• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மணிக் கீர்த்தனைகளின் கனித் தமிழாக்கம் - ராஜி ராம்

59. "வரமுலொஸகி" (தமிழாக்கம்)
கீரவாணி - ரூபகம் - பட்டணம் சுப்ரமணிய ஐயர்

ஆ: ஸ ரி²க²ம¹ப த¹நி³ஸ் - அ: ஸ் நி³த¹ப ம¹க²ரி²ஸ

Audio link:


பல்லவி:
வரங்|கள் அளித்து|| கா|ப்பதுனக்கு||
அரி|தா ஜகன்|| நா|தா||

அனுபல்லவி:
பர|ம தயா||கரா சுகுணா-||
பர|ணனே|| நா|ன் கோரிய||
(வரங்கள்)

சரணம்:
; உத|ரம் வா||டா|திருக்க||
; உள்|ளம் உருக|| பல|ரிடம் நான்||
; உரை|த்தவை பா||ரதக்| கதைபோல்||
; ஒரு| சுகமும்|| கா|ணேனே||
; மதி|யில் துயரத்||தால் நொந்து||
; ஓ|ராயிரம்||முறை கோரினேன் மன்-||
; மத|னைக் காத்த|| வெங்|கடேசா என்||
மனதை| நீயே|| அறி|வாயே||

(வரங்கள்)
 
Last edited:
60. "தம்பூரி மீட்டிதவா" (தமிழாக்கம்)
சிந்துபைரவி - ஆதி (திஸ்ரம்) - புரந்தரதாசர்

ஆ: ஸ ரி¹க²ம¹ப த¹நி²ஸ் - ஸ் நி²த¹ப ம¹க²ரி¹ஸ

Audio link:


பல்லவி:
; தம்பூரா மீட்டுபவர்| ; பவக் கடல்| தாண்டிடுவார்||
; தாளங்கள் தட்டுபவர்| தேவருடன்| சேர்ந்திடுவார்||

சரணம் 1:
; சலங்கை கட்டியவர்| தீய மனதை| வென்றிடுவார்||
; கானங்கள் பாடுபவர்| ஹரி மூர்த்தியைக்| கண்டிடுவார்||
(தம்பூரா மீட்டுபவர்)

சரணம் 2:
; விட்டலனை தரிசித்தவர்|வைகுண்டமே| சேர்ந்திடுவார்||
(தம்பூரா மீட்டுபவர்)
 
"அனாதுடனுகானு" என்ற பாடலில், தான் அனாதை அல்ல என்றும்,
காப்பாற்ற ஒரு நாதன் இல்லாதவன் அல்ல என்றும் இரு பொருள்
கொள்ளும்படி அமைத்துள்ளார் தியாகராஜர்.

நான் இரண்டாவது பொருள் வருமாறு தமிழாக்கம் செய்து பாடியுள்ளேன்.
 
61. "அனாதுடனுகானு" (தமிழாக்கம்)
ஜிங்கல - ஆதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க²ம¹ப த¹நி²த¹ப ஸ் - அ: ஸ் நி²த¹ப ம¹க²ரி²ஸ

Audio link:


பல்லவி:
அநாதன் அல்ல|வே ரா|மா நான்||

அனுபல்லவி:
அநாதன் என்றும்| நீயே| என்று||
சனாதனர் மறை|யோர் சொல்|லக் கேட்டேன்||
(அநாதன் அல்லவே)

சரணம்:
நிராதரவு கண்|டு இக்| கலியின்||
நரர் அதமர் இகழ்ந்|தார் (என்)||
புராண புருஷா| ஹரன் பணி| நாதா நா-||
கராஜ சயனா| தாசன்| தியாகராஜன்||
(அநாதன் அல்லவே)


 

62. "பாவமுலோன" (தமிழாக்கம்)

சுத்த தன்யாசி - ஆதி - அன்னமையா

ஆ: ஸ க²ம¹ப நி²ஸ் - அ: ஸ் நி²ப ம¹க²ஸ

Audio link:


பல்லவி:
; நம் எண்ணங்களிலும்| ; நம் செயல்|களிலும்||
; நம் சேவை எல்லாம்| ; கோவிந்த|னுக்கே மனமே||

சரணம் 1:
; ஹரி அவதாரங்களே| ; அனைத்து ஆ|ண்டவர்கள்||
; ஹரியின் உள் அடங்கும்| ; அனைத்து| அண்டங்கள்||
; ஹரி நாமங்களே| ; அனைத்து மந்|திரங்கள்|
; ஹரி ஹரி ஹரி ஹரி| ; ஹரி என்|பாய் மனமே||
(நம் எண்ணங்களிலும்)

சரணம் 2:
;, விஷ்ணுவின் மஹிமையே| ; பல வித | கர்மங்கள்||
; விஷ்ணுவின் புகழே| ; உயர்வான |வேதங்கள்||
; விஷ்ணு ஒருவரே| ; விஸ்வத்தின்| அந்தராத்மா||
; , விஷ்ணுவே விஷ்ணுவே| ; எனத் தேடு|வாய் மனமே||
(நம் எண்ணங்களிலும்)

சரணம் 3:
; அச்யுதன் இவரே | ; ஆதியும்| அந்தமும்||
; அச்யுதன் இவரே| ; அசுரரை| அழிப்பவர்||
; அச்யுதன் இவரே ஶ்ரீ| ; வேங்கட|கிரி வாசர்||
; அச்யுதா அச்யுதா| ; சரணம் என்|பாய் மனமே||
(நம் எண்ணங்களிலும்)
 
63. "நிதி சால சுகமா" (தமிழாக்கம்)
கல்யாணி - மிஸ்ர சாபு - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க³ம²ப த²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம²க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
; நிதி நிறைந்||தால் சுக||மா ரா||மனின் சந்||
நிதி சேவை||தான் சுக||மா நிஜம்தனைச்|| சொல்லுவாய் மன||மே

அனுபல்லவி:
; ததி நவ||நீதம் பால்|| ; இவைதான் ருசி||யோ தாச-||
ரதியின்|| த்யான பஜனை|| அமுத ரசம்||தான் ருசியோ||
(நிதி நிறைந்தால்)

சரணம்:
; மன அமைதி|| எனும் கங்கை|| ; நீராடல் || சுகமா துர்||
குண விஷயம்|| எனும் கிணற்று|| ; நீராடல்|| சுகமா||
; மமதையா||லே கட்டுண்ட|| நரரின் துதி|| சுகமா நன்||
மன த்யாக||ராஜன் துதிப்||போனின் கீர்த்||தனை சுகமா||

(நிதி நிறைந்தால்)
 
64. "நீ தய ராதா" (தமிழாக்கம்)
வசந்தபைரவி - ரூபகம் - தியாகராஜர்

ஆ: ஸ ரி¹க³ம¹த¹நி²ஸ் - அ: ஸ் நி²த¹ம¹ப ம¹க³ரி¹ஸ

Audio link:


பல்லவி:
உன்| தயை|| வ|ராதா||

அனுபல்லவி:
உன்|னைத் தடுப்||பவர்| எவரோ||
உன்|னத கல்||யா|ண ராமா||
(உன் தயை வராதா)

சரணம்:
; ரா|ம ராம || ரா|ம த்யாக-||
; ரா|ஜன் மனத்||துறை|வோனே||
; ரா|மா என்|| மன| மயக்கம்||
நியா|யமா|| வே|கமாய்||

(உன் தயை வராதா)
 
"எந்தநி நே" என்று துவங்கும் பாடல்:

உலகில் பல உயர்ந்த முனிவரின் இல்லத்தரசியர் உபசரிக்க இருக்க, சபரியின்
எளிய உணவை ருசித்து, அவருக்கு ராமபிரான் முக்தி அளித்ததை, எத்தனை
அழகாகக் கண் முன் நிறுத்துகிறார், தியாகராஜர்!
 
65. "எந்தநி நே வர்ணிந்துனு" - (தமிழாக்கம்)
முகாரி - ரூபகம் - தியாகராஜர்.

ஆ: ஸ ரி²ம¹ப த²ஸ் - அ: ஸ் நி²த¹ப ம¹க²ரி²ஸ

Audio link:


பல்லவி:
; எப்|படி நான்|| வர்|ணிப்பேன்||
; ஒப்|பில்லா சப||ரியின்| ; பாக்யம்||

அனுபல்லவி:
; இப்| புவியினில்|| முனி|வர் பலரின் ||
இல்லத்|தரசியர்|| நிறைந்|திருக்க ||
(எப்படி நான்)

சரணம்:
; கண்|ணார|| ; சே|வித்து||
; க|னிந்த பழங்||களை| ; அளித்து||
; தன்| மேனியும்|| புல்|லரிக்க ரா-||
மன் திரு|வடிகளை|| தான்| ; வணங்கி ||
; இன| குல பதி||யின்| முன்| நின்று||
; இனி| பிறப்பில்லா|| ; பதத்|தை அடைந்த||
; என்|றும் த்யாக||ரா|ஜன் போற்றும்||
இவ|ரது புண்||ணியப் பேற்றினை||

(எப்படி நான்)
 
66. "எடுல ப்ரோதுவோ" (தமிழாக்கம்)
சக்ரவாஹம் - மிஸ்ர சாபு - தியாகராஜர்.

ஆ: ஸ ரி¹க³ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் நி²த²பம¹க³ரி¹ஸ

Audio link:


பல்லவி:
;, எப்ப|டி காப்||பாயோ| அறியேன்||
எம்|பரம் பொரு{{ளே| ராமா||

அனுபல்லவி:
; என்| சரித||மே | செவிக்கு||
வன்| கடூர||மே | ராமா||
(எப்படி)

சரணம்:
; பட்|டி ஆ||வினம்| போல||
; பண்|டங்கள்|| உண்டு| திரிந்தேன்||
; ஒட்|டிய|| உதரத்|துக்கா||க
உ|லோபிக||ளை| புகழ்ந்தேன்||
; துட்|டருட||னே| கூ.டி||
கெட்|ட செயல்||களை|| செய்தேன்||
; இப்ப|டி பழி|| ஏற்ற| த்யாக-||
ரா|ஜனை|| தயை|யோடு||
(எப்படி)
 

67. "எந்நாளு ஊரகே" (தமிழாக்கம்)

சுபபந்துவராளி - மிஸ்ர சாபு - தியாகராஜர்

ஆ,: ஸ ரி¹க²ம²ப த¹நி³ஸ் - அ: ஸ் நி²த¹ப ம²க²ரி¹ஸ

Audio link:


பல்லவி:
; எத்|தனை நாள்|| ஏதும்| செய்யா||து இருப்|பாயோ|| பார்க்|கலாம்||
; உந்|தனை கேட்||பார்| 3எவரும்|| ;, இல|ரா|| ஶ்ரீ| ராமா||

அனுபல்லவி:
; எத்|தனையோ|| நாட்கள்| சாகே||தபுரி|யை நீ|| ஆள|வில்லையா||
; எத்|தனையோ|| முனிவர்|களின்|| கோரிக்|கைகளை|| நிறைவே|ற்றவில்லை||யா
(எத்தனை நாள்)

சரணம்:
; சதி|யின் சொற்|களைக் கருதி|| ; சத்|பக்த| கோ|டிகளை||
; சிறப்|பாய்|| ர|க்ஷிக்க||வில்|லையா|| ; , | ராமா||
; மதி|நிறை மே||லோரை|காப்பதே|| ; என்| கொள்கை|| என|வில்லையா||
; ச|ததம்|| த்யாக|ராஜன்|| ; உன்|னையே|| நம்ப|வில்லையா||

(எத்தனை நாள்)
 
68. "காலஹரணமேலரா" (தமிழாக்கம்)
சுத்த சாவேரி- ரூபகம் - தியாகராஜர்

ஆ: ஸ ரி²ம¹ப த²ஸ் - அ: ஸ் த²ப ம¹ரி²ஸ

Audio link:


பல்லவி:
கா|ல தாமத||மா|வதேன் ஹ||ரே| சீ||தா| ராமா||

அனுபல்லவி:
கா|ல தாமதம்|| ஏன்| சத்குண||
நா|தா கரு||ணா| கரனே ||
(கால தாமதம்)

சரணம் - 1:
; சுற்|றிச் சுற்றி|| ; பற|வைகள் எல்லாம்||
; சுற்|றித் தன் மரம்|| ; நாடு|வது போல்||
; பற்றி|னேன் உன்|| ; பதக்| கமலம்||
பா|ரில் பிறந்த|| நாள்| முதலாய்||

சரணம் - 2:
; தின|மும் உலகில்|| ; அலை|ந்து திரிந்து||
; திக்குத் |தெரியாது|| ; சர|ணம் அடைந்தேன்||
; என|துடல் பொருள்|| ; உனதே| புகழ்ந்து||
த்யா|கராஜன்|| போற்|றும் ராமா||
(கால தாமதம்)

 

69. "க்ஷீர ஸாகர சயன'' (தமிழாக்கம்)

தேவகாந்தாரி - ஆதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²ம¹ப த²ஸ் - அ: ஸ் நி³த²ப ம¹க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
;, க்ஷீர ஸாகரம்| மேல் துயில்வோ|னே என்னை||
;, தீரா துன்பத்தில்| தள்ளலா|குமா ராமா||

அனுபல்லவி:
;, வாரண ராஜனை| ;, காத்திட | வேகமாய்||
; வந்தாய் என்று நான்| அறிந்தே|னே ராமா||
(க்ஷீர ஸாகரம்)

சரணம்:
; நாரீமணியின் மானம்| ; காத்தவன் | நீ என||
முன் நாளே நான்| ; அறிந்தே|னே ராமா||
; தீரன் ராம|தாஸனின்| சிறை வாசம்||
; தீர்த்தாய் நீ என| ; அறிந்தே|னே ராமா ||
; தேவி வைதேகிக்காக| ; ஆழ் கடல்| தாண்டிய||
; பார் புகழ் உன் கீர்த்தி| ; அறிந்தே|னே ராமா||
; தாரக நாமா| ;, போற்றும் த்யா|கராஜனை ||
; தயையோடு நீ| ; ஏற்றிடு|வாய் ராமா||
(க்ஷீர ஸாகரம்)


 
70. "கிருஷ்ணா நீ பேகனே" (தமிழாக்கம்)
யமுனாகல்யாணி - மிஸ்ரசாபு - வியாசராயா

ஆ: ஸ ரி²க³ப ம²க³ப த²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம²க³ம¹ரி²ஸ

Audio link:


பல்லவி:
; க்ருஷ்ணா நீ|| வேகமாய்|| ; வாராயோ||

அனுபல்லவி:
; வேகமாய்|| வாராயோ||
; முக தரிசனம்|| தாராயோ||
(க்ருஷ்ணா நீ)

சரணம் - 1:
; காலினில் எழில்|| சலங்கை ஒளிர||
; நீல மணிக்|| கங்கணம் மிளிர||
; நீல வண்||ணணே நாட்டியம்||
; நீ ஆடி|| வாராயோ||
(க்ருஷ்ணா நீ)

சரணம் - 2:
; இடையில் மணி|| ஒட்டியாணம்||
; விரல்களில்|| மோதிரங்கள்||
; அசையும் வை||ஜயந்தி மாலை||
அழகாக|| அலங்கரிக்க||
(க்ருஷ்ணா நீ)

சரணம் - 3:
; காசி பீ|தாம்பரத்தோடும்||
; கையிலே|| குழலோடும்||
; பூசிய|| சந்தன நறுமணம்||
; வீசிடும்|| மேனியோடும்||
(க்ருஷ்ணா நீ)

சரணம் - 4:
; ஜகமெல்லாம்|| உன் வாயில்||
; அன்னைக்கு|| காட்டியவா||
; ஜகமெல்லாம்|| காத்திடும்||
நம் உடுப்பி|| ஶ்ரீ க்ருஷ்ணா||

(க்ருஷ்ணா நீ)
 

Latest posts

Latest ads

Back
Top