• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குருவே சரணம்..

OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"

(ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போன டிரைவர்)

(மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்! )

(கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி}

சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்). இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர். கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால். அப்போதுயதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: "ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?"

'இன்னும் போகலை' என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : "ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!' 'அந்த ஊர் எங்கே இருக்கிறது?' என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.

இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் 'பெரியவா கிரஹம்' ஸ்தாபிதமானது. காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும். அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும். அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம். இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்). சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார். எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார்.

சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர். வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது. அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.

டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: "ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"

'சட்' டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஆமாம்" என்றார். ஒருவித பிரமிப்புடன்.

"வண்டியில் ஏறுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்" என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது. "இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க" என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, "வாருங்கள் … வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சாப்பாடு. பிறகுதான் எல்லாம்!" என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ? தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!

கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்"

"மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது"

- முகம் சுளித்ந் டாக்டர் ராமமூர்த்திக்கு பெரியவாளின் அறிவுரை)

கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி.

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மகான் கர்னாடகாவில் 1979-ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். நாளெல்லாம் பயணித்த பிறகு மாலை நேரத்தில் ஓர் இடத்தில் தங்குவது வழக்கம்.

அன்றும் வழக்கம் போல் காலையில் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது மகானைப் பார்க்க இரு அந்தண இளைஞர்கள் அங்கே வந்தனர்.

தரக்குறைவான ஆடைகளுடன்,குளிக்காத தோற்றத்தோடும்,படிப்பு அறிவே கொஞ்சமும் இல்லாதவர்களைப் போல் காட்சியளித்த அவர்களைப் பார்த்த டாக்டர் ராமமூர்த்தி முகம் சுளித்தார்.

மகானைப் பார்க்க வரும்போது குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு வரவேண்டாமோ?

மகானை வணங்கி எழுந்த அவர்களைக் கண்டவுடன் மகான் கேட்டார்.

"அத்யயனம் முடிந்தாகிவிட்டதா!?

அவர்களும் தலையை ஆட்டினார்கள்.

"ரிக்வேதம்....சொல்லுங்கள்!" என்று மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது போல் அவர்கள் வேதத்தைச் சொல்லத் தொடங்கினார்கள்.

கண்களை மூடியவாறு மகான் அதைக் கேட்டு கொண்டு இருந்தவர்-பிறகு அவராக கையமர்த்திய பின்தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினார்கள்.

"எங்கிருந்து வருகிறீர்கள்?" மகான் கேட்டார்.

இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தைச் சொன்னார்கள் இளைஞர்கள்.

"அங்கிருந்து எப்படி வந்தீர்கள்?"

"நடந்துதான் வந்தோம்"

"திரும்பிப் போகும்போது?"

"நடந்துதான் போகவேண்டும்"

மகானைப் பார்க்க இருபது மைல் தூரத்தை நடந்தே, கடந்து வந்து இருக்கிறார்கள். உடம்பில் அழுக்கு ஏன் சேராது..?

மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து,உண்ண உணவு கொடுத்து அனுப்பினார்.

அவர்களைப்பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்த டாக்டரின் பக்கம் திரும்பினார் மகாபெரியவா.

"மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" என்றார்.

அவர் மனதில் என்ன நினைத்தார் என்று இவருக்கு எப்படித் தெரியும்?

டாக்டர் மெய்சிலிர்த்தார்

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது எனக்கு அந்தத் தகுதி இல்லை"-அலறிய பெண்மணி

"பூஜையிலும் கலந்துக்கலாம் உன்னோட ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்"--பெரியவா

(பலமுறை வெவ்வேறு ஆசிரியர்களால் போஸ்ட் செய்யப்பட்ட அற்புத கட்டுரை)

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

.நன்றி- குமுதம் லைஃப்

(31-05-2017 தேதியிட்ட-இதழ்)

கிட்டத்தட்ட அம்பது வருஷத்துக்கு முன்னால ஒரு வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஸ்ரீமடத்துல, சுவாசினிபூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருந்தா. பரமாசார்யா முன்னிலைல நடக்கற பூஜைங்கறதால எல்லாவிஷயங்களையும் பார்த்துப் பார்த்து செஞ்சுண்டு இருந்தா. எல்லாரும் பரபரப்பா இயங்கிண்டு இருந்தஅந்த சமயத்துல ஒரே ஒரு பொம்மனாட்டி மட்டும் ரொம்பவே சோர்வா, அசிரத்தையா இருக்கிறமாதிரி நின்னுண்டு இருந்தா,

முப்பது முப்பத்தஞ்சு வயசுதான் இருக்கும் அவளுக்கு. அம்பது அறுபது வயசுக்காராளே சுறுசுறுப்பா இயங்கிண்டு இருக்கறச்சே,அவ அப்படி நின்னது பலருக்கும் ஒரு மாதிரி இருந்தது. சிலர் அவளைப் பார்த்துட்டு, " அதோ அவளைப் பாரு...பூ இல்லாம பொட்டும் வச்சுக்காம..இவளை எல்லாம்யார் இங்கே வரச் சொன்னா?" அப்படின்னு முணங்கினா. சிலர், அவளுக்குத் தர பூவும் பொட்டும் எடுத்துண்டு போனா,ஆனா,அவ அதை கவனிக்காத மாதிரி நாசூக்கா நகர்ந்துண்டா.

பூஜைக்கான ஏற்பாடுகளைவிட அவளைப் பத்தின பேச்சே கொஞ்சம் அதிகமா இருந்த சமயத்துல அங்கே வந்தார் பரமாசார்யா. கூட்டம் மொத்தமும் சட்டுனு அமைதியாச்சு. அருள்ததும்ப வந்து உட்கார்ந்த ஆசார்யா, சுத்துமுத்தும் ஒருதரம் பார்த்துட்டு, அந்தப் பொம்பளையைக் கூப்பிடச் சொன்னார்.

பவ்யமா வந்து அவர் முன்னால் நின்னா அந்தப் பொம்பளை, "சுவாசினி பூஜை நடக்கற இடத்துல நீ மட்டும் இப்படி மூளி நெத்தியோட இருக்கலாமோ? இந்தா இதை இட்டுக்கோ!" கை நிறைய குங்குமத்தை எடுத்து நீட்டினார் பரமாசார்யா.

"வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது!" என்று அலறி சொன்னவ அதுக்கான காரணத்தையும் சொல்ல ஆரம்பிச்சா

,"என்னோட ஆத்துக்காரர் இந்திய ராணுவத்துல இருந்தார். ஆறுமாசத்துக்கு முன்னால எனக்கு மிலிட்டரிலேர்ந்து ஒரு கடுதாசி வந்தது. பார்டர்ல நடந்த ஒரு சண்டைல அவர் செத்துப் போயிட்டார்னும், எதிரிகள்கிட்டே சிக்கிண்டுட்ட அவரோட உடல்கூட கிடைக்கலைன்னும் அதுல எழுதி இருந்தா!

எனக்கு லோகமே இருண்டுடுத்து.இருந்தாலும் மனசை திடப்படுத்திண்டு அவருக்கு செய்ய வேண்டிய கர்மாவையெல்லாம் செஞ்சுண்டேன். அவரோட ஆன்மா சாந்தி அடைய, நான் இன்னும் அவருக்குச் செய்யவேண்டிய கர்மா என்னன்னு உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கதான் இங்கே வந்தேன் இங்கே வந்தப்புறம்தான் இப்படி ஒரு பூஜை நடக்கிறதே எனக்குத் தெரிஞ்சுது. இந்த சமயத்துல நான் இங்கே இருக்கிறது தப்புதான் .மன்னிச்சுடுங்கோ. நான் இன்னொரு நாள் வந்து கேட்டுக்கிறேன்" கைகூப்பி நமஸ்காரம் பண்ணினா.

சட்டுன்னு சிலவிநாடி கண்ணை மூடிண்டார் பெரியவா. அதுக்கு அர்த்தம் தெரியாம, அங்கே இருந்த பலரும் அவமேல பரிதாபப்பட, மெதுவா நடந்து வெளில போகத்தயாரானா, அந்தப் பெண்மணி.

"ஒன்னை யாரு போகச் சொன்னா? நீ இங்கே தாராளமா இருக்கலாம். பூஜையிலும் கலந்துக்கலாம்! உன்னோட ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்" பெரியவா குரல் கேட்டு சட்டுன்னு திரும்பி வந்தவகிட்டே நிறைய குங்குமத்தை எடுத்துக் குடுத்தார் பரமாசார்யா

.

கை நடுங்க, உடல் சிலிர்க்க,கண்ணுல ஜலம் முட்டிண்டு வழிய, பெருமூச்சு வாங்க அதை வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டா அந்தப் பெண்மணி. மகாபெரியவாளே அப்படிச் சொன்னதுக்கு அப்புறம் அங்கே மறுவார்த்தை எழுமா? எல்லாருமா அந்தப் பெண்ணிற்கு மஞ்சள், குங்குமம், புடைவை, ரவிக்கைத் துணி,திருமாங்கல்யச் சரடு,புஷ்பம்னு எல்லாம் தந்து பூஜையிலும் கலந்துக்க வைச்சா.

அடுத்த வெள்ளிக்கிழமை மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்தா, அதே பெண்மணி.

"பெரியவா...ஒரேடியா போய்ட்டார்னு நாங்க எல்லாரும் நினைச்சுண்டு இருந்த என்னோட ஆத்துக்காரர் உங்க ஆசிர்வாதத்துல, இதோ உசுரோட வந்துட்டார். இந்தியாவோட பார்டர்ல காவலுக்கு இருந்த இவர்.எதிரிகளோட நடந்த சண்டைல குண்டடிபட்டு விழுந்துட்டாராம்.இவர் செத்துட்டதா நினைச்சு, இழுத்துண்டு போய் எங்கேயோ மலைமேல் வீசிட்டுப் போயிட்டாளாம் எதிரிகள். நம்ம நாட்டு வீரர்கள் ஒரு வாரம் தேடி அலைஞ்சுட்டு ,உடலும் கிடைக்காததால இறந்துட்டதா தகவல் சொல்லிட்டா.

ஆனா, மலைமேல கிடந்த இவரோட உடல்ல கொஞ்சநஞ்சம் உசுரு ஒட்டிண்டு இருந்திருக்கு. யாரோ மலைஜாதிக்காரர் பார்த்துட்டு ஏதோதோ வைத்தியம் பண்ணி பொழைக்க வைச்சிருக்கா .விழிச்சு எழுந்ததும்,அவாளுக்கு நன்றி சொல்லிட்டு எப்படியோ தடுமாறி தத்தளிச்சு ஆத்துக்கு வந்து சேர்ந்துட்டார்.

அன்னிக்கு எனக்குக் குங்குமத்தைக் குடுத்த நீங்கதான் மலைவாசி ரூபத்தில இருந்து இவரை காப்பாத்தியிருக்கேள்" தழுதழுப்பா சொன்னா. ஆத்துக்காரரோட சேர்ந்து ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.

மென்மையா புன்னகைச்ச ஆசார்யா, "மலைவாசின்னா யாரு? சதா மலைவாஸம் பண்ற அந்தப் பரமேஸ்வரன்தான். மலைவாசி. அவன்தான் உன் ஆத்துக்காரரை காப்பாத்தியிருக்கான்.அதனால இனிமே உங்களுக்கு எந்தக்கொறையும் வராது. க்ஷேமமா இருங்கோ!" கை நிறைய குங்குமத்தைக் குடுத்து ஆசிர்வாதம் பண்ணினார்.

சந்தோஷமா வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டு, ஆனந்தமா புறப்பட்டா அந்தத் தம்பதி.


MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை"

("தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு".-பெரியவாள்)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

"என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை. வாசற்கதவைத் திறந்தபடி போட்டுவிட்டு எங்காவது போய்விடுகிறாள். அப்புறம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. வீட்டில் வேறு யாரும் இல்லை. அவளை மடத்திற்குக் கொண்டு வந்து விட்டு வைக்கலாமா?" என்று முறையிட்டார் கோபாலன் என்ற பக்தர். பெரியவாளிடம்.

"நல்லவேளை....எங்கேயாவது காட்டிற்குக் கொண்டு போய்,விட்டு விடலாமா என்றுகேட்காமல் என்னிடம் கொண்டு வந்து விட்டுவிடலாமா? - என்று கேட்கத் தோன்றியதே உனக்கு!"--பெரியவாள்.

"தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு".-பெரியவாள்.

"தாயார்கள் பாடு இம்மாதிரி ஆயிடுத்து..." என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்று, சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.

அதற்குள் கோபாலனின் மனம் படாத பாடு பட்டுவிட்டது. பெரியவாளிடம் அபசாரப்பட்டு விட்டோமோ? அதனால், மேலும் அதிகக் கஷ்டங்கள் வருமே?-என்ற கவலையும் வந்தது.
பெரியவா திரும்பி வந்ததும் மறுபடியும் காலில் விழுந்தார் கோபாலன்.

"ரொம்ப மன்னிக்கணும் பெரியவா. என் தாயாரைப் பற்றி தவறுதலா சொல்லிட்டேன்" என்று கெஞ்சினார்.

பெரியவா சாந்தமாக அறிவுரை சொன்னார்கள்.

"வயோதிக காலத்தில் பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை.தாய் - தந்தையர் சாபம் குடுத்தால் குடும்பம் வீணாகப் போயிடும். தனியாக உன்னால் உன் அம்மாவைக் கவனித்துக் கொள்ள முடியவில்லைன்னா, ஒரு ஆசாமியை ஒத்தாசைக்கு வெச்சுக்கோ."-பெரியவாள்.

"பெரியவாளின் கட்டளையை மீறமாட்டேன்" என்று கூறி பிரசாதம் பெற்றுச் சென்றார், கோபாலன்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்? வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களிடம்-பெரியவா"

(இஸ்லாமியரான நீதிபதி கமாலுதீன் என்று பெரியவாளே விளக்கம்)

( 16-11-2018 சாய் டிவி.யில் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்தார் திரு கணேச சர்மா)

சொன்னவர்-கும்பகோணம் லட்சுமிகாந்த சர்மா

“மதங்களைக் கடந்தருளும் மாமுனிவர்!”

ஈரேழு புவன சக்ரவர்த்தியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா தான் ஈஸ்வரர் என்கிற ரகசியத்தை மிகவும் சிரமப்பட்டு மறைத்து, இப்பூவுலகில் பிரம்ம மகரிஷியாம் சுகப்பிரம்மரிஷி அவர்களின் தவமேன்மையோடு நம்மிடையே எளிய திருஉருக் கொண்டு அருளுகின்றார்.

மதங்கள் என்ற பேதம் ஏதுமின்றி அவர்தம் அருள் பரவியருள்கிறது. கும்பகோணம் லட்சுமிகாந்த சர்மா எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் இப்படியொரு அனுபவத்தைக் கூறுகிறார்.

1961 ஆம் வருட பிற்பகுதியில் கும்பகோணம் சப்ஜட்ஜ் ஆக இருந்த ஒரு இஸ்லாமியர் திரு. லட்சுமிகாந்த சர்மாவைக் கூப்பிட்டனுப்பினார். முன்பின் அறியாதவராய் இவர் சப்ஜட்ஜ் எதற்காகக் கூப்பிடுகிறார் என்ற ஆச்சர்யமும், ஆவலுமாக அவரிடம் சென்றபோது கும்பகோணத்தில் இயங்கிய சில தர்மஸ்தாபனங்கள் சீர்திருத்தும் பணிக்காக இவரை நியமனம் செய்வதாக ஜட்ஜ் சொன்னார். இவருக்குப் பொது காரியங்களில் சிரத்தையில்லாததால் அதை மறுத்துவிட்டார்.

ஜட்ஜ் இவரிடம் இதில் பங்கேற்குமாறு வாஞ்சையுடனும், கண்டிப்புடனும் கேட்டுக் கொண்டார். யோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டு வந்தவர் அப்போது இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்த ஸ்ரீ பெரியவாளிடம் சென்று இது விஷயமாக உத்தரவிட்டருளுமாறு வேண்டினார். ஸ்ரீ பெரியவா ஏற்றுக் கொள்ளும்படி சொல்லவே மனநிறைவோடு அப்பணியை ஏற்றார்.

கோவிந்தகுடி அப்பாக்குட்டி ஐயர் சாரீடிஸ் மற்றும் கல்யாணராமய்யர் சாரீடிஸ் என்ற ஸ்தாபனங்களின் அபிவிருத்திக்காக முழுமூச்சாக உழைத்த இவர், வேதபாடசாலை சிறப்பாக இயங்கவும் முயற்சியினை மேற்கொண்டார்.

இப்படி இருந்த சமயம் ஒரு முறை ஸ்ரீ பெரியவாளை இவர் தரிசிக்கச் சென்ற போது “நீ வேதபாஷ்ய காலேஜ் ஆரம்பிக்கிறாயா? உன்னால் முடியுமா?” என்று கேட்க இவர் “பெரியவா ஆக்ஞாபித்தால் எப்பாடுபட்டாவது ஆரம்பித்துவிடுகிறேன்” என்றார்.

ஸ்ரீ பெரியவா முக்காலமும் உணர்ந்தவர் என்பது பின் நீதிபதி இவரைப் பார்த்தபோது “உங்கள் வேதத்தின் பொருளை வேதபாடசாலையில் பயில்பவர்கள் தெரிந்து உணர்ந்து கொண்டு படிக்கும்படி செய்ய என்ன வழி உள்ளது? எங்கள் குரானை அர்த்தமுடன் பயில்விக்க பல இடங்களில் கல்லூரிகள் உள்ளன. மாயவரம் சமீபம் நிடூர் கிராமத்தில் ஒரு அரபிக் கல்லூரி உள்ளது” என்று சொன்னதோடு விட்டு விடாமல் அந்தக் கல்லூரிக்கு லட்சுமிகாந்த சர்மாவையும் விடாமல் அந்த கல்லூரிக்கு லட்சுமிகாந்த சர்மாவையும் அழைத்துப்போய் காட்டினார்.

“நீங்களும் உங்கள் வேதகங்களை இதுபோலவே அர்த்தத்தோடு சொல்லிக் கொடுத்து அபிவிருத்தி செய்யலாமே அதற்காக கல்லூரிகளை ஏற்படுத்த முயற்சிக்கலாமே” என்றார்.

ஸ்ரீ பெரியவா தன்னிடம் கேட்டுக்கொண்டது போலவே ஜட்ஜ் அவர்களும் கேட்டதில் இவருக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அதன்பின் திரும்பவும் ஸ்ரீபெரியவாளிடம் சென்று நீதிபதி கூறியதை சொல்லி “அப்படி வேதபாஷ்ய கல்லூரி ஆரம்பிப்பதென்றால் அதற்கு ஸ்ரீ பெரியவா வந்து துவக்கி வைக்க வேண்டும்” என்றார்.

ஸ்ரீ பெரியவாளும் “வருகிறேன்” என்றார். மேலும் “நான் சொல்வதை சனாதனிகளோ, ஹிந்துக்களோ கேட்க மாட்டார்கள். ஆனால் நான் சொல்லாமலேயே உங்கள் ஜட்ஜ் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்” என்று ஹாஸ்யமாகக் கூறினார்.

பின் ஒரு முறை ஜட்ஜ் இவரிடம் “நான் பெரியவாளைத் தரிசிக்க வரலாமா?” என்று கேட்டார். இவரும் ஸ்ரீபெரியவாளிடம் அனுமதி பெற்றுத் தரிசிக்க அழைத்துச் சென்றார். அந்த பிற்பகல் நேரத்தில் பிரளயம் போல் மழை கொட்டிக் கொண்டிருந்தது. இவர் மட்டும் முதலில் போய் ஸ்ரீ பெரியவாளிடம் ஜட்ஜ் வந்திருப்பதைக் கூற சென்றபோது, ஸ்ரீ பெரியவாளே எழுந்து வந்து ஜட்ஜ் எங்கிருக்கிறார் என்று சைகையில் கேட்டுவிட்டு “அவரை அழைத்துவந்து பக்கத்து வீட்டில் இருக்கச் செய்” என்றார்.

இப்படிச் சொல்லி ஜட்ஜை இவர் கூப்பிடுவதற்குள் ஸ்ரீ பெரியவாளே அந்தக் கொட்டும் மழையில் நனைந்துக்கொண்டு சேறும், சகதியுமாக இருந்த இடத்தில் வேகமாக நடந்து தானாகவே வந்துவிட்டார்.

நீதிபதி ஸ்ரீபெரியவாள் முன் கையைக் கூப்பிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். ஸ்ரீ பெரியவா அவரை ஏதோ வெகு காலமாக தெரிந்தவர்போல அவர் குடும்பத்தைப் பற்றியும், சுற்றார், உறவுகள் பற்றியும் அவர்கள் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டபடி விசாரித்து உரையாடியபோது சர்வேஸ்வரரான ஸ்ரீ பெரியவாளுக்கு மட்டுமே இப்பேற்பட்ட அதிசய செயல் சாத்யம் என்பதாக இவருக்குத் தோன்றியது.

தான் தரிசித்துக் கொண்டிருப்பது தன் அல்லாவைப் போல் சர்வ வல்லமை படைத்த ஒரு கடவுள் என்பதை அந்த அயல் மதத்தினரான நீதிபதி உணர்ந்ததால் அவர் கண்களில் நீர் மண்டியது.

பின் நீதிபதிக்கு பழங்களையும், ஒரு பட்டு மேலாடையையும் பிரசாதமாகக் கொடுத்து “நல்ல காரியங்களை செஞ்சிண்டு க்ஷேமமாய் இரு” என்று ஆசிர்வதித்தார் ஸ்ரீ பெரியவா.

பிறகு ஊர் திரும்பியதும் நீதிபதியின் முயற்சியால் கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் வேதபாஷ்ய கல்லூரி துவங்கி தேதி நிர்ணயிக்கப்பட்டுப் பத்திரிக்கையும் போட்டு எடுத்துக்கொண்டு ஸ்ரீ பெரியவாளிடம் மறுபடியும் தரிசனம் செய்ய இவர் சென்றார்.

1963 ஆம் வருடம் டிசம்பர் மாதம் டவுன் ஹைஸ்கூலில் விழா ஆரம்பித்தது. 5000 பேர் கூடியிருந்தனர். ஸ்ரீ பெரியவா வருகைத் தருவதாக இருந்தால் கூட்டத்திற்குக் கேட்பானேன்?

ஸ்ரீ பெரியவா வந்து அமர்ந்து விழாவைத் துவங்கும்படி சைகை காண்பித்ததும், இவர் சமஸ்கிருதத்திதில் வரவேற்புரை வாசித்து ஸ்ரீ பெரியவாளின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்தார்.

ஸ்ரீ பெரியவா இவரைக் கூப்பிட்டு அந்த சப்ஜட்ஜ் எந்த ஜாதியை சேர்ந்தவர் என்பதை கூட்டத்தினருக்குத் தெரிவித்து அறிமுகப்படுத்திச் சொன்னார். இவரும் சப்ஜட்ஜைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளை கூறியவுடன் “அதெல்லாம் வேண்டாம் அவர் ஜாதி என்ன என்று கூறு” என்று ஆக்ஞையிட்டார். அதற்கு இவர் தயங்கவே, ஸ்ரீ பெரியவாளே கூட்டத்தினருக்கு சப்ஜட்ஜை அறிமுகம் செய்து வைத்து விழாவைத் துவக்கிவைத்தார்.

அப்போது சுமார் ஐம்பது வருடத்திற்கு முன்பு சேலம் பகுதியில் ஸ்ரீ பெரியவா யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, ஸ்ரீ பெரியவாளுக்கு ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அவரே திருவாய் மலர்ந்தருளினார்.

ஸ்ரீ பெரியவா யாத்திரைப் புரியும் போது பரிவாரங்கள் சாலை வழியாகப் போகும் போது குதிரையின் மேல் நகரா அடித்துப் போவது வழக்கமாம். இதுபோல், ஒரு மசூதி வழியாக போகும்போது மசூதி வாசலில் இப்படி நகரா அடிக்கக்கூடாதென்று குதிரையின் முனைக்கயிற்றைப் பிடித்துத் தடுத்தார்களாம். அதில் சிறு சலசலப்பு ஏற்பட்டு சிலர் மத்யஸ்தம் செய்தார்கள்.

மறுதினம் மசூதிக் குழுவை சேர்ந்த ஒருவர் மடத்து அதிகாரியிடம் ஸ்ரீ பெரியவாளைத் தனியாக சந்திக்க வேண்டுமென்று கேட்க மடத்து அதிகாரி முதல் நாள் சம்பவத்தை மனதில் கொண்டு அது சாத்தியமில்லை என்றும், எல்லோரும் இருக்கும்போது தான் சந்திக்கலாம் என்றும் கூறிவிட்டு இவ்விஷயத்தை ஸ்ரீ பெரியவாளிடம் தெரிவித்தார்களாம்.

ஆனால் ஸ்ரீ பெரியவா மறுதினம் அவரை வரச் சொல்லுமாறும், எதிர்ப்புறத்தில் ஒரு வீட்டில் அவரை சந்திப்பதாகவும், உடன் ஒருவரும் இருக்கக்கூடாதென்றும் கூறிவிட்டாராம்.

வேறு வழியின்றி ஸ்ரீமடம் அதிகாரிகளும் அதன்படியே ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதாகிவிட்டதாம்.

மறுதினம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் அவரை சந்திக்கும்போது ஸ்ரீ பெரியவா வாசல் கதவைக்கூட உள்புறம் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டுவிட்டாராம்.

மடத்து அதிகாரிகளும் கலக்கத்துடன் வெளியே காத்திருந்தார்களாம். வந்த இஸ்லாமிய அன்பர் தன் பையிலிருந்த நீண்ட ஒரு காகித உறையை எடுத்தாராம். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ பெரியவா ‘என்ன?’ என்று கேட்க, அதில் ஸ்ரீ பெரியவாளைப் பற்றி எழுதியிருந்த சமஸ்கிருத ஸ்லோகங்கள் இருந்தனவாம்

சக்கரபந்தம், நாகபந்தம், கருடபந்தம் போன்ற பல சாகித்ய மரபுகளுடன் மிகவும் அழகாக எழுதப்பட்டிருந்த ஸ்லோகங்களை அந்த இஸ்லாமியர் ஸ்ரீ பெரியவாளிடம் வாசித்துக் காண்பித்தாராம்.

இதைக் கேட்ட பெரியவா “இதை யார் எழுதியது? யார் சொல்லிக் கொடுத்தார்கள்? என்ன தொழில் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, அவர் ஸ்லோகங்களைத் தானே எழுதியதாகவும், தன் தந்தை முதலான தன் பரம்பரையினர் சமஸ்கிருதத்தில் விசேஷப் பயிற்சி பெற்றவர்கள் என்றும் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாகவும் கூறினார். அவர்கள் பல தலைமுறையாக கசாப்புக்கடை வைத்திருப்பதாகவும் கூறினாராம்

.

இந்தக் கதையை ஸ்ரீ பெரியவா ஹாஸ்யமாகவும் , சஸ்பென்ஸ் த்ரில்லிங்காகவும் எல்லோரும் பிரமிக்கும்படிக் கூறிவிட்டு முடிவில் நல்லொழுக்கம் பண்புள்ளவர்களுக்கு ஜாதி என்பது குறியீடாக அமைவதில்லை. எந்த ஜாதியிலும் இப்படிப்பட்ட பெருந்தகையோர் இருக்கலாம் என குறிப்பிட்டுவிட்டு அந்த சப்ஜட்ஜின் முயற்சியைப் பாராட்டி உரையாற்றினாராம்.

இது நடந்து பல வருடங்களுக்குப் பின் ஸ்ரீ பெரியவா ஆந்திர பிரதேச யாத்திரையின் போது கும்பகோணம் கல்லூரியில் வேதபாஷ்யம் படிக்கும் மாணவர்களும் அங்கு போயிருந்தார்கள். அவர்களிடம் ஸ்ரீ பெரியவா “உங்க வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்?” என்று கேட்டுவிட்டுப் பின் ஸ்ரீ பெரியவாளே அந்த சப்ஜட்ஜின் பெயரைக் கூறிவிட்டு “அவர் க்ஷேமமாக இருக்க வேண்டும்” என்று சங்கல்பம் செய்துக் கொண்டே ஸ்நானம் செய்தாராம்.

இப்படி வேத பிரசாரத்துக்கும் பெரும்பணியாற்றிய அந்த இஸ்லாமியரான நீதிபதி கமாலுதீன் அவர்களை ஒருமுறை ஸ்ரீ பெரியவா ‘அவர் ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவர்’ என்று சிலாகித்து திரு.லட்சுமிகாந்த சர்மாவிடம் பேசியதாக இவர் சம்பவத்தை முடிக்கிறார்.

இதுபோல் ஜாதி மத பேதங்களை மீறி உலகோருக்கெல்லாம் பெரும் தெய்வமாய் விளங்கும் ஸ்ரீ பெரியவாளெனும் ஈஸ்வரரை நாம் சரணடைந்து சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று, சர்வ மங்களங்களையும் அடைவோமாக

https://www.facebook.com/groups/260354147440184/permalink/1712071728935078/


"அழுக்கு உடையுடன் வேத பண்டிதர்கள்"

"மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது"

- முகம் சுளித்ந் டாக்டர் ராமமூர்த்திக்கு பெரியவாளின் அறிவுரை)

கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி.

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

மகான் கர்னாடகாவில் 1979-ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். நாளெல்லாம் பயணித்த பிறகு மாலை நேரத்தில் ஓர் இடத்தில் தங்குவது வழக்கம்.

அன்றும் வழக்கம் போல் காலையில் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது மகானைப் பார்க்க இரு அந்தண இளைஞர்கள் அங்கே வந்தனர்.

தரக்குறைவான ஆடைகளுடன்,குளிக்காத தோற்றத்தோடும்,படிப்பு அறிவே கொஞ்சமும் இல்லாதவர்களைப் போல் காட்சியளித்த அவர்களைப் பார்த்த டாக்டர் ராமமூர்த்தி முகம் சுளித்தார்.

மகானைப் பார்க்க வரும்போது குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு வரவேண்டாமோ?

மகானை வணங்கி எழுந்த அவர்களைக் கண்டவுடன் மகான் கேட்டார்.

"அத்யயனம் முடிந்தாகிவிட்டதா!?

அவர்களும் தலையை ஆட்டினார்கள்.

"ரிக்வேதம்....சொல்லுங்கள்!" என்று மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது போல் அவர்கள் வேதத்தைச் சொல்லத் தொடங்கினார்கள்.

கண்களை மூடியவாறு மகான் அதைக் கேட்டு கொண்டு இருந்தவர்-பிறகு அவராக கையமர்த்திய பின்தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினார்கள்.

"எங்கிருந்து வருகிறீர்கள்?" மகான் கேட்டார்.

இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தைச் சொன்னார்கள் இளைஞர்கள்.

"அங்கிருந்து எப்படி வந்தீர்கள்?"

"நடந்துதான் வந்தோம்"

"திரும்பிப் போகும்போது?"

"நடந்துதான் போகவேண்டும்"

மகானைப் பார்க்க இருபது மைல் தூரத்தை நடந்தே, கடந்து வந்து இருக்கிறார்கள். உடம்பில் அழுக்கு ஏன் சேராது..?

மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளைக் கொடுத்து,உண்ண உணவு கொடுத்து அனுப்பினார்.

அவர்களைப்பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்த டாக்டரின் பக்கம் திரும்பினார் மகாபெரியவா.

"மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது" என்றார்.

அவர் மனதில் என்ன நினைத்தார் என்று இவருக்கு எப்படித் தெரியும்?

டாக்டர் மெய்சிலிர்த்தார்

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"


"சாமி கொடுத்த பணம்!"-திருப்பித் தந்த ஏழைப் பெண்.
("திருப்பித் தரவேண்டாம். நீயே வச்சுக்கோ"-பெரியவா)
(அவள் சென்ற பின் பெரியவா, சிஷ்யர்களிடம் சொன்னார்;"பணத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டிருந்தால் நானும்ஒரு வட்டிக்கடைக்காரன் ஆகியிருப்பேன்!")
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-7

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

கணவனை இழந்த ஒரு குடியானவப் பெண்மணி, பெரியவாள் தரிசனத்துக்கு வந்தாள்.

"ரொம்பக் கஷ்டப்படறேன், சாமி. இரண்டு புள்ள குட்டிங்க இருக்கு. அவங்க போயி இரண்டு வருஷமாச்சு.ஆபீசிலேர்ந்து என்னவோ பணம் வரும்னு சொன்னாங்க. இன்னும் வரலை. பெரிய அதிகாரிங்ககிட்டேவெல்லாம் நேர்ல போய்ச் சொன்னேன். சாமிதான் வழி செய்யணும்" என்று வேண்டிக் கொண்டாள்.

பெரியவாள் அவளுக்கும் குழந்தைகளுக்கும் சாப்பாடு போடச் சொன்னார்கள். அவள் விடை பெற்றுக் கொள்ள வந்தபோது பஸ் டிக்கெட்டுக்காக இருபத்தைந்து ரூபாய் கொடுக்கச் சொன்னார்கள்.

அவள் வீடு திரும்பியதும் ஒரு பதிவுத் தபால் காத்துக் கொண்டிருந்தது. அவள் புருஷன் வேலை பார்த்த கம்பெனியிலிருந்துதான். உள்ளே செக் ஒன்றரை லட்சத்துக்கு. பிராவிடென்ட் தொகை, கிராஜுவிட்டி எல்லாமாக.

மறுநாளே மறுபடியும் தரிசனத்துக்கு வந்தாள் அந்தப் பெண்மணி.மகிழ்ச்சியுடன் பணம் கிடைத்த விவரத்தைப் பெரியவாளிடம் தெரிவித்து விட்டு ரூபாய் இருபத்தைந்தை எதிரே வைத்தாள்.

"சாமி கொடுத்த பணம்!"

"திருப்பித் தரவேண்டாம். நீயே வச்சுக்கோ. இந்த இருவத்தஞ்சு ரூபா வந்தப்புறம்தானே லட்சம் வந்தது. இதுவும் உங்கிட்டயே இருக்கட்டும்..."

உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு போனாள் அந்தப் பெண்மணி.அவள் சென்ற பின் பெரியவா, சிஷ்யர்களிடம் சொன்னார்;

"பணத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டிருந்தால் நானும் ஒரு வட்டிக்கடைக்காரன் ஆகியிருப்பேன்!"

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி-குமுதம் பக்தி(ஓரு பகுதி)

சோழவரம் பக்கத்துல ஒரு ஊர்ல பள்ளிக்கூட வாத்யார் ஒருத்தர் இருந்தார்.மகாபெரியவாளோட மானசீக பக்தர் அவர். அவரோட ஒய்ஃபுக்கும் பெரியவா தான் எல்லாமும்.மகாபெரியவாளோட பேரைச் சொல்லாம அவருக்கு ஒரு நாளும் விடியாது. முடியாது அவாளுக்கு, மனசுக்குள்ளே ஒரு ஏக்கம் இருந்தது.'மகாபெரியவாளை நேர்ல தரிசிக்கப் போகணும்'கறதுதான் அது. இந்தக் காலம் மாதிரி போக்குவரத்து வசதியெல்லாம் அப்போ கிடையாது.. அதனால பள்ளிக்கூடத்துக்கு லீவெல்லாம் எடுத்துண்டு போயிட்டு வரமுடியாத சூழல்.

இப்படியே நாள்,வாரம்,மாசம்,வருஷம்னு காலம் ஓடிண்டு இருந்த நிலையில, ஒரு நாள் அந்த பக்தரோட ஆத்துக்காரிக்கு ஒரு கனவு வந்தது. அதுல சாட்சாத் மகாபெரியவா வந்தார்."என்னைப் பார்க்கணும்னு சதா ஏங்கிண்டு இருக்காதே. பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப் பாடிண்டு இரு. உங்க அகத்துல பூஜை பண்ண நானே வருவேன்!" . மகான் சொன்னதைக் கேட்டதும் அப்படியே சிலிர்ப்போட எழுந்தா அந்தப் பெண்மணி.பக்கத்துல இருந்த அகத்துக்காரை எழுப்பி விஷயத்தைச் சொன்னா. அவருக்கும் தேகம் சிலிர்த்தது. கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்யம் பெருகி வழிஞ்சுது.

விடியகாலம்பற நேரம் கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவா. அதனால நம்ப அகத்துக்கு கண்டிப்பா மகாபெரியவா வருவார்னு நம்பிக்கையோட, மகானோட வாக்குப்படி பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப் பண்ணிண்டே இருந்தா. நாட்கள் தேய்ஞ்சு நகர்ந்தது. ஆனா, அவாளோட நம்பிக்கை மட்டும் வாடாமத் துளிர்த்தது.,

ஒரு நாள் மத்தியான நேரம். அந்த பக்தரோட அகத்து வாசலில் ரெண்டு பேர் வந்து நின்னா அந்தப் பகுதிக்குப் புதுசா இருந்த அவாளைப் மகா ஆசாரமானவாங்கறது தெரிஞ்சுது

யார் அவான்னு பலரும் யோசிச்சுண்டு இருக்கறச்சே, சுத்துமுத்தும் திரும்பித் திரும்பிப் பார்த்த அவா, சட்டுன்னு..அந்த பக்தரோட அகத்துக்குள்ளே நுழைஞ்சா. அந்த பக்தரோட பேரைச் சொல்லி, அவரைப் பார்க்கத்தான் வந்திருக்கறதாச் சொன்னார்

"நாங்க ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரோம். மகாபெரியவா திருப்பதியில இருந்து மெட்ராஸுக்கு யாத்திரை பண்ணிண்டு இருக்கார். வழியில பல இடங்கள்ள தங்கி பூஜை பண்ணிட்டு யாத்திரையைத் தொடர்ந்துண்டு இருக்கார். வழியில பல இடங்கள்ல தங்கி பூஜை பண்ணிட்டு யாத்திரையைத் தொடர்ந்துண்டு இருக்கார். அந்த வகையில மகாபெரியவா நாளை மறுநாள், இந்தப் பக்கமா வர இருக்கிறார்.அவர் ரெண்டு நாள் இங்கே தங்கறதா தீர்மானம். உங்க அகத்துல அவருக்கு தங்கிக்க வசதி பண்ணலாம்னு கேட்கத்தான்......." வந்தவா சொல்லி முடிக்கறதுக்குள்ளேயே, அப்படியே சந்தோஷத்துல சகலத்தையும் மறந்துட்டா அந்த பக்தர் தம்பதி

"பெரியவாளோட திருவடி எங்க அகத்துல படறதுன்னா, அதுக்கு நாங்க எத்தனையோ பிறவிகள்ல புண்ணியம் பண்ணியிருக்கணும். இதோ இந்த க்ஷணமே எங்க அகத்தை உங்ககிட்டே ஒப்படைச்சுடறோம்!"னு தழுதழுப்பா சொன்னா.

மகாபெரியவா அங்கே வரப்போறதும், ரெண்டு நாள் தங்கப்போறதும் ஊர்க்காரா எல்லாருக்கும் தெரிஞ்சுது. ஆளாளுக்குப் போட்டி போட்டுண்டு, தெருவை,ஊரை சுத்தப்படுத்தி,தோரணமெல்லாம் கட்டி,வாசல் தெளிச்சு கோலம்போட்டு... அமர்க்களமா ஏற்பாடுகளைப் பண்ணினா. கனிவர்க்கம்,காய்கறிகள்,தானியங்கள் இப்படி அவசியமான திரவியங்களைப் பலர் கொடுத்தா. பூ, இலைன்னு பூஜைக்குத் தேவையானதுக்கெல்லாம் சிலர் ஏற்பாடு செஞ்சா.

மகாபெரியவா அந்த ஊருக்கு வந்தப்போ ஏராளமானபேர் திரண்டு வந்து பூர்ணகும்ப மரியாதை குடுத்து வரவேற்றா.

எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிண்டே அந்த பக்தரோட அகத்துக்குள்ளே எழுந்தருளின மகாபெரியவா, அவாளைப் பார்த்து, "என்ன சொப்பனம் மாதிரி இருக்கா?" அப்படின்னு கேட்டதும் அப்படியே தடால்னு அவர் திருவடியில விழுந்து நமஸ்காரம் பண்ணிண்டா ரெண்டுபேரும். . .

பகவானோட நாமசங்கீர்த்தனத்தைச் சொன்னா கலியுகத்துல கைமேல நற்பலன் கிடைக்கும்கறதுக்கு, அந்த பகவானோட அம்சமா விளங்கின மகாபெரியவா நடத்தின திருவிளையாடல்னே இதைச் சொல்லாம் இல்லையா!

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி-குமுதம் பக்தி(ஓரு பகுதி)

சோழவரம் பக்கத்துல ஒரு ஊர்ல பள்ளிக்கூட வாத்யார் ஒருத்தர் இருந்தார்.மகாபெரியவாளோட மானசீக பக்தர் அவர். அவரோட ஒய்ஃபுக்கும் பெரியவா தான் எல்லாமும்.மகாபெரியவாளோட பேரைச் சொல்லாம அவருக்கு ஒரு நாளும் விடியாது. முடியாது அவாளுக்கு, மனசுக்குள்ளே ஒரு ஏக்கம் இருந்தது.'மகாபெரியவாளை நேர்ல தரிசிக்கப் போகணும்'கறதுதான் அது. இந்தக் காலம் மாதிரி போக்குவரத்து வசதியெல்லாம் அப்போ கிடையாது.. அதனால பள்ளிக்கூடத்துக்கு லீவெல்லாம் எடுத்துண்டு போயிட்டு வரமுடியாத சூழல்.

இப்படியே நாள்,வாரம்,மாசம்,வருஷம்னு காலம் ஓடிண்டு இருந்த நிலையில, ஒரு நாள் அந்த பக்தரோட ஆத்துக்காரிக்கு ஒரு கனவு வந்தது. அதுல சாட்சாத் மகாபெரியவா வந்தார்."என்னைப் பார்க்கணும்னு சதா ஏங்கிண்டு இருக்காதே. பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப் பாடிண்டு இரு. உங்க அகத்துல பூஜை பண்ண நானே வருவேன்!" . மகான் சொன்னதைக் கேட்டதும் அப்படியே சிலிர்ப்போட எழுந்தா அந்தப் பெண்மணி.பக்கத்துல இருந்த அகத்துக்காரை எழுப்பி விஷயத்தைச் சொன்னா. அவருக்கும் தேகம் சிலிர்த்தது. கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்யம் பெருகி வழிஞ்சுது.

விடியகாலம்பற நேரம் கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவா. அதனால நம்ப அகத்துக்கு கண்டிப்பா மகாபெரியவா வருவார்னு நம்பிக்கையோட, மகானோட வாக்குப்படி பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப் பண்ணிண்டே இருந்தா. நாட்கள் தேய்ஞ்சு நகர்ந்தது. ஆனா, அவாளோட நம்பிக்கை மட்டும் வாடாமத் துளிர்த்தது.,

ஒரு நாள் மத்தியான நேரம். அந்த பக்தரோட அகத்து வாசலில் ரெண்டு பேர் வந்து நின்னா அந்தப் பகுதிக்குப் புதுசா இருந்த அவாளைப் மகா ஆசாரமானவாங்கறது தெரிஞ்சுது

யார் அவான்னு பலரும் யோசிச்சுண்டு இருக்கறச்சே, சுத்துமுத்தும் திரும்பித் திரும்பிப் பார்த்த அவா, சட்டுன்னு..அந்த பக்தரோட அகத்துக்குள்ளே நுழைஞ்சா. அந்த பக்தரோட பேரைச் சொல்லி, அவரைப் பார்க்கத்தான் வந்திருக்கறதாச் சொன்னார்

"நாங்க ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரோம். மகாபெரியவா திருப்பதியில இருந்து மெட்ராஸுக்கு யாத்திரை பண்ணிண்டு இருக்கார். வழியில பல இடங்கள்ள தங்கி பூஜை பண்ணிட்டு யாத்திரையைத் தொடர்ந்துண்டு இருக்கார். வழியில பல இடங்கள்ல தங்கி பூஜை பண்ணிட்டு யாத்திரையைத் தொடர்ந்துண்டு இருக்கார். அந்த வகையில மகாபெரியவா நாளை மறுநாள், இந்தப் பக்கமா வர இருக்கிறார்.அவர் ரெண்டு நாள் இங்கே தங்கறதா தீர்மானம். உங்க அகத்துல அவருக்கு தங்கிக்க வசதி பண்ணலாம்னு கேட்கத்தான்......." வந்தவா சொல்லி முடிக்கறதுக்குள்ளேயே, அப்படியே சந்தோஷத்துல சகலத்தையும் மறந்துட்டா அந்த பக்தர் தம்பதி

"பெரியவாளோட திருவடி எங்க அகத்துல படறதுன்னா, அதுக்கு நாங்க எத்தனையோ பிறவிகள்ல புண்ணியம் பண்ணியிருக்கணும். இதோ இந்த க்ஷணமே எங்க அகத்தை உங்ககிட்டே ஒப்படைச்சுடறோம்!"னு தழுதழுப்பா சொன்னா.

மகாபெரியவா அங்கே வரப்போறதும், ரெண்டு நாள் தங்கப்போறதும் ஊர்க்காரா எல்லாருக்கும் தெரிஞ்சுது. ஆளாளுக்குப் போட்டி போட்டுண்டு, தெருவை,ஊரை சுத்தப்படுத்தி,தோரணமெல்லாம் கட்டி,வாசல் தெளிச்சு கோலம்போட்டு... அமர்க்களமா ஏற்பாடுகளைப் பண்ணினா. கனிவர்க்கம்,காய்கறிகள்,தானியங்கள் இப்படி அவசியமான திரவியங்களைப் பலர் கொடுத்தா. பூ, இலைன்னு பூஜைக்குத் தேவையானதுக்கெல்லாம் சிலர் ஏற்பாடு செஞ்சா.

மகாபெரியவா அந்த ஊருக்கு வந்தப்போ ஏராளமானபேர் திரண்டு வந்து பூர்ணகும்ப மரியாதை குடுத்து வரவேற்றா.

எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிண்டே அந்த பக்தரோட அகத்துக்குள்ளே எழுந்தருளின மகாபெரியவா, அவாளைப் பார்த்து, "என்ன சொப்பனம் மாதிரி இருக்கா?" அப்படின்னு கேட்டதும் அப்படியே தடால்னு அவர் திருவடியில விழுந்து நமஸ்காரம் பண்ணிண்டா ரெண்டுபேரும். . .

பகவானோட நாமசங்கீர்த்தனத்தைச் சொன்னா கலியுகத்துல கைமேல நற்பலன் கிடைக்கும்கறதுக்கு, அந்த பகவானோட அம்சமா விளங்கின மகாபெரியவா நடத்தின திருவிளையாடல்னே இதைச் சொல்லாம் இல்லையா!


MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"உண்மையிலேயே தெய்வம்னு ஒண்ணு இருக்கா? அப்படி இருந்தா எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?"

(தெய்வத்தைக் குறை சொன்ன பக்தருக்கு மகாபெரியவா கருணையுடன் சொன்ன உபதேசம்)

நன்றி-குமுதம் லைஃப்-(இந்த வாரம்)
தொகுப்பு-என். அக்‌ஷிதா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

உண்மையிலேயே தெய்வம்னு ஒண்ணு இருக்கா? அப்படி இருந்தா எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?

இப்படி தெய்வத்தைக் குறை சொன்ன பக்தர் ஒருவருக்கு காஞ்சி மகாபெரியவா கருணையுடன் சொன்ன உபதேசம்தான் இந்த சம்பவம்.

ஒரு சமயம் மகாபெரியவாளை ஸ்ரீமடத்திற்கு வந்திருந்த கூட்டத்தில் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரும் இருந்தார்.அந்த நபர் முதல்முறையாக அப்போதுதான் தரிசிக்க வந்திருந்தார்.

வரிசையில் நின்ற அவர் தன் முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். எல்லாம் ஏதோ உடனே என்று செய்வது போல்தான் இருந்தது.

நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்துக்காக கைநீட்டியபடி நின்ற அவரைப் பார்த்தார் மகாபெரியவா. சில விநாடிகளுக்குப் பிறகு அவரைப் பார்த்து, "என்ன சுவாமியையெல்லாம் திட்டறதுல இருந்து,ஒரு வழியா ஓய்ஞ்சிட்ட போலருக்கு.திட்டியும் பிரயோஜனம் இல்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் செய்துண்டு இருந்த பூஜையைக் கூட நிறுத்திட்டே இல்லையா?" என்று கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சி.'நாம் எதுவுமே சொல்லவில்லை. இவரை தரிசிப்பதே இதுதான் முதல் முறை.ஆனால், நாம் இதுநாள்வரை செய்த எல்லாவற்றையும் ,பக்கத்தில் இருந்து பார்த்தவர் மாதிரி பரமாச்சார்யா சொல்கிறாரே!' என்று ஆச்சரியம்

சில விநாடிகள் அப்படியே திகைத்து நின்றவர், உடைந்துபோன குரலில் மெதுவாக பேசத் தொடங்கினார்.

"பெரியவா! சமீபகாலமா குடும்பத்தை ஒவ்வொருநாளும் நடத்துவதே ரொம்ப கஷ்டமான ஜீவனமாயிடுச்சு.பொறுப்பாக உழைக்கத் தயாராக இருக்கிறேன். ஆனாலும் சரியாக வேலையும் கிடைக்கிறதில்லை .தூங்கி எழுந்ததில் இருந்து தூங்கப் போகிற வரைக்கும், பலதடவை மனசாலும், செயலாலும் சுவாமி கும்பிடாத நாளே கிடையாது. ஆனா ஒரு பிரயோஜனமும் இல்லை.கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நீ என்ன கல்லா?
மரமா?மட்டையா? என்றெல்லாம் திட்டியும் பார்த்துவிட்டேன்..மத்தவங்க ஒரு தரம் கேட்டாலே ஓடோடி வந்து அருள்புரியும் சாமிக்கு, எங்க சத்தம் மட்டும் பகவான் காதிலே கேட்கவில்லை போலிருக்கிறது. அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்!" கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுத்தார் அவர்.

பரிவோடு அவரைப் பார்த்தார் மகான்

"ஓரு விஷயம் கேட்கிறேன்.கரெக்டாக யோசிச்சு பதில் சொல்லு ஒரு ஆஸ்பத்திரிக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவார்கள்.சிலர் தலைவலி என்று வருவர்.சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். சிலருக்கு வயிற்றுவலி இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் அங்கே இருக்கும்போது, நச்சுப்பாம்பு கடித்துவிட்டது என்று ஒருவரைத் தூக்கிண்டு வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் டாக்டர்கள் என்ன செய்வார்கள்? யாருக்கு உடனடியாக சிகிச்சை பண்ணாவிட்டால் அப்புறம் அது பிரயோஜனப்படாதோ அவருக்கு சிகிச்சைதரப் போய்விடுவார்கள்.

அதுக்காக சாதரணக் காய்ச்சல்,தலைவலி என்று வந்தவர்களைஅலட்சியப்படுத்துவதாக அர்த்தம் இல்லை. அவர்களுக்கு கொஞ்சம் தாமதமாக சிகிச்சை தந்துக்கலாம். சாதாரண நோயாளிக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே யாருக்கு எப்போ உதவ வேண்டும்கிறது தெரிகிறது என்றால், சாட்சாத் பகவானுக்கு,தன் பக்தர்கள்ல, யாரோட வேண்டுதலுக்கு உடனே
பலன் தரவேண்டும்.யாருடைய பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று தெரியாதா? உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க தாமதமாகிறது என்றால் உன்னைவிட அதிகமாக அவஸ்தைப்படுகிற யாருக்கோ உதவுவதற்காக சுவாமி ஓடியிருக்கார் என்று அர்த்தம்.அந்த வேலை முடிந்ததும் அவசியம் உனக்கும் அனுக்கிரகம் பண்ணுவார்.அதற்குள் தெய்வத்தை நிந்திக்கிறதும்,பூஜை புனஸ்காரங்களை நிறுத்திவிட்டு நாத்திகம் பேசுவதும் தப்பில்லையா?"

பெரியவா சொல்லச் சொல்ல அந்த நபரின் மனதில் தெய்வத்தைப்பற்றி இருந்த தவறான எண்ணங்கள் கரைந்து ஓட ..அதற்கு அடையாளமாக அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக வடிந்து ஓடியது கண்ணீர்.

பகவானின் கருணையைப் பற்றி பரமாசார்யா சொன்ன பாடம் அந்த பக்தருக்கு மட்டுமல்ல. நம் எல்லோருக்குமே தான். என்பதை உணர்ந்து கொண்ட பக்தர்கள் உரத்த குரலில் கோஷம் எழுப்பினார்கள்.ஜயஜய சங்கர....ஹரஹர சங்கர..!

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி"

(டாக்டர்களால் முடியாதது, காஞ்சி மகானால் முடிந்தது!)

கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி

புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்.

தட்டச்சு-வரகூரான்நாராயணன்

.மகாபெரியவாள்,காஞ்சியில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்த காலம்.

அப்போது வயதான ஒரு தாயார், எப்போதுமே மகானைத் தியானித்துக் கொண்டு இருப்பவர். அவருக்கு இரண்டு பெண்கள். அங்கே தன் பெண் ஒருத்தியுடன் வருகிறார் .

இங்கே வந்த இரண்டாவது பெண் எம்.ஏ. வரை படித்து வேலையில் இருப்பவள்.திடீரென ஒருநாள் இந்தப் பெண்ணுக்கு சித்தப்பிரமை பிடித்துவிட்டது. முன்னுக்கு பின் முரணாக பேசுகிறாள். அவள் வயதுக்கேற்ற பேச்சு இல்லை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாள்,நடந்து கொள்கிறாள். இவ்வளவு இளம் வயதில், அதாவது திருமணம் செய்யப் போகும் வயதில் ஒரு பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டால். எந்ததாய்தான் கவலைப்பட மாட்டாள்?தாய், பெரிய டாக்டர்கள் எல்லோரிடமும் மகளை அழைத்துப போனார். மாறி...மாறி பல சிகிச்சைகள் தொடர்ந்து நடந்தன. எந்த வைத்தியத்திலும் பலனே இல்லை

."நீங்கள் உங்கள் மகளை வேலூருக்கு அழைத்துப்போய் அங்கே மூளையில் ஒரு ஆபரேஷன் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று ஒரு வைத்தியக் குழுவே அந்த அம்மாளிடம் சிபாரிசு செய்தனர்.அப்படிச் செய்ய அந்தத் தாய்க்கு மனம் இல்லை.சதா சர்வகாலமும் காஞ்சிமகானே கதி என்று இருந்தவர், வைத்தியர்கள் இவ்வாறு சொன்னவுடன், காஞ்சி மகானிடம் போய் முறையிட நினைத்து தன் மகளுடன் காஞ்சிக்கு வந்தார்

.

அன்று இரவு அவர்களுக்கு மகானின் தரிசனம் கிடைக்கவில்லை.இரவு முழுவதும்,"ஜய ஜய சங்கரா, ஹர ஹர சங்கரா" வாய் ஓயாமல அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தனர்.நினைவே இல்லாமல்,அந்தப் பெண் கத்திக் கத்தி மயக்க மடைந்து விழுந்து விட்டாள்.மறுநாள் மகானின் தரிசனம் கிடைக்கவே, அந்த தாய், சர்வேஸ்வரனிடம் தன் மனக்குமுறலை கதறித் தீர்த்து விட்டாள்

.மகானின் அருள் கடாக்ஷம் அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கவே மூன்றாவது நாள் தரிசனம் செய்ய வந்தாள்.மகாபிரபு அவளை நோக்கி உற்றுப் பார்த்து, "அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி" என்று உத்தரவு போட்டது போலச் சொன்னார்.

அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.மகானின் திருவடியை தரிசனம் செய்த வண்ணம்,அந்தப் பெண் அபிராமி அந்தாதியைச் சொல்ல ஆரம்பித்துக் கொண்டிருக்கும்போது இடையில் மயக்க மடைந்தாள். சற்று நேரத்தில் மயக்க நிலை தெளிந்து சகஜமாக இருக்க ஆரம்பித்தாள். அவளுக்கு உடம்பில் அசதி இருந்ததே தவிர, அவள் அப்போதே பூரண குணமடைந்து விட்டாள்

.தாய் அடைந்த ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.,"மகாபிரபு" என்று இருவராலும் அலறத்தான் முடிந்தது.

குரு கடாக்ஷம் நம்மீது படுவதற்கு நாம் எந்தத் தவமும் செய்ய வேண்டியதே இல்லை.சதா அவரது நினைவாகவே இருந்து நமது மனதை அவரிடம் சமர்ப்பித்து விட்டால் அதுவே போதும். குரு நம்மை ஆட்கொண்டு நமது லௌகீகத்தைப் பார்த்துக் கொள்வார்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

மகா பெரியவரின் மாணவர்"

(ஓரிக்கை கிராமத்தில் மகாபெரியவர் சந்திர சேகரேந்திர மகா சுவாமிகளிடம் "பர்த்ருஹரி' (வைராக்கிய சதகம்) என்னும் பாடம் படித்தேனே ! அதுதான் ஹைலைட்,''என்றார்.-நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் )

21-11-2012- நவம்பர் போஸ்ட் மறுபதிவு

காஞ்சி மகாபெரியவர் ஒருநாள் காமாட்சி அம்பாள் சந்நிதி தெருவில் பவனி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு முதியவர் அவரைத் தரிசிக்க வீட்டு வாசலில் நின்றார். பெரியவர் அவரிடம்,""ஏம்ப்பா! ராமச்சந்திரா! உன்னுடைய ஆறு பிள்ளைகளும் சவுக்கியமா?'' என்றார்.

அந்த முதியவர் மகாபெரியவரின் மாணவர். பெரியவரிடம் வேதம் படித்த பெருமை அவருக்குண்டு. மகாபெரியவர் தன்னிடம் இவ்வாறு கேட்டதும் அவர் அசந்து விட்டார். அத்துடன், அவரது இளமைக்கால நினைவுகளும் மனதுக்குள் புரளத் துவங்கின. அதுபற்றி அவரே சொல்கிறார்.

""1938ல் பிறந்த எனக்கு 11 வயதில் உபநயனம். கீழம்பி என்ற இடத்திலுள்ள வேத பாடசாலையில் படிப்பு... இந்தியாவின் தலைசிறந்த வேத ஆசிரியர்களான பண்டிதர் வேப்பத்தூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள்,சிதம்பரம் ரங்கநாத சாஸ்திரிகள், போலகம் ராமா சாஸ்திரிகள், சிதம்பரம் ரங்கநாத சாஸ்திரிகள், ஆந்திரா மண்டலி வெங்கடேச சாஸ்திரிகள், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆகியோரிடமெல்லாம் பாடம் படித்தேன்.

ஆனால், இதையெல்லாம் விட, காஞ்சிபுரத்திலுள்ள ஓரிக்கை கிராமத்தில் மகாபெரியவர் சந்திர சேகரேந்திர மகா சுவாமிகளிடம் "பர்த்ருஹரி' (வைராக்கியசதகம்)\என்னும்\பாடம்படித்தேனே\அதுதான்\ஹைலைட்,'' என்றார்.,.

""பெரியவரிடமே பாடம் படித்த பெருமைக்குரியவர் தான் நீங்கள். ஆம்..உங்கள் குழந்தைகளைப் பற்றி பெரியவர் ஏதோ சொன்னாரே! அதுபற்றி சொல்லுங்க@ளன்,' 'என்றதும்,

""நான் பெரியவரின் மாணவர் என்பது மட்டுமே அவருக்கு தெரியும்.

மற்றபடி, எனது குடும்பம் பற்றி பெரியவருக்கு தெரியாது. எனக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இப்படி ஆறு பேர் இருப்பது பெரியவருக்கு எப்படி தெரிந்தது? அவர்களை நலம் விசாரிக்கிறாரே! அவர் தெய்வப்பிறவி என்பதால் தான், நமக்குள் நடக்கும் எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரிகின்றன,' 'என்று வியந்தார்.

இந்த முதியவரின் பெயர் ராமச்சந்திர சாஸ்திரிகள். இவரது குடும்பம் "நீலக்கல்' வகையறாவைச் சேர்ந்தது. நீலக்கல் என்பது மன்னர் காலத்திய பட்டம். இவரது முன்னோர்களில் ஒருவரான முத்துசுவாமி சாஸ்திரிகளின் துணைவி தர்மசம்வர்த்தினி அம்மையார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐம்பது ஆண்டுகளாக காமாட்சியம்மனுக்கு சேவை செய்து வருகிறார்.

ஒருமுறை, மகாபெரியவர் இவரை அழைத்து, ""உன் வம்சத்தின் பெயருக்கேற்ப, காமாட்சியம்மன் கோயில் தங்க விமானத்தில் ஒரு நீலக்கல் வை,'' என்றார். ராமச்சந்திர சாஸ்திரிகளும் அவ்வாறே செய்தார். கோயில் ஆபரணக் கொட்டடிக்கு (பொக்கிஷம்) ஐந்து சாவிகள் உண்டு. இதில் இரண்டு இவரது பொறுப்பில் இருக்கிறது.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!

காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு நாள் ஸாயங்காலம், பெரியவா தர்ஶனம் தந்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வயஸான தம்பதி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.

அந்த மாமாவின் பஞ்சகச்சம், மாமியின் மடிஸார் ரெண்டுமே புது வஸ்த்ரங்களாக இருந்தன. நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்த அவர்களை புன்னகையோடு கடாக்ஷித்தார்.

"என்ன..... எல்லாம் நல்லபடி ஆச்சா?"

"பெரியவா ஆஶீர்வாதத்ல... எல்லாம் நன்னா நடந்துது....."
அந்த அம்மா, கண்ணில் வழிந்த நீரை கட்டுப்படுத்தமுடியாமல் தவித்தாள்.

"இங்கியே அப்டி ஒக்காந்துக்கோங்கோ.... ரெண்டுபேரும்"

கொஞ்சம் தள்ளி அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். அதன் பிறகு பெரியவா இவர்களிடம் எதுவும் பேசவில்லை. கூட்டம் இருந்ததால், மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் பெரியவாளுடைய கைகள் மட்டும், கிறுகிறுவென்று தன்னிச்சையாக ஒரு கார்யத்தை பண்ணிக் கொண்டிருந்தன.

தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் கிறுகிறுவென்று அங்குமிங்கும் பறந்து பறந்து மலர்களில் உள்ள மகரந்த தேனை ஸேகரிக்கும்.

நம்முடைய ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளோ, தன்னுடைய கைகளால் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் போல பரபரவென்று சுற்றி இருந்த பூக்களை எல்லாம் திரட்டி திரட்டி, அழகான மாலைகளாக தொடுத்துக்கொண்டிருந்தார்! வருவோர் போவோரிடம் பேசுவதற்கும் இதற்கும் ஸம்பந்தமேயில்லை என்பதுபோல், ஶம்-கரனின் கரங்கள் அற்புதமான மாலைகளை தொடுத்துக் கொண்டிருந்தன!

ஆஹா! ரெண்டு மாலைகள் தயார்!

யாருக்கு?

"இங்க வாங்கோ.. ரெண்டுபேரும் "
அந்த வயஸான தம்பதிகளை அழைத்தார்.

"இந்தா..... இந்த ரெண்டு மாலையையும் அவாகிட்ட குடு"
ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும் அந்த பாக்யஶாலி தம்பதி கைக்கு போனது.

"ம்ம்...! மாலை மாத்திக்கோங்கோ!...."
அருகிலிருந்த குறிப்பறிந்த வேதபண்டிதர்கள், மந்த்ரங்களை ஓதினார்கள்.

அந்த அம்மாவோ, "ஸர்வேஶ்வரா! ஸர்வேஶ்வரா!" என்று அரற்றவே ஆரம்பித்து விட்டாள்!
பெரியவாளுடைய அனுக்ரஹமே பரமானந்தம்! அதிலும் இது எப்பேர்ப்பட்ட ஆனந்த அதிர்ச்சியான அநுக்ரஹம்!

ரெண்டு பேருடைய கண்களும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கொட்டித் தீர்த்தன.
மறுபடியும் அவர்கள் நமஸ்காரம் பண்ணியதும், குங்கும ப்ரஸாதம் தந்து ஆஶீர்வதித்தார்.
சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!

"என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே?...."

ஆவலை அடக்க முடியாமல் ஒருத்தர், மெதுவாக அந்த அம்மாவிடமே விஜாரித்தார்.

"எங்களுக்கு ஸொந்த ஊர் பெங்களூர்..! இன்னிக்கி இவரோட 70-வது பொறந்தநாள். எங்க பிள்ளை மெட்ராஸ்ல இருக்கான். காலேல பிள்ளையாத்ல பீமரதஶாந்தி பண்ணிண்டார். எங்களுக்கு எல்லாமே பெரியவாதான்! பிள்ளேட்ட "பெரியவாள எனக்கு இன்னிக்கி தர்ஶனம் பண்ணணும்-னு ரொம்ப ஆசையா இருக்குடா...."ன்னு சொன்னேன்.
அவனுக்கு நாளைக்கி பெங்களூர்ல ஏதோ அவஸர வேலை இருக்குன்னுட்டு,

"அம்மா....இன்னிக்கி முடியாதும்மா! நிச்சியமா இன்னொரு தரம் பெரியவா தர்ஶனத்துக்கு கூட்டிண்டு போறேன்"-ன்னு சொன்னான். வேற என்ன பண்றது? மானஸீகமா பெரியவாளையே நெனச்சிண்டு, எல்லோருமா... ரெண்டு கார்ல பெங்களூர் கெளம்பினோம்.

வேலூர் பைபாஸ் ரோடுல, அவாள்ளாம் வந்துண்டிருந்த காரோட "ஆக்ஸில்" ஒடஞ்சுபோச்சு ! எப்டியும் ரெண்டு மணி நேரமாவது ஆகுன்னுட்டா! ஒடனே நா....."காஞ்சிபுரம் பக்கத்லதான இருக்கு! அப்பாவும் நானும் இன்னொரு கார்ல போய், பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு வரோம்!"-ன்னு சொல்லிட்டு, ஒடனேயே கெளம்பி வந்துட்டோம்..! பெரியவாளோட க்ருபையை தாங்கவே முடியல! எனக்கு இதுக்கு மேல ஒண்ணுமே வேணாம்....."

அந்த அம்மா அடக்கமாட்டாமல், ஆனந்தம் பொங்க அழுதாள்.
பகவான் தன்னிடம் ஆத்மார்த்தமாக பக்தி பூண்டவர்களை எந்த நிலையிலும் தன்னிடம் அழைத்துக் கொள்வான் !

நாம் செய்யவேண்டியது அவனிடம் படாடோபமில்லாத உண்மையான அன்பு வைப்பது மட்டுமே!

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
Foreigners interview Periava >>>>>
வழக்கம்போல அந்த ஒரு ஏகாதசியன்றும் நானும் என் நண்பர் கோபுவும் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது எல்லாம் மஹாப்பெரியவாள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீசங்கர மடத்தின் பின்புறத்தில் அவர் உபயோகித்த மேனாவிற்கு அருகில் தரிசனம் தருவது வழக்கம். நாங்கள் சென்றிருந்தபொழுது அந்த மஹான் இரண்டு வெளிநாட்டுப் பெண்களுடன் கொஞ்சம் தள்ளி வேறுபக்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரும் 25 வயதுக்குள்ளானவர்கள். நாங்கள் மற்றவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் பெரியவர் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். பரமாச்சாரியாரும் தொடர்ந்து அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் மூவரைத் தவிர, அந்த பக்கத்தில் வேறு ஸ்ரீமடத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை.

அந்தப் பெண்களிடம் பெரியவாள் என்ன பாஷையில் பேசுகிறார்கள் என்று எங்கள் எவருக்குமே தெரியாது. நான் மிகவும் பொறுமை இழந்துவிட்டேன். வழக்கம்போல் அப்பொழுதே மாலை 5 மணியாகி விட்டது. பெரியவாள் தரிசனத்தை முடித்துக்கொண்டு ஸ்ரீகாமாட்சி கோவிலுக்கு போய்விட்டு பிறகு பஸ் பிடித்து விழுப்புரம் திரும்ப வேண்டும். என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை.

அப்பொழுது அங்கு வந்த ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரிகளை சந்தித்துப் பேசினேன். ஸ்ரீவேதபுரி சாஸ்திரிகள் கடந்த 60 ஆண்டுகளாக மஹாபெரியவாளிடம் சேவை செய்து வருபவர். அவருக்கு பெரியவாளைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாது. அவரை மஹாபெரியவாள் ஸ்ரீமடத்தில் உள்ள அனைவரையும் அவருடைய பெயரைச் சொல்லி கூப்பிடக் கூடாது. அவரை ப்ரம்மஸ்ரீ என்றுதான் அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டிருந்தார்கள்.

‘இப்படி வருகின்ற வெளிநாட்டுக்காரர்களை பெரியவாள் வேறு ஒரு நேரத்தில் அழைத்து பேசக் கூடாதா? என்னைப் போன்றவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணியாக காத்துக் கொண்டிருக்கிறோமே! எப்பொழுது நாங்கள் ஊர் திரும்புவது’ என்று அவரிடம் நான் குறைபட்டுக் கொண்டிருந்தேன். ப்ரம்மஸ்ரீ அவர்கள் என்னை பார்த்து ‘நீங்கள் ஒரு மணி நேரமாகத்தானே வெயிட் பண்ணுகிறீர்கள். அந்த இரண்டு வெளிநாட்டு பெண்களும் பெரியவாளிடம் பேச கடந்த மூன்று நாட்களாக காத்துக் கொண்டிருந்துவிட்டு இன்றுதான் அதுவும் இப்பொழுதுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்கள்.

‘அவர்கள் யார்? அவர்கள் ஏன் இவ்வளவு நாட்களாக காத்திருக்கிறார்கள்? ஸ்ரீமடத்தில் நீங்கள் அவர்களுக்கு மஹாபெரியவாளின் தரிசனத்திற்கு ஏன் ஏற்பாடுகள் செய்யவில்லை’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டேன். அதற்கு அவர் நிதானமாக சொன்ன விஷயம் இதுதான். அவர்கள் இருவரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் நம்முடைய வேதசாஸ்திரம் மற்றும் வேதாந்தம் பற்றி படித்து டாக்டர் பட்டம் (Ph.D) பெற்றிருக்கிறார்கள். அவர்கள் படித்தது போதுமா இல்லை இன்னும் படிக்க வேண்டுமா என்ற சந்தேகத்தை அவர்களுடைய பேராசிரியரிடம் அங்கு கேட்டார்களாம். அதற்கு அந்த அமெரிக்கர் இவர்களை தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிப் பெரியவரை சந்தித்து உங்கள் சந்தேகங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர் ஒருவரால்தான் உங்கள் சந்தேகங்களை தீர்க்க முடியும் என்று இங்கு அனுப்பிவிட்டாராம்.

அவர்கள் 3 நாட்களுக்கு முன்னால் அவர்களுடைய இந்த பெரிய சந்தேகத்தை மஹாபெரியவாளிடம் கேட்டார்களாம். அந்த மஹான் அதற்கு அவர்களை கூர்ந்து பார்த்து “Just Wait” (கொஞ்சம் பொறுங்கள்) என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாராம். பிறகு அந்த இரண்டு ஜெர்மனியப் பெண்களும் பெரியவாளின் அருகில் உள்ள மேடையில் உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். மஹாபெரியவாளோ அந்த திக்குகூட திரும்பவே இல்லையாம்.

வெகுநேரம் கழித்தும் பெரியவாள் அவர்களை அழைக்கவே இல்லையாம். ஸ்ரீமடத்தில் இருந்தவர்கள் அந்த பெண்களை சந்தித்து ‘நாங்கள் வேண்டுமானால் ஸ்வாமிகளிடம் போய் ஞாபக படுத்துகிறோம். ஒருவேளை அவர் மறந்து விட்டார்களோ தெரியவில்லை’ என்று கேட்டார்களாம்.

“No, No” என்ற அந்த இரு பெண்களும் படபடப்போடு துடித்தார்களாம். தயவுசெய்து அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். எங்களை எப்பொழுது கூப்பிட வேண்டும் என்று அவருக்குத் தெரியும். “His Holiness is a great Saint“ (அந்த மஹாப்பெரியவாள் ஒரு புனிதமான, பெரிய சன்யாசி) அவராக எங்களை அழைக்கும் வரையில் நாங்கள் இங்கேயே தங்கி தியானம் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீமடத்திலேயே தங்கி பழம்-பால் மட்டும் சாப்பிட்டுவிட்டு தியானமே செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் மஹாப்பெரியவாள் அவர்களை அழைத்துவரச் செய்து போதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மணிக்குள் இப்படி சலித்துக் கொள்கிறீர்களே, அவர்கள் ஒரு சிறிய குறையைகூடச் சொல்லாமல் எவ்வளவு பொறுமையாக இருந்தார்கள் தெரியுமா என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு போய்விட்டார்கள். யாரோ என்னை ஓங்கி சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. இவ்வளவு வருஷங்களாக மஹாப்பெரியவாளுடன் இருந்துவிட்டு இப்படி கேவலமாக நடந்து கொண்டேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். அந்த ஈஸ்வரனை புரிந்துகொள்ள நான் இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுக்க வேண்டுமோ தெரியவில்லையே என்று ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.

அப்பொழுது மஹாப்பெரியவாள் சட்டென்று எங்கள் பக்கம் வந்து தரிசனம் தந்தார்கள். அந்த மஹானை தரிசித்து நான் செய்த தவறுக்காக அவரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவசரமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அந்த இரண்டு ஜெர்மனிய பெண்களை சந்தித்து பேசினேன். அப்பொழுது அவர்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் தாரைதாரையாக வழிந்து கொண்டிருந்தது. மஹாப்பெரியவாள் அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த பொழுதே அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்ததை நாங்கள் பார்த்தோம்.

‘தயவுசெய்து மன்னியுங்கள். நீங்கள் இருவரும் வந்த காரணத்தை நாங்கள் அறிந்துகொண்டோம். நீங்கள் என்ன கேட்டீர்கள், அந்த மஹாஸ்வாமிகள் என்ன கூறினார்? உங்கள் சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கொஞ்சநேரம் பேசவேயில்லை. அவர்கள் இந்த உலகத்திற்கு வருவதற்கே கொஞ்சம் நேரமாகிவிட்டது.

‘ஐயா! நாங்கள் இப்பொழுது ஆனந்த வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். எப்படி எங்கள் சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்று தெரியவில்லை. அந்த மஹா ஸ்வாமிகளை உணரத்தான் முடியுமே தவிர அவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க எங்களுக்கு தெரியவில்லை. இந்த ஸ்வாமிகளை சந்திக்காமல் இவ்வளவு நாட்களை வீணே கழித்து விட்டோமே என்று வருத்தப்படுகிறோம்.

நாங்கள் இத்தனை வருடங்கள் வேதாந்தங்களைப் பற்றியும் சாஸ்திரங்களைப் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்து வந்தோம். ஆனால் இன்றுதான் எங்கள் ஜென்மா ஆனந்தம் அடைந்தது. இங்கே வருவதற்கு முன்னால், இந்த மஹானை தரிசித்து அருளுரை பெறுவதற்கு முன்னால் நாங்கள் இருவரும் எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இந்த பெரியவாளை தரிசித்த பிறகு நாங்கள் இன்னும் எங்கள் படிப்பை ஆரம்பிக்கவேயில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டோம்.

(Before meeting His Holiness Sankaracharriar, we thought that we finished reading everthing. But after this meeting with His Holiness, we have come to a conclusion that we have not yet started the subject at all. He is really very great) என்று அனுபவித்து சொன்னார்கள்.

நம் ஸ்வாமிகளைப் பற்றி அன்னிய நாட்டவர்கள் சொன்னால்தான் நமக்கே அந்தப் பெரியவாளின் அருமையே புரிகிறது. அந்த வெளிநாட்டு பெண்களுக்கு இருந்த பொறுமை நம்மவர்களுக்க வருமா? நிச்சயமாக எனக்கு வராது. தாங்கள் இதுவரை கற்றதெல்லாம் ஒன்றும் இல்லை என்று தன்னை தாழ்த்திக்கொண்டு சொல்லக்கூடிய பக்குவம் நமக்கு வருமா? அல்லது அவர்களை போல் மூன்று நாட்கள் காத்திருந்து அதுவும் மஹாப்பெரியவாளின் உத்திரவு வரும்வரை நாம் காத்து கொண்டிருப்போமா?

ஆகவே என்னைவிட மஹாப்பெரியவாளை அந்த வெளிநாட்டவர்கள் அதிகமாக உணர்ந்திருக்கிறார்கள். அதுவும் அவர்களின் முதல் சந்திப்பிலேயே! நமக்கும் அப்படி ஒரு உன்னதமான குணம் வர வேண்டுமானால் ‘கொஞ்சம் பொறுங்கள்’ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்." -
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

திருவிசைநல்லூர் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்திற்கு முதல் பத்ரிகை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகளுக்குத்தான் ஸமர்ப்பிக்கப்படும். அடுத்த பத்ரிகை ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களுக்கு திருவிசநல்லூர் மடத்து நிர்வாஹிகள் சார்பில் நேரில் வைக்கப்படும். பிறகுதான் மற்றவர்களுக்கெல்லாம் உத்ஸவ பத்ரிகை அனுப்பி வைக்கப்படும்.

1991ம் வருஷம். ஸ்ரீஐயாவாள் மடத்தில் நடைபெறும் கார்த்திகை அமாவாஸ்யை கங்காவதரண உத்ஸவ பத்ரிகையை ஸத்குரு ஸ்ரீஸார் அவர்களுக்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டி உத்ஸவ கமிட்டி முக்யஸ்தரான அவ்வூர்ப் பெரியவரான ராயர் ஒருவர் வந்திருந்தார்.

திருவிசைநல்லூர் உத்ஸவமானதால் என்னுள் இயல்பான ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அவரை இருக்க வைத்து … உபசரித்து … பிறகு அவரை ஸ்ரீஸார் அவர்களிடம் ஆஜர்படுத்தினேன். ஸ்ரீஸார் அவரிடம் மிகுந்த ப்ரியத்துடன் பல வருஷத்து விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஸ்ரீசார் அவர்களுக்கு திருவிசைநல்லூர் மடத்துடனும், ஊராருடனும் இருந்த தொடர்பை அறிந்துகொண்டேன்.

விகடம் ராமசுவாமி சாஸ்திரிகள் என்ற ஒரு மஹாமேதை இந்த உத்ஸவத்தை மேலும் விரிவாக்கி ப்ரபலப்படுத்தினார். இந்த மடத்தில் பல காலமாக ஸ்த்ரீகள் பாடும் வழக்கம் இல்லை என அதுவரை தெரியாத பல அரிய விஷயங்கள் அப்போது வெளிவந்தன.

பிற்பாடு ஸ்ரீபெரிவா அவர்கள் சம்பந்தமான ஒரு ஆச்சர்யமான நிகழ்வை ராயர் சொன்னார். ”சில வருஷங்களுக்கு முன்னால் தஞ்சாவூர் ப்ரதேசத்தில் ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை. காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை. ஸ்ரீஐயாவாள் மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும் வறண்டு போனது. ஸ்ரீஐயாவாள் மடத்தின் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம் அந்த வருஷம் நடக்குமா என்ற பயம் வந்து விட்டது. உத்ஸவ பத்ரிகையை எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீபெரிவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்தோம். மெதுவாக அங்குள்ள பிரச்னை பற்றிச் சொன்னோம்.

அப்படியே சில நிமிஷங்கள் கழிந்தன. ஸ்ரீபெரிவா சற்றுநேரம் மோனமாக இருந்து விட்டு சைகையால் அருகிலிருந்த ஸ்ரீமடத்து அன்பரை அழைத்து ஒரு பெரிய செப்புக் குடத்தில் கங்கா ஜலத்தை நிரப்பி வரச்சொன்னார்கள்.. அங்கு கங்கா ஜலம் இருப்பது பற்றி எங்களுக்கு ஏதும் அதற்கு முன்னால் தெரியாது. அந்த அன்பரும் அவ்வண்ணமே கங்கா ஜலம் நிரம்பிய ஒரு பெரிய செப்புக் குடத்தைத் தூக்கி வந்து ஸ்ரீபெரிவாளின் திருமுன்னர்க் கொண்டு வைத்தார்.

உடனே ஸ்ரீபெரிவா எங்களிடம் “இந்தக் குடத்தில் இருக்கும் கங்கா ஜலத்தை ஜாக்ரதையாகத் திருவிசைநல்லூருக்குக் கொண்டுபோய் வையுங்கள். மழை வராவிட்டால் ஸ்ரீஐயாவாள் மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில் கார்த்திகை அமாவாஸ்யைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! ” என்று அபயம் காட்டி எங்களுக்கு ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்கள்.

திருவிசைநல்லூருக்குத் திரும்பினோம். ஸ்ரீபெரிவாளின் வாக்கு என்றும் பொய்க்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தபோதிலும் அப்போதிருந்த வறட்சியான கால நிலை எங்களை ஸஞ்சலத்தில் ஆழ்த்தியபடியே இருந்தது. உத்ஸவத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையிலும் மழை பெய்யவே இல்லை. காவேரியில் ப்ரவாஹமேயில்லை. வயல் வெளிகளும் காய்ந்து வெடித்துப் போயிருந்தன..ஸ்ரீஐயாவாள் மடத்துக் கிணறும் சுத்தமாகக் காய்ந்துபோயிருந்தது.

உத்ஸவ கமிட்டி மீட்டிங் போட்டோம். என்ன செய்வது என்று கலந்து பேச ஆரம்பித்தோம். எல்லோரும் ஒருமித்ததொரு முடிவுக்கு வந்தோம். “ஸ்ரீபெரிவா அவர்களின் உத்தரவு ப்ரகாரம் செப்புக் குடத்திலிருந்த கங்கா ஜலத்தைக் கிணற்றில் ஊற்றிவிடுவோம். அப்புறமாக அதைக் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்து விட வேண்டியதுதான் ” என்று தீர்மானித்து அவ்விதமே கங்கா ஜலத்தைக் கிணற்றில் சேர்த்தோம்.

அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம் … கார்த்திகை அமாவாஸ்யை தினத்தில் ஸ்ரீஐயாவாள் அவர்களின் ஸ்தோத்ரத்தைக் கேட்டவுடன் கங்கை அவரது இல்லத்தின் பின்புறமிருந்த கிணற்றில் ஆவிர்பவித்துப் பெருகி ஊரெங்கும் காணும்படி வழிந்தோடினாள் என்பது சரித்ரம். அதை மீண்டும் காட்டும்படியாக கார்த்திகை அமாவாஸ்யைக்கு முதல் நாள் செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரிவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில் தொடங்கியது பெரும் மழை. விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில் மிதக்க வைத்தது. ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல் மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது. அமாவாஸ்யை அன்று விடியற்காலை கிணற்றின் கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர். அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக அதிகமாக இருந்தது. பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்ரீபெரிவாளைத் தரிசிக்கச் சென்றோம். திருவிசைநல்லூர் மடத்தார் வந்திருக்கும் விபரம் அவர்கள் ஸந்நிதானத்தில் தெரிவிக்கப்பட்டது. உடனே ஸ்ரீபெரிவா அவர்கள் புன்முறுவலுடன் ” திருவிசநல்லூர் மடத்து கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு, எப்போதும் போல இந்த வருஷமும் கங்கை வந்தாளா? என்று எங்களை பார்த்துக் கேட்டதை என்னிக்கும் மறக்க முடியாது!” என்று முடித்தார் ராவ்ஜீ. Sri Sridhara Venkatesha Ayyaval is a highly respected personage in the bhajana sampradaya of South India. *He is one of the three acharyas who headed 'Naama-prachaara' movement in the south, along with Sri Bhagavannama Bodhendra swamigal and Sri Marudanallur Sadguru swamigal.* (Article Courtesy: Sage of Kanchi website and Sri Ganapathi Subramanian – Auditor in Karaikal) Source: ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் : அக்டோபர் 1991 – திருவிசைநல்லூர் உத்ஸவம்

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

திருவிசைநல்லூர் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்திற்கு முதல் பத்ரிகை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகளுக்குத்தான் ஸமர்ப்பிக்கப்படும். அடுத்த பத்ரிகை ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களுக்கு திருவிசநல்லூர் மடத்து நிர்வாஹிகள் சார்பில் நேரில் வைக்கப்படும். பிறகுதான் மற்றவர்களுக்கெல்லாம் உத்ஸவ பத்ரிகை அனுப்பி வைக்கப்படும்.

1991ம் வருஷம். ஸ்ரீஐயாவாள் மடத்தில் நடைபெறும் கார்த்திகை அமாவாஸ்யை கங்காவதரண உத்ஸவ பத்ரிகையை ஸத்குரு ஸ்ரீஸார் அவர்களுக்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டி உத்ஸவ கமிட்டி முக்யஸ்தரான அவ்வூர்ப் பெரியவரான ராயர் ஒருவர் வந்திருந்தார்.

திருவிசைநல்லூர் உத்ஸவமானதால் என்னுள் இயல்பான ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அவரை இருக்க வைத்து … உபசரித்து … பிறகு அவரை ஸ்ரீஸார் அவர்களிடம் ஆஜர்படுத்தினேன். ஸ்ரீஸார் அவரிடம் மிகுந்த ப்ரியத்துடன் பல வருஷத்து விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஸ்ரீசார் அவர்களுக்கு திருவிசைநல்லூர் மடத்துடனும், ஊராருடனும் இருந்த தொடர்பை அறிந்துகொண்டேன்.

விகடம் ராமசுவாமி சாஸ்திரிகள் என்ற ஒரு மஹாமேதை இந்த உத்ஸவத்தை மேலும் விரிவாக்கி ப்ரபலப்படுத்தினார். இந்த மடத்தில் பல காலமாக ஸ்த்ரீகள் பாடும் வழக்கம் இல்லை என அதுவரை தெரியாத பல அரிய விஷயங்கள் அப்போது வெளிவந்தன.

பிற்பாடு ஸ்ரீபெரிவா அவர்கள் சம்பந்தமான ஒரு ஆச்சர்யமான நிகழ்வை ராயர் சொன்னார். ”சில வருஷங்களுக்கு முன்னால் தஞ்சாவூர் ப்ரதேசத்தில் ஐப்பசியில் பருவ மழை பெய்யாது பொய்த்தது.. மேட்டூர் ஜலமும் வரவில்லை. காவேரியில் சுத்தமாக வரத்து இல்லை. ஸ்ரீஐயாவாள் மடத்தின் பின்புறம் கங்கை ஆவிர்பவிக்கும் கிணறும் வறண்டு போனது. ஸ்ரீஐயாவாள் மடத்தின் கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவம் அந்த வருஷம் நடக்குமா என்ற பயம் வந்து விட்டது. உத்ஸவ பத்ரிகையை எடுத்துக் கொண்டு போய் ஸ்ரீபெரிவாளின் ஸன்னதியில் ஸமர்ப்பித்தோம். மெதுவாக அங்குள்ள பிரச்னை பற்றிச் சொன்னோம்.

அப்படியே சில நிமிஷங்கள் கழிந்தன. ஸ்ரீபெரிவா சற்றுநேரம் மோனமாக இருந்து விட்டு சைகையால் அருகிலிருந்த ஸ்ரீமடத்து அன்பரை அழைத்து ஒரு பெரிய செப்புக் குடத்தில் கங்கா ஜலத்தை நிரப்பி வரச்சொன்னார்கள்.. அங்கு கங்கா ஜலம் இருப்பது பற்றி எங்களுக்கு ஏதும் அதற்கு முன்னால் தெரியாது. அந்த அன்பரும் அவ்வண்ணமே கங்கா ஜலம் நிரம்பிய ஒரு பெரிய செப்புக் குடத்தைத் தூக்கி வந்து ஸ்ரீபெரிவாளின் திருமுன்னர்க் கொண்டு வைத்தார்.

உடனே ஸ்ரீபெரிவா எங்களிடம் “இந்தக் குடத்தில் இருக்கும் கங்கா ஜலத்தை ஜாக்ரதையாகத் திருவிசைநல்லூருக்குக் கொண்டுபோய் வையுங்கள். மழை வராவிட்டால் ஸ்ரீஐயாவாள் மடத்தில் இருக்கும் கங்கை ஆவிர்பவிக்கும் கிணற்றில் கார்த்திகை அமாவாஸ்யைக்கு முன்னால் சேர்த்து விடுங்கள் .. ! ” என்று அபயம் காட்டி எங்களுக்கு ப்ரஸாதம் அளித்து அனுப்பி வைத்தார்கள்.

திருவிசைநல்லூருக்குத் திரும்பினோம். ஸ்ரீபெரிவாளின் வாக்கு என்றும் பொய்க்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தபோதிலும் அப்போதிருந்த வறட்சியான கால நிலை எங்களை ஸஞ்சலத்தில் ஆழ்த்தியபடியே இருந்தது. உத்ஸவத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையிலும் மழை பெய்யவே இல்லை. காவேரியில் ப்ரவாஹமேயில்லை. வயல் வெளிகளும் காய்ந்து வெடித்துப் போயிருந்தன..ஸ்ரீஐயாவாள் மடத்துக் கிணறும் சுத்தமாகக் காய்ந்துபோயிருந்தது.

உத்ஸவ கமிட்டி மீட்டிங் போட்டோம். என்ன செய்வது என்று கலந்து பேச ஆரம்பித்தோம். எல்லோரும் ஒருமித்ததொரு முடிவுக்கு வந்தோம். “ஸ்ரீபெரிவா அவர்களின் உத்தரவு ப்ரகாரம் செப்புக் குடத்திலிருந்த கங்கா ஜலத்தைக் கிணற்றில் ஊற்றிவிடுவோம். அப்புறமாக அதைக் கொஞ்சமாக எடுத்து அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்து விட வேண்டியதுதான் ” என்று தீர்மானித்து அவ்விதமே கங்கா ஜலத்தைக் கிணற்றில் சேர்த்தோம்.

அடுத்து நடந்ததுதான் ஆச்சர்யம் … கார்த்திகை அமாவாஸ்யை தினத்தில் ஸ்ரீஐயாவாள் அவர்களின் ஸ்தோத்ரத்தைக் கேட்டவுடன் கங்கை அவரது இல்லத்தின் பின்புறமிருந்த கிணற்றில் ஆவிர்பவித்துப் பெருகி ஊரெங்கும் காணும்படி வழிந்தோடினாள் என்பது சரித்ரம். அதை மீண்டும் காட்டும்படியாக கார்த்திகை அமாவாஸ்யைக்கு முதல் நாள் செப்புக் குடத்திலிருந்த ஸ்ரீபெரிவா அனுக்ரஹித்திருந்த கங்கையைக் கிணற்றில் சேர்த்த சில மணி நேரத்தில் தொடங்கியது பெரும் மழை. விடிய விடிய விடாது பெய்து ஊரையே வெள்ளத்தில் மிதக்க வைத்தது. ஸ்ரீஐயாவாள் அவர்கள் கங்கையை வரவழைத்தது போல் மடத்திலிருந்த கிணற்றில் ஜலம் பெருகியது. அமாவாஸ்யை அன்று விடியற்காலை கிணற்றின் கைப்பிடிச் சுவற்றிற்கு மேல் ஜலம் பெருகி வழிந்தோடியதைக் கண்டோர் அதிசயித்தனர். அதேவிதமாகக் காவேரியிலும் கால் வைக்கக்கூட முடியாத அளவிற்கு ப்ரவாஹம் மிக அதிகமாக இருந்தது. பல நூறு பக்த ஜனங்கள் அன்று மடத்திலிருந்த கிணற்றில் ஸ்நானம் செய்தும் வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஸ்ரீபெரிவாளைத் தரிசிக்கச் சென்றோம். திருவிசைநல்லூர் மடத்தார் வந்திருக்கும் விபரம் அவர்கள் ஸந்நிதானத்தில் தெரிவிக்கப்பட்டது. உடனே ஸ்ரீபெரிவா அவர்கள் புன்முறுவலுடன் ” திருவிசநல்லூர் மடத்து கார்த்திகை அமாவாஸ்யை உத்ஸவத்துக்கு, எப்போதும் போல இந்த வருஷமும் கங்கை வந்தாளா? என்று எங்களை பார்த்துக் கேட்டதை என்னிக்கும் மறக்க முடியாது!” என்று முடித்தார் ராவ்ஜீ. Sri Sridhara Venkatesha Ayyaval is a highly respected personage in the bhajana sampradaya of South India. *He is one of the three acharyas who headed 'Naama-prachaara' movement in the south, along with Sri Bhagavannama Bodhendra swamigal and Sri Marudanallur Sadguru swamigal.* (Article Courtesy: Sage of Kanchi website and Sri Ganapathi Subramanian – Auditor in Karaikal) Source: ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள் : அக்டோபர் 1991 – திருவிசைநல்லூர் உத்ஸவம்

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
sri sadhgurubhyo nama
 
OM SRI SADHGURUBHYO NAMAH

"குருவே சரணம்"

திருமயிலை ஸ்ரீகபாலீஸ்வரர்– கற்பகாம்பாளின் அடியார் கூட்டத்தில் தலைசிறந்தவர் மாது ஸ்ரீ முத்துலக்ஷ்மி எனும் மூதாட்டி. பல வருடங்களாக கற்பகாம்பாள் சன்னிதியில் லலிதா ஸஹஸ்ர நாமம், ஸௌந்தர்யலஹரி முதலியவற்றை மனமுருகி பாராயணம் செய்யும் இம் மாதரசி, தான் மட்டும் இந்த நற்பணியை செய்யாமல் தன் போன்ற மங்கையர்க்கரசிகளையும் சேர்த்துக் கொண்டு பாராயணம் செய்வார். அவர்களுக்கும் இதை பிழையின்றி சொல்லிக் கொடுத்து ஈடுபடுத்தியதால் அந்த மாதர்சங்கம் (சுவாஸினி மண்டலி) அவரை குரு பாட்டி என்றே அழைப்பது வழக்கம்.

அந்த குரு பாட்டிக்கு ஒரு நாள் அதிகாலை 3 1/2 மணிக்கு கனவு வந்தது. அதில் ஸஹஸ்ரநாமம் பொறித்த தங்கக்காசு மாலையை அணிந்து கொண்டு அன்னை கற்பகாம்பாள் நிற்க உடன் மஹா பெரியவரும் நிற்கிறார். ஆனந்தம் கொண்ட பாட்டி, அன்னையிடம் “உனக்கேது ஸஹஸ்ரநாம மாலை, காஞ்சி காமாக்ஷிக்கு தானே பெரியவா பண்ணிப் போட்டா” என்று வினவ உடனே அருகில் நிற்கும் காஞ்சி மஹான் “ஆமாம் நான் காமாக்ஷிக்கு போட்டேன்.

கற்பகத்துக்கு உன்னைப் போடச் சொல்றேன்” என்றவுடன் பாட்டி “இவ்வளவு பெரிய காசு மாலையை ஏழை நான் எப்படிச் செய்ய முடியும்”என்று கேட்க “எல்லாம் நடக்கும் பண்ணு” என்று உத்தரவிட, மறைந்தது கனவு.

இன்ப அதிர்ச்சியுடன் எழுந்தார் பாட்டி காலை 9 மணிக்கு ரிக்க்ஷாவில் திருமயிலை கோவில் வந்து நவராத்திரி மண்டபத்தில் அமர்ந்து தன் குழுவினருடன் நான்கு முறை ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து முடித்ததும் சன்னிதிக்கு வந்தார். குருக்கள் கற்பூர ஆரத்தி காட்டும்போது, உணர்ச்சி வசப்பட்ட பாட்டி, கண்ணீர்மல்க உடனிருந்தவர்களிடம் தன் கனவு விவரத்தை கூறியதோடு உடனடியாக அம்பிகைக்கு காசுமாலை செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தை கூறினார். இதை கேட்ட ஆனந்தம் மாமி, “உடனே காஞ்சீபுரம் சென்று பெரியவரிடம் விவரம் சொல்லி என்ன செய்யலாம் என அறிவுரை கேட்கலாம்” என்று சொன்னார்.

மறுநாள் சுவாஸினி மண்டலியினர் காஞ்சீபுரம் சென்று பெரியவரை வணங்கி கனவு வந்த விவரம் சொல்லி என்ன செய்வது என்று கேட்டனர். தீராத விளையாட்டு மன்னரான மஹான் ‘நான் காமாக்ஷிக்கு செய்த காசு மாலையில், ஒவ்வொரு காசும் ஒவ்வொரு பவுன். ஆனால் உங்களால் அவ்வளவு முடியாது. எனவே அரை பவுனில் ஒரு காசு அடித்து அதில் ஒவ்வொரு நாமத்தையும் பொறியுங்கள்’ என்று உத்தரவிட அரைபவுன் என்றாலும் 1000 காசுக்கு 500 பவுன் ஆகும். மேலும் அதை கோர்க்க சங்கிலி வேறு வேண்டும். இப்படி மிகப்பெரிய இந்த திருப்பணியை எப்படி செய்வது என்று அவர்கள் கவலைப்பட்டனர். மஹான் அருள் உடனே கிட்டியது. வந்த மாதரில் ஒருவர் முதலில் தன் கையிலிருந்த ஒரு ஜோடி வளையலைத்தர ஆரம்பமானது அருட்பணி. மேயர் ராமநாதனின் மனைவி லக்ஷ்மி ராமநாதன், நாடகக் காவலர் ஆர்.எஸ் மனோகர் தன் நாடகம் மூலம் நன் கொடை... என அருள் வௌ்ளம் பாயத் தொடங்கியது. தன்னை தரிசிக்க வரும் அடியவர்கள் பலரிடம் காஞ்சி மாமுனிவர் “மயிலாப்பூர் கற்பகாம்பாளுக்கு ஒரு பாட்டி காசுமாலை செய்யறா நீ போய் பவுன் கொடு” என்று உத்தரவிட பலர் அனுதினமும் காணிக்கை கொடுத்தவண்ணமிருந்தார்கள். உம்மிடி பங்காரு கண்ணன் அவர்கள் தமது கோமுட்டி செட்டியார் வகுப்பின் சார்பாக கூலிச் செலவை ஏற்றுக் கொள்ள, காசுமாலை தயாரானது.

காசு மாலையை முதலில் பெரியவரிடம் காண்பித்து பிறகு அம்பிகைக்கு சாற்ற எண்ணம் கொண்டு காஞ்சி சென்றனர். தையல் இலையை பரப்பி அதில் மாலையை வைக்க உத்தரவிட்ட மஹான் அதை நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டு, கண்மூடி தியானம் செய்து அதற்கு புஷ்பம் தூவி அர்ச்சித்து வழிபட்டார். பிறகு மாலையுடன் மங்கையர்கள் எடுத்துச் சென்றிருந்த மங்கள திரவியங்களான புடவை, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், வளையல்கள், பழம், புஷ்பம், கன்னிகைக்கு பாவாடை, ரவிக்கை, முதலான மங்கலப் பொருள்களையும் பார்த்து விட்டு ‘குழந்தைக்கு பழம் கொடுக்க வேண்டுமே’ என்று சொல்லி கூட்டத்தை உற்று பார்த்து விட்டு “இங்குவா” என்று கைஜாடை செய்ய கூட்டத்தை விலக்கிக் கொண்டு அதி சுந்தரியாய் ஒரு குழந்தை முன்னே வந்து பெரியவரிடம் கையை நீட்டியது. மஹான் பழத்தை அதனிடம் தந்தார். அதைப் பெற்றுக் கொண்டு கூட்டத்தினுள் சென்று மறைந்தது குழந்தை. அந்த குழந்தை எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது.

அதன் பின் அவர்கள் சென்னை வந்து நல்ல நாளில் கோலாகலமாக கற்பகாம்பாளுக்கு காசு மாலையை சாற்றினார்கள். குருபாட்டி ‘கனவில் கண்டதை நினைவில் கண்டு’ மகிழ்ந்தார். அவரது சீடர்களான மாதரசிகளும், மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைந்தனர். மாலை சார்த்தப்பட்ட உடன் கோவிலில் அம்மன் சன்னிதிக்குள் எங்கிருந்தோ ஒரு பசுமாடு கூட்டத்தை தள்ளிக் கொண்டு வந்து கற்பகத்தை சிறிது நேரம் பார்த்துவிட்டு மீண்டும் வந்த வழியே சென்றது. அந்தக் காட்சி பக்தர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. கற்பகாம்பாளுக்கு காசுமாலை சாற்றிப் பார்க்க ஆசை கொண்ட காஞ்சி மஹான், முதலில் பாட்டியின் கனவில் வந்து ஆரம்பித்த விளையாட்டின் முடிவில் மாலை சாற்றப்பட்ட அம்பிகையை கோ வடிவில் வந்து தரிசித்ததாகவே அனைவரும் உணர்ந்து அளவிலா ஆனந்தம் கொண்டனர்.

எந்த உருவிலும், எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து அருள் புரியும் அருந்தவவேந்தரன்றோ காஞ்சி மஹா பெரியவர்!

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI SADHGURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"பெரியவாளை ஏமாற்றவும் முடியாது; (தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது"

"மஹா பெரியவாவின் சரித்ரம்" - Part 436 HAPPY THURSDAY MORNING 28 November 2019

ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே என்ற புத்தகத்திலிருந்து…

பெரியவாளுக்குப் பசி-தாகம்-தூக்கம் என்பதற்கெல்லாம் நேர ஒதுக்கீடு கிடையாது. பிக்ஷை' பண்ண வேண்டியிருக்கிறதே!' என்பது போல விட்டேற்றியாகப் பிக்ஷை செய்வார்கள்.

ஆனால், அவருக்குத் தொண்டு செய்யும் பக்தர்களுக்கு அப்படி இருக்க முடியுமா?

காலம் கடந்து கொண்டு இருப்பதை, வயிறு நினைவூட்டுகிறது. பெரியவாள் பிக்ஷை செய்யாதிருக்கும்போது, இவர்கள் உணவு கொள்ள முடியாதே? அப்படி ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது.

சாயங்காலம் மணி நாலு ஆனாலும், உணவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்,பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்

.அணுக்கத் தொண்டர்களுக்கு ஆத்திரமாக வரும். என்ன செய்ய? பெரியவாளுக்கு நினைவுபடுத்த முடியுமா? அல்லது பக்தர்களைத்தான் விரட்ட முடியுமா?

துணிச்சலான ஒரு தொண்டர்,ஓர் உபாயம் கூறினார்.

பெரியவாள் அறையில் அவர்கள் கண்ணில் படுகிற மாதிரி ஒரு டைம் - பீஸ் இருக்கும். அதை அவ்வப்போது பார்க்கவும் செய்வார்கள்."இதைப் பாருங்கோடா...மணி மூணரை ஆகியிருக்கும் .போதே கடிகாரத்தின் முள்ளைத் திருப்பி நாலரை ஆக்கி விடுகிறேன்..சரியா?- துணிச்சல் தொண்டர். உடன் உழைக்கும் நாலைந்து பேரும் 'சரி' என்று தலையாட்டினார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அன்றைக்கு கடிகாரத்தையே பார்க்கவில்லை பெரியவாள்.ஒரு மணி நேரம் தள்ளி வைத்து மணி ஐந்தைக் காட்டியதும் சாவகாசமாக எழுந்தார்கள், பிக்ஷைக்கு. நாலைந்து நாள்கள் இப்படியே கழிந்தன.பெரியவாளை, கொஞ்சம் ஏமாற்றிவிட்ட அசட்டுத் திருப்தி தொண்டர்களுக்கு

ஒரு பக்தர் வந்தார்.பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி.

"பெரியவாள்...சாட்சாத் பரமேஸ்வரன் அவதாரம்..சுத்தஸத்வஸ்வரூபம்..ஸ்படிகம் மாதிரி.. சச்சிதானந்தம்... ஞானத் திருவுரு..." என்றெல்லாம் மனமுருகித் தோத்திரம் .செய்தார்.

அவர் பேசி முடித்ததும், பெரியவாள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.;

" நீ சொல்ற மாதிரியெல்லாம் இல்லை. எங்கிட்ட என்னசக்தி இருக்கு? இதோ இருக்கிற இந்தக் கடிகாரம் கூட சரியான நேரம் காட்றதில்லே ..ரொம்ப வேகமாப் போறது! எங்கிட்ட ஏதாவது அபூர்வ சக்தி இருந்தா, அந்த முள்ளைப் பின்னுக்குத் தள்ளி வைக்க மாட்டேனா?"

துணிச்சல்காரத் தொண்டர் தடாலென்று விழுந்து தேம்பினார்.

"சரி...சரி...எழுந்திரு. எனக்குக் கடிகாரம் வேண்டாம். காலண்டர் போதும். உங்களுக்குப் பசிக்கும் என்கிற எண்ணம் எனக்குத் தெரியாமல் போயிடுத்தே!"

அத்தனை தொண்டர்களும், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்புக் கோரினார்கள்.

பெரியவாளை ஏமாற்றவும் முடியாது;(தர்மத்திலிருந்து) மாற்றவும் முடியாது

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI SADHGURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"ஸ்படிகமாலை*

*தெரியாத செய்தி”

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். திடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்துவிட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார...

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம். நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார். அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.
பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார். ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும். அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார். எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார். அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ரநாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர். ஸ்ரீவாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக‘ மாலை அணிந்திருந்தான். சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்‘ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்‘ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும். இது ஸ்படிகத்தின் குணம், தன்மை. ‘ஸ்வேதம்பரராகவும்‘ ‘ஸ்படிகமாகவும்‘ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர். சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக‘ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக‘, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………
என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI SADHGURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"தங்கசாலைக்கு (வள்ளலார் நகர்) ஏன் அந்தப் பெயர்?
அறிவுக் களஞ்சியம் நம் ஸ்வாமிகள் சொன்னது."
கட்டுரையாளர்;ரா.கணபதி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
(கட்டுரையில் ஒரு பகுதி)

பெரியவரைப் பணிய வரும் பக்தர் அனைவரும்
அறிமுகம் செய்துகொள்கையில் ஓர் இளைஞர்
வள்ளலார் நகரிலிருந்து வருகிறேன் என்றார்.

"வள்ளலார் நகரா?"

"ஆமாம் தங்கசாலைக்குத்தான் அப்படி பெயர்
மாறியிருக்கிறது."

"வள்ளல் என்றால் பணத்தை வாரிக் கொடுக்க
வேண்டும்.பணம் அச்சுப் போட்ட சாலை இப்போது
வள்ளலாரின் ஊராகிவிட்டது!" என்கிறார்.

"தங்கசாலை என்றாயே, அப்படியென்றால் பணம்
அச்சுப் போடுகிற இடம் என்று தெரியுமோ?"
என்று அந்த அடியாரைக் கேட்கிறார் .

"தெரியாது" என்கிறார் இளைஞர்.

"தங்கத்தினால் ரோட் போட்டிருந்தது என்று
நினைத்தாயோ" என்று இனிய குறும்பாகக் கேட்கிறார்.

"ஸ்வாமிகள் சொல்லி இப்போதுதான் தங்கக்காசு
தயாரித்ததால் அந்த இடம் தங்கசாலை என்று
பெயர் பெற்றதாகத் தெரிகிறது" என்று அந்த
இளைஞர் சொல்கிறார்.

"அதுவும் தப்பு" 'தங்கசாலை; என்பதே தப்பு"
என்று சிரிக்கிறார் பெரியவர்.
(பின்-குறிப்பு) ஸ்வாமிகள்

"ஸப்த விடங்க ஸ்தலம்"சொல்ல ஆரம்பிக்கிறார்.
கட்டுரை நீளம் அதிகம் போவதால் அதை நான்
டைப் செய்யவில்லை.மன்னிக்கவும்.)

"அதெல்லாம் சரி. இவற்றுக்கு விடங்க க்ஷேத்திரம் என்று ஏன் பெயர் வரவேண்டும்?விடங்கம் என்றால் என்ன?"

பெரியவரே விளக்குகிறார்கள்.

"டங்கம்,டங்கம் என்றால் உளி என்று அர்த்தம்.

கற்சிலை அடிக்கிற உளி மட்டுமில்லை.
தங்கத்திலும்,வெள்ளியிலும் பிரதிமைகள்,
நகைகள் செய்ய உபயோகமாகிற கருவிக்கும்
டங்கம் என்று பெயர்.தேவதச்சனான
விச்வகர்மா டங்கம் முதலிய எந்தக் கருவியும்
இல்லாமலே மனோசக்தியினால் எதையும்
செய்துவிடுவான். அப்படித்தான் வி-டங்கமாக,
அதாவது டங்கத்தின் உதவியில்லாமல் இந்த
இந்த பிம்பங்களையும் செய்திருந்தான்.அதனால்
மூர்த்திகளுக்கே விடங்கர் என்ற பெயர்
வந்து விட்டது"

கூடியிருந்தோரிடையே ஆஹாகாரம் எழும்புகிறது.

"தங்கசாலையைப் பற்றி கேட்டுவிட்டு விடங்க
புராணத்துக்கு ஏன் போனேன் தெரியுமா?" என்று
ஆவலைக் கிளருகிறார் கதாசிரிய ஆசாரியர்கள்.

"நாணயம் பண்ணுமிடத்தில் தங்கக்காசு செய்வதால் அதற்குத் தங்கசாலை என்று பெயரென்று நினைத்தால் அது தப்பு.இப்போது போல் தங்கம் அதிக விலை விற்காத நாளில்கூடத் தங்கக் காசைவிட வெள்ளி, தாமிரம் முதலான மற்ற உலோகக் காசுதான் அதிகம் போட்டிருப்பார்கள். அதனால் தங்கசாலை என்பதற்குக் காரணம் வேறே.
காசுகளில் சித்திரம்,எழுத்து இவற்றைப்
பொறிப்பதற்கும், அதன் மாற்று,எடை எல்லாம்
சுத்தமாய் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்தே
தெரிந்து கொள்வதற்கும் உப்யோகமாகிற
உளி போன்ற ஒரு கருவிக்கு "டங்கம்" என்றே
பெயர்.காசு பண்ணும் கிடங்கில் இதற்கெனவே
சிப்பந்திகள் உட்கார்ந்து கொண்டு, காசுகளை
டங்கத்தால் தட்டிக்கொண்டே சரி பார்ப்பார்கள்.
அந்த ஓசை ஜல்ஜல் என்று வெளியிலே ஓயாமல்
கேட்டுக் கொண்டிருக்கும்.அதனால் நாணயம்
செய்யுமிடத்துக்கே "டங்கசாலா" என்று பெயர்
வந்துவிட்டது. அது சம்ஸ்கிருதப் பெயர்,
வடதேசத்தில் கூட வழங்கும் பெயர்.
அதைத்தான் நாம் தங்கசாலை என்று சொல்கிறோம்!
தமிழ்ப்பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்!
"பொருட் செல்வத்தைக் கொடுத்தவர்களையே
வள்ளல் என்பது வழக்கம்.அருள் செல்வத்தைத்
தந்தவர்களில் அருட்பா பாடினவரைத்தான்
"வள்ள"லுக்கு மரியாதைக ."யார்" சேர்த்து
"வள்ளலார்" என்கிறோம்.

அநித்தியமான பொருளைக் குறிப்பிடும்
தங்கசாலைப் பெயரும் அநித்யமாகப் போய்
விட்டது. நித்தியமான அருளைக் குறிக்கிற
வள்ளலார் பெயர் அதற்கு வந்திருக்கிறது"
என்று முடித்தார் காஞ்சி வள்ளற் பெருமான்

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI SADHGURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"தங்கசாலைக்கு (வள்ளலார் நகர்) ஏன் அந்தப் பெயர்?
அறிவுக் களஞ்சியம் நம் ஸ்வாமிகள் சொன்னது."
கட்டுரையாளர்;ரா.கணபதி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
(கட்டுரையில் ஒரு பகுதி)

பெரியவரைப் பணிய வரும் பக்தர் அனைவரும்
அறிமுகம் செய்துகொள்கையில் ஓர் இளைஞர்
வள்ளலார் நகரிலிருந்து வருகிறேன் என்றார்.

"வள்ளலார் நகரா?"

"ஆமாம் தங்கசாலைக்குத்தான் அப்படி பெயர்
மாறியிருக்கிறது."

"வள்ளல் என்றால் பணத்தை வாரிக் கொடுக்க
வேண்டும்.பணம் அச்சுப் போட்ட சாலை இப்போது
வள்ளலாரின் ஊராகிவிட்டது!" என்கிறார்.

"தங்கசாலை என்றாயே, அப்படியென்றால் பணம்
அச்சுப் போடுகிற இடம் என்று தெரியுமோ?"
என்று அந்த அடியாரைக் கேட்கிறார் .

"தெரியாது" என்கிறார் இளைஞர்.

"தங்கத்தினால் ரோட் போட்டிருந்தது என்று
நினைத்தாயோ" என்று இனிய குறும்பாகக் கேட்கிறார்.

"ஸ்வாமிகள் சொல்லி இப்போதுதான் தங்கக்காசு
தயாரித்ததால் அந்த இடம் தங்கசாலை என்று
பெயர் பெற்றதாகத் தெரிகிறது" என்று அந்த
இளைஞர் சொல்கிறார்.

"அதுவும் தப்பு" 'தங்கசாலை; என்பதே தப்பு"
என்று சிரிக்கிறார் பெரியவர்.
(பின்-குறிப்பு) ஸ்வாமிகள்

"ஸப்த விடங்க ஸ்தலம்"சொல்ல ஆரம்பிக்கிறார்.
கட்டுரை நீளம் அதிகம் போவதால் அதை நான்
டைப் செய்யவில்லை.மன்னிக்கவும்.)

"அதெல்லாம் சரி. இவற்றுக்கு விடங்க க்ஷேத்திரம் என்று ஏன் பெயர் வரவேண்டும்?விடங்கம் என்றால் என்ன?"

பெரியவரே விளக்குகிறார்கள்.

"டங்கம்,டங்கம் என்றால் உளி என்று அர்த்தம்.

கற்சிலை அடிக்கிற உளி மட்டுமில்லை.
தங்கத்திலும்,வெள்ளியிலும் பிரதிமைகள்,
நகைகள் செய்ய உபயோகமாகிற கருவிக்கும்
டங்கம் என்று பெயர்.தேவதச்சனான
விச்வகர்மா டங்கம் முதலிய எந்தக் கருவியும்
இல்லாமலே மனோசக்தியினால் எதையும்
செய்துவிடுவான். அப்படித்தான் வி-டங்கமாக,
அதாவது டங்கத்தின் உதவியில்லாமல் இந்த
இந்த பிம்பங்களையும் செய்திருந்தான்.அதனால்
மூர்த்திகளுக்கே விடங்கர் என்ற பெயர்
வந்து விட்டது"

கூடியிருந்தோரிடையே ஆஹாகாரம் எழும்புகிறது.

"தங்கசாலையைப் பற்றி கேட்டுவிட்டு விடங்க
புராணத்துக்கு ஏன் போனேன் தெரியுமா?" என்று
ஆவலைக் கிளருகிறார் கதாசிரிய ஆசாரியர்கள்.

"நாணயம் பண்ணுமிடத்தில் தங்கக்காசு செய்வதால் அதற்குத் தங்கசாலை என்று பெயரென்று நினைத்தால் அது தப்பு.இப்போது போல் தங்கம் அதிக விலை விற்காத நாளில்கூடத் தங்கக் காசைவிட வெள்ளி, தாமிரம் முதலான மற்ற உலோகக் காசுதான் அதிகம் போட்டிருப்பார்கள். அதனால் தங்கசாலை என்பதற்குக் காரணம் வேறே.
காசுகளில் சித்திரம்,எழுத்து இவற்றைப்
பொறிப்பதற்கும், அதன் மாற்று,எடை எல்லாம்
சுத்தமாய் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்தே
தெரிந்து கொள்வதற்கும் உப்யோகமாகிற
உளி போன்ற ஒரு கருவிக்கு "டங்கம்" என்றே
பெயர்.காசு பண்ணும் கிடங்கில் இதற்கெனவே
சிப்பந்திகள் உட்கார்ந்து கொண்டு, காசுகளை
டங்கத்தால் தட்டிக்கொண்டே சரி பார்ப்பார்கள்.
அந்த ஓசை ஜல்ஜல் என்று வெளியிலே ஓயாமல்
கேட்டுக் கொண்டிருக்கும்.அதனால் நாணயம்
செய்யுமிடத்துக்கே "டங்கசாலா" என்று பெயர்
வந்துவிட்டது. அது சம்ஸ்கிருதப் பெயர்,
வடதேசத்தில் கூட வழங்கும் பெயர்.
அதைத்தான் நாம் தங்கசாலை என்று சொல்கிறோம்!
தமிழ்ப்பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்!
"பொருட் செல்வத்தைக் கொடுத்தவர்களையே
வள்ளல் என்பது வழக்கம்.அருள் செல்வத்தைத்
தந்தவர்களில் அருட்பா பாடினவரைத்தான்
"வள்ள"லுக்கு மரியாதைக ."யார்" சேர்த்து
"வள்ளலார்" என்கிறோம்.

அநித்தியமான பொருளைக் குறிப்பிடும்
தங்கசாலைப் பெயரும் அநித்யமாகப் போய்
விட்டது. நித்தியமான அருளைக் குறிக்கிற
வள்ளலார் பெயர் அதற்கு வந்திருக்கிறது"
என்று முடித்தார் காஞ்சி வள்ளற் பெருமான்

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
Sri Neelakal Ramu Sastrigal holds a legacy in Kamakshi Amman Kovil Sthanika Parampara. They have been Sthanika in Kamakshi Amman kovil for generations and generations. He and his son Sri Shyama shares many experiences with MahaPeriyava and intricate details of Sri Kamakshi Amman Kovil. Mama did Veda Adhyayanam along with Sri Pudhu Periyava in Keezhambi […

 
OM SRI SADHGURUBHYO NAMAH

"குருவே சரணம்"

அருள் செய்வதிலும் நாடகம்."
(பேரனுக்கு வைசூரி போட்டு கண் பார்வை போய் விட்டெதென்று கவலையுடன் வந்த ஒரு அம்மா)
("பெற்றம்" என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுபோல் பேசி, வருத்தத்துடன் வந்த ஒருவருக்கு அவர் விரும்பியபடி பேரனுக்குப் பார்வை வர ஒரு நீண்ட கதையையும் சொல்லி வழிகாட்டிய அனுக்கிரகம் இது.)

கட்டுரையாளர் கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு முறை பேரனுக்கு வைசூரி போட்டு கண் பார்வை போய் விட்டெதென்று கவலையுடன் ஒரு அம்மா வந்தார்.அவரை கவனிக்காமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்தார். பேச்சின் இடையில் "பெற்றம்" என்றால் என்ன? என்று பெரியவா கேட்டார்.

பேசிக்கொண்டிருந்தவர் அதற்குக் "கால் நடைகள்" என்று பொருள் கூறி: திருப்பாவையில் கூட" பெற்றம் மேய்த்துண்ணும் குலம்" என்று வந்திருக்கிறதே என்று தான் சொன்னதை நிறுவினார். இன்னும் எங்கேயாவது வந்திருக்கிறதா என்று கேட்டார். பெரியவா.

ஆமாம் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றார் அவர்.

அவர் அது சரி எந்த இடத்தில் எதற்காகப் பாடினார் தெரியுமா? சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ப்ரவை நாச்சியார் என்பவரைக் கல்யாணம் செய்துகொண்டு, மீண்டும் சங்கிலி நாச்சியார் என்பவரைத் தேடி போனார். அவள் மிக எச்சரிக்கையாக,தன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம்- அதிலும் அந்த ஊர்க்கோயிலில் உள்ள இறைவனைத் தொட்டுச் செய்ய வேண்டும், அப்போதுதான் திருமணம் என்று சொல்லி விடுகிறாள். சிவபெருமான்தான் தம்பிரான் தோழராயிற்றே! பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவில் சங்கிலி சொன்னதற்கு சுந்தரரும் ஒப்புக்கொண்டார். நேரே ஆதிபுரீஸ்வரரிடம் போனார். நடந்ததைச் சொன்னார். நாளைக்கு நான் சத்தியம் செய்து கொடுக்கும்போது நீ இந்த சந்நதியில் இல்லாமல் வெளியே மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்துவிடு.ஏனெனில் என் சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால் உன்மேல் ஆணையிட முடியாது என்கிறார்.சுவாமி ஒப்புக்கொண்டார்.

அதோடு நிற்காமல் சுவாமி, சங்கிலி நாச்சியார் கனவில் வந்து "சுந்தரரை மகிழ மரத்தடியிலே சத்தியம் பண்ணித் தரச் சொல்லு" என்று சொல்லிவிட்டு வேடிக்கைப் பார்த்தார். அவளும் கோயிலுக்கு சுந்தரருடன் வந்ததும்,சுவாமி மேல் ஆணையிட வேண்டாம்.இந்த மரத்தடியில் சத்தியம் செய்யுங்கள் போதும் என்று சொல்லி, இக்கட்டில் அவரை மாட்டிவிட்டாள். சுந்தரர் பரமன் திருவிளையாடலைத் தெரிந்து கொண்டார். வேறு
வழியில்லாமல் சத்தியம் செய்தார். சிறிது நாட்கள் கூட அதைக் காப்பாற்ற முடியவில்லை.திருவாருர் தியாகேசனைப் பிரிந்து இருக்க இயலாமல் கிளம்பிவிட்டார். திருவொற்றியூர் எல்லயைத் தாண்டியதும் இரண்டு கண்களும் பார்வை இழந்தன. சத்தியம் தவறினவர் தோழனானாலும் இறைவன் நீதி எல்லோருக்கும் சமம்தான்!" தண்டித்தாலும் நீயே கதி!" என்று சிவனைப் போற்றி சுந்தரர் ஒரு பதிகம் பாட ஒரு கண் சரியாகி விட்டது. இப்படிக் கதையை வந்த அம்மாவுக்காகவே சொன்ன பெரியவா,

"ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்

சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,

ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே!
.
"இந்தப் பதிகம் பாடினா போன கண் திரும்பி வந்து விடும்" என்று முடித்தார். இப்படியும் அருள் செய்வதில் ஒரு நாடகமே நடத்தக் கூடியவர் பெரியவா. அந்த தேவாரப் பதிகத்தை தேடி எடுத்து, அந்த அம்மாவை தினமும் பாராயணம் பண்ணச் சொல்லி பேரனுக்குப் பார்வை கிடைக்கச் செய்தார்.

ஏதோ, "பெற்றம்" என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுபோல் பேசி, வருத்தத்துடன் வந்த ஒருவருக்கு அவர் விரும்பியபடி பேரனுக்குப் பார்வை வர ஒரு நீண்ட கதையையும் சொல்லி வழிகாட்டிய அனுக்கிரகம் இது. சுந்தரர் திருவாரூருக்குப் போய் வேறொரு பதிகம் பாடி மற்றொரு கண் பார்வையும் பெற்றுவிட்டதாக வரலாறு.

இரண்டு பதிகங்களின் மகிமையை உணர்ந்து, பயன் பெற்ற ஒருவர் இன்னும் சாட்சியாக நம்மிடையே இருக்கிறார்

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
Last edited:
OM SRI SADHGURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"PINCODE" நம்பரை வைத்தே பக்தர்களின் சந்தேகத்தைப் ......................போக்கிய பெரியவா"
(மந்திரங்கள் பண்ணி வைக்கிற வாத்யாருக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும்,செய்துக்க்கிற உங்களுக்கும் அர்த்தம் புரியாவிட்டாலும்,எந்த கர்மாவிற்கு எந்த மந்திரம் சொல்லணுமோ அதை சரியாகச் சொன்னா அதற்குண்டான பலனை அது கொடுக்கும். அதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.

(முன்பே இதை போட்டுருக்கேன்-ஆனால் இது இன்னும் சுவாரஸ்யம் +விரிவான விளக்கம்.)

கட்டுரை-ரா.வேங்கடசாமி

காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து

புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

இந்த சம்பவம் ஆந்திராவில் உள்ள செகந்திராபாத்தில் நடந்தது.

அங்கே முகாமிட்டு இருந்தபோது தரிசனத்துக்கு வந்த சில பெரிய ரயில்வே அதிகாரிகள் ஒரு குறையை, அவரது கவனத்திற்கு கொண்டு வந்து,அதை நிவர்த்தி செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

அவர்களது குறைதான் என்ன?

"நாங்களெல்லாம் பெரியவா அனுக்கிரகத்தினாலே கர்மானுஷ்டானங்களை எல்லாம் கூடியவரை விடாம பண்ணிண்டு வர்றோம். இந்த ஊர்லே பூஜை,சிராத்தம், தர்ப்பணாதிகள் செய்து வைக்க சரியான, வேதம் படித்த சாஸ்திரி இல்லை. ஒரே ஒருத்தர் தான் இருந்தார். ஆனால் அவருக்கு சொல்லி வைக்கிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்லத் தெரியல்லே...அர்த்தம் தெரியாமே கர்மாக்களைப் பண்றதை எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா ..அதனாலே மகான்தான் ஸ்ரீ மடத்திலிருந்து ஒரு நல்ல படிச்ச சாஸ்திரியை இந்த ஊருக்கு அனுப்பித் தரணும்."

இது அவர்களது குறை.

சில நிமிடங்கள் மகான் யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

"உங்கள் பிள்ளைகள் சொல்றதிலேயும் நியாயம் இருக்கு" என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஸ்ரீ மடத்துக்கு அன்று வந்திருந்த தபால்களைக் கொடுக்க போஸ்ட்மேன் அங்கு வந்தார். தபால்கள் மகானின்முன் வைக்கப்பட்டன.ஒவ்வொரு கடிதத்தையும் நிதானமாய் பார்த்துக் கொண்டு இருந்த மகான், ஒரு கடிதத்தை மட்டும் எடுத்து அதில் குறிப்பிட்டு இருந்த "பின் (PIN) என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா?" என்று கேட்டார்.

அங்கே குழுமியிருந்த அதிகாரிகள் மெத்தப் படித்தவர்கள்.அவர்கள் ஒவ்வொருவரிடமும்

"உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

மகான் கேட்ட இந்த சாதாரண கேள்விக்குப் பொருள் தெரியாமல் விழித்தனர் அதிகாரிகள்.

அதைத் தொடர்ந்து தபால் கொண்டு வந்திருந்த தபால்காரரிடமும் மகான் அர்த்தத்தைக் கேட்டார். தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய நபருக்கே அதன் அர்த்தம் தெரியவில்லை.மடத்து சிப்பந்தி ஒருவரை அழைத்து ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி அதை எடுத்து வரும்படி பணித்தார். புத்தகம் வந்ததும் அதிலிருந்து ஒரு பக்கத்தில் வெளியான விளக்கத்தை சுட்டிக் காட்டினார்.

"PIN" என்பதற்கு "POSTAL INDEX NUMBER" என்று விரிவாக்கம் செய்யப்பட்டு இருந்தது.
முகத்தில் புன்னகை தவழ அந்த சர்வேஸ்வரன் எதிரில் இருந்த அதிகாரிகளைப் பார்த்து சொன்னார்.

"நீங்களெல்லாம் நிறையப் படிச்சு பெரிய உத்தியோகம் பார்க்கிறவா.உங்களுக்கு சாதாரண தபால்லே பயன்படுத்துகிற PIN-க்கு அர்த்தம் தெரியல்லே. கடுதாசிகளை கொண்டு வந்து கொடுத்த போஸ்ட்மேனுக்கும் அர்த்தம் சொல்லத் தெரியல்லே. ஒருவேளை "பின்கோடு"ன்னு எழுதின ஆசாமிக்குக் கூட இது தெரியாம இருக்கலாம்.ஆனா பின்கோடு போட்டிருந்த கட்டத்திலே எழுத வேண்டிய நம்பரை சரியா எழுதினா போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு சரியா போற தபால் மாதிரிதான் மந்திரமும்.

மந்திரங்கள் பண்ணி வைக்கிற வாத்யாருக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும்,செய்துக்க்கிற உங்களுக்கும் அர்த்தம் புரியாவிட்டாலும்,எந்த கர்மாவிற்கு எந்த மந்திரம் சொல்லணுமோ அதை சரியாகச் சொன்னா அதற்குண்டான பலனை அது கொடுக்கும். அதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.

அதனாலே இருக்கிற புரோகிதரை நிறுத்தாம ,நீங்கள் செய்யவேண்டிய கர்மாக்களை சிரத்தையுடன் செய்து வாருங்கள்.எந்தக் குறையும் வராது"என்றார் விளக்கமாக.

அதிகாரிகள் விக்கித்து நின்றுவிட்டனர். ஒரு சாதாரண வார்த்தை மூலம், தங்களுக்கு ஏற்பட்ட பெரிய சந்தேகத்தைப் போக்கிவிட்ட அந்த ஜகத்குருவின் மேன்மையை உணர்ந்து மெய்சிலிர்த்தனர்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI SADHGURUBHYO NAMAH

"குருவே சரணம்"

நா..... சொல்ற வழில போ!....

பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதி வந்தார்கள். நல்ல வஸதியானவர்கள்.

"கார்லயா வந்தேள்?....."

"ஆமா...... பெரியவா"

"ட்ரைவர் வெச்சிண்டு வந்தியா? நீயே ஒட்டிண்டு வந்தியா?...."

"நாந்தான் ஓட்டிண்டு வந்தேன் பெரியவா......"

"எந்த வழியா வந்தே?....."

"காவேரிப்பாக்கம் வழியா வந்தோம்...."

"நீ.....திரும்பி போறச்சே....நா.... சொல்ற வழில போ!...."

"ஸெரி..... பெரியவா..."

வழியை சொன்னார்.......

"அந்த வழில, அந்த க்ராமத்ல, ஒரு பெரிய ஶிவன் கோவில் வரும்... அந்த கோவில் வாஸல்ல, ஒரு வயஸான தாத்தாவும் பாட்டியும் ஒக்காந்துண்டிருப்பா!....நீ.... அவாளப் போயி பாரு! நா.... அனுப்பிச்சேன்னு சொல்லு! அதோட, முக்யமா.... அவா..... என்ன கேக்கறாளோ... அத... பண்ணிக் குடுப்பியா?...."

"காத்துண்டிருக்கோம் பெரியவா!......"

ப்ரஸாதம் குடுத்தனுப்பினார். அவர்களும் பெரியவா சொன்ன வழியில், அந்த க்ராமத்துக்கு சென்று ஶிவன் கோவிலையும் கண்டுபிடித்தார்கள்.

கோவில் வாஸலில் இருந்த ஒரு சின்ன பெட்டிக் கடையில், மிகவும் ஏழைகள் என்று பார்த்தாலே சொல்லக்கூடிய ஒரு வயஸான தம்பதி அமர்ந்திருந்தனர். சற்று தள்ளி வந்து நின்ற பெரிய காரிலிருந்து இறங்கிய தம்பதி, தங்களை நோக்கி வருவதைக் கண்டனர்.

"எங்களை.....பெரியவா அனுப்பினா......"

"என்னது? பெரியவாளா?......."

"பெரியவா!" என்ற தாரக நாமத்தை கேட்ட மாத்ரத்தில், வயஸால் சுருங்கிய கண்களிலிருந்து கண்ணீர் 'குபுக்' கென்று வெளியே ஓடிவந்தது......

"பெரியவா.... ஒங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணுமோ..... அத....என்னை பண்ணித் தர சொல்லிருக்கா...!

"ஆண்டவா!....எங்கியோ கெடக்கோம்...! ஆனாலும், எங்களோட தெய்வம் எங்களை பாத்துண்டே இருக்கே!..."

குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் அந்த பெரியவர்.

"தயங்காம சொல்லுங்கோ.! ஒங்களுக்கு என்ன வேணும்?.... பணம்-னா கூட, தயங்காம சொல்லுங்கோ!..."

"பணத்தை வெச்சிண்டு நாங்க என்ன பண்ணப் போறோம்? எங்களுக்கு இனிமே என்ன வேணும்? ஸாகறதுக்குள்ள, காஶிக்கு மட்டும் ஒரேயொரு தடவை போகணும்! அங்க.... கங்கை-ல ஸ்நானம் பண்ணணும், கண்குளிர அந்த விஶாலாக்ஷியையும், விஶ்வநாதரையும், அன்னபூரணியையும் தர்ஶனம் பண்ணணும்...... அவ்ளோதான்! எங்களால அங்கல்லாம் இந்த வயஸு காலத்ல, சல்லிக்காஸு இல்லாம, எப்டி போக முடியும்-னு பெரியவாகிட்ட பொலம்பிண்டே இருந்தோம்! ப்ரத்யக்ஷ தெய்வம்! "

"ரொம்ப ஸந்தோஷம்! கவலையேபடாதீங்கோ! நீங்க ரெண்டு பேரும், ஸௌகர்யமா காஶிக்கு போறதுக்கும், அங்க... ஆசை தீர கங்கைல குளிக்கறதுக்கும், ஸ்வாமியை தர்ஶனம் பண்றதுக்கும், நா......ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு, ஒங்க ரெண்டு பேரோட ஆசையை நெறவேத்தி வெக்கறேன்..! பெரியவா அந்த பாக்யத்தை எனக்கு தந்ததுக்கு, பெரியவாளுக்கும், ஒங்களுக்கும் நமஸ்காரம் பண்ணிக்கறேன்....."

பணக்கார பக்தருக்கு, அவர்களுக்கான காஶி யாத்ரை ஏற்பாடு பண்ணுவது என்பது, ஒரு பெரிய கார்யமாக இல்லை. காஶியில் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டு, தம்பதிகளையும் தகுந்த துணையோடு அனுப்பி வைத்தார்.

மோக்ஷபுரியான காஶியில்........

ஸூர்யோதயம் ஆகும் ஸமயம், சுழித்துக் கொண்டு ஓடும் பவித்ர கங்கையில் அந்த ஏழை, முதிய தம்பதிகள், ஸங்கல்ப ஸ்நானம், பஞ்ச கங்கா ஶ்ராத்தம், தீர்த்த ஶ்ராத்தம், விஶாலாக்ஷி ஸமேத விஶ்வநாதர், அன்னபூரணி தர்ஶனம், எல்லாவற்றையும், மிகுந்த மனநிறைவோடு, பெரியவாளை ஒவ்வொரு க்ஷணமும் ஸ்மரித்துக் கொண்டே, செய்து முடித்தார்கள். ஸௌகர்யமான ஜாகை, போஜனம், வண்டி எல்லாமே அழகாக ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது.

மறுநாள், கங்கையில் மூழ்கி ஸ்நானம் பண்ணும்போது, "கங்காதரனின் ஆக்ஞையால், என்னைத் தேடி வந்த உங்களை, இனி என்றென்றும் என்னுடைய மடியிலேயே தாங்கிக் கொள்வேன்" என்று சொல்லாமல் சொல்லி, அன்பாக அரவணைத்து, தன் மோக்ஷப்ரவாஹத்தில் கலந்து கொண்டுவிட்டாள் அன்னை கங்கா தேவி!

அவர்களுடைய ஶரீரம் கூட கிடைக்கவில்லை!

காஶியில் மரித்தால் மோக்ஷம்! பெரியவா இந்த ஏழைத் தம்பதிக்கு பண்ணிய ஸௌகர்யமான ஏற்பாடோ மோக்ஷ ஸாம்ராஜ்யம்! அதுவும்..... ஜோடியாக!

பெரியவா ஒவ்வொரு ஜீவனுக்கும் எங்கே, என்ன, எப்படி, முடிவு பண்ணியிருக்கிறார் என்பது அல்ப ஜீவன்களான நமக்கு என்ன தெரியும்?

பெரியவா ஸ்மரணை ஒன்றே நமக்கு காஶி, கங்கை, மோக்ஷம்!

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
காசியில் தொலைந்த பை !!

பெரியவாளுடைய ‘முரட்டு’ பக்தர்களுள் ஒருவர் கல்யாணசுந்தரமையர்.

ஒருமுறை காசிக்குப் போய் தன் அப்பாவுக்கான ஸ்ராத்தாதிகளை பண்ணவேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை. அடிக்கடி காசிக்கு போய்வரும் மற்றொரு பக்தரிடம் காசியில் உள்ள சங்கர மடத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, தன் பயணத் திட்டத்தை அழகாக தயார் பண்ணிக்கொண்டார். பெரியவாளுடைய அனுக்ரகத்துடன் காசி போய் சேர்ந்து த்ருப்தியாக கார்யங்களைப் பண்ணினார்.

நல்லபடியாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தர்சனம் பண்ணிவிட்டு, சங்கர மடத்துக்கு வருவதற்கு ஒரு சின்ன சந்தைக் கடந்து வரவேண்டும். இவரோ, கையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் பையில் தங்களுடைய டிக்கெட், பணம்,பயண விவரம் என்று எல்லாவற்றையும் பத்திரமாக வைத்து, அந்த பிளாஸ்டிக் பையை ஒரு சின்ன மஞ்சள் துணிப்பைக்குள் பத்திரமாக வைத்திருந்தார். காஞ்சி காமகோடீஸ்வரர் கோவிலுக்குப் போய்விட்டு, வெளிப் பிராகாரத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு தன்னுடைய அடுத்த ‘பிளான்’ என்ன? என்பதற்காக தன்னுடைய ‘bag ‘ கில் இருந்த மஞ்சள் பையை துழாவினால், காணோம்! “பகீர்” என்றது!
“சர்வேஸ்வரா! மஹா ப்ரபோ!” என்று வாய்விட்டே அலறிவிட்டார்! உடலெல்லாம் நடுங்குகிறது. கண்களில் தாரைதாரையாக கண்ணீர்! இனி அடுத்து என்ன செய்வது? ஆகாரத்துக்குக் கூட கையில் சல்லிக்காசு கிடையாது! கண்கள் இருட்டிக் கொண்டு வர, அங்கிருந்த தூணில் சாய்ந்துவிட்டார்! குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால், இவருடைய நிலைமை தெரியாது.
“சர்வேஸ்வரா! ஒன்னை நம்பித்தானே இவ்வளவு தூரம் குடும்பத்தோட கெளம்பினேன்? இப்பிடி என்னை நிர்கதியா தவிக்கவிட்டுட்டியே?” என்று வாய்விட்டு அரற்றினார், புலம்பினார். அவரைக் கடந்து போனவர்கள் இவருடைய பாஷை புரியாததால், பாவம், பகவானிடம் புலம்புகிறார் போலிருக்கு என்று பரிதாபமான பார்வையை வீசிவிட்டுப் போனார்கள். சுமார் ரெண்டு மணிநேரம் இந்த புலம்பல். குடும்பத்தாரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்கள்.
பெரியவாளுடைய அனுக்ரகம் இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது…………குடும்பமே இடிவிழுந்த மாதிரி சோகமாக உட்கார்ந்திருக்கும்போது, சத்தமே இல்லாமல் ஒரு சைக்கிள்
ரிக் ஷா கோவிலுக்கு எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வயஸான ‘பெரியவர்’ இறங்கினார். லுங்கி அணிந்திருந்தார். அவரது கையில் “மஞ்சள் பை”. ரொம்பத் தெரிந்தவர் போல் நேராக கல்யாண சுந்தரமையர் இருந்த இடத்தை நோக்கி வந்தார்……..
“இது ஒன்னோடதா பாரு! வழில தவறவிட்டுட்டு வந்துட்டியே!” என்று கண்டிப்புடன் ஹிந்தியில் சொன்னார். மஹா அதிர்ச்சியுடன் மஞ்சள் பையை வாங்கிக் கொண்டு, அந்த பெரியவருக்கு நன்றி சொல்ல தலையை தூக்குவதற்குள், வந்த வேகத்தில் போய்விட்டார்! கோவிலில் இத்தனை கும்பல் இருக்கும்போது, அந்த பெரியவர் சரியாக இவரிடம் வந்து எப்படி பையைக் குடுத்தார்? அதுவும் ரெண்டு மணி நேரம் கழித்து! வந்தவர் மாயமாக உடனே எப்படி மறைந்தார்?
பைக்குள் எல்லாம் பத்திரமாக அப்படியே இருந்தது. காஞ்சிபுரம் இருக்கும் திசையை நோக்கி விழுந்து விழுந்து கும்பிட்டு, அழுவதைத் தவிர அக்குடும்பத்தாரால் அப்போதைக்கு வேறு எதுவும் பண்ணத் தோன்றவில்லை.
——–
“ஹஸ்தாமலகம்” “உள்ளங்கை நெல்லிக்கனி” யாக இருக்கும் நம் ஆத்மஸ்வரூபமான பெரியவாளை அருகே மிக அருகே என்று நினைத்தால் மிகமிக அருகில் இருப்பார்! அப்பாலுக்கப்பாலாய் என்று எங்கோ இருப்பதாக நினைத்தால், எங்கோ தள்ளி இருப்பதாக தோன்றும். தப்பு நம் பேரில்தான். அவர் எப்போதும், எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்.
 

Latest posts

Latest ads

Back
Top