• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழில் விளையாடுவோம்!

Status
Not open for further replies.
ஐந்து வயதில் எழுத்துக்களை முதலில் படித்தால் போதும். எழுத்துக்கூட்டி படிப்பது என்பது அடுத்த நிலை. எனவே அந்தப்பாலகனை குற்றம் சொல்வதற்கில்லை.

அவனுக்கு எழுத்தின் வகைகளை படிப்பிக்கும்போது-வல்லின மெல்லின இடையினங்களைப்பற்றி விளக்கும் போது அவன் மனதில் இந்த வல்லின பகரம் மெல்லின ஓசையுடன் வரும் இடங்களைப்பற்றிய ஏற்கெனவே எழுந்திருக்கும் ஐயமாக இது வெளிப்படும். அப்போது நாம் இலக்கணத்தில் இருக்கும் சூத்திரத்தை அவனுக்கு விளக்கினால் போதும்.

வல்லின க ச ட த ப எழுத்துக்கள் அவற்றின் முன் மெல்லின ங ஞ ண ந ம ன வோடு வந்தால் அவை (வல்லினங்கள்) மெல்லின ஓசையுடன் பேசவும் படிக்கவும் படும் என்பது இலக்கணம்.

எனவே இஞ்சி என்பது inji தான். inchi அல்ல. பஞ்சு panju தான் panchu அல்ல.
வங்காளம் vangaalam தான். vankaalam அல்ல. பங்கு pangu தான் panku அல்ல.
அண்டம் andam தான் antam அல்ல. ...................இப்படியே ஒவ்வொன்றும்.

பிரச்னை என்னவென்றால் இதை தமிழாசிரியர்கள் கூட கற்றுக்கொடுப்பதில்லை.
தாங்கள் உரைப்பது உண்மை. இதைத்தான் 'கசடறக் கற்றல்' என்று முந்தைய பதிவில் எழுதினேன்! :)

''சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்''. படிக்கும் பழக்கம் இருந்தால்தான் நல்ல தமிழ் பேசலாம்.

இதோ சில உதாரணங்கள்:

சட்டி, சட்டுவம், சம்பளம், சாட்டை, சாரல், சாமரம், சேறு, சோறு போன்ற சொற்களுக்கு 'ch' என்ற ஆரம்பம்.

ஆனால்,

சரி, சத்து, சாதனை, சொல், சோதனை, சீர், சேம்பு, சோர்வு, சோம்பல் போன்ற சொற்களுக்கு 'sa' என்ற ஆரம்பம்.

சொல் வளமும், படித்துப் பழகுதலும் இல்லாது, செந்தமிழ் சாத்தியமே இல்லை, ஐயா!! :nono:
 
எது சரி? ஔவை அவ்வை , ஐயர் அய்யர்--ஔ=அவ் ஐ=அய் எனில் ஐ ஔ உயிர் எழத்துகளின் தேவை ஏன்?
ஔவை என்பது அழகுத் தமிழ்; அவ்வை என்பது அப்படியல்ல.

'ஔ' என்பது உகாரத்தில் முடியும்; 'அவ்' என்பதற்கு கீழ் வரிசைப் பல்லை மேலுதட்டில் பதிக்க வேண்டும்! :spy:

'ஐ' என்பதை 'அய்' என்று உச்சரித்தாலும் 'ஐ' யின் வளைவு எழுதும் தமிழில் அழகு சேர்க்கும்! :thumb:

'ஐ' என்ற திரைப்பட விளம்பரத்தில் 'அய்' என எழுதினால்.............. :lol:
 
சண்முகி - அவ்வை சண்முகிதான் - படத்தை ஔவை ஷண்முகி என்று எழுதினால்......?
 
Last edited:
'அவ்வை' என்றால், அம்மா / வயதான பெண் என்று பொருள்.

அதனால், அவ்வை ஷண்முகி என்பது சரி.

ஆனால், அவ்வை ஷண்முகம் ????!!!!!!

திரு டி. கே. ஷண்முகம் ஔவையாராக நடித்தால் 'ஔவை ஷண்முகம்' ஆனார்.

இதோ அவரது புகைப்படம்- Source: Google images

T29THSHANMUGAM_GAN_1068132e.jpg


ஹூம்............ 'ஔவை'யை 'அவ்வை' ஆக்கியது கழகச் செம்மல்கள்தான்!! :dizzy:
 
இஞ்சி என்பது inji தான். இஞ்ஜி என்பது?

I had a maid servant - கிரேஸி -. Was she Gracey or Crazy?
 
1)இஞ்சி என்பது inji தான். இஞ்ஜி என்பது?
2)I had a maid servant - கிரேஸி -. Was she Gracey or Crazy?

1) May be Ginger or Adhrak.

2) Go and ask an Englishman because it is an English word. He may in all probability tell you கிழெய்ஸி. And that will be the correct way to call her. She may not like it and may act deaf when you call her - driving you crazy. Be prepared for that. LOL.
 
'அவ்வை' என்றால், அம்மா / வயதான பெண் என்று பொருள்.

அதனால், அவ்வை ஷண்முகி என்பது சரி.

ஆனால், அவ்வை ஷண்முகம் ????!!!!!!

திரு டி. கே. ஷண்முகம் ஔவையாராக நடித்தால் 'ஔவை ஷண்முகம்' ஆனார்.

இதோ அவரது புகைப்படம்- Source: Google images

T29THSHANMUGAM_GAN_1068132e.jpg


ஹூம்............ 'ஔவை'யை 'அவ்வை' ஆக்கியது கழகச் செம்மல்கள்தான்!! :dizzy:

ஔவையை அவ்வை ஆக்கியது ஒரு கன்னடப் "பெரியவர்".
 
Ok i will attempt

1. Aariyamala

2. Andavan kattalai

3. Thirumal perumai

4. Gulaebagavalli

5. Sivanthamann

6. Kaathavarayan

7. Aadimaipen

8. Guru shishyan

9. Bama vijayam

10. Bathala bhairavi

11. Kabali

12. Sivaji

13. Rudrathandavam

14. Nandhanar

15. Thiruvarutchelvar

16. Guru

17. Thirudathe

18. Kuruvi

19. Baba

20. Kadhala kadhala

hope the answers are correct.

Unfeigned regards,,,
 
Roja ராேசாதான்- ராேஜா இல்லை Raja ராசாதான் - ராஜா இல்லை சங்கம் வளர்த்த தெ (தே )ன் தமிழ் நாட்டில்!

ரோஜாவும் ராஜாவும் தமிழ் சொற்கள் அல்ல. எனவே அவை பழக்கத்தில் மாறுவது இயற்கை. இலக்கண விதிகள் இல்லை.
 
1. இஞ்சி என்பது inji தான். இஞ்ஜி என்பது?

2. I had a maid servant - கிரேஸி -. Was she Gracey or Crazy?
1. 'ஜ' தமிழ் எழுத்தே அல்ல!

இருப்பினும்.......... இஞ்சி என்பது INJI; இஞ்ஜி என்பது INJJI. :cool:

2. அவள் Graceful ஆக வேலை செய்தால் GrEcy; Crazy ஆக வேலை செய்தால் CrEcy!! :D
 
ஒரு மாணவனுக்கு ஒரு சின்ன சந்தேகம்! அவன் கேட்டான்: ஐயா! மரம் என்பதற்கு, சின்ன 'ர' வா பெரிய 'ற' வா?

ஆசிரியருக்கே குழப்பம்!! அதனால் வந்தது பதில்: சின்ன மரத்துக்குச் சின்ன 'ர'; பெரிய மரத்துக்குப் பெரிய 'ற'!!
icon3.png
 
1) May be Ginger or Adhrak.

2) Go and ask an Englishman because it is an English word. He may in all probability tell you கிழெய்ஸி. And that will be the correct way to call her. She may not like it and may act deaf when you call her - driving you crazy. Be prepared for that. LOL.

I asked an Englishman He did not suggest கிழெய்ஸி but 'அழகி' instead and that would be the correct way She would like it and will react exactly like Chillar on being crowned Wow with a big giggle I know you admire அழகி and a fan of her! Gracey is அழகி true to her name!
 
Last edited:
....... வல்லின க ச ட த ப எழுத்துக்கள் அவற்றின் முன் மெல்லின ங ஞ ண ந ம ன வோடு வந்தால் அவை (வல்லினங்கள்) மெல்லின ஓசையுடன் பேசவும் படிக்கவும் படும் என்பது இலக்கணம்.

எனவே இஞ்சி என்பது inji தான். inchi அல்ல. பஞ்சு panju தான் panchu அல்ல.
வங்காளம் vangaalam தான். vankaalam அல்ல. பங்கு pangu தான் panku அல்ல.
அண்டம் andam தான் antam அல்ல. ...................இப்படியே ஒவ்வொன்றும். ............
இது மட்டுமல்ல நண்பரே!

வல்லினத்தின் பின் வரும் வல்லினத்தைப் பாருங்கள்:

கசை, காசு, கிசுகிசு, கடி, கடுகு, காடு, கதுப்பு, காது, குகை, குடி, குதி,

சகி, சடை, சபை, சாது, சாதி, சிகை, சிசு, சிதை, சீடை, செடி, சேதம்,

தகை, தகுதி, தசை, தடி, தடு, தடை, தாடை, திசு, திசை, தோகை,

பகை, பகுதி, படி, பாகம், பாகு, பாசம், படம், பாடம், பாடு .....

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால்தான், 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்று சொன்னேன்!
 
நண்பரே!

தங்கள் பெயரை 'வாக்மி' என்று எழுதினால்,'Vaakmi' என்றும் படிப்பாரே!! :D
 
Ok i will attempt

1. Aariyamala

2. Andavan kattalai.......
அனைத்தும் சரியானவை! :thumb:

அடுத்த விடுகதைக் கட்டத்தை வெளியிட ஆவல் கொண்டேன்!! :typing:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top