• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மயக்கி மருட்டும் சில சொற்கள்.

Status
Not open for further replies.
தமிழில் உபயோகத்தில் உள்ள பாரசீக வார்த்தைகள் சில:

1. ஜாகீர் = அரசு பரிசாக அளித்த நிலம்.

2. சர்க்கார் = அரசு, அரசன்.

3. ஜமக்காளம் = தடித்த தரை விரிப்பு.

4. ஜமீன் = நிலம்.

5. ஜமீந்தார் = நிலச் சுவான்தார்.

6. கெஜம் = மூன்று அடி நீளம் = 36 அங்குலம்.

7. கிஸ்மிஸ் = உலர்ந்த திராட்சை.

8. குலாப்ஜான் = ஒரு வகை இனிப்பு.

9. குல்கந்து = ரோஜா இதழ்களின் தயாரிப்பு.

10. குமாஸ்தா = எழுத்தர்.
 
11. குங்குமம் = சிவப்பு நிறச் செடி.

12. குஸ்தி = குத்துச் சண்டை.

13. லுங்கி = ஆண்கள் இடுப்பில் அணியும் ஆடை.

14. நவ்ரோஜ் = ஒரு ராகத்தின் பெயர்.

15. பஜார் = கடை.

16. பந்தோபஸ்து = பாதுகாப்பு ஏற்பாடு.

17. பீங்கான் = சுட்ட வெள்ளைக் களிமண் பாண்டம்.

18. பரங்கி = ஒரு பெரிய ஆரஞ்சு நிறம் உள்ள காய், வெள்ளையர்.

19. பிராது = முறையீடு.

20. பிஸ்தா = ஒரு விலை உயர்ந்த பருப்பு.
 
தமிழில் உபயோகத்தில் உள்ள பாரசீக வார்த்தைகள் சில:

21. புதினா = மணமுள்ள தழை.

22. ரசீது = பணம் செலுத்தியதற்கு அத்தாட்சி.

23. ரஸ்தா = சாலை.

24. உருமால் = முண்டாசு.

25. தமாஷா = வேடிக்கை, வினோதம்.

26. தம்புரா = ஒரு தந்தி இசைக் கருவி.

27. தர்பார் = சபை.

28. தஸ்தாவேஜி = பத்திரங்கள்.

29. தயார் = உபயோகிக்கலாம்.

30. தர்கா = தொழுகை நடத்தும் இடம்.
 
31. வாபஸ் = திரும்பப் பெறுதல்.

32. வஸ்தாத் = பயில்வான்.

33. பினாமி = இன்னொருவர் பெயரில்.

34. பீபீ = பீவீ = மனைவி.

35. பிரியாணி = காய் அல்லது கறியுடன் சமைத்த சோறு.

36. புர்க்கா = தலை முக்காடு.

37. காசு = நாணயம்.

38. சர்க்கா = ராட்டை.

39. சைனா = பீங்கான் சாமான்.

40. திவான் = கூடும் இடம்.
 
தமிழில் உபயோகத்தில் உள்ள பாரசீக வார்த்தைகள் சில:

41. பார்ஸீ = ஒரு இன மக்கள்.

42. பிரங்கி = வெள்ளையர்கள்.

43. மொஹரா = தங்கக்காசு.

44. ஹிந்தி = ஒரு மொழியின் பெயர்.

45. ஹிந்து = ஒரு இனத்தின் பெயர்.

46. ஹிந்துஸ்தான் = ஒரு நாட்டின் பெயர்.

47. பைஜாமா = லூசான கால் அங்கி.

48. ஜுஜுபி = பேரீச்சை போன்ற பழம் உள்ள மரம்.

49. காபூல் = ஒரு நாட்டின் பெயர்.

50. காபூலீ = காபூல் நாட்டைச் சேர்ந்த.
 
'ஜுஜுபி' யின் பொருளே வேறு, இன்று!

ஒருவேளை அந்த மரத்தின் பழம் பயன் தராதோ? :noidea:
 
ஜுஜுபீயின் இன்றைய பொருளும் இதுவே தான்.

"ஊதித் தள்ளிவிடுவேன்" என்ற சொல்வது போல...
"பேரிச்சம் பழம் தின்பதைப்போல சுலபமானது" என்பது போல...
பொருளில் தான் நான் அறிந்த வரையில் இன்று வருகின்றது.

வேறு பொருளும் இருந்தால் தெரிவியுங்கள்.
எல்லோரும் அதனால் பயன் அடைவார்கள்.
 
அம்மா, ஒரே ஒரு திருத்தம்.

காசு என்பது பாரசீகச் சொல் அன்று. அது, தமிழ்ச் சொல்லே. இச்சொல்லில் இருந்து தான், cash என்னும் ஆங்கிலச் சொல்லே பிறந்ததாக Encyclopedia Britanica வே எடுத்துரைக்கிறது.
 
Dear sister,

'ஜுஜுபி' என்பது 'மிக எளியது' என்ற பொருளிலேயே இன்று வருகிறது!

'பேரீச்சம்பழம் தின்பதுபோல', என்ற உவமை எனக்குப் புதியது!

Raji Ram :happy:
 
Last edited:
The word is variously attributed. Some claim that the word "cash" comes from the modern French word caisse, which means (money) box, from the Provençal word caissa, from the Italian cassa, from the Latin capsa all meaning box. In the 18th century, the word passed to refer to the money instead of the actual box containing it. [1] It might be derived from Malayalam word Kaash - കാശ് which means Cash. Another claim is that it was derived from Tamil word kasu - காசு meaning a coin by East India Company.


Many words in many languages look alike and sound alike and must have emerged from a common ancestor! The golden period was when all the languages were the infants of the same mother, long ago.


Some words start from Sanskrit pass through several other languages and end up in a popular language like English. So if we trace it back to its origin, it can be seen as derived out of more than one language.

thank for the feedback Mr. Pannavalan. :)
http://en.wikipedia.org/wiki/Cash#cite_note-1
 
பலா'வைப்போல உரித்துத் திறக்கவேண்டாம்.:preggers:

'மா'வைப் போல நறுக்கி உண்ண வேண்டாம்.
:hungry:

'வாழை'யைப் போல தோலைக்கூட உரிக்க வேண்டாம்.
:p

சோம்பேறிகளுக்கு ஏற்ற சொகுசான பழம் பேரீச்சையே! :)
 
ஆனால், கையெல்லாம் 'பிசுபிசு'வென்று ஆகும். கொட்டையை வேறு துப்ப வேண்டும். சில சமயம், நார் போன்ற மெல்லிய பொருளொன்று தோலின் மேல் அகப்படும். சாப்பிடும் வேளை, அது சற்றே எரிச்சலை உண்டு பண்ணுவதும் உண்மை. (நான் பேரீச்சம் பழத்துக்கு எதிரி அல்ல).
 
Good health, prosperity, good sleep and a good feast :sleep:

must be occasionally disturbed to make you enjoy them more! :love:

So the thin skin and the seeds of dates only add to the charm :rolleyes:

by disturbing slightly the pleasure of eating them! :hungry:
 

சோம்பேறிகளுக்கு ஏற்ற சொகுசான பழம் பேரீச்சையே! :)
என்னைப் பொறுத்தவரை, சோம்பேறிகளின் பழம், கொட்டையில்லா திராக்ஷை!

கடலையைக் கொறிப்பதுபோல, ஒன்றன்பின் ஒன்றாக உண்டு மகிழலாம்!!

:bump2: . . . :thumb:
 
51.காக்கி = மண் நிறம்.

52. கோஹினூர் = ஒளிச்சிகரம்.

53. கொத்தவால் = போலிசின் தலைவர்.

54. குர்தா = லூசான சுகமான ஒரு மேலங்கி.

55. லுங்கி = பருத்தியால் ஆன இடுப்பில் அணியும் ஆடை.

56. மேஜிக் = மாயாஜாலம்.

57. முஸ்லிம் = ஒரு இனம்.

58. நான் = ஒரு வகை ரொட்டி.

59. ஆரஞ்சு = ஒரு கலர், ஒரு பழம்.

60. பனீர் = பாலில் இருந்து எடுத்த சீஸ்.
 
தித்திக்கும் பேரீச்சைக்கு நான் கேரண்டி!
தித்திக்கும் திராக்ஷைக்கு யார் கேரண்டி?

அதைப் படைத்த பிரமனாலேயே கூற முடியாது
அது தித்திக்குமா அல்லது புளிக்குமா என்று!
 
61. பார்ஸீ = பாரசீகத்தின் மக்கள்.

62. பீச் = ஒரு பழ வகை.

63. ரோஸ் = ரோஜா.

64. சமோசா = ஒரு சிற்றுண்டி.

65. சரோட் = தந்தி இசைக்கருவி.

66. சேர் = ஒரு எடையின் அளவு.

67. சிப்பாய் = போர் வீரன்.

68. ஷா = பாதுஷா = மன்னன்.

69. ஷாமியானா = துணிப் பந்தல்.

70. ஷால் = போர்த்திக் கொள்ளும் மெல்லிய கம்பளி.
 
Madam,
I curious to know if u r a tamil pandit. I'm looking for a tamil pandit to learn gain deep knowledge in tami. I''m a tamilian who had studied tamil till 12th. In that case would you pls help in this? thanks.
 
Dear Sakambari,

I studied Physics, Mathematics and Chemistry college. Tamil was my second language.

We had a beautiful lecturer (both to look at and in teaching). Her name was Miss. Rajam - may be a few years older than me. She inspired me to study well and secure a First class in Second language...some thing very rare in the 1960s!

I still remember her fondly and thank her for inspiring the whole class but I certainly benefited from it.

We never know from where and when we will receive a spark to set off our determination to win!

with best wishes,
Visalakshi Ramani.
 
Dear Sakambari,
To improve your knowledge in Tamil, read books of good quality regularly. Nothing helps us to evolve better than wide reading and deep reading.
good luck. Where there is a will there is a way.
Mrs. V.R.

 
Tamil words of Persian Origin

71. சிதார் = ஒரு இசைக் கருவி.

72. தாசில்தார் = வரி வசூல் செய்யும் அதிகாரி.

73. டர்பன் = முண்டாசு, தலைப்பாகை.

74. ஜர்தா = லாகிரி வஸ்து.

75. சந்தனம் = மணமுள்ள ஒரு மரம்.

76. லெமன் = எலுமிச்சை.

77. நமாஸ் = தொழுகை
 
Look alike and sound alike words in Tamil.

# 1.
அக்கரை = எதிர்ப்பக்கம்.
அக்கறை = ஆர்வம்.

# 2.
அக்கரம் = முதல் எழுத்து .
அக்காரம் = சர்க்கரைப் பொங்கல்.

# 3.
அகங்கரி = கர்வம் கொள்.
அகங்காரி = முன்கோபி.

# 4.
அகவு = மயில் போல ஒலி எழுப்பு.
அகவை = வயது.
# 5.
அகரம் = 'அ'
அகாரம்= 'அ'
 
# 6.
அட்சி = கண்.
ஆட்சி = பரிபாலனம்.
# 7.
அட்சம் = கண்.
அச்சம் = பயம்.
# 8.
அடிசில் = சோறு.
அட்டில் = சமையலறை.
#9.
அடிப்படு = கீழ்ப்படி.
அடிபடு = அடிக்கப்பட்டு.
# 10.
அடியிடு = அடி வைத்து.
அடியோடு = மொத்தமாக.
 
#11.
அடுக்களை = சமையல் அறை.
அடுக்குள் = அறைக்குள் இன்னொரு அறை.
# 12.
அண்டபுரட்டன் = மோசக்காரன்.
அண்டப் புளுகன் = பெரும் பொய்யன்.
# 13.
அணிமா = ஒரு சித்தி.
அணிமை = சமீபம்.
# 14.
அந்தம் = முடிவு.
அந்தன் = குருடன்.
# 15.
அபிநயம் = நாட்டியச் செய்கைகள்.
அபிநவம் = புதுமையானது.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top