• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

Dear Ganesh Sir,

Thank you very much for the encouraging words.

Hope you will read and enjoy all the other pages too! :)

Wish to share an interesting 'malarum ninaivu' with forum friends.

When I wrote my second visit to the U S of A in this format and posted as a blog in the web, a gentleman from UK read it and converted

it as a PDF file. After circulating to many groups, it came to me saying that one Mrs. Raji has written her experiences very well! :thumb:
 
RR Madam,

I used to be a voracious reader of Tamil books at my English medium CBSE school especially Kalki's Alai Osai and other serials in the 70's ...I had also participated as a Tit bit (Thunukku) writer by Dinamani Kadir where in Deepam Parthasarathy & Ki Va Ja participated..As I moved into higher education in the 80's and then shunted out of Chennai the opportunities for Tamil reading & writing got diminished, but my interest has not waned a bit..I continue to read Thuglaq whenever I am able to get a copy, till this date...

I am not sure how many writers are of your caliber in writing Travelogue in poetry form! I have earlier read Idayam Pesugiradhu Manian's travelogues which used to be very spicy! I would rate your writing as a piece of good work! Have you published your Travelogues?
 
Dear Ganesh Sir,

I have not published anything since most of the readers prefer only 'urainadai'!

But, my writings are well received in our forum and in another ladies forum! :)
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 15

எல்லாச் சிலைகளுக்கும் சிவந்த குங்குமத்தினை
அள்ளித் தெளித்துள்ளார் ஆலயம் முழுவதிலும்!

காவி உடைகள் அணிந்த யோகிகள் பலர் அங்கு
உலவி வருவது நமது கண்களிலே படுகின்றது!

பக்தர்கள் சிலரிடம் கட்டுக் கட்டாய் நோட்டுக்கள்!
பக்தர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் பூசாரிகள்!

சிவப்பு நிறத்தில் மெல்லிய துணிகளில், ஜரிகை
சிறந்து விளங்குமாறு வேலைப்பாடுகள்; இவை

பக்தியுடன் தேவிக்கு அணிவிக்கின்றனர் மக்கள்;
பக்தைகள் அரக்கு வளைகளை வாங்குகின்றனர்.

பலியிட ஆட்டுக் குட்டிகளை ஓட்டி வரும்போது,
வலிக்கிறது நம் நெஞ்சம், இதென்ன வழிபாடென!

இந்த ஆலயம் பற்றி ஒரு தகவல்; ஓர் ஆண்டிலே
இந்த ஆலயத்தை மூன்று நாட்கள் பூட்டுவாராம்!

யோனி வடிவத்தைச் சுற்றி ஓடுகிற ஊற்று நீரும்
மாறிவிடுமாம் சிவப்பு நிறமாக! அந்த நாட்களே

அன்னையின் 'விலக்கு' நாட்களாம்! அச் சமயம்
அம்புபச்சி மேளா என்ற திருவிழாவும் நடக்கும்!

தாந்திரிய யோகிகள் பலர் ஆலயத்திற்கு வந்து,
தாம் பெறும் சக்திகளை அதிகரித்துக்கொள்வர்!

வேண்டிய வரத்தினை, நம்பி வரும் மக்களுக்கு
வேண்டியபடித் தருவாள் அன்னை என்கின்றார்.

நல்ல தரிசனம் பெற்ற பின், விடுதிக்கு விரைந்து,
நல்ல சிற்றுண்டி உண்டோம்; அடுத்தது ஷில்லாங்!

தொடரும் .....................

 
kamakhya-temple-images-photos-511a1f1ae4b015f836876c36.jpg


Courtesy: Google images
 
Since my knowledge of the geography of northeast India is limited,I wanted to know ehere these places are located. So here is portion of the first part of the trip Mrs. RR Madam took. Hope it may be useful to people like me.

uttarapUrvadEsam.webp
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 16

மனம் விழைந்தது ஷில்லாங் விரைவில் அடைய!
கனம் குறையுமே எங்கள் இரு பெட்டிகளிலிருந்து!

ஒருவருக்குக் கட்டணம் முன்னூறுதான் சீருந்தில்;
மூவருடைய கட்டணம் தந்தோம் நாங்கள் இருவர்!

பின் இருக்கையில் வசதியாக அமர்ந்தோம்; காரின்
முன் இருக்கையில் ஒரு பேராசிரியர் பயணித்தார்!

ஓட்டுனர்கள் பலர் இளம் வயதினர்; அதன் விளைவு
ஓட்டுகின்றனர் மிக விரைவாகவும், லாவகமாகவும்!

மலையைக் குடைந்து பாதைகளை அமைத்துள்ளது
மலைப்பைத் தருகின்றது பயணிக்கும் சமயத்திலே!

பாதி வழி சென்ற பின், சில மணித்துணிகள் ஓய்வு;
மீதி தூரத்தைக் கடக்கிறது சீருந்து அதே வேகத்தில்!

ஐம்பது ரூபாய் அதிகம் தந்தால், தம்பி வீட்டருகில்
ஜம்மென்று இறக்குகின்றேன் என்றான் எம் சாரதி!

இந்த அரிசி, பருப்பு, காபிப்பொடி, எண்ணெய் என
வந்த மூட்டையை யார் தூக்குவது வேறு காருக்கு?

அதிகக் கட்டணத்துக்கு ஒரு 'ஓ' போட்டு, இருவரும்
அதிகப் பாசம் உள்ள தம்பி வீட்டை அடைந்தோம்!

மாருதி 800 கார்கள் இங்கு மிகப் பிரசித்தம்; மக்கள்
ஏறி, இறங்குகிறார் ஷேர் ஆட்டோக்களைப் போல!

பத்து ரூபாய் முதல் கட்டணங்கள் ஆரம்பம் ஆகும்;
சத்தான யோசனைதான் குட்டி காரின் உபயோகம்!

வழியில் நடப்போரிடம் 'வண்டி வேண்டுமா?' என
வண்டியை நிறுத்தி விசாரிக்கின்ற ஓட்டுனர்கள்!

தொடரும் ........................

 
Other rivers in the name of men Krishna, Ravi and Badhra
1. Krishna is also a female name;

2. Raavi is the name of the other river.

Ravi River
- Wikipedia
says:

''According to ancient history traced to Vedas, the Raavi River was known as Iravati ''

3. Bhadra river is called Bhadravati.

Hence I wrote that Brahmaputra is the only river with a male name. Hope it is OK!!

 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 17

அன்புத் தொல்லை என்ன என்பதை காட்டினார்கள்
அன்புத் தம்பியும் அவரது இல்லத்தரசியும் எமக்கு!

வித விதமாக உணவுகள் சமைத்துப் பறிமாறி, பல
வித சேவைகளும் விடாது செய்து அசத்தினார்கள்!

திங்கட் கிழமை ஓய்வு நாள் என்பதால், 'தம்பி சார்'
எங்களுக்கு நகரைச் சுற்றிக் காட்டிட விழைந்தார்!

மாருதி 800 வந்தது சரியாக எட்டு மணிக்கு; அதன்
சாரதி ஒரு புன்னகை தவழும் முகத்து இளைஞ்ன்!

ஓயாமல் எங்களுடன் அரட்டைக் கச்சேரி செய்தபடி
ஓட்டினான் படு வேகத்தில் அந்தக் குட்டிக் காரினை!

கன வேகமாகப் பல மாருதிகள் அங்கு பறக்க, சில
கன ரக லாரிகள் பொறுமையாக ஊர்ந்து சென்றன!

முதலில் ஒரு கிறிஸ்துவ தேவாலயம் பார்த்தோம்;
அதில் மனித நடமாட்டம் அதிகம் இல்லை! மிகவும்

பரந்து விரிந்த நிலப்பரப்பில் அமைந்திருந்தது அது!
சிறந்த கண்ணாடி வேலைப்பாடுகள் அதன் உள்ளே!

ஷில்லாங் நகரை 'பறவைப் பார்வை' பார்க்க ஓரிடம்!
ஷில்லாங் நகரின் குளிரும் கூட நம் கண்ணில் படும்!

இம் எனும் முன்னே வரும் பெரு மழைக்கு, கட்டியம்
தம் திரண்ட வரவால் கூறிடும் கார் மழை மேகங்கள்!

வாடகைக்கு உள்ளூர் ஆடைகள் கிடைக்கும்; அதை
வாஞ்சையுடன் அணிந்து புகைப்படம் எடுக்கின்றார்!

காட்சிகளைக் கண்டு ரசித்த பின்னர், வரும் வழியில்
காட்டினார் தம்பி உருளைக் கிழங்குத் தோட்டத்தை!

தொடரும் .................
 
பரந்து விரிந்த நிலப்பரப்பில் அமைந்திருந்தது அது!

IMG_0898.JPG
 

கன வேகமாகப் பல மாருதிகள் அங்கு பறக்க, சில

கன ரக லாரிகள் பொறுமையாக ஊர்ந்து சென்றன!


IMG_0900.JPG
 
காட்சிகளைக் கண்டு ரசித்த பின்னர், வரும் வழியில்
காட்டினார் தம்பி உருளைக் கிழங்குத் தோட்டத்தை!

IMG_0914.JPG
 
வாடகைக்கு உள்ளூர் ஆடைகள் கிடைக்கும்; அதை
வாஞ்சையுடன் அணிந்து புகைப்படம் எடுக்கின்றார்!

IMG_0908.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 18

அழகிய வரிசைகளில் பசுமை நிறத்தில் தோட்டம்;
பழகிய வேலையைச் செய்யும் சில விவசாயிகள்.

தாம் பயிரிட்ட காய்கறிகளைப் பைகளில் போட்டு
தம் வியாபரத்தைக் கவனிக்கின்றார் சில பெண்கள்!

இரசாயன உரங்களை இடாததால், அவற்றின் சுவை
இரட்டிப்பாக இருக்குமாம்; விலை கூட அப்படியே!

அடர்ந்த மரங்கள் சாலையின் இரு புறமும் இருக்க,
அடர்ந்த பனிப் படலம் நமது பார்வையை மறைக்க,

கொஞ்சம் தொலைவு பயணம். அருகில் Elephant falls
நெஞ்சம் கவரும் என்பதால், அது அடுத்த நிறுத்தம்!

படிகளில் இறங்க வேண்டும் நீரிவீழ்ச்சிகள் பார்க்க!
படிகள் சுமார் ஒரு அடி இறங்குமாறு அமைந்திருக்க,

பயம் தொற்றியது, என்னால் இறங்க இயலுமா என;
பயத்தைப் புறக்கணித்து இறங்கத் தொடங்கினேன்!

மூன்று பகுதிகளாக அமைந்திருக்கிறது நீர்வீழ்ச்சி;
முன்பு யானை வடிவப் பாறை அருகில் இருந்ததால்,

பெயர் அப்படி வந்ததாம்! 1897 - ம் ஆண்டில் அதிர்ந்த
பெரும் நிலநடுக்கத்தில் பாறை உடைந்தாலும், அப்

பெயரே நிலைத்துவிட்டதாம்! முதற் பகுதி நீர்வீழ்ச்சி
உயரம் அதிகம் இல்லாது, மரங்களிடையே உள்ளது.

இரண்டாம் நீர்வீழ்ச்சி உயரம் மிகக் குறைவு! ஆனால்
மூன்றாம் பகுதி அதிக உயரம் கொண்டதால், அங்கு

பல படிகள் இறங்குவது அவசியம்; இறங்கிவிட்டால்,
பல படிகள் மீண்டும் ஏற வேண்டுமே! மீண்டும் பயம்!

:fear:

தொடரும் ..................

 
அடர்ந்த மரங்கள் சாலையின் இரு புறமும் இருக்க,
அடர்ந்த பனிப் படலம் நமது பார்வையை மறைக்க...

IMG_0943.JPG
 

Latest posts

Latest ads

Back
Top