• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை

Status
Not open for further replies.
016. திருச்சேய்ஞலூர் (இன்று சேங்கனூர்)
(வஞ்சி விருத்தம்: விளம்விளம் காய்)
(இசைப்பாடல்: ஈற்றுச் சீர் நெகிழும் வாய்பாடால் தண்பூ வாகலாம்.)

கோவில்:
Satyagireeswar Temple : Satyagireeswar Temple Details | Satyagireeswar- Senganur | Tamilnadu Temple | ????????????????

பதிகம்:
சம்பந்தா: 1.113.1: எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்

ஆலமர் தேசிகன் ஆறணிவோன்
காலமர் மெய்யுயிர்க் காரணனாய்ப்
பாலமர் ஆவினம் பார்த்தருளூர்
சேலமர் நீர்நிலைச் சேய்ஞலூரே. ... 1

[காலமர் = காற்று அமரும்; பாலமர் ஆவினம் = பால்தரும் பசுக்கூட்டம்;
ஆண், பெண், பிற என்று பாலால் பாகுபடும் உயிர்னங்கள்;
பார்த்தருள் = கரும வினைக்கேற்ப அருளும்]

கலையணி சடைமுடிக் கண்ணுதலோன்
மலையணி கயிலையில் வதிவோனே
வலையணி மானுட மயலறவே
சிலையணிந் திடமுறும் சேய்ஞலூரே. ... 2

[வலை = வஞ்சகம், சூழ்ச்சி; சிலை = உமை]

காவலர் பன்மலர்ச் சடையேற
நாவலர் பண்ணொடு நால்வரென
காவலர் அம்பலத் தாண்டவனின்
சேவலர் தாளுறும் சேய்ஞலூரே. ... 3

[காவலர் = சோலை மலரும், பாதுகாப்பு மலரும்; சேவு-அலர் = சேவை மலரும்]

கற்றறுத் தேயவன் கழல்பற்றின்
உற்றருள் செய்வனாம் உமைகோனே
சிற்றுரு பேருயிர்ச் சிவமாகச்
செற்றுற மேவினன் சேய்ஞலூரே. ... 4

[செற்று = செறிவு, நெருக்கம்]

தாள்விரல் தலைமுடி தேடச்செய்தான்
தாள்விரல் அழுத்தியே வாடச்செய்தான்
ஊழ்விறல் குன்றியே ஓடச்செய்வான்
ஏழ்விறல் பிறப்பறச் சேய்ஞலூரே. ... 5

[விறல் = வலிமை, பெருமை]

கண்ணுதல் காமனை எரித்திடுவான்
பெண்ணுதல் இடமுறத் தரித்திடுவான்
ஒண்ணுதல் ஓமென விரித்திடுவான்
எண்ணுதல் சீர்பெறும் சேய்ஞலூரே. ... 6

எரிவனம் ஆடுவன் பேயுடனே
அரிவன மல்லிகை அர்ச்சுனனாம் ... ... [அரி = வண்டு]
விரிவன ஒடுக்கியே விரிஞானத்
திருவினை யருள்வது சேய்ஞலூரே. ... 7

புலியதள் அரையினில் உடுத்தவனே
கலையதைக் கையினில் எடுத்தவனே
அலையதன் நஞ்சினை மடுத்தவனே
சிலையுடன் சேர்ந்தருள் சேய்ஞலூரே. ... 8

திரிபுரம் எரிசெயும் வானவனே
உருவினில் ஒன்றிரண் டானவனே
திருவடி தூக்கிடும் திருவென்றே
இருளக லச்செயும் சேய்ஞலூரே. ... 9

மறையினைப் பழித்திடும் வழிகொள்வோர்
கறையுறு சொல்மனக் கண்ணறுத்தே
பறையொலித் தாடுவன் பதம்நாடில்
இறையவன் இன்னருள் சேய்ஞலூரே. ... 10

கண்மலர்க் காழியைத் தந்தவனே
பெண்மலர் இடமுற வந்தவனே
விண்மலர்ப் பிறையணி விந்தையனே
திண்மலர்த் திடும்தலம் சேய்ஞலூரே. ... 11

[ஆழி = இங்கு சுதர்சன சக்கரம்;
திண்மலர்த்திடும் = திண்மை மலரச் செய்யும்]

காழிசம் பந்தரின் களைகண்ணாய்
ஆழியிற் பிறப்பதை அறுத்தெறிந்தான்
பாழியில் பரமனைப் பண்போற்ற
ஏழிசை கொள்தலம் சேய்ஞலூரே. ... 12

[களைகண் = பற்றுக்கோடு, காப்பவன்; ஆழி = கடல்;
ஏழிசை = குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி,
தாரம், சத்தகரம் என்னும் ஏழு விதமான இசை]

--ரமணி, 01-08/08/2014, கலி.23/04/5115

*****
 
017. திரு-ஆப்பாடி (இன்று திருவாய்ப்பாடி)
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா -- அரையடி)

கோயில்:
Palunkanda Nathar Temple : Palunkanda Nathar Palunkanda Nathar Temple Details | Palunkanda Nathar - Tiruvaipadi | Tamilnadu Temple | ?????????????

பதிகம்:
அப்பர்: 4.48.1: கடலக மேழி னோடும் பவனமுங் கலந்த விண்ணும்
??????? ???????? ???????? ????????

சண்டே சுவரரை யாட்கொண்டு முத்தியின்
தண்ணிழல் தந்த தளிர்மதியன் மேவியருள்
ஆப்பாடி சீர்பாட ஐங்கர னேயெனக்குக்
காப்பாக நின்றே அருள்.

வேதியன் மகனாய் வந்தே
. விசாரச ருமன்பேர் தாங்கிச்
சாதக நெறியில் நின்றே
. ஆனிரை தாயாய்ப் பேணித்
தீதிலாப் பசுவின் பாலால்
. திருமணல் லிங்கம் ஆட்டத்
தாதையன் நிலைகொண் டாளும்
. தலமிதாப் பாடி யூரே. ... 1

தந்தையும் இதைய றிந்தே
. தனயனைக் கடிந்தே காலால்
எந்தைபாற் கும்பம் தள்ள
. இந்தசெய் கைபொ றாதே
தந்தையின் காலைக் கோலால்
. தனயனும் தாக்கக் கோலும்
விந்தையில் மழுவாய் மாறி
. வெட்டிய தலமாப் பாடி. ... 2
 
அம்மையோ டப்பன் தோன்றி
. அரியதோர் காட்சி தந்தே
எம்மகன் இனிநீ சண்டி
. கேசனாம் உன்பேர் என்றான்
எம்பெயர் பாலு கந்த
. ஈசரென் றிங்கே கூற
நம்நிரை மேய்ந்த ஊர்ப்பேர்
. நவில்வராப் பாடி யென்றே. ... 3

ஆத்தியாம் தலவி ருட்சம்
. அம்மைபேர் பெருந்த லைவி
தீர்த்தமாம் மண்ணி யாறே
. திருத்தலம் சிறிய கோவில்
மூர்த்தமாம் லிங்கச் சுற்றில்
. சூரியன் சனியு றையக்
கூத்தனின் சபையும் கொண்டே
. ஒளிருமாப் பாடி யூரே. ... 4
 
மத்தமும் மதியும் சூடி
. மங்கையைத் தாங்கு வோனை
வித்துறும் வினைகள் இல்லா
. விடுதலை வேண்டி நின்றே
இத்தரை யின்னும் ஏனோ
. என்பவர் நாடு கின்ற
உத்தமன் அடியார் காப்பென்
. றுறைவனாப் பாடி யூரே. ... 5

அஞ்செனும் பூத மாவான்
. அண்டமும் பலவென் றாவான்
நஞ்சினைக் கண்டம் கொண்டே
. நானிலம் வாழ வைப்பான்
தஞ்சமென் றவன்றாள் பற்றின்
. தன்னுடன் சேர்த்துக் கொள்வான்
அஞ்செழுத் தோதும் பத்தர்க்
. கருள்வனாப் பாடி யூரே. ... 6
 
திரிபுரம் சிரித்த ழித்தான்
. சித்தசன் பார்த்த ழித்தான் ... [சித்தசன் = மன்மதன்]
எரிவனச் சாம்பர் மேனி
. விடதரம் பூண்டு நிற்பான் ... [விடதரம் = விடைத்தைத் தரித்த நாகம்]
உருவினில் அருவாய் நின்றே
. உய்வினைத் தந்த ருள்வான்
வருவினை கொள்ளும் வேடன்
. வாழ்வனாப் பாடி யூரே. ... 7

கயிலைம லைகொள் வேந்தைக்
. கால்விரல் பதித்தே சாய்த்தான்
அயனரி காணா வண்ணம்
. அழலெழு வென்றே நின்றான் ... [எழு = தூண்]
கயல்விழிச் சொக்கன் என்றே
. கடிமணம் கொண்டு நின்றான்
உயர்வினைத் தருவ தற்கே
. உறைவனாப் பாடி யூரே. ... 8
 
(இறுதிப் பகுதி)

மறையதைத் தூற்றும் மற்றை
. வழியினிற் செல்லா தாகின்
கறையிலா ஞானம் தந்தே
. காசினிப் பிறப்ப றுப்பான்
பிறையினச் சூடும் பித்தன்
. பெண்ணொரு பாகன் சித்தன்
இறையருள் நாடும் பத்தர்க்
. கினியனாப் பாடி யூரே. ... 9

கண்மலர்க் கனலைக் கொண்டான்
. கலைமதி சூடி நின்றான்
பெண்மலர் இடத்தில் கொண்டான்
. பேயுடன் ஆடு கின்றான்
விண்மலர் நதிவீ ழல்தான்
. விரிசடை தாங்க நின்றான்
தண்மலர்த் தாளைக் காணத்
. தருவனாப் பாடி யூரே. ... 10

அப்பரின் பதிகம் சொல்லும்
. அருவுரு தாங்கி நின்றே
ஒப்பனை இல்லா ஞானம்
. உள்ளுறச் செய்யும் ஈசன்
இப்பொழு தேவி ழைவோர்
. இப்பிறப் பறுத்தே உய்ய
ஒப்பிலி அம்மை யப்பன்
. உறைவனாப் பாடி யூரே. ... 11

--ரமணி, 14/08/2014, கலி.29/04/5115

*****
 
18. சிவபுரம் (கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டைக்கு அருகில்)
(ஆசிரியத்துறை: திருமுக்கால் அமைப்பு
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் தேமா
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் புளிமா)

கோவில்:
Sivagurunathaswami Temple : Sivagurunathaswami Sivagurunathaswami Temple Details | Sivagurunathaswami - Sivapuram | Tamilnadu Temple | ????????????
http://www.maalaimalar.com/2014/02/06103619/sivapuram-temple-kumbakonam.html
aaRKay Tamil: May 2014

பதிகம்
அப்பர்: 6.087 வானவர்காண் வானவர்க்கு
??????? ???????? ???????? ????????
சம்பந்தர்: 1.021 புவம்வளி கனல்புனல்
1.112 இன்குர லிசைகெழும்
1.125 கலைமலி யகலல்கு

காப்பு
கருவறைச் சுற்றுறைக் கரிமுக நாயகன்
குருவருள் தந்தருள் வானே
குருவருள் தந்தருள் வானடி யேன்செய
ஒருபதி கம்சிவ புரமே.

பதிகம்
சங்கரர் முன்வழி யாருறைத் தலமிது
சங்கணிச் சவுரிவ ராகம்
சங்கணிச் சவுரிவ ராகவு ருவினிலே ... [சவுரி = திருமால்]
இங்கருள் பெறுசிவ புரமே. ... 1

தனபதி பெயரினிற் சனித்தகு பேரனும்
மனமுறும் ஆசையில் சேயை
மனமுறும் ஆசையில் சேய்வதம் செய்தவன்
தனதுரு கொள்சிவ புரமே. ... 2
 
ஆலம ரத்தடி யதிலொரு குகையினில்
வேலவன் தமையனைக் காண்போம்
வேலவன் தமையனைக் காண்பதில் வினையெலாம்
வேலைய றும்சிவ புரமே. ... 3

பூமியின் அடியினில் புதையுள லிங்கமென்
றாமென இருவரும் வந்தார்
ஆமென இருவரும் வந்துமண் அங்கமும் ... [இருவரும் = அப்பர், சம்பந்தர்]
தாமுற உருள்சிவ புரமே. ... 4
 
பெரியநா யகியுடன் பெருந்தகை சிவகுரு
வருவினை கொள்ளவே நின்றார்
வருவினை கொள்ளவே நின்றுல கந்தனைப்
புரந்திடும் தலம்சிவ புரமே. ... 5

செண்பக விருட்சமாம் சுந்தரத் தீர்த்தமாம்
சண்முகன் சன்னிதிக் கீர்த்தி
சண்முகன் சன்னிதிக் கீர்த்திய ருணகிரி
ஒண்திருப் புகழ்சிவ புரமே. ... 6
 
மாதிடம் கொண்டவன் வானதி தாங்கியே
காதலால் அடியரைக் காப்பான்
காதலால் அடியரைக் காத்தவன் முடிவுறும்
போதவன் அருள்சிவ புரமே. ... 7

தசமுகன் தலைகளைத் தரையினில் வீழ்த்தியே
இசையுடன் போற்றிடச் செய்தான்
இசையுடன் போற்றிடும் செயலுறும் போதருள்
பொசிவுறும் தலம்சிவ புரமே. ... 8

அயனரி தலைப்படத் தாள்படத் தேடியும்
வயப்படா அழலெழு வானான்
வயப்படா அழலெழு வாகியும் துயரினைப்
புயத்தருள் செய்சிவ புரமே. ... 9 ... [புயத்தல் = பெயர்த்தல்]

மறைகொளும் வழியது மாசெனத் தள்ளிடும்
பிறவழிச் செலவுறும் பீடை
பிறவழிச் செலவுறும் பீடையும் கொள்வனாய்ப்
புறவுரு கொள்சிவ புரமே. ... 10
 
(இறுதிப் பகுதி)

வேதமு தல்வனாய் வேணியிற் சடையனாய்
போதம ளித்தருள் வானே
போதம ளித்தருள் வான்பதம் கண்டிடும்
போதொளி செய்சிவ புரமே. ... 11

காழியர் அப்பரும் கண்ணுதற் கடவுளைப்
பாழியிற் போற்றிய பாடல்
பாழியிற் போற்றிய பாடலும் உளம்வரப்
பூழியால் அருள்சிவ புரமே. ... 12 ... [திருநீறு]

--ரமணி, 25-28/08/2014

*****
 
19. திருப்புனவாயில் (இன்று திருப்புனவாசல்)
(கட்டளைக் கலித்துறை)

(தனதன தானதனா தன தானன தானதனா
இதில் கட்டளைக் கலித்துறையும் பொருந்திவரும்;
முதற்சீர் ’தானன’ என்றும் அமையலாம்; இவ்வகைத் தேவாரப் பதிகங்களில்
’தானதனா’ என்பது சிலசமயம் ’தானதான’ என்றும் வரக் காணலாம்.
சம்பந்தர் தேவாரம்: 3.56.1 இறையவ னீசனெந்தை யிமை யோர்தொழு தேத்தநின்ற
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=30560")

கோவில்
Vruddhapureeswarar (Pazhampathinathar) Temple : Vruddhapureeswarar (Pazhampathinathar) Vruddhapureeswarar (Pazhampathinathar) Temple Details | Vruddhapureeswarar (Pazhampathinathar) - Tirupunavasal | Tamilnadu Temple | ?????????????????
???????????? ??????, ??????????????? - Pazhampathinathar Temple, Thiruppunavayil

பதிகம்
சம்பந்தர்: 3.011 மின்னியல் செஞ்சடை
??????? ???????? ???????? ????????
சுந்தரர்: 7.050 சித்த நீநினை
??????? ???????? ???????? ????????

(தனதன/தானன தானதனா/தானதான தன தானன தானதனா/தானதான)

காப்பு
கணபதி யானவனே கடி தேயுனை வேண்டுவனே!
வணமுறும் பாடலிலே வய மாவுரி பூணுவனாய்
நிணவுறும் நீள்பிறவி நிலை மையழி நாதனென
மணமுறும் கோவிலுறை மழு வாளனை நாடிடவே!

பதிகம்
உருவினில் ஆவுடையார் உறு மாவென வானதுவாம்
உரியதள் மூன்றுடனே முழ மாவது முப்பதுவாம்
கருவினில் வாழுயிரைக் கரி யாளவள் காத்திடவே
புரிகுழ லாளுடனே புன வாயிலு றைபவனே. ... 1

பாண்டிய நாட்டிலுறை பதி நான்கு லங்களுமே
ஈண்டுள வென்பதுவே இத னோர்பெரு மையெனவே
ஆண்டகை கோவிலிலே அமை லிங்கமும் அத்தனையாம்
பூண்டொடு பாவமறப் புன வாயில ருள்பவனே. ... 2
 
நான்குயு கந்தனிலே நல மாகிடும் பேரெனவே
நான்குபெ யர்களிலே நரர் பாவம றுத்ததுவாம்
நான்கும ரங்களுமே நதி யார்சடை யன்மரமாம்
பூம்புனல் பாய்ந்துவரும் புன வாயிலெ னும்தலமே. ... 3

கள்ளிவ னந்தனிலே கரி யாளவள் வாழ்வதனால்
கள்ளம கன்றிடவே கனி யாகும னத்தினிலே
உள்ளவை நல்லவையாய் உணர் வாருறை ஊரெனவே
புள்ளினப் பண்ணொலியார் புன வாயிலெ னும்தலமே. ... 4
 
பத்தெனும் நீர்நிலையே படி வார்வினை தீர்வதற்கே ... [படிதல் = நீராடுதல்]
முத்திய ருள்பெறவே முனி மாந்தரும் போற்றினரே
வித்தகம் வேண்டிடுவோர் விடை யூர்வனை நாடிடவே
புத்துறைப் பாம்பணிந்தே புன வாயிலில் மேவினனே. ... 5

கைதவர் செம்பியரின் கலை யாலமை கோபுரமாம் ... [கைதவர் = பாண்டியர்]
மைவிழிப் பூங்குழலாள் மழ லைதர வேண்டுவரே
ஐயனின் சன்னிதியில் அமை யாதென யாதுமிலை
பொய்யறச் செய்திடவே புன வாயிலில் மேவினனே. ... 6
 
வானதி வான்மதியம் மழு வாளனின் சென்னியிலே
தேனுறும் பூங்குழலாள் திரு மேனியு றைந்திடவே
கானுறும் கூளியுடன் களி யாடுவன் காத்தருள்வான்
பூனத மேனியனே புன வாயிலில் மேவினனே. ... 7 ... [பூனதம் = பொன்]

தசமுகன் சென்னிகளைத் தரை தாழ்த்தினன் தாழ்சடையன்
அசுரரின் முப்புரமும் அன லாலெரி யூட்டியவன்
பசுபதி என்பவனாய் பவ நோயைய ழிப்பவனாம்
புசகம ணிந்தவனாய் புன வாயிலில் மேவினனே. ... 8

[புசகம் = பாம்பு; ’கொங்கின் புசக கோத்திரி’--திருப்புகழ், 1182]
 
(இறுதிப் பகுதி)

அயனுடன் மாலவனும் அடி தேடியு ளைந்தனரே ... [அடி = ஆதி, source]
உயர்வினை வேண்டிநின்றால் உமை யாளுடன் கூடிநின்றே
மயலினைக் கொன்றிடுவான் மறை வாழ்நெறி நின்றிடவே
புயமதில் பாம்பணிவான் புன வாயிலில் மேவினனே. ... 9

மறைவழி வாழ்வதிலே மலி னம்தனைக் காணுவரின்
நெறியதில் உள்ளமுறா நிறை மாந்தரின் வாழ்வினிலே
இறையென நின்றவனே இக வாழ்வினில் சீர்தருவான்
பொறிகொளும் பாம்பரையன் புன வாயிலில் மேவினனே. ... 10 ... [பொறி = புள்ளிகள்]

இறைவனின் சீர்புகழும் இளை யாரது பாக்களுடன்
கறையுறும் உள்ளமதைக் கடிந் தேநலம் வேளரசர்
மறையன பாடலெலாம் மன மார்ந்திடும் போதினிலே
பொறையினில் வாழ்பெருமான் புன வாயில ருள்வனென்றே. ... 11

[இளையார் = சம்பந்தர்; அரசர் = அப்பர்; பொறை = மலை]

--ரமணி, 07-15/09/2014, கலி.30/05/5115

*****
 
வெஞ்சமாக்கூடல் (இன்று வெஞ்சமாங்கூடலூர்)
(கலிவிருத்தம்: விளம் விளம் விளம் விளம்)
(சம்பந்தர் தேவாரம்: 3.029.1 வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
சம்பந்தர் தேவாரம்: 3.036.1 சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்)

கோவில்
Kalyana Vigirtheeswarar Temple : Kalyana Vigirtheeswarar Kalyana Vigirtheeswarar Temple Details | Kalyana Vigirtheeswarar- Venjamankoodalur | Tamilnadu Temple | ?????? ??????????????
??????? ?????????? ??????, ?????????????? - Vigirthnatheswarar temple, Venjamaakkudal

பதிகம்
சுந்தரர்: 7.042 எறிக்குங்கதிர் வேயுதிர்
??????? ???????? ???????? ????????

காப்பு
சிறியவன் எனக்கருள் சித்திவி நாயக!
பொறியுறும் கட்செவிப் பொழிவினைக் கழுத்தினிற்
செறிவுறச் செய்தவர் செஞ்சடை யார்தல
விறலினைப் பாடவே வெஞ்சமாக் கூடலே.... [விறல் = பெருமை, வெற்றி, வீரம்]

பதிகம்
திகிலுறும் தீனரின் தீமைய ழிப்பவர்
முகிலுறும் மழையென மூவுல கெங்கணும்
பகவனாய் எழுந்துயிர்ப் பன்மையைக் களைபவர்
விகிர்தனார் எழுந்தருள் வெஞ்சமாக் கூடலே. ... 1

மங்கையா யிடமுறும் மதுரமொ ழியவளே
இங்குறை ஈசனின் இன்னருள் நாயகி
கொங்குநீர் ஆறெனக் குடகமும் குழகமும் ... [கொங்கு = தேன், வாசனை]
வெங்கதிர்க் கண்ணுதல் வெஞ்சமாக் கூடலே. ... 2
 
தன்னிரு குமரரைத் தந்ததில் ஈடென
முன்னுறு கிழவியும் பொன்னதைத் தந்திட
சுந்தர நண்பரின் சுணக்கமும் தீர்த்தருள்
மின்னுரு வன்னுறை வெஞ்சமாக் கூடலே. ... 3

இந்திரன் கௌதமர் இல்லவள் நாடியே
தந்திர மாய்க்கொளச் சாபமும் பெற்றவன்
வந்தனை செய்யவே வந்தருள் செய்தவன்
விந்தையின் கேளுறை வெஞ்சமாக் கூடலே. ... 4

[விந்தை = துர்க்கை; கேள் = கணவன்]
 
கருவறை நிலத்தடிக் காட்சியாய் லிங்கமென்
றுருவினில் அருள்தரும் உயர்வினைப் பெறுவமே
அருணகி ரியவரும் அறுமுகன் போற்றிய
விருத்தனின் தலமென வெஞ்சமாக் கூடலே. ... 5

வெளிவரும் சுற்றினில் விநாயகர் நான்முகன்
அளிதரும் கொற்றவை அறுமுகன் பைரவர்
நளிவுறும் சன்னிதி நவக்கிர கங்களாம்
விளிவினைத் தீர்த்திடும் வெஞ்சமாக் கூடலே. ... 6

[அளிதரும் = அருள்தரும்; நளிவுறும் = செறிந்து உள்ள; விளிவு = சாவு, கேடு, உறக்கம்]
 
சுகிர்தனாய் நின்றவன் சுந்தரர்க் கருளினான்
திகிரியை மதியினைத் திட்டியாய்க் கொண்டவன்
நகிலுறும் அமுதுகொள் நாரியி டத்தினன்
விகிர்தனாய் மேவினன் வெஞ்சமாக் கூடலே. ... 7

[சுகிர்தன் = நண்பன்; திகிரி = சூரியன்; திட்டி = பார்வை, கண்;
நகில் = முலை; அமுது = பால்; நாரி = பார்வதி; விகிர்தன் = ௮கடவுள்]

தசமுகன் தலைகளைத் தரையினில் தாழ்த்தினன்
அசுரரின் முப்புரம் அனலெரி யூட்டினன்
நசிவுறும் கானக நாயகன் என்றவன்
விசுவமாய் நின்றனன் வெஞ்சமாக் கூடலே. ... 8
 
(இறுதிப் பகுதி)
அயனரி காண்கிலா அழலெழு வானவன்
புயகம ணிந்திடும் புண்ணியன் புகழொளி
இயமனைக் காலினால் எற்றிய இறைவனாய்
வியனுல கிற்கருள் வெஞ்சமாக் கூடலே. ... 9

ஆரணம் தூற்றிடும் அறநெறி ஈர்ப்பினை
வேருடன் நீக்கியே வினையற ஈசனை
ஆர்மனம் நாடினும் அவர்க்கருள் செய்வனாய்
வீரணன் உறைவது வெஞ்சமாக் கூடலே. ... 10

[வீரணன் = முடிவில்லா ஆற்றல் பொருந்திய வீரன்]

மரம்செடி விலங்கதில் மானிடர் மனமதில்
கரந்துரை மாமணி கண்ணுதற் கடவுளின்
சுரந்தருள் தாளிணை சுந்தரர் நாடியே
விருத்தனைப் பாடுவர் வெஞ்சமாக் கூடலே. ... 11

--ரமணி, 26/09/2014

*****
 
திருவெண்ணியூர் (இன்று கோயில் வெண்ணி)
(கட்டளைக் கலித்துறை: விளம் கூவிளம் கூவிளம் கூவிளம் விளங்காய்)
(சம்பந்தர் தேவாரம்: 3.009.01 கேள்வியர் நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா(த))

கோயில்:
Venni Karumbeswarar Temple : Venni Karumbeswarar Venni Karumbeswarar Temple Details | Venni Karumbeswarar - Koil Venni | Tamilnadu Temple | ???????????????????
???????????????? ??????, ?????????????? - Venni Karumbeswarar Temple, Thiruvenniyur (Kovil Venni)

பதிகம்
சம்பந்தர்: 2.014 சடையானைச் சந்திர
??????? ???????? ???????? ????????
அப்பர்: 5.017 முத்தி னைப்பவ ளத்தை
??????? ???????? ???????? ????????
6.059 தொண்டிலங்கும் அடியவர்க்கோர்
??????? ???????? ???????? ????????

காப்பு
வெண்ணியூர் ஐங்கரன் வெள்விடை ஈசனின் வேள்மகனே
அண்ணினேன் நானுனை அத்தனைப் பாடுமோர் ஆசையிலே
பண்ணுமோர் பாவினில் பான்மைய ருள்செயப் பாசமுடன்
கண்களை மூடினேன் காதுகள் பற்றினேன் காப்பருளே!

பதிகம்
வெண்ணியிற் போரினை வென்றிடச் செம்பியன் வேட்பருளக்
கண்ணுத லீசனுக் காலயம் செய்தனன் கார்கழலான்
அண்ணமும் தேன்சுவை ஆரவே கன்னலின் ஆக்குவயம்
வெண்ணியில் மேவிய வேந்தனின் பேரென வெஃகினனே. ... 1

[செம்பியன் = சோழன்; கார்கழலான் = கரிகாலன்; அண்ணம் = மேல்வாய்;
ஆக்குவயம் = பெயர்; வெஃகுதல் = மிக விரும்புதல்]

அன்னையின் பேரென சௌந்தர நாயகி ஆவதுவாம்
இன்னலைத் தீர்ப்பதில் மின்னலின் வேகமே ஏந்திழையாள்
அன்னைபி டாரியால் ஆனதே கார்கழ லான்விறலே
மென்னியைக் கொள்வினை வெண்ணியில் நிச்சயம் வீழ்வுறுமே. ... 2

[மனை = மனைவி; விறல் = வெற்றி]
 
இக்குவ னந்தனில் ஈர்முனி கண்டனர் ஈசனையே
இக்குவி ருட்சமா வெண்ணியா என்றவர் ஏங்கிடவே
இக்குவே என்பெயர் வெண்ணிவி ருட்சமாம் ஈசனுரைப்
பக்கலில் கேட்கவே பண்பனும் இத்தலம் பாவினனே. ... 3

[இக்கு = கரும்பு; ஈர்முனி = இரண்டு முனிவர்கள்]

செஞ்சுடர் சந்திரன் தீர்த்தமும் தீர்த்திடும் தீவினையே
அஞ்சன வண்ணனாய் அண்ணலும் லிங்கமாய் ஆவியுற
எஞ்சிடும் தீவினை ஏதிலை யென்றவன் இன்னருள
மெஞ்ஞலன் கண்ணுற வெண்ணியில் மேவினன் வேதியனே. ... 4

[மெஞ்ஞலன் = மெய்ந்நலன் = அழகிய, வலிய மேனியை உடையவன்]
 
கருவறைச் சுற்றினில் கால்நட னைங்கரன் கங்கைமகன்
குருவுரு மூர்த்தியும் கூத்தனண் ணாமலை கொற்றவையும்
திருவருள் தந்திடும் தெய்வமாய்க் கொள்வரே தீமையெலாம்
வெருளிய ழிப்பவன் வெல்லமாய் மேவினன் வெண்ணியிலே. ... 5

[கால்நடன் ஐங்கரன் = கால் நடமாடும் நர்த்தன விநாயகர்;
குருவுரு மூர்த்தி = தட்சிணாமூர்த்தி; கொற்றவை = துர்க்கை;
வெருளி = வெருட்சி, மருட்சி, கலக்கம்]

வெளிவரும் சுற்றிலே வேலவன் ஐங்கரன் வீற்றிருக்க
நளினியின் நோக்குடன் நாள்செயும் கோள்களும் நன்மைதரும்
அளிமலர் சென்னியில் ஆரவே ஈசனும் அன்புடனே
வெளியென நின்றவன் வெண்ணியில் மேவினன் விண்ணவனே. ... 6

[நளினி = இலக்குமி; அளிமலர் = தேன்மலர்; ஆர்தல் = நிறைதல்;]
 
காலனு தைத்தவன் காலடிக் கண்ணுறும் காலமதில்
ஓலம னம்கிளர் ஒட்டுகள் பற்றுதல் ஓய்வுறுமே
வாலுமை யாளிடம் வைத்தவன் வெண்மதி மேலுறவே
வேலையின் நஞ்சினை வெள்விடை யான்கொளும் வெண்ணியிதே. ... 7

[வால் = இளமை, தூய்மை, நன்மை, பெருமை; வேலை = கடல்]

அடிமுடி தேடியே அச்சுதன் அந்தணன் ஆசறவே
அடிவிரல் வெற்பினை ஆட்டினான் பூமியில் ஆழ்த்திடவே
அடியவர் நால்வரும் ஆத்தும ஞானியர் ஆகிடவே
மிடறினிற் கார்மணி மின்னிட மேவினன் வெண்ணியிலே. ... 8

[ஆசு = ஐயம், ஆணவமலம்; மிடறு = கழுத்து]
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top