• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

குறைகள் நீங்கட்டும்!!

பழையன கழிதலும்,
புதியன புகுதலும்,

பொங்கல் நன்நாளில்
எங்கும் நடந்திடும்!

பழைய சோர்வைப்
புதிய வலிமையாய்,

பழைய தீமையைப்
புதிய நன்மையாய்,

பழைய துன்பத்தைப்
புதிய இன்பமாய்

இறைவன் மாற்றட்டும்!
குறைகள் நீங்கட்டும்!!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
cheer2.gif
 
Last edited:
பாராட்டுக்கள் சஹோதரி ! கலைமகள் தங்கள் எழுதுகோலில் வாழ்கிறாள். கவிதைத் தொகுப்பினை நூலாக வெளியிடுங்கள் !
 
பாராட்டுக்கள் சஹோதரி ! ......
தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

எப்பொழுதும் நான் எழுதுவதே இப்பொழுதும்:


''தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்''! :)
 
திருத்தலத் திருப்பணிகள்!

திருட்டுப் பணத்தை எடுத்து - ஆலயத்
திருப்பணிகள் செய்த பக்தர்கள் உண்டு!

சொந்தச் செலவின்றித் திருப்பணிகளை
இந்தக் காலத்திலும் செய்வோர் உண்டு!

ஆலய
ங்ள் பற்பல தரிசனம் செய்து வர,
ஆயிரங்களில் பக்தர்களிடம் வசூலித்து,

சூப்பரான உலா போல எண்ண வைத்து,
சுமாரான ஏற்பாடுகளில் திணற வைத்து,

மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கி வைத்து,
மூட்டைப் பணத்தை அள்ளிக் கொடுத்து,

நற்காரியம் செய்வதில் வல்லவரென்று,
நற்பெயரும் பெறுவார், இனிதாய் இன்று!

ஐனூறு பேர்கள் ஏமாந்தாலே - இருபத்தி
ஐந்து லட்சம் மிக எளிதாய்த் தேறிடுமே!

:popcorn: . . . :angel:
 
குணத்தை நினைப்போம்!

குணமும் குற்றமும் அனைவரிடமும்
தினமும் தோன்றி மறைவது நிஜமே!

குணத்தை மற்றும் நினைவில் வைக்க
தினமும் கற்றால் வந்திடும் சுகமே!

:couch2:
 
தந்தையை மறக்கலாமா?

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்னவெனில்
அவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்ற

சொல் இருப்பதே என்று அனைவரும் உணறச்
சொல்லி வைத்தவன் வான் புகழ் வள்ளுவன்!

அன்போடு அரவணைத்த தந்தையைப் பிரிந்து
என்னதான் செல்வச் செழிப்பில் உழன்றாலும்,

அவர் மரணப் படுக்கையில் இருக்கும் சமயம்
அவர் மனதைத் தேற்ற ஓடி வர வேண்டாமோ?

முகப் புத்தகத்தில் ஆயிரம் நண்பர் இருப்பினும்,
அகத்தில் தந்தையிடம் பாசம் இருக்கவேண்டும்!

மனிதனின் வாழ்வில் சுகங்கள் பெருகிவிட்டால்,
மனித நேயமும் கூட மறைந்து போய்விடுமோ?

:sad:

A thought after reading the thread:
Have we become inhuman?
 
இரு கோடுகள் தத்துவம்!

உணவில் சுவையே இல்லை என்று சதா
தொணதொணக்கும் நண்பர் இருப்பின்,

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் - ஒரு
பிரயாணம் செய்ய வைத்தால் போதும்!

எந்த உணவை இனி தந்தாலும் - அதனை
எந்தக் குறையும் கூறாது உண்பார்கள்!

வாய்க்கு வைக்க வழங்காத உணவினை
வாழ்வில் இந்த வாரம்தான் உண்டேன்!

:hungry:
 
இரு கோடுகள் தத்துவம் - 2


முப்பது டிகிரி சென்டிக்ரேடில் வாழ்ந்து,
முப்பது டிகிரி ஃ பாரன்ஹீட்டிற்கு வந்தால்,

அறுபத்தாறு டிகிரியை ஹீட்டர் தரினும்,
ஒரு போதும் நமக்குப் போதவே போதாது!

எளிய வழி இரு கோடுகள் தத்துவம்தான்!
எந்த அறைக்கு ஹீட்டர் இல்லையோ - அதில்

சற்றே சென்று உலவி வந்தால், அதன் பின்பு
மற்ற அறைகளில் குளிர் தாக்கவே தாக்காது!

:smow:
 
:nono: Krish Sir!

The funda is this: If you want to make a line appear shorter, draw a longer line near it!

If I come out of the coolest room in the house, I feel the cooler rooms warmer! :)
 
இரு கோடுகள் தத்துவம்!

உணவில் சுவையே இல்லை என்று சதா
தொணதொணக்கும் நண்பர் இருப்பின்,

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் - ஒரு
பிரயாணம் செய்ய வைத்தால் போதும்!

எந்த உணவை இனி தந்தாலும் - அதனை
எந்தக் குறையும் கூறாது உண்பார்கள்!

வாய்க்கு வைக்க வழங்காத உணவினை
வாழ்வில் இந்த வாரம்தான் உண்டேன்!

:hungry:

dear raji, good lady,

i am very surprised that you find BA food insipid.

maybe my expectations are low. i have always found BA food among the better ones served in international airlines. Compared to Air Canada, Emirates, Sri Lankan, Lufthansa, Jet Air, Kingfisher, ..
 
Dear Kunjuppu Sir,

I found food served in Lufthansa and Jet Air better than this.

We chose BA because the luggage allowed is 69 kg per person!!

But, we brought 65 kg in total, for easy handling. :)
 
I have tried lufthansa executive class to europe.

Very competitively priced with decent food.

For 8-10 hours travel OK.

By the away has anyone tried going to china -shangai or beijing?

It appears to be the safest place for tourism in terror hit world.

how good are chinese airlines?
 
I have tried lufthansa executive class to europe.

Very competitively priced with decent food.

For 8-10 hours travel OK.

By the away has anyone tried going to china -shangai or beijing?

It appears to be the safest place for tourism in terror hit world.

how good are chinese airlines?

my cousin in chennai bought the indian railway catering tourism corp's best of china tour. it was great he said. and all indian food served right through.

best of china
 

காணாததைக் கண்டால்....


காணாததைக் கண்டவர்க்கு மனத்தில்
தானாக வந்து சேரும் பெரும் மகிழ்ச்சி!

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தைச்
சட்டென்று மாற்றும் ஊருக்கு வந்தவுடன்,

அதிசயமாகப் பனிப் பொழிவும் வந்தால்,
அதிகரிக்கும் ஆனந்தம்; இதுவே நிஜம்!

சென்ற முறை என் அமெரிக்க விஜயத்தில்,
வந்தது அக்டோபர் மாதத்திலே பனிமழை!

இந்த முறை ஏப்ரலில் வருகிறது பனிமழை;
எந்த ஆண்டும் நடவாத நிகழ்வுகள் இவை!

வட இந்தியாவில் பனிப் பொழிவு காணாது,
வட அமெரிக்காவில் அதைக் காண்கிறேன்!

இறை அருளால் கிடைத்தது இந்த நிகழ்வு;
குறைவின்றி அனுபவிப்பதால் மன நிறைவு!

பனிப் பொழிவு தரும் மகனுக்கு வருத்தம்;
இனிக்கும் நினைவுகளே எனக்கு இருக்கும்!


இன்று நினைவிற்கு வரும் பாடல் :
PUTHIYA VAANAM PUTHIYA BHOOMI.

 
dear raji, good lady,

you must be one of the few who welcomes the white fluffy stuff at this time of the year. for most of us, who have had the pleasure of its company past 4 months, spring is a time to look forward to some rains, birds, and flowers sprouting :)
 
Dear Kunjuppu Sir,

My younger sister says that the snow in October, 2011 (Still I remember the date as 28th) and the April snows are ONLY sent for me! :)

My son has to clear the road leading to his garage in the evening; he managed to drive to the main road this morning.
 

கஞ்சியில் முகம் தெரிந்தால்.....

புது மாப்பிள்ளையை உபசரிக்க
மிக அன்புடன் மாமியார் வேண்ட,

தாயுடன் வசித்த அவனோ தன்
தாயிடமே அனுமதி வேண்டிட,

அழகாகச் செய்தாள் உபதேசம்:
'கஞ்சியில் முகம் தெரிந்தால் வா'!

சொன்னதன் பொருள் புரியாது,
சென்றான் மாமியார் வீட்டிற்கு!

முதல் நாள் வடையும் பாயசமும்;
அதன் பின்னர், சாதா சாப்பாடு.

வந்தது மறுநாள் ரசம், அப்பளம்;
எந்த சங்கோஜமும் இல்லாமலே

வெட்டியாக அமர்ந்த அவனை,
எட்டி நின்று பார்த்த மாமியார்,

'உடலில் தெம்பு உள்ளவர்கள்
வயலில் உதவினால் என்ன?'

என்று கேட்டு, அவன் எதிரில்
சென்று, தந்தாள் சட்டி! அதில்

இருந்த கஞ்சியில் முகம் தெரிய,
புரிந்தது அம்மாவின் உபதேசம்!

becky.gif
 

கஞ்சியில் முகம் தெரிந்தால்.....

புது மாப்பிள்ளையை உபசரிக்க
மிக அன்புடன் மாமியார் வேண்ட,

தாயுடன் வசித்த அவனோ தன்
தாயிடமே அனுமதி வேண்டிட,

அழகாகச் செய்தாள் உபதேசம்:
'கஞ்சியில் முகம் தெரிந்தால் வா'!

சொன்னதன் பொருள் புரியாது,
சென்றான் மாமியார் வீட்டிற்கு!

முதல் நாள் வடையும் பாயசமும்;
அதன் பின்னர், சாதா சாப்பாடு.

வந்தது மறுநாள் ரசம், அப்பளம்;
எந்த சங்கோஜமும் இல்லாமலே

வெட்டியாக அமர்ந்த அவனை,
எட்டி நின்று பார்த்த மாமியார்,

'உடலில் தெம்பு உள்ளவர்கள்
வயலில் உதவினால் என்ன?'

என்று கேட்டு, அவன் எதிரில்
சென்று, தந்தாள் சட்டி! அதில்

இருந்த கஞ்சியில் முகம் தெரிய,
புரிந்தது அம்மாவின் உபதேசம்!

becky.gif
hi


மருதுந்தும் விருந்தும் மூன்று நாளைக்கு தான்....அப்பறோம் ரெண்டும் விஷம் தான்.....ஒன்று உடம்பிற்கு....

மற்றொன்று உள்ளத்திற்கு .....
 
.. மருதுந்தும் விருந்தும் மூன்று நாளைக்கு தான்....அப்பறோம் ரெண்டும் விஷம் தான்.....ஒன்று உடம்பிற்கு....

மற்றொன்று உள்ளத்திற்கு .....
:sad:
 

Latest posts

Latest ads

Back
Top