• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!


இப்படியும் மனிதர்கள்!



சமுதாயம் என்பது கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமென்றால், சில கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். புதுமையான

எண்ணங்களைப் பரப்புகிறேன் பேர்வழி என்று சிலர் கிளம்புவார்கள். நம் சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கேலி

பேசுவார்கள். 'எப்படி வாழ்ந்தால் என்ன?' என்று சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதாக எண்ணிக் கொண்டு, எதையுமே தவறாக

நினைக்க மாட்டார்கள். பூவும், பொட்டும் வைப்பது பத்தாம் பசலித்தனம் என்பார்கள்; 'தாலிக்குத் தேவை என்ன?' என்று

கேட்பார்கள்.



புதிய பாதையில் வழி நடத்துவதாக நினைத்து, திருமணத்திற்கு முன் கொள்ளும் அன்னியோன்னிய உறவுகள் முதல்,

திருமணம் ஆன பின்னும் பலரிடம் கொள்ளும் இவ்வகை உறவுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டியவை என்றும் பேசுவார்கள்.

இவர்கள் உயர் மட்ட மனிதர் வகையில் சேர்ந்தவர்களாம்!



ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஒரு பெண்மணி அவள் கணவனின் நண்பரிடம் கூறுகின்றாள்,'பேசாமல் நான்

உங்களையே கல்யாணம் செஞ்சிருக்கலாம்! நம்ம ரெண்டு பேரின் wave length ஒரே போல இருக்கின்றன!' சுற்றியுள்ளவர்கள்

அவள் பெரிய காமெடி சொன்னதுபோல், கைதட்டி மகிழ்கின்றனர்! நான் தலையில் அடித்துக்கொள்ள வழி இல்லாது, வேறு

புறம் சென்றுவிட்டேன்! அவளுடைய wave length எனக்கு ஒத்துவராதே! எல்லாமே காமெடிதான். பேச்சிற்கு வரம்புகளே

கிடையாது!



இவ்வகை மனிதர்களிடமிருந்து கொஞ்சம் விலகி இருத்தலே நலம்! :pout:
dear madam !
i feel sorry for that man. he might have received left and right for having talk with such type of woman .for time passing they utter some nonsense,which is embracing for many. let sense prevail
guruvayurappan
 
.......... 1. for time passing they utter some nonsense,which is embarrassing for many.
2. let sense prevail
1. It is sad to note that for a few people, 'time pass' = 'talk nonsense' :humble:

2. I like the song 'Raghupathi Raghava' especially for the line in one stanza 'sabkO sanmathi dhE BhagwAn'.

(my father used to say the words often) :pray:
 

எதற்கும் யோகம் வேண்டும்!



எத்தனையோ பெற்றோர்கள், தம் மகன் ஒவ்வொரு ஆண்டும் திதி கொடுக்க வேண்டுமே என்று கவலைப் படாது,

வாழும்போது அன்பு கிடைத்தால் போதுமே, என்று ஏங்கும் காலமாக இன்று மாறிவிட்டாலும், தம் அந்திமக்

கிரியைகள் சரியாக நிறைவேற ஆசைப்படுவார்கள்.



கடல் கடந்த தேசத்தில், தன் ஒரே பிள்ளையுடன் வாழச் சென்றனர், எண்பதுகளை நெருங்க இருந்த
பெற்றோர்.
சில

ஆண்டுகளில், மிக மோசமான உடல் நிலையில், அன்னை படுத்த படுக்கை ஆகிவிட்டார். வயதின் முதுமை

காரணமாகத் தந்தை இறந்து போய்விட, பல இன்னல்களைக் கடந்து, அந்நாட்டில் இருந்த ஒரே ஒரு இடத்தில்

மின்சார தகனம் முடிந்து, அழகிய பெட்டி ஒன்றில் அஸ்தி தரப்பட்டது. தன் அந்திம நேரமும் மிக விரைவில் வரும்

என்று எண்ணிய அன்னை, தன் முடிவுக்குப் பின், இருவரின் அஸ்தியையும் கங்கையில் கரைக்க வேண்டிக்

கொண்டார். நாம் என்ன Return ticket வாங்கியா உலகில் பிரவேசிக்கிறோம்? விளையாட்டுப்போல் இரண்டு

ஆண்டுகள் ஓடிவிட, அன்னை இன்னும் படுக்கையில்! அவரை விட்டு ஒரு வாரம் கூடப் பிரிய முடியாத நிலையில்

மகன் இருப்பதால், அவன் தந்தையின் அஸ்திப் பெட்டி ஓர் அலமாரியில்! அந்த நாட்டில் உள்ள கடலில் அஸ்தியைக்

கரைக்கச் சொன்னால், கங்கையில்தான் கரைக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறான்! இந்தியாவில் வாழும்

அந்தப் பெரியவரின் சகோதர சகோதரிகள் மனம் வருந்தி என்ன பயன்?



வாழும்போது சுகமாக இருப்பதற்கு யோகம் இருக்க வேண்டும் என்பது போல, காலா காலத்தில் அஸ்தி

கரைக்கப்படவும் யோகம் வேண்டுமோ? :rip:
 
Last edited:

நவீன ம(மா)யம்!



விஞ்ஞான வளர்ச்சியால், உலகம் மேலும் மேலும் நவீன மயமாகிறது! 'இது நல்லதா? கெட்டதா?', என ஒரு வாக்குவாதம்

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனது. பல வசதிகள் பெருகிவிட்டன; ஆனால், பல இடர்களும் தொடர்கின்றன -

என்பதே என் எண்ணம்!



'நத்தை அஞ்சல்' (snail mail) என்று நாம் குறிப்பிடும் அஞ்சல் சேவை இப்போது அதிகம் எவரும் எதிர்பார்ப்பதில்லை. கணினி

ஓர் அடிப்படித் தேவை என்ற நிலைமை வந்தபின், எல்லோரும் மின் அஞ்சலில் உடனுக்குடன் செய்திப் பரிமாற்றம்

செய்துகொள்கின்றனர். யாரேனும் எழுதிய விஷயம் அனுப்ப, மீதும் தட்டெழுதும் வேலையே கிடையாது! வெட்டி ஒட்டும்

வேலை தெரியவேண்டும்; அவ்வளவே! ஆங்கிலத் தட்டெழுத்துத் தெரிந்தாலே போதும்; பற்பல மொழிகளில் எழுதித்

தள்ளலாமே! வலைக் காமரா வழியே நம் இனியவர்களைக் காண வகை செய்கின்றது கணினி! இது ஒரு நல்ல மாற்றம்.



தொலைபேசி போய் அலை பேசி வந்தபின், எந்த ஊர் சென்றாலும், சுற்றம் - நட்புடன் பேசுவது மிக எளிதாகிவிட்டது! மின்

அஞ்சல் அனுப்பவும், பாட்டுக்கள் கேட்கவும், தொலைபேசவும், புகைப்படம் எடுக்கவும் என்று எல்லா வேலைகளையும்

அந்தத் துக்கிணி அளவு உபகரணம் செய்கிறது!



இடர்கள்:


வேண்டாத பல விஷயங்களைக் கணினியில் இளசுகள் ஆர்வமாகத் தேடி அலைந்து, மனதை அசுத்தப்படுத்துகின்றன! முகம்

தெரியாத நபர்களுன் உறவாடி, பின் திருமணமும் செய்துகொண்டு, சில பெண்கள் ஏமாறுகின்றனர்! வலை நட்பில் பல மணி

நேரங்கள் தொலைத்து, உடல் நலத்தை இழக்கின்றனர், சிலர்!
அலை பேசியில் புகைப்படம் எடுத்து, அதை வேறுவிதமாக

மாற்றி, வலையில் பதிக்கும் விஷமிகள் பெருகிவிட்டது ஒரு துர்பாக்கியம்; கொடுமை!



னிமை...


வலை நண்பரை நேரில் கண்டால் மகிழ்ச்சி இரட்டிப்பாவது நிஜம்தானே! நேற்று ஒரு நண்பர் நேரில் வந்து சந்தித்தார். மனம்

விட்டுச் சில விஷயங்கள் பரிமாறிக் கொண்டோம்.
கணினி வழியே, என் சகோதரியும், அன்னையும் அவரைப் 'பார்த்து'ப்

பேசினார்கள்.
எங்கள் தோட்டப் பலாப் பழம் கொஞ்சம் சுவைக்கக் கொடுக்க முடிந்தது கூடுதல் மகிழ்ச்சி தந்தது, எனக்கு! :high5:


 
post 405 #
dear madam !
the coin is having always two sides.use coin as coin and spent it usefully.
there is always dark beyond certain distance of a lamp
guruvayurappan
 

'நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப்பாள்',

என்று பாரதி சொன்னது,
அவரது நம்பிக்கையில்!

'நல்லதும் தீயதும் செய்யும் நவீனம்

நலத்தை நமக்கிழைக்கும்',
என்று சிறப்புற வைப்பது, நமது கட்டுப்பாட்டில்! :decision:
 

நேரிடையாகப் பேசாதவர்கள்!



Communication Gap என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். சரியான விஷயங்களைச் சரியான நேரத்தில்

சரியான நபரிடம் சொல்லாமல் போவது இதற்கு முக்கியக் காரணம். 'தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை

மரத்தில் நெரி கட்டுமா?' என்று ஒரு பழமொழி கேட்டுள்ளேன். அது இவர்களுக்கு மிகப் பொருந்தும். எவரிடம்

விஷயத்தைச் சொல்ல வேண்டுமோ அவரிடம் சொல்லாது, வேறு பலரிடம், வேறு இடங்களில் சொல்லுவது

இவர்களின் விசேஷம்.



ஒரே வீட்டில் இருந்துகொண்டு இதுபோலச் செய்பவர்களும் உண்டு! தலைவலி வந்தது என்றால் தன் கணவனிடம்

சொல்ல மாட்டாள் ஒரு பெண். முகத்தை வாழைப்பூ போல வைத்துக்கொண்டு, எல்லா வேலைகளையும் செய்வாள்.

யாரேனும் தொலைபேசினால், அல்லது வீட்டுக்கு வந்தால், அவர்களிடம் தன் தலைவலி பற்றிப் பிரஸ்தாபித்து,

தான் கவனிக்கப்படுவதே இல்லை என்று புலம்புவாள். இது ஒரு உதாரணம்தான். இதே போலப் பெரிய

விஷயங்களையும் உடன் இருப்பவரிடம் பகிர்ந்துகொள்ளாது மற்றவர்களிடம் சொன்னால், என்ன பயன்? ஒரு

வேளை உடன் இருப்பவர் கவனிக்காது போய்விட்டால், அவருக்கு எப்படி விஷயம் தெரியும். அதன்பின் எதையுமே

கவனிப்பதில்லை என்று புலம்புவதில் என்ன லாபம்?



நேரிடையாகப் பேசுவதை
ப் பழகிக்கொள்வது, நலம் தரும்! :blabla:
 

காலம் பொன்னானது
!

பாடல்கள் பதிவு செய்ய இயலாத காலக் கட்டத்தில், மாணவர்கள் குருகுலவாசம் செய்து இசை கற்றுக்கொண்டார்கள். இப்போது

குருகுலவாசத்தின் அவசியமே இல்லாது போய்விட்டது. கணினி வழியாகப் பாடங்கள் நடத்திப் பொருள் ஈட்டும் யுக்திகள்

பெருகிவிட்டன. மாணவர்களும் ஒலிப்பதிவு ஏடுகளை வைத்து, இசை கற்க விழைகின்றார்கள்.



இப்போது ஆசிரியர்களும் புது யுக்திகளைக் கையாள ஆரம்பித்துவிட்டார்கள்! சமீபத்தில் பார்த்த நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில்,

நட்டுவாங்கம் செய்ய மட்டும் கிண்ணாரத்துடன் ஆசிரியை அமர்ந்திருக்க, பாடல்கள் எல்லாமே ஒலித்தன ஒரு குறுந் தகட்டிலிருந்து!

பக்க
வாத்தியங்களுடன் பல பாடல்களை ஒலிப்பதிவு செய்து, ஒவ்வொரு மாணவியும் தேர்ந்தெடுக்கும் பாடல்களின் தொகுப்பை,

நகல் எடுத்துத் தருவாராம்! இதில் என்ன வித்தியாசம் என்றால், ஒரு பாடலில் புல்லாங்குழல் இசை மேலோங்க, இன்னொன்றில்

வீணை இசை தவழ, வேறொன்றில் ஹார்மோனியம் தாண்டவம் ஆடுகிறது! ஸ்ருதியும் கொஞ்சம் மாறி வந்து, இசை அறிந்தோரைக்

கொஞ்சம் நெளிய வைக்கிறது!



காலம் வீணாக்காது, பணம் பெருக்கும் வழியல்லவா இது?
எனவே, காலம் பொன்னானது என்பது உண்மையானது!

:clock: . . . :popcorn:

 
Last edited:
வணக்கம்.

அஞ்சல் 409

பணமே காலத்தின் பயனாகிப் போகும்போது,
பொன்னையே பணத்துக்குகாக விற்கும்போது,
காலத்தின் அருமை பணத்தில் தெரியும் என்ற
புதுமொழி உருவாவது
அந்தக் காலத்தின் கட்டாயம்தானே?
 

என் செல்ல அறிவொளி பற்றிய கடிக் கவிதை நினைவுக்கு வருகின்றது!

அறிவொளி - 58


காசேதான்...
________________

அறிவொளிக்குப்

பெரிய ஐயம்


வந்துவிட்டது!


காசேதான் கடவுள்


என்றால் ஏன்


கடவுளுக்கே


கடவுளைப்


போடுகிறோம்?

:noidea:


 

காலத்தின் அருமை பணத்தில் தெரியும்!


எத்தனை உண்மையான புதுமொழியை நண்பர் தந்தார்! என்னை விட வயதில் மூத்த மாணவி பற்றி

எழுதவேண்டும்.



தனக்கு வீணையில் பல புதுப் பாடல்கள் வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆசை என்று விண்ணப்பத்துடன் வந்தார்.

நானும் ஒப்புக்கொண்டு வகுப்புக்களை ஆரம்பித்தேன். ஒரு மாணவிக்கு மாதத்தில் எட்டு வகுப்புக்கள்;

சராசரியாக இரண்டு பாடல்கள் என்று கற்பிப்பது வழக்கம். இவரோ ஒரு மாதம்தான் வருவேன்; ஒரு நாளில்

இரண்டு பாடல்கள் வேண்டும், என்றார்! கற்றதை ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்று சின்னக் கருவியில்

ஒலிப்பதிவும் செய்துகொண்டார். பின்னர் அறிந்தேன் அவரின் தந்திரத்தை!



மிக எளிதாக நான் ஸ்வரக் குறிப்பு எழுதுவேன்! கணிதமும், சங்கீதமும் நல்ல 'காம்பினேஷன்' அல்லவா?

இவர் வெளிநாட்டு மாணவிகள் பலருக்கு ஆசிரியை! ஆனால் ஸ்வரக் குறிப்பு எழுத வராது. எனவே என்னிடம்

ஒரு மாதத்தில் 'கறந்த' பாடங்களை வைத்து, சில ஆண்டுகள் கற்பிப்பது அவரின் திட்டம்! என் காலம் சொற்ப

ரூபாய்களுக்கு விலை போனது; அவருக்கு டாலரிலும், பவுண்டிலும் அள்ளித் தந்தது!



நல்லவராக இருக்கலாம்; ஆனால் ஏமாளியாக இருக்கக் கூடாது!
:madgrin:
 

அழையா விருந்தாளி!



இந்த வித விருந்தாளிகளை, வாழ்வில் பலரும் சந்திப்பது சகஜம். எங்கள் சுற்றத்தில் ஒரு பெண்மணி,

இதே வகையில் உள்ளார்! 'அதிதி தேவோ பவ' என்று இள வயது முதல் கற்பிப்பதால், அவரை நன்கு

கவனித்துக்கொள்வேன்! ஆனால், அவரோ, குற்றப் பட்டியல் சொல்லியபடித் திரிவார்!
இந்த ஜன்னலில்

திரை சரியாக இல்லை; இந்தக் கதவு வாஸ்து சாஸ்த்திரப்படி சரியில்லை; இந்தக் கிருஷ்ணன்
படத்தை

வீட்டில் வைக்கவே கூடாது; சுவர்களின் வண்ணம் நன்றாக இல்லை; என அடுக்கிக்கொண்டே போவார்.

எனக்கு இவர் எப்போது போவாரோ என்ற எண்ணம், சில நிமிடங்களிலேயே தோன்ற ஆரம்பிக்கும்!



அழையா விருந்தாளியாக
ச் செல்வது தவறில்லை. ஆனால், போகும் இடத்தில் சுமுகமாகப் பழகுவது
,

எல்லோருக்கும் நன்மை தரும்! :grouphug:
 

வருவதும், போவதும்!



தம்மை அறிமுகம் செய்துகொள்ள, இந்த இணையதளத்தில் ஒரு நூல் உண்டு! 2009 இல் இங்கு நுழைந்து,

இதுவரை ஐந்து அஞ்சல்கள் மட்டுமே செய்த ஒரு அங்கத்தினரைக் கண்டு அதிசயித்தேன்! அவருடைய

முதல்
அஞ்சலைக் 'கிளிக்'கி நோக்கிய பின், தொடர்ந்து சில அஞ்சல்களைப் படித்தேன்! என்ன ஆச்சரியம்!

ஒரே ஒரு அஞ்சலுடன் காணமல் போய்விடுபவர்கள் ஏராளம்! அறிமுகத்துடன் மட்டும் நில்லாமல், கொஞ்சம்

வாக்குவாதம் செய்பவரும் உண்டு. தான், மக்களின் மேன்மைக்குப் பாடுபட வந்ததாக உரைத்
து, பின்ர்

தொடராமல் போனவர்கள் உண்டு. மிக வினோதமான மனிதர்கள்!



இணையதள நட்பு ஒரு மாயை என்று பிடிவாதம் பிடித்த சிலரைக் கண்டுள்ளேன். ஆனாலும், ஒரு சில நிஜ

நண்பர்களையும் அது கொடுக்க முடியும் என்பது, என் அசைக்க முடியாத நம்பிக்கை!
:high5:
 

திரையில் தோன்ற ஆசை!



திரைப்படத்தில் எப்படியேனும் தோன்றவேண்டும் என்ற ஆசை பலருக்கு இருப்பதுபோல, இப்போது சின்னத்

திரையில் தோன்றும் ஆசை இல்லத்தரசிகள் பலருக்கு வந்துவிட்டது!



'அக்ரஹாரத்து ஸ்பெஷல்' என்ற தலைப்பில் ஒரு பாட்டுப் போட்டியின் பகுதி. மனதை வருத்திய நிகழ்ச்சிதான் அது!

ஏனெனில், ஒன்பது கஜப் புடவையை, திருமணப் பெண்ணுக்கு, அவள் திருமணத்தன்று நல்ல நேரம் பார்த்து, வயதில்

மூத்த பெண்மணிகள் கட்டுவதே வழக்கம். அந்த உடையை, சின்னஞ்சிறு பெண்களுக்கு
உடுத்திவிட்டு, அதைக் கேலிப்

பொருளாக மாற்றியதே வேதனை; அந்த உடையைத் தழையத் தழைய அழகாக உடுத்திக்கொள்ளாமல், ஒரு பெண்மணி,

வயிற்றுப் பகுதி முழுதும் தெரிய, எழுந்து ஆட்டம் போட்டதுடன், பாராட்டும், பரிசும் வாங்கிச் சென்றது அதைவிடக்

கொடுமை! எப்படியேனும் சின்னத் திரையில் தோன்றினால் போதுமே! அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமே!



என்ன செய்தாலும், இந்தச் சமூகத்தினர் வாய்மூடி மௌனிகளாக இருப்ப
தே, இது போன்ற நிகழ்ச்சிகள் வரக் காரணமோ
? :tape:
 

சும்மா இருப்பது சுகமா?



'சும்மா இருப்பதே சுகம்!', என்று இள வயதில் வேலைகள் பல இருக்கும்போது தோன்றும்! ஆனால், சும்மா இருப்பது

சுகமே அல்ல என்பது, ஓடியாடும் வயது முடிந்ததுமே தோன்ற ஆரம்பிக்கும். 'An idle mind is a devil's workshop' என்பது

மிகச் சரியான வாக்கியம்! வேலையே இல்லாமல் உடல் சும்மா இருந்தாலும், மனம் சும்மா இராது! அது குரங்குபோல,

தாவித் தாவிக் குதிக்கும் குணம் கொண்டதால், வேண்டாத நினைவுகள் பல வந்து நம்மை ஆட்டிப் படைக்கும்; உ
டல்


ஆரோக்கியத்தையும் கெடுக்கும்!



'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்


சாந்துணையுங் கல்லாத வாறு'


என்று அறிவுறுத்துவது வள்ளுவம். 'கற்ற ஒருவனுக்கு எல்லா நாடுகளும், எல்லா ஊர்களும் தன்னுடையது போலவே

இருப்பதால், ஒருவர் சாகும் வரை கல்லாது நாட்களைக் கழிப்பது எப்படி?' என்ற கேள்வியை முன் வைத்து, கற்பதற்கு

வயது ஒரு பொருட்டே அல்ல என்பதைத் திருவள்ளுவர் மிக அழகாக விளக்குகிறார்.
உலகெங்கும் நல்ல விஷயங்கள்

பற்பல உள்ளன. அவற்றில் நமக்கு எதில் ஈடுபாடு உள்ளதோ, அதைக் கற்கத் தயக்கமே வேண்டாம்.



நல்லறிவை வளர்க்க நாளும் முனைந்து, வாழ்வை
ச் சிறப்புற நடத்த, எல்லோரும் விழைவோம்!
:high5:
 

திரை
ப்படப் பாடல்கள்!


'பதின் பருவம்' என்ற சொல்லை, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து அறிந்தேன்! 'டீன் ஏஜ்' பருவம் என்று

ஆங்கிலத்தில் குறிப்பிடுவது, பதிமூன்று முதல் பத்தொன்பது வயது வரை உள்ள பருவத்தை. இப்பொழுது, பத்து

வயதிலேயே, எல்லா விஷயங்களிலும் பிள்ளைகள் 'தேறி'விடுவதால், பதின் பருவம் என்பது மிகச் சரியாகப்

பொருந்துகிறது! இந்த வயதில்தான், பிள்ளைகள் தீய வழியில் செல்லாமல் பாதுகாப்பது கடினம். 'அம்மா, அப்பா

சொன்னார்கள்', 'ஆசிரியர் சொன்னார்' என்று கூறுவதெல்லாம் மறைந்து, 'நான் சொல்லுகிறேன்!' என்று, 'ஈகோ'

புறப்படும் காலம் அது!



நேற்று, உயிரில் பூங்காவில் வலம் வந்தபோது கண்ட காட்சிகள், மிக வேதனை அளித்தன. பதின் பருவத்தினர் பலர்

ஜோடி சேர்ந்துகொண்டு, மரத்தடியில் அமைந்துள்ள இருக்கைகளில் சில்மிஷங்களில் ஈடுபடுவதைக் கண்டேன்.

கையில் உள்ள செல்போனிலிருந்து, 'வேணாம் மச்சா(ன்) வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு!' என்பது போன்ற

இலக்கிய நயம் மிக்க (!) பாடல்கள் ஒலிக்க, அவர்கள் சுற்றி வருகின்றனர்! மல்லிகைப் பூ, முழம் பதினைந்து விற்கும்

காலத்திலும், நீளமாகப் பூவைத் தொங்க விட்டுக்கொண்டு, காதலனுடன்,
மரத்தடியை நாடுகின்றனர் பெண்கள்!

கூட்டமாக வந்த கல்லூரி மாணவிகள் அங்குள்ள இளைஞர் கூட்டத்தை நோக்கிக் கிண்டல் செய்து, 'டாடா' காட்ட,

அவர்கள் 'இருங்க அக்கா! நாங்களும் வரோம்!' என்று பின்னால் செல்வதையும் கண்டேன்! இதுதான் வாழ்வாங்கு

வாழும் வாழ்வோ?



திரைப் பாடல்களால் இவர்கள் மனம் கெடுகின்றதா அல்லது, இவர்களின் போக்கு சரியில்லாததால், இப்படிப்

பாடல்கள் வருகின்றனவா என்று நான் அறியேன்! இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வருமா என்றும் அறியேன்!

:pout:
 
Last edited:
post 417. (Maratthadiyai Naaduginranarukku Kaal udaindhuvittadhu).Well, You have broken their legs for doing uncultured, unethical behaviour. I am very much worried about future generation. Generally those who have gone abroad want their children to study in India and they leave them with their grandma for studies in India to learn our tradition and culture. Even many people have registered police complaint regarding atrocities happening in Marina beach.
 
........ Well, You have broken their legs for doing uncultured, unethical behaviour. ......
அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கமே, என் எழுத்தில் தெரிந்துவிட்டதோ என்னமோ?

பிழை திருத்தம் செய்யப்பட்டது! நன்றி.


நான் கண்ட பலர், தம் பெற்றோருடன் சிங். சென்னையில் இருப்பவர்களே!

 
If they live with parents and still they are like this then either they are adangaappidaarigal or water sprinkled cases. Arivoli-58. Arivoliyin kelvi sariye. Naam kadvulukku nam bakthiyai kaanikkaiyakka vendume thavira kaasai alla.
 

குடும்பத்தில் பெரியவர்கள்!



முந்தைய தலைமுறையில், திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால், வீட்டுப் பெரியவர்கள் சிலர், வரன்

வேட்டையில் இறங்குவார்கள். தாய் மாமா, பெரியப்பா, சித்தப்பா, அத்தையின் கணவர் என்று சிலர், ஒவ்வொரு

குடும்பத்திலும் இதில் பங்கேற்பார்கள். திருமணம் பேசி முடிக்கவும், இவர்கள் அழைக்கப்படுவார்கள். இப்போது

காலம் மாறிவிட்டது. மிகவும் சிறந்த துணையே தேவை என்று, இணைய தளத்தில் வலை போட்டுப் பிள்ளைகளே

தேடுகிறார்கள்! இப்படியே காலம் கடந்து போவதால், திருமண வயதும் ஏறிவிடுகிறது. பிள்ளைகளின் விருப்பு

வெறுப்புகள் மாற்றவே முடியாத வண்ணம் உறைந்து போகின்றன. வீட்டுப் பெரியவர்களுக்கும் குறிப்பிட்ட

வேலைகள்தான். அவை: திருமணத்திற்கு அழைத்தால், போய் மொய்ப்பணம் தந்து,
கொடுக்கும் விருந்தை உண்டு


வரவேண்டியது!



காதல் திருமணம் என்றால், கேட்கவே வேண்டாம். அதை எதிர்க்கும் எந்தப் பெரியவரையும் அழைக்கவே

வேண்டாம் என்று, பிள்ளைகளே கூறுவார்கள். யார் எந்தத் துணையைத் தேர்வு செய்தாலும், பெரியவர்களின் 'அந்த'

வேலைகள் மட்டும் மாறுவதே இல்லை!



'எல்லோரும் ஓர் இனம்; எல்லோரும் ஒரு குலம்' என்பதோடு, 'யாருமே
குடும்பத்தில் பெரியவர் இல்லை' என்றும்

சேர்க்க வேண்டுமோ? :noidea:
 
Arivoli 58 - "Ilakkaname po pudukkavidhaye va" endra Noolil pugamal padhai mariyadhu eano?
 

அறிவொளி பாதை மாறவில்லை! அவன் ஏற்கனவே தன் சிறப்பு நூலில் வந்துவிட்டானே! :ranger:


என் செல்ல அறிவொளி
மீண்டும் என் நினைவுக்கு வந்தான்; அவ்வளவே!
:cool:
 

வலை நட்பு!



எத்தனை முறை இதைப் பற்றி எழுதினாலும், சலிக்காது எனக்கு!


குணமும், குற்றமும் கூடி இருப்பவரே மனிதர்கள். அவர்களில் நாம் பெறும் நல்ல நட்பு என்பது, குணம் நாடிக்

குற்றமும் நாடி மிகை நாடிக் கொள்வதே ஆகும். நண்பரின் குற்றங்களை பறை சாற்றாமல், அவற்றைத்

தேவைப்பட்டால் மட்டுமே தனிமையில் விவாதிக்க வேண்டும். இது நிஜ வாழ்வு!


வலை நட்பில், அந்தங்க விஷயங்களைப் பகிர்வது ஒரு பெருமை என்று கருதி வெளியிடுகின்றனர் சிலர். ஆனால்

அதன் விளைவு விபரீதம் ஆகிவிடுகிறது! தானே கல்லைக் கொடுத்து அடிக்கச் சொல்லுவது போல் அது

மாறிவிடுகிறது. நட்புடன் சுற்றிவரும் பலர், நட்பு விலகியதும், தாக்க ஆரம்பிப்பார்கள். இது மிகக் கொடுமை!



விளையாட்டு வினையாகாமல் தடுப்பது, வலை நட்பில் ஒரு பெரிய சாதனைதான்! :thumb:

 

இதுதான் சுவர்க்கம்!


அலுவலகப் பணியில் அறுபது ஆண்டுகள் தாண்டும் வரை ஓடி உழைத்த பின், யாராய் இருந்தாலும் அமைதியாக வாழவே

விரும்புவார்கள். எங்கள் சுற்றத்தில் ஒருவர், ஜெனரல் மானேஜர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், தன் கிராமத்தில் வாழ

ஆசைப்பட்டார். தந்தையார் காலத்தில் இருந்த கிராம வாழ்வே வேறு! பணியாட்கள் இருவர் வீட்டோடு இருப்பார்கள். எந்த

வேலையை எந்த வேளையில் சொன்னாலும், சொன்ன மறு வினாடியே நடந்தேறும். அத்தனை கட்டுப்பாடு! ஆனால்,

இன்றைய நிலைமை வேறு. பணி செய்தவர்களின் பிள்ளைகள் பலரும், பட்டணம் சென்றுவிட்டனர். அக்ரஹாரமோ,

பழைய குடும்பங்கள் பல இடம் பெயர்ந்து செல்ல, அக்ரஹாரம் போலவே இல்லை! மின் வெட்டு வாட்டி வதைக்கிறது!

யாரோ தனக்கு தானமாகக் கிடைத்த பசுவையும் கன்றையும் கவனிக்க முடியாமல், இவரிடம் விற்றுச் சென்றுவிட,

அவைகளைப் பராமரிக்கும் வேலையும் கூடுதல் ஆனது! ஆள் பலமும் இல்லாமல், தானும் உழைக்க முடியாமல், அவர்

படாத பாடு படுகின்றார். மற்ற கிராமவாசிகள் எல்லோரும் தம் வீட்டில் ஆழ் குழாய்க் கிணறுகள் போட்டுவிட்டனர்.

மழையும் பொய்த்து, வைகையும் வற்றினால், வேறு வழியே இல்லையே. இவரோ, பிடிவாதமாகக் குழாயில் வரும் நீரைப்

பிடித்து உபயோகித்தால் போதுமே என்கின்றார்! எளிமையாக வாழ வேண்டும் என்று ஆசாரியாள் சொல்லியுள்ளாராம்.

வசதிகள் இன்றி வாழும் வாழ்வுதானா எளிமை? ஏ. சி வேண்டாம்; வழவழப்பான தரை வேண்டாம்; ஆனால் அடிப்படை

வசதியான நீரும் கூட எளிதில் கிடைக்க வேண்டாமா?



காலை நான்கு மணிக்கு எழுந்தால், தண்ணீர் பிடித்துத் தொட்டிகளில் நிரப்பி, மாடு, கன்றை கவனித்து, வயல் காட்டில்

வேலைகளை மேற்பார்வை இட்டு, நீராடி, பூஜைகள் செய்து, சாப்பிட அமர, மதியம் மணி இரண்டு ஆகின்றது! அதுவரை

உண்பது ஒரு கோப்பை பால் மட்டுமே. 'ஏன் இப்படி உடலை வருத்திக்கொள்கிறீர்கள்?' என்று கேட்டால், 'இதுவே சுவர்க்கம்!'

என்று பதில் வருகின்றது. அவரவர் மன நிலைதான் இப்படி எண்ணக் காரணம் என்றும் விரிவுரையும் தொடர்கின்றது!



'சரி சரி; நான் நரகத்துக்கே போகின்றேன்' என்று விடை பெற்று, சிங்காரச் சென்னைக்கு வந்து சேர்ந்தேன்! :wave:
 

Latest posts

Latest ads

Back
Top