எந்தச் செயலைச் செய்வதாயினும், அதை நன்கு முடிக்க,
எந்தத் திட்டங்கள் தேவையென, ஆய்ந்து அறியவேண்டும்.

மனக் குழப்பம் இல்லாது, வேண்டிய முடிவுகள் எடுத்தபின்,
கணத் தாமதமும் இன்றி, தளர்வில்லாது செய்ய வேண்டும்.

'கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்', என்கின்றார் அவர்.

இன்பம் இறுதியில் தரக்கூடிய சில செயல்கள், செய்யும்போது
துன்பம் வரினும், துணிவுடன் அச்செயலை முடிக்க வேண்டும்.

'துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை', என அறிவுரை.

எந்த வகையில் ஒருவர் உறுதியாக இருந்தாலும், செய்யும்
சொந்தத் தொழிலில் உறுதி இல்லையேல், உலகு மதிக்காது!

'எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு', என்று எச்சரிக்கை!

செய்யும் செயலை ஆராய்ந்து அறிந்தபின், தாமதமின்றிச்
செய்ய, திண்ணமாக முயற்சி செய்வதை அறிந்திடுவோம்!

:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 181

செயல் ஒன்றைச் செய்யும் முன்னரே, ஆராய்ந்து அச்-
செயல் தரும் நன்மை தீமைகளை அறிய வேண்டும்.

செய்வது எனத் தீர்மானம் செய்துவிட்ட பின், தாமதம்
செய்வது, தீதாக முடியும் என எச்சரிக்கை செய்கிறார்.

'சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது', என்பது குறள்.

சில செயல்களை நிதானமாகச் செய்தல் நலம் தரும்;
சில செயல்களை விரைவாகச் செய்தல் நலம் தரும்.

நிதானமாகச் செய்வதைத் தாமதித்தால், தவறில்லை.
நிதானம், மற்ற செயல்களில் காட்டுதல், தவறு ஆகும்!

'தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை', என அறிவுரை!

நெருப்பை முழுதும் அணைக்காது விட்டால், பெரிய
நெருப்பாக மீண்டும் மூண்டு, கேடு விளைவிக்கும்.

அதைப்போல, செய்ய நினைத்த செயலும், எதிர்க்கும்
பகையும் முழுதும் முடிக்காது இருத்தல், கேடு தரும்.

'வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்', என்பது ஒரு எச்சரிக்கை.

செயல்கள் முடிக்கத் திட்டங்களை, நல்ல தெளிவுடன்
செய்து, உரிய காலத்தில் முடித்துவிட, நாம் அறிவோம்!

:peace:
 
நிறைவான வாழ்வு!

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு', என்பது நாம் அறிந்ததே!

ஆத்திரம், அவசரம் காட்டாது, தெளிவாக ஆராய்ந்தபின்,

விரைவாகச் செய்து முடிக்கும் எந்தச் செயலும், நமக்கு

நிறைவான வாழ்வு தரும்; இது வள்ளுவம் காட்டும் வழி!
:director:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 182

பட்டியல் இடுவதில் வல்லவர் அல்லவா திருவள்ளுவர்!
பட்டியல் தருகின்றார், செயல் புரிய வகைகள் அறிந்திட.

செயல் ஒன்றில் ஈடுபடுவதற்கு முன் அறிய வேண்டும்,
செயல் செய்வதற்கு ஆகும் பொருட்செலவு, ஏற்ற கருவி,

தகுந்த காலம், மேற்கொள்ளும் செயல்முறை மற்றும்
உகந்த இடம் ஆகிய ஐந்தையும், என்கிறார் வள்ளுவர்.

'பொருள்கல்வி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்', என்பது அந்தக் குறள்.

எந்தச் செயல் செய்வதாக இருப்பினும், அறியவேண்டும்
அந்தச் செயலை ஏற்கனவே செய்தவரின் கருத்துக்களை.

'செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்', என்று அறிவுரை.

ஒரு யானையை வைத்து இன்னொரு யானையைப் பிடிக்க
ஒரு உபாயம் உலகில் உள்ளது, அனைவரும் அறிந்ததாகும்.

ஒரு செயல் செய்யும்போதே, அதன் தொடர்பாக இருக்கும்
வேறொரு செயலை முடித்துக் கொள்வது, அது போன்றதே!

'வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று', என்பது குறட்பா.

திறமையாகச் செயல் முடிக்கும் வழிகளை அறிந்து, நாம்
திறமையாகச் செயல்பட்டு, வாழ்வில் உயர்ந்திடுவோம்!

:thumb:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 182

எந்தச் செயல் செய்வதாக இருப்பினும், அறியவேண்டும்
அந்தச் செயலை ஏற்கனவே செய்தவரின் கருத்துக்களை.

'செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்', என்று அறிவுரை.
.............
முழுமையாக அறிக!

முழுமையாக விவரங்கள் அறியாவிட்டால், வருமே
அழுது புலம்ப வைக்கும் பலன்களே; இதோ ஒரு கதை!

தன் குதிரைக்கு உடல் நலம் குன்றியபோது, ஒருவன்,
தன் நண்பனின் குதிரையும், சில நாட்களுக்கு முன்னர்

நோயுற்றதை நினைத்து, அவனிடம் விரைந்து சென்று,
'நோயுற்றதும் என்ன மருந்து கொடுத்தாய்', எனக் கேட்க,

''டர்பன்டைன்' ஒரு குவளை கொடுத்தேன்', எனச் சொல்ல,
'டர்பன்டைன்' ஒரு குவளை இவனும் கொடுக்க, உடனே,

குதிரை விழுந்து, இறந்து போனது! ஆத்திரத்துடன் அவன்,
'குதிரை இறந்தது, நீ சொன்ன மருந்தால்!', என நண்பனைக்

கடிந்து சண்டையிட்டபோது, அவனோ கலக்கமே இல்லாது,
'முடிந்து போனதே, என் குதிரையின் வாழ்வும்! என்னிடம்,

முழுக் கதையும் கேட்டுச் சென்றாயா?', எனக் கேட்டானாம்!
முழுக் கதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள, நாம் அறிவோம்!

:phone: ... :decision:
 

Latest ads

Back
Top