• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மணிக் கீர்த்தனைகளின் கனித் தமிழாக்கம் - ராஜி ராம்

38. "அலகலல்லலாடக" (தமிழாக்கம்)
மத்யமாவதி - ரூபகம் - தியாகராஜர்

ஆ: ஸ ரி²ம¹ப நி²ஸ் - அ: ஸ் நி²ப ம¹ரி²ஸ

Audio link:


பல்லவி:
அலைந்|து ஆடும்|| சுருள்|களைக் கண்டு||
அரச| முனிவர் எப்||படி| பூரித்தாரோ||

அனுபல்லவி:
; எல்லை|யில்லா எழி||லோ|டு மாரீசனின்||
தொல்லை| தரும் மதம்|| அழித்|த வேளை|||
(அலைந்து ஆடும்)

சரணம்:
முனி|வர் கண் சை|கை அ|றிந்து சிவ||
; தனு|சை முறித்த|| அந்|த வேளை||
; தின|மும் த்யாக||ரா|ஜன் போற்று-||
வோ|னின் ஒளிரும்|| திரு|முகத்திலே||
(அலைந்து ஆடும்)
 
39. "விடமு சேயவே" (தமிழாக்கம்)
கரஹரப்ரியா - ஆதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க²ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் நி²த²ப ம¹க²ரி²ஸ

Audio link:


பல்லவி:
இனிய தாம்பூலம்| தரிப்பாய்| என்னை||
இனி விட்டு அகலா|தே | . ||

அனுபல்லவி:
இனியள் புவி மகள்| ; திருக் க|ரங்களால்||
இனிதே மடித்ததை| எண்ணி| எண்ணி||
(இனிய தாம்பூலம்)

சரணம்:
; ராஜர்கள் அனைவரும்| புகழ் சௌ|மித்ரி||
; ரத்னம் பதித்த | ; படிக்கம் | ஏந்தி||
; தேஜசுடனே| அருகே| நிற்க||
; தேவாதி தே| வா | . ||
; ஜாதிக்காயும்| ஏலக்|காயும்||
; ஜாதிபத்ரியும்| வெற்றிலை| பாக்கும்||
; ராஜ ராஜ| வரனே| த்யாக||

ராஜன் மிகுந்த| அன்புடன்| அளிக்கும்||
(இனிய தாம்பூலம்)
 
40. "மனசுலோனி மர்மமுலு (தமிழாக்கம்)
ஹிந்தோளம் - தேசாதி - தியாகராஜர்

ஆ: ஸ க²ம¹த¹நி²ஸ் - ஸ் நி² த¹ம¹க²ஸ

Audio link:


பல்லவி:
;, மனத்தின் மர்மங்|கள் அ|றிவாயே|| ராமா
மான ரக்ஷ|கா மர|கத வண்||ணா
(மனத்தின்)

அனுபல்லவி:
;, இன குலத்திற்|கினியன் நீ|யே அல்||லாது
எவருமே இ|லரே ஆ|னந்த மனத்||தோனே (மனத்தின்)

சரணம்:
;, அன்று அன்பு| கொண்ட அர|சனாக|| ஸதா
அன்புடன் ஆண்|டது பெ|ரிதல்ல || ராமா
இன்று கனிவு|டனே க|ரம் பற்று||வாயா
என்றும் த்யாக|ராஜன் போற்|றிப் புகழும்||நாதா
(மனத்தின்)

 
41. "நன்னு ப்ரோவு லலிதா" (தமிழாக்கம்)
லலிதா - மிஸ்ர சாபு - சியாமா சாஸ்திரிகள்

ஆ: ஸ ரி¹க³ம¹த¹நி³ஸ் - அ: ஸ் நி³த ¹ம¹க³ரி¹ஸ

Audio link:


பல்லவி:
;, என்னைக்|| காப்பாய் லலி||தா வே||கமாய்
என்றும்|| உன்னை மிக்க|| நம்பியுள்ள||வன்
அல்ல||வா பக்த|| கல்பலதி||கா

அனுபல்லவி:
; உன்னையல்லால்|| ; வேறெவர்|| ; உள்ளார்||
கதி ஜன||னி மிக|| வேகமாய் வந்||து

சரணம் - 1:
; பாராமுகம்|| காட்டாது வந்||து க்ருபை||
தரலாகா||தா குறை|| கேட்கலாகா||தா ||
; பராசக்||தி வா||னோர் தொழும்|| பாதம் உனதே||
; உந்தன்|| ; பக்தன்|| நான் அம்மா|| அனுதின||மும்
(என்னை)

சரணம் - 2
; பிரமனும்|| ஹரியும் ஹர||னும் தே||வேந்திரனும்||
போற்|றுவார்|| உன் சரி||தம்||
; புராணி||யே வா||ணியும் இந்தி||ராணியும்||
; பணியும்|| ராணி|| அரவு அணி||வோனின் ரா||ணி
(என்னை)

சரணம் - 3:
; சுமேருவின்|| மத்தியில் திகழ்||வாய்
ஸ்யாம|| கிருஷ்ணனின்|| ; சோதரி|| கௌமா||ரி ||
; உமா ஶ்ரீ || ; மீனா||க்ஷி அம்||மா சங்கரி||
; ஓ மஹா|| ; ராணி|| ரக்ஷிக்க || சமயம் இதே||

(என்னை)
 
42. "தேவி ப்ரோவ ஸமயமிதே" (தமிழாக்கம்)
சிந்தாமணி - ஆதி - சியாமா சாஸ்திரிகள்

ஆ: ஸ க²ரி²க²ம²க²ரி²ப ம²ப த² நி²ஸ் - அ: ஸ் நி²த¹ப ம²க²ரி²ஸ

Audio link:


பல்லவி:
தேவி காத்திட தருணம் இ|தே மிக| வேகமாய் வந்து||

அனுபல்லவி:
வேதனைகள் எல்லாம் தீர்த்து அருள் பு|ரி சங்|கரி காமாக்ஷி||
(தேவி காத்திட தருணம் இதே)

சரணம் - 1:
லோக ஜனனி என் மேல் தயை இல்லை|யா
நான் உன்| தாசனல்லவா||
ஶ்ரீ காஞ்சி வளர் தா|யே கல்|யாணியே||
ஏகாம்ரேசர் மனம் கவரும்| தேவியே| நான் உனக்கு||
ஏனம்மா அத்தனை| பாரமா என்| சொல் கேளாயோ||
(தேவி காத்திட தருணம் இதே)

சரணம் - 2:
நாளை காப்பேன் என்றால் கேளே|னே இனி| நான் தாளேனே||
வேளை இதுவே அருள் தா|யே கரு|ணையுடன் நீயே||
தாள் மலர்களை எக் கணமும்| நான் நினைந்து| உருகினேனே||
தாயன்போடு என்னை நீ| காத்திடக் கோ|ருகின்றேனம்மா||
(தேவி காத்திட தருணம் இதே)

சரணம் - 3:
சியாமா கிருஷ்ணனின் சோதரி கௌமா|ரி பிம்|பாதரி கௌரி||
இமாவான் செல்வியே லலிதை|யே பர|தேவதையே||
காமாக்ஷி உன்னையல்லால்| பூமியில்| அன்புடன்||
காப்பாற்ற வேறு| எவருமே இல|ரே என் தாயே||
(தேவி காத்திட தருணம் இதே)

 
43. "சலமேலரா" (தமிழாக்கம்)
மார்க ஹிந்தோளம் - தேசாதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க²ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் நி²த²ப ம¹க²ஸ

Audio link:


பல்லவி:
;, சினம் ஏனய்|யா சா|கேத|| ராமா

அனுபல்லவி:
;, அன்பு மிகுந்த| பக்தி மார்|க்கத்துடனே||
உன்னை என்றும் வர்ணித்தி|ருக்கும் எந்|தன் மீ||து
(சினம் ஏனய்யா)

சரணம்:
;, எங்கு செல்லு|வேன் நான் என்ன செய்கு||வேன்
எந்த இடத்தி|லே நான் மு|றையிடு||வேன்
ஏமாற்றத்|தோடு பொழு|து போக வேண்||டுமா
தாளேனே த்யாக|ராஜன் போற்று||வோனே
(சினம் ஏனய்யா)
 
44. "அபராதமுலன்னியு" (தமிழாக்கம்)
லதாங்கி - தேசாதி - பட்டணம் சுப்ரமணிய ஐயர்

ஆ: ஸ ரி²க³ம²ப த¹நி³ஸ் - அ: ஸ் நி³த¹ப ம²க³ரி² ஸ

Audio link:


பல்லவி:
;,பெரும் குற்றங்|களை எ|ல்லாம் மன்||னித்து
ஆதரி| ஐய|னே நான்|| செய்த

அனுபல்லவி:
;, க்ருபையோடு|என் ம|னுவினைக்||கேட்டு
கடைக்கண்ணால்| பார்க்க இ|து தருண||மே
(பெரும் குற்றங்களை)

சரணம்:
;, வேகமாக | வந்து என்னைக் கா|ப்பாய் || என்று
வே|ண்டினேன்| நானும் வேங்|கடேசா|| நீயும்
வேண்டியதை|மறுத்தால் வே|தனை தா||ளேனே
அண்டிய துயர்| தீர உன்னை நாடி||னேன்
(பெரும் குற்றங்களை)
 
45. "ப்ரோவ பாரமா" - (தமிழாக்கம்)
பஹுதாரி - தேசாதி - தியாகராஜர்

ஆ: ஸ க³ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் நி²ப ம¹க³ஸ

Audio link:


பல்லவி:
;, எந்தையே ரா|மா காப்|பதே பா||ரமா
என் ஒருவ|னை எங்கும் உறைப||வா

அனுபல்லவி:
;, உந்தன் உதரந்தனில் அண்|டங்கள் கோடி|| இல்லையா
எந்தனையும்| காப்பாய் ஶ்ரீ| வாசு||தேவா
(எந்தையே ராமா)

சரணம்
;, கலசம் பாற்|கடலில் அ|மரர் பெற||வும்
கருணையுட|னே ம|று முறை|| கிரியை
கோபி|யரைக்| காக்க தூக்|கவில்லை||யா
அருளாள|னே த்யா|கராஜன்|| தொழும்
(எந்தையே ராமா)

 
46. "ப்ரோவவம்ம" (தமிழாக்கம்)
மாஞ்சி - மிஸ்ர சாபு - சியாமா சாஸ்திரிகள்

ஆ: ஸ ரி²க²ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் நி²த¹ப ம¹ப ம¹ப க²ரி²ஸ

Audio link:


பல்லவி:
; அன்னையே|| ; தா||மதம் ஏ||னோ என்||னை கா||க்க
அன்னையே|| ; தா||மதம் ஏ||னோ அம்பா||
; நான் இனி|| தாளே||னே தே||வியே||
(அன்|னையே)

அனுபல்லவி:
; என்னை நீ|| ; அலட்சி||யம் செய்||தால் அம்பா||
; என்னால் தாங்||க இயலு||மா கா||மாக்ஷி||
(அன்|னையே)

சரணம்:
; ஸ்யாம கிருஷ்||ணன் ஸ||ஹோத||ரி அம்பா||
; ஸ்யாமளை||யே த்ரிபுர|| சுந்த||ரி அம்பா||
; இப் பூமி||யில் உன் ச||மான|| தெய்வத்தை||
; இன்னும் எங்||கும் காணே||னே காமாக்ஷி||

(அன்னையே)
 
47. "ஞானமொசகராதா" - (தமிழாக்கம்)
பூர்விகல்யாணி - ரூபகம் - தியாகராஜர்

ஆ: ஸ ரி¹க³ம²ப த²ப ஸ் - அ: ஸ் நி³த²ப ம²க³ரி¹ஸ

Audio link:


பல்லவி:
; ஞா|னம் தர||லா|காதா|| ; கரு|டகமனா|| வா|தமா||

அனுபல்லவி:
; நின|து நாம|| ஜபத்|தால் என்|| மன|து நிர்மல||மா|னது||
(ஞானம் தரலாகாதா)

சரணம்:
; பர|மாத்மா|| ஜீவாத்|மாக்களும்|| ; பதி|னான்கு|| லோ|கங்களின்||
; நர|கின்னர|| கிம்பு|ருஷர்களும்|| ; நா|ரதாதி|| முனி|வர்களும்||
; பரி|பூர்ணமாய்|| களங்|கமில்லாது|| ; நிர|தமும் சுகம்|| ; அளி|த்திடும்||
; நி|தம் பக்தன்|| தியா|கராஜன்|| ; அர்ச்சிப்|பவனே||தான்| ; என்ற||

(ஞானம் தரலாகாதா)
 
48. "விநாயகா நின்னுவினா" (தமிழாக்கம்)
ஹம்சத்வனி - ஆதி - E. V. ராமகிருஷ்ண பாகவதர்

ஆ: ஸ ரி²க³ப நி³ஸ் - அ: ஸ் நி³ப க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
விநாயகா உன்னை|யல்லால் பா|லிக்க||
வேறெவருள்ளார்| ; விக்ன|ராஜா||

அனுபல்லவி:
அனாத ரக்ஷகன்| நீயே| அல்லவா||
ஆதரித்து என்னை| காக்கலா|காதா||
(விநாயகா)

சரணம்:
; செந்தாமரைச் சர|ணங்கள்| உடையோனே||
; சந்ததம் அடியவர்| ; சங்கடம்| தீர்ப்போனே||
; சிறந்த கருணைக் கட|லே சற்|குணனே||
; ஶ்ரீ கோபாலதாஸன்| போற்றும் பா|லனனே||

(விநாயகா)
 
திரு. E. V. ராமக்ருஷ்ண பாகவதர் இயற்றிய ஒரே பாடல்,
'வினாயகா நின்னுவினா' என்ற பாடல். இதில் முத்திரை
'கோபாலதாஸ' என்று வருவதால், நம்மில் பலர் இதை

இயற்றியவர் வீணை குப்பையர் என எண்ணுகிறோம்.
 
49. "சாமானியமல்ல" (தமிழாக்கம்)
சாருகேசி - ஆதி - புரந்தரதாசர்

ஆ: ஸ ரி²க³ம¹ப த¹நி²ஸ் - அ: ஸ் நி²த¹ப ம¹க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
; சாமானியமல்ல| ; ஶ்ரீ ஹரி| சேவை||
; பாமர ஜனங்களுக்கு| சாமா|னியமல்ல||

அனுபல்லவி:
; , ஸாமஜ வரதனை| ; அன்போடு| நினைத்திட|
; தாமஸ புத்தியை| ; அடியோடு| நீக்கிட||
(சாமானியமல்ல)

சரணம் - 1:
; அந்தரங்க மாசுகள்| ; நீக்கிட| வேண்டும் - ஶ்ரீ||
; காந்தனின் சரிதம்| ; கேட்டிட| வேண்டும்||
; சந்ததம் உறுதி வேண்டும்| ; மேலோரின்| சத்குணங்கள்||
; நிரந்தரமாக| ; நினைத்திட| வேண்டும்||
(சாமானியமல்ல)

சரணம் - 2:
; அனைத்திலும் உறைபவன்| ; ஶ்ரீ ஹரி| என்றும்||
; அவனே சர்வேஸ்வரன் என்|றும் அவனே எம்| தெய்வம் என்றும்||
; அனைவரும் அணுகும்| ; புரந்தர|விட்டலனை ||
; அனவரதம் தியானித்து| ; கர்வம் அ|ழிக்க வேண்டும்||

(சாமானியமல்ல)
 
50. "ஸமுகான நில்வ" (தமிழாக்கம்)
கோகிலவராளி - தேசாதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க²ரி²ம¹ப த¹நி²த¹ஸ் - அ: ஸ் த¹நி²த¹ப ம¹ரி²க²ரி²ஸ

Audio link:


பல்லவி:
;, உன் முன்னிலை|யில் நி|ற்க இயலு||மா
தண் தாம|ரை வ|தனா| . . ||

அனுபல்லவி:
;, பூதேவி| மகள் ல|க்ஷ்மணன்|| போன்ற
உன்னத மா|னோர் அ|ன்றி எவ||ராலும்
(உன் சன்னதியில்)

சரணம்:
;, வனஜ மல|ரோனும் தே|வரும் திசை|| மன்னரும்
உன்னை பாற்|கடலில் காண இய||லாதே
அனைவரும்| கூடி மு|றையிட்டதும்|| பணி
நிறைவுற்றதே| த்யாகரா|ஜன் போற்று||வோனே
(உன் சன்னதியில்)
 
கோகிலவராளி ராகம் பற்றிய ஒரு வினோதமான குறிப்பு.
இதன் ஆரோஹண, அவரோஹணங்கள் மாலை மாற்று
(Palindrome) வடிவத்தில் காணலாம்.

ஆ: ஸ ரி²க²ரி²ம¹ப த¹நி²த¹ஸ் - அ: ஸ் த¹நி²த¹ப ம¹ரி²க²ரி²ஸ
 
What a wonderful and delightful contribution. I have heard this song as a part of Thygaraja Pancharatna renditions. I was told this song was originally from Sriranga Panchratnam.. Looking forward to learning more. Taking a gap after Sri before Ganapathini shows your mastery of Sahityam.
One Tamil Music Scholar in Youtube said the raga and pattern of this song was from Devara Pann.
 
51. "ஶ்ரீமன் நாராயண" (தமிழாக்கம்)
பௌளி - ஆதி - அன்னமையா

ஆ: ஸ ரி¹க³ப த¹ஸ் - அ: ஸ் நி³த¹ப க³ரி¹ஸ

Audio link:


பல்லவி:
ஶ்ரீமன் நாராயணா| ஶ்ரீமன் நா|ராயணா||
ஶ்ரீமன் நாராயணா நின்| ஶ்ரீ பாத|மே சரணம்||

அனுபல்லவி:
; கமலாபதியே| ; கமல வ|தனனே||
; கமலா ப்ரியனே| கமல ந|யனனே||
; கமலாசனன் அன்பனே| ; கருடக|மனனே||
; கமலநாபா நின்| பதக்கமல|மே சரணம்||
(ஶ்ரீமன் நாராயணா)

சரணம்:
; பரம யோகியர்க்கு| ; பாக்கியங்|கள் நல்கும்||
; பரம் பொருளே ப|ராத்பர|னே..||
; பரமாத்மா சி|று அணுவிலும்| உறையும்||
திருவேங்கடகிரி| தேவா| சரணம்||
(ஶ்ரீமன் நாராயணா)
 

52. "ஶ்ரீ ரகு குலமந்து" (தமிழாக்கம்)
ஹம்சத்வனி - தேசாதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க³ப நி³ஸ் - அ: ஸ் நி³ப க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
;, ஶ்ரீ ரகு| குலத்தி|னிலே உ||தித்து
சீதாவை| கைப் பற்|றிய ராமச்||சந்திரா

அனுபல்லவி:
;, ஆரண்ய| முனிவர் கோ|ரிக்கை||களை
ஆவலுடன் ஈ|டேற்ற உறு|தி பூண்ட|| ராமா
(ஶ்ரீ ரகு குலத்தினிலே)

சரணம்:
;, அரும் ரத்ன| பீடத்தி|ல் அமர்ந்||து
பெருந்தகைய|ரால் பட்|டம் ஏற்ற || ராமா
பரம பக்தர்|களை பா|லிக்கும் அ||யோத்யா
அரசனே| த்யாகரா|ஜன் வ||ணங்கும்

(ஶ்ரீ ரகு குலத்தினிலே)
 
53. "சங்கீத ஞானமு" (தமிழாக்கம்)
தன்யாசி - ஆதி - தியாகராஜர்

ஆ: ஸ க²ம¹ப நி²ஸ் - அ: ஸ் நி²த¹ப ம¹க²ரி¹ஸ

Audio link:


பல்லவி:
; சங்கீத ஞா|னமே பக்|தி யின்றி||
; சன்மார்க்கத்தை தருமோ| மனமே||

அனுபல்லவி:
;, ப்ருங்கி நடேசர்| மாருதி| குறு முனி||
; மதங்கர் நாரதர்| ; உபா|சிக்கும்||
(சங்கீத ஞானமே)

சரணம்:
; நியாயம் அநியாயம்| ; தெரிந்தும் |ஜகங்கள்||
; மாயை மயமே என்றும்| ; தெரிந்தும்| காமம் முத-||
; லாய கொடிய ஆ|று வைரிக|ளை ஜெயிக்கும்||
; தூய வழி தெரிந்தும்| ; த்யாகரா|ஜனுக்கு||
(சங்கீத ஞானமே)


 
54. "சுந்தரேஸ்வருனி ஜூசி" (தமிழாக்கம்)
சங்கராபரணம் - தேசாதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க³ம¹ப த²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம¹க³ரி² ஸ

Audio link:


பல்லவி:
;, சுந்தரேஸ்வர|னை பா|ர்த்த பின்||
;, எந்த தேவரையும் பார்க்|க மனது| வருமா||

அனுபல்லவி:
;, அந்தமில்லா அழகில்| ;, காசிக்கு| ;, சமானம்||
;, ஆக திகழும் கோ|வூரில்| ஒளிரும் எம்||
(சுந்தரேஸ்வரனை)

சரணம் - 1:
சரணங்களில் கனக சதங்கைகளும்|
கரங்களில் வைரக்| கங்கணங்|களும் திரு||
அருளும் முகத்தில் கஸ்தூரி திலகமும்|
அருமையாய் மிளிரும்| எழிலுடன் விளங்கும்|| எம்
(சுந்தரேஸ்வரனை)

சரணம் - 2:
ஒரு புறம் ப்ரமன் முதலான சுரர்கள்|
ஒருபுறம் மூப்பில்லா| நடன ம|ங்கையர்||
ஒருபுறம் தும்புரு நாரதாதியர்|
ஒருபுறம் பக்தர்கள்| யாவரும் பாடுவர்|| எம்
(சுந்தரேஸ்வரனை)

சரணம் - 3:
ராஜன் குபேரனின் அன்பனை பிறை அணி|
நாதனை கோவூரில்| நிலைப்பவனை||
ராஜஸ குணமே அற்றவனை த்யாக-|
ராஜன் பூஜிக்கும்| வெண்மலை ஈசனை|| எம்

(சுந்தரேஸ்வரனை)
 
"ஸுந்தரேஸ்வருனி" என்ற பாடல் கோவூர் பஞ்சரத்தினங்களில் ஒன்று.
இதில் மூன்றாவது சரணம் மட்டுமே பாடப்படுகின்றது.


இறைவனை இத்துணை அழகாய் வருணிக்கும் இன்னும் இரு சரணங்கள்
இருப்பதால், மூன்றையும் தமிழாக்கம் செய்து பாடியுள்ளேன்.
 
55 . "ராக சுதாரஸ" (தமிழாக்கம்)
ஆந்தோளிகா - தேஸாதி (2 களை சவுக்கம்) - தியாகராஜர்

ஆ: ஸ ரி²ம¹ப நி²ஸ் - ஆ: ஸ் நி²த²ம¹ரி²ஸ

Audio link:


பல்லவி:
;, ராக அமுத ரஸம்| ;, பானமாய்| அருந்தி||
; ஆனந்தம் பெறு|வாய் என் ம||னமே

அனுபல்லவி:
;, யாக யோக தியாக| போகப் ப|லன்கள் பெற||
(ராக அமுத ரஸம்)

சரணம்:
; சதாசிவமயமான| ; நாதோங்|கார ஸ்வரத்||தில்
சிறந்தோர் ஜீவன் முக்தரென| ; அறிவான்| த்யாகராஜன்||

(ராக அமுத ரஸம்)
 
56. "ராஜு வெடல" (தமிழாக்கம்)
தோடி - ரூபகம் - தியாகராஜர்

ஆ: ஸ ரி¹க²ம¹ப த¹நி²ஸ் - அ: ஸ் நி²த¹ப ம¹க²ரி¹ஸ

Audio link:


பல்லவி:
ரா|ஜன் பவனி|| அழ|கு காண||
வா|ரீர் கஸ்||தூரி| ரங்க||

அனுபல்லவி:
; ரா|ஜன் பரி|| ; ஏ|றி அனைத்து||
; ரா|ஜரும் பணி|| புரி|ய நவ||
; ரத்|தினங்கள்|| பதித்|த திவ்ய||
ஆ|பரணங்கள்|| அணிந்த| ரங்க||
(ராஜன் பவனி)

சரணம்:
; கா|வேரி|| ; தீ|ரந்தனில்||
கா|ணும் புனித|| ரங்|கபுரியில்||
; செல்|வம் நிறை|| சித்தி|ரை வீதி||
யில் கம்|பீரமாய்|| எழுந்|தருள||
; சே|வை கண்டு|| வா|னோர்கள்||
; பூ|வைத் தூவி|| பூ|ஜை செய்ய||
; சே|வித்து|| த்யா|கராஜன்||
; பா|டிட வை||போக| ரங்க||
(ராஜன் பவனி)
 
57. "ராம மந்த்ரவ" தமிழாக்கம்)
ஜோன்புரி - ஆதி - புரந்தரதாசர்

ஆ: ஸ ரி²ம¹ப த¹நி²ஸ் - அ: ஸ் நி²த¹ப ம¹க²ரி¹ஸ

Audio link:


பல்லவி:
;, ராம மந்திரம் ஜபிப்|பீரே| ; மாந்தரே||
;, ராம மந்திரம் ஜபிப்|பீரே....

அனுபல்லவி:
; , ராம மந்திரம் அன்றி| ; வேறு நி|னைக்க வேண்டாம்||
; சோமசேகரன் தன்| ; தேவியி|டம் உரைத்த||
(ராம மந்திரம்)

சரணம் - 1:
; எளிமையாய் உள்ளவரும்| ; உரக்கச் சொல்|லும் மந்திரம்||
; எந்த பயம் வந்தாலும்| ; உச்சரிக்கும்|மந்திரம்||
; எல்லாப் பாபங்களை|யும் போக்கிடும்| மந்திரம்||
; எளிதாக ஸ்வர்க்கத்தை| ; சேரச் செய்|யும் மந்திரம்||
(ராம மந்திரம்)

சரணம் - 2:
; சகல வேதங்களின்|சாரம் இந்|த மந்திரம்||
; முக்தி மார்க்கத்திற்கு| இதுவே மூ|ல மந்திரம்||
; பக்தி ரசத்திற்கு நல்ல| வழி காட்டும்| மந்திரம்||
; சுக நிதி புரந்தர| விட்டலனின்|மந்திரம்||

(ராம மந்திரம்)
 
58. "வாசுதேவயனி" (தமிழாக்கம்)
கல்யாணி - ஆதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க³ம²ப த²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம²க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
வாசுதேவா என்று| புறப்படும்| இந்த||
த்வார பாலகனை| காணீ|ரே ஶ்ரீ||

அனுபல்லவி:
; வாசவன் முத|லான வா|னவர் பணி||
; நேசனை கமலக் கண்|ணனை ம|னதில் எண்ணி||
(வாசுதேவா)

சரணம் - 1:
; நீர்க் காவி வண்ண| ஆடை அ|ணிந்துகொண்டு||
நெற்றியினில் திரு|மண்ணை அ|ணிந்துகொண்டு||
சுற்றிச் சுற்றி இந்த| அவையில் தி|ரிந்துகொண்டு||
பற்றிய பொற்கோலை எப்போதும்| பற்றிக்கொண்டு||
(வாசுதேவா)

சரணம் - 2:
அதிக ஒயிலாக| நடனம் ஆ|டிக்கொண்டு||
பதித பாவன|னை தான் வேண்|டிக்கொண்டு||
ராக தாள கதி|களில் பா|டிக்கொண்டு||
த்யாகராஜன் போற்று|வோனைப் பு|கழ்ந்துகொண்டு||
(வாசுதேவா)
 
Last edited:

Latest posts

Latest ads

Back
Top