• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

St. Paul church

IMG_1136.JPG
 
விக்டோரியா மெமோரியல் கட்டிடம் மிக பிரமிக்க வைத்தது!

IMG_1149.JPG
 
என்னவர் இள வயதில் கூடைப்பந்து விளையாடிய மைதானம்.
சின்ன மாறுதலும் இல்லாது பழைமை மாறாது அது திகழ்ந்தது!


IMG_1165.JPG
 
இறக்கும் தருவாயில் உள்ளது போல் விளங்கும் பேருந்து ஒன்று!

IMG_1182.JPG
 
பழைமையான 'டிராம்' வண்டி சாலையின் நடுவில் ஓடுகின்றது!

IMG_1175.JPG
 
பல மக்கள் ஏழ்மை நிலையில் உழல்வதைப் பார்த்தால் நெஞ்சம் கனத்துவிடுகிறது!

IMG_1179.JPG
 
பல மக்கள் ஏழ்மை நிலையில் உழல்வதைப் பார்த்தால் நெஞ்சம் கனத்துவிடுகிறது!

IMG_1179.JPG

When I saw the above picture, noticed that in Kolkata hand rickshaws (not the above picture) are still being used..People being carried around by the sweat of labor in a Communist background city! Unbelievable but true!! This was stopped in TN way back in the 70's and replaced by cycle rickshaws!
 
Dear Ganesh,

I too noticed hand drawn rickshaws but could not manage to take a snap!

P.S: If we want to see many ambassador cars, Kolkata is the place!
 
பழைமையான 'டிராம்' வண்டி சாலையின் நடுவில் ஓடுகின்றது!

IMG_1175.JPG
hi

when i was in calcutta...in the 80's...i like calcutta and wondered how the british ruled east india company from there....

i like howrah station....i used to study in calcutta for my MBA course...so i visited many times....nice morning tea in mud cup

in big bazar/chota bazar area...i used to travel in coromandel exp from howrah to chennai...one of poorest metros of india...

thanks to communist govts for this....a long years of communist rule....the state was devasted....mainly bangladesh muslims/

nepalis from nepal are more poorest....i think OLD TRAMS ONLY IN CALCUTTA....NOT IN ANY OTHER METROS ANYMORE...
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 27

மதிய வேளை நெருங்கும் நேரம் தரிசனத்திற்குச் சென்றதால்
அதிகக் கூட்டம் இல்லை! தேவியைச் சுற்றுவது வினோதமே!

தம் இடது புறமிருந்து வலது புறம் பிரதக்ஷணமாகச் செல்லாது,
தம் வலது புறமிருந்து இடது புறமாகச் சுற்றி வந்தனர் மக்கள்!

இதுவும் ஐம்பத்தியொரு சக்தி பீடங்களில் ஒன்றாகும்; அதனால்
இது நாங்கள் இப் பயணத்தில் தரிசித்த இரண்டாவது சக்தி பீடம்!

மூன்று விழிகள்; பெரிதாகத் தொங்குகிற தங்கத்தாலான நாக்கு;
நான்கு திருக்கரங்கள் என வினோத வடிவத்திலே உள்ள தேவி.

வெள்ளிக் கிழமைகளில் மிகவும் நெரிசல் இருக்குமாம்; எனவே
வெள்ளிக் கிழமையைத் தவிர்க்க அதற்கு முன் தினம் தரிசனம்!

திருப்தியாக தேவி தரிசனத்தை முடித்து, மதிய உணவிற்காகத்
திரும்பினோம் நண்பரின் இல்லத்திற்கு! பின் சின்னதாக ஓய்வு!

காப்பி வீட்டில் கிடக்காது என்று எம் நண்பர் சொல்லி, எங்களை
காப்பி விசேஷமாகக் கிடைக்கும் உணவகம் போகச் சொல்ல,

அங்கு சென்று 'நடனமாடும் காப்பி'க்கு ஆர்டர் செய்ய, வந்தது
அழகாக மூன்று அடுக்குகளில் மணம், குணம் நிறைந்த காப்பி!

கண்ணடி டம்ளரைத் தொட்டவுடனே நிறங்களும் நடனமாடின!
கண்ணுக்கும் நாவுக்கும் அருமையான விருந்து அந்தத் திரவம்!

'ரபீந்த்ர சரோவர்' என்ற பெயர் கொண்டுள்ள அழகிய ஏரி ஒன்று;
ரம்மியமாக உள்ளது; செயற்கையாக அது உருவக்கப்பட்டதாம்!

பல மரங்கள் நிறைந்து இருப்பதால் சற்றுக் குளுமை தெரிகிறது.
சில நிமிடங்கள் நடந்து, அந்தக் குளுமையை அனுபவித்தோம்!

உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான, நெரிசலான பாலம், இங்கே
உயர்வாகக் கட்டப்பட்ட ஹௌராப் பாலம்! சென்றோம் அங்கே!

தொடரும் ...............

 

மூன்று விழிகள்; பெரிதாகத் தொங்குகிற தங்கத்தாலான நாக்கு;
நான்கு திருக்கரங்கள் என வினோத வடிவத்திலே உள்ள தேவி.


kalighat-kali-temple-kolkata-india.jpg
 
அங்கு சென்று 'நடனமாடும் காப்பி'க்கு ஆர்டர் செய்ய, வந்தது
அழகாக மூன்று அடுக்குகளில் மணம், குணம் நிறைந்த காப்பி!

IMG_1214.JPG
 
சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 28

மேற்படிப்பிற்கு வேறு ஊர் செல்லும்போது தங்கிய இடம், ஒரு
மேலான இடத்தினை நம் மனதில் பிடிப்பதை மறுக்க முடியாது!

'கோமள விலாஸ்' என்பது அப்படி என்னவர் மனதைக் கவர்ந்தது!
ஆவலை அடக்க முடியாமல் அந்த விடுதியைப் பார்த்து வந்தேன்!

புதிய வரவாக Banana Leaf என்ற உணவகம் தோன்றியுள்ளது; தனது
இனிய மலரும் நினைவுகள் என்னவர் நெஞ்சை நிறைத்துவிட்டது!

தான் தங்கிய அறையை மாடிப் பகுதியிலே எனக்குச் சுட்டிக் காட்ட,
நான் எடுத்தேன் ஒரு புகைப்படம்! ஆல்பத்தில் வேண்டும் அல்லவா?

இல்லம் வந்து, அரட்டைக் கச்சேரி முடித்து, மஹாபாரதம் பார்த்து,
உள்ளம் நிறைய, நல்லிரவு கூறி, அமைதியாக உறங்கப் போனோம்!

கிறித்தவர்களான நண்பர்கள், வினாயகர் முதல் இறைகளை எல்லாம்
அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவது பிரமிக்க வைத்தது என்னை!

தொலைக்காட்சியில் வரும் எல்லா தெய்வ சீரியல்களையும், தினம்
தொடர்ந்து பார்த்து ரசிக்கின்றனர், வயதில் மூத்த அந்தத் தம்பதியர்!

மறு நாள் என்னவருடைய கல்லூரியில் மாணவர்கள் கூடுகிற தினம்!
ஒரு சின்ன ஷாப்பிங் சென்று வந்ததிடக் காலை நேரம் செலவானது!

நூல் புடவைகள் கல்கத்தா நகரின் விசேஷம்; சகோதரிகளில் இருவர்
நூல் புடவைப் பிரியைகள்; எனவே இரண்டு புடவைகள் வாங்கினேன்!

மிக வினோதமாக மடித்துப் புடவைகளிச் சின்னக் கட்டை அளவிற்கு
மிக அழகாக எடுத்து அடுக்குகின்றனர்! நாம் அமரச் சின்ன ஸ்டூல்கள்!

சலித்துக் கொள்ளாமல் மிகப் பொறுமையாகப் புடவைகளைக் காட்டி,
சளைக்காமல் அவற்றை பழையபடியே மடித்து வைக்கிறார்கள் அங்கு!

மாலை என்னவர் கல்லூரிக்குச் சென்றதால் எனக்கு ஓய்வு நேரம்தான்!
வேலை முடியுமே என உடைகளை எல்லாம் பெட்டியில் அடுக்கினேன்!

தொடரும் ....................

 

Latest posts

Latest ads

Back
Top