விடியலை நோக்கி...
நான் விடியற்ச் சேவலாய்க்
கூவிக்கொண்டு வந்திருக்கிறேன்
வித்தியாச ஓசையை எழுப்பி நிற்கிறேன்
ஒருநாள் உங்கள் வாழ்வில்
ஓய்ந்துபோன கவலைதீர
மறுநாள் வருகையை உணர்த்த வந்திருக்கிறேன்.
.
கூரையிலேறி வீரியம் பார்ப்பேன்
கூடத்துள் இறங்கிவந்து கும்மியாடிப்பேன்
வாயிலில் நின்று வட்டமடிப்பேன்.
வாயிலே தெரியாத வீட்டிலுள்ளோருக்கு
வாயிலுக்கு வந்தாலே
யாசகமென்ற எண்ணம்தான்.
கூரையே இல்லாத
குடிசை வீட்டில்
கூரைமேல் நிற்பதென்பது இயலாதுதான்
ராகமில்லை தாளமில்லை
என்றுமெனக்கு தனிப்பாடல் தான்..
ஆதார சுருதி சூரியன்தான்.
கோழியோடு கூட்ட வந்தாலும்
குழம்புக்காக விரட்டிவந்தாலும்
கூவிக்கொண்டு தானிருப்பேன்
விடியலைநோக்கி கூவிக்கொண்டுதானிருப்பேன்.
என்னை எனக்கே தெரியாமல்
இத்தனை நாட்கள் இருந்துவிட்டேன்
இன்று உன்னைக் கண்டதனால்
என்னை நான் கண்டுகொண்டேன்.
நான் நான் என்று
சுயநலமாய் வாழ்ந்து வந்தேன்
நீ நீயாய் இருப்பதுகண்டு
நான் நீயாய் மாறத் துடிக்கிறேன்
நீ அருகிலிருந்தால்
என் இரத்தம் சூடாகும்
நீ விலகிச் சென்றால்
என் இரத்தம் உறைந்துவிடும்
உன்னுடன் நான் சேர
என் இதயம் இயங்கும்
பிரிவு வந்து விட்டால்
என் இதயம் இறுகும்
நீ ஒருமுறை பார்த்தால்
ஓராயிரம் பட்டாம் பூச்சிகள் எனக்குள் சிறகடிக்கும்
நீ ஓயாமல் பார்த்தால்
உயிர் உன்னிடம் ஓடி வந்து விடும்
நீ வந்தால் தான்
என் சுவாசமும் சுவாசிக்கும்
நீ இல்லாமல் போனால்
என் மரணம் ஜனித்துவிடும்
உனக்காக கடற்கரையில் காத்துக்கொண்டிருக்கிறேன்.
சீக்கிரமாய் உன் முடிவைச் சொல்.
சாதகமென்றால் என் பயணம் சாலையை நோக்கி
இல்லையேல் கடலை நோக்கி
இந்தசிங்கம் இளைக்கவில்லை
இளைப்பாறுகிறது சற்று!.
கோணம் தெரியாத
கோழிகள் கொக்கரிக்கின்றன!
காட்டெருமைக் கூட்டம்கண்டு
கவலையட மாட்டேன் - அப்பாவி
மான்களை விரட்டிக்கொன்று
மார்தட்டிக் கொள்ளமாட்டேன்!
யானையைக்கூட நான்
அனாயாசமாய்க் கொல்வேன்
யாவருமஞ்சும் தீரமும்
யான் கொண்டுள்ளேன்
பகலிரவு காலப்
பாகுபாடு இல்லை
பார்வை எப்போதும்
பளிச்சென இருக்கும்
பறக்கும் ஜீவன்களைக்கூட
பலம்கொண்டு தாக்குமென்னை - சோம்பிப்
படுத்திருப்பவை எல்லாம்
பயமுறுத்திப் பார்கின்றன!
கனவுலகில் வாழ்ந்துகொண்டு
களிப்புருவோருக்குச் சொல்கிறேன்
கர்ஜிப்பது மட்டுமல்ல
காட்டுராஜாவும் நான்தான்!
காந்திய சிந்தனை
..............
அரசியல்வாதி 1 : உன் பெயரைச் சொல்லி ஒட்டு கேட்க முடிகிறது............
Thank you, Mrs.VR for your comments.
Yes, maami; Inverse of what I have written is also true.
My poem more often does not reflect my personal life. It is just a thought.
காந்திய சிந்தனை
மாணவன் : ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால் ஒரு நாள் விடுமுறை போச்சே..
தொழிலாளி: உன்னால் எனக்கு over time கிடைத்தது.
'குடி'மகன்: சரக்கு கிடைக்காமல் போயிற்றே..
ஏழைக் குழந்தை: இன்றாவது இனிப்பு கிடைத்ததே..
அரசியல்வாதி 1 : உன் பெயரைச் சொல்லி ஒட்டு கேட்க முடிகிறது
அரசியல்வாதி 2 : உன் படம் போட்ட நோட்டு பிடிக்கிறது.
பொதுஜனம் 1: உன் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாய் hollywood திரைப்படம் பார்த்தோம்
பொது ஜனம் 2 : உன்னை "மகாத்மா" என்கிறார்கள்; "மோகன் தாஸ் கரம் சந்த்" என்கிறார்கள்; நான் உன்னை அறிந்தது "காந்தி" என்று. உன் சமாதியிலோ "ஹே ராம்" என்று எழுதியிருக்கிறார்கள். உன் பெயர் தான் என்ன?
Hi Siva Sir!இந்தசிங்கம் இளைக்கவில்லை
இளைப்பாறுகிறது சற்று!
......................
கர்ஜிப்பது மட்டுமல்ல
காட்டுராஜாவும் நான்தான்!