• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குருவே சரணம்..

OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அதுசரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே இல்லையா?

(நம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்
.நன்றி-10-08-2017தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)

ஒரு சமயம் சென்னையில் திக்விஜயம் பண்ணிண்டிருந்த மகா பெரியவாவழியில் தி.நகர்ல இருக்கிற சிவா-விஷ்ணு ஆலயத்துக்கு விஜயம் பண்ணியிருந்தார். அங்கே சுவாமி தரிசனம் முடிஞ்சதும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் போறதாக திட்டமிட்டிருந்தா. அதே மாதிரியே இங்கேர்ந்து புறப்பட்டா.

மகாபெரியவா நடையாத்திரையா போயிண்டு இருந்த சமயத்துல ஒரு இடத்துல திடீர்னு ஒரு இளைஞன்அவர் முன்னால வந்து நின்னான்.

நெத்திக்கு இட்டுக்காம ஏனோ தானோன்னு இருந்த அவனுக்கு மகாபெரியவா முன்னால வர்றச்சேகாலணியைக் கழட்டிடணும்கற அளவுக்கு கூட மரியாதை தெரியலை.அல்லது நாம எதுக்கு மரியாதைஎல்லாம் தரணும்னு நினைச்சானோ தெரியாது.

அவன் வந்து நின்ன விதமே வம்படியா ஏதோ பிரச்னை செய்யப்போறான்கற மாதிரி தெரிஞ்சதால,சுத்தி இருந்த பக்தர்களும், காவலுக்கு வந்திருந்த ஜவான்களும் அவனைத் தடுக்கப் பார்த்தா. ஆனா, அவன் அதையும் மீறித் திமிறிண்டு வந்து பெரியவா முன்னால் நின்னான்.

எல்லாரும் திகைச்சு நிற்க,பெரியவாளோ அந்த இளைஞனைப் பார்த்து அமைதியாக புன்னகை புரிஞ்சார்

"காஞ்சிபுரத்துல இருக்கிற சங்கராசார்யார் சாமியார்னு சொல்றாங்களே,அது நீங்கதானா?" கொஞ்சம் கூடஇங்கிதமோ, மகாபெரியவாகிட்டே பேசறோம்கற எண்ணமோ இல்லாம கேட்டான் அவன்.

"என்னைப்பத்தி விசாரிக்கறது இருக்கட்டும். மொதல்லே நீ யாரு?என்னங்கறதைச் சொல்லு!" கொஞ்சமும் கடுமை இல்லாம அன்பாகவே கேட்டார் பெரியவா
.
தன் பெயரைச் சொன்ன அவன்,"நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே!" அப்படின்னான்.

"என்னைப்பத்தி நீ எதுக்கப்பா விசாரிக்கறே?"

"இல்லை.மடாதிபதின்னு சொல்லிக்கிட்டு வேலைவெட்டி எதுவும் செய்யாம ஊர் சுத்தறதும், உபதேசம் பண்றதுமா திரிஞ்சுக்கிட்டு இருக்கிறதால என்ன பிரயோஜனம்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்!"

"அதெல்லாம் உபயோகமில்லாத வேலைன்னு உனக்கு யாரு சொன்னா?"

வினாவாகவே தொடர்ந்தது சம்பாஷணை.

"கேட்டதுக்கு பதில் சொல்லாம எதிர்க்கேள்வியாவே கேட்டுக்கிட்டு இருக்கறீங்களே.உங்ககூட பேசிக்கிட்டுஇருக்க எனக்கு நேரம் இல்லை.நான் வேலைக்குப் போயாகணும்!" சொன்ன இளைஞன்,"இந்த மதம், கோட்பாடு, சாஸ்திரம்,சம்பிரதாயம்,சாமியெல்லாம் யாரு உண்டாக்கினாங்கன்னே தெரியலை... .அதையெல்லாம் நம்பிக்கிட்டு.....வேறவேலையில்லாம ..!" வார்த்தைகளை முடிக்காமல் கொஞ்சம் சத்தமாகவே முணங்கினான்.

ஆசார்யா ஒரு நிமிஷம் அவனை உத்துப்பார்த்தார்."அவசரமா உத்யோகத்துக்குப் போயிண்டு இருக்கே போல இருக்கு.எங்கே வேலைபார்க்கறே?" கேட்டார்.

'பின்னே வெட்டியாவா சுத்தமுடியும்.மாசாந்தர உத்யோகம்தான்.கிண்டியில் ஆபீசு!" அலட்சியமாகச் சொன்னான்

"ஓ...கிண்டியில இருக்கா ஒன்னோட அலுவலுகம்? அதுக்கு இந்தப் பாதையில ஏன் போறே?" தெரியாதவர் மாதிரி கேட்டார் பெரியவா.

"பின்னே.இதுதானே கிண்டிக்குப் போற பாதை. இதுலேதான் போகமுடியும்.

"அப்படியா இந்தப்பாதை கிண்டிக்குப் போறதா யார் உனக்கு சொன்னா? இந்தப் பாதையைப் போட்டவாளை ஒனக்குத் தெரியுமா?

"நல்லா கேட்டீங்க.இந்தப் பாதையிலதான் நான் தினமும் போயிட்டு வரேன். இதைப் போட்டவங்க யாருன்னு யாருக்குத் தெரியும். எம் முப்பாட்டங்க காலத்துல யாரோ போட்ட ரோடு. பாதை சரியா இருக்கிறதா தெரிஞ்சுது; போயிட்டு இருக்கேன்!"

சொன்னவனைப் பார்த்து மெதுவா புனகைச்சார் பெரியவா.

"இந்தப் பாதையை யார்போட்டதுன்னு ஒனக்குத் தெரியாது. ஆனா,இது சரியானபாதை.இதுல போனா எந்த இடத்துக்குப் போகலாம்னு தெரிஞ்சிருக்கு. அதனால நீ இந்த வழியா போறே அப்படித்தானே?"

"அட...நான் சொன்னதையே திருப்பிச்சொல்லி அதானேன்னு கேட்கறீங்க? நான் போறதுக்கு மட்டும் இந்த ரோடு இல்லை. யார் கிண்டிக்குப் போகணும்னாலும் இதே பாதைதான். யாராவது என் கிட்டே கேட்டாலும் இதே வழியைத்தான் காட்டுவேன்"--கொஞ்சம் சிடுசிடுப்பாகவே சொன்னான் அவன்.

"ரொம்ப சரியா சொன்னே.ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த வழியாதான் போவே. மத்தவாளுக்கும் அது சரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே இல்லையா? அதைத்தானே நானும் பண்ணறேன். இந்த மதம், சாஸ்திரம், ஆசாரம்,அனுஷ்டானம் இதெல்லாம் யார் உருவாக்கினான்னுஎனக்கு தெரியாது. ஆனா, இதெல்லாம் சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதைன்னு எனக்கு முன்னால இருந்தவா வழிகாட்டி இருக்கா.அதை நம்பிண்டு நான் போறேன்.அதையே மத்தவாளுக்கும் வழியாக் காட்டறேன்.எந்த வழி நல்லதுன்னு தேடித்தேடிப் பார்த்து மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை என்னுது. அதை நான் சரியா பண்ணிண்டு இருக்கறதா நினைக்கிறேன்!" அமைதியாக சொல்லி முடித்தார் பெரியவா.

சட்டுன்னு கொஞ்சம் தள்ளிப்போய் காலணியைக் கழட்டி விட்டுட்டு வந்த அந்த இளைஞன், நடுரோடுனுகூட பார்க்காம அப்படியே சாஷ்டாங்கமா பெரியவா பாதத்துல விழுந்தான்.

என்னை மன்னிச்சுடுங்க சாமீ.தெரியாத்தனமா உங்களைப் பத்தி தப்பா பேசிட்டேன்!" அப்படின்னு சொல்லி அழுதான்.

அதுக்கு அப்புறம் பலகாலம் காஞ்சி மடத்துக்கு அடிக்கடி வந்து பரமாசார்யாளை தரிசனம் பண்ணறதை வழக்கமா வைச்சுண்டு இருந்தான் அந்த இளைஞன்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

தேர் வடத்தைப் பிடித்து இழுத்துட்டு வாங்கோ.."
(குடும்பக் கஷ்டங்கள் அடுக்கடுக்காகச் சொன்ன செல்வந்தருக்கு பரிகாரம் சொன்ன பெரியவா)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-119
.தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

மகா செல்வர் குடும்பம். ஸ்ரீ மடத்துக்கு நிறையக் கைங்கர்யம் செய்தவர்கள். பெரியவாளைச் சாட்சாத் பரமேசுவரனாகவே கருதி வணங்கினார்கள்.

ஆனால்,அந்த குடும்பத்தில் நிம்மதியில்லை . கஷ்டத்தின் மேல் கஷ்டம்.அடுக்கடுக்காகத் துன்பம், அலை அலையாக இடையூறுகள். பரிகாரங்கள் செய்து பார்த்தாகி விட்டது.பலன் ஏதும் கிடைக்கவில்லை.

குடும்பத்தலைவர், பெரியவாளிடம் வந்து ஏறக்குறைய அழுகிற குரலில், தன் கஷ்டங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.

"நான் ஏதாவது குற்றம் குறை சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே?"-பெரியவா.
அவர் தவித்தார்.

"பெரியவா சொல்றதுதான் எங்களுக்கு வேதவாக்கு.. பெரியவா அனுக்ரஹத்துக்காக காத்திண்டிருக்கோம்"

"உங்க ஊர்க் கோயிலில் வருஷா வருஷம் தேரோட்டம் நடக்கும். உன் குடும்பத்தவர்கள்தான் .அதை நடத்திண்டிருந்தா. உன் தகப்பனார் தேரோட்டத்தை நிறுத்து விட்டார். செலவு அதிகம் என்பதோடு, ஆள்படைகளைச் சேர்க்க முடியல்லேன்னு காரணம் காட்டினார். அடுத்த வருஷத்திலேர்ந்து, நான் பண்றேனேன்னு சொல்லுவே நீ. ஆனா, தேர் ஓடுகிற நிலையில் இல்லை;நிறைய ரிப்பேர், ஊர்ல பல கட்சி."

"அப்படியானால் எங்களுக்கு விமோசனமே கிடையாதா? என்று உள்ளூர அழுது கொண்டிருந்தார் செல்வர்.

"ஒரு காரியம் பண்ணு.எந்த ஊரிலாவது தேரோட்டம் நடந்தா, நீங்க எல்லாருமே போய் கொஞ்ச நேரமாவது தேர் வடத்தைப் பிடித்து இழுத்துட்டு வாங்கோ.."

அதற்குப் பின் சுற்று வட்டாரத்தில் எங்கேனும் தேர்த்திருவிழா என்றால்,இந்த செல்வந்தர் குடும்பத்தைஅங்கே பார்க்கலாம். ஆணும் பெண்ணுமாக மற்ற ஜனங்களோடு நின்று, தேர்வடம் பிடித்து இழுத்தார்கள்.

குடும்பக் கஷ்டங்கள்,தேர்ச் சக்கரங்களின் அடியில் மாட்டிக்கொண்டு மண்ணோடு கலந்து விட்டன.

பின்னர்,தன் ஊர் தேர் சீரமைப்புக் குழு அமைத்துப் பழைய தேரைச் செப்பனிட்டு தேரோட்டத்தைத் தொடங்கினார்கள் ஊர் மக்கள். அந்தத் தேர் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

Experience with Mahaperiayava - SHRI Surya Narayanan, COIMBATORE part 2

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: YOU TUBE
 
nramesh​
1575518252480.png

Dec 4​

I never knew that Periyava & Tagore had met each other…Very interesting incident….

It was Navarathri time and Periyava was in Calcutta. It was a grand celebration at Periyava’s camp. Everyday there was a ‘Navaa Varna Pooja’, Sumangali Pooja, Kanya Pooja & many more. She never missed it out. She is a Mami settled in Calcutta. She was also a regular visitor to Sri Rabindranath Tagore’s ashram. After about nine long days to Periyava’s camp, she had been to Tagore’s ashram. Any Calcutta-vaasi is naturally a ‘Devi Upasaka’. And Tagore was a ‘Sri Vidya Upasaka’ but he did had some modern thoughts. Tagore’s command on Literature is known well. Mami had visited Tagore after a short break. Tagore was asking her where were she on those days. She explained that Periyava had come & there were Navavarna pooja, Sumangali pooja, Kanya pooja, etc.

Tagore understood that Periyava was also a Devi Upasaka’.

Tagore , “Does Swamiji do Kanya Pooja with any child or only with Brahmin child?”

Mami, “No! Periyava never deviates from the tradition. He does Kanya Pooja only with Brahmin child”.

Tagore, being one of the world’s highly respected (nobel) liberates , quoted one of the namas from the Sri Lalitha Sahasra Namam : “Aa’brahma keeda Janani” and said “He is a great Devi Upaska, won’t he know the meaning of it? It means SHE is the source of everything, from tiny insects all the way to Brahma (who creates the world). Still he is thinking having only a Brahmin child for Kanya Pooja!”

Mami was very upset to hear someone like Tagore taking a jig at Periyava. She came back to Periyava’s camp & her face was still dull.

Periyava asked, “நேத்தைய பூஜைக்கு வரலையோ?” (“Didn’t you come to puja yesterday?”)

Mami, “இல்லே பெரியவா, தாகூரை பாக்க போய் இருந்தேன்…” (“No – I went to meet Tagore.”), she couldn’t decide ‘to say or not to say’.

Periyava understood and asked “ஏன்? அவர் என்ன பத்தி எதாச்சும் சொன்னாரோ?” (“Did he say anything about me?”)

She couldn’t with hold, told everything what he said with tears.

Periyava smiled & said, “அவரை அதுக்கு அப்புறம் மூணு அக்ஷரம் இருக்கு, அதையும் சேத்து படிக்கச் சொல்லு!” (“There are three more askharams – ask him to include them while reading”.

Now Mami caught up with enthusiasm. She knows there is a fitting reply but couldn’t get it. Was asking Periyava, what it means.

Periyava, “முதலில் அவரிடம் சொல்லு. அப்புறம் பாக்கலாம்…” (“First go and tell, let us see later”)

So without any other way Mami quickly went back to Tagore & said what Periyava said.

Tagore recollected “Aa’brahma keedajanani Varnaasrama Vidhayini Nijaakjaroopa Nigama PunyaaPunya Phalapradha!” Repeated it mentally few times. “Aha! Aha! Is this the way to understand the Devi’s Sahasranama? I never knew it. HE has replied. Swamiji has replied my very own question”.

Tagore told with a bit of excitement and also quickly begged down, “Swamiji is a Mahaan! Have you told what I told to him. Oh! It’s a mistake.”

Immediately, he found out the next step being a honest literal “I must have his darshan. Please arrange but not openly because evry Swamiji will put pressure on me to visit. But I must have his darshan!”

Mami came back satisfied to Periyava. Tagore did have darshan when Periyava visited a ‘Sethiji’s home’ unknown to common public.

Tagore wrote in his daily, “There are Mahaans even today whom I’ve to visit & STILL learn!” of course, without naming Periyava.

Many devotees have said – few devotees have had darshan. Tagore is fortunate to hear from ‘Devi’ herself, this time. Probably out of his Upasana or out of Periyava’s Karunyam …
 
மஹாப் பெரியவாளின் அத்வைத விளக்கம் !

ஒரு இளம் ஸன்யாஸி. காஞ்சிபுரம் வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார் .

"என்ன பண்ணிண்டிருக்கே?"

" அதிகநாள் எந்த எடத்லையும் தங்கறதில்லே பெரியவா .....இப்டி ஊர் ஊராப் போயிண்டிருக்கேன். பிக்ஷையா எது கெடைக்கறதோ ஸாப்டுட்டு, முடிஞ்ச அளவு நெறைய ஜபம் பண்றேன். சில எடங்கள்ள எதாவுது பேசச் சொன்னா எனக்கு தெரிஞ்ச பகவத் விஷயங்களை சொல்லுவேன். அவ்ளோவ்தான்"

நல்லது. அத்வைதப்ரசாரம் பண்ணேன்!

ஆனா எனக்கு அத்வைதம் பத்தி என்ன தெரியும் பெரியவா?" குரலில் தாபம்.

"அது ஒண்ணும் பெரீய்ய விஷயமில்லே! நா ஒரு கதை சொல்றேன். அதை நீ போற க்ராமத்துலல்லாம் சொல்லு!"-

"பெரியவா சொல்றபடி செய்யறேன்.."

"ஒரு ஊர்ல ராமஸாமி ராமஸாமின்னு ஒர்த்தன். வேலைவெட்டி எதுவுமில்லே. ஆளைப் பாத்தா நன்னா ஆஜானுபாஹுவா ஸாண்டோ மாதிரி இருப்பானா........அதுனால ஆத்துல எல்லாரும் அவனை "ஏண்டா, இப்டி தீவட்டி தடியனாட்டம் ஒக்காந்து நன்னா ஸாப்டறியே? எதாவுது வேலை பாத்து பொழைக்க வேணாமான்னு திட்ட ஆரம்பிச்சா. அவனுக்கு ரொம்ப ரோஷம் வந்து எங்கயாவுது வேலை கெடைக்குமான்னு தேடிண்டு இருந்தான்.

அந்த ஊர்ல ஒரு ஸர்க்கஸ் கம்பெனி வந்து டேரா போட்டுது. இவன் அந்த ஸர்க்கஸ் மானேஜர்கிட்டபோனான்.

"ஸார் ஸார் எனக்கு ஒரு வேலை போட்டுக் குடுங்கோ" ன்னு கெஞ்சினான்.

அந்த நேரம் ஸர்க்கஸ்ல ஒரு ஆதிவாஸி ஒர்த்தன் வித்தை காமிச்சுண்டு இருந்தான். என்ன வித்தைன்னா......அவன் இங்க்லீஷ் பேசுவான்! ஆதிவாஸி இங்க்லீஷ் பேசறான்னுட்டு அதுக்குன்னே கூட்டம் வரும். அவன் கொஞ்சநாள் முன்னால செத்துப் போய்ட்டான். அதுனால ஸர்க்கஸ் ரொம்ப டல்லா இருந்துது. ராமஸாமி அந்த ஆதிவாஸி மாதிரி ஆஜானுபாஹுவா, நல்ல தாட்டியா இருந்தானா அதுனால, அந்த ஆதிவாஸியாட்டம் நடிக்கற வேலை கெடச்சுது. பழைய படி கூட்டம் வர ஆரம்பிச்சுது.

சர்க்கஸ் மானேஜர் ஒருநாள் ராமஸாமிகிட்டே "ஏம்பா...இப்டி எத்தனை நாள் ஆதிவாஸியா இங்க்லீஷ் மட்டும் பேசி நடிப்பே? ஸர்க்கஸ்ல மீதி வித்தை எல்லாம் இருக்கே! கயறு மேல பாலன்ஸ் பண்ணி நடக்கறது மாதிரி இதெல்லாமும் கத்துக்கோன்னார். கத்துண்டான். அன்னிக்கி ஆதிவாஸி மாதிரி ட்ரெஸ் பண்ணிண்டு மொத மொத, ஜனங்கள் பாக்கறச்சே, கயறு மேல இத்னாம் பெரிய குச்சியை பாலன்ஸ் பண்ணிண்டு இவன் நடந்துண்டு இருக்கான்.......லேஸா கீழ பாத்தா......ஒரு புலி !

"கரணம் தப்பினா மரணம்"ன்னு யாரோ மைக்குல பேசி இவனை உத்ஸாகப் படுத்திண்டு இருக்கா! கரணம் தப்பிடுமோ? மரணந்தானோ?.... புலியைப் பாத்தானோ இல்லியோ, இவனோட கான்சன்ட்ரேஷன் போயிடுத்து. காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. "தீவட்டி தடியனாவே இருந்திருக்கலாமோ! கொஞ்சம் பாலன்ஸ் போச்சுன்னா புலியோட வாய்க்குள்ளன்னா போவோம்!" ன்னு பயம் வந்துதோ இல்லியோ, அடுத்த க்ஷணம் "தொபுகடீர்"ன்னு பாலன்ஸ் தவறி நேரா புலி மேலேயே போய் விழுந்தான்! அவ்ளோவ் கிட்ட புலியை பாத்ததும் ஸப்தநாடியும் ஒடுங்கிப் போய்டுத்து!
அந்தப் புலி மெதுவா இவன்ட்ட வந்து "டேய், ராமஸாமி! பயப்படாதேடா.......நாந்தான் க்ருஷ்ணஸாமி! ஒனக்கு ஆதிவாஸி வேஷம் குடுத்தா மாதிரி, எனக்கு புலி வேஷம் குடுத்திருக்கா......" ன்னு புலிஸாமி பேசினதும், ராமஸாமியோட பயம் போய்டுத்து!

இதான் அத்வைதம்! எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான்! வெளில வேற வேற ரூபம் தாங்கிண்டு இருக்கு. அவ்ளோவ்தான்!

'ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா...ஶாந்திதா ன்! இதான் அத்வைதம். இந்த கதையை சொல்லு போறும்......" என்று கூறி ஆஸிர்வதித்தார்.

விளையாட்டாக,கதை மாதிரி சொல்லி ஒரு பெரிய அத்வைத சித்தாந்தம் சொல்ல மஹா பெரியவாளாலே சுலபமா முடியும்.
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

மகா பெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதற்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.

ஸ்ரீ சைலத்தை நோக்கி மகாபெரியவா பரிவாரத்தோடு யாத்திரை போயிண்டிருந்தபோது இது நடந்தது கர்னூல் லே வரவேற்பு ஏற்றுக்கொண்டு பிரசங்கமும் பண்ணியாச்சு. மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தபோது ஒரு சின்ன கிராமம். திடீரென்று மழை. "சுவாமி சிவிகையில் ஏறிக்கணும்". “ அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் சிவிகையிலா ? “ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்" மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது.

ஒரு பழைய சிவன் கோயில் தென்பட்டது. அதில் தங்க பெரியவா முடிவு பண்ணியாச்சு. காட்டு தீ போல மஹா பெரியவா சிவன் கோயிலில் மழைக்கு தங்கி காஷாயம் மாற்றிகொண்ட செய்தி பரவ ஊர் ஜனங்கள் அனைவரும் பெரியவாளுக்கு பூரண கும்பத்தோடு வரவேற்பு தந்து அலைமோதினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு யாத்திரை தொடர்ந்தார் பெரியவா.

ஏழுஎட்டு மைல் தூரத்தில் ஒரு கிராமம். அதன் ஜமிந்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்துகொண்டு த ங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய வேண்டிகொண்டார்கள். பெரியவாளுக்கு என்னதோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. விறு விறென்று கொட்டகை போடப்பட்டது.

மறுநாள் காலை. பெரியவா அருகில் இருந்த புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு போயாச்சு. மடத்து காரியஸ்தருக்கு மஹா கவலை. அந்த கிராமத்தில் பூஜைக்கு வில்வமே கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம் ஒன்றை மாதிரிக்கு காட்டி ஊர் ஜனங்களிடம் ஒரு கூடை இதுபோல இருக்கிற வில்வம் கொண்டு வர வேண்டும் என கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை. மணி பத்தரை ஆயிற்று, பெரியவா பூஜை சாமான்களையெல்லாம் பார்த்துவிட்டு "வில்வம் இல்லையா?" என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர், “சுவாமி, ஜமிந்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்” என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துட்டா.

பதினொன்னரை மணியிருக்கும் இன்னும் வில்வம் வரவில்லை. சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே” த்யானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா.

ஒரு சிறு புன்னகை.. ஒரு மடத்து பூஜா கைங்கர்ய பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலுன்னு நிறைய மூணு தள வில்வம்!!!. பெரியவாளுக்கு சந்தோஷம். “”வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.“யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பரிச்சிருக்கா??. வில்வம் தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்”” என்று பெரியவா சொல்லி சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கியாச்சு. “” யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம்வாங்கிக்கட்டும்”” என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே "பெரியவா, இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே, கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்த கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே."

“ ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்”” என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜா, இசை, பிரவசனம், பிரசங்கம் எல்லாம். ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு மட்டும் வயத்திலே புளி கரைச்சுது. நாளைக்கு என்ன பண்றது .

மறுநாள் காலை. வில்வம் கண்டுபிடித்து கொண்டுவந்த பையனையே கெஞ்சினார் " “அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம் மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு திண்ணையிலே வில்வம் கிடைக்குமா பாரேன்!!” சொல்லிவச்சாப்போல் அதே இடத்துலே இன்னிக்கும் ஒரு பெரிய கூடை நிறைய வில்வம்!!! மகாபெரியவா பூஜைக்கு தயாராகி பூஜா திரவியங்களை நோட்டம் விட்டு வில்வகூடையை பார்த்துவிட்டு ஸ்ரீ கார்யத்தை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார்.

"ஆமாம்!, பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டுவச்ச வில்வகூடை தான் இது.” “ யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிரான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா””. என்று மகா பெரியவா உத்தரவு போட ஸ்ரீ கார்யம் மறுநாள் அதிகாலை மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன், தலையிலே கட்டு குடுமி, அழுக்குவேஷ்டி மூலகச்சம், தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான்.

ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே "போய் குளிச்சுட்டு, தலையை முடிஞ்சுண்டு, நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு மத்யானம் வா, சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்””.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி, நெத்தி பூராவிபுதி, எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைஞ்சான்.

எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.

“நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன?

“புரந்தர கேசவலு”’ங்கய்யா.

“தமிழ் பேசறியே, எப்படி??”

“அய்யா எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே பூட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு புழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு.ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே பூட்டாரு. நான் தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ””.

“”அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே ;உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது??”

“நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது ஒருதடவை அப்பாரு, “” ஏலே, புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு மரம் அது தான் வில்வம் மரம். சிவன் சாமிக்கு அது போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை”” அப்படின்னு சொன்னாரு.

மூணு நாள் முன்னே ஜமீன்லே அந்த இலை அர்ஜண்டா வேணும் எண்டு பேசிக்கிட்டாங்க.

சாமி மடதுக்காரங்க கூட இலையைக்காட்டி கேட்டாங்க. மாடு மேக்க்றவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க””

மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே “”புரந்தரகேசவலு உனக்கு என்ன தேவை, ஏதாவது ஆசை இருந்தா சொல்லு மடத்திலேருந்து செய்ய சொல்றேன்”” என்றார்.

"சிவ சிவா!! சாமி, எங்கப்பாரு “ஏலே புரந்தரா, எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்”” கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதை கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் “”புரந்தரா, உன்னுடைய முதல் ஆசையை சொல்லு” என்றார்.

“சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தர தாசர் தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதைகேக்கணும்””. மஹா பெரியவா புலகாங்கிதமானாள். “அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே”””. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார்.

பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன்நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து “” புரந்தரா, உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

“ சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா, நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி, எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க,””

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.”” புரந்தரா, உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ”. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ”” என்றார்.

பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. பெரியவா கரையேறினா.

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ “”கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ “”” புரந்தரகேசவலு சீரியஸ்”” என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா”” .

ஸ்ரீ கார்யதிடம் பெரியவா சொன்னது இது தான்:

“”புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்".

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

மகா பெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதற்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால்தான் மேலே படிக்க முடியும். இல்லையென்றால் வெறும் போஸ்ட் கிராஜூவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.

"நான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை.தொண்ணூறாவது வேணும் ந்யூமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக் கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள்.எண் கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன்.நாராயணசாமி (Narayanaswami) என்ற பெயரை 'Narain' என்று வைத்துக்கொள்ளச்சொல்கிறார். பெரியவா உத்திரவு கொடுத்தால்

'நாரெய்ன்' என்று வைத்துக்கொள்வேன்.

பெரியவா சந்நிதியில் பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்த போது தன் விண்ணப்பத்தைச் சொல்லி முடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்.

இதை சாக்காக வைத்துக்கொண்டு பெரியவாள் ஒரு சிறு சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார்கள்.

"நாற்பது சமஸ்காரங்களில் ஒன்று நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேத மந்திரங்களைக்கூறி நிகழ்த்தப்படும் சடங்கு, நாமகரணம் செய்வதற்கு (பெயர் வைப்பதற்கு)த்தான் வேத மந்திரங்கள் இருக்கின்றன.

நாமவிகரணத்துக்கு (பெயரை சிதைத்து மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.

ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு 'நம்பி,பிம்பி' என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; 'கண்ணன் பெயரை வையுங்கள்' என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்.

நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடாவிட்டாலும் நாராயணா,நாராயணா என்று அழைப்பார்கள்.சுலபமா புண்ணியம் கிடைச்சிடும்.

ந்யூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு.ஒவ்வோர் இங்கிலீஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து,அதைக் கூட்டி ,'நல்லது கெட்டது'

என்கிறார்கள். இது, சுதேசிச் சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண் கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள்....

அது போகட்டும்,ந்யூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. பையனுக்கு நிறைய மார்க் வாங்கணும் என்று கவலை, அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால்,ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான்.அந்த ஆசை சரிதான்;

வழி அவ்வளவு சரியில்லையோ? என்றுசிந்திக்க வைக்கிறது.

கல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள்.

சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்;

மார்க் வரும்.அதற்கு என்ன செய்யணும்.

சரஸ்வதி ஸ்தோத்திரம் இருக்கு.

சௌந்தர்யலஹரியிலே மூணு சுலோகம்,

ஸாரஸ்வத ப்ரயோகம்,மேதா ஸூக்தம்

என்று வேத மந்திரமே இருக்கு.

குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலை,

கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்திரம்

எல்லாம் பாராயணம் செய்யலாம்.

ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம்.

அவர்தான் சகல கலைகளுக்கும்,

ட்ரெஷர் ஹௌஸ் என்பார்கள்.ஹயக்ரீவ

ஸ்தோத்திரம்,மந்திரம் இருக்கு.

மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.

இவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் இங்கிலீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர
சம்மதமாகப் படவில்லை.

"இத்தனை விஷயங்களையும் பொதுவாகச் சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவாள். அவன் கண்கள் கெஞ்சிக் கொண்டிருந்தன.

தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச் சொன்னபோது, மாணவன் பெயரைக்
கேட்கச் சொன்னார்கள் பெரியவாள்.

"நாராயணஸ்வாமி" என்று கம்பீரமாகப்பதில் வந்தது".

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"கலெக்டர் கேட்ட கையெழுத்து."

(மைனர்) பெரியவாளிடம்

(வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!"- கலெக்டர்)
.
கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே தவிர, அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருந்தன. இதோ,அதில் மிகவும் முக்கியமான பிரச்சனை....இன்னும் மகானுக்கு பதினெட்டு வயது ஆகி,அவர் மேஜர் ஆகவில்லை.அதனால், மடத்து தஸ்தாவேஜுகளில் யார் கையெழுத்துப் போடுவது என்பதில் சிக்கல்.ஒரு மைனர் ரிக்கார்டுகளில் கையெழுத்து இட முடியாதே!

அப்போது நடப்பது ஆங்கில சர்க்கார் .மகானிடம் இதுபற்றிப் பேச, அப்போது இருந்த கலெக்டர் மடத்துக்கு வந்தார். அவரை வரவேற்று எதிரில் அமர வைத்தார் மகான்.

அவரிடம் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன், ஒரு பழுத்த பழமான அடியவர் மகானைத் தரிசிக்க வந்து,தட்டுத்தடுமாறி அவருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார். இது அவர் மடத்துப் பீடாதிபதிக்குக் கொடுக்கும் மரியாதை! பீடாதிபதி எந்த வயதினராக இருந்தால் என்ன? அவர்தானே பீடாதிபதி! அவருக்குத்தான் முதியவர் மரியாதை செலுத்துகிறார்.

கலெக்டர் வந்த காரியம் என்னவென்று விசாரித்தார் மகான்.

"பெரியவா இன்னமும் மேஜராகவில்லை .அதனால் மடத்து ரிக்கார்டுகளில் எப்படிக் கையெழுத்திட முடியும் என்பதை விசாரிக்கத்தான் வந்தேன்!" என்றார் கலெக்டர்.

அந்தச் சிறுவயது பெரியவா மெதுவாகத் தன் பேச்சை ஆரம்பிக்கிறார்.

"இந்த ஊருக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆயிற்று?"

"பதினைந்து வருடங்களுக்கு மேலாயிற்று .இப்போது இங்கே கலெக்டராக இருக்கிறேன்!"

"இத்தனை வருடங்கள் ஆனபின், உங்களுக்கு எங்கள் மடத்துச் சம்பிரதாயங்கள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டுமே! எங்கள் சம்பிரதாயத்தில் வயதானவர்கள் சிறியவர்களை நமஸ்காரம் செய்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?"

"இல்லை! எங்கள் வழக்கப்படி சிறியவர்கள் தான் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்...." என்றார் கலெக்டர்.

"அப்படியா! சரி..வீட்டில் அண்ணன்,அண்ணி இவர்களுக்கு நமஸ்காரம் செய்வது நமது மரபுதானே?"

"ஆமாம்!"

"அதாவது, அண்ணி நம்மைவிட வயதில் இளையவராக இருந்தாலும், அந்த ஸ்தானத்துக்கு நாம் மரியாதை செலுத்துகிறோமா, இல்லையா?"

"ஆமாம்!"

"இந்த இடத்தில் வயது வித்தியாசம் எங்கே வருகிறது?"

கலெக்டர் யோசித்தார்.

மகான் தொடர்ந்தார்.

"இப்போது உங்களுக்கு எதிரில்தானே ஒருவர் எனக்கு நமஸ்காரம் செய்தார்.அவருக்கு என்ன வயது இருக்கும்?"

"எண்பதுக்கும் மேலே இருக்கலாம். அவரை இருவர் பிடித்துக் கொண்டல்லவா வந்தார்கள்?" என கலெக்டர் பதில் சொன்னார்.

"எனக்கென்ன வயது?"

"பதினைந்து வயது!"

"என் வயதென்ன,அவரது வயதென்ன? எனக்கேன் அவர் நமஸ்காரம் செய்கிறார்? என் வயதுக்கு அவர் மரியாதை தரவில்லை நான் இருக்கும் இடத்துக்கு! அதாவது, மடாதிபதி ஸ்தானத்துக்கு!. ஆக, இங்கே மடாதிபதியாக யார் இருக்கிறார்களோ, அவர்கள்தான் கையெழுத்துப் போட வேண்டுமே தவிர, அவர் இன்ன வயதில் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் இங்கே பொருந்தாது. தெரிகிறதா?"

"வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!" என்றார் கலெக்டர். மகான் லேசாகப் புன்னகை புரிந்தார் .கலெக்டர் தொடர்ந்தார்..

"நான் புரிந்துகொண்டதை எங்கள் மேலிடத்துக்கு எழுதி விளங்க வைத்து, பிரிவி கவுன்சிலின் அனுமதியை வாங்கி விடுகிறேன்!" என்று கலெக்டர் சொல்ல .பெரியவா அவரிடம் உத்தரவு கேட்பது போல் பேச ஆரம்பிக்கிறார்.

"இங்கே காஞ்சியில் உள்ள தெய்வமான சந்திரமௌலீஸ்வரரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தெய்வம். அவருக்கு வயதே கிடையாது. அவரை நான் தினமும் பூஜித்து வருகிறேன்,இல்லையா? எனக்கு வயது பதினெட்டு ஆகும்போதும் இதே தெய்வம் அப்போதும் இங்கேதான் இருப்பார். இல்லையா?.

அதனால், எனக்குப் பதினெட்டு வயதாகும்வரை அந்தத் தெய்வத்தின் பெயரால் கையெழுத்திடுவதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன். நீங்கள் லண்டனுக்கு எழுதி, அவர்கள் புரிந்து கொள்ளாமல் கேள்விமேல் கேள்வி கேட்டு உங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க, இது ஒன்றுதான் வழி. எனக்குப் பதினெட்டு வயது ஆன பிறகு, நான் என் பெயரில் கையெழுத்திடுகிறேன்.." என்று சொல்லி அந்தக் கையெழுத்து விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கு மேல் பேசுவதற்கு கலெக்டருக்கு விஷயம் இருக்கவில்லை.

"இது ஒரு நல்ல ஏற்பாடு" என்றுதான் அவரும் முடிவு செய்தார்.

இதைவிட விளக்கமாக மகானைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?" -பெரியவா

(ராத்திரி வேளைல, யாரோ வரப்போறா தோசை வார்த்து வைங்கோன்னு சொன்னா அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே எனக்கு வேணும்னு கேட்டா சிரமத்தை பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே?-பெரியவா)

(பெரியவா நடத்தின லீலை)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-17-12-2015 தேதியிட்ட குமுதம் பக்தி
(ஒரு பகுதி)முன்பு படித்தது- இது வேறு ஆசிரியர்.

ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது.கிட்டத்தட்ட பத்தரை,பதினொரு மணி இருக்கும் .அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கிற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.

பரமாசார்யா அந்த பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரைக் கூப்பிட்டார்.

"எனக்கு ரவாதோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?" அப்படின்னு கேட்டார்.

எல்லாருக்கும் ஆச்சர்யமான ஆச்சரியம். அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா,ரவாதோசை வேணும்னு கேட்கிறார். அதுவும் எனக்கு திங்கணும் போல இருக்குன்னு சொல்றார். எல்லாத்தையும் விட ஆச்சரியம், கிட்டத்தட்ட பாதி ராத்திரியை நெருங்கிண்டு இருக்கிற இந்த சமயத்துல சாப்பிடப்போறதா சொல்றார்!

ஒரு நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடறவர்,அதுலயும் பெரும்பாலும் கைப்பிடி நெல் பொரியைத்தவிர வேற எதையும் தவிர்க்கறவர், ரவாதோசை வேணும்னு கேட்கறார்னா அந்த ஆச்சர்யத்தை எப்படிச் சொல்றது?

உடனடியா உக்ராண அறைக்குப் போனவா, சங்கடமான விஷயம் தெரியவந்தது. அது என்னன்னா ரவாதோசை வார்க்கறதுக்கு முக்கியத் தேவையான ரவை ஒரு துளி கூட இல்லைங்கறதுதான்.

இத்தனை நேரத்துக்கு அநேகமாக எல்லா கடையும் மூடியிருக்கும். என்ன பண்ணறதுன்னு புரியாம தவிச்ச நேரத்துல ஊர்ல இருந்து வந்திருந்த அந்த மூதாட்டி விறுவிறுன்னு வெளியில் கிளம்பி, ஊர் முழுக்க அலைஞ்சு ஏதோ ஒரு கடை திறந்திருக்கிறதைப் பார்த்து ,ரவையை வாங்கி,மூச்சுவாங்க அவர்களிடம் கொண்டு போய் கொடுத்தா.

அப்புறம் என்ன! பத்துப் பன்னிரண்டு ரவா தோசை வார்த்து பெரியவாகிட்டே கொண்டு போய் கொடுத்தா.

அத்தனை தோசையிலயும் இருந்து ஒரு விள்ளல் மட்டும் எடுத்து வாயில போட்டுண்ட ஆசார்யா, "ரொம்ப நன்னா இருக்கு.திருப்தி ஆயிடுத்து இதெல்லாம் கொண்டுபோய் உள்ளே வைச்சுட்டு, எல்லாரும் தூங்கப் போங்கோ!" அப்படின்னார்.

என்னடா இது. ஒரு விள்ளல் சாப்பிடறதுக்காகவா, இந்த வேளைகெட்ட வேளைல இத்தனை ஆசையா கேட்கறாப்புல கேட்டார்னு எல்லாருக்கும் மறுபடியும் ஆச்சரியம். இருந்தாலும் எதுவும் பேசாம ஆசாரியா சொன்னமாதிரி உள்ளே கொண்டு வைச்சுட்டு தூங்கப் போனா எல்லாரும்.

கொஞ்ச நாழியாச்சு. ஆந்திராவுல இருந்து நாலஞ்சு வைதீகாள் பெரியவாளை தரிசிக்கணும்னு மடத்துக்கு வந்தா. வழியில் ஏதோ தடை ஏற்பட்டதால வர்றதுக்கு
இத்தனை நேரம் ஆச்சுன்னும், சொன்னா. ராத்திரி மடத்துல தங்கி இருந்துட்டு விடியற்காலம் ஆசார்யாளை தரிசனம் பண்றதாகவும் அனுமதிக்கணும்னும் கேட்டா.

விஷயத்தை பரமாசார்யாகிட்டே சொல்லப்போனார் ஒருத்தர். ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாலயே, "என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும் அவாள்லாம் பாவம் பசியோட வந்திருப்பா, ரவா தோசைகளை எடுத்துவைக்கச் சொன்னேனே, அதையெல்லாம் அவாளுக்கு சாப்பிடக் குடு..!"-பெரியவா.

சொல்லப் போனவர் திகைத்து நின்னுட்டார். சிலபேர் வருவாங்கறதை முன்கூட்டியே தெரிஞ்சுண்டதே ஆச்சரியம்.அதோட அவா பசியோட இருப்பா, அவாளுக்காக ஏதாவது பண்ணிவைக்கணும்கறதையும் மகா பெரியவா தெரிஞ்சுண்டிருக்கார்னா எப்பேர்ப்பட்ட ஞானதிருஷ்டி.

"என்ன அப்படியே நின்னுட்டே? யாருக்க்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல, யாரோ வரப்போறா தோசை வார்த்து வைங்கோன்னு சொன்னா அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே எனக்கு வேணும்னு கேட்டா சிரமத்தை பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே?

வந்திருந்த வைதீகாளுக்கு ரவாதோசைன்னா ரொம்ப இஷ்டமாம்.தங்களுக்காக பெரியவா நடத்தின லீலையைக் கேட்டு சிலாகிச்சு ,கண்ணுல ஜலம் வழிய நெகிழ்ந்து போனா. அந்த மகேஸ்வரனே தன்னோட பிரசாதத்தை தங்களுக்கு தந்ததா நினைச்சுண்டு ஆனந்தமா சாப்பிட்டா.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"பார்க்க தேவையில்லை, தீப ஔி மேலே பட்டாலே மோட்ஷம்"

கார்த்திகை தீபத்தை மாட்டுத் தொழுவம், குப்பை மேடு போன்ற இடங்களில் ஏன் ஏற்றி வைக்கிறோம்?
.....காஞ்சி மஹா பெரியவா.

கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் வீட்டின் எல்லா இடத்திலேயும் குறிப்பாக மாட்டுத் தொழுவம், குப்பை மேடு போன்ற இடங்களில் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||

”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ச்லோகத்துக்கு அர்த்தம்.

ஜலத்திலும் பூமியிலும் இருக்கிற ப்ராணிகள் மட்டும்தானா என்றால் அப்படி இல்லை. முதலிலேயே பக்ஷிகளையும் (பதங்கா:) கொசுக்களையும் (மசகா: – மசகம் என்றால் கொசு. ‘மஸ்கிடோ’ இதிலிருந்து வந்ததுதான்!) சொல்லிவிட்டதால் ஆகாசத்தில் பறக்கிற பிராணிகளையும் சொல்லிவிட்டதாக அர்த்தம். ஆகாசத்தில் பறந்தாலும் இந்தக் கொசு ஜலத்தில்தான் முட்டை இடுகிறது. பக்ஷி கிளைகளில்தான் வாழ்ந்து கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. மீன் ஜலத்தில் மட்டும்தான் இருக்கும். தவளை ஜலத்திலும் இருக்கும், பூமியிலும் இருக்கும். அநேக பிராணிகளால் பூமியில் மட்டும்தான் வசிக்க முடியும். இப்படியெல்லாம் பல தினுஸில் பிரித்துப் பிரித்துச் சொல்லி, அத்தனை உயிரினங்களும் பாபம் நிவ்ருத்தியாகி ஸம்ஸாரத்தைத் தாண்ட வேண்டும் என்று இந்த ச்லோகம் ப்ரார்த்திக்கிறது.

இந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது.

‘த்ருஷ்ட்வா’ என்று ச்லோகத்தில் வருவதற்கு ‘பார்த்தால்’ என்று அர்த்தம். வ்ருக்ஷம் – மரம் எப்படிப் பார்க்க முடியும்? நம் மாதிரி அதற்குக் கண், பார்வையெல்லாம் உண்டா?

தாவரத்துக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இருப்பதாக இப்போது ஸயன்ஸ்படியே சொன்னாலும் அதற்குப் பார்வை உண்டா என்று தெரியவில்லை.

அதனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ‘பார்த்தால்’என்று ச்லோகத்தில் சொல்லியிருந்தாலும், ”பார்க்காவிட்டாலும் பரவாயில்லை;மரம் மாதிரிப் பார்க்க சக்தியில்லாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது பார்க்கிற சக்திவாய்ந்த பிராணிகளாக இருந்தும்கூட இந்த தீபத்தைப் பார்க்காவிட்டாலும் பாதகமில்லை;

இந்த தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ? அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்”- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்.

முன்பெல்லாம் சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து பெரிதாக ஏற்றினார்களே,

திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே, இதன் உள்ளர்த்தம் என்ன?

சின்ன அகலாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும்.

அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றி வைத்துவிட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவஜந்துக்களின் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

ஸாதரணமாக இரண்டு கால் ப்ராணி, நாற்கால் ப்ராணிகள்தான் அதிகம். வண்டுக்கு ஆறு கால். சிலந்திக்கு எட்டுக் கால்கள். மரவட்டை, கம்பளிப் பூச்சி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எண்ணி முடியாத கால்கள். வேதத்தில் அடிக்கடி ‘த்விபாத்” சதுஷ்பாத்’ என்று இருகால், நாற்கால் ப்ராணிகள் க்ஷேமத்தைக் கோருகிற மாதிரியே எத்தனை காலுள்ள ப்ராணிகளானாலும் அவற்றுக்கும், இன்னும் பாம்பு மாதிரி, மீன் மாதிரி காலே இல்லாத ப்ராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் என்று மந்திரங்கள் இருக்கின்றன.

பரம ஞானிக்கு பிராம்மணன் பஞ்சமன் (ப்ராம்மணே … ச்வபாகே) என்ற வித்யாஸம் தெரியாது என்று கீதையில் (5.18) சொல்லியிருக்கிறது. நமக்கும்கூட, காரியத்தில் பேதத்தைப் பார்த்தாலும் மனஸில் சுரக்கும் அன்பில் வித்யாஸமே கூடாது என்கிற மாதிரிதான் ரந்திதேவன் முதலில் பிராம்மணனுக்கும் கடைசியில் பஞ்சமனுக்கும் தானம்பண்ணியிருக்கிறான்.

இந்தக் கார்த்திகை தீப ச்லோகத்திலும் ”ஸ்வபசா ஹி விப்ரா: என்று பஞ்சமன், ப்ராம்மணன் இருவரையும் சொல்லியிருக்கிறது. க்ஷேமத்தைக் கோரும்போது ஜாதி வித்யாஸமே இல்லை. நல்லவன் கெட்டவன் என்றும் வித்யாஸம் பார்க்கக் கூடாது. மஹாபாபத்தைச் செய்துவிட்டு நரகவாஸிகளாயிருப்பவர்களிடமும் அன்பு பாராட்டி, அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்வது நம் சாஸ்த்ரம்.

மேலே உள்ள ஸ்லோகத்தை எழுதி வைத்துக்கொண்டு தீபமேற்றும்போது கூறி பிரார்த்தித்து வீட்டின் சகல இடங்களிலும் அதாவது குளியல் அறை , குப்பைமேடு,
கழிவறை என சகல இடங்களிலும் வைக்க
அந்த இடங்களில் உள்ள ஜீவராசிகளின் மேல் தீப ஔி பட்டு அவை மோட்ச கதியடைகின்றன.

இதனை ஸ்லோகத்தை படிக்க இயலவில்லையெனில்,
இதன் தாத்பரியம் அறிந்து,

ஜோதி மயமான இறைவனே!
தாங்கள் இந்த இடத்தில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் மோட்சகதி அருளி அருளவேண்டும், என பிரார்த்திக்க மனதில்
அன்பு பெருகுவது மட்டுமல்லாமல் கோடானுகோடி உயிரினங்களின் மோட்சகதிக்கு நாம்காரணமாகி நம்பாவங்கள் தீர்ந்து நாமும் புண்ணியம் புரிந்தவர் ஆகின்றோம்.

அண்ணாமலையானுக்கு அரோகரா!
உண்ணாமுலையாலுக்கு அரோகரா!

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

என்ன..உன்னோட மனோரதம் பூர்த்தியாச்சா?

இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்!"

(குருக்களின் குறையைத் தீர்த்த மகாபெரியவா)

நன்றி-குமுதம்.லைஃப்
தொகுப்பு-வெ.ஸ்ரீராம்.
13-12-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஆதிசங்கர பகவத்பாதர் பொன்மழை பொழிய வைச்ச கதை எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்.

தனக்கு அழுகின நெல்லிக்காயை பிட்சையா போட்டவளோட வீட்டுல இருந்த தரித்திரத்தை விரட்டறதுக்காக, மகாலக்ஷ்மியை வேண்டினாராம், சங்கர மகான்,அந்த வீட்டுல இருந்தவா செஞ்ச பாவம் அடுத்த தலைமுறைலதான் தீரும்.அதுவரைக்கும் தனம் தரம்முடியாதுன்னாளாம்.உன்னோட பார்வைதான் எப்பேர்ப்பட்ட பாவத்தையும்
அழிச்சுடுமே. நீ அதை செய்யக் கூடாதான்னு கேட்டு,அந்த வீட்டுல இருந்த வறுமையைப் போக்கினார் ஜகத்குரு.

அதாவது, மகான்கள் நினைச்சா, எப்படிப்பட்டவாளோட கஷ்டத்தையும். எந்த மாதிரியான சூழல்லையும் போக்கிட முடியும்கறது நிதர்சனம். அப்படி பக்தர் ஒருத்தரோட கஷ்டத்தை பரமாசார்யா போக்கினதைத்தான் இப்போ பார்க்கப்போறோம்.

ஒரு சமயம் மகாபெரியவா வெளியூர்ல முகாம் இட்டிருந்த சமயத்துல வழக்கம்போல சுத்துவட்டாரத்துலேர்ந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பண்ணினா. அவாள்ல மகாபெரியவா தங்கி இருந்த இடத்துக்கு கொஞ்சம் தள்ளி இருந்த சிவன் கோயில் குருக்களும் ஒருத்தர். கோயில்லேர்ந்து கொஞ்சம் புஷ்பம், வில்வதளம்,விபூதி, குங்குமம் எடுத்துண்டு வந்து சுவாமி பிரசாதம்னு சொல்லி மகாபெரியவாகிட்டே குடுத்துட்டு, ஆசிர்வாதம் வாங்கிண்டு புறப்பட்டுட்டார் அந்த குருக்கள்.

இது நடந்து ரெண்டு நாளைக்கு அப்புறம்,
பிரதோஷம் வந்தது. அன்னிக்கு சாயந்திரம் நாலு மணி இருக்கும். எந்த முன் அறிவிப்பும் இல்லாம, தரிசனம் தந்துண்டு இருந்த இடத்துலேர்ந்து எழுந்துண்ட பெரியவா, மளமளன்னு வெளியில இறங்கி நடக்க ஆரம்பிச்சுட்டார்.

எங்கே போறார்?எதுக்குப் போறார்னு மடத்து சிப்பந்திகளுக்கே தெரியாததால ,எல்லாரும் அவசர அவசரமா அவர் பின்னால ஓடினா. பரமாசார்யா நடை,அவ்வளவு வேகம்! என்னவோ காரணம் இருக்கும்னு பக்தர்களும் சேர்ந்து நடந்தா.

மளமளன்னு நடந்த மகாபெரியவா பக்கத்துல இருந்த சிவன் கோயிலுக்குள்ளே நுழைஞ்சார். அவரைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத கோயில் குருக்கள் அவசர அவசரமாக வரவேற்க ஓடிவந்தார்.

"அதெல்லாம் இருக்கட்டும்..பிரதோஷகாலம் ஆரம்பிக்கப் போறது..நீ பூஜை ஆரம்பி..நான் முழுக்க இருந்து பார்த்துட்டுப் போறேன்!" சொன்ன பரமாசார்யா சுவாமி சன்னதி நேராத் தெரியறாப்புல ஒரு இடத்துல நின்னுண்டார்.

ஏற்கனவே மகாபெரியவா பின்னாலயே வந்த கூட்டம் அங்கே நிறைஞ்சு இருந்துது. அதோட ஆசார்யா அங்கே இருக்கார்னு தெரிஞ்சதும் இன்னும் நிறையப்பேர் வந்ததுல திருவிழா மாதிரி கூட்டம் அலைமோதித்து.

குறைவான அபிஷேக ஆராதனைப் பொருட்கள்தான் இருந்தாலும்,அதைவைச்சு குருக்கள் நந்திக்கும்,நாதனுக்கும் பரிபூரணமா அபிஷேக அலங்கார ஆராதனைகள் அத்தனையையும் சிறக்கப் பண்ணி முடிச்சு தீப ஆரத்தி காட்டினார்.

ஆரத்தி ஜோதியை இருந்த இடத்துலேர்ந்தே தரிசித்தார் மகாபெரியவா. வந்திருந்த கூட்டம், குருக்கள் காட்டின ஆரத்தியைத் தொட்டுக் கும்பிட்டுட்டு தீபத்தட்டுல தட்சணையா காசுபோடவும் ஆரம்பிச்சா. கையில இருந்த சில்லறைக் காசுகளை சிலர் போட்டா. இன்னும் சிலர், பெரியவா பார்த்துண்டு இருக்கார்ங்கறதால பத்து இருபதுன்னு ரூபாய் நோட்டுக்களைப் போட்டா.

எல்லாம் முடிஞ்சு வந்திருந்தவாளுக்கு பிரசாதம் குடுக்க ஆரம்பிச்சார், குருக்கள்.

முதல் பிரசாதமா விபூதி,வில்வம், புஷ்பத்தை மூங்கில் தட்டுல வைச்சு, மகாபெரியாகிட்டே குடுத்தார்.

மென்மையா அவரைப் பார்த்துப் புன்னகைச்ச மகாபெரியவா, "என்ன..உன்னோட மனோரதம் பூர்த்தியாச்சா? இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்!"னு சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டதும், குருக்களுக்கு அப்படியே கை நடுங்க ஆரம்பிச்சுடுத்து. கண்ணுலேர்ந்து ஜலம் அருவியா கொட்டித்து. "பகவானே...நான் மனசுக்குள்ளே நினைச்சது உங்களுக்குக் கேட்டுதா?" அப்படின்னு கேட்டுண்டே மெய்சிலிர்த்து நின்னார்.

பதில் எதுவும் சொல்லாம மௌனமா புன்னகைச்சுட்டு, கோயிலைப் பிரதட்சணம் பண்ணிட்டுப் புறப்பட்டார் ஆசார்யா.

அதுக்கப்புறம் அங்கே இருந்தவா எல்லாரும் குருக்கள்கிட்டே என்ன நடந்ததுன்னு கேட்டா.

"ரெண்டு நாள் முன்னால மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்தப்போ, அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்தேன்.

"பரமேஸ்வரா...இந்தக் கூட்டத்துல பத்துல ஒரு பங்கு கோயிலுக்கு வந்தாக்கூட உன்னையும் நன்னா வைச்சுக்கலாம் என்று மனசுக்குள்ளே நினைச்சுண்டேன். சாட்சாத் சர்வேஸ்வரன் கிட்டேதான் நான் அப்படி வேண்டிண்டேன்.

அந்த பகவானும் நானும் வேற இல்லைங்கறதை உணர்த்தறமாதிரி, இங்கே இத்தனை கூட்டத்தையும் அழைச்சுண்டு வந்து திருவிளையாடல் நடத்திட்டுப் போறார், மகாபெரியவா!" தழுதழுக்கச் சொன்னார் குருக்கள். அதுக்கப்புறம் மகாபெரியவா வந்துட்டுப் போன கோயில்னே அது பிரபலம் ஆச்சு. பக்தர்களும் நிறைய வர ஆரம்பிச்சா.

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது எனக்கு அந்தத் தகுதி இல்லை”-அலறிய பெண்மணி

"சுவாசினி பூஜையிலும் கலந்துக்கலாம்! உன்னோட ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்”–பெரியவா

(பலமுறை வெவ்வேறு ஆசிரியர்களால் போஸ்ட் செய்யப்பட்ட அற்புத கட்டுரை)
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்
(31-05-2017 தேதியிட்ட-இதழ்)

கிட்டத்தட்ட அம்பது வருஷத்துக்கு முன்னால ஒரு வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஸ்ரீமடத்துல, சுவாசினி பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருந்தா. பரமாசார்யா முன்னிலைல நடக்கற பூஜைங்கறதால எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செஞ்சுண்டு இருந்தா. எல்லாரும் பரபரப்பா இயங்கிண்டு இருந்த அந்த சமயத்துல ஒரே ஒரு பொம்மனாட்டி மட்டும் ரொம்பவே சோர்வா, அசிரத்தையா இருக்கிறமாதிரி நின்னுண்டு இருந்தா,

முப்பது முப்பத்தஞ்சு வயசுதான் இருக்கும் அவளுக்கு. அம்பது அறுபது வயசுக்காராளே சுறுசுறுப்பா இயங்கிண்டு இருக்கறச்சே,அவ அப்படி நின்னது பலருக்கும் ஒரு மாதிரி இருந்தது. சிலர் அவளைப் பார்த்துட்டு, ” அதோ அவளைப்பாரு…பூ இல்லாம பொட்டும் வச்சுக்காம..இவளை எல்லாமயார் இங்கே வரச் சொன்னா?” அப்படின்னு முணங்கினா சிலர், அவளுக்குத் தர பூவும் பொட்டும் எடுத்துண்டு போனா, ஆனா,அவ அதை கவனிக்காத மாதிரி நாசூக்கா நகர்ந்துண்டா.

பூஜைக்கான ஏற்பாடுகளைவிட அவளைப் பத்தின பேச்சே கொஞ்சம் அதிகமா இருந்த சமயத்துல அங்கே வந்தார் பரமாசார்யா . கூட்டம் மொத்தமும் சட்டுனு அமைதியாச்சு. அருள்ததும்ப வந்து உட்கார்ந்த ஆசார்யா, சுத்துமுத்தும் ஒருதரம் பார்த்துட்டு, அந்தப் பொம்பளையைக் கூப்பிடச் சொன்னார்.

பவ்யமா வந்து அவர் முன்னால் நின்னா அந்தப் பொம்பளை, “சுவாசினி பூஜை நடக்கற இடத்துல நீ மட்டும் இப்படி மூளி நெத்தியோட இருக்கலாமோ? இந்தா இதை இட்டுக்கோ!” கை நிறைய குங்குமத்தை எடுத்து நீட்டினார் பரமாசார்யா.

“வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது!” என்று அலறி சொன்னவ அதுக்கான காரணத்தையும் சொல்ல ஆரம்பிச்சா, ”என்னோட ஆத்துக்காரர் இந்திய ராணுவத்துல இருந்தார். ஆறுமாசத்துக்கு முன்னால எனக்கு மிலிட்டரிலேர்ந்து ஒரு கடுதாசி வந்தது. பார்டர்ல நடந்த ஒரு சண்டைல அவர் செத்துப் போயிட்டார்னும் எதிரிகள்கிட்டே சிக்கிண்டுட்ட அவரோட உடல்கூட கிடைக்கலைன்னும் அதுல எழுதி இருந்தா!

எனக்கு லோகமே இருண்டுடுத்து.இருந்தாலும் மனசை திடப்படுத்திண்டு அவருக்கு செய்ய வேண்டிய கர்மாவையெல்லாம் செஞ்சுண்டேன் . அவரோட ஆன்மா சாந்தி அடைய, நான் இன்னும் அவருக்குச் செய்யவேண்டிய கர்மா என்னன்னு உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கதான் இங்கே வந்தேன்இங்கே வந்தப்புறம்தான் இப்படி ஒரு பூஜை நடக்கிறதே எனக்குத் தெரிஞ்சுது. இந்த சமயத்துல நான் இங்கே இருக்கிறது தப்புதான்.

மன்னிச்சுடுங்கோ. நான் இன்னொரு நாள் வந்து கேட்டுக்கிறேன்” கைகூப்பி நமஸ்காரம் பண்ணினா.

சட்டுன்னு சிலவிநாடி கண்ணை மூடிண்டார் பெரியவா. அதுக்கு அர்த்தம் தெரியாம, அங்கே இருந்த பலரும் அவமேல பரிதாபப்பட ,மெதுவா நடந்து வெளில போகத்தயாரானா, அந்தப் பெண்மணி.

“ஒன்னை யாரு போகச் சொன்னா? நீ இங்கே தாராளமா இருக்கலாம். பூஜையிலும் கலந்துக்கலாம்! உன்னோட ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்” பெரியவா குரல் கேட்டு சட்டுன்னு திரும்பி வந்தவகிட்டே நிறைய குங்குமத்தை எடுத்துக் குடுத்தார் பரமாசார்யா.

கை நடுங்க, உடல் சிலிர்க்க,கண்ணுல ஜலம் முட்டிண்டு வழிய, பெருமூச்சு வாங்க அதை வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டா அந்தப் பெண்மணி. மகாபெரியவாளே அப்படிச் சொன்னதுக்கு அப்புறம் அங்கே மறுவார்த்தை எழுமா?

எல்லாருமா அந்தப் பெண்ணிற்கு மஞ்சள், குங்குமம், புடைவை, ரவிக்கைத் துணி,திருமாங்கல்யச் சரடு,புஷ்பம்னு எல்லாம் தந்து பூஜையிலும் கலந்துக்க வைச்சா.
அடுத்த வெள்ளிக்கிழமை மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்தா, அதே பெண்மணி.
“பெரியவா…ஒரேடியா போய்ட்டார்னு நாங்க எல்லாரும் நினைச்சுண்டு இருந்த என்னோட ஆத்துக்காரர் உங்க ஆசிர்வாதத்துல, இதோ உசுரோட வந்துட்டார். இந்தியாவோட பார்டர்ல காவலுக்கு இருந்த இவர். எதிரிகளோட நடந்த சண்டைல குண்டடிபட்டு விழுந்துட்டாராம்.இவர் செத்துட்டதா நினைச்சு, இழுத்துண்டுபோய் எங்கேயோ மலைமேல் வீசிட்டுப் போயிட்டாளாம் எதிரிகள். நம்ம நாட்டு வீரர்கள் ஒரு வாரம் தேடி அலைஞ்சுட்டு,உடலும் கிடைக்காததால இறந்துட்டதா தகவல் சொல்லிட்டா.
ஆனா, மலைமேல கிடந்த இவரோட உடல்ல கொஞ்சநஞ்சம் உசுரு ஒட்டிண்டு இருந்திருக்கு. யாரோ மலைஜாதிக்காரர் பார்த்துட்டு ஏதோதோ வைத்தியம் பண்ணி பொழைக்க வைச்சிருக்கா .விழிச்சு எழுந்ததும்,அவாளுக்கு நன்றி சொல்லிட்டு எப்படியோ தடுமாறி தத்தளிச்சு ஆத்துக்கு வந்து சேர்ந்துட்டார்.

அன்னிக்கு எனக்குக் குங்குமத்தைக் குடுத்த நீங்கதான் மலைவாசி ரூபத்தில இருந்து இவரை காப்பாத்தியிருக்கேள்”தழுதழுப்பா சொன்னா. ஆத்துக்காரரோட சேர்ந்து ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.

மென்மையா புன்னகைச்ச ஆசார்யா ,”மலைவாசின்னா யாரு? சதா மலைவாஸம் பண்ற அந்தப் பரமேஸ்வரன்தான். மலைவாசி. அவன்தான் உன் ஆத்துக்காரரை காப்பாத்தியிருக்கான் .அதனால இனிமே உங்களுக்கு எந்தக்கொறையும் வராது. க்ஷேமமா இருங்கோ!” கை நிறைய குங்குமத்தைக் குடுத்து ஆசிர்வாதம் பண்ணினார்.

சந்தோஷமா வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டு, ஆனந்தமா புறப்பட்டா அந்தத் தம்பதி

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH
"குருவே சரணம்"
நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

வெடிகுண்டாக கனத்த பணம்!

Thanks to Original Uploader of this article

பெரியவாளிடம் மிகுந்த பக்தி பூண்ட ஶாஸ்த்ரிகள்ஒருவருக்கு, புஷ்கரம் என்று சொல்லப்படும் புண்யக்ஷேத்ரத்தில், 45 நாட்கள் க்ருஷ்ணா நதியில் நீராடும்பாக்யம், அதுவும் பெரியவாளோடு நீராடும் மஹாமஹா பாக்யம் கிடைத்தது !

பெரியவா தினமும் ஸூர்யோதயத்துக்கு முன்னால்முகாமிலிருந்து கிளம்பி, வாய்க்கால் ஒன்றைப்படகில் கடந்து, க்ருஷ்ணா நதி தீரத்துக்கு வந்துஸ்நானம், அனுஷ்டானம் முடித்துக் கொண்டுதிரும்புவார். அவரோடு செல்லும் பக்தர் குழாமில்,ஶாஸ்த்ரிகளும் ஒருவர்.
[அந்தக் காலங்களை கற்பனையில் மட்டுந்தான்இப்போது நினைக்க முடியும்]
தினமும் பெரியவா செல்லும் வழியில் ஏராளமானபக்தர்கள் பழங்கள், புஷ்பங்கள், ரூபாய் நோட்டுகள்என்று காணிக்கை செலுத்துவார்கள். சிலர் பணத்தைபெரியவாளுடைய திருப்பாதங்களில் போடமுந்திக்கொள்ளும் போது, ஶாஸ்த்ரிகள் டக்கென்றுஒரு மரத்தாலான தட்டை நீட்டி விடுவார். பணம்அதில் விழும்.

காரணம்?....

பணம் போடும் போது பெரியவாளை யாரும் தொட்டுவிடக்கூடாதே என்ற ஆதங்கம்.
தட்டு முழுக்க தினமும் பணம் விழுந்தது.
கடைசி நாள் ஸ்நானமும் முடிந்தது.

"பெரியவா தெனோமும் புண்ய ஸ்நானம் பண்ணப்போறச்சே, எல்லாருக்கும் தர்ஶன பாக்யமும்,பெரியவாளோட புண்ய நதில ஸ்நானம் பண்றபாக்யமும் சேர்ந்து கெடைக்கறது..."

ஶாஸ்த்ரிகள் பெரியவாளிடம் சொன்னார்.
"ஆமா....நீ தட்டை நீட்டி காஸு வாங்கற! அதுலகாஸு போடறதால அவாளுக்கு புண்யம்....ஆனா,அந்தக் காஸை வாங்கிக்கறதால, நீ பாவத்தைசொமக்கறே! செரி.....இந்த பணத்தை என்ன பண்ணப்போறே?..."

ஶாஸ்த்ரிகளுக்கு தூக்கி வாரிப் போட்டது!

"என்ன பண்ணப் போறேனா?
காஸைமடத்துக்குத்தான் குடுக்கப் போறேன்....பெரியவா! கஜானாகிட்ட குடுத்துடுவேன்..."

"இந்தப் பணம் மடத்துக்கு வேணாம்"
கண்டிப்பான குரலில் மறுத்தார்.
அவ்வளவுதான்!

ஏதோ பற்ற வைத்த பயங்கர வெடிகுண்டை கையில்தாங்கியிருப்பவர் போல் க்ஷணத்துக்கு க்ஷணம்பாவத்தை சுமக்கிறோம் என்ற பயம் ஶாஸ்த்ரிகள்மனஸில் கனத்தது.

"பின்ன....மொத்தப் பணத்தையும் க்ருஷ்ணா நதிலபோட்டுடவா பெரியவா?.."

விட்டால், பயத்தில், அவரே பணத்தோடு நதியில்குதித்து விடுவார் போலிருந்தது.

"வேணாம்......"

"இதோ! வழி நெடுக பிச்சைக்காரா இருக்காளே!அவாளுக்கு போட்டுடவா?..."

"வேலை எதுவும் செய்யாம,
சோம்பேறிகளாஇருக்கற பிச்சைக்காராளை ஆதரிக்கவே கூடாது!...."என்றவர், கண்களை சுழல விட்டார்.

இறுதியில்..... ஒருவர் மேல் பெரியவாளுடையபார்வை பட்டது.

ஆஹா! வேதாத்யாயனம் பண்ணிய ஒருகனபாடிகள்தான் அந்த பாக்யசாலி!

காதில் குண்டலம் அணிந்திருந்தார்.
பெரியவா அழைத்ததும் ஓடி வந்தார்.

அழகான தெலுங்கில் அவருடையஅங்கவஸ்தரத்தை விரித்துப் பிடிக்கச் சொல்லி, "இந்தா..அத்தனை பணத்தையும் இவரோடவஸ்த்ரத்ல கொட்டு!..." என்றார்.

அப்பாடா! நிம்மதியான மனஸுடன் கொட்டினார்ஶாஸ்த்ரிகள்!

கனபாடிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவருடையக்ருஹத்துக்கு சென்று ஆஸிர்வதித்துவிட்டுமுகாமுக்கு வந்தார்.
"புண்ய நதிகள்ள ஸ்நானம் பண்ணப் போனா, தீர்த்தக்கரைல பணம் வாங்கறது நிஷித்தம்! அதுனாலதான்அந்தப் பணம், மடத்துக்கு வேணாம்..ன்னுசொன்னேன். ஏன்னா.....பணம் குடுக்கறவா, எந்தஎண்ணத்தோட போடறாளோ?... யாருக்குத் தெரியும்?அவா மனஸ்ல நெனைச்சபடி அந்தப் பணம்உபயோகமாறதா...ன்னும் தெரியாது.......

.......இப்போ நீ பணம் குடுத்தியே.... அவர் நெறையயாக,யக்ஞாதிகள் பண்ணறவர்...இன்னும் நெறையபண்ணப் போறார்..இந்தப் பணம் யாகத்ல.. அக்னிலஆஹூதி பண்ணறதுக்கான த்ரவ்யங்கள்வாங்கறதுக்கு ஒதவும். அக்னி பகவான்ஆஹூதினால ப்ரகாஸிப்பார்...அதுஸூக்ஷ்மம்...ன்னு பகவான் கீதைலசொல்லியிருக்கார்..." என்று அழகான விளக்கம்குடுத்தார்.

அற்ப சொற்ப பணமானாலும், கோடி கோடிபணமானாலும், ஶாஸ்த்ர விரோதம் என்றால், பாபம்என்றால், தன்னை அது தீண்ட முடியாது என்பதைவாழ்ந்து காட்டியவர் பெரியவா.

அதோடு, இந்த ஸம்பவத்தால், நிஜமாகவே நித்யஅத்யயனத்தால், தங்கள் மனஸிலும், நாவிலும்,க்ருஹத்திலும் வேதமாதா நர்த்தனமாடும்வேதப்ராஹ்மணர்கள் எத்தனைஉத்க்ருஷ்டமானவர்கள்!
என்பதையும்,த்யாகஶீலர்களான அவர்களுக்கு நாம் ஸமர்ப்பிக்கும்எப்பேர்ப்பட்ட பாவப்பட்ட காஸும், அவர்களுடையவேதாக்னியால் புனிதமாக்கப்படும் என்பதையும்பெரியவா நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்.

வேதத்தை நித்ய ஜீவனோபாயமாக வைத்துக்கொண்டிருக்கும் உண்மையானவேதப்ராஹ்மணர்களுக்கு மட்டும், நாமும் [வேதம்படிக்காமல், ப்ராஹ்மணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம்], மற்றவர்களும், அந்தப்ராஹ்மணர்களின் முகம், அந்தஸ்து, குணம், குறை,பேச்சு எதையுமே பார்க்காமல், அவர்களிடமுள்ளவேத மாதாவை மட்டும் கண்டு, அவளுக்காக,அவர்களுக்கு த்ரவ்யஸஹாயம் செய்வதைமுக்யமான கடமையாகவே கொள்ள வேண்டும்.

இதில் இன்னொரு அழகான அனுக்ரஹம்என்னவென்றால், ஸாதாரணமாக பெரியவாமனஸில் என்ன அபிப்ராயம் என்பதை யாராலும்கண்டுபிடிக்கவே முடியாது.
முதல் நாளே, மரத்தட்டில் காஸை வாங்கும்போதேபெரியவா அந்த ஶாஸ்த்ரிகளை "வாங்காதே!" என்றுதடுத்திருக்கலாம். பெரியவா அப்படி தடுத்திருந்தால், 45 நாட்கள் அந்தத் தட்டில் விழுந்த காஸைப்போட்டவர்களுடைய பாபங்கள் அப்படியேஇருந்திருக்கும். இப்போது அவர்களுடையபாபத்துக்கும் ப்ராயஸ்சித்தம் கிடைத்துவிட்டது.

அதே போல், ஶாஸ்த்ரிகளுக்கும், வெடிகுண்டைகையில் தாங்கியிருக்கும் பதைபதைப்புஉண்டாகியிருக்காது.
நமக்கும், பெரியவா சொல்லும் ஆயிரம்உபதேஸத்தில், பத்தோடு பதினொண்ணாக இதுவும்கிடப்பில் போயிருக்கும்.

அனுபவம் கற்றுத் தரும் பாடத்தை, உபதேஸம்கற்றுத் தராது.

நம்ப முடிகிறதா?

*அண்டா, குண்டா, பாத்திரங்களை தண்ணி இழுத்து அலம்பி வைத்த*
*ம ஹா பெ ரி ய வா*

ஒவ்வொரு வரியையும் கேட்டுக் கேட்டு கண்களில் கண்ணீருடன் எழுதியது.

பேச்சு - மதிற்பிற்குரிய *கணேஷ் சர்மா* அவர்கள்.
எழுத்து - பிரேம்ராஜ்.
--------------------------------------
“மாப்பிள்ளை ராம மூரத்தி”ங்கிற பக்தர். அவர்தான் பூஜைகட்டில சந்திர மொளலீஸ்வரர் நைவேத்திய, பூஜை பாத்திரங்களை தேய்க்கிறவர்.

ரொம்ப பரிதாபமா இருக்கும். மடத்தில பார்த்தேள்னா அண்டா, அண்டாவா எல்லாத்தையும் சமைக்கணும். கரி அடுப்பு, பித்தளை பாத்திரம். பூஜை எல்லாம் முடியரத்தே 3மணி, 4மணி ஆயிடும். சாப்பிட்டு, சித்த தலையை சாச்சா போதும்ண்னு இருக்கும். அது ஆச்சோ இல்லையோ சாயந்திர பூஜைக்கு ரெடி ஆகணும். ராத்திரி பூஜை எவ்வளவு மணிக்கு முடியும்னு தெரியாது. அதுக்கப்பறம் கிளீன் பண்ணிட்டு படுத்துண்டா பொழுது விடிஞ்சுடும்.

ஒரு நாள் மத்யானம், நல்ல வெய்யில். கிணத்தடியில உக்காந்துண்டு எல்லா பாத்திரத்தையும் போட்டுண்டு தேச்சிண்டிருக்கார் ராம மூர்த்தி. இத்தனை பாத்திரங்களையும் கரி போக தேய்த்து அலம்பி வைக்கணும். இந்த காலம் போல ஸ்விட்ச் போட்டா தண்ணி வர காலம் இல்லை. கிணத்திலிருந்து தண்ணி இழுக்கணும், அலம்பி வைக்கணும்.

மாப்பிள்ளை ராம மூர்த்தி ரொம்ப சாது. வாயே திறக்க மாட்டார். அப்படி இருக்கும் போது பார்த்தா, யாரோ நடந்து வர சப்தம். பாரத்தா பெரியவா.

"ராம மூர்த்தி உன்னை பார்த்தா பாவமா இருக்குடா; இத்தனை பாத்திரம் தேச்சுண்டு இருக்கே; ஒண்ணு பண்ணுடா, நீ எல்லத்தையும் தேச்சு, தேச்சு வை; நான் கிணத்திலிருந்து தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி உள்ளே எடுத்துண்டு போய் கவுத்து வைக்கிறேண்டா!"

ராம மூர்த்தி நடுங்கிப் போய்விட்டார். தலையொழுத்தா பெரியவாளுக்கு! எதுக்கு நாங்க இருக்கோம்! இது பெரியவா பண்ற காரியம் இல்லை.

"ஏண்டா! நான் பண்ணக் கூடாதா? சந்திர மொளலீஸ்வரர் கைங்கர்யம்டா? பூஜை பண்ணினாதான் கைங்கர்யமா? நீ ஒண்டி கட்டையா இருக்க; இத்தனை பாத்திரத்தையும் தேய்த்து அலம்பி வைக்கணும். வெய்யிலா வேற இருக்கு. தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி உள்ள கொண்டு போய் கவுக்குறேண்டா!"

எந்த சங்கராசார்யராவது, எந்த மடாதிபதியாவது இப்படி சொல்வாளா? சொல்லமாட்டா, இவர் ஒருத்தர்தான் இப்படி சொல்வா! ஏன்னா, *மனிதன்*; *மாமனிதன்*,. மனுஷாளோட சிரமம் தெரிஞ்சவர். அதனால்தான். "பெரியவா"னா நமக்கு கண்ணுல தண்ணி வருது. அப்படி இருக்கச்சே, ராம மூர்திக்கு 5 ரூபாய் கொடுத்தால் என்ன 50 ரூபாய் கொடுத்தால் என்ன? சம்பளமா முக்கியம்? இந்த ஒரு வார்ததை போதாதா?

நாம்பளா இருந்தால் என்ன பண்ணுவோம். சொல்லிடுவோம். அவரும், அப்படியா பெரியவா 4-5 பக்கெட் தண்ணி இழுத்து அலம்பி உள்ளே வைங்கோன்னு சொல்ல முடியுமா?

வேண்டாம்னு சொன்னா; போய் விடுங்கிறியா?" "சரி, சரி, என்ன எங்க பண்ணவிடுவே” அப்படீன்னு போய்விடுவோம். பெரியவா போகலை. அதுதான் அங்க விசேஷம். அதுதான் பெரியவா!

இல்லைடா, நீ பண்ற அந்த கைங்கர்யம் ஒரு நாள் எனக்கு பாக்யம், நானும் பண்றேனே!

சொல்லிவிட்டு சும்மா நிற்கவில்லை. பண்றா! தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி பாத்திரங்களை உள்ளே எடுத்துண்டு போய் கவுத்து வைக்கிறார்.

*அதுதான் மஹா பெரியவா*!

இவ்வளவு எளிமையான ஒர் சங்கராச்சார்யாளை; ஒர் மடாதிபதிபதியை பார்க்க முடியமா?

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

"காலத்தை வென்றவர் காவியம் ஆனவர்"

"மகாபெரியவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தேன். அவருக்கு மிகப்பெரிய கண்டம் ஒன்று வந்துள்ளது. நேரம் சரியில்லை. சிவராத்திரியைத் தாண்டுவதே பெரிய விஷயம்,'' -ஜோதிடர்- தொண்டர்களிடம்.

""என் வாழ்நாள் முடியப்போகிறது என்று கவலையுடன் இருந்தீர்களா? என்னை காலன் இப்போது அணுகமாட்டான். நான் சித்தியாவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆகவே, நீங்கள் எல்லாரும் அதைப் பற்றிய சிந்தனையை விட்டுவிடுங்கள். சித்தத்தை சிவன்பால் செலுத்துங்கள்<'' -பெரியவா

ஜூலை-10 தினமலர்.(2014)

ஒரு சமயம் சிவாரத்திரி வேளை. மகாபெரியவர் காஞ்சி மடத்தில் இருந்தார். அங்கே பெண், மாப்பிள்ளைகளுக்கு இலவசமாகப் பொருத்தம் பார்த்து தரும் ஜோதிடர் ஒருவர் வந்தார்.

வந்தவர், மடத்து ஏஜன்டையும், ஊழியர்களையும் அழைத்தார்.

""உங்களுக்கெல்லாம் வருத்தமான ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். நமது மகாபெரியவரின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தேன். அவருக்கு மிகப்பெரிய கண்டம் ஒன்று வந்துள்ளது. நேரம் சரியில்லை. சிவராத்திரியைத் தாண்டுவதே பெரிய விஷயம்,'' என்று சொல்லி விட்டார்.

எல்லாருமே வருத்தத்தில் ஆழ்ந்துவிட்டனர்.

அவர்களின் முகக்குறிப்பைக் கொண்டே மகாபெரியவர் என்ன ஏதென்று விசாரித்தார். எல்லாருமே சமாளித்து விட்டார்கள். பெரியவரிடம் ஏதும் சொல்லவில்லை.

சிவராத்திரி நாளும் வந்து விட்டது. எல்லாரும் பதைபதைப்பாக இருந்தார்கள். "சிவராத்திரி கழிந்து விட்டால், ஜோசியர் சொன்னது பலிக்காமல் போய்விடும். சீக்கிரமாக இந்தநாள் கழியட்டும்' என்று எல்லார் மனதிலும் ஏக்கம்.

அன்று பெரியவர் எல்லாரையும் அழைத்து, ""ஏன் எல்லாரும் அமைதியாக இருக்கிறீர்கள். இன்று சிவராத்திரி. சிவநாம கீர்த்தனை, சிவஸ்துதிகள், ராமநாம பஜனை செய்யுங்கள்,'' என்று சொன்னார்.

பெரியவருக்கு ஜோசியர் சொன்ன விஷயம் தெரிந்து விட்டதா? தெரியாதா? என்ற சந்தேகத்துடன், அவர் இட்ட கட்டளைப்படி எல்லாரும் வழிபாட்டைத் துவங்கினர். பஜனை பாடியபடியே, பெரியவரை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒருவழியாக இரவு கழிந்தது. மடத்து ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

காலையில், எல்லாரையும் அழைத்த பெரியவர்,""என் வாழ்நாள் முடியப்போகிறது என்று கவலையுடன் இருந்தீர்களா? என்னை காலன் இப்போது அணுகமாட்டான். நான் சித்தியாவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆகவே, நீங்கள் எல்லாரும் அதைப் பற்றிய சிந்தனையை விட்டுவிடுங்கள். சித்தத்தை சிவன்பால் செலுத்துங்கள்<'' என்று அனுக்கிரகம் செய்தார்.

அது மட்டுமல்ல! நூறாண்டு காலம் நம்மிடையே வாழ்ந்தார், காலத்தை வென்று காவியமானார். இன்றும் வாழும் தெய்வமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

jaya jaya sankara hara hara sankara
 
OM SRI GURUBHYO NAMAH

"குருவே சரணம்"

மகா பெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதற்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.

நன்றி-பால ஹனுமான்

துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்…

நான் ஒரு incident சொல்றேன். ஆச்சரியமா இருக்கும்.

“நான், Indian Express Group-ல நிறைய பேர், Goenka, grand sons… Arun Shourie, Gurumurthy எல்லோரும் மஹா சுவாமிகளைப் பார்க்கப் போயிண்டிருக்கோம்.

அப்போ போற வழியிலே, என் வாய் சும்மா இல்லை. என் வாய்தான் எப்பவுமே சும்மா இருக்காதே…”ஏன் இந்த மகா ஸ்வாமிகள் இப்படிப் பண்ணினார்னு ஒரு விஷயம் பத்திக் கேட்டேன். அது சரியில்லையே, ஏன் அப்படிப் பண்ணினார்?” என்று.

நான் தான் பெரிய ப்ருஹஸ்பதி ஆச்சே… எல்லாத்தைப் பத்தியும் பேச முடியுமே!” பகவான் கொடுத்த எதை use பண்றேனோ இல்லையோ, வாயை மட்டும் நன்னா useபண்ணிண்டு இருக்கேன். So, அந்தமாதிரி கேட்டுட்டேன். அப்ப குருமூர்த்தி அவாள்லாம், “நமக்கு என்ன தெரியும்? என்னமோ பண்ணியிருக்கார். நமக்குத் தெரியாது” என்றனர்.

இது தாம்பரத்துக்கும் முன்னால் நடந்த சம்பவம். காஞ்சீபுரத்துக்குப் போய் உட்கார்ந்தோம் அவர் முன்னாலே… நிறைய பேர் இருந்தா. அதனால இந்த incidentசொல்றதில்ல தப்பில்ல… ஒரு 200 ~ 250 பேர் இருந்தா. அவர் நிறைய விஷயங்கள் பேசினார். பேசிட்டு, என்னைப் பார்த்து, “இப்ப உனக்கு நான்அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா? இல்லைனா மூளை சும்மா இருக்காது, இல்லை ?”

ஆடிப் போயிட்டேன். எழுந்து ஓடிப் போயிடலாம் போல இருந்தது. சாதாரணமாகவே அவர் முகத்தைப் பாக்கறதே கஷ்டம். இந்த மாதிரி சொன்னதுக்கப்புறம் என்ன பண்றதுன்னே தெரியலே. நைசா நழுவிடலாமா என்கிற அளவுக்கு வந்துட்டேன். அப்புறம் பெரிய explanation கொடுத்தார்.

எனக்காக இல்ல. அங்க இருக்கற எல்லாருக்காகவும் – தெரிஞ்சுக்கட்டும்னு…

எப்படி அவருக்குத் தெரிஞ்சுது சார் ? எப்படிக் கண்டு பிடிச்சார் அவர் ? நாங்க இங்க எங்கேயோ பேசிண்டிருக்கோம். நான் கேட்டிருக்கேன். அங்க போய் உட்கார்ந்தவுடன், “இது உனக்குத் தெரிஞ்சாகணும் இல்லியா?” என்று கேட்கிறார். இது மாதிரி சில powersஎல்லாம் இருக்கு சார்.

நான் இத சொல்றத வச்சு நான் அவருக்கு என்னமோ ஆத்மார்த்த சிஷ்யன் என்று எல்லாம் நினைச்சுடாதீங்கோ. கிடையாது. ஏதோ சில சமயம் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.. ஆனா அவருக்கு என் தாத்தா மேல ரொம்ப அபிமானம் உண்டு. அதனால கொஞ்சம் பேசுவார். அப்படி வச்சுக்கணுமே ஒழிய நான் என்னமோ அவருக்கு ரொம்ப close, சிஷ்யன் அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்கோ…எனக்கு அந்த அருகதை கிடையாது.

But, எதுக்கு சொல்ல வந்தேன்னா, நமக்கு மீறின விஷயங்கள் நிறைய தினம் உங்க Life-லேயும் நடக்கிறது. என் Life-லேயும் நடக்கிறது. நம்ப Realizeபண்றதில்ல. இதெல்லாம் கடவுளோட வேலைன்னு

MAHA PERIYAVA THIRUVADIGAL CHARANAM !

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
மஹாபெரியவா

ஆபத்பாந்தவா! ரக்ஷ! ரக்ஷ!

பெரியவாளை பிடித்துக் கொண்டவர்கள், பிடித்துக் கொள்ளத் தெரிந்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவரால் ரக்ஷிக்கப்படுகிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்வார்கள்.

அஸ்ஸாமில் உள்ள டீ எஸ்டேட்டில், பொறுப்பான பதவியில் இருந்த ஒருவர், பெரியவாளிடம் அப்படியொரு நம்பிக்கை, ப்ரேமை கொண்டவர்.

குடும்பத்தோடு அஸ்ஸாமில் இருந்தார்.

வேலையிலிருந்து ஒய்வு பெறும் நேரம் வந்தபோது, அங்கிருந்தவர்கள் அவருக்கு, மேலும் நிறைய ஸம்பளத்தோடு வேலை தருவதாகச் சொன்னதை அப்படியே நிராகரித்தார்.

எதற்கு?

“ஸம்பாதிச்ச வரை போறும். இனிமே பெரியவா காலடிலதான் என்னோட மிச்ச வாழ்நாள்.….”

இதுதான் அவருடைய அசைக்கமுடியாத முடிவு!

யாருக்கு வரும், இந்த.. போதுமென்ற மனஸ்?

குடும்பத்தாரை முதலில் காஞ்சிபுரத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு இன்னும் முடித்துக் குடுக்க வேண்டிய பொறுப்புகள் கொஞ்சம் இருந்தது. அவருடைய பொறுப்பான பதவிக்காக, வீட்டில் இருக்கும் பணியாட்கள் தவிர, அவரோடு எப்போதுமே ஒரு பணியாளும் இருப்பான்.

எல்லாரும் ஊருக்கு போன ரெண்டு மூணு நாட்களில் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள் மெட்ராஸ்ஸுக்கு புறப்பட டிக்கெட் ரிஸர்வ் செய்திருந்தார்.

முந்தின நாள் இரவு, தன்னோடு கூட இருந்த பணியாளை அனுப்பிவிட்டார்.

இவர் மட்டும் தன்னந்தனியாக எஸ்டேட் வீட்டில்!

நடுராத்ரி திடீரென்று அவரால் மூச்சு விட முடியவில்லை! எழுந்து ஒரு வாய் ஜலம் குடிக்கலாம் என்றால், நெஞ்சில் ஒரு பெரிய பாறாங்கல்லை அழுத்துவது போல் சுமை!

“ஆபத்பாந்தவா! அனாத ரக்ஷகா! ஆதிமூலமே!….. சந்த்ரஶேகரா!...”

தன்னுடைய தலை மாட்டில் வைத்திருந்த நம் பெரியவாளுடைய படத்தை எப்படியோ கையில் எடுத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்…

“பெரியவா…..என்னால மூச்சு விட முடியல….! நீங்கதான் எனக்கு ரக்ஷை! ….”

பெரியவா படத்தை இறுக்கி அணைத்துக் கொண்டபடி, கண்களில் கண்ணீரோடு, தாங்கமுடியாத வலியோடு அப்படியே தூங்கிப் போனார்!

மறுநாள் நன்றாக விடிந்ததும்தான் தூக்கம் கலைந்தது. தூங்கி எழுந்தபோது, படுக்கையிலிருந்து விழுந்த பெரியவா படத்தைப் பார்த்ததும்தான், தான் நேற்றிரவு பட்ட கஷ்டம் அவருக்கு நினைவுக்கே வந்தது.

அன்று ஊருக்கு வேறு போக வேண்டும் என்பதால், எதற்கும் டாக்டரிடம் ஒரு நடை போய், செக்கப் பண்ணிக் கொள்ளலாம் என்று டாக்டரிடம் போனார்.

ECG எடுத்து ரிப்போர்ட்டை பார்த்தார் டாக்டர்…..

“உங்களுக்கு நேத்திக்கி night… ரொம்ப severe, massive heart attack வந்திருந்திருக்கு! நீங்க பாட்டுக்கு இப்டி ஆஸ்பத்ரிக்கு நடந்தே வந்திருக்கீங்களே? ஆஶ்சர்யமா இருக்கு! உண்மையை சொல்லணுன்னா, நீங்க இந்த maasive attack-ல பிழைச்சிருக்கீங்க-ங்கறதே பெரிய விஷயம்! இப்ப, இந்த ஸெகண்ட, இங்கியே அட்மிட் ஆயிடுங்க…. ஒரு அடி கூட எடுத்து வெக்கக்கூடாது ”

“Massive heart attack” -கிலிருந்து அந்த தீனபந்துவைத் தவிர யார் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்?

பயங்கர வலி வந்ததும், இவர் நெஞ்சோடு சேர்த்துக் கட்டியணைத்துக் கொண்ட பெரியவா, அப்போவே அவரோட ஹார்ட்டை ஸரி செய்ததோடு, வலியால் அவஸ்தைப்பட்டு தன்னை அணைத்துக் கொண்ட குழந்தையை, தூங்கப்பண்ணியும் இருக்கிறார் !

பக்தருக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை! தெய்வத்தின், குருவின், துணையிருந்தால் வேறென்ன கவலை?

“நா… இன்னிக்கே ஊருக்குப் போயாகணும்! என்னோட தெய்வம் என்னைக் காப்பாத்தும்”

அசைக்க முடியாத நம்பிக்கையோடு, அன்றே ரிஸர்வ் பண்ணிய டிக்கெட்டில் ஊருக்குக் கிளம்பிவிட்டார்!

ஹ்ருதயத்தைத்தான் “Under ஆபத்பாந்தவன் care” என்று குடுத்தாச்சே!

ஊருக்கு வந்ததும், குடும்பத்தாரிடம் ஏன்? மனைவியிடம் கூட, எதுவுமே சொல்லவில்லை. முதலில் பெரியவாளை தர்ஶனம் பண்ண வேண்டும்!

இதோ…..ரெண்டு நாள் முன்பு தன்னைக் காப்பாற்றிய மஹா வைத்யநாதம் அங்கே அமர்ந்து தர்ஶனம் குடுத்துக் கொண்டிருந்தது!

குடும்பமாக எல்லாரும் போய் நமஸ்காரம் பண்ணியதும், இந்த பக்தரை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டே……

“இப்போ… ஒடம்பு எப்டியிருக்கு? தேவலையா?…”

மனைவியும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்!

“ஏன்? ஒங்க ஒடம்புக்கு என்ன?…”

பெரியவா சிரித்துக் கொண்டே…

“இனிமே ஒடம்புக்கு எதாவுது-ன்னா….பகவானை கூப்டு! போயும் போயும் என்னையா கூப்டுவா?… அன்னிக்கி ஒன்னை பகவான்தான் காப்பாத்தியிருக்கார்”….

“ஆமா…..பெரியவா…! 'என்னோட பகவான்’தான் காப்பாத்தினார்!..”

பக்தரும், கண்களில் வழியும் கண்ணீரோடு, தன் பகவானைப் பற்றிய பெருமையோடு, சிரித்துக் கொண்டே கூறினார்.

ஹ்ருதயத்தில் பீடம் போட்டு, நம் பகவானை அதில் அமர வைத்துவிட்டால் போதும்! எக்காலத்திலும் எந்த ஜன்மத்திலும் நம் பகவான் தரும் ரக்ஷை, நம்மை பிறவித் தளைகளிலிருந்து கட்டாயம் காப்பாற்றும்.

பகவான் ஸ்ரீ ராமானுஜர் பெரிய அவதார புருஷர். அவருடைய ஶிஷ்யர்களோ ஆச்சார்ய பக்தியில் உத்க்ருஷ்டமான இடத்தை பிடித்திருந்தனர்.

ஒருமுறை ஸ்ரீ கூரத்தாழ்வார், தன் ஆச்சார்யனுக்காக பாலை நன்றாகக் காய்ச்சி, கல்கண்டு, ஏலக்காய் எல்லாம் போட்டு எடுத்துக் கொண்டு வந்தார்.

ஆச்சார்யன், “பகவானுக்காக பால் கொண்டு வந்தாயோ?” என்று ரங்கனை நினைத்துக் கூரத்தாழ்வாரிடம் கேட்டார்.

“ஆம் ஸ்வாமி ! இது, 'என்னுடைய பகவானுக்காக' எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்…”

ஆச்சார்யனே தன்னுடைய பகவான்... என்பதை அழகான பதிலில் எடுத்துரைத்தார் கூரத்தாழ்வார்.
 
பெரியவாளை நினைச்சுட்டே இருக்கிறது ஒரு வித பக்தி. அவர் சொன்னதை செய்றது ஒரு விதமான பக்தி. அவர் சொன்னதை தானும் செய்து மற்றவங்களும் செய்யணும்னு எதிர்பார்க்கிறது வேற விதமான பக்தி.

பெரியவா எஜமான் தான். ஆனா எஜமானுக்கெல்லாம் எஜமான் தான் பெரியவா . ஆனா அவரை நாம் அப்படி பார்க்கலை. இப்படி ஒரு பிறவியான்னு ஆச்சர்யமா இன்னிக்கு வரைக்கும் பார்த்துட்டு தான் இருக்கிறோம்.

என்னிக்காவது வாயைத்திறந்து தனக்கு இது வேணும் அது வேணும்னு சொல்லியிருக்காரா? வாயைத் திறந்தா வேதபாடசாலை, பாடசாலை குழந்தைகள், கோவில் புனருத்ராணம், சாஸ்திரம் இப்படித்தான் வாயில் வரும். நிஜமாவே அவர் வாழ்ந்த காலம் பொற்காலம்.

அவர் என்ன கையை சுற்றி எலுமிச்சம்பழம் கொடுத்தாரா இல்லை வாட்ச் கொடுத்தாரா? இல்லை என்னை இத்தனை நாள் வணங்கு உன்னை கோடீஸ்வரன் ஆக்கி விடறேன்னு சொன்னாரா? எதுவுமே சொல்லலை. அம்பாளை போய் நமஸ்காரம் பண்ணு. பரமேஸ்வரனை நமஸ்காரம் பண்ணு. பித்ரு காரியம் ஒழுங்கா பண்ணு. சாஸ்திரத்தை அனுசரிச்சு நடந்துக்கோ. நித்ய கர்மானுஷ்டானத்தை விடாதே இப்படித்தானே யாரா இருந்தாலும் உபதேசிப்பார்.

யாரோ ஒருத்தருடைய உபன்யாஸத்தில் கேட்டேன். //டேய் நான் தப்பு பண்ணிடக் கூடாதுடா. நான் தப்பு பண்ணிட்டேன்னா என்னை திட்டுவா எல்லோரும். அப்படி திட்டினா அது ஆச்சார்யா பகவத்பாதாளை போய் சேரும். அது எத்தனை பெரிய துரோகம் தெரியுமா? குருவுக்கு கெட்ட பெயர் நான் வாங்கி கொடுக்கலாமா// கேட்கும் போதே கண்ணீர் வரும். அப்ப கூட தன்னை ஒரு குரு அப்படின்னு பெரியவா ஒத்துக்கலை. அப்படிப்பட்ட வினயம், குருபக்தி, தீர்க்கமான சிந்தனை யாருக்கு வரும்?
இது தான் பெரியவா. ?
cleardot.gif
 
பெரியவா சரணம் !!

“எனக்கு வயசாயிடுத்தோன்னோ? நான் கிழவனாயிட்டேன். (தண்டத்தைக் காட்டி) இந்தக் குச்சியை எடுத்துண்டு அவ்வளவு தூரம் வரமுடியல்லே. நீ தான் என்னைப் பார்க்க வரணும்”

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள். பெரியவாளைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருந்தேனே தவிர, விசேஷமான பக்தி என்று எதுவும் இல்லாத காலம்.

திடீரென்று தரிசனம் கொடுத்தார்கள் – கனவில்! ‘ஏதோ, பிரமை’ என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அடிக்கடி வந்து தரிசனம் கொடுத்தார்கள்.
இந்தப் புனிதக் கனவுகளுக்கு ஒரு கௌரவம் கொடுக்க வேண்டாமா?

குருவார விரதம் மேற்கொண்டேன். அது முதல் ஒவ்வொரு வியாழனிலும் தரிசனம் கிடைக்க ஆரம்பித்தது. சந்தோஷமாக இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.
பெரியவா வருவதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன்?

அன்று வியாழக்கிழமை. படுக்கையில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு பிரார்த்திக்கிறேன். ‘இன்றைக்காவது தரிசனம் கொடுக்கணும்’.
ஊஹூம்… பெரியவாள் வரவில்லை.

ரொம்பவும் ஏக்கமாகத்தான் இருந்தது. என் பிரார்த்தனையை ஏன் பெரியவாள் ஏற்றுக் கொள்ளவில்லை?

இரண்டு நாட்கள் கழித்து சொப்பனத்தில் காட்சி தந்தார்கள். “பெரியவாள் தரிசனம் முன்பெல்லாம் அடிக்கடி கிடைச்சுது. இப்போ பெரியவா வரதே இல்லை” என்று வருத்தத்துடன் கூறினேன்.

பெரியவாள் மெல்லச் சிரித்தார்கள். “எனக்கு வயசாயிடுத்தோன்னோ? நான் கிழவனாயிட்டேன். (தண்டத்தைக் காட்டி) இந்தக் குச்சியை எடுத்துண்டு அவ்வளவு தூரம் வரமுடியல்லே. நீ தான் என்னைப் பார்க்க வரணும்”.

“பெரியவா அனுக்ரஹம் இருந்தால் வருவேன்.”

“உத்ஸவத்துக்கு வரயா?”

“அனுக்ரஹம் செய்தால் வருவேன்”.

கனவு கலைந்தது. ஒன்றும் விளங்கவில்லை. எந்த உற்சவத்துக்கு வரவேண்டும்? அதற்கும் பெரியவாள் தரிசனத்துக்கும் என்ன சம்பந்தம்?

மறுநாளே அந்த ஆச்சரியம் நடந்தது.

சென்னையில் ஒரு கல்யாணத்துக்கு என் பெரியம்மா போக வேண்டியிருந்தது. “துணைக்கு நீ வாயேன். நீ வந்தால்,, போகிற வழியில், காஞ்சிபுரத்தில் பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டுப் போகலாம்.”

அடுத்த நிமிடமே நான் தயாராகிவிட்டேன்!

மறுநாள் காலை நாங்கள் காஞ்சிபுரம் மடத்து வாசலுக்குச் சென்றபோது, அங்கே காமாக்ஷி வந்து நின்றுகொண்டிருந்தாள். ஏகக் கூட்டம். மூன்று பெரியவர்களும் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

“என்ன விசேஷம் இன்னிக்கு” என்று உள்ளூர்ப் பெண்மணியைக் கேட்டேன்.

“தெரியாதா உனக்கு? காமாக்ஷி கோயில் உத்ஸவம் நடந்து கொண்டிருக்கு”.

எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. “உத்ஸ்வத்துக்கு வரயா?” – வெறும் கனவு அல்ல; தெய்வ சங்கல்பம்!

எழுதியவர் : ஜானா கண்ணன்
மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பகுதி

------------------------------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்
 
mahaperiyava-rare-skinny.jpeg

Thanks to Kanjira Sri Ganesh Kumar for this wonderful share….
When I opened the image, I was shocked to see how thin Mahaperiyava is in this photo! Entire chest area has absolutely no flesh at all, skinny. but He is in His usual Self effulgence beyond physical limitation, He looks perfectly normal in the photo.
Sri Mahaperiyava Saranam!
 
சுத்த தீர்த்தம் !!
கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் பெரியவா சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடித்து, தீர்த்தப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் அபரிதமாக இருந்தது. பெண்கள் வரிசையில் சிறு வயதிலிருந்தே பெரியவாளின் பக்தையான ராஜம் என்ற பெண்மணி நின்று கொண்டிருந்தார்.
மகானின் திருக்கரங்களால் தீர்த்த பிரசாதம் பெற்ற பெண்கள், முகத்தில் ஆனந்தம் பொங்க நகர்ந்து கொண்டிருந்தனர். ராஜத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு தர்ம சங்கடம் ராஜத்துக்கு!
காலையில் குளித்து முடித்து, பின்னிக் கொள்ளாமல் அப்படியே முடிந்து கொண்டு வந்திருந்தார் ராஜம். தலைமுடியை ஒன்றாக எடுத்து உச்சந்தலையில் போட்ட முடிச்சு பெரியவாளின் அருகே செல்லும் போது அவிழ்ந்து விட்டது. அதாவது தலைவிரி கோலமாக இருந்தது. தலையை முடிந்து கொண்டால், உடனே கழுவ வேண்டும். வரிசையை விட்டு சென்று தலையை முடிந்து கொண்டு வரலாமென்றால் அது முடியாத காரியமாக இருந்தது. பெண்கள் வரிசை மிக நீண்டதாக இருந்தது.
பெரியவா பார்வையில் இருந்து விலகித் தான் இருந்தார் ராஜம். ’ஆனது ஆகட்டும்’ என தலைமுடியை இரு கைகளாலும் எடுத்து அப்படியே முடிந்து கொண்டார். இருந்தாலும் தலை முடி பட்ட கையால் தீர்த்ததை எப்படி ஏற்பது என்ற சஞ்சலமும் இருந்தது.
இதோ ராஜத்தின் முறையும் வந்தது. தீர்த்தப் பிரசாதம் வேண்டி கைகளை நீட்டிக் கொண்டிருந்தாலும் நம் கை அவ்வளவு சுத்தமாக இல்லையே பெரியவாளின் திருச் சந்நிதியில் அபசாரம் செய்கிறோமே என்ற தவிப்பு மனதைப் பிசைந்தது. மனதை ஒருவாறு சமாதானப் படுத்தி கையை நீட்டிக் கொண்டிருந்தார் ராஜம்.
ஒரு புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்த அந்தப் பரப்பிரம்மம் , ஒரு உத்தரணி தீர்த்ததை ராஜத்தின் வலக் கையில் விட்டு, “இதைச் சாப்பிடாதே… கீழே விட்டுடு” என்றதே பார்க்கணும்! கண்களில் நீர் குபுக்கென்று எட்டிப் பார்க்க அந்த தீர்த்ததைக் கீழே விட்டு வலது கையால் இடது உள்ளங்கையையும் நன்றாகத் துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டார்.
“இப்ப ஒன் கை சுத்தமாயிடுத்து. ஜலம் வாங்கிக்கோ” என்ற படி ராஜத்தின் கைகளில் இன்னொரு முறை தீர்த்தம் விட்டார் பெரியவா. ‘மகா பெரியவா சரணம்….மகா பெரியவா சரணம்’ என்று அவரது திருநாமத்தை உச்சரித்தபடியே, கண்ணீர் மல்க அந்தத் தீர்த்தத்தை வாங்கி அருந்தி, தன் தலையிலும் பக்தி சிரத்தையுடன் தெளித்துக் கொண்டார் ராஜம்.
மகாபெரியவாளை ‘கலியுக தெய்வம்’, ‘கண் கண்ட தெய்வம்’, கருணை கடல் என்றெல்லாம் சொல்லுகிறோம். எல்லாமே சத்தியமான வார்த்தைகள்.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

periyava.jpg
 
Latest posts

Latest ads

Back
Top