அறியாமை
வரலாறு வராது
வணிகவியல் வார்த்தை தெரியாது
வாழ்வியல் வாய்க்காது
விலங்கியல் விளங்காது
புவியியல் புரியாது
புள்ளியியல் புதிரானது
பொருளாதாரம் பொருள் அறியாது
அறிவியல் அறியாது
ஆங்கிலம் அகராதி தெரியாது
கணிதம் கடினம்
கணக்கியல் கஷ்டம்
இயற்பியல் இயல்பறியாது
வேதியியல் வேட்கை கிடையாது
உயிரியல் உணராது
தாவரவியல் தடயம் தெரியாது
மறையியல் மனதறியாது
மருத்துவம் மண்டையில் ஏறாது
தொழில்நுட்பம் துளியும் தெரியாது
தொல்பொருளியல் துப்பு தெரியாது
மொழிகள் அறியாது
மௌனம் புரியாது
இலக்கியம், இலக்கணம் இனமறியாது
சாஸ்திரங்கள் சரிவராது
சாதனைகள் செய்தது கிடையாது
விளையாட்டு விரலளவும் கிடையாது
அரசியல் அர்த்தம் தெரியாது
கணினியின் கட்டமைப்பு தெரியாது
உளவியல் உணராது
உறவுகள் புரியாது
இயற்கை புரியாது
இங்கிதம் தெரியாது
இப்படி எதுவுமே தெரியாமல் நாட்களைக் கடத்துகிறேன்.
கண்ணதாசன் சொன்னது போல்
"வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை"
("எங்கிருந்தோ வந்தாள்" திரைப்படத்தின் "நான் உன்னை அழைக்கவில்லை..." பாடல்)
பாராதியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்
"சொல்லடி சிவசக்தி! நிலச் சுமையென வாழ்குதல் புரிகுவையோ?"
வரலாறு வராது
வணிகவியல் வார்த்தை தெரியாது
வாழ்வியல் வாய்க்காது
விலங்கியல் விளங்காது
புவியியல் புரியாது
புள்ளியியல் புதிரானது
பொருளாதாரம் பொருள் அறியாது
அறிவியல் அறியாது
ஆங்கிலம் அகராதி தெரியாது
கணிதம் கடினம்
கணக்கியல் கஷ்டம்
இயற்பியல் இயல்பறியாது
வேதியியல் வேட்கை கிடையாது
உயிரியல் உணராது
தாவரவியல் தடயம் தெரியாது
மறையியல் மனதறியாது
மருத்துவம் மண்டையில் ஏறாது
தொழில்நுட்பம் துளியும் தெரியாது
தொல்பொருளியல் துப்பு தெரியாது
மொழிகள் அறியாது
மௌனம் புரியாது
இலக்கியம், இலக்கணம் இனமறியாது
சாஸ்திரங்கள் சரிவராது
சாதனைகள் செய்தது கிடையாது
விளையாட்டு விரலளவும் கிடையாது
அரசியல் அர்த்தம் தெரியாது
கணினியின் கட்டமைப்பு தெரியாது
உளவியல் உணராது
உறவுகள் புரியாது
இயற்கை புரியாது
இங்கிதம் தெரியாது
இப்படி எதுவுமே தெரியாமல் நாட்களைக் கடத்துகிறேன்.
கண்ணதாசன் சொன்னது போல்
"வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை"
("எங்கிருந்தோ வந்தாள்" திரைப்படத்தின் "நான் உன்னை அழைக்கவில்லை..." பாடல்)
பாராதியின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்
"சொல்லடி சிவசக்தி! நிலச் சுமையென வாழ்குதல் புரிகுவையோ?"
Last edited: