சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 24
நல்ல கலாச்சாரத்தை வளர்க்கிறது R K Mission; ஆனால்
அல்லல்படுகிறார் வெளியே சில சிறுவரும் சிறுமியரும்!
ஒரு பெண் நீண்ட லவங்கப் பட்டைகளை விற்கின்றாள்;
சிறார்களின் கைகளில் சிறு அளவு லவங்கப் பட்டைகள்!
ஒரு கட்டு பத்து ரூபாய்தான் எனக் கெஞ்சுகிறார். அந்தச்
சிறு பருவத்தில் வறுமையின் கொடுமை! என் செய்வது?
இரண்டு கட்டுக்களை நான் வாங்கியதும், அந்தச் சிறுமி
இரண்டு கண்களையும் விரித்து, நன்றி கூறிச் சிரித்தாள்!
பாடசாலையில் கல்வி கற்கின்ற வசதியிருக்கும் சிலர்;
பாடசாலையாக உலகமே மாறிவிட, வறுமையில் சிலர்!
சமத்துவம் இல்லாதது நாம் வாழுகின்ற பூவுலகம் என்று
தத்துவம் பேச வைத்திடும் நம்மை, இந்த முரண்பாடுகள்!
ஒரு நாள் பயணத்தில் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த
ஒரு அனுபவத்தைப் பெற்று, இனிய இல்லம் வந்தோம்!
மறு நாள் ஷில்லாங் நகரிலிருந்து புறப்படுகிற சமயத்தில்,
ஒரு புடவைப் பாக்கெட்டைத் தம்பியின் மனைவி தந்திட,
நான் மயங்கிய அஸ்ஸாம் 'மேகலா புடவை' ஒன்றுதான்
நான் விரும்புகின்ற சந்தன நிறத்திலே அதனுள் இருந்தது!
எத்தனை புடவைகள் நம்மிடம் இருந்தாலும்கூட, புதியது
எத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது! நன்றி உரைத்து,
அருகில் இருந்த நிலையத்தில் வாடகைக் காரை எடுத்து,
விரைவில் கௌஹாத்தி விமான நிலையத்தில் இறங்கி,
அன்பாக அரவணைக்கும் கல்கத்தா நண்பரின் இல்லத்தை
நன்றாக இருட்டிய சமயம் நாங்கள் சென்று அடைந்தோம்!
தொடரும் ......................