• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குருவே சரணம்..

1644. குழந்தை இல்லாதவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
வேதம் உணர்த்தும் உண்மை, உணர்ந்தவனுக்குப் பிறப்பில்லை

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஓர் சம்பவம்

நண்பர் ஒருவருக்கு குழந்தைகள் இல்லை அவரது சகோதரருக்கு இரண்டு பெண்கள் மட்டுமே ( இவர்களது அப்பா அம்மாவுக்கு இவர்கள் இருவர் தான் பிள்ளைகள் பெண்கள் கூட கிடையாது) அவர் அடியேனிடம் வந்து ஸ்வாமி நான் ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ளலாம் என உள்ளேன் ஒரு நல்ல நாளாக பார்தது சொல்ல முடியுமா என்றார்

அடியேன் அவரிடம் ஸ்வாமி எதற்க்காக இப்போ ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ள போகிறீர் என்றேன்

ஸ்வாமி அடியேனுக்கு குழந்தைகள் இல்லை என்னையும் என் மனைவியையும் ஏதோ குறை உள்ளவர்கள் போல் உறவினர்களும் நண்பர்களும் பார்க்கிறார்கள் அத்தோடு எனக்கு கர்மா பண்ண பிதுர் காரியம் செய்ய ஒரு பையன் வேண்டும் எனவே ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளலாம் என உள்ளேன் என்றார்

அவரிடம் ஸ்வாமி நீர் ஏன் பகவானுக்கு எதிராக செயல்படுகிறீர் என்றேன்

ஸ்வாமி என்னை பார்தது பகவானுக்கு எதிராக செயல்படுகிறேன் என்கிறீரே நான் பகவானுக்கு நித்ய ஆராதனம் செய்கிறேன் சந்தியாவந்தணம் செய்கிறேன் நேரம் கிட்டும் போதெல்லாம் ஶ்ரீபாதம் தாங்கியாக செல்கிறேன் முடிந்த அளவு கோவில் கைங்கர்யங்கள் கைங்கர்யத்துக்கு தேவையான உதவிகள் செய்துவருகிறேனே தேவரீர் என்னை பார்த்து இப்படி பகரலாமா என்றார்

ஸ்வாமி இது எல்லாம் உம் கையில் உள்ளது செய்கிறீர் ஆனால் பகவான் வேண்டாம் என நிறுத்தியதை நீர் தொடங்கலாமா என்றேன்

ஸ்வாமி புரியவில்லை என்றார்

அடியேன் அவரிடம் ஸ்வாமி தேவரீர் ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ள போவதாக சொல்லும் போது பிதுர் கர்மா மற்றும் உமக்கு கர்மகாரியங்கள் செய்ய வேண்டியுள்ளதற்காக ஒரு ஆண் குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொள்ள போவதாக சொன்னீரல்லவா அதை தான் பகவானுக்கு எதிரான செயல் என்றேன்

எப்படி ஸ்வாமி என்றார்

ஸ்வாமி ஒருவனுக்கு இனிமேல் கர்மபலனே இல்லை இந்த பிறவியுடன் அவன் செய்த செய்யப்போகும் கர்மபலன் எல்லாமே முடிந்துவிடும் எனவே இவனுக்கும் இவன் மூலம் இவன் சந்ததிக்கும் எந்த கர்மாவும் செய்ய தேவையில்லை என பகவான் முடிவு செய்து குழந்தை பாக்யம் தராதபோது

பகவானை மறந்து ஊர்கார்ர்கள் சொந்தங்கள் வார்த்தைகளுக்கு சொல்லுக்கு பயந்து ஒரு குழந்தையை ஸ்வீகாரம் செய்து கொண்டு ( அந்த குழந்தையின் பூர்வகர்மா நிகழ்கர்மாகளை உமது தலையில் ஏற்றிக்கொண்டு) உமது கர்மாவை இதன் மூலம் மீண்டும் ஆரம்பித்து பகவானுக்கு எதிராக செயல்பட ஆயத்தமாகி விட்டீரே இது தேவையில்லாத ஒன்று உங்களது பிதுர்களுக்கும் உமக்கும் இனிமேல் கர்ம பலன் இல்லை எனவே பகவான் சந்ததி கொடுக்கவில்லை

இதை தான் பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறந்ததாமே என்பர்

உமது பாவங்கள் தொலைந்து பிள்ளைகள் பிறக்காத போது இப்போது யாரோ ஒருவனின் பாவத்தை நீரும் சுமந்து பகவானையும் உமக்காக சுமக்கவைப்பது சரியல்ல

உமது சகோதரனுக்கு ஒரே ஒரு கர்மபலன் பாக்கியுள்ளது அதனால் பெண் குழந்தையை கொடுத்துள்ளார் என்றேன்

புரியவில்லையே என்றார்

ஒருவருக்கு குழந்தைகளை இல்லை என்றால் அவர்களுக்கு கர்மபலன் எல்லாம் முடிந்து அவர்கள் பகவானின் ஆசாரியரின் திருவடிகளை அந்த பிறவியுடன் அடைந்துய்வர் மறுபிறவி இல்லை என்பதே அர்த்தம்

பெண்பிள்ளை மட்டும் பிறந்தால் அந்த பெண்பிள்ளையின் மகன் ( தன் தகப்பனாருக்கு பின்) செய்யும் தர்பணத்துடன் அந்த கர்மாவும் முடிந்து அவர்கள் பகவானின் திருவடிகளை ( அந்த குழந்தையின் காலத்துக்கு பின்) அல்லது ஆசாரியன் திருவடிகளை அடைந்து உய்வர்

எனவே ஸ்வீகாரம் எடுப்பதும் செயற்க்கை முறையில் குழந்தைகளை உறுவாக்கி கொள்வதும் தேவையில்லாத ஒன்று அது பகவானுக்கு எதிரான செய்கை

எனவே தான் முற்காலத்தில் மகப்பேறு இல்லாதவர்கள் தங்களது சொத்துக்களை ஆஸ்திகளை கோவில்களுக்கும் தர்மகாரியங்களுக்கும் அன்னசத்திரம் கட்டியும் டிரஸ்டுகள் என ஏற்படுத்தியும் பலதர்ம காரியங்களுக்கு எழுதிவைத்து சென்றனர்

உமக்கு பின் உம் பங்காளிகள் யாரேனும் அந்திம காரியம் செய்து அதன் மூலம் அவரும் அவரது சந்ததிகளும் கடைதேறுவர் எந்த நாதிகாரர்களும் பண்ண வில்லை என்றால் அந்த பாவத்தை போக்க அவர்கள் பகவானிடம் தண்டனை ஏற்பர் அவர்களும் அந்த அந்திம காரியத்துடன்( ஒரு வருட கைங்கர்யத்துடன்) உமக்கான மேற்கொண்டு கர்ம காரியங்களை செய்ய தேவையில்லை

அதை விடுத்து ஸ்வீகாரம் எடுப்பதும் என் சொத்தை உனக்கு தருகிறேன் உன் காலம் வரை எனக்கு வருடாவருடம் காரியம் செய் (செய்வாரா என்பது வேறு) என்றும் கூறி நாமே நமக்கான கர்மபலன்களை பகவானை மீறி ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை

ஊர் உறவு ஆயிரம் சொல்லலாம் உடம்பில் அந்த வம்ச உற்பத்தி அணுவை குறைத்து கர்மபலனை போக்கிய பகவானுக்கு நன்றி செலுத்தி

உமது செல்வங்களை பகவானுக்கும் ஏழைகளுக்கும் தேவைப்படும் உறவினர்களின் குழந்தைகளின் படிப்புகளுக்கும் ஆடைகளுக்கும் விவாகத்திற்க்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தும் அது போக மீதமிருந்தால் அபிமான கோவில் அல்லது பெற்றோர் பெயரில் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி பல நல்ல காரியம் செய்ய பயன்படும் படி ஏற்பாடு செய்து வையும் என்றேன்

அவர் தன்யோஸ்மி எனக்கு ஒரு தெளிவு கிட்டியது நேராக கோவிலுக்கு சென்று பகவானின் காலடியில் விழுந்து நான் செய்ய இருந்த தவறான செய்கைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியவர்

ஒரு சந்தேகம் என்றார்

என்ன என்றேன்

ஸ்வாமி அப்படியானால் தசரத மகாராஜா ஏன் புத்ரகாமயேஷ்டி யாகம் செய்து பிள்ளை வேண்டும் என கேட்டார்? என்றார்

ஸ்வாமி தசரதனுக்கு மகனாக பிறந்து அசுரர்களை அழிப்பேன் என பகவான் சங்கல்பம் செய்து பிறந்தார் அதனால் அவர் குலகுரு யோசனைபடி யாகம் செய்து பகவான் சங்கல்பத்தை நிறைவு செய்தார் யாரையும் ஸ்வீகாரம் எடுக்கவில்லை மருந்து மாத்திரை செயற்கை கருத்தரிப்பு என செய்துகொள்ளவில்லை பகவத் பிரசாதமாக வேள்வியில் கிடைத்ததை மனைவியரை உண்ண செய்து நாட்டுக்காக மகனை பெற்றார் அவருக்கும் பகவானே கர்மாவை செய்து உய்வித்தான்

அந்த யுகம் வேறு இந்த யுகம் வேறு

பகவானே சங்கல்பம் செய்து புத்திரன் கொடுத்தால் ஏற்க்கலாம் நாமாக வேறு மார்க்கத்தில் சென்று சந்ததிகளை உருவாக்குவது தவறு என்றேன்

மீண்டும் நன்றி கூறி ஜெய் ஶ்ரீராம் என்றவாறே சென்றார். நாமும் சொல்வோம்

ஜெய் ஶ்ரீராம்!!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"மகானின் அருட்பார்வை!"


(.பசுவின் கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு..... ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது)

கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

இந்தச் சம்பவம் காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சி.

மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை
தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த
கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை
வேளைகளில் உரையாடுவது வழக்கம். சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும்.மகான் மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத
கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு
வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர,அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.வைத்தியர்கள்
வரவழைக்கப்பட்டனர்.கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல.. காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.
பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள் நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.

தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு
இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே
அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே
இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு.....

ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது.துள்ளியபடி நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது.

ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான். அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து கொண்டனர்.
பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின் மகான் உள்ளே போனார்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
அன்று நடந்தது!! அர்த்தமுள்ளது!!
------------------------------------------------------
ஒரு சோம்பலான மதியம் மூன்றரை மணி!!
அதாவது மதியத்தின் முடிவு--மாலைப் பொழுதின் ஆரம்பம் என்ற இரண்டுங்கெட்டான் பொழுது??

காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது!!
காரிலிருந்து இறங்குபவரைப் பார்த்ததும் மடம் -தீ பிடித்துக் கொண்டதைப் போல் ஆகிறது??

ஆம்!! காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்!!

எந்தவித முன் அறிவிப்பும் இல்லை?? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை??

மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள்?? காரணம்??

அன்றைய மடாதிபதியான மஹா பெரியவர் அந்த சமயம் மடத்தில் இல்லை!! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்??

மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்!!
ஏன் இந்தப் பரபரப்பு??

அவரிடம் தயங்கியபடியே விபரம் சொல்லப்படுகிறது!!

மகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்??

இவ்வளவு தானே?? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன்?? பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்??

மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி??
நம் மனதிலோ பிரமிப்பில் நெடிலை நோக்கி??/

இப்படி வருத்தப் படுகிறது முதல்வரை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி??

உன்னை உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை??

அதனால் என்ன?? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!! என்றபடி அவர்க்கு

எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி??

இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்!! அந்த ஒரு சிலரில் எம்,ஜி,ஆரும் ஒருவர்!!!

ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!!

நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்---பழனி--திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு!! அதுக்கு தேக சிரமம்--கால விரயம்--பணச் செலவுன்னு ஆகிறது!!

ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்!!

இவ்வளவு தானே?? இந்த சின்ன விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?? ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே?? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும்-----
தங்கற இந்த மடாதிபதி--அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க---

உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை?? என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்???

நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா!! அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்!! அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து!! நீ கிளம்பு என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி!!

இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!!!!

எம்,ஜி,ஆர்,அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது
யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது????

அருட்காட்சியும்--அரசாட்சியும் அருமையாக அமைந்து விட்டால்---
அரசனும்--ஆண்டவனும் ஒன்றே என்பது நமக்கு விளங்குகிறது அல்லவா

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"பெரியவா 'தர்மாவதாரம்' தானே!"

(அனாதைப் பசுவிற்கு அடைக்கலமும்-மடத்திற்கு சொந்தமில்லாததால் அதன் பாலை சிவன் கோயிலுக்கும்-தொடர்ந்து பசுவும்,கன்றையும் கோயிலுக்கே தானம் கொடுத்ததும்,பின் கோயிலில் ஏலம் போடுவதைக் கேள்விப்பட்டு (கசாப்புக் கடைக்கு போகுமே என்ற அச்சத்தால் ஒரு தனவந்தர் மூலம் ஏலம் எடுத்து பராமரிக்கக் கூடியவர்களுக்கு இலவசமாக அளித்தும்)
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
உள்ளம் கவர் கள்வன் (சில அனுபவங்கள்)
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

கும்பகோணத்தை மையமாக வைத்து ஸ்ரீமடம் செயல்பட்டுக் கொண்டிருந்த சமயம்.

மடத்தின் பின்புறம் பெரிய மாட்டுக் கொட்டில்.மடத்துப் பசுமாடுகளுடன் கூட ஒரு புதிய பசுமாடு வந்து, வைக்கோல் தின்று கொண்டிருந்தது. தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததுஅ

யாருடைய மாடு என்று தெரியவில்லை. ஒருவரும் மாட்டைத் தேடிக்கொண்டும் வரவில்லை. அக்கம் பக்கத்தில் தகவல் கொடுத்தும் பயனில்லை.

நாலைந்து நாட்கள் கடந்தன.

"அந்த மாட்டை வெளியே ஓட்டி விடலாமா?" என்று பெரியவாளிடம் வந்து கேட்டார் கார்வார்.

"வெளிமாடு என்பதால் அந்தப் பசு மாட்டை. வெளியே துரத்தி விடுவதானால், நம்ம மடத்திலுள்ள பல வெளி மனிதர்களையும் வெளியே அனுப்பி விட வேண்டும்...."-பெரியவா (௳டத்தில் எந்தக் காரியமும் செய்யாமல்,தான் முக்கியமான பணி செய்வது போல் காட்டிக் கொண்டு பலர் உண்டு,உறங்கி வந்தார்கள்)

"மாடு வாயில்லாப் பிராணி. அதனுடைய எஜமானன் என்று தெரியல்லே. நம்ம மாட்டுக் கொட்டகையிலேயே இருக்கட்டும்.அதை ரட்சிக்க வேண்டியது நமது கடமை".-பெரியவா.

சில நாட்கள் கழிந்த பின், அந்தப் பசுமாடு, சினைப்பட்டு கன்றும் ஈன்றது.

கார்வார் மறுபடியும் நின்றார் பெரியவாள் முன்.

"சீயம்பால் காலம் முடிஞ்சு போச்சு...நல்ல ஜாதி மாடு...புஷ்டியான தீனி...வேளைக்கு நாலு சேர் கறக்கிறது..."-கார்வார்.

"அந்த மாட்டுப்பாலை அப்படியே காளஹஸ்தீஸ்வரர் கோயில் அபிஷேகத்துக்குக் கொடுத்து விடு. மாடு மடத்துக்குச் சொந்தமானது இல்லை... பால் மடத்துக்கு வேண்டாம்"-பெரியவா.

இரண்டு நாட்கள் ஆயின.

"என்ன செய்கிறே அந்த மாட்டுப் பாலை? என்று கார்வாரிடம் கேள்வி.

அவர்,அவசரம் அவசரமாக, "தினந்தோறும் நாலு சேர் பால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்துட்டேன்" என்றார்.

"என்றாலும் தவறுதலாக மடத்து உபயோகத்துக்கு வந்துடலாம் இல்லையா?....மாட்டையும்,கன்றையும் ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடு.."

அப்படியே செய்தார் கார்வார்.

ஆனால், அந்தக் கோயிலில் ஏற்கனவே நாலைந்து பசுமாடுகள் இருந்தன.நிஎவகிப்பது கஷ்டமாக இருந்தது.

பசு மாடுகளை கோயில் அதிகாரி ஏலத்துக்குக் கொண்டு வந்து விட்டார்.

ஏலத்தில் விட்டால், அவையெல்லாம் நேரே கசாப்புக் கடைக்குத்தான் போகும் என்ற அச்சம் பெரியவாளுக்கு.

செல்வந்தரான ஒரு பக்தரிடம் சொல்லி, எல்லா மாடுகளையும் ஏலத்தில் எடுக்கச் சொன்னார்கள். பின்னர் அக்கறையுடன் பரமரிக்கக் கூடியவர்களாகப் பார்த்து, ஒவ்வொரு பசுமாடாகக் கொடுத்து விட்டார்கள்.

பசுக்களிடம் அவ்வளவு வாத்ஸல்யம் பெரியவாளுக்கு.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை"

(பக்குவமா சொன்ன பெரியவா)

(பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும்,பக்குவமாகத்தானே இருக்கமுடியும்)

தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான சிவலிங்கங்கள் உள்ளன.வயல்வெளி, தோட்டம்,துரவு,மாதா கோயில்,தர்கா,மயானம் போன்ற இடங்களில் மேற்கூரை கூட இல்லாமல் இருக்கின்றன.வெயிலிலும்,மழையிலும் காய்ந்தும்,நனைந்தும் இன்னல் பட்டுக் கொண்டிருக்கும் இந்த சிவலிங்கங்களுக்கு வழிபாடுகளும் இல்லை.

பெரியவாளுடைய உத்தரவை ஏற்று, சில அன்பர்கள், சிவலிங்கங்களுக்கு மேலே மண்டபம் (கோயில் கோபுர அமைப்பில் இல்லாவிட்டாலும், மழை-வெயில் தாக்காதபடி மேற்கூரை அமைப்பில்) கட்டி நித்தியப்படி ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மேற்கூரை கூட இல்லாத சுமார் பத்துப் பன்னிரண்டு சிவலிங்கங்களுக்கு ஸ்ரீமடத்தின் சிஷ்யர்கள் இருவர், நாள் தோறும் ஸ்ரீ மடம் வண்டியில் சென்று, அபிஷேக ஆராதனை - நைவேத்யம் செய்து வந்தார்கள்.எல்லாப் பூஜைகளையும் முடித்துக்கொண்டு,ஸ்ரீ மடத்துக்குத் திரும்பியதும் பெரியவாளுக்குப் பிரசாதம் கொடுப்பார்கள்

இந்த சிஷ்யர்கள் பூஜை செய்யும் லிங்கங்களில் இரண்டு மூர்த்திகள் மயான எல்லைக்குள் இருக்கின்றன்.

"மயானப் பகுதிக்குள் சென்றுவிட்டு, நீராடிச் சுத்தம் செய்து கொள்ளாமல்,ஸ்ரீமடத்துக்குள் எப்படி நுழைவது? அது தவறு இல்லையோ?" என்று ராமமூர்த்தி என்ற சிஷ்யருக்கு பலத்த சந்தேகம் வந்துவிட்டது.

சந்திரா என்ற மற்றொரு மெய்த்தொண்டர் சொன்னார்; " நாம் மயானத்துக்கு அங்கே நடக்கும் சடங்கில் பங்கு கொள்வதற்காகப் போகவில்லை.சிவ பூஜை செய்வதற்காகப் போகிறோம். சிவபூஜை செய்து விட்டு,உடனே ஸ்நானம் செய்வது உசிதமில்ல்லை, நமக்கு மடிக்குறைவும் கிடையாது.."

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பு ஏற்படும் நிலை வந்துவிட்டது.

இந்தக் கட்சிக்கும்,அந்தக் கட்சிக்குமாக நாலைந்து பேர் சேர்ந்தார்கள். யார் வேண்டுமானாலும், எவருக்கு வேண்டுமானாலும் ஆதரவு கொடுக்கலாம் தீர்ப்பு வழங்க முடியாதே!

கடைசியில், ஸ்ரீமடத்தின் 'உச்ச நீதி மன்ற'த்துக்குப் போயிற்று வழக்கு!

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டார்கள் பெரியவா.முடிவாக முத்தாய்ப்பான தீர்ப்பைக் கூறினார்கள்.

"ராமமூர்த்திக்கு நாம் மயான எல்லைக்குள் போகிறோம்.அதனால் தீட்டு வந்துவிட்டது.... என்று எண்ணம்..அந்த எண்ணம் தோன்றியவுடனே தீட்டும் உண்டாகி விடுகிறது!...அதனாலே அவன் ஸ்நானம் பண்ணிட்டு வரட்டும்."

"சந்திராவுக்கு ஸ்மாசனம் என்று எண்ணமே இல்லை..கோபுரம்,கர்ப்ப க்ருஹம் என்றில்லா விட்டாலும் கோயிலுக்குப் போய் மந்திரம் சொல்லி சிவபூஜை செய்துவிட்டு வருகிறோம். அதாவது, பவித்ரமான இடத்துக்குப் போய் சிவபூஜை செய்து விட்டு வருகிறோம். அதனாலே தீட்டும் ஒட்டிக்காது; தோஷமும் வராது என்று எண்ணம். ஆகவே, அவனுக்குத் தீட்டும் இல்லை; ஸ்நானமும் வேண்டாம்.

மண்டை உடைய சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம், சந்தோஷ அதிர்ச்சி உண்டாயிற்று.

"எவ்வளவு தெளிவா,ஆணித்தரமா பெரியவா முடிவு சொல்லியிருக்கா...ஒருவரின் தர்மம்,இன்னொருவருக்கும் தர்மமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறதை பக்குவமாக சொல்லிட்டாளே!" என்று வியந்து மகிழ்ந்தார்கள்.

பக்குவமான ஆன்மாவின் தீர்ப்பும், பக்குவமாகத்தானே இருக்க முடியும்!..

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
பெரியவா திருவடியே

சரணம்.

சோழவரம் பக்கத்துல ஒரு ஊர்ல பள்ளிக்கூட வாத்யார் ஒருத்தர் இருந்தார்.

மகாபெரியவாளோட மானசீக பக்தர் அவர்.

அவரோட ஒய்ஃபுக்கும் பெரியவா தான் எல்லாமும்.மகாபெரியவாளோட பேரைச் சொல்லாம அவருக்கு ஒரு நாளும் விடியாது.

முடியாது அவாளுக்கு, மனசுக்குள்ளே ஒரு ஏக்கம் இருந்தது.'மகாபெரியவாளை நேர்ல தரிசிக்கப் போகணும்'கறதுதான் அது.

இந்தக் காலம் மாதிரி போக்குவரத்து வசதியெல்லாம் அப்போ கிடையாது.. அதனால பள்ளிக்கூடத்துக்கு லீவெல்லாம் எடுத்துண்டு போயிட்டு வரமுடியாத சூழல்.

இப்படியே நாள்,வாரம்,

மாசம்,வருஷம்னு காலம் ஓடிண்டு இருந்த நிலையில, ஒரு நாள் அந்த பக்தரோட ஆத்துக்காரிக்கு ஒரு கனவு வந்தது.

அதுல சாட்சாத் மகாபெரியவா வந்தார்."என்னைப் பார்க்கணும்னு சதா ஏங்கிண்டு இருக்காதே.

பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப் பாடிண்டு இரு. உங்க அகத்துல பூஜை பண்ண நானே வருவேன்!" . மகான் சொன்னதைக் கேட்டதும் அப்படியே சிலிர்ப்போட எழுந்தா அந்தப் பெண்மணி.

பக்கத்துல இருந்த அகத்துக்காரை எழுப்பி விஷயத்தைச் சொன்னா. அவருக்கும் தேகம் சிலிர்த்தது. கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்யம் பெருகி வழிஞ்சுது.

விடியகாலம்பற நேரம் கண்ட கனவு பலிக்கும்னு சொல்லுவா. அதனால நம்ப அகத்துக்கு கண்டிப்பா மகாபெரியவா வருவார்னு நம்பிக்கையோட, மகானோட வாக்குப்படி பகவானோட நாம சங்கீர்த்தனத்தைப் பண்ணிண்டே இருந்தா.

நாட்கள் தேய்ஞ்சு நகர்ந்தது. ஆனா, அவாளோட நம்பிக்கை மட்டும் வாடாமத் துளிர்த்தது.,

ஒரு நாள் மத்தியான நேரம். அந்த பக்தரோட அகத்து வாசலில் ரெண்டு பேர் வந்து நின்னா அந்தப் பகுதிக்குப் புதுசா இருந்த அவாளைப் மகா ஆசாரமானவாங்கறது தெரிஞ்சுது

யார் அவான்னு பலரும் யோசிச்சுண்டு இருக்கறச்சே, சுத்துமுத்தும் திரும்பித் திரும்பிப் பார்த்த அவா, சட்டுன்னு..அந்த பக்தரோட அகத்துக்குள்ளே நுழைஞ்சா.

அந்த பக்தரோட பேரைச் சொல்லி, அவரைப் பார்க்கத்தான் வந்திருக்கறதாச் சொன்னார்

"நாங்க ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரோம். மகாபெரியவா திருப்பதியில இருந்து மெட்ராஸுக்கு யாத்திரை பண்ணிண்டு இருக்கார்.

வழியில பல இடங்கள்ள தங்கி பூஜை பண்ணிட்டு யாத்திரையைத் தொடர்ந்துண்டு இருக்கார்.

அந்த வகையில மகாபெரியவா நாளை மறுநாள், இந்தப் பக்கமா வர இருக்கிறார்.அவர் ரெண்டு நாள் இங்கே தங்கறதா தீர்மானம்.

உங்க அகத்துல அவருக்கு தங்கிக்க வசதி பண்ணலாம்னு கேட்கத்தான்......." வந்தவா சொல்லி முடிக்கறதுக்குள்ளேயே, அப்படியே சந்தோஷத்துல சகலத்தையும் மறந்துட்டா அந்த பக்தர் தம்பதி

"பெரியவாளோட திருவடி எங்க அகத்துல படறதுன்னா, அதுக்கு நாங்க எத்தனையோ பிறவிகள்ல புண்ணியம் பண்ணியிருக்கணும்.

இதோ இந்த க்ஷணமே எங்க அகத்தை உங்ககிட்டே ஒப்படைச்சுடறோம்!"னு தழுதழுப்பா சொன்னா.

மகாபெரியவா அங்கே வரப்போறதும், ரெண்டு நாள் தங்கப்போறதும் ஊர்க்காரா எல்லாருக்கும் தெரிஞ்சுது.

ஆளாளுக்குப் போட்டி போட்டுண்டு,

தெருவை,ஊரை சுத்தப்படுத்தி, தோரணமெல்லாம் கட்டி,வாசல் தெளிச்சு கோலம்போட்டு...அமர்க்களமா ஏற்பாடுகளைப் பண்ணினா.

கனிவர்க்கம்,காய்கறிகள்,தானியங்கள் இப்படி அவசியமான திரவியங்களைப் பலர் கொடுத்தா.

பூ, இலைன்னு பூஜைக்குத் தேவையானதுக்கெல்லாம் சிலர் ஏற்பாடு செஞ்சா.

மகாபெரியவா அந்த ஊருக்கு வந்தப்போ ஏராளமானபேர் திரண்டு வந்து பூர்ணகும்ப மரியாதை குடுத்து வரவேற்றா.

எல்லாருக்கும் ஆசிர்வாதம் பண்ணிண்டே அந்த பக்தரோட அகத்துக்குள்ளே எழுந்தருளின மகாபெரியவா, அவாளைப் பார்த்து, "என்ன சொப்பனம் மாதிரி இருக்கா?"

அப்படின்னு கேட்டதும் அப்படியே தடால்னு அவர் திருவடியில விழுந்து நமஸ்காரம் பண்ணிண்டா ரெண்டுபேரும். . .

பகவானோட நாமசங்கீர்த்தனத்தைச் சொன்னா கலியுகத்துல கைமேல நற்பலன் கிடைக்கும்கறதுக்கு, அந்த பகவானோட அம்சமா விளங்கின மகாபெரியவா நடத்தின திருவிளையாடல்னே இதைச் சொல்லாம் இல்லையா!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
"சிவ..கடாக்ஷம்னு சொல்லு...நான் என்ன பண்ணினேன்"-

வேலை இழந்த சிவாச்சாரியாருக்கு மறு வாழ்வு கொடுத்த பெரியவாளிடம்-"பெரியவா கடாக்ஷம்..சௌக்கியமா..ரொம்ப சௌக்கியமா இருக்கேன்" என்ற பதிலுக்கு பெரியவா சொன்னது மேலே

(தன்னை ஒளித்துக் கொள்வதில் பெரியவாள் மகா சமர்த்தர்கள்)

தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
உள்ளம் கவர் கள்வன் என்ற தலைப்பில்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நடுவயதினரான ஒரு சிவாச்சாரியார், 'வரும்படி நிறையக் கிடைக்குமே' என்று தன் கிராமத்தை விட்டு, நகரத்தை ஒட்டிப் புதிதாக முளைத்திருந்த ஒரு கோயிலில் பணி ஏற்றுக் கொண்டார். "போக வேண்டாம்" என்று தகப்பனார் சொன்னதையும் கேட்கவில்லை..

புதிய கோயிலில் நல்ல வருமானம் வந்தது. தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட சிவாச்சாரியார் தன் அகங்கார தரத்தையும் உயர்த்திக் கொண்டார்.

விளைவு?

கோயில் சாவியை அவரிடமிருந்து வாங்கி, வேறொரு சிவாச்சாரியாரிடம் கொடுத்துவிட்டார், அடிதடி வழக்குகளுக்குப் பேர் போன தர்மகர்த்தா!

வேலை நீக்கப்பட்ட சிவாச்சாரியார், பெரியவாளிடம் வந்தபோது அவர் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது.

"என்ன சிரமம் உனக்கு?" என்று பெரியவாள் கேட்டார்கள்.

"வேலை போயிடுத்து.....சாப்பாட்டுக்கே கஷ்டம்..."

"உன் அப்பா என்ன பண்றார்!"

"அவர் கிராமத்திலேயே இருக்கார். சிவன் கோயில் பூஜை..."

"உன் கிராமத்திலே என்ன விசேஷம்?..."சிவாச்சாரியார் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார்.

"...அது நாயன்மார்களால் பாடல் பெற்ற ஸ்தலம். ரொம்பப் பழமையானது. ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்டது. ஈசான்யத்தில் ஒரு பெரிய மரம் இருக்குமே...இன்னும் இருக்கோ..."

"இ....ரு...க்...கு.." என்று மெல்ல இழுத்தார் சிவாச்சாரியார். கவனம் வரவில்லை

"உங்க ஊர் பரமேசுவரனுக்கு உன்கிட்ட ரொம்பப் ப்ரீதி....அங்கே இங்கே போய் சின்னச் சின்ன கோயில்களிலே கஷ்டப்படவேண்டாமேன்னு நினைக்கிறார். நீ கிரமாத்துக்குப் போய் உன் அப்பாவுக்கு ஒத்தாசையா இரு..."

பெரியவாள் உத்தரவுப்படியே அவர் கிராமத்துக்குப் போய் சிவன் கோயில் பணியில் ஈடுபட்டார்.

ஆச்சரியம்!

அடுத்த மாதமே அந்தக் கோயில் திருப்பணிக்கு கமிட்டி போட்டுவிட்டார்கள் கிராமத்தார்.

"பாடல் பெற்ற ஸ்தலம்" என்று எக்ஸ்ட்ரா சிறப்பு-சிவனடியார்கள் கூட்டம்.

இரண்டு வருடம் கழித்து பெரியவாள் தரிசனத்துக்கு வந்து, நெடுஞ்சாண்கிடையா விழுந்தார் சிவாச்சாரியார்.

"எந்தக் கோயில் பூஜைன்னு கேளு" என்று எதுவுமே அறியாத அப்பாவியாக, சிஷ்யரிடம் கூறி விசாரிக்கச் சொன்னார்கள் பெரியவா...

அப்போதுதான் சிவாசாரியார் பழைய சரித்ரத்தைச் சொன்னார்.

"இப்போ எப்படி இருக்கே"

சிவாசாரியார் கண்களில் நீர் தளும்பித்து.

"பெரியவா கடாக்ஷம்.!...சௌக்கியமா...ரொம்ப சௌக்கியமா இருக்கேன்.

"சிவகடாக்ஷம்னு சொல்லு....நான் என்ன பண்ணினேன்.

தன்னை ஒளித்துக் கொள்வதில்,பெரியவாள் மகா சமர்த்தர்கள்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
*"எங்கும் வியாபிக்கும் பேரருள்”*

(போர்க் களத்தில் காவி உடையுடன் சந்யாசி உருவத்தில் பெரியவா)

(மெய் சிலிர்க்கும் சம்பவம்)

1956-ஆம் வருடம். இந்திய ராணுவத்தில் மெடிகல் ஆபிசராக பணியாற்றிய ஒரு டாக்டருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவம் இது

ஜப்பானை எதிர்த்து பர்மாவில் போர் நடந்த போது அங்கே பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மகத்தான பணியை இவர் புரிந்தார்.

அச்சமயத்தில் இவர் ஒரு தடவை,போர்க்களத்தில் இருந்த சமயம் ஒரு குண்டு இவரையும் தாக்கியதில் மயக்க முற்று விழுந்து விட்டார். நினைவு இழந்த நிலையில் விழுந்து கிடந்தவர், தான் ஒரு முதல் உதவி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தார்.உடனே தன் கீழ் வேலை செய்த ஒரு சிப்பாயிடம் என்ன நடந்தது என்று கேட்டார் டாக்டர்.

அவனோ படிப்பறிவு இல்லாதவன். டாக்டருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டவன்.ஆனால், டாக்டர் மயக்கமடைந்து விழுந்ததும் நிலை குலைந்து நின்று விட்டான்.என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டு இருந்தவன் முன், ஒரு சந்யாசி காவி உடையுடன் தோன்றினாராம்

“ஏன் இப்படி ஒண்ணுமே செய்யாமே நிக்கறே…உடனே டாக்டரை உன் தோளில் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடு” என்று சொல்லி மறைந்து விட்டாராம்..

அவர் சொன்னபடி சிப்பாயும் நடந்து கொண்டதால், டாக்டர் பிழைத்துக் கொண்டார் ஏதோ படிப்பு வாசனை இல்லாதவன் கூறுகிறான் என்று நினைத்து, டாக்டரும் அந்த சந்யாசி கதைக்கு முக்கியத்துவம் தரவில்லை. மறுத்தும் விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்

சில மாதங்களில் அவர் பூர்ண குணமடைந்தார். அத்துடன் போரும் முடிந்து இருந்தது. அதனால் எப்போதும் வணங்கும் தெய்வமான மகா பெரியவாளை தரிசிக்க நேரில் வந்தார்.

ஸ்ரீபெரியவாளிடம் அந்த சிப்பாய் சொன்ன அபூர்வ நிகழ்ச்சியை இப்போது மகானிடம் சொல்ல மெதுவாக ஆரம்பித்தார். அதற்குள் சர்வ வியாபியான அந்த ஈஸ்வரரே முந்திக் கொண்டார்

“எனக்குத் தெரியுமே…நானே அங்கு வந்திருந்தேன். நீ தான் என்னைப் பார்க்கலே” என்றதும் டாக்டர் திகைப்பினால் உறைந்து விட்டார். அப்படி யெனில் அந்த சிப்பாய் சொன்னது அத்தனையும் உண்மை என்பது, இப்போது தான் டாக்டருக்குப் புரிந்தது..

எங்கும் பரப்பிரம்மயாய்,ஸ்ரீபெரியவா வியாபித்தருளி தன்னைக் காப்பாற்றினதையும், அதை அந்த ஈஸ்வரரே காட்சி சொல்லி மெய்ப்பித்து அருளியதையும்,டாக்டர் அறிந்து உருகிப்போனார்

இந்த மிலிடரி டாக்டர் தனக்கு நடந்த மெய் சிலிர்க்கும் அனுபவத்தை கண்களில் நீர் வழிய விவரித்ததாக ,டாக்டர் கல்யாணராமன் சொன்ன தகவல் இது.

இப்படிப்பட்ட பெருங்கருணை தெய்வத்தின் மேல் நாம் கொள்ளும் பூரண சரணாகதி,பக்தி நம்மை சகல தோஷங்களிலிருந்து விடுபடச் செய்து,எல்லா நலன்களயும் ஈந்து சகல சௌபாக்கியங்களுடனும்,சர்வ மங்களத்துடனும் காப்பாற்றி அருளும் என்பது சத்தியம்.
 
Avyaja Karunamurthi!
av.jpg


The peace one gets by looking at His face is worth everything !
 
பத்து பைசா ஆஸ்பத்திரி
1976ல் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தாம்பரத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் ஒரு ஸ்கூலில் தங்கியிருந்தார். ஒருநாள் மாலை நேரம். அவர் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அது என்ன என்று பெரியவர் விசாரித்தார். அங்கே வசிக்கும் ஏழை மக்களுக்காக 10 பைசா வாங்கிக் கொண்டு நடத்தப்படும் ஒரு ஆஸ்பத்திரி. டாக்டர். ஷர்மா என்பவருடன் இணைந்து அதை நடத்தினோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் ஆஸ்பத்திரி அது. கையில் இருக்கும் மருந்துகள் தீரும்வரை நோயாளிகளுக்குக் கொடுப்போம். தீர்ந்துவிட்டால் தேவைப்படும் மருந்துகளை வாங்கிக்கொள்ளச் சொல்லி பிரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுத்துவிடுவோம். அதற்கு வேறு பெயர் இருந்தாலும் ‘பத்து பைசா ஆஸ்பத்திரி’ என்ற பெயரில் அப்போது ரொம்பப் பிரபலம்.

ஒருநாள் பெரியவர் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். நானும் டாக்டர். ஷர்மாவும் சென்றோம். “நாம வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் போதாது. ஏழை, எளிய மக்களுக்காக நிறையத்தொண்டு செய்யவேண்டும். மருத்துவமும் கல்வியும்தான் இப்ப ரொம்ப முக்கியம். நீங்க இந்தமாதிரி ஞாயித்துக்கிழமை ஆஸ்பத்திரி நடத்தறது ரொம்ப சந்தோஷம். இதை எல்லாநாளும் நடத்தறதுக்கு என்ன செய்யணும்னு பாருங்கோ” என்றார். அது மிகுந்த உத்வேகத்தைத் தந்தது. இப்படிஅவர் குரோம்பேட்டை, நங்கநல்லூர் என்று போகுமிடத்திலெல்லாம் அங்குள்ள பொறுப்பானவர்களிடம் இதேமாதிரி விஷயங்களை வலியுறுத்தி வந்தார். பின்பு மைலாப்பூரில் தங்கியிருந்தபோது அதுவரை தான் சந்தித்த அத்தனை டாக்டர்களையும் கூப்பிட்டு அவர்களிடம் மீண்டும் அதே விஷயத்தை வலியுறுத்திச் சொன்னார். அப்படி உருவானதுதான் சங்கர நேத்ராலயா.

அதுபோலப் பல இடங்களில் பல மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பட்டன. தாம்பரத்தில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றை நாங்கள் தொடங்கினோம். அப்போது தாம்பரம் சின்ன ஊர். இந்தியாவிலேயே பெரிய லெப்ரஸி டாக்டர் ஷர்மா. அதனால் அதைத் தொடங்கினோம். 1988க்குள் தாம்பரத்தில் லெப்ரஸி மிகவும் குறைந்து போய்விட்டது. இப்போது தமிழ்நாட்டில் லெப்ரஸி மிகவும் குறைந்துவிட்டதென்றால் அதில் டாக்டர் ஷர்மாவின் பங்களிப்பு மிக மிக அதிகம்.

பின்னர் அரசாங்கத்திற்கு எழுதிப் போட்டோம். பாபு ஜகஜீவன்ராம் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அரை ஏக்கர் நிலம் கொடுத்தார். சிம்ப்ஸன் க்ரூப் சிவசைலம் 25000 ரூபாய் கொடுத்தார். அதில் கட்டப்பட்டு, 1982ல் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டதுதான் ஹிந்து மிஷன் மருத்துவமனை

– பத்மஸ்ரீ D.K. ஸ்ரீநிவாஸன்
 
முக்தி அடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இறுதி நிமிடங்கள் இதோ;

மாசி 16 - பிப் 28 - 2018:

*காலை 5:30 மணி*: வழக்கம் போல் விடிந்தது காலை. காஞ்சி மடம் இயல்பான பரபரப்புடன் செயல்பட துவங்கியது. அவர்களுக்கு தெரியவில்லை அன்று ஒரு இடி இறங்கப்போகிறது என்று! முதல் நாள் இரவு ப்ருஹ்மோத்சவத்தில் குதிரை வாகனத்தில் வந்த காமாட்சியை ஊர்வலத்தில் வந்து சேவித்துவிட்டு, வழக்கம் போல் நித்திய கடமையாய் தான் செய்யும் குரு வந்தனத்திற்கு ஸ்ரீ மஹாபெரியவாளின் சமாதிக்கு வந்தார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். வந்தனத்தை முடித்த்துவிட்டு தன் ஸ்நானத்திற்கு சென்றார்.

*காலை 7:30 மணி*: பெரியவாளின் உடலில் கொஞ்சம் தளர்ச்சியாக இருந்ததால் அது பற்றி பால பெரியவாள், டாக்டர் ராமச்சந்திர ஐயர் மற்றும் மடத்து ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஸ்நானம் முடித்து மீண்டும் பிருந்தாவன ப்ரதக்ஷிணத்திற்கு வெளிய வரும் சமயத்தில் திடீரென உடலில் அசௌகரியத்தை உணர்கிறார் பெரியவர்.
*காலை 7:45 மணி*: விவரம் தெரிந்ததும் பால பெரியவரும், பெரியவாளின் மருத்துவரும் அவரை அருகில் இருந்து கவனிக்கிறார்கள். பால பெரியவர் உத்தரணியால் துளசி தீர்த்தம் அளிக்கிறார். அதனை மட்டும் பருகிய பெரியவரை, காமாக்ஷி கோவில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிசெல்கின்றனர்.

*காலை 9:00 மணி*: மருத்துவர்கள் இதய துடிப்பை சீராக்க கடும் முயற்சி எடுக்கின்றனர். கடும் மூச்சு திணறலால் நினைவிழந்த பெரியவருக்கு இதயத்துடிப்பு குறைகிறது. உடனடியாக ECG எடுத்தமருத்துவர்கள், காலை 9:05 மணிக்கு, *ஹேவிளம்பி (2018) ஆண்டு, மாசி 16, சுக்ல பக்ஷ திரயோதசி திதியில்*, ஸ்ரீ மஹாபெரியவாளின் கரகமலர், பூஜ்ய ஸ்ரீ காஞ்சி பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நம்மை விட்டு ஹிரண்யகர்பத்தில் கலந்ததாக அறிவிக்கின்றனர்.

ஒரு நிமிடம் கூட நிற்காமல் ஓடும் கங்கை போன்ற பெரியவர், கடைசி நிமிடமும் ஒரு வியாதியால் கிடக்காமல் தன் குருவிடம் சேர்ந்தார்.

கடைசி பூஜை - தன் குருவிற்கு
கடைசி பயணம் - தன் குருவின் சமாதிக்கு
கடைசி உணவு - தன் சிஷ்யரின் கையிலிருந்து துளசி தீர்த்தம்
கடைசியாக அருளியது - *எல்லோரும் க்ஷேமமா இருங்கோ*!
கடைசியாக இருக்கப்போவது - தன் குருவின் சமாதி அருகிலேயே, காமாக்ஷி அம்மனை நோக்கியபடி நித்திய வாசம்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
*"மஹாபெரியவா சத்யவாக்கு"*

இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான்.

ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில் உள்ளது.

அப்போ பொண்ணப் பெத்தவாக்கு?

"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"......

கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம் பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் .
தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.
ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து
21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது

ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..

ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்.

பெண்ணைப் பெற்ற தந்தைக்கு?
தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள்,
பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்,
தன்னுடன் சேர்த்து 21 தலைமுறைகள்,
நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கு
மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது
மஹாபெரியவா அருள்,

“தெய்வத்தின் அருள் இருந்தால் ஆண் குழந்தை.

அந்த தெய்வமே நேரில் வந்தால் பெண் குழந்தை.”

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
ராமாயணத்தில் விநாயகர்?

(வால்மீகி ராமாயணத்தில் வரும் 'பலச்ருதி'யின் ஸ்லோகத்தில் ஒரு வார்த்தை-'விநாயகா சாம்யந்தி')

(ஜாதகத்தில் நன்மை தராத வீட்டில் கிரஹங்கள் இருந்தாலும் நன்மையே செய்யும்)- -(ராமாயணம் படிப்பதனால் உண்டாகும் நன்மை-விளக்கம் கொடுத்த பெரியவா)
சொன்னவர்-பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்ட ராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தைப் படித்தால், என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் என்று சொல்லும் பகுதிக்கு, பலச்ருதி என்று பெயர்.

'நல்ல மக்களைப் பெறுவார்கள்,வேண்டிய வரன்களை அடைவார்கள், பிரிந்து போனவர்கள் ஒன்று கூடுவார்கள்' என்றெல்லாம் வரிசையாகச் சொல்லி விட்டு,

'விநாயகாஸ்ச்ச சாம்யந்தி க்ருஹே திஷ்ட்டத்தியஸ்ய வை' என்ற ஒரு வரியும் வருகிறது.

இந்த இடத்தில், 'விநாயகா' என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

பொதுவாக, 'தடங்கல்கள் - இடையூறுகள்' என்று சொல்வது வழக்கம்.

பூஜ்யஸ்ரீ மகா ஸ்வாமிகள் ஒரு சமயம்,பின் வருமாறு விளக்கினார்கள்.

"சுப இதர ஸ்தானேஷு ஸ்திதாநாம் க்ரஹாணாம் தோஷா;'சாம்யந்தி, சுபஸ்தானேஷு ஸ்திதானாம் க்ரஹாணாம் ஆநுகூல்யம் யதா ஜாயதே, ததைவ சுபேதர ஸ்தானேஷு ஸ்திதானாம் க்ரஹாணாம் ஆநுகூல்யமபி லப்யதே - இத்யர்த்த;!!"

இளையாத்தங்குடியில் பெரியவாள் தங்கியிருந்தபோது, வித்வான்கள் நிறைந்திருந்த ஒரு ஸதஸில் பெரியவா மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்கள்.

வழக்கமாக வந்துள்ள விரிவுரைகளைக் கற்று தேர்ந்துள்ள அறிஞர்களுக்கு, வழக்கமான பொருள்தான் மனத்தில் தோன்றுகிறதே தவிர, நுட்பமான ஆராய்ச்சியில் அவர்கள் மனத்தைச் செலுத்துவதில்லை.

பெரியவாள் என்ன சொன்னார்கள்.?

ராமாயணத்தைப் படிப்பதாலும், கேட்பதாலும், விநாயகா; சாம்யந்தி.

ஓருவனுடைய ஜாதகத்தில், நல்ல வீட்டில் இருக்கும் கிரஹங்கள் அவனுக்கு ஏராளமான நன்மையைச் செய்கின்றன என்பது நியாயமானது..ஆனால், இராமாயணம் படித்தால் நல்லது.அல்லாத வீடுகளில் இருக்கும் கிரஹங்களும், நன்மை தரும் வீட்டில் இருக்கும் கிரஹங்களைப் போலவே நன்மையைச் செய்யும் என்று அர்த்தம்.

இப்படி சொற்கடலில் முத்துக் குளிப்பதற்கு பெரியவாளைத் தவிர வேறு யாரால் முடியும்?

இந்த நிகழ்ச்சியைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் "விநாயகா; சாம்யந்தி,ஜகத்குரோ; அநுக்ரஹாத்" என்று வாக்குக் கொடுக்கலாம் தானே?

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
*"குருவேசரணம்",

மகா பெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதர்க்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.*

காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.

ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, ""சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக்கொள்ளுங்கள்,'' என்றார்.

அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை.
அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார். இதனிடையே வெளியே மேளச்சத்தம் கேட்டது.
தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, ""வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம் பண்ணிட்டு வாயேன்,'' என்றார்.

அந்த அம்மையாரும் வெளியே போய்விட்டார். அவர் வெளியே செல்லவும், ஒரு விவசாயக் குடும்பப் பெண்மணி சுவாமியைத் தரிசிக்க உள்ளே வந்தார்.

பரம ஏழையான அந்தப் பெண்ணின் இடுப்பில் அவளது குழந்தை. ஆறுமாதம் தான் இருக்கும். அதற்கு ஏகமாய் ஜலதோஷம். மூச்சு விட திணறிக் கொண்டிருந்தது.
அந்தப் பெண் பெரியவரிடம்,""சுவாமி! கொழந்தைக்கு ஜல்ப்பு...மருந்து வாங்க வழியில்லே! சாமி தூண்ணுறு(திருநீறு) கொடுக்கணும்,'' என்று கண்களில் நீர் மல்க கேட்டார்.

பெரியவர் அவசர அவசரமாக, முன்பு வந்த பக்தை கொடுத்த குங்குமப்பூ தொன்னையை எடுத்து அவரிடம் கொடுத்தார். ""இதை வீட்டுக்கு எடுத்துட்டு போ. குழந்தைக்கு இரண்டு, மூணு தடவை பற்றுப்போடு,'' என்றார். அத்துடன், ""ரோட்டிலே போகும் போது தூசு விழுந்துடும்! மறைச்சு எடுத்துண்டு போ,'' என்று எச்சரிக்கை வேறு!

அவள் சென்றதும், தன் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்தார். அதை சிறிது தண்ணீர் விட்டு பசை மாதிரி ஆக்கி, நெற்றியில் பற்று போட்டுக் கொண்டாற்போல இட்டுக் கொண்டார்.

இதற்குள் காமாட்சியைத் தரிசிக்க சென்ற குங்குமப்பூ அம்மையார் திரும்பினார். பெரியவர் நெற்றில் பற்று போட்டிருந்தது கண்டு, தான் கொடுத்த மருந்தைத் தான் இட்டிருக்கிறார் என்று ஏராளத்துக்கு சந்தோஷப்பட்டார்.

மறுநாள் வழக்கம் போல் அந்த அம்மையார் வந்தார்.

"உன் குங்குமப்பூவால் கபம் குறைந்தது' என்றார். அம்மையாருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது.

பெரியவர் இங்கே வார்த்தையைக் கவனமாகக் கையாண்டார். ""உன் குங்குமப்பூவால் "என்' கபம் குறைந்தது என்று சொல்லவில்லை. அந்தஏழைக் குழந்தைக்கு கபம் குறைந்திருக்கும் இல்லையா! அதைத் தான் அப்படி குறிப்பிட்டார்.

ஆக, அவர் வைத்த குங்குமம், இரண்டு நெஞ்சங்களில் மகிழ்ச்சியை சங்கமிக்கச் செய்து விட்டது.

இதுதான் மகாபெரியவரின் கருணா கடாட்சம்!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது சரியா?

(தெளிவான வழி தெரியாத போது,இக்கட்டான சந்தர்ப்பத்தில் திருப்திகரமான முடிவு எட்ட முடியாத போது, நடுநிலைமை தவறி தீர்மானம் செய்யக்கூடும் என்ற நிலை வரும்போது)

(அர்ஜுனனை முன்னிறுத்தி மனித சமுதாயத்துக்கே கீதாசார்யன் வழி காட்டியது போல-பெரியவாளின் உபதேசம் என்பது தெள்ளத் தெளிவு)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாளிடம் அபார பக்தி கொண்டிருந்த ஒருவர், பொருள் வசதி இல்லாமலிருந்தார்.

அவருடைய பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று.

பணத்துக்கு எங்கே போவார்?

பெரியவாளிடம் வந்து பிரார்த்தனை செய்தார்.

"விவாகத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்கே. கவலைப்பட வேண்டாம்" என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார்கள், பெரியவா.

பின்னர் ஒரு சிஷ்யரை, சென்னையிலிருந்த ஒரு பக்தரிடம் அனுப்பினார்கள். இந்த பக்தர் செல்வந்தர்.அத்துடன் பெரியவா உத்தரவுப்படி பல பேர்களுக்கும் அவ்வப்போது உதவி செய்யும் இயல்புடையவர்.

சிஷ்யர் சென்று விவரம் கூறியபிறகு, சிறிது தொகையை கொடுத்தார் அவர்.

கல்யாணத்துக்கு ரொம்பச் செலவாகும். ஐநூறு ரூபாய் போறாது.." என்றார் சிஷ்யர்.

"இதைப் பாருங்கோ...நான் என்ன செய்தேன் தெரியுமோ?... ரூபாய், இருநூறு,ஐநூறு,ஆயிரம் என்று,ஐயாயிரம் வரை சீட்டில் எழுதி,ஸ்வாமி முன்னே போட்டு, பேத்தியை விட்டு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னன். ஐநூறு ரூபாய் சீட்டுத் தான் வந்தது. அந்தத் தொகையைக் கொடுத்து விட்டேன்" என்றார் செல்வந்தரான பக்தர்.

சிஷ்யர் திரும்பி வந்து பெரியவாளிடம் விபரம் கூறினார்.

பெரியவா சொன்னார்கள்

"திருவுளச் சீட்டு போட்டுப் பார்ப்பது என்று ஒரு பழக்கம் இருக்கு. ஆனா, எப்போ திருவுளச் சீட்டு போட்டு தெய்வத்தினுடைய, திருவுள்ளத்தை அறியணும்?.

"ஒரு பிரச்னையிலே தெளிவான ஒரு வழி நமக்குத் தெரியாதபோது...ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில், சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் திருப்தியான ஒரு முடிவு எட்ட முடியாத போது...ஒருத்தர் நடுநிலைமை தவறி தீர்மானம் செய்யக்கூடும் என்ற சந்தேகம் வரக்கூடிய போது...இப்படிப்பட்ட நிலைமைகளில் பகவானுடைய உத்தரவைக் கேட்டு போடப்படும் திருவுளச் சீட்டுக்கு மதிப்பு உண்டு"

"சென்னை அன்பருக்கு நான் தான் குரு. நான் சொன்ன பிறகு, இவர் ஏன் சீட்டுப் போட்டுப் பார்க்கணும்?.தன்னால் முடிந்த அதிகபட்ச அளவு உதவி செய்ய வேண்டியது தானே?

"இவருடைய சம்சாரம் கர்ப்பமாக இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பெண் பிறக்குமா? ஆண் பிறக்குமா?.... என்று . சீட்டு எழுதிப் போட்டுப் பார்ப்பாரா? அப்படியே செய்தாலும் சீட்டிலிருந்தபடியே நடக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆண் என்று சீட்டில் வந்து பெண் பிறந்தால் அந்தக் குழந்தையையோ, ஈசுவரனையோ திரஸ்காரம் பண்ணிடுவாரா?"

"கோர்ட்டில் கேஸ் நடக்கிறது.தீர்ப்பு தனக்குச் சாதகமா? விரோதமா? என்று சீட்டுப் போட்டு பார்ப்பாரா? ஒரு ஜட்ஜ்மெண்டில் சாதகம் - பாதகம் இரண்டுமே கூட இருக்கும்.

"சீட்டுப் போட்டுப் பார்ப்பது, ஒரு குழப்பமான சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டியது.அதுவும் கூட சர்வ சாமானியர்கள் செய்யக் கூடியது. இவர் நிறையப் படித்தவர்.தெய்வ பக்தி - குரு பக்தி உள்ளவர். ஒரு ஏழை வீட்டுக்குக் கல்யாணத்துக்குப் போதுமான உதவி செய் என்று நான் சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டியது தானே? குழப்பம்,இக்கட்டு அஸ்பஷ்டம் எங்கே வந்தது?,,,,,"

இவ்வளவு நீளமான விளக்கத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்களுக்கெல்லாம் பேராச்சர்யமாக இருந்தது.ஆனால் இந்த நீண்ட உபதேசம் சென்னை அன்பரை முன்னிட்டு,
சிப்பந்திகளுக்கும்,மற்றவர்களுக்கும் செய்யப்பபட்ட ஒரு வழிகாட்டுதல்.,

அர்ஜுனனை முன்னிறுத்தி, மனித சமுதாயத்துக்கே கீதாசார்யன் வழி காட்டியதைப் போல - என்பது தெள்ளத் தெளிவு.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது
மஹாபெரியவா அப்போது காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்தார். மாலை வேளை….

மடத்து வாசலில் ஒரு சைக்கிள் ரிக்ஷா வந்து நின்றது. ரிக்ஷா ஓட்டி கீழிறங்கி வண்டியில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவரைக் கைத்தாங்கலாக கீழே இறக்கி விட்டான். ‘என்னை மடத்துக்குள் கொண்டு விடப்பா’ என்பதாக அவனிடம் ஜாடையும் பேச்சும் கலந்து பெரியவர் சொல்ல மடத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டான் ரிக்‌ஷா ஓட்டி.

கலைந்த தலையும் அழுக்கு லுங்கி அணிந்தபடியும் இருந்ததால், தான் இதே கோலத்தில் ஸ்ரீமடத்துக்குள் செல்வது உசிதமாக இருக்காது என்று ரிக்ஷா ஓட்டியே தீர்மானித்தான் போலும். எனவே, அங்கிருந்த மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து ‘ஐயா…இந்தப் பெரியவரு மடத்து சாமியைப் (மஹாபெரியவா) பார்க்கணுமாம். கூட்டியாந்திருக்கேன். கையைப் புடிச்சுக் கூட்டினு போ. சாமியைப் பார்த்து முடிச்சதும் வெளில என் வண்டி கிட்ட கொண்டு வுட்டுரு’ என்று சொல்லிட்டு வெளியே போனான்.
பெரியவர் கைமாறினார்.

பெரியவருக்கு எப்படியும் வயது எண்பதுக்கு மேல் இருக்கும் என்று தோற்றம் சொன்னது.
உள்ளடங்கிய கண்கள், கோணல் மாணலாகக் கட்டிய நாலு முழ வேஷ்டி.. கசங்கிய வெள்ளைச் சட்டை. மேல் சட்டைப் பைக்குள் ஒரு மூக்குப் பொடி டப்பாவும் பத்துப் பதினைந்து ரூபாயும் தெரிந்தன.

தனியாக நடப்பதற்கே பெரிதும் சிரமப்பட்ட அந்தப் பெரியவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, பெரியவா இருந்த இடம் அருகே விட்டார் சிப்பந்தி.

மேடை போல் இருந்த ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்து கொண்டார் பெரியவர். வலக் கையை நெற்றியில் வைத்து பெரியவா அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தார்.

தான் இருந்த இடத்துக்கு எதிரே மஹாபெரியவா அமர்ந்திருப்பது அரைகுறையாக அவருக்குத் தெரிந்தது. இருந்த இடத்தில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொண்டு தரிசித்தார்.

பெரியவரைப் பார்த்துப் புன்னகைத்தார் மஹாபெரியவா. இந்தப் பெரியவர் இந்த சாயங்கால வேளையில் ஏன் இங்கே வந்திருக்கிறார் என்பதை அறியாதவரா அந்த மகான்?

ஒரு சிஷ்யன் ஓடோடி வந்து பெரியவா அருகே நின்றான். வாய் பொத்தி, ஏதோ ஒரு தகவலை குசுகுசுப்பாகச் சொன்னான். அதாவது பெரியவா தரிசனத்துக்காக அப்போது ஸ்ரீமடத்துக்கு சில முக்கிய பிரமுகர்கள் வந்திருப்பதாகவும், வெளியே அவர்கள் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னான்.

அன்று யாரையும் பார்க்க இயலாது என்றும் மறுநாள் காலை வருமாறும் தகவல் சொல்லி அனுப்பினார் மஹா பெரியவா.

சிஷ்யன் ஓடிப் போய் விட்டான்.

தரிசனத்துக்கு வந்திருந்த ஒரு சிலருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார் மஹா பெரியவா.

இப்போது அங்கு இருப்பது மஹா பெரியவாளும், உள்ளூர்ப் பெரியவரும் தான்.
இன்னமும் அந்தப் பெரியவர் தன் கண்களை இடுக்கிக் கொண்டு மஹா பெரியவா அமர்ந்திருந்த இடத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மஹா பெரியவா தன் ஸ்தானத்தில் இருந்து எழுந்தார். இறங்கினார். பெரியவரை நோக்கி நடந்தார்.

சிஷ்யர்கள் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் எந்த ஒரு பக்தருக்கும் அனுக்ரஹம் செய்வதற்காக மஹா பெரியவா இது போல் எழுந்து சென்று அவர்கள் பார்த்ததில்லை.
காஞ்சிபுரத்துப் பெரியவர் தான் அமர்ந்த இடத்திலேயே இருக்கிறார். தள்ளாத வயது அல்லவா! அவர் அருகில் சென்ற மஹா பெரியவா தன் தலையில் வில்வ மாலை ஒன்றை வைத்துக் கொண்டு ‘தெரியறதா?” என்று கேட்டார் தீர்க்கமாக.

கண்களை மிகவும் இடுக்கிக் கொண்டு பார்த்த பெரியவர் ‘ தெரியலை’ என்றார்.
இதை அடுத்து தனக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் சுருக்கினார் மஹா பெரியவா. அருகில் இருந்த ஒரு புத்தம் புது ரோஜா மாலையைக் கையில் எடுத்தார் மஹா பெரியவா. தலையில் வைத்துக் கொண்டார்.
அதை பெரியவா தன் சிரசில் அணிந்த பிறகு அந்த ரோஜா மாலை இன்னும் அழகாகத் தெரிந்தது. இப்போது பெரியவரைப் பார்த்து ‘இப்ப தெரியறதா?' என்று கேட்டார் மஹா பெரியவா.

ரொம்பவும் சிரமப்பட்டு உற்றுப் பார்த்த பெரியவர் ‘தெரியலை’ என்றார் மீண்டும்.
ரோஜா மாலையை எடுத்துத் தன் சிஷ்யனிடம் நீட்டினார் பெரியவா. அவன் ஓடோடி வந்து அதை வாங்கிக் கொண்டான். பிறகு ஒரு காஷாய வஸ்திரத்தை எடுத்து அதைத் தன் தலையில் வைத்துக் கொண்டார் மஹா பெரியவா. ‘இப்ப தெரியறதா…. பாருங்கோ” என்றார் மஹாபெரியவா.

“ஊஹும்” என்பதாகத் தன் உதட்டைப் பிதுக்கினார் பெரியவர்.

அப்போது அந்த இடத்தில் இருந்த சிஷ்யர்கள் குழம்பிப் போனார்கள். ‘தெரியறதா?' என்று பெரியவா எதைக் கேட்கிறார், ‘தெரியல’ என்று பெரியவர் எதைச் சொல்கிறார் என்பது புரியாமல் தவித்துப் போனார்கள். சிஷ்யர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டனர்.

அதற்குள் யாரோ ஒரு சில பக்தர்கள் பெரியவா இருந்த இடத்துக்குள் நுழைய முற்பட்டு அவரை தரிசிக்க யத்தனித்தார்கள். இதை அறிந்த பெரியவா அவர்களை சைகை காட்டி வெளியே அனுப்பினார். சிஷ்யர்களும் அவர்களிடம் ஓடிப் போய் ‘இப்ப பெரியவா உங்களைப் பார்க்க மாட்டார்’ என்று சொல்லி அனுப்பினார்.

அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது.

தான் எதிர்பார்த்து வந்தது இன்னமும் நிறைவேறவில்லை என்பதாக இருந்தது காஞ்சிபுரத்துப் பெரியவரின் முகம்.

காஞ்சிபுரத்துப் பெரியவர் எதை எதிர்பார்த்து வந்திருக்கிறார்?

அது மகா பெரியவாளுக்கும் அந்தப் பெரியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
தண்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரிய பெரிய ருத்திராட்ச மணிகளால் கோர்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துத் தலையில் வைத்தவாறு ‘தெரியறதா?’ என்று கேட்டார் பெரியவா.

அவ்வளவு தான்…அதுவரை ஏமாந்து போயிருந்த பெரியவரின் முகம் திடீரென பிரகாசம் ஆனது. அவரது விழிகளில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஏதேதோ பேச வாய் எடுத்தவருக்கு அந்தக் கணத்தில் அது முடியாமல் போனது.

மெள்ளச் சுதாரித்துக் கொண்டு ‘எல்லாமே தெரியறது பெரியவா. நல்லா தெரியறது பெரியவா’ என்று கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அந்த பரப்பிரம்மத்தை நன்றியுடன் பார்த்தார்.

தன் இரு கைகளையும் கஷ்டப்பட்டு உயரே தூக்கி நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார் பெரியவர். பிறகு உடல் வளைந்து கொடுக்காவிட்டாலும் சிரமப்பட்டுத் தரையில் விழுந்து அந்தக் கருணை தெய்வத்தை உளமார வணங்கினார்.

பிறகு அந்தப் பெரியவரே மெள்ள எழுந்தார். பெரியவாளுக்கு முன்பாக நின்றார். அவரது திருமுகத்தையே நன்றியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் இருந்து கசியத் துவங்கிய நீர் வரத்து இன்னும் நிற்கவில்லை.

விரலைச் சொடுக்கி, சிஷ்யர்களை அருகே வரச் சொன்னார் மஹா பெரியவா. ஓடோடி வந்தனர்.

‘இவா வந்த ரிக்ஷா வெளில நிக்கும். அதுல பத்திரமா இவரை ஏத்தி அனுப்ச்சுட்டு வாங்கோ. சந்தோஷமாப் புறப்படட்டும்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறியது அந்தக் கலியுக தெய்வம்.

உடலிலும் உள்ளத்திலும் சந்தோஷம் கொப்பளித்த பெரியவரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்தின் வாசலுக்குப் போனார்கள் சிஷ்யர்கள். தான் கூட்டி வந்த பெரியவர் வெளியே வருவதைப் பார்த்தவுடன், தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ரிக்ஷாக்காரன் ஓடோடி வந்தான். ‘வுடுங்க சாமி… இனிமே நா அவரை இட்டுகினு போயிடறேன்’ என்று சொல்லிவிட்டு, ரிக்ஷாவுக்குள் பெரியவர் ஏறி அமர்வதற்கு உதவி செய்தான்.

பெரியவரை ரிக்ஷாவுக்குள் ஏற்றி அனுப்பிய சிஷ்யர்கள் இருவரும் மடத்துக்குள் நுழையும் போது பேசிக் கொண்டார்கள்.

‘உனக்குப் புரியறதாடா பெரியவா ‘தெரியறதா?ன்னு எதைக் கேட்டார்னு?'- முதலாமவன்.
'இல்லேடா…என்னைவிட ரொம்ப வருஷமா நீ பெரியவாளுக்குக் கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கே….. உனக்கே புரியலேன்னா எனக்கு எப்படிப் புரியும்?' இது இரண்டாமவன்.

'நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். ஆனா, இது மாதிரி ஒரு அனுபவத்தைப் பார்த்ததில்லை. பெரியவா தெரியறதா? ன்னு எதைக் கேட்டார்னும் புரியல. ‘தெரியல’னு அடிக்கடி அந்தப் பெரியவர் எதைச் சொன்னார்னும் புரியலை. ஆனா அவர் கண்ல ஜலம் வந்ததைப் பார்த்த உடனே என் கண்களும் ஈரமாயிடுச்சு. சமாச்சாரம்தான் என்னன்னு புரியாம ஒரே குழப்பமா இருக்கு’ என்று சொன்ன முதலாமவன் கொட்டாவி விட்டுக் கொண்டு தூங்கப் போயிட்டான்.

இதற்கான விளக்கம் அடுத்த நாளே அனைவருக்கும் தெரிந்தது.

அடுத்த நாள் அதிகாலை அந்தப் பெரியவர் இறைவனடி சேர்ந்த செய்தி ஸ்ரீமடத்துக்கு யார் மூலமாகவோ வந்து சேர்ந்தது.

முதல் நாள் மாலை ஸ்ரீமடத்துக்கு இந்தப் பெரியவர் வந்த போது அவருக்கு உதவிய ஊழியர்களும் சிப்பந்திகளும் சிஷ்யர்களும் ஏகத்துக்கும் அதிர்ந்து போனார்கள்.
அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து காரியதரிசிகளின் பேச்சில் இருந்து இதற்கான விளக்கம் அனைவருக்கும் கிடைத்தது.

தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களில் இருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டார் காஞ்சிபுரத்துப் பெரியவர். தன் தேகம் இந்தப் பூவுலகில் இருந்து மறைவதற்கு முன் கயிலைக் காட்சியைக் கண்டு தரிசிக்க விரும்பியிருக்கிறார். தான் விரும்பும் தரிசனம் எப்படியாவது மஹா பெரியவாளிடம் கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்பி ஒரு ரிக்ஷாக்காரரை அமர்த்திக் கொண்டு ஸ்ரீமடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.
தன்னை நாடி வந்த உள்ளூர்ப்பெரியவரின் ஏக்கத்தைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட மஹா பெரியவா, கயிலைவாசியான அந்த ஈசனின் சொரூபத்தை அவருக்குக் காட்டி அனுக்ரஹித்து மோட்ச கதி கொடுத்தார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்பட்டது.
ஆக, பெரியவாளின் திருமுகத்தில் ஈஸ்வர தரிசனத்தைக் கண்டு பரவசம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்தப் பெரியவர் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார் என்பது உறுதியானது.

சிவபெருமானின் ஓர் அம்சம் தான் மஹா பெரியவா என்று சொல்லப்படுவதுண்டு. இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த சில பக்தர்கள் மஹா பெரியவாளை தரிசித்து, அத்தகைய தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்துப் பெரியவர் மறைவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன், அவருக்கு அத்தகைய ஒரு தரிசனத்தைக் காட்டி அருளி அருக்கிறார் மஹா பெரியவா.

அதனால் தான் ஒவ்வொரு முறையும் ‘தெரியறதா? என்று பெரியவா கேட்ட போதும் ‘தெரியல’ என்று சொல்லிக் கொண்டே வந்தவர், ருத்திராட்ச மாலையை எடுத்துத் தன் தலையில் வைத்துக் கொண்டதும், சாட்சாத் அந்த சிவபெருமானே பெரியவா முகத்திலே தரிசனம் தந்திருக்கிறார்.

இதன் பின்னால் அந்தக் காஞ்சிபுரத்துப் பெரியவருக்கு மோட்சம் கிட்டாமலா இருக்கும்?

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
கடவுளின் குரல்" - தொகுப்பு: வெ. ஸ்ரீராம்

27 /11 /2019 குமுதம் இதழிலிருந்து...

" ஆரோக்யமாக இருக்க ஆசார்யா சொன்ன சுவாசக் கணக்கு!""

மகாபெரியவர் வடநாட்டுக்கு யாத்திரை செய்துவிட்டு, திரும்ப வந்து ஸ்ரீமடத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.

பல ஆயிரம் மைல்கள் நடந்தே சென்று யாத்திரை செய்த களைப்பு கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.

அந்த சமயத்தில் அவரை தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர், மகான் முன்னிலையில் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அப்படிக் கும்பிட்ட பிறகு எழுந்திருக்கவே முடியாமல் சிரமப்பட்டார். அதோடு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து கொண்டு பெருமூச்சு விட்டார்.

அவர் சிரமப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார், பெரியவர்.

வணங்கிவிட்டு எழுந்தவர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

"சுவாமி என் உடல் நிலை இப்படித்தான் அடிக்கடி சங்கடப்படுத்துகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் கூட மூச்சு வாங்குகிறது..!" என்றார்.

அவர் சொன்னதற்கு பதில் எதுவும் சொல்லாமல், "நீ என்ன உத்யோகம் பார்க்கிறாய்?" என்று கேட்டார் மகான்.

"கணக்கு வாத்யாராக இருக்கிறேன்.!" சொன்னார், அவர்.

"அப்படியானால் உனக்குப் புரியும்படி கணக்காகத்தான் சொல்லவேண்டும். அதற்கு முன்னால் கேள்வி.

நீ தேகாப்யாசம் (உடற்பயிற்சி) ஏதாவது செய்கிறாயா? பெருமூச்சு வாங்குகிறது என்கிறாயே, அப்படியென்றால் சாதாரணமாக எப்படி மூச்சு விடுவது என்று உனக்குத் தெரியுமா? மகான் கேட்க, எல்லோருடைய கவனமும் அங்கே திரும்பியது.

வந்தவர் அமைதியாகவே நிற்க, மகான் தொடர்ந்தார்.

"இந்த உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு கணக்கு உண்டு. அது எப்படின்னா, வரவுக்கும் செலவுக்கும் சமமா இருக்க வேண்டும் என்கிற கணக்கு.

ஒருத்தரிடம் கைமாற்றாக ஒரு தொகையை வாங்கினால், அதைத் திருப்பித் தரும்போது முழுசாகத் திருப்பித் தர வேண்டும். இல்லையென்றால் அந்தக் கணக்கு சரியாகாது. என்ன நான் சொல்கிற கணக்கு சரிதானே? கேட்டு நிறுத்திய மகான், சின்ன இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

இதே கணக்குதான் நாம் உயிரோடு இருக்க அத்தியாவசியமான மூச்சுவிடுகிறதில் உள்ள கணக்கும். மூச்சில் எந்த அளவுக்கு காற்றை உள்ளே வாங்குகிறோமோ, அது வரவு. அதே அளவைத் திருப்பி வெளியே விடவேண்டும். இது செலவு. தூங்கிக் கொண்டிருந்தாலும் இதை சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் ஆரோக்யக் கணக்கு.

உள்ளே இழுக்கும் காற்றும், வெளியே விடும் காற்றும் சம அளவாக இருக்கும்படி பழகிக்கொண்டால், பெரும்பாலான உடல் உபாதைகளே வராது.

ஆனால், பொதுவாக எல்லோரும் என்ன செய்கிறோம்? எது நமக்கு நல்லது செய்யக் கூடியதோ.. எது நம்முடைய வாழ்க்கையில் அத்யாவசியமோ அதையெல்லாம் கவனிப்பதில் அலட்சியமாக இருக்கிறோம்.

ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கணும். அதாவது ஒரு சுவாசத்துக்கு சராசரியாக நாலு செகண்ட் எடுத்துக்கணும். இந்தக் கணக்கை எத்தனைபேர் சரியாகச் செய்கிறோம்?

கோபம் வந்தால், சுவாசம் எகிறுகிறது. கஷ்டம் வந்தால் தாறுமாறாகிறது. கவலை வந்தால் சுவாசிப்பதில் சிரமம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் எது முக்கியமோ அதை அலட்சியப்படுத்துகிறோம்.

அப்படித் தப்பாகிப் போகிற சுவாசத்தை...சுவாசக் கணக்கை குறிப்பிட்ட நேரம் வரைக்குமாவது சரியாகச் செய்யக் கற்றுக்கொள்ளத்தான், அமைதியாக சுவாமி கும்பிடுவது, தியானம் செய்வது, யோகாப்யாசம் செய்வது, ஸ்லோகங்கள் சொல்வது இப்படிப் பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள். அப்படிக் கொஞ்ச நேரம் பழகினால் அதுவே படிப்படியாக முழு நேரப் பழக்கமாகிவிடும்.

"முதலில் நீ ஒன்று செய். வீணாக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர். அனாவசிய டென்ஷன், வீண் கோபதாபம், விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு இடம் தராமல், சுவாமி நினைவோடு இரு. அப்படி இருந்தால், சுவாசம் சீராகும். பிறகு ஆரோக்யம் தானாக சீராகும். ஆயுசும் வளரும்!" பெரியவா சொல்லி முடிக்க, பிரசாதம் பெற்றுக் கொண்டு நகர்ந்தார் அந்த பக்தர்.

தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன இந்த சுவாசக் கணக்கு, அந்த பக்தருக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பொருந்தும் என்பதுதானே உண்மை.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
பெரியவா திருவடியே
சரணம்.

'அதுவொரு தீபாவளி சமயம்!

எல்லோரும் புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டு வந்து தேனம்பாக்கத்தில் அவரிடம் கொடுப்பார்கள். அங்கே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி உண்டு. அதில் ஜவுளி வகையறா எல்லாவற்றையும் போட்டு மூடி வைத்துவிடுவோம்...''- மீண்டும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தில் துவங்கியது பாலுவின் உரையாடல்

.''குண்டு-ன்னு ஒரு பையன்... 18, 19 வயசு இருக்கும். இங்கே எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தான் பெரியவாளுக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் காலம்பர எங்களையெல்லாம் கூப்பிட்டுத் தொட்டியைக் காட்டினார். தொட்டி காலியாக இருந்தது; உள்ளே ஜவுளி எதுவும் இல்லை. எப்படி அத்தனையும் மாயமா மறைஞ்சு போச்சுன்னு எங்களுக்குத் தெரியலை.

மகா பெரியவா எங்களைக் கூப்பிட்டு, நிறைய பட்சணம்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார். தீபாவளி அன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் பண்ண எண்ணெய் வேணுமே... அதையும் வாங்கிட்டு வரச் சொன்னார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. பட்சணம், நல்லெண்ணெய் வந்து சேர்ந்தது. பட்டாசு வேணும்னு சொன்னார் பெரியவா. அதுவும் வந்தாச்சு!

எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, 'இங்கே வேலை செய்றானே ஒரு பையன் குண்டுன்னு... அவனுக்கு வெறுமனே வேட்டியும் புடவையும் இருந்தா போறுமா, தீபாவளி கொண்டாட?! அதை மட்டும் வெச்சுண்டு, பாவம் அவன் என்ன செய்வான்? நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ... சட்டுனு போங்கோ!' என்றார் பெரியவா.

அப்புறம்தான் எங்களுக்கு, புடவை- வேஷ்டிகளை எல்லாம் எடுத்துண்டு போனது குண்டுதான்னு தெரிஞ்சுது. ஆனா, பெரியவாளுக்குத் துளிக்கூட அவன் மேல கோபம் வரலை!'' என்ற பாலு, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்...

“பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை… முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு…” என்றவர், அது பற்றி சொல்ல தொடங்கினார். பாலு

.''மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா... ஆறு படி அளவு. பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.சரி... பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்..

. 'தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா.

பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா... கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, 'சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!'' என்ற பாலு,

அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார். ''அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார். அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். 'என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார்.

அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார்.

'யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா,
, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்... சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!''-

பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம். நம்முடைய இந்த சிலிர்ப்பை அதிகப்படுத்தியது, சங்கர பக்த ஜன சபாவின் செயலர் வைத்தியநாதன் விவரித்த விஷயங்கள்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
*"குருவேசரணம்"

மகா பெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதர்க்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.*

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

புத்தகம்-தாயுமான மகான்-3

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

ஒரு வெள்ளைக்காரன்.இதாலி அவன் சொந்த ஊர்.

பிலாசபி படித்தவர். என்ன படித்து என்ன?

ஏதாவது பார்க்க வேண்டும். செய்ய வேண்டும்.

மிகவும் ஏழை.பணம் கிடையாது.ஏதோ வேலை.

ஏதோ வேலை.அதில் மாதம் 100 சேர்த்து வந்தான்.

வெளிநாடு போகலாம் என்று தோன்றவே எல்லா

பெயர்களையும் எழுதி குலுக்கி போட்டதில் இந்தியா

என்ற பெயர் வந்தது.

இந்தியா வந்து டெல்லி விமான நிலையத்தில் வந்து

இறங்கினான். இந்தியாவைப் பற்றி ஒன்றும் தெரியாது.

எங்கு போவது என்றும் தெரியாது. பாம்பேக்கு டிக்கெட்

கேட்டான். இல்லை,சென்னைக்கு இருக்கு என்றதும்

சென்னைக்கு வந்துவிட்டான்.விமான நிலையத்தின்

வெளியே வந்து ஒரு டீ குடித்துவிட்டு அங்கிருந்த

டாக்ஸி டிரைவரிடம், 'இங்கு பெரிய வி.ஐ.பி. யார்

இருக்கார்' என்று கேட்டார்.

அந்த டிரைவர், 'இங்கு காஞ்சிபுரம் என்று ஒரு சிட்டி இருக்கு.

அங்கு ஸ்ரீ பெரியவா என்று ஒரு மகராஜ் இருக்கார்' என்றார்.

சரி கூட்டிப்போ என்றதும்,அந்த டிரைவர் 2500 ஆகும்

என்றவுடன், சரி என்று சொல்லி காஞ்சிபுரம் வந்தான்.

அப்போது ஸ்ரீ மகா பெரியவர் ஓரிக்கையில் ஒரு சின்ன

குடிசையில் இருந்தார். ஸ்ரீ பெரியவா பிக்ஷை செய்து விட்டு

படுத்துக் கொண்டார்.நல்ல வெயில் வைகாசி மாதம்.

நானும் ரவியும் வெளியில் வந்தோம். வெளியில் ஒரு

பம்பு செட் இருக்கு.அங்கு நாங்கள் உட்கார்ந்தோம்.

அப்போது இந்த வெள்ளைக்காரர் காரில் வந்திறங்கினார்.

எங்களிடம் சங்கராசார்யார் என்றார். நாங்கள், "தாங்கள் யார்?

என்று கேட்க அவர் நான் இத்தாலியிலிருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னார்.'நான் ஒரு பிரம்மச்சாரி,எனக்கு பிலாசபி தெரியும் என்றார்.எனக்கு பெரியவாளை பார்க்கணும் என்றார்.

நாங்கள், அவரிடம் ஸ்ரீபெரியவா படுத்துக் கொண்டு இருக்கா

என்று சொல்ல முடியாதலால், அவர் தியானம் செய்கிறார்

கொஞ்சம் பொறுங்கள் என்றோம்.அவரும் எங்களுடன்

தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தார்.30 நிமிடங்கள்

ஆகிவிட்டது.நான் ரவியிடம் 1-30 மணி நேரம் ஆகிவிட்டது.

இதற்கு மேல் ஸ்ரீ பெரியவா படுத்துக்க மாட்டார். வா போய்

பார்க்கலாம் என்று சென்றோம்.

ஸ்ரீ பெரியவா எழுந்துவிட்டார். எங்களிடம்,,

"அவன் வந்துவிட்டானா, வந்துவிட்டானா" என்று கேட்டார்.

'ஒருத்தரும் இல்லை. இரண்டு மூன்று ஸ்தீரிகள் தான்

இருக்கிறார்கள்' என்றோம். நாங்கள் அவர்களை

வாழும் பாம்பு என்போம். தெரியாமல் ஸ்ரீ பெரியவாளிடம்

'வாழும் பாம்பு தான்இருக்கிறார்கள்' என்றோம்.

(வாழும் பாம்பு என்றால் இருந்த இடத்தை விட்டு செல்லாதவர்கள்)

ஸ்ரீ பெரியவா உடனே என்ன வாழும் பாம்பா? என்றார்.

நாங்கள் அவரிடம் சொல்ல முடியுமா? அந்த பெண்களுக்கு

வைத்த பெயர் என்று.திரும்பவும் ஸ்ரீ பெரியவா

என்ன வாழும் பாம்பு என்றாய் என்று கேட்டார்

. நாங்கள் ஒன்றுமில்லை, இரண்டு,மூன்று பெண்கள்

வந்திருக்கிறார்கள்,என்றோம்.

"ஸ்ரீ பெரியவா, அவன் வந்திருக்கானா என்று கேட்டால்

வாழும் பாம்பு என்கிறாய்" என்றார்.

'ஆமாம், ஒரு வெளிநாட்டுக்காரன் வந்திருக்கான்'

என்றேன்."அவனை அழைத்து வா" என்றார்.

அவரும் வந்து ஸ்ரீ மகா பெரியவாளை நமஸ்காரம் செய்தார்.

பிறகு ஒரு ஓரமாக நின்று கொண்டார். சிறிது நேரத்தில்

கொஞ்சம்,கொஞ்சமாக நகர்ந்து ஸ்ரீமகா பெரியவா பக்கத்தில்

வந்தார். ஸ்ரீ பெரியவாளிடம் பசும் சாணியால் செய்த ஒரு

கடத்தை வைத்தேன்(எந்த தோஷமும் அவரை அண்டாது

என்று ஐதீகம்) ஆனால் ஸ்ரீ பெரியவா அதை நகர்த்திவிட்டார்.

அந்த வெள்ளக்காரர் ஸ்ரீமகாபெரியவர் பக்கத்தில் வந்துவிட்டார்.

பெரியவா, "அவரை ஒன்றும் சொல்லாதே" என்றார்.

வந்தவர் பெரியதாக ஆனந்தமாக சிரித்தார்.

நான் அவனிடம் என்ன ஆகியது (what happend to you)

என்று கேட்டேன்

அவர் என்னிடம் "நீங்கள் ஒளியைப் பார்க்கவில்லையா?

இயேசுவை பார்க்கவில்லையா?" என்று கேட்டார்.

O God,O God என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில்

போட்டுக் கொண்டார்.

நான் அவரிடம் "இல்லை இவர் சங்கராச்சாரியர்" என்றேன்,

ஸ்ரீ பெரியவா ஒன்றும் சொல்லவில்லை. ஒரு 15 நிமிடம்

அப்படியே அசையாமல் இருந்தார். பிறகு அந்த

வெள்ளைக்காரரிடம் "சரி சென்று வாருங்கள்" என்றார்.

"நான் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்.

எப்படிப் போவேன்" என்று சொன்னார்.

ஸ்ரீபெரியவா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.

என்னிடம் இவரை சமாதானப்படுத்தி அனுப்பு என்றார்.

நான் ஸ்ரீபெரீயவாளின் ஒரு சால்வையும்,கொஞ்சம்

பழங்களையும் அவரிடம் கொடுத்து, இதை ஸ்ரீ பெரியவா

உங்களிடம் கொடுக்கச் சொன்னார் என்று கொடுத்தேன்.

"ஒரு வெள்ளைக்காரனுக்கு, அவன் வணங்கும் தெய்வமாக

காட்சி கொடுத்தார் ஸ்ரீபெரியவா.!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
*"குருவேசரணம்'

மகா பெரியவா நாங்கள் உங்கள் உபதேசத்தை கேட்பதர்க்காக காத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் பாதம் பணிகிறோம். உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்.*

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

புத்தகம்-தாயுமான மகான்-3

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சம்பவம்-1

நாங்கள் ஸ்ரீ மகா பெரியவாளுடம் யாத்திரை சென்று

கொண்டு இருந்தபோது இரவு நேரம் ஆகிவிட்டது.

ஸ்ரீ மஹா பெரியவாள் இங்கே தங்கலாம் என்று சொல்ல,

நாங்கள் கீழே படுத்துக் கொண்டோம்.ஸ்ரீ பெரியவா

பல்லக்கில் இருந்தார்.

திடீரென்று என்னிடம் 'ஏண்டா பாலு கீழே ஒரே சாம்பலா

இருக்கா பார் என்றார்.நான் பார்த்து விட்டு ஆமாம் என்றேன்.

நாங்கள் தங்கி இருந்த இடம் ஒரு மயானம். பரவாயில்லை

இது பிராமணர்கள் மயானம் இல்லை. அதனால் நமக்கு

தீட்டு கிடையாது. ஸ்ரீ பரமேஸ்வரன் மயானத்தில் தானே

இருக்கார் என்றார்.

பிராமணர்கள்,மற்றவர்கள் மயானத்தில் என்ன வித்தியாசம்

தீட்டு,தீட்டில்லை என்பதற்கு என்று கேட்டேன்.

ஸ்ரீ மகா பெரியவா, "பிராமணர்கள் மயானத்தில் நிறைய

வேதம் சொல்கிறோம் அதான் வித்தியாசம்" என்றார்.

சம்பவம்-2

திருப்பக்குழி என்ற இடம் என்று நினைக்கிறேன். நாங்கள்

யாத்திரை சென்று விட்டு இரவில் ஒரு இடத்தில் தங்கினோம்.

ஸ்ரீ ஸ்ரீகண்டன் தூக்கப் பிரியர். அவர் இரவில் ஸ்ரீமகாபெரியவா உறங்கும் மேனா பக்கத்தில் உறங்கமாட்டார். அதனால் சிறிது தொலைவில் படுத்துக் கொள்வார். நடந்து வந்த களைப்பில் உடனே உறங்கிவிட்டார்.தலைக்கு பக்கத்தில் கிடைத்த எதையோ ஒன்றை தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு உறங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தால் நாங்கள் உறங்கிய இடம் ஒரு மயானம்.

ஸ்ரீ ஸ்ரீகண்டன் பயந்து ஸ்ரீமகாபெரியவாளிடம் "என்ன பெரியவா இந்த இடத்தில் உறங்கிவிட்டோமே? ரொம்ப பயமாக இருக்கு" என்றார்.

ஸ்ரீமகாபெரியவா சிரித்துக்கொண்டே "நீயோ பக்கத்தில் கிடைத்த ஒரு மண்டை ஓட்டை தலைக்கு வைத்துக்

கொண்டு நன்றாக தூங்கிவிட்டாய். சந்தோஷம்தானே.

நல்ல ஓய்வு கிடைத்தது. அப்புறம் எதற்கு பயம்" என்றார்.

ஸ்ரீமகாபெரியவா சிவன் ஸ்வரூபம் என்பதற்கு

இதைவிட என்ன உபமானம் வேண்டும்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
'குருவேசரணம்'

"இந்தா - பிஸ்கட்,மருந்து,டானிக் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். வேளாவேளைக்குச் சாப்பிடணும்"-பெரியவாளிடம் பக்தர் நெய்வேலி மகாலிங்கம்

பக்தியின் அதீத நிலை.

(காளஹஸ்தி மலையில் கண்ணப்பனுக்காகக் கற்சிலையான லிங்கமாகவும் இருப்பார்; நெய்வேலி மகாலிங்கத்துக்காக, காஞ்சிபுரத்தில் காவித்துணி தரித்து,உலாவிக் கொண்டும் இருப்பார் காலகாலன். ஏகம் ஸத்)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
மறு தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

நெய்வேலி மகாலிங்கம்...என்பவர், 'கண்ணப்ப நாயனார்' என்று பெரியவாளாலேயே, புகழப்பட்டவர். பெரியவாளிடம் உரத்த குரலிலேயே பேசுவார்.களங்கமில்லாமல்,மனத்தில் தோன்றியவற்றை யெல்லாம் கொட்டி விடுவார்.

அவர் பெரியவாளிடம் பேசும்போது, அருகிலிருந்து கேட்பவர்களுக்கு, அவர்மேல் வெறுப்புக் கூட வந்து விடும். "இவர் என்ன கொஞ்சமும் மரியாதை இல்லாமல் இப்படிப் பேசுகிறாரே" என்று கோபம் வரும்.

ஆனால்,பெரியவாளோ அவர் பேசுவதை யெல்லாம் ஆடாமல்,அசையாமல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

மகாலிங்கம் பெரியவாளிடம் ஒரு நாள் சொன்னார்;

"அப்பா....நீ வெயிலிலும்,மழையிலும் ஊர் உரா அலையறே? கொலைப் பட்டினி கிடக்கே..உன்னை 'நடமாடும் தெய்வம்' என்று சொல்லிக்கொண்டு, இங்கே வரும் மடிசார் மாமிகளும்,பஞ்சக்கச்ச மாமாக்களும் வெறும் வேஷதாரிகள்.ஓட்டலில் வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு வருகிறார்கள். கார்,பஸ்,டிரெயின் என்று வாகனங்களில் வருகிறார்கள். 'பெரியவா பெரியாவா'ன்னு சொல்லி அவர்களெல்லாம் வாய்பொத்தி நிற்கிறதை, நீயோ நிஜமான பக்தின்னு நினைச்சு, ஆசீர்வாதம் பண்ணிண்டிருக்கே....உன் உடம்பைப் பற்றி யாரும் கவலைப்படறதில்லே....

"இந்தா - பிஸ்கட்,மருந்து,டானிக் எல்லாம் கொண்டு வந்திருக்கேன், வேளாவேளைக்குச் சாப்பிடணும்" என்று சொல்லிவிட்டு, ஓர் அட்டைப் பெட்டியை பெரியவா எதிரில் வைத்தார்.

"இன்னொரு தடவை, " I am the only son of my father, அதனாலே, என் வீட்டுக்கு வந்து, அங்கேயே இரு" என்றார். (அதாவது எங்கும் அலையாமல்,பசி,பட்டினி கிடக்காமல்,பூஜை,ஜபம் செய்துகொண்டு,என் வீட்டிலேயே காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற அன்பு மிகுதிச் சொற்கள்)

பெரியவா, மெதுவாகச் சிரித்தவண்ணம்,அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார்கள். 'இப்படியெல்லாம் பேசக்கூடாது' என்று ஒரு வார்த்தைக்காகக் கூட, ஒரு தடவை கூட பெரியவா அவரைத் தடுத்ததில்லை.

ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுப் பின் பிரசாதம் கொடுத்து அனுப்புவார்கள்.

காளஹஸ்தி மலை குடுமிநாதருக்கு, "பசிக்குமே?" என்று கவலைப்பட்டு, ஏதோ உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்தார் திண்ணன்."மகாப் பெரியவாளுக்குப் பசிக்குமே?" என்று பிஸ்கட் கொண்டு வந்து கொடுத்தார் மகாலிங்கம்.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் உணவுப்பொருள்கள் மாறியிருந்தன. ஆனால், இரண்டு உள்ளங்களும் ஒன்றாகவே பக்தி மயமாக இருந்தன.

இரண்டு பக்தர்களுக்குமிடையே பல நூறாண்டுகள் இடைவெளி இருந்தது. ஆனால்,காலகாலன்,காலத்தால் முதுமை அடைவதில்லை; மாறிப்போவதில்லை. காளஹஸ்தி மலையில்,கண்ணப்பனுக்காகக் கற்சிலையான லிங்கமாகவும் இருப்பார்; நெய்வேலி மகாலிங்கத்துக்காக, காஞ்சீபுரத்தில் காவித்துணி தரித்து உலாவிக் கொண்டும் இருப்பார்!.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP

https://www.facebook.com/photo.php?...kUS3lrULAIDPdTysFPQuVE0_V3EyLjWW8ded0GX&ifg=1
 
ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?

(நம்முடைய மதம் அனாதியானது. ஆகையால்தான்,இதற்கு சநாதன தர்மம் என்று பெயர்.'ஹிந்துமதம்' என்ற பெயர் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது.நம் தேசத்தில் உதித்த அவதார புருஷர்களும்,ஆசாரியர்களும் சநாதன தர்மத்தின் பல அம்சங்களை மட்டுமே எடுத்து போதித்தார்கள். ஆகையால்தான் 'மத ஸ்தாபகர்' என்று ஆதிசங்கரரைக்கூட குறிப்பிடுவது சரியாகாது)

(பேருண்மையை விளக்கிய பெரியவா)


கட்டுரையாளர்- ஐராவதம் மகாதேவன்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1943 அல்லது 1944-ல் அன்றைய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சுவாமிகள், எங்கள் ஊராகிய திருச்சிராப்பள்ளிக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் இருந்த சின்னக்கடை வீதிக்கு மிக அருகில், இரட்டைமால் தெருவில், தெருவையே வளைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள். வாசலில் பல்லக்கு வைக்கப்பட்டிருந்தது; பந்தலுக்கு வெளியே ஆனை,குதிரைஒட்டகம் கட்டப்பட்டிருந்தன. அன்று பள்ளி விடுமுறை நாள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாமென்று நானும் சில பள்ளி நண்பர்களும் அங்கு போனோம்.

நாங்கள் போனபோது பூஜை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. நானும் உள்ளே சென்று சுவாமிகளை நமஸ்கரித்துவிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு, கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அங்கே வந்த எங்கள் குடும்ப நண்பர் என்னை, ஸ்வாமிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு,"இவனுக்கு ஸம்ஸ்கிருதத்தில் நல்ல தேர்ச்சி உண்டு; சுலோகங்கள் கூட கவனம் செய்வான்" என்று சொல்லி வைத்தார்.

ஆசார்ய சுவாமிகள், என்னைக் கூர்ந்து கவனித்து விட்டு, "எங்கே,இப்போ ஒரு சுலோகம் சொல்லு, பார்க்கலாம்" என்றார்.எனக்குப் பயமாக இருந்தது. 'சொல்ல வரவில்லை' என்று கூறித் தப்பித்துக் கொண்டிருக்கலாம், ஆனால் , அப்படிச் செய்திருந்தால் நான் இப்பொழுது கூறப்போகும் சுவையான சம்பவம் நிகழ்ந்திராதே!

ஒரு அசட்டுத் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு, கணீரென்ற குரலில் பின்வரும் சுலோகத்தைச் சொல்ல ஆரம்பித்தேன்.

வந்தே (அ) ஹம் சங்கராசார்யம்
அத்வைத மத ஸ்தாபகம்....


முதலிரண்டு அடிகளை நான் சொன்னவுடனேயே, சுவாமிகள் 'போதும்' என்று கையால் சமிக்ஞை செய்து விட்டு . "நீ சொல்லுவதில் தப்பு இருக்கே" என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பெரிய இடத்தில் இந்தமாதிரியான அதிகப்ரசங்கித்தனம் செய்திருக்கக்கூடாது என்று தோன்றியது. கட்டியிருந்த கைகளை அவசரமாகப் பிரித்து முதுகுக்குப் பின்புறம் கொண்டு போய் வைத்துக்கொண்டு போய் நான் சொல்லிய சுலோகத்தில் அக்ஷரங்கள் சரியாக உள்ளனவா என்று விரல் விட்டு எண்ணிப் பார்த்தேன். எழுத்துப் பிழை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்

நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனித்துவிட்ட சுவாமிகள் சிரித்துக்கொண்டே," நான் அக்ஷரங்களைப் பற்றிச் சொல்லல்லே; உன் சுலோகத்தில் உள்ள அர்த்தம் தப்பா இருக்கு" என்று மீண்டும் கூறினார்.

எனக்கு வெலவெலத்துப் போய் வியர்த்துவிட்டது.ஏன் இந்த 'வம்பில்'.மாட்டிக்கொண்டோம் என்று தோன்றியது.

என் திகைப்பைப் புரிந்துகொண்ட சுவாமிகள், புன்முறுவலுடன் கையை அசைத்து என்னை உட்காரச் சொன்னார்.நான் அமர்ந்தவுடன் என்னிடம் கேட்டார். "நீ கிறிஸ்துவப் பள்ளியில்தானே படிக்கிறாய்?"

'ஆமாம்' என்ற குறிப்பில் பெருமாள் மாடு மாதிரி தலையை மட்டும் மேலும்,கீழுமாக அசைத்தேன். திடீரென்று சுவாமிகள், ஏன் எதையோ கேட்கிறார் என்று எனக்குப் புரியவில்லை

சுவாமிகள் மேலும் தொடர்ந்தார்; "கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபித்தவர் யார்?"

அந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரிந்ததால் சற்று தெம்பு பிறந்தது. "ஏசுநாதர்" என்றேன்.

"ரொம்ப சரி; இஸ்லாம் மதத்தை ஸ்தாபித்தவர் யார்?"

"நபிகள் நாயகம்"

"அதுவும் சரி; இப்போ சொல்லு பார்க்கலாம்; நம்ம ஹிந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார்?"

சுவாமிகளுடைய இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை. தலையை மட்டும் 'தெரியாது' என்ற குறிப்பில் பக்கவாட்டில் அசைத்தேன்.

"நான் சொல்கிறேன் கேள்" என்று சுவாமிகள் தொடர்ந்தார். அவர் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசப் போகிறார் என்பதை உணர்ந்து, கலைந்து போய்க் கொண்டிருந்த பக்தகோடிகள் அவரவர் இடத்தில் மீண்டும் அமர்ந்துவிட்டனர். நிசப்தம் நிலவியது. அப்பொழுது நிகழ்த்திய உரையை எனக்கு நினைவிலுள்ள வரை இங்கு சுருக்கிக் கூறுகிறேன்.

"ராமன், கிருஷ்ணன் ஆகிய அவதாரங்களை பகவான் எடுத்தார்; ஆனால் இந்த அவதார புருஷர்கள் ஹிந்து மதத்தை ஸ்தாபிக்கவில்லை. நம் தேசத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல ஆசாரியர்கள் தோன்றி தர்மத்தை வளர்த்தார்கள்; ஆனால் அந்த ஆசாரியர்களும் ஹிந்து மதத்தை ஸ்தாபிக்கவில்லை.நம் தமிழ் நாட்டில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றி பக்தி வெள்ளத்தைப் பரப்பினார்கள். ஆனால் அந்த சமயக் குரவர்களும், ஹிந்து மதத்தின் ஸ்தாபகர்கள் அல்லர்.

"வாஸ்தவத்தில் நம்முடைய மதம் அனாதியானது. ஆகையால்தான் இதற்கு சநாதன தர்மம் என்று பெயர். 'ஹிந்துமதம்' என்ற பெயர் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது. நம் தேசத்தில் உதித்த அவதார புருஷர்களும், ஆசாரியர்களும் சநாதன தர்மத்தின் பல அம்சங்களை மட்டுமே எடுத்து போதித்தார்கள். ஆகையால்தான், 'மத ஸ்தாபகர்' என்று ஆதிசங்கரரைக்கூட குறிப்பிடுவது சரியாகாது."

உரை முடிவுற்றது. அனைவரும் எழுந்து கலைந்து போகத் தொடங்கினார்கள். நானும் புறப்படத் தயாராக எழுந்து நின்றேன்.அப்பொழுது என்னை அருகில் வரும்படி, ஆசாரிய சுவாமிகள் சமிக்ஞை செய்தார்; அருகில் போய் நின்று கொண்டேன்.

"பரவாயில்லை, உன்னுடைய சுலோகத்தில்,'ஸ்தாபக' என்பதை எடுத்துவிட்டு, 'போதக' என்று போட்டுவிட்டால் அக்ஷரங்களும் சரியாகிவிடும்;அர்த்தமும் சரியாகிவிடும்" என்று புன்முறுவலுடன் கூறினார்.என்னுடைய மனக்குழப்பம் தீர்ந்து அமைதியடைந்தேன்.

வந்தே (அ)ஹம் சங்கராசார்யம்
அத்வைத மத போதகம்......


என்ற அந்த இரண்டு அடிகள் அரை நூற்றாண்டுக்குப் பிறகும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மேலும் இரண்டு அடிகளை இயற்றி அந்த சுலோகத்தைப் பூர்த்தி செய்தேனா என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை. அது முக்கியமும் இல்லை.

விவரம் தெரியாத சிறுபிள்ளையாக இருந்த என்னை வியாஜமாகக் கொண்டு, மக்களுக்கு ஒரு பேருண்மையை அன்று, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் உபதேசித்தருளியது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 
Mahaperiyava Graham Salem is offering free book on Mahaperiyava to help devotees start anusham puja at their residences. Please contact the number in the image for further details.

peiryavaa.jpg
 
A poor Iyer Brahmin had come from Chinna Kanchipuram, not only to take part in the Sadas but also in anticipation of receiving a decent amount from the Paramacharya as honorarium for his participation in the Sadas.

Amidst cheering from all the devotees, who had come to witness the Sadas that evening, the Sadas went on successfully in the Kanchi Mutt much to the happiness of all those associated with the Mutt including the Kanchi Paramacharya.

After the Sadas, this Iyer Brahmin also stood in line to meet the Paramacharya, who at that time was sitting on a small platform, inside the Mutt, offering blessings to the scholars who had participated in the Sadas, that day.

One after the other, each Brahmin was receiving the blessings and honorarium from the Paramacharya and was later taking leave from Him.. Finally, this Iyer Brahmin’s turn had come.

Firstly, the Iyer prostrated before the holy Lotus feet of the Paramacharya who blessed him with a sweet smile.. Then, he got up and collected the honorarium amount from the holy Paramacharya..

At that time, along with the Paramacharya, everyone around Him, was silently observing the Iyer Brahmin.

The poor Iyer Brahmin, who tactfully noticed the amount hidden in the Betel leaves, that were offered to him, felt terribly disappointed after seeing the actual amount hidden in those leaves.

It was much less than what he had anticipated..

He was very upset and just could not hide his disappointment..

Of course, he has many reasons to be so upset..

His poor financial condition and the burdens of his family forced him to go to the Kanchi Mutt that Friday to take part in the Sadas that evening.. He came there with a great hope that he would be receiving a large amount of money from the Kanchi Paramacharya for his participation in the Sadas.

However, when he found that the amount hidden in the Betel leaves was much lesser than what he had actually anticipated, the poor Iyer Brahmin was naturally disappointed and just couldn’t prevent that disappointment from reflecting on his face.

Observing the pain and agony on the sad face of the poor Iyer Brahmin, His Holiness the Maha Periyava, in a gentle tone, asked him, “Enna, Iyer Swamigale, santhosham dhane .. ?? ..” (What Iyer Swamy.. Are you happy..??)..

Unable to know how to respond to Maha Periyava’s embarrassing question, the poor Iyer just silently nodded his head and mumbled “Sari Periyava Sari” (Yes Swamy Yes) and then quickly turned away from His Holiness, to hide his tears, and walked out of the Mutt.

Alas..

If only the poor Brahmin had waited for a couple of more seconds, in His Holy presence, and noticed, he would have found a gentle smile dancing on the lips of the Maha Periyava, who at that same time was smiling foreseeing the joy that is very shortly going to appear on the face of that Iyer Brahmin, after about fifteen minutes of time.

Unaware of all the divine drama that is going to take place in his life in about fifteen minutes of time – the fully disappointed poor Iyer Brahmin slowly walked out of the Kanchi Mutt, with a great heaviness in his heart that is caused by the remembrance of all the huge family burdens back at home – had reached the Gangai Kondan bus stand.

Later,

His Holiness Kanchi Paramacharya With Devotees

The Maha Periyava asked His disciples to send the other waiting devotees to meet Him.. On receiving instructions from the disciples, one after the other, all the devotees stood in a Q in front of the Maha Periyava.

The first devotee standing in that Q was a famous Advocate from Chennai.

On the disciple’s signal, this Advocate slowly reached the Maha Periyava; offered Him his pranams; placed a plate, that was full of fruits, flowers, Cashews and other dry fruits, at the Lotus feet of His Holiness; prostrated before Him; got up after the Maha Periyava had blessed him; and later folded his hands and bending slightly forward, said in a praying tone, “Swamy.. I have a small request.. If you kindly permit me..”.

Interrupting the Advocate, the Maha Periyava said,”Wait.. Stand aside.. I will talk to you again”.. Nodding his head, the advocate said, “sure Swamy” and hurriedly moved away from the Q and stood in a corner, just beside the Q, and remained there quietly observing the Maha Periyava.

Then, His Holiness called one of His Mutt disciples and said,” A few minutes ago an Iyer Swamy had gone out from here.. You must have seen him.. Go and ask him to come back.. Tell him am calling him”

The disciple swiftly went out and returned after sometime saying,”Swamy.. I went to the bus stand.. But he’s not there.. I think he had already left Kanchipuram”..

Waving his right hand at his disciple, the Paramacharya said, “He’s sitting in a bus to Chinna Kanchipuram.. Go again and find out and bring him”..

The disciple quickly went out running again and reached the bus stand.. This time he found the Iyer Brahmin sitting in a bus to Chinna Kanchipuram.. The disciple slowly approached the Iyer and said, “Iyer Swamy.. Maha Periyava is calling you.. Please come..”.

Surprising the disciple and also surprising all the other passengers sitting in the bus, this was what the poor Brahmin had said,

“Sorry Swamy.. I can’t come.. I have already purchased a ticket to my place paying thirty paise.. If I now come with you I shall lose that money”

Contd.....
 
Contd........

The bus conductor, who was listening to that conversation, had quickly approached the Iyer and said,

“Ayyo Iyere, people come from far off places, even from foreign countries, to just have a glimpse of the Maha Swamy.. And when He Himself is calling you, you are saying no..??.. Don’t worry about your thirty paise, Iyere.. I shall return that to you..

Give me your ticket and go to the Mutt immediately.. The great Maha Swamy is calling you.. Go go.. There must be something important for you waiting there in the Mutt”.. Saying so, the conductor returned the thirty paise to that Iyer Brahmin and took back the ticket from him.

Quickly grabbing his thirty paise from the bus conductor, the poor Iyer Brahmin rushed to the Kanchi Mutt along with the disciple.

Looking at the Iyer Brahmin,

The Maha Periyava asked him with a smile,”Enna Iyere.. So, you don’t want to come to me without collecting your thirty paise..???.. “..

The shocked Iyer, unable to understand how the Maha Periyava had known about his thirty paise, silently offered his pranams to Him.

Exactly at that moment, the Advocate, who was waiting in a corner for Maha Periyava’s call, came forward and reminded Him, “Swamy.. My request..”.. Again asking him to “wait”, the Maha Periyava then turned to the Iyer Brahmin and said, “Iyere.. Come forward and stand beside this Advocate..”

The Iyer came forward.. Then turning to the Advocate, the Maha Periyava asked him to take the residential address of that Iyer.. The Advocate promptly noted down the address of the Iyer, in his pocket book.

And Then This Most Amazing Miracle Had Occurred In The Kanchi Mutt

His Holiness The Maha Periyava Of Knachi Kamakoti Peetam

His Holiness the Kanchi Paramacharya, the Maha Periyava, the Maha Swamy, the Jagadguru Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Swamigal, a reincarnation of Lord Siva, taking not only the Iyer Brahmin and the Advocate but also everyone there in the Kanchi Mutt into a deep state of shock and speechlessness, had told the Advocate,

“Enna, you wish to donate some money to a poor learned Brahmin every month.. That’s what you wanted to request me.. You want me to show you a poor Brahmin whom you could donate that money.. Right..??.. ”

He’s the Brahmin you must help.. That’s why I asked you to take his address.. So starting from this month, keep sending two hundred and fifty rupees to him every month.

This Iyer is only poor in his living condition, otherwise, he is a rare Gem and a well learned scholarly Brahmin.. Such learned scholars should not suffer for lack of financial resources.. That will be against Nature and God.. And that’s also not good for the Nation.

If you go by history, any kingdom in which a Brahmin suffered did not flourish.. So we must help him.. By helping him from hereon, you and your family would be blessed by Kamakshi Amman for many generations to come.. She shall give you eternal wealth and happiness..

Never forget to send him money not even for a month.. Otherwise he will come running to me, all the way again.. I don’t want him to go through all those pains even once in his life again.. Is that okay with you.. Enna..??..”

The Advocate, who was until then standing in an unbelievably frozen state and a speechless condition. had suddenly moved forward with a jerk in his body; swiftly went close to the Maha Periyava; prostrated before His holy Lotus feet; got up; and then with tears in his eyes said,

“Maha Aagna Swamy.. Maha Aagna.. By the grace of Goddess Kamakshi Amman, I have earned enough that would be comfortable for my next three generations.. I shall certainly keep sending money, to this learned Iyer Swamy, every month as long as am alive..

Even after my leaving this world, I shall make enough arrangements to enable the money is sent to him mn time and every month.. Hereafter, I shall also see that this Brahmin shall never have another need to search for money.. My family shall unconditionally stand by his family in all his future needs and forever”

Observing all that is going on in front of his eyes, the poor Iyer Brahmin was standing in an indescribable state.. Although the tears in his eyes were blurring his vision, he could, for a few moments, clearly see Lord Siva sitting in front of him in the form of His Holiness The Maha Periyava Kanchi Paramacharya.

Moving slowly to the Paramacharya, he went down on his knees and silently placed his head at the Lotus feet of His Holiness and remained there, weeping for a longtime.

Looking at that glorious scene, a sort of which they have never witnessed in their life before, all the priests of the Kanchi Mutt, all the disciples of the Kanchi Paramacharya and all the learned scholars gathered there, loudly chanted, in chorus and in one voice, the following sloka, blessing the Iyer Brahmin.

“Sankarascha charithaa kathaamritham.. Chandra sekhara gunaanu keerthanam.. Neelakanta tava paada sevanam.. Sambhavanthu mama

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

நன்றி: MAHA PERIYAVA FACE BOOK GROUP
 

Latest posts

Latest ads

Back
Top