• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 196

எவருக்கு இணை?

பல நூல்களைக் கற்றிருந்தாலும், கற்றவை எல்லாம்,
பலர் முன்னிலையில் சொல்லவும் தெரிய வேண்டும்.

அவை அஞ்சி, தாம் அறிந்தவற்றைப் பேசத் தெரியாது,
சுவை இல்லா வாழ்க்கை வாழ்வதால், பயனுண்டோ?

கல்வியில் சிறந்தவர் சபையில் பேச அஞ்சும் கற்றவர்,
கல்வியே கல்லாதவரைவிட, இழிவானவரே ஆவார்!

'கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்', என்பது குறட்பா.

இன்னும் ஒரு ஒப்புமை அளித்து, அவை அஞ்சுவோரை
இன்னும் தாக்குகின்றார், இந்த அதிகாரத்தின் முடிவில்!

தாம் கற்றவற்றைச் சுவைபட உரைக்கத் தெரியாதவர்,
தாம் உயிர் வாழ்வதாக எண்ணினும், இறந்தவர் ஆவார்!

'உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொலா தார்', என எச்சரிக்கின்றார்!

சொல்வளம் பெருக்கி, அவை அஞ்சுவதையும் விடுத்துச்
சொல்வதைச் சுவைபடச் சொல்லும் ஆற்றல் பெறுவோம்!

:director: . . :clap2:
 
வள்ளுவத்தின் பாதிப்பு!

சொல்லுக சுவைபடச் சொல்லுக சொல்வதைச்
சொல்லுக தம்அவை அறிந்து.

இது திருவள்ளுவர் எழுதியது அல்ல!! :typing: ... :dance:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 197

தம் நாடு உயர்வாக இருப்பதை, எல்லோரும் விழைவர்;
தம் குறட்பாக்களில், எது உயர்ந்த நாடு எனக் கூறுகிறார்.

செழிப்புக் குறையாத விளைவும், சிறந்த அறிஞர்களும்,
கொழிக்கும் செல்வத்தைத் தீய வழியில் செலவு செய்யா

நல்ல செல்வந்தர்களும் நிறைந்து உள்ளதுதான், உலகில்
நல்ல நாடு என்று, தெளிவாக உரைக்கின்றார் வள்ளுவர்.

'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு', என்பது குறட்பா.

பொருள் வளம் நிறைந்து, பிறரால் போற்றத் தக்கதாக,
ஒரு கேடும் இல்லாது, நல்விளைச்சல் கொண்டது நாடு.

'பெறும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு', என்று வரையறுக்கின்றார்.

மிகுந்த பசித் துன்பமும், தீராத பிணிகளும், பகைவர்
வெகுண்டு தாக்குதலும் இல்லாததே நல்ல நாடாகும்.

'உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு', என்றும் கூறுகின்றார்.

கொல்லும் பசியும், பிணியும், பகையும் இருக்காது,
அள்ளும் விளைச்சலும், செல்வமும் நிறையட்டும்!

:popcorn:
 
திருவள்ளுவர் இன்று இருந்தால்...

சிறந்த நாடு பற்றிக் குறிப்பிட்டு எழுதும்போது, என்றுமே

சுனாமியும், பூகம்பமும் இல்லாதது, என எழுதியிருப்பாரோ?

:decision: . . . :typing:
 
எண்ண அலைகளில் உருமாறும் காய் கனிகள்!

நீ சுகமா? நான் சுகமே!

23%20veg.jpg

*********************************************************

ஓடுங்கள்! சுறா வருகிறது!!

01%20veg.jpg

*********************************************************

இனி குடை மிளகாய் சாப்பிடுவது கொஞ்சம் கடினமே!

02%20veg.jpg

*********************************************************

அம்மா எங்கே?

04%20veg.jpg
 
************************************************** *************
என்ன தலைவரே?

03%20veg.jpg

***************************************************************

வாயை மூடுங்கள்!!

05%20veg.jpg

***************************************************************

என் சாப்பாடு எங்கே, அண்ணே?

06%20veg.jpg

***************************************************************

நான்தானே அழகு!

07%20veg.jpg

 
*********************************************

என் செல்லமே!

12%20veg.jpg

*********************************************

ஐ! என் சாப்பாடு!

13%20veg.jpg

*********************************************

ஐயையோ! என் வாலு!!

14%20veg.jpg

*********************************************

டாட்டா! ஊருக்குப் போறோம்!

21%20veg.jpg


 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 198

நல்ல நாடு...

கேடு வராமல் இருப்பதும், ஒருவேளை வந்துவிட்டாலும், அக்
கேடு நீக்கிச் சீர் செய்ய, வளம் நிறைந்து உள்ளதே, சிறந்த நாடு.

'கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை', என்பது குறட்பா.

இரு வகையான ஆறு, கடல் என்ற நீர்வளமும், ஓங்கி உயர்ந்த
பெரு மலைத் தொடரும், காலம் தவறாது வருகின்ற மழையும்,

மிக வலிமையான அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புக்கள்;
மிக அழகான குறட்பாவில், வள்ளுவர் இதனை உரைக்கின்றார்.

'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு', என்பது குறள்.

நோயற்ற வாழ்வு, செல்வச் செழிப்பு, நல்ல விளைச்சல், இன்பம்,
குறையற்ற பாதுகாப்பு, ஆகிய ஐந்துமே நாட்டின் அணிகலன்கள்.

'பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து', என்கிறார்.

நல்ல நாட்டின் தன்மைகள், வள்ளுவம் உரைத்தபடி, நம் நாட்டில்
நல்ல விதம் அமைந்திட, இறைவனை வேண்டி வணங்குவோம்!

:pray:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 199

உயர்ந்த நாடு...

உழைக்கும் மக்களால் உயர்வு பெறும் நாடுகள் சில;
உழைக்கும் முன்னரே, வளங்களில் சிறக்கும் சில!

இடைவிடா முயற்சியால் உயர்ந்திடும் நாட்டைவிட,
இயற்கையில் வளம் உடையதே, மிகச் சிறந்த நாடு!

'நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு', என்பது குறட்பா.

வளத்தைப் பெருக்கும் திட்டங்கள் இயற்ற, மக்களின்
நலத்தை நாடும் நல்ல அரசாட்சி, மிகவும் தேவையே!

வளங்களை இயற்கையில் கொண்டாலும், அல்லது
வளங்களைச் செயற்கையாகப் பெற்றாலும், நாட்டில்

நல்ல அரசாட்சி அமைதல் வேண்டும்; இல்லையெனில்,
நல்ல வளங்கள் நிறைந்தாலும், பயன் இன்றிப் போகும்.

'ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு', என எச்சரிக்கை!

நாட்டின் வளங்களைப் பெருக்கி, மக்களை உயர்த்திட,
நாட்டில் நல்ல அரசு அமைக்க, நாமும் முயலுவோம்!

:high5:
 
நாடும் அரசும்...

நாட்டின் சிறப்பு இயற்கையாக அமைதலும்,

நாட்டின் அரசைச் சிறப்பாக அமைத்தலும்,

நாட்டை மேன்மையடையச் செய்யும் என்று

காட்ட, குறட்பாக்கள் அமைத்தார் வள்ளுவர்! :nod:
 
*********************************************

என் செல்லமே!

12%20veg.jpg

*********************************************

ஐ! என் சாப்பாடு!

13%20veg.jpg

*********************************************

ஐயையோ! என் வாலு!!

14%20veg.jpg

*********************************************

டாட்டா! ஊருக்குப் போறோம்!

21%20veg.jpg

thanx for your beautiful pictures.
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 200

அரண்...

அரண் தேவையே, நாட்டையும் மக்களையும் காக்க;
அரண் என்பதன் தன்மைகளை வள்ளுவர் கூறுகிறார்.

பகைவர் மீது போர் தொடுக்கச் செல்லுவோருக்கும்
வகையாகப் பயன்படுவது, ஒரு நாட்டின் அரணாகும்;

பகைவரைக் கண்டு அஞ்சி, நடுங்கி, ஒளிவோருக்கும்
வகையாகப் பயன்படுவது, ஒரு நாட்டின் அரணாகும்.

'ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்', என்பது குறட்பா.

மணிபோன்ற தெளிந்த நீரும், பரந்து விரிந்த நிலமும்,
அணிவகுக்கும் மலைத்தொடரும், சிறந்த நிழல் தரும்

அழகான காடும், உடையதே நாட்டின் அரணாகும் என,
அழகான குறட்பா ஒன்றில் வள்ளுவர் உரைக்கின்றார்.

'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்', என்பதே குறட்பா.

அரண் என்பதன் சிறப்பை, இன்னும் பலவாறு கூறும்,
திறன் மிக்க குறட்பாக்கள், இதைத் தொடர்கின்றன!

:typing:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 201

சிறந்த அரண்...

நல்ல உயரம், நல்ல அகலம், சிறந்த திண்மை, பகைவர்
நன்கு முயன்றாலும் அழிக்க இயலாத தன்மை என்பவை

சிறந்த அரணின் இலக்கணமாக நூல்கள் உரைக்கும், என
சிறந்த குறட்பா ஒன்றை அமைக்கின்றார், திருவள்ளுவர்.

'உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்', எனக் குறள்.

சிறிய அளவே காப்பது எளிய செயல்; அதேபோல, நாடு
பெரிய அளவு பரந்து விரிந்தால், சிறப்புடன் விளங்கும்.

சிறு பாதுக்காக்கும் பகுதியுடன், பெரிய நிலமாக விரிந்து,
உறு பகையின் பேராற்றலையும் அழிப்பதுதான் அரண்!

'சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்', என்கின்றார்.

முற்றுகையிட எளிதாக இல்லாது, மக்கள் தம் உணவைப்
பெற்றுவிடும் வகையில் உட்புறம் அமைத்து, எதிரிகளை

மிக எளிதாகத் தாக்குகின்ற வகையில் அமைக்கப்பட்டதே
மிகச் சிறந்த அரண் என்று ஓர் அழகிய குறளில் கூறுகிறார்!

'கொளற்கரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண்', என்பது அந்தக் குறள்.

வள்ளுவத்தை அறிந்து, தெளிந்து அரண் அமைத்தால், எதிர்
கொள்ளும் பகை, நம்மை வெல்லாது தடுப்பதும் எளிதாகும்!

:fencing: . . . :peace:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 202

அரணும், வீரரும்...

உள்ளிருந்து போர் புரிய இசைவாக இருப்பதே அரண் என,
வள்ளுவத்தில் பன்முறை வலியுறுத்திக் கூறப்படுகிறது.

முற்றுகை இட்ட பகைவரின் வலிமையை எதிர்த்து, அவர்
முற்றுகையை உள்ளிருந்து முடித்து, வெல்லுவதே அரண்!

'முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்', என்பது குறட்பா.

வெளியே முற்றுகையிட்ட பகைவரை, போரில் வெல்வதை,
உள்ளே இருந்தே இயலுமாறு செய்வது, சிறந்த அரணாகும்!

'முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்', என வலியுறுத்துகிறார்.

இத்தனை சிறப்புகள் பெற்ற அரணாக இருந்தாலும், அது
அத்தனையும் வீணாகும், செயல் திறன் இல்லாவிட்டால்!

பெருமையான நல்ல அரணாக இருப்பினும், போர் செய்யும்
அருமையான வீரர்கள் இல்லையேல், சிறிதும் பயனில்லை!

'எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்ல தரண்', என ஒரு எச்சரிக்கை!

நல்ல அரண் அமைவது, நாட்டின் சிறப்பு என அறிவோம்;
நல்ல படை வீரர்களும் போரிடத் தேவை என அறிவோம்!

:peep: . . . :fencing:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 203

மதிப்புடன் வாழ் எல்லோருமே விழைவது இயல்பு!
மதிப்புத் தருவதில் ஒன்றை வள்ளுவம் கூறுகிறது!

மதிக்கத் தகாதவரை, செல்வம் தவிர வேறு ஒன்றும்
மதிக்கத் தக்கவராகச் செய்ய முடியாது, என்கின்றார்.

'பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்', எனக் குறள்.

ஒரு பொருட்டாக மற்றவர் எண்ண வேண்டுமாயின்
ஒரு பொருட்செல்வராகவாவது இருத்தல் வேண்டும்!

செல்வம் இல்லாரை, உலகில் எல்லோரும் இகழ்வார்;
செல்வம் படைத்தவரை, உலகில் மதித்துப் புகழ்வார்!

'இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு', என்கிறார் அவர்.

இதைச் சொன்னால், எவ்வழியிலும் செல்வம் திரட்ட
வகை செய்வார் என்பதால், எச்சரிக்கை செய்வதற்கு,

தீய வழியை மேற்கொள்ளாது சேர்த்த செல்வம்தான்,
தூய அறத்தையும், இன்பத்தையும் தரும் என்கின்றார்!

'அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்', என்பது குறட்பா.

அற வழியில் பொருள் ஈட்டி, செல்வந்தராக உயர்வோம்;
அறமும், இன்பமும் பெற்று, மதிப்புடன் வாழ்ந்திடுவோம்!

:grouphug: ... :peace:
 
செல்வம் சேர்த்தல்...

வேறு சிறப்புகள் இல்லாவிட்டாலும், செல்வம் சேர்த்தால்
பெறுவார் மதிப்பு என்று உரைத்ததைக் கருத்தில் கொண்டு,

தீய வழியில் சேர்க்கக் கூடாது, என்ற ஒரு எச்சரிக்கையை,
நேயமுடன் கற்க மறந்தனரோ, இக்காலச் செல்வந்தர் பலர்?

:evil: :evil:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 204

பொருள் ஈட்டும் வகை...

இருட்டை விரட்டி அடிக்க எளிய வழி எதுவெனில், அந்த
இருட்டில் ஓர் அணையா விளக்கினை ஏற்றுவதே ஆகும்!

பொருளாகிய அணையா விளக்கை மட்டும் நாம் பெற்றால்,
இருளாகிய துன்பத்தை, எண்ணிய இடம் சென்று நீக்கலாம்.

'பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று', என்று உரைக்கின்றார்.

மீண்டும், பொருளை நல்ல வழியிலே சேர்த்திட வேண்டும்
யாண்டும், என வலியுறுத்தும் குறட்பாக்கள் அமைக்கிறார்.

பெரிய பொருட் செல்வமாயினும், அருள் நெறியில், அன்பின்
அரிய வழியில் வராவிடின், அதைப் புறக்கணிக்க வேண்டும்!

'அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்', என்று எச்சரிக்கிறார் அவர்.

அன்பு மனத்திலே அருள் பிறக்கும்; அந்த அருளை வளர்த்து,
பண்பாகப் பெருக்க, பொருள் இருந்தால் மட்டுமே இயலும்!

அருள் என்கிற அன்பு பெற்றெடுக்கும் குழந்தை, வளர்ந்திடும்
பொருள் என்கிற செவிலித் தாயால், என்று உரைக்கின்றார்.

'அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு', என்பது குறட்பா.

அன்பு மனம் கொண்டு, அருளைப் பெற்று, நம்மிடம் அந்தப்
பண்பு பெருகி வளர்ந்திட, செல்வத்தை ஈட்ட முயலுவோம்!

 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 205

நம் பொருட்செல்வம்...

யானைகள் இரண்டு மோதும்போது, அருகில் செல்லாது,
யானைப் போரைக் குன்றில் நின்று பார்ப்பது எளிதாகும்!

தன் கைப் பொருளைக் கொண்டே ஒரு செயல் செய்வது-
தான் எளிது என உணர்த்த, இந்த உவமை கூறுகின்றார்!

'குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை', என்பது நல்ல அறிவுரை.

பகைவரின் செருக்கை அழிக்கும் கூரிய ஒரு நல்ல கருவி
மிகையான பொருளாகும்; அதனால், சேமிக்க வேண்டும்!

'செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில்', என்று உணர்த்துகிறார்.

நல்ல வழியில் பொருளை நிறைவாய் ஈட்டியவர்களுக்கு,
நல்ல வழியில் அறமும், இன்பமும் எளிதிலே வந்திடும்.

'ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு', என்பதே இதன் குறட்பா.

நம் பொருளை வைத்தே செயல்கள் செய்து, பொருளீட்டி,
நம் வாழ்வை உயர்த்தும் வழி வகைகளைக் காண்போம்!

:thumb:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 204
......
'அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு', என்பது குறட்பா.
................
குழவி...

வள்ளுவர் உரைத்த (அரைத்த - அல்ல!) குழவியைப் பார்த்தீர்களா, சிவா சார்? :baby:
 
Last edited:
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 206

சிறந்த படை...

ஒரு நாட்டைப் பகைவரிடமிருந்து காக்கிறது படை;
ஒரு நாட்டின் செல்வமாகத் திகழ்ந்திடும் படை எது?

எல்லா வகைகளிலும் நிறைந்ததாக, இடையூறுகளை
எல்லாம் கண்டு அஞ்சாது எதிர்த்திடும் படையே அது!

'உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை', என்பது குறள்.

போரில் சேதமுற்றதால், சிறிது வலிமை குன்றினாலும்,
போரின் இடையூறுகளையும் எதிர்த்து, அஞ்சாது போரிட,

பழம் பெருமை கொண்ட படையால்தான் இயலும்; இதை
அரும் குறட்பா ஒன்றில், திருவள்ளுவர் உரைக்கின்றார்.

'உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது', என்பது அந்தக் குறட்பா.

எலிப்படை கடல்போலத் திரண்டு முழங்கினாலும், ஒரு
ஒலி நாகத்தின் சீற்றத்தால் எழுந்தால், மிரண்டு ஓடும்!

வலிமையற்ற வீணர் பலர் திரண்டு போரிட வந்தாலும்,
வலிமையான ஒரு வீரன் வெகுண்டு எழ, வீழ்வார்கள்!

'ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கேடும்', என்பது குறட்பா.

நல்ல உறுதி, பழைமை, வலிமை, இவை ஒரு நாட்டை,
நல்ல முறையில் காத்திடும் ஒரு படைக்குத் தேவை!

:boink:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 207

படையின் பண்புகள்...

எந்த நிலையிலும் அழியாது, சூழ்ச்சிக்கு இரையாகாது,
வந்த பரம்பரை உறுதி உடையதே, சிறந்த படையாகும்.

'அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை', என்பது குறட்பா.

கூற்றுவன் தரும் இறப்பே எதிரில் வந்தாலும், அஞ்சாது,
கூடி நின்று போரிடும் ஆற்றல் படைத்ததே, படையாகும்.

'கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை', என்கின்றார் வள்ளுவர்.

மீண்டும் படையைப் பாதுகாப்பவை பற்றி உரைக்கிறார்;
யாண்டும் பொருந்தும் அந்த நான்கு பண்புகள், இவையே.

தன்னிகரில்லா வீரம்; உயர்ந்த குணமான மான உணர்வு;
முன்னோர் வழிச் செல்லல்; தலைவனின் நன்னம்பிக்கை.

'மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு', என்பது குறள்.

நாட்டில் சிறந்த படை, எதிரிகளிடம் அஞ்சாது போரிடும்.
நாட்டில் சிறந்த படை அமைந்தால், பாதுக்காப்பு உண்டு!

:high5:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 208

எப்படை வெல்லும்?

வெல்லும் படையின் தன்மைகளை, மிகத் தெளிவாகச்
சொல்லும் திறமை வள்ளுவருக்கே உண்டு, அன்றோ?

தோற்றச் சிறப்பு ஒருவருக்கு உயர்வு அளிப்பதுபோல,
தோற்றச் சிறப்பு ஏற்றம் தரும் படைக்கு, என்கின்றார்!

வீரத்துடன் போர் புரிதல், எதிர்த்து நிற்கும் வல்லமை
இரண்டைவிட, படையின் தோற்றம் முக்கியமானது!

'அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்'. இது அந்தக் குறள்.

சிறுத்துவிடாமல், தம் தலைவனை வெறுத்துவிடாமல்,
வறுமையே இல்லாதிருக்கும் படையே வெல்லும் படை.

'சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை', என்கிறார் அவர்.

நல்ல தலைவனின் தேவையை, இன்னொரு குறளில்,
தெள்ளத் தெளிவாக உரைக்கின்றார், திருவள்ளுவர்.

நிலைத்து நெடுங்காலம் நிற்கும் படையும், வழிகாட்டத்
தலைவர்கள் இல்லையெனில், பெருமை பெற இயலாது!

'நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்', என்பது அக் குறள்.

தோற்றத்தில் சிறந்து, வழி நடத்த நல்ல தலைவர்கள் உள்ள
ஏற்றமுள்ள படை, என்றும் வெல்லும் படையாக இருக்கும்!

:flock:.:flock:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 209

படைச் செருக்கு...

எத்தனை செருக்குடன் படைவீரன் இருக்கவேண்டும்?
அதனை அழகான குறட்பாவாக அமைத்தார், வள்ளுவர்.

'என் தலைவனை எதிர்த்து முன் நிற்காதீர்கள்; அவ்வாறு
என் தலைவன் முன் நின்றவர், கல்லாகிப் போனார்', என

படை வீரன் முழங்குவதாக, முதற் குறளில் உரைக்கிறார்;
படை வீரன் தலைவனிடம் கொண்ட பற்றைக் கூறுகிறார்!

'என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்', என்பது அந்தக் குறட்பா.

சிறிய முயலைக் காட்டில் அம்பெய்து வீழ்த்துவதைவிட,
பெரிய யானையை வீழ்த்த இயலாத வேல் எறிதல் மேல்!

'கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது'. உண்மை!

ஆண்மை என்பது பகைவரைப் போரில் வெல்வதே; ஆனால்
ஆண்மையின் உச்சம், துன்புற்ற பகைவருக்கும் உதவுவதே!

'பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு', என்பது குறட்பா.

வீரமாகப் போரிடுவதை மேன்மைப் படுத்தும் வள்ளுவர்,
வீரத்திலும் மேல், பகைவனுக்கு அருளுதல் என்கின்றார்.

'இன்று போய் நாளை வா', என நிராயுதபாணியிடம் கூறி,
அன்று இராமன் காட்டினான், பேராண்மையின் உச்சத்தை!

:clap2:.:clap2:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 210

அச்சமில்லை...

துச்சம் உயிரென எண்ணிப் போரில் ஈடுபடும் வீரர்களை,
மெச்சும் வகையில் சில குறட்பாக்களை அமைத்துள்ளார்.

சுழலும் தம் புகழை வேண்டி, உயிர் அஞ்சாத வீரரின் கால்
கழலும் தனி அழகைப் பெறும் என்கின்றார் திருவள்ளுவர்.

'சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து', எனக் குறள்.

தம் தலைவன் சினந்தாலும்கூட, பெருமையே அடைவார்,
தம் உயிரை மதிக்காது போர் புரியும் மறவர், என்கின்றார்.

'உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்'. இது குறள்.

இறப்பதால், தன் தலைவனின் கண்ணீர் பெருகுமானால்,
இரந்தேனும் பெருமையான வீர மரணத்தை ஏற்கலாம்!

'புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்க துடைத்து', என்கிறார் அவர்.

வீரம் முதன்மை என்று எண்ணும் வீரர்கள், என்றும் தம்
வீர மரணத்தைத் தழுவிக்கொள்ள அஞ்ச மாட்டார்கள்!

:fencing::first:
 
அச்சமில்லை..

புகழ் தரும் வீர மரணத்திற்கு அச்சமில்லை என வள்ளுவர் உரைக்க - சிலர்
இகழ் வரும் என்ற அச்சமே இல்லாமல், எதுவும் செய்வார், பணம் கிடைக்க!

:evil: :evil:
 

Latest posts

Latest ads

Back
Top