எம்மதமும் நம் மதம்
(இருக்க முடியாது! நமக்கென ஒன்று தேவை!)
மதங்களின் பெயரால்
ஏனிங்கே போராட்டம்?
வீணான ஆர்ப்பாட்டம்?
(ஆர்ப்பாட்டம் உள்ளது நிஜமே!)
காளியிடம் சென்று
தொழுகை நடத்தினால்
கருமாரிக்கொன்றும் கோபம் வராது.
(இடம் பொருள் ஏவல் என்பது கிடையாதா?
இடம் உண்டு ஒவ்வொரு இல்லத்திலும்கூட, ஒவ்வொரு வேலைக்கும்!
கருமாரி உருமாறி வரமாட்டார் என்ற தைரியமா?)
நபிகளிடம் சென்று
நாமமிட்டுக்கொண்டால்
நமாசில் எந்தப் பிழையும் வராது
(ந, நா சொல்லழகு நன்று! நாமம் இட்டுச் சென்று பாருங்கள்! தெரியும்!)
குருத்வாராவிற்குச் சென்று
குரான் ஓதினால்
கிரந்தசாகிப் ஒன்றும் கிழிந்து விடாது.
(கிரந்தசாகிப் கிழியாது! சென்று ஓதும் மனிதர்தான்.....)
கீதையும் பைபிளும்
நாணயத்தின் இரு பக்கங்கள்
நம்பிக்கையின் சின்னங்கள்..
(அவரவர் வேண்டியதை ஏற்கலாம்........ இரண்டையும் முடியாது!)
மனிதனுக்காக மனம்; மனதிற்காக மதம்
எனவே மனிதனுக்காக மதமன்றி
மதங்களுக்காக மனிதனல்ல.
(மனிதனுக்கு மதம் வேண்டும் என்ற ஒப்புதல் நன்று!)
ஆதாம், ஏவாள்
எந்த மதம்?
அனைவரும் இங்கே அந்த மதம்.
(சொல்லாதீர்கள் சார்! பின் உலகில் திருமணங்களே நடக்காது போகும்!)
எம்மதமும் நம் மதம்
என்ற தத்துவத்துக்கு
என்றென்றும் சம்மதம்.
('எம்மத மனிதரையும் நட்புடன் நோக்குவோம்' எனச் சொன்னால் அதுவே நல்வழி!)
உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
ray: