ஒரு கீர்த்தனையின் முதல் பகுதி பல்லவி. இரண்டாம் பகுதி அனுபல்லவி.
மூன்றாம் பகுதி சரணம். சில கீர்த்தனைகளில் அனுபல்லவி இராது.
சரணம் மட்டும் இருந்தால் அது சமஷ்டி சரணம் எனப் பெயர் பெறும்.
பல கீர்த்தனைகளில் பல சரணங்கள் அமைவது உண்டு.
11. "ஏதாவுனரா" - (தமிழாக்கம்)
கல்யாணி - ஆதி - தியாகராஜர்
ஆ: ஸ ரி²க³ம²ப த²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம²க³ரி²ஸ
Audio link:
பல்லவி:
; எந்த இடத்தில் நீ| ; நிலை கொண்|டாயோ||
எண்ணிப் பார்த்தும் அகப்|படவில்லை|யே||
(எந்த இடத்தில்)
அனுபல்லவி:
; சுந்தரி சீதா| கௌரி| வாகீஸ்வரி||யில்
; எந்த ஶ்ரீ தேவி ரூப|மோ கோ|விந்தா||
(எந்த இடத்தில்)
சரணம்:
; நீர் நிலம் தீ வளி | ; அகண்ட வெ|ளியிலா||
; நீண்டு எண்ணிலடங்கா லோகங்|களிலா||
; சீர் அருளும் த்யாக|ராஜன்| அர்ச்சிப்போனே||
; சிவன் மாதவன் ப்ரம்|மா இ|வர் வடிவி||லா
(எந்த இடத்தில்)
Raji Ram
மிகவும் இனிமையாக இருக்கிறது. சொல்பவர்கள் சொல்லட்டும் ! இசைக்கு மொழி தேவையில்லையென்று. மொழி புரியா இசையை மேலோட்டமாய் இரசிக்க முடியுமே தவிர ஆழ்மனத்தின் இசையாய் வெளிப்பாடாய் மொழி தெரிந்தால் மட்டுமே முழு நிறைவெய்தும்.