Raji Ram
Active member
ஐயகோ! தமிழகமே!!
ஒரு கோடி வரை வெல்ல விழைவோர்
வருவார் ஓடி, இதில் தாமும் பங்கு பெற.
முதுகலைப் பட்டம் பெற்ற ஓர் ஆசிரியர்,
பொது அறிவிலே எப்படி இருக்கின்றார்?
பிரணவ மந்திரத்தை, குமரன் தந்தைக்கு,
புரிய வைத்தது பழனியிலே என்கின்றார்!
கண்ணின் லென்ஸைக் கட்டுப்படுத்தக்
கருவிழி உதவுமா? ஐயம் கொள்கின்றார்!
சட்டம் படிக்கும் ஒரு மாணவிக்குத் தன்
பட்டத்திற்குக் கணிதமே தேவையில்லை!
ஐந்து அடிக்கு எத்தனை அங்குலம் என
வந்த வினாவிற்கே audience poll தேவை!
ஒரு புறம் 12 எனவும், மறுபுறம் 30 எனவும்
ஒரு அடிக்கோலில் உள்ளது அறியாரோ?
இவர் வக்கீலான பின், தினம் 'அளப்பதே'
இவர் செய்திடும் தொழில் ஆகாதோ?
அந்த audience இல் கூடப் பலர் தவறாக
இந்த வினாவுக்கு விடை அளித்தனரே!
பாடப் புத்தகத்தில் சிறிதளவே படித்து,
பரீட்சையில் கக்குவதால் இப்படியோ?
:noidea:
ஒரு கோடி வரை வெல்ல விழைவோர்
வருவார் ஓடி, இதில் தாமும் பங்கு பெற.
முதுகலைப் பட்டம் பெற்ற ஓர் ஆசிரியர்,
பொது அறிவிலே எப்படி இருக்கின்றார்?
பிரணவ மந்திரத்தை, குமரன் தந்தைக்கு,
புரிய வைத்தது பழனியிலே என்கின்றார்!
கண்ணின் லென்ஸைக் கட்டுப்படுத்தக்
கருவிழி உதவுமா? ஐயம் கொள்கின்றார்!
சட்டம் படிக்கும் ஒரு மாணவிக்குத் தன்
பட்டத்திற்குக் கணிதமே தேவையில்லை!
ஐந்து அடிக்கு எத்தனை அங்குலம் என
வந்த வினாவிற்கே audience poll தேவை!
ஒரு புறம் 12 எனவும், மறுபுறம் 30 எனவும்
ஒரு அடிக்கோலில் உள்ளது அறியாரோ?
இவர் வக்கீலான பின், தினம் 'அளப்பதே'
இவர் செய்திடும் தொழில் ஆகாதோ?
அந்த audience இல் கூடப் பலர் தவறாக
இந்த வினாவுக்கு விடை அளித்தனரே!
பாடப் புத்தகத்தில் சிறிதளவே படித்து,
பரீட்சையில் கக்குவதால் இப்படியோ?
:noidea: