• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!


விவாக ரத்து இவ்வளவு எளிதா?

இது மனிதனைப் பற்றிய செய்தி அல்ல! மனிதன் உருவாக்கிய இதிஹாஸத்தில் ஒரு காட்சி....


சென்ற ஞாயிற்றுக் கிழமை 'ராம ராஜ்ஜியம்' என்ற ஒரு திரைப்படம் பார்த்தேன். Graphics உபயத்தால், அசத்தாலான

மாளிகைகள், கூட கோபுரங்கள் மற்றும் பட்சிகள் பறக்கும் காடு என்று பிரம்மாண்டமான தயாரிப்பு!



நான் சொல்ல வரும் விஷயம் சீதா தேவி காட்டில் விடப்படும் காட்சிதான். முனிவர்களை சந்திக்க விருப்பம் தெரிவிக்கும்

கர்ப்பிணியான சீதா தேவியிடம், அதற்கு விரைவில் அழைத்துப் போவதாக ராமர் தெரிவிக்கின்றார். அன்றே ஒரு ஒற்றன்

மூலம் சீதையைப் பற்றி அவதூறாக அந்நாட்டின் மக்கள் பேசுவதை அறிந்து, அவளைத் துறக்க முடிவு செய்கின்றார்! மறு

நாள் விடியலில், சீதா தேவியைக் காட்டின் ஏதேனும் முனிவரின் ஆச்ரமத்தின் அருகில் விட்டு வருமாறு லக்ஷ்மணனிடம்

கூறுகின்றார். மறு நாள் அதேபோல லக்ஷ்மணன் செய்கிறான்! எளிய உடையில் கானகம் வந்த சீதையிடம், 'அண்ணன்

உங்களைத் துறக்க முடிவு செய்துவிட்டார்!' என்கிறான்! அக்னி சாக்ஷியாக மணந்த மனைவியை, நாட்டின் நலனைக்

காரணம் காட்டித் துறப்பது என்ன கொடுமை! விவாக ரத்து அந்தக் காலத்தில் இவ்வளவு எளிதா? :pout:

 
I admire the smart mother and disgusted with the ungrateful son.. there are so many stories.. someone I know adopted his brother's son and after all the years, the mother remains and she who lived like a queen has been pushed into old age home where it is not the best of all places.. it is nothing she was used to.. but she seems to prefer staying back there, only because she does not have to listen to this ungrateful son's curse and angry words day in and out " when are you going to die" he tried to break her spirit by isolating her away from people who care for her and I admire her guts to face all that has happened to her..

why can't she disown him, and leave her moneys to charities? that should bring him back with his tail between his legs. no?
 

குலமும், குணமும்!


'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்று சொல்லி, தாழ்ந்த குலத்தோரை இளக்காரம் செய்வது உலக வழக்கம். ஆனால், ஒரு

தொழிலாளி எங்களிடம் வைத்திருந்த அன்பும், அபிமானமும் காட்டும், குலத்துக்கும், குணத்துக்கும் தொடர்
பில்லை என்பதை!


'கருப்பையா' அவரது பெயர். ஆளும் அதே நிறம்தான். 1984 - ம் ஆண்டு எங்கள் இனிய இல்லம் கட்டும் சமயம் அறிமுகமானவர்

இவர். 'கண்ணு' என்றுதான் என்னை அழைப்பார். எங்கள் குடும்பத்தின் மீது அளவில்லாத மதிப்பும், பாசமும் காட்டியவர். என்ன

அவருக்கு என்று தனியாகச் செய்தோம்? பார்த்த சமயமெல்லாம், 'நல்ல இருக்கீங்களா, கருப்பையா?' என்ற விசாரிப்பு மட்டுமே!

மண் வேலைக்கென்றே பிறந்தவர் போல, மண்ணில் கடினமாக உழைப்பார். கொத்தனாரின் எடுபிடிதான் அவர்.
நான் கடைக்குச்

செல்லும் வழியில் அவரின் வீடு. வீட்டு வாசலில் அமர்ந்த்திருந்தால், என்னவரைப் பற்றியும், மகனைப் பற்றியும் விசாரிப்பார்.

மகனின் திருமணம் ஆனவுடன், அவருக்கும் ஒரு புது வேஷ்டி சட்டை அளித்தேன். அதற்கு எத்தனை சந்தோஷப்பட்டார் என்று

எழுதி வர்ணிப்பது கடினம்.



சென்ற வாரம் கடைக்குச் செல்லும் வழியில், ஒரு 'போஸ்டரில்' அவரின் படம்! கண்ணீர் அஞ்சலி!! அடடா! அதற்கு இரண்டு நாட்கள்

முன்புதான் என்னிடம் பேசிக்கொண்டே வந்தார்! அனாயாச மரணம்தான்! அவர் வீட்டில் வேறு யாரையும் எனக்குத் தெரியாது.

எனவே, ஆறுதல் யாரிடம் சொல்வதெனவும் தெரியவில்லை.

ஆண்டவனை வேண்டினேன் அவரது ஆத்மாவின் சாந்திக்காக! :pray2: . . . :rip:

dear raji,

i am reading this rather late.

is there any need to know someone, to share grief on bereavement? why dont you just knock on the door, introduce yourself and express to the family, all the nice things that you wrote about karuppiah. it would gladden a sodden heart and be a balm on the wounds.

that much i am quite sure.

when dad died, i had a couple of strangers dropping in, on reading of his demise from the papers. and their words of appreciation and kind words, went a long way to assuage my mother's grief, than what i thought it would.
 
why can't she disown him, and leave her moneys to charities? that should bring him back with his tail between his legs. no?
This will happen only if the mother is rich, Sir!

Many mothers are dependent on their sons and they are never happy in their old age!
 

கனவிலும் நினைக்காதே, கணவனே!

என் நெருங்கிய தோழிக்கு 'படுத்தும்' கணவன் அமைந்தான். எத்தனை வேலை செய்தாலும்,

செய்யாத ஒன்றைச் சுட்டிக் காட்டி வைதிடுவான்! அடிக்கடி அவன் சொல்லும் வசனம் இது:

'நான் உன்னை டைவர்ஸ் செய்துவிடுவேன்!' சின்ன வயதில் மிகவும் வருத்தப்படுவாள் தோழி.

என்னால் முடிந்த அளவு நான் அவளைச் சமாதானப்படுத்துவேன்.



அந்தக் கணவனோ
அறுபது வயதைத் தாண்டிய பின்னும் 'அந்த' வசனத்தை விடுவதாக இல்லை!

இந்த முறை, 'நான் சொல்லுவதைக் கேட்காவிட்டால், வக்கீல் நோட்டீஸ் வரும்!' என்று மிரட்டியதாகச்

சொல்லி வருந்தினாள். 'நீ
வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாலும், அதில் நான் கையெழுத்துப் போடுவதாக

இல்லை! அதனால், இந்த ஜன்மத்தில் வேறு பெண்ணைத் திருமணம் செய்யலாம் என்று கனவிலும்

நினைக்காதே, கணவனே!' என்று பதில் கூறச் சொன்னேன்! :sleep:



இத்தனை ஆண்டு தாம்பத்தியத்திற்குப் பின்னும், கீறல் விழுந்த L P Record போலச் சொன்னதையே

சொல்லும் மஹானுபாவர்களை, எப்படித்தான் சமாளிப்பது?
:boink:
 

உணவே உலகம்!

ருசியான உணவு உண்பதே பிறவிப் பயன் என்று வாழும் பிரஹஸ்பதிகள் பலர் உண்டு! எங்கு எந்தப்

புதிய உணவைக் கண்டாலும், அதை உடனே சுவைத்து மகிழ்வதே அவர்களின் பிரதான வேலை!


எங்கள் சுற்றத்தில் ஒருவர் அப்படித்தான்! வீடு வீடாகச் சென்று, கிடைப்பதை உண்டுவிட்டு, அந்த

இல்லத்தரசியிடம், 'என் மனைவியின் கைப் பக்குவமே தனி! அவளைப் போல யாருமே சமைக்க

முடியாது!' என்று விமர்சனம் வேறு செய்வார். இவர் யார் வீட்டுக்குக் விருந்தாகச் சென்றாலும், அந்த

இல்லத்தரசிக்கு திகில்தான்!



மனைவியின் மறைவுக்குப் பின், மனிதர் படாத பாடுபடுகின்றார். உணவுக் கட்டுப்பாட்டில் தன்

கணவனை வைக்கும் குணமுள்ள இரு மருமகள்கள். அவர்களின் சமையலைக் குறை கூறுவதால்,

அவர்களுடன் மனக் கசப்பு! தன் மிக முதிய வயதில், ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கிறார்.


பெங்களூருக்கு வரும்போது அவரைப் பார்ப்பதாகச் சொன்னவுடன், 'நீ ஹோட்டலில் தங்கினால்

சொல்லு. அங்கே நானே வருகிறேன்!' என்று கூறுகின்றார்.


உணவைப் பற்றியே சிந்தனை முழுதும் இருந்தால், எங்கிருந்து மன நிறைவும் மகிழ்வும் வரும்? :noidea:
 

இது எப்படி
ச் சாத்தியம்?

நேற்றைய நாளிதழ்களில் ஒரு செய்தி! ஐம்பதுகளைத் தாண்டிய ஒரு மங்கையின் தொண்டையில்

ஒரு வாரமாகக் கிச்சு கிச்சு மூட்டியதாம் ஒரு குட்டிப் பூரான்! தான் உண்ட சிக்கனின் எலும்புதான்

குறுகுறுக்கிறது என அவள் எண்ணினாளாம்! பின் காது மூக்கு தொண்டை நிபுணர் நாடியதும், அந்த

இரண்டு அங்குலப் பூரான் வெளியில் எடுக்கப்பட்டதாம்!



எனக்கு
ச் சில ஐயங்கள்! எப்படி அந்தப் பெண்ணின் உணவில் உயிருள்ள குட்டிப் பூரான் நுழைந்தது?

எப்படி அவள் அதை கவனிக்காமல் உள்ளே தள்ளினாள்? எப்படி அது கடிபடாமல் உள்ளே சென்றது?

எப்படி தொண்டைக் குழியிலேயே நெளிந்தவாறு ஒரு வார காலம் இருந்தது? எப்படி அது அந்தப்

பெண்ணைக் கடிக்காமல் விட்டது?

எல்லாம் 'அவன்' செயல்தானோ? :pray2:

Source: Live centipede removed from woman's throat
 
dear raji,

could not have that pooraan gestated from the stomach or inside her body somewhere? maybe she swallowed an egg, and the pooraan genes are strong enough to resist the attack of human immuno systems, and flourish within.

after all we poochees and puzhus inside our intestines and stomach, that we pass off through our bottoms? maybe the pooraan lost his way, and ended up in the lady's throat?
 

விவாக ரத்து இவ்வளவு எளிதா?

இது மனிதனைப் பற்றிய செய்தி அல்ல! மனிதன் உருவாக்கிய இதிஹாஸத்தில் ஒரு காட்சி....


சென்ற ஞாயிற்றுக் கிழமை 'ராம ராஜ்ஜியம்' என்ற ஒரு திரைப்படம் பார்த்தேன். Graphics உபயத்தால், அசத்தாலான

மாளிகைகள், கூட கோபுரங்கள் மற்றும் பட்சிகள் பறக்கும் காடு என்று பிரம்மாண்டமான தயாரிப்பு!



நான் சொல்ல வரும் விஷயம் சீதா தேவி காட்டில் விடப்படும் காட்சிதான். முனிவர்களை சந்திக்க விருப்பம் தெரிவிக்கும்

கர்ப்பிணியான சீதா தேவியிடம், அதற்கு விரைவில் அழைத்துப் போவதாக ராமர் தெரிவிக்கின்றார். அன்றே ஒரு ஒற்றன்

மூலம் சீதையைப் பற்றி அவதூறாக அந்நாட்டின் மக்கள் பேசுவதை அறிந்து, அவளைத் துறக்க முடிவு செய்கின்றார்! மறு

நாள் விடியலில், சீதா தேவியைக் காட்டின் ஏதேனும் முனிவரின் ஆச்ரமத்தின் அருகில் விட்டு வருமாறு லக்ஷ்மணனிடம்

கூறுகின்றார். மறு நாள் அதேபோல லக்ஷ்மணன் செய்கிறான்! எளிய உடையில் கானகம் வந்த சீதையிடம், 'அண்ணன்

உங்களைத் துறக்க முடிவு செய்துவிட்டார்!' என்கிறான்! அக்னி சாக்ஷியாக மணந்த மனைவியை, நாட்டின் நலனைக்

காரணம் காட்டித் துறப்பது என்ன கொடுமை! விவாக ரத்து அந்தக் காலத்தில் இவ்வளவு எளிதா? :pout:


Raji Madam

After a long time , i just casually went through your Vanna Vanna Manithargal.

Ramayana is not a story written for time pass. It is one of the Greatest Epics.
Intricacies and lessons from this Great Epic is beyond our knowledge.

Let us assume that Sri Rama did not send Ma Sita to forest and told his subjects not to doubt her Character, Do you think the people would have accepted it? The person who blemished Ma Sita would spread the thought that since MA Sita is His wife, Rama is not believing others.
If Lakshmanan had told this Rama could have explained to him, but if a stranger tells this, Rama had to act according to Raja Dharma.
What Rama did was to uphold the accepted standards of ideal king prevalent at that time THRETHA YUGA; It might not be acceptable to modern man who is rarely bothered about Dharma.

It was not a Divorce but a Grand Design set up by Gods themselves.

What did Lord Ram gain by sending Mata Sita to the forest? Nothing but pain and misery and he is criticized for the act even after thousands of years
.

I know you will have an answer, but will that be from the point of view of that period?


 
Last edited:
dear raji,

could not have that pooraan gestated from the stomach or inside her body somewhere? maybe she swallowed an egg, and the pooraan genes are strong enough to resist the attack of human immuno systems, and flourish within.

after all we poochees and puzhus inside our intestines and stomach, that we pass off through our bottoms? maybe the pooraan lost his way, and ended up in the lady's throat?
Dear Kunjuppu Sir,

Nice imagination. And it might be true!

But one more doubt!! Why did it get stuck, after travelling all the way up? :D
 

Dear P J Sir,

Thanks for your feed back. I know that i
n the previous ugAs 'dharmA' was different! And many deeds

which confuse us have happened in both the epics. In MahAbhAratham most of the descendants were

NOT born to their official parents! Our grandfather has told many episodes from MahAbhAratham when

we were kids but never told how Santhanu got his sons, grandsons and greatgrand sons!

You know the reason!! :)

 

Recently I saw the movie 'RamAyaNam' with graphics. I was very upset when Sita mA was left in the forest,

without prior notice. If a queen has such a plight, what will it be for others? I could NOT digest it though I know

the story very well. Visual effect is more, I realized that day! Even now I think King Rama should have had the

courage to tell his people that Sita mA did the 'agni pravEsam' and came out untouched by fire! :angel:
 

இப்பொழுதுதான் தெரிகிறதா?



நல்ல பணியில் உள்ள கணவர்; அன்பான சாந்தமான மனைவி; ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்

என்ற பழமொழிப்படி இரு பிள்ளைகள். கணவர் என்றுமே மனைவியைப் போற்றிப் பேசவே மாட்டார். அவளும்

அதை ஒரு பொருட்டக நினைத்ததே இல்லை.



மகனும், மகளும் திருமணம் முடிந்து வெளி நாடு சென்ற பின், மனைவி தன் சகோதரிகளுடன் சேர்ந்து வாழ

விரும்பி, தன் பாரம்பரியமான வீட்டை மூன்று அபார்ட்மென்ட்களாக மாற்ற முடிவெடுத்தார்! நாம் ஒன்று

நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது நிஜமாயிற்று!



மனைவிக்குப் படிப் படியாக ஒவ்வொரு அவயமாகச் செயலிழக்க ஆரம்பித்தது! ஏ
தோ நரம்பு மண்டலக்

கோளாறு என்று அறிவிக்கப்பட்டது! இன்று அவளின் நிலைமை மிகப் பரிதாபம்தான். கண் சிமிட்டுவதும்,

லேசாகச் சிரிப்பதும் தவிர வேறு ஒன்றுமே முடியாமல் இருக்கிறாள்!



இப்போது கணவர், தன் நண்பர்கள் பார்க்க வந்தால், 'இதோ அவள் சிரிக்கிறாள்! இதோ அவள் கண் சிமிட்டி

ரசிக்கிறாள்!' என்றெல்லாம் சொல்லி, அவளை மகிழ்விக்க முனைகி
ன்றார். எனக்கு என்ன தோன்றியது

என்றால், மனைவி நல்ல உடல் நிலையில் இருந்த சமயம், அவளைக் கொஞ்சம் பாராட்டி இருந்தால்,

அவள் இத்தனை ஆண்டுகளின் எத்தனை சந்தோஷித்து இருப்பாள்!!


'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்', என்று தோன்றியது! :pout:
 

திரும்பிப் பார்க்காதவர்கள்!



வாழ்வில் என்ன சாதித்தோம் என்று திரும்பிப் பார்ப்பதைப் பற்றிய
து அல்ல இந்தக் குறிப்பு! வெளியில் அதிகம்

சொல்ல முடியாமல் படுகின்ற தவிப்பு! கழிவறையை உபயோகித்த பின், வெளியேறும் முன், திரும்பிப் பார்க்காத

நபர்களைச் சொல்லுகிறேன்!


விமானப் பயணங்களில், கழிவறை மிகவும் சிறியதாக இருக்கும்; மடக்குக் கதவுகள்; மிகக் குறைந்த நீர் உபயோகம்.

பல முறை உள்ளே நுழைய முடியாதபடி அருவருப்பான காட்சிகளைக் கண்டுள்ளேன்! விமானப் பயணிகளே இப்படியா?

அடுத்த நபர் வரும்போது, தான் உபயோகித்த அறை சுத்தமாக இருக்க வேண்டாமா?



அமெரிக்காவில், என்னவரின் தங்கை வீட்டு விசேஷம்! பல மெத்தப் படித்த மேதாவிகளின் குடும்பங்களின் வரவு!

எல்லாம் சரிதான். ஆனால் இவர்களில் பலர் திரும்பிப் பார்க்காத ரகத்தினர்; அதிர்ந்துதான் போனேன்
நான்
! எப்போது

பார்த்தாலும் வாஷ் பேஸின்களில் வெற்றிலைத் துப்பல் / சாப்பாட்டுத் துகள்கள். டாய்லெட் பற்றிக் கேட்கவே வேண்டாம்!

எப்படி இவர்களால் இங்கெல்லாம் அசிங்கப்படுத்த முடிகிறது என்று வியக்க வைத்திடுவார்!



திருமண நாள் முதல், தினம் கழிப்பறையை சுத்தப் படுத்திவிட்டுக் குளிப்பதே என் வழக்கம். ஆனால் அந்த விசேஷத்தன்று

ஆறு முறைகள் 'அந்த வேலை' பார்க்க வேண்டி வந்தது! ஏன் தெரியுமோ? சுத்தம் செய்யாமல் வெளியேறினால், நான்

அசிங்கம் செய்ததாக எனக்கு அடுத்து வருபவர் எண்ணுவாரே! :dizzy:

 
Raji Madam

You traveled by Air India to US? Only Air India carries maximum Indian Passengers to US.

These passengers must be parents of their sons/ daughters working in US.

Your observation about toilets in marriage halls is correct, there will not be any mug or bucket in the toilet. Most of them Indian type, aged people will find it hard to use them.


 
dear raji,

re post #466, 'man proposed God disposes'. happens all the time in life. i tell mrs K not to plan grandly and brag about the future. it always gets jinxed. 100% in my case.

re #467: re airlines, it depends on the passengers. if it is tamilians, the washrooms are normally clean throughout the flight. i have travelled several times chennai/london or chennai/frankfurt and my experience of western living tamils (pondicherry srilankan who usually use these flights) is they have this sense of cleanliness.

flights out of toronto, with punjabis max, when air canada used to fly to india, the washrooms cannot be entered after the first hour. i dont know why this happens.

re guests dirtying - yes. some of us are so dirty, and there are people who mess up my washrooms. i usually clean it up, as mrs K would not go near it :). educated famous people do this. i dont invite those to my house again, and always refer to them in this context of leaving dirty washrooms !!

one family i know, after using the toilet paper for #2 or used female pads/tampons, drop it in the waste bin. we told the girl, when she stayed with us to flush the toilet paper, and wrap up the female hygiene stuff in the plastic bags that we have in the drawers :) after she mentioned this to her mom, these have changed their habits !! one guy i know, used to squat on the toilet, instead of sitting on it !! out of curiosity i tried it once, and fell flat :) PEOPLE!!!!!!!!!!!!!!!!!!!!!
 
No Sir! Three different airlines during three visits - Lufthansa, British airways and Jet airways.

All of them are very good Airlines.
We always by British Airways as because we break our Journey in London to visit our Daughter for a couple months before proceeding to US.
 
.......... flights out of toronto, with punjabis max, when air canada used to fly to india, the washrooms cannot be entered after the first hour. i dont know why this happens..........
Dear Kunjuppu Sir,

Now that the topic about 'Sujatha' has come, here is a Q - A by one Ramasamy and Sujatha:

ராமசாமி: விமானத்தில் கழிவறையில் செல்லுபவை வெளியிலே போடப்படுமாமே?

சுஜாதா: கவலை வேண்டாம், ராமசாமி! அது உங்கள் தலையில் விழாது! :cool:

 

பழம் வேண்டும்; சக்கை வேண்டாம்!


பழத்தை உண்டுவிட்டுச் சக்கையை எறிவதுதானே மனித சுபாவம். இதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கின்றார் சிலர்!



பணிக்குச் சென்று சம்பாதிக்கும் ஒரு பெண்; கணவன் அவள் பணத்தைத் தொடவே மாட்டான்! தன் உற்றார் உறவினருக்கு

அவள் தாராளமாகச் செலவு செய்வாள். அகால மரணமடைந்த தன் தமக்கையின் இரு மகள்களையும், தன் மகள்களாய்

பாவித்தாள். அவளது ஒரே மகன் வளர்ந்து, பணியில் அமர்ந்து, திருமணம் செய்து பல ஆண்டுகள் வரை, இவளது பணியும்

தொடர்ந்தது! தன் மகன் வெளிநாடு சென்ற பின் இவளும் அவனுடன் வசித்தாள்.



இப்போது தன் தள்ளாத வயதில், மகன் மருமகளுடன் இந்தியாவிற்கு வருகின்றாள். அவளின் தங்கை மகள்கள் அவளைப்

பேணுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில், அவளுடைய மகன் தன் பணிகளை அரைகுறையாக முடித்துவிட்டு

வருகின்றான்! மீண்டும் வெளிநாடு சென்று வரவேண்டுமாம்! ஆனால், தங்கையின் மகள்கள் நிர்தாட்சண்யமாகச்

சொல்லுவது, 'உன் அம்மாதானே! நீயே பார்த்துக் கொள்!'



பழமாகப் பயன் தந்தவரை அவளை நன்கு பயன்படுத்தியவர்கள், வெறும் சக்கையாக, இவர்களைக் காணும் ஆவலில் உயிர்

பிடித்து வரும்பொழுது, வெறுக்கின்றார்கள்!



உலகம் இவ்வளவுதான்! :pout:
 

பழம் வேண்டும்; சக்கை வேண்டாம்!


பழத்தை உண்டுவிட்டுச் சக்கையை எறிவதுதானே மனித சுபாவம். இதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கின்றார் சிலர்!



பணிக்குச் சென்று சம்பாதிக்கும் ஒரு பெண்; கணவன் அவள் பணத்தைத் தொடவே மாட்டான்! தன் உற்றார் உறவினருக்கு

அவள் தாராளமாகச் செலவு செய்வாள். அகால மரணமடைந்த தன் தமக்கையின் இரு மகள்களையும், தன் மகள்களாய்

பாவித்தாள். அவளது ஒரே மகன் வளர்ந்து, பணியில் அமர்ந்து, திருமணம் செய்து பல ஆண்டுகள் வரை, இவளது பணியும்

தொடர்ந்தது! தன் மகன் வெளிநாடு சென்ற பின் இவளும் அவனுடன் வசித்தாள்.



இப்போது தன் தள்ளாத வயதில், மகன் மருமகளுடன் இந்தியாவிற்கு வருகின்றாள். அவளின் தங்கை மகள்கள் அவளைப்

பேணுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில், அவளுடைய மகன் தன் பணிகளை அரைகுறையாக முடித்துவிட்டு

வருகின்றான்! மீண்டும் வெளிநாடு சென்று வரவேண்டுமாம்! ஆனால், தங்கையின் மகள்கள் நிர்தாட்சண்யமாகச்

சொல்லுவது, 'உன் அம்மாதானே! நீயே பார்த்துக் கொள்!'



பழமாகப் பயன் தந்தவரை அவளை நன்கு பயன்படுத்தியவர்கள், வெறும் சக்கையாக, இவர்களைக் காணும் ஆவலில் உயிர்

பிடித்து வரும்பொழுது, வெறுக்கின்றார்கள்!



உலகம் இவ்வளவுதான்! :pout:

dear raji,

it is a rare commodity - gratitude. when it comes to returning favours or help, memory is always short.

i always tell mrs K that to never help anyone, with the hope that it will be returned some day, when you are in need. helping someone now, just gives you the confidence to 'ASK' for help. but there is never a guarantee, that it will be reciprocated, and if is, with a cheer and goodwill, with which it was offered initially.

this is human nature. and more so, unfortunately among families.

as we (mrs K & self) are on the cusp of retirement, we are ensuring (and hope to make it happen) never to live with our children. at some point if we cannot maintain our house, to check into retirement home, and beyond that into, full care facility. we have provisions for that. but never never with our chldren.

it is best to keep good relations, by keeping the relations at a distance. :)
 

Latest ads

Back
Top