,
இணை பிரியாச் சொற்கள் இவை என்று சொல்ல முடியாது.
ஆனால், இவற்றில் முரண் தொடை என்று கூறக் கூடிய ஒன்றுக்கொன்று மாற்றான சொற்களும், ஒன்றோடு ஒன்று பொருந்தி நிற்கும் ஆனால் இரு வேறு பொருளைத் தரும் சொற்களும் உள்ளன.
1. அண்டை அயலார் - இதிலே அண்மை என்பது அருகாமையையும், அயல் என்பது நெருக்கமற்ற, தொலைவிலுள்ள என்ற பொருளையும் தரும். ஆகவே, இது முரண் தொடையாகும்.
2. அந்தியும் சந்தியும், - அந்தி என்றாலே மாலைப் பொழுது என்று பொருள். சந்தி என்றால், அது இங்கே காலையைக் குறிக்கிறது. எனவே, இதுவும் முரண் தொடையாகும்.
3. அல்லும் பகலும், - அல் என்றால் இரவையும், பகல் என்பது பகற்பொழுதையும் குறிப்பன. சொல்ல வேண்டுமா, இதுவும் முரண் தொடை தானே?
4. அருமை பெருமை, - அருமை என்றால், அரிய, சிறந்த பண்பு என்று பொருள். பெருமை என்றால், உயர்ந்த பண்பு என்றும் பொருள். இச்சொற்றொடர், complement ஆக விளங்கும் இரு வேறு சொற்களை இணைக்கிறது.
5. அறமும் மறமும் - அறம் என்றால் தருமம் என்றும் மறம் என்றால் வீரம் என்று ஒரு பொருளும், அறமல்லாதது என்று ஒரு பொருளும் உண்டு. எனவே, இதுவும் முரண் தொடை ஆகும்.
6. அருளும் பொருளும், - அருள் என்பது இறைவனுடைய கருணையையும், பொருள் என்பது செல்வத்தையும் குறிப்பன. இது முரண் தொடை என்றும் கொள்ளலாம்; அல்லது செல்வம் என்பதன் இரு வேறு பொருள்களாகவும் கொள்ளலாம். (அருட்செல்வம், பொருட்செல்வம்)
7. அடி தடி - தடி இல்லாமல் அடி ஏது?
8. ஆடல் பாடல் - ஒன்றோடு ஒன்று இசைந்த இரு செயல்கள்.
9. ஆடியும் பாடியும்,- இதுவும் மேற்சொன்னது தான்.
10. ஆடை அணி, - ஆடை என்பது மானத்தைக் காக்கின்ற மேலாடையையும், அணி என்பது உடலுக்கு அழகு செய்யும் அணிகலன்களையும் சுட்டுவன. (அணி எல்லாம் ஆடையின் பின் தானே?)
As I remarked at the opening, the two words in each pair can occur separately too. Hence they are neither இரட்டைக்கிளவி nor அடுக்குத் தொடர்.