"தேர் வடத்தைப் பிடித்து இழுத்துட்டு வாங்கோ.."
(குடும்பக் கஷ்டங்கள் அடுக்கடுக்காகச் சொன்ன செல்வந்தருக்கு பரிகாரம் சொன்ன பெரியவா)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-119
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
மகா செல்வர் குடும்பம். ஸ்ரீ மடத்துக்கு நிறையக் கைங்கர்யம் செய்தவர்கள்.
பெரியவாளைச் சாட்சாத் பரமேசுவரனாகவே கருதி வணங்கினார்கள்.
ஆனால்,அந்த குடும்பத்தில் நிம்மதியில்லை. கஷ்டத்தின் மேல் கஷ்டம்.அடுக்கடுக்காகத் துன்பம், அலைஅலையாக இடையூறுகள். பரிகாரங்கள் செய்து பார்த்தாகி விட்டது.பலன் ஏதும் கிடைக்கவில்லை.
குடும்பத்தலைவர், பெரியவாளிடம் வந்து ஏறக்குறைய அழுகிற குரலில், தன் கஷ்டங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
"நான் ஏதாவது குற்றம் குறை சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே?"-பெரியவா.
அவர் தவித்தார்.
"பெரியவா சொல்றதுதான் எங்களுக்கு வேதவாக்கு.. பெரியவா அனுக்ரஹத்துக்காக காத்திண்டிருக்கோம்"
"உங்க ஊர்க் கோயிலில் வருஷா வருஷம் தேரோட்டம் நடக்கும். உன் குடும்பத்தவர்கள்தான் .அதை நடத்திண்டிருந்தா. உன் தகப்பனார் தேரோட்டத்தை நிறுத்து விட்டார். செலவு அதிகம் என்பதோடு, ஆள் படைகளைச் சேர்க்க முடியல்லேன்னு காரணம் காட்டினார். அடுத்த வருஷத்திலேர்ந்து, நான் பண்றேனேன்னு சொல்லுவே நீ. ஆனா, தேர் ஓடுகிற நிலையில் இல்லை;நிறைய ரிப்பேர், ஊர்ல பல கட்சி."
"அப்படியானால் எங்களுக்கு விமோசனமே கிடையாதா? என்று உள்ளூர அழுது கொண்டிருந்தார் செல்வர்.
"ஒரு காரியம் பண்ணு.எந்த ஊரிலாவது தேரோட்டம் நடந்தா, நீங்க எல்லாருமே போய் கொஞ்ச நேரமாவது தேர் வடத்தைப் பிடித்து இழுத்துட்டு வாங்கோ.."
அதற்குப் பின் சுற்று வட்டாரத்தில் எங்கேனும் தேர்த்திருவிழா என்றால்,இந்த செல்வந்தர் குடும்பத்தை அங்கே பார்க்கலாம். ஆணும் பெண்ணுமாக மற்ற ஜனங்களோடு நின்று,தேர்வடம் பிடித்து இழுத்தார்கள்.
குடும்பக் கஷ்டங்கள்,தேர்ச் சக்கரங்களின் அடியில் மாட்டிக்கொண்டு மண்ணோடு கலந்து விட்டன.
பின்னர்,தன் ஊர் தேர் சீரமைப்புக் குழு அமைத்துப் பழைய தேரைச் செப்பனிட்டு தேரோட்டத்தைத் தொடங்கினார்கள் ஊர் மக்கள். அந்தத் தேர் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.
நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP