• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

IMG_0713.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 8

பல சிறந்த விஞ்ஞானிகளின் சிலைகள்தான்
பண்புடன் அனைவரையும் வரவேற்கின்றன.

உள்ளே நுழைந்ததும் அந்தரத்தில் தொங்கும்
ஒரு குழாய் வழியே நிற்காத தண்ணீர் வரவு!

எத்தனையே மாதங்களாகக் கழுவாத பக்கெட்;
அதனுள் கொட்டிக்கொண்டே இருக்கிறது நீர்!

சப்தஸ்வரங்கள் எழுகின்றன நமது கைகளை
சத்தமில்லாமல் ஏழு குழாய் மீது அசைத்தால்!

ஒரு சின்ன கீதம் வாசித்து அசத்தினேன் அங்கு;
சிறு குழந்தைகள் பட்டாளமே சூழ்ந்தனர் வந்து!

இரு பட்சிச் சிலைகள்; இடைவெளியும் அதிகம்;
ஒரு பட்சி வாயில் பேச, அடுத்ததில் கேட்கிறது!

அதிசயமான நிலைக் கண்ணாடிகள் ஒரு புறம்;
அதில் ஒன்றில் நம்முடைய தலைகீழ் பிம்பம்!!

'இது சாத்தியமா?' எனக் கேட்டுச் சில படங்கள்;
அதில் ஒன்று மிக வேடிக்கையாக இருக்கிறது!

ஒரே படத்தில் மூன்று முகங்கள்; இதே போன்று
ஒரே படத்தில் வேறு வடிவங்கள் வினோதமாக!

ஜுராசிக் மிருகங்கள் நிறைந்த, சிறுவர் களிக்க
ஜோராக ஒரு பெரிய மைதானம் இருக்கின்றது.

அடுத்து நாங்கள் பார்த்தது கள்ளித் தோட்டம்!
எடுத்தேன் பல புகைப்படங்களை
ஆவலுடன்!

முட்கள் நிரம்பிய பல விதக் கள்ளிச் செடிகளில்
முத்தான பூக்களும் நிரம்பியது ஆச்சரியம்தான்!

தொடரும் ....................

 
உள்ளே நுழைந்ததும் அந்தரத்தில் தொங்கும்
ஒரு குழாய் வழியே நிற்காத தண்ணீர் வரவு!

IMG_0716.JPG
 
'இது சாத்தியமா?' எனக் கேட்டுச் சில படங்கள்;
அதில் ஒன்று மிக வேடிக்கையாக இருக்கிறது!


IMG_0719.JPG
 
ஜுராசிக் மிருகங்கள் நிறைந்த, சிறுவர் களிக்க
ஜோராக ஒரு பெரிய மைதானம் இருக்கின்றது.

IMG_0725.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 9

வெள்ளைக் கூடாரங்களிலே கள்ளிச் செடிகள்;
கொள்ளைச் சூடு உள்ளே பாய்ந்து தாக்கியது!

அழகை ரசிக்க வேண்டுமென்றால், வெப்பத்தை
பழகியதுபோல் நாம் தாங்க வேண்டுமல்லவா?

ஆசை தீரப் படங்கள் எடுத்த பின், விடுதிக்குத்
ஆவலுடன் போனோம், பெட்டியை எதிர்பார்த்து!

மார்க்கெட் வரைதான் பெட்டி வருமாம்; அதனை
மார்க்கெட் சென்று நாம்தான் பெற வேண்டுமாம்!

அந்த நேபாளிப் பெண் மிகவும் கெட்டிக்காரிதான்;
வந்து நின்றது டாக்ஸி ஒன்று சில நொடிகளிலே!

ஒருவழியாகப் பெட்டி வந்தது, டென்ஷன் விலக;
ஒரு சொட்டு நல்லெண்ணெயும் ஒழுகிவிடாமல்!

உதய சூரியனைச் சிறைப் பிடிக்க எண்ணி, காலை
உதய நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்தேன்!

தன் தரிசனம் தர ஆதவனுக்கு மனமில்லையோ?
தன் கிரணங்களை மேகங்களுக்குள் ஒளித்தான்!

மேகம் விலகாமல் அடம் பிடிக்க, எனது உறக்க
நேரம்தான் குறைந்து போனது; படமே இல்லை!

புறாக்கள் சில விடுதியின் கூரையில் வீடு கட்டி,
சிறார்களைப் போல ஓடித் திரிந்து ஒலி எழுப்ப,

இனிய குரலில் பற்பல பறவைகள் பாடித் திரிந்து
விடியலை இன்னிசையுடன் வரவேற்க, வெண்

மேகங்கள் கூட்டங்களாக எழுந்து எழுந்து வந்திட,
நேரம் போவதே தெரியாமல் நான் மகிழ்ந்தேன்!

தொடரும் ..................

 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 10

ஒரு விஷயம் பற்றி எழுதிட மறந்துவிட்டேன்;
அரும் தகவல்கள் அடங்கிய ஒரு சிறிய இடம்!

காடுகள் பற்றிய ஒரு சின்ன அருங்காட்சியகம்;
காட்டினுள்ளே செல்வது போலுள்ள அமைப்பு!

காட்டு விலங்குகளின் வடிவங்கள் சுவர்களில்;
காட்டுப் பறவைகளின் வடிவங்களும் உள்ளன.

ஒளி மிகக் குறைவாக இருப்பதால், ஒரு காட்டு
வழி நடப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது!

ஒரு பெரிய கரிய கரடியைப் பதப்படுத்தி, அதை
ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துள்ளனர்!

சிறிய அனுபவமானாலும் நிறைவானதுதான்!
இனிய நண்பர்களைப் பார்த்து வந்தது போல!

ஒரு நாள்தான் கிடைத்தது எனினும், அதிலே
முழுமையாக ஊரைச் சுற்றி வந்துவிட்டோம்!

நேபாளிப் பெண் அருமையான சிற்றுண்டியை
நேயத்துடன் பரிமாற, அவளின் சுட்டி மகனுக்கு

என் பேனா ஒன்றைப் பரிசாக அளித்திட, அவன்
தன் மன நிறைவைப் புன்சிரிப்பால் காட்டினான்!

இரண்டாம் வகுப்பு மாணவன் அவன்; அவனுக்கு
ஐந்தாம் வகுப்பில்தான் பேனா கிடைக்குமாம்!

காலிம்பாங்க் - பாக்டோக்ரா பயணம்; வாடகைக்
காரில் அதி வேகப் பயணம்! அன்றுதான் அந்த

மலைப் பாதையை ஒட்டியே ஓடுகின்ற, நீண்டு
வளைந்து செல்லும்
டீஸ்தா நதியும் தெரிந்தது!

தொடரும்.............

 
hi

this teesta river flows into nepal too....they have hydo electric power station in teesta river.....which goes towards bangladesh.....

there is some water disputes abt teesta river between india and bangladesh....even though bagdogra is small airfield....an important

indian air force base in north east.....
 
Dear TBS Sir,

There was not much water in Teesta river. It was a sort of muddy and in many places pebbles were visible! In one area,

lorries were loaded with white sand from the river bed and transported. The cab driver said that during rainy season the

river will be full!

Bagdogra airport is very small and photography is strictly prohibited. But many passengers were coolly taking lots of snaps

and no one seemed to bother about it! Many young jawans were roaming around in the airport with rifles in their hands.
 

Latest posts

Latest ads

Back
Top