• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!


இதுதான் சுவர்க்கம்!


அலுவலகப் பணியில் அறுபது ஆண்டுகள் தாண்டும் வரை ஓடி உழைத்த பின், யாராய் இருந்தாலும் அமைதியாக வாழவே

விரும்புவார்கள். எங்கள் சுற்றத்தில் ஒருவர், ஜெனரல் மானேஜர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின், தன் கிராமத்தில் வாழ

ஆசைப்பட்டார். தந்தையார் காலத்தில் இருந்த கிராம வாழ்வே வேறு! பணியாட்கள் இருவர் வீட்டோடு இருப்பார்கள். எந்த

வேலையை எந்த வேளையில் சொன்னாலும், சொன்ன மறு வினாடியே நடந்தேறும். அத்தனை கட்டுப்பாடு! ஆனால்,

இன்றைய நிலைமை வேறு. பணி செய்தவர்களின் பிள்ளைகள் பலரும், பட்டணம் சென்றுவிட்டனர். அக்ரஹாரமோ,

பழைய குடும்பங்கள் பல இடம் பெயர்ந்து செல்ல, அக்ரஹாரம் போலவே இல்லை! மின் வெட்டு வாட்டி வதைக்கிறது!

யாரோ தனக்கு தானமாகக் கிடைத்த பசுவையும் கன்றையும் கவனிக்க முடியாமல், இவரிடம் விற்றுச் சென்றுவிட,

அவைகளைப் பராமரிக்கும் வேலையும் கூடுதல் ஆனது! ஆள் பலமும் இல்லாமல், தானும் உழைக்க முடியாமல், அவர்

படாத பாடு படுகின்றார். மற்ற கிராமவாசிகள் எல்லோரும் தம் வீட்டில் ஆழ் குழாய்க் கிணறுகள் போட்டுவிட்டனர்.

மழையும் பொய்த்து, வைகையும் வற்றினால், வேறு வழியே இல்லையே. இவரோ, பிடிவாதமாகக் குழாயில் வரும் நீரைப்

பிடித்து உபயோகித்தால் போதுமே என்கின்றார்! எளிமையாக வாழ வேண்டும் என்று ஆசாரியாள் சொல்லியுள்ளாராம்.

வசதிகள் இன்றி வாழும் வாழ்வுதானா எளிமை? ஏ. சி வேண்டாம்; வழவழப்பான தரை வேண்டாம்; ஆனால் அடிப்படை

வசதியான நீரும் கூட எளிதில் கிடைக்க வேண்டாமா?



காலை நான்கு மணிக்கு எழுந்தால், தண்ணீர் பிடித்துத் தொட்டிகளில் நிரப்பி, மாடு, கன்றை கவனித்து, வயல் காட்டில்

வேலைகளை மேற்பார்வை இட்டு, நீராடி, பூஜைகள் செய்து, சாப்பிட அமர, மதியம் மணி இரண்டு ஆகின்றது! அதுவரை

உண்பது ஒரு கோப்பை பால் மட்டுமே. 'ஏன் இப்படி உடலை வருத்திக்கொள்கிறீர்கள்?' என்று கேட்டால், 'இதுவே சுவர்க்கம்!'

என்று பதில் வருகின்றது. அவரவர் மன நிலைதான் இப்படி எண்ணக் காரணம் என்றும் விரிவுரையும் தொடர்கின்றது!



'சரி சரி; நான் நரகத்துக்கே போகின்றேன்' என்று விடை பெற்று, சிங்காரச் சென்னைக்கு வந்து சேர்ந்தேன்! :wave:


நல்ல வேளே....'பாரியாள்' "கைகுத்தல்" அரிசி செய்து சமைத்தால்தான்


சாப்பிடுவேன் என்று சொல்லமல் விட்டாரே... !!

Tvk
 
நல்ல வேளே....'பாரியாள்' "கைகுத்தல்" அரிசி செய்து சமைத்தால்தான்

சாப்பிடுவேன் என்று சொல்லமல் விட்டாரே... !!
பாரியாள் அடிக்கடி சிங்காரச் சென்னைக்கு வந்து மகனுக்குச் சமைத்துப் போடுவதாகக் கேள்வி!

மகனுக்குத் திருமணம் ஆகிவிட்டால், அம்மையார் பாடும் திண்டாட்டம்தான்... பாவம்! :tsk:

 
அஞ்சல் 424-இல் சொன்னதற்கு அஞ்சல் 425-இல் சொன்னது முரண்படுவதுபோல் தோன்றுகிறது.
 
அஞ்சல் 424-இல் சொன்னதற்கு அஞ்சல் 425-இல் சொன்னது முரண்படுவதுபோல் தோன்றுகிறது.
வலைத்தளப் பதிவுகளில் ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லுவது இல்லை!

எங்கே உள்ளது முரண்பாடு? :noidea:
 
அவரவர் வாழ்வு அவரவர் மனம் தேர்ந்தடுப்பதே. :decision:

கிராம வாழ்வையே
ஒருவர் சுவர்
க்கமாக நினைக்கின்றார். எனக்கு என்னமோ, சுட்டெரிக்கும் வெய்யில் இருந்தாலும்,
சுற்றிக் க்டிக்கும் கொசுக்கள் தொடர்ந்தாலும், சிங்காரச் சென்னையே சுவர்
க்கமாக இருக்கிறது! :couch2:
 

நல்ல விருந்தினர்!


விலைவாசி வானளாவ உயர்ந்த இந்தக் காலத்தில், விருந்தினராக யார் வீட்டுக்கும் செல்லத் தயக்கம் வருவது இயற்கை!

நம்மிடம் உண்மையான அன்பு கொண்டவராக இருப்பின், தயங்காமல் செல்ல முடிவதும் உண்மை!



எப்படி நல்ல விருந்தினராக நடப்பது? எந்த வீட்டிற்குச் செல்கின்றோமோ அந்த வீட்டின் routine வேலைகளை மாற்ற

முனையக் கூடாது. அனேக இல்லங்களில் மெஷினில் துவைப்பதால், நாம் குளிக்கும் போதே துணிகளைத் துவைக்கலாம்.

அல்லது, அவர்கள் உதவியுடன் நாம் மெஷினை இயக்கி வேலையை முடிக்கலாம். (எங்கள் இல்லத்திற்கு வரும் சிலர்,

'மெஷின் வாஷா? இதோ இதையும் போட்டு எடுத்தூடேன்!' என்று அலுங்காமல் துணி மூட்டையை வைப்பது வழக்கம்!)



அடுத்தது உணவு. முடிந்தவரை அவர்களின் உணவு வேளையில் நாமும் சேர்ந்து உண்பது உத்தமம். உடல் நிலை

காரணமாக அது முடியாவிட்டால், நம் தேவைகளைச் சொல்லி, சிறப்பு உணவைக் கேட்டு, நாம் உண்ணும் வேளையை

மாற்றலாம். பெண்களாயின், சமையலுக்கு வேண்டிய உதவிகளைக் கேட்டு, கட்டாயம் செய்ய வேண்டும். நம்மால்

அவர்களின் தினசரி வேலைகளே சுலபமாகும்படி மாற்ற வேண்டும்.



விருந்தினருக்கென படுக்கை அறை இருப்பின், அதை உபயோகிக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் தினசரி

படுக்கும் இடத்தை ஆக்கிரமிக்கக் கூடாது!



மொத்தத்தில், 'மீண்டும் எப்போது வருவார்?', என்று ஆவலோடு எதிர்பார்க்க வைக்க வேண்டும்! :angel:

 

முன் ஜாக்கிரதை!


தீபாவளியை நினைக்கும்போது நினைவில் முதலில் வருபவர்கள் என் தந்தையும், தந்தையின் தந்தையும்!

எத்தனை முன் ஜாக்கிரதை அவர்களிடம்!



முதலில் தாத்தாவைப் பற்றி: தீக் காயங்கள் குழந்தைகள் மீது படவே கூடாது; அதிலும் பெண் குழந்தைகள் மீது!

தீபாவளிப் பட்டாசுகளும், மத்தாப்புகளும் வாங்கி வரும் முன்னே தயாராகிவிடும், ஒரு மூங்கில் குச்சி! அதன்

ரத்தில் ஒரு பிளவு செய்து வைப்பார். ஏன் தெரியுமா? அதில் குட்டி மத்தாப்புக் குச்சிகளைச் சொருகிய பின்தான்

ஏற்ற வேண்டும்; இல்லையெனில் நாங்கள் கையைச் சுட்டுக் கொள்வோமாம்! இதே குச்சியில்தான் விஷ்ணுச்

சக்கரமும் சொருக வேண்டும். எல்லாத் தரைச் சக்கரஙகளின் நுனிகளையும் கொஞ்சம் பிரித்து வைப்பார். இல்லையேல்

அதை ஏற்றியவுடன் சுற்றிவிடுமாம். அதே போல, புஷ்வாணங்களின் நுனிகளைக் கொஞ்சம் கிள்ளி வைப்பார்.

இல்லையேல் சில வெடித்துவிடுமாம்!



கண்களின் பாதுகாப்பும் கருத்தில் கொள்வார். கம்பி மத்தாப்பு வகையில் 'சட சட' என்று சிதறும் வகை உண்டு. அதில்

சிறு கண்ணாடித் துகள்களை மருந்தில் சேர்ப்பார்கள். மிகவும் வெளிச்சம் தருவதால், அதை ஏற்றும் சமயம் அதைப்

பார்க்க விடமாட்டார்; பின்னே திரும்பி சுவற்றில் தெரியும் எங்கள் நிழல்களைப் பார்க்கச் சொல்லுவார். இது மட்டுமல்ல.

பாம்பு வில்லையை வைக்கும் போதும் அருகே நிற்க விடமாட்டார். மண்டும் கரும் புகைதான் காரணம். அது நுரையீரலைப்

பாதிக்குமாம்!



இப்போது அப்பா: வெங்காய வெடி என்று ஒரு வகை உண்டு. வண்ண வண்ணமாக வரும் சிறு உருண்டைகள்; சுவற்றில்

அடித்தால் வெடிக்கும்! நல்ல உடற்பயிற்சி! அவற்றில் சில வெடிக்காது - காரணம் கெட்டியாகச் சுற்றாமல் லூசாக இருப்பதே.

இவற்றை வெடிக்கத்தான் அப்பா ஒரு ஐடியா செய்வார். எங்களில் ஒருவரை திண்ணை மீது ஏறச் சொல்லி, அருகில்

தரையில் ஒரு பாறாங்கல்லை வைத்து, அதில் வெடிக்காத வெங்காய வெடியை வைத்து, கையில் ஒரு சின்னக் கல்லைக்

கொடுத்து அதன் மீது போடச் சொல்லுவார். அதுவும் வெடிக்கும்; எங்கள் மீதும் தெறிக்காது!


எத்தனை வயதானாலும், இந்த நினைவுகள் என் மனத்தில் இனிக்கத்தான் செய்கின்றன! :decision: . . . :dance:
 

மனித நேயம் எங்கே?


மனிதராகப் பிறக்கும் எவருக்கும் தம் தாய் - தந்தையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை! நல்ல தாய் - தந்தையர்

கிடைப்பது அவரவர் செய்த புண்ணியம் எனக் கூறுவர். தாய் தந்தையர் எப்படி இருந்தாலும், அவர்களின் அந்திமக்

காலத்தில், ஆல மரத்தை அதன் விழுதுகள் காப்பது போலக் காப்பது பிள்ளைகளின் கடமை. இதுதான் நம் கலாச்சாரம்

நமக்குக் கற்றுக் கொடுப்பது.



எங்கள் சுற்றத்தில் ஒருவர் பற்றிய செய்தியே இது! அவருக்குத் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் பிறந்தனர். மூத்த மகன்

கல்லூரியில் சேரும் சமயம், ரஷ்ய நாட்டில் நல்ல வேலை அமைந்தது அவருக்கு. அவனை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு,

இளைய மகனுடன் ரஷ்யாவுக்குச் சென்றுவிட்டார். இதனால், தன் தந்தையின் மறைவுக்குப் பின், தன் வயதான
தாயைப்

பராமரிக்கத் தன் தம்பி தங்கைகளை வேண்டினார். இளையவன் படிப்பு ரஷ்ய நாட்டிலே முடிந்தது. காலாகாலத்தில்
இரு

மகன்களுக்கும் திருமணமும் நடந்தது. மூத்தவனுக்கு அவரே பெண் தேடி மணம் முடிக்க, இளையவன் செய்துகொண்டான்

காதல் திருமணம்.



அவரின் மனைவியின் காலம் முடியும் வரை, பிரச்சனைகள் பெரிதாக இல்லை. அதன் பின், அவரை வைத்துக்கொள்ள இரு

பிள்ளைகளும் மறுக்க, முதியோர் இல்லத்தை நாடினார். அவரது உடல் நிலை நன்றாக இருக்கும் வரை அவரை அனுமதித்த

அந்த இல்லம், அவர் வலிமை இழந்தவுடன், பிள்ளைகளிடம் அனுப்பிவிட்டது!



இரு பிள்ளைகளும், இவரைப் பந்தாடுவது போல, அடுத்தவரிடம் அனுப்பவே விழைந்தபோது, நாள் முழுதும் ஒருவரின்

உதவி தேவைப்படும் இவரால் சமாளிக்க முடியவில்லை. செய்தித் தாளில், அந்திமக் காலத்தில் உதவும் ஒரு முதியோர்

இல்லத்தின் விலாசத்தை அறிந்து, தொலைபேசியில் தொடர்புகொண்டு, அங்கு போய்ச் சேர்ந்துவிட்டார் சென்ற வாரம்!

கேட்கவே மிக வேதனைதான். இருந்தாலும் சிலர் கூறுவது: தன் தாயைப் பாதுக்காக்காது மறுத்ததின் பலனே இது!



'கலிகாலத்தில் கை மேல் பலன்', என்பது நிஜம்தானோ? :pout:
 

அடுத்தாத்தில் வாங்கியாச்சே!!


சில பெண்மணிகளின் மிக முக்கியமான வேலையே, அடுத்த வீட்டில் என்னென்ன வாங்கி வைக்கின்றார்கள் என்று 'அப்டேட்'

செய்து கொள்வதுதான்! அவர்கள் ஏதேனும் புதிதாக வாங்கினால், உடனே தானும் அதை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்

என்று, தன் மணாளனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்து, வாங்கிவிடுவார்கள். நான் இது போன்ற பல பெண்மணிகளைப்

பார்த்திருக்கிறேன். இவர்களை சந்தித்தால் பேசுவதற்கு வேறு விஷயமே கிடைக்காது. தன் வீட்டில் உள்ளவை நம்மிடம்

இருக்கின்றதா என்பதைச் 'செக்' செய்தே நம்மை ஒரு வழி செய்துவிடுவார்கள்!



ஒரு முறை இது போன்ற அவதார புருஷியை ஒரு திருமண வரவேற்பில் சந்தித்தேன். எப்பொழுதும் போல தன்

'அப்டேட்டிங்'கை ஆரம்பித்தாள். இதோ எங்கள் உரையாடல்:


'ராஜி, உங்க ஆத்தில ரைஸ் குக்கர்ல சமைப்பியா?'

'எங்கிட்ட பிரஷர் குக்கர்தான் இருக்கு!'

'ஆடோமெடிக் வாஷிங் மெஷின் வச்சிருக்கயோ?'

'அதுல நிறையத் தண்ணி வீணாகுமே; அதனால, எனக்கு 'செமி ஆடோமெடிக் மெஷின்'தான் பிடிக்கும்!'

'ரெண்டு பேர் சமையலுக்கு தினம் தினம் சமைக்கத் தேவையே இல்லை! நிறைய சமைச்சு வச்சுட்டு, அப்பப்போ 'மைக்ரோ

வேவ்'ல சூடு பண்ணிச் சாப்பிடலாம்! அப்படித்தானே?'


'மைக்ரோ வேவ் வாங்கலை! அப்பப்போ ஃப்ரெஷ் சமையல்தான்!'

'இன்டக்ஷன் ஸ்டவ் இல்லாம இந்தக் காலத்தில மேனேஜ் பண்ணவே முடியலைம்மா!'

'அதுவும் எங்கிட்ட இல்லை! காஸ் சிலின்டர் ரெண்டு இருக்கும்போது அது தேவையில்லை!'

'அப்போ ஒங்க ஆத்தில ஒண்ணுமே இல்லையா?'

இதற்கு மேல் என்னால் பொறுமையாக பதில் சொல்ல முடியவில்லை! ஒரு சின்னச் சிரிப்புடன் சொன்னேன், 'ஆமாம்!

கரெக்டாச் சொன்னேள்! எங்காத்துல ஒண்ணுமே இல்லாததால், ரொம்ப ஃப்ரீயா வீடு முழுக்கக் காலை வீசி நடக்கலாம்!

ஒரு தடவை வந்து பாருங்களேன்!'

மக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்கினால் போதாதோ? எதற்கு வரட்டு கௌரவம்? :horn:
 
Very interesting conversation Raji, a lot of us don't even cook in the microwave and serve and if they are doing it in India I am kind of surprised.. it is ok to heat a vegetable, but cooking for days and heating, O dear, I cook every day and so do my children and all the friends and family I know... women in India seem to think to have all that stuff is the in thing and brag it.. wow!! different world huh???
 
Hello RR Mam,excuse me for post 436,I did not respond for as I have held up more of clinical work.Mam ungala maadri nalla kavathi ,well verse tamil quotes ,pls pardon me . :embarassed: :p .I hope can try but give me some time.:biggrin1:
 
dear raji,

seriously speaking, i have always wondered how folks like me ever managed without a microwave.

It was 1985 and we were with our first son, then about 2 years old, in india for the first time for him. We are at my aunt’s house and this guy (thanks to microwave) was always used to the milk at always the same temperature.

Guess what, the aunt had no micro then. she heated the milk, and my son screamed it was too hot; then she cooled it, and he screamed again, that it was too cold. Exaspertedly shouted my aunt at me, நெட்டம் திருப்பிக்கரானே ஒன் புள்ளை என்னை.

She got her microwave a few years later, and came to appreciate its uses and is a regular user now. in Chennai ofcourse.

As per moi, I cook rice, boil milk, reheat, among other things with my microwave. Rice is always the most convenient for two people – one cup, high heat for 4 minutes, and 14 minutes at 0.2 and it always comes out with the same consistency (thai scented rice). I find pressure cooked rice too goey or overcooked.

Recently I had a chance to taste ponni basmati. I found it the most awesome rice, only next to the Nellore rice of my childhood days. Anyone tasted this?

ps. i had one relative who got angry with me for serving him microwaved rice. he was 100% it had radiation and i had reduced his lifespan!!
 

அடுத்தாத்தில் வாங்கியாச்சே!!


சில பெண்மணிகளின் மிக முக்கியமான வேலையே, அடுத்த வீட்டில் என்னென்ன வாங்கி வைக்கின்றார்கள் என்று 'அப்டேட்'

செய்து கொள்வதுதான்! அவர்கள் ஏதேனும் புதிதாக வாங்கினால், உடனே தானும் அதை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்

என்று, தன் மணாளனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்து, வாங்கிவிடுவார்கள். நான் இது போன்ற பல பெண்மணிகளைப்

பார்த்திருக்கிறேன். இவர்களை சந்தித்தால் பேசுவதற்கு வேறு விஷயமே கிடைக்காது. தன் வீட்டில் உள்ளவை நம்மிடம்

இருக்கின்றதா என்பதைச் 'செக்' செய்தே நம்மை ஒரு வழி செய்துவிடுவார்கள்!



ஒரு முறை இது போன்ற அவதார புருஷியை ஒரு திருமண வரவேற்பில் சந்தித்தேன். எப்பொழுதும் போல தன்

'அப்டேட்டிங்'கை ஆரம்பித்தாள். இதோ எங்கள் உரையாடல்:


'ராஜி, உங்க ஆத்தில ரைஸ் குக்கர்ல சமைப்பியா?'

'எங்கிட்ட பிரஷர் குக்கர்தான் இருக்கு!'

'ஆடோமெடிக் வாஷிங் மெஷின் வச்சிருக்கயோ?'

'அதுல நிறையத் தண்ணி வீணாகுமே; அதனால, எனக்கு 'செமி ஆடோமெடிக் மெஷின்'தான் பிடிக்கும்!'

'ரெண்டு பேர் சமையலுக்கு தினம் தினம் சமைக்கத் தேவையே இல்லை! நிறைய சமைச்சு வச்சுட்டு, அப்பப்போ 'மைக்ரோ

வேவ்'ல சூடு பண்ணிச் சாப்பிடலாம்! அப்படித்தானே?'


'மைக்ரோ வேவ் வாங்கலை! அப்பப்போ ஃப்ரெஷ் சமையல்தான்!'

'இன்டக்ஷன் ஸ்டவ் இல்லாம இந்தக் காலத்தில மேனேஜ் பண்ணவே முடியலைம்மா!'

'அதுவும் எங்கிட்ட இல்லை! காஸ் சிலின்டர் ரெண்டு இருக்கும்போது அது தேவையில்லை!'

'அப்போ ஒங்க ஆத்தில ஒண்ணுமே இல்லையா?'

இதற்கு மேல் என்னால் பொறுமையாக பதில் சொல்ல முடியவில்லை! ஒரு சின்னச் சிரிப்புடன் சொன்னேன், 'ஆமாம்!

கரெக்டாச் சொன்னேள்! எங்காத்துல ஒண்ணுமே இல்லாததால், ரொம்ப ஃப்ரீயா வீடு முழுக்கக் காலை வீசி நடக்கலாம்!

ஒரு தடவை வந்து பாருங்களேன்!'

மக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்கினால் போதாதோ? எதற்கு வரட்டு கௌரவம்? :horn:


ஆஹா...ஒண்ணு விட்டுபோச்சே....?? இதோ இப்பிடி...


நாளும் கிழமையும் போட்டுக்க..ஒரு

நகைநட்டுண்டா நேக்கு..

எட்டுக்கல்லு பேசரி போட்டா..

எடுப்பா இருக்கும் மூக்கு....


உங்க வீட்லே இருக்கா..?

எங்க வீட்லே இல்லே...

Tvk
 
not even a microwave? .........:)
Dear Sir,

Ram and I have many similar thoughts. We buy only the stuff essential for a comfortable living. Fridge, mixer grinder, grinder,

twin gas cylinders, good flooring, Air conditioners (only for guests' use), storage water heater, washing machine, TV, PC with

unlimited internet facility, telephone and cell phone are very essential and we have them. We do not worry about wearing very

expensive dresses or driving an expensive car! No debts and life is peaceful! :)
 
........... நாளும் கிழமையும் போட்டுக்க..ஒரு நகைநட்டுண்டா நேக்கு..

எட்டுக்கல்லு பேசரி போட்டா.. எடுப்பா இருக்கும் மூக்கு.... .........
தவக்கவி அவர்களே!
நிறைய சினிமாப் பாடல்கள் கேட்பீர்கள் போலிருக்கிறதே... எடுத்துவிடுகின்றீர்கள்! :bump2:

நிஜமாகவே, என் விருப்பத்திற்கு எதிராக என்னை மூக்குக் குத்திக்கச் சொன்ன ராமின் அம்மா, தன் எட்டுக்கல் பேசரி மற்றும்

ஒற்றைக்கல் மூக்குத்தியைக் காட்டி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளச் சொன்னார்! நான் தேர்வு செய்தது, அன்று

முதல் இன்று வரை
நான் அணிந்துள்ள ஒற்றைக் கல் மூக்குத்திதான்!
எங்கள் வீட்டில் நகையும் உண்டு 'நட்டு'ம் உண்டு!!

'ரிப்பேர்' வேலைகளில் 'நட்'டை முடுக்குவதே அடியேன்தான்!!
:pound:
 
தவக்கவி அவர்களே!
:bump2:

நிஜமாகவே, என் விருப்பத்திற்கு எதிராக என்னை மூக்குக் குத்திக்கச் சொன்ன ராமின் அம்மா, தன் எட்டுக்கல் பேசரி மற்றும்

ஒற்றைக்கல் மூக்குத்தியைக் காட்டி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளச் சொன்னார்! நான் தேர்வு செய்தது, அன்று

முதல் இன்று வரை
நான் அணிந்துள்ள ஒற்றைக் கல் மூக்குத்திதான்!
எங்கள் வீட்டில் நகையும் உண்டு 'நட்டு'ம் உண்டு!!

'ரிப்பேர்' வேலைகளில் 'நட்'டை முடுக்குவதே அடியேன்தான்!!
:pound:


"நிறைய சினிமாப் பாடல்கள் கேட்பீர்கள் போலிருக்கிறதே... எடுத்துவிடுகின்றீர்கள்!"


ஆமாம்...சொந்த சரக்கைவிட..ஓசி சரக்கு நல்லா இருக்கும் இல்லையா...?

Tvk
 

குலமும், குணமும்!


'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்று சொல்லி, தாழ்ந்த குலத்தோரை இளக்காரம் செய்வது உலக வழக்கம். ஆனால், ஒரு

தொழிலாளி எங்களிடம் வைத்திருந்த அன்பும், அபிமானமும் காட்டும், குலத்துக்கும், குணத்துக்கும் தொடர்
பில்லை என்பதை!


'கருப்பையா' அவரது பெயர். ஆளும் அதே நிறம்தான். 1984 - ம் ஆண்டு எங்கள் இனிய இல்லம் கட்டும் சமயம் அறிமுகமானவர்

இவர். 'கண்ணு' என்றுதான் என்னை அழைப்பார். எங்கள் குடும்பத்தின் மீது அளவில்லாத மதிப்பும், பாசமும் காட்டியவர். என்ன

அவருக்கு என்று தனியாகச் செய்தோம்? பார்த்த சமயமெல்லாம், 'நல்ல இருக்கீங்களா, கருப்பையா?' என்ற விசாரிப்பு மட்டுமே!

மண் வேலைக்கென்றே பிறந்தவர் போல, மண்ணில் கடினமாக உழைப்பார். கொத்தனாரின் எடுபிடிதான் அவர்.
நான் கடைக்குச்

செல்லும் வழியில் அவரின் வீடு. வீட்டு வாசலில் அமர்ந்த்திருந்தால், என்னவரைப் பற்றியும், மகனைப் பற்றியும் விசாரிப்பார்.

மகனின் திருமணம் ஆனவுடன், அவருக்கும் ஒரு புது வேஷ்டி சட்டை அளித்தேன். அதற்கு எத்தனை சந்தோஷப்பட்டார் என்று

எழுதி வர்ணிப்பது கடினம்.



சென்ற வாரம் கடைக்குச் செல்லும் வழியில், ஒரு 'போஸ்டரில்' அவரின் படம்! கண்ணீர் அஞ்சலி!! அடடா! அதற்கு இரண்டு நாட்கள்

முன்புதான் என்னிடம் பேசிக்கொண்டே வந்தார்! அனாயாச மரணம்தான்! அவர் வீட்டில் வேறு யாரையும் எனக்குத் தெரியாது.

எனவே, ஆறுதல் யாரிடம் சொல்வதெனவும் தெரியவில்லை.

ஆண்டவனை வேண்டினேன் அவரது ஆத்மாவின் சாந்திக்காக! :pray2: . . . :rip:
 

பிள்ளை மனம்....


'பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்ற பழமொழியை அறியாதார் யாருமில்லை! ஒரு பாறாங்கல்லு மனதைப்

பற்றிய செய்தியே இது!



சிங்காரச் சென்னையில் வாழ்ந்துவந்த பெற்றோரில், தந்தை இறந்துவிட, சடங்குகள் முடிந்த கையோடு அம்மாவை

மும்பைக்கு அழைத்துச் சென்றான் பிள்ளை. அம்மாவுக்கோ மிக்க மகிழ்ச்சி - துணையை இழந்த வேளையில் காப்பற்ற

மகன் வந்தானே என்றுதான்! சில மாதங்கள் சென்றதும், சிங். சென்னையில் உள்ள வீட்டை விற்று, வங்கியில் உள்ள

தொகைகளையும் மாற்றிவிடலாம் என்று அம்மாவிடம் கேட்டான் பிள்ளை. உடனே, தன் முடிவு காலம் வரை மகன்

காப்பாற்றுவான் என்று நம்பி, அம்மாவும் சம்மதித்தாள். சென்னைக்கு வந்து, எல்லா வேலைகளையும் செவ்வனே

முடித்து, சில பல பேப்பர்களில் அம்மாவின் கையெழுத்தை வாங்கினான் மகன். ஊருக்குச் செல்லும் நாள் வந்தது.

ரயில் நிலையத்தில் அம்மாவை ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு, 'சில நிமிடங்களில் வருகிறேன்', என்று கூறிச்

சென்ற மகன், மாயமாய் மறைந்துவிட்டான்! ரயிலும் புறப்பட்டுச் சென்றுவிட, அம்மா வேறு வழியின்றி, தன் நண்பரின்

வீட்டுக்குச் சென்றாள். மகன் அன்று இரவில், தான் விமானம் ஏறி மும்பைக்குச் சென்றதாகத் தெரிவித்தான். ஒன்றும்

புரியாத அம்மா, மறு நாள் வங்கியில் பணம் எடுக்கச் சென்றபோது ஓர் அதிர்ச்சி! பணம் மொத்தமும் மகன் பெயருக்கு

மாற்றப்பட்டுவிட்டது, இவரது கையெழுத்துடன்! மொத்த சொத்தையும் மகன் அபகரித்த செய்தி எத்தனை கொடிய

அதிர்ச்சியாக இருக்கும்? நண்பர்கள் சிலரின் உதவியுடன், கோர்ட்
டுக்குச் சென்று, தன் கணவன் சம்பாதித்த அனைத்து

சொத்துக்களையும் மீட்டுவிட்டார் அந்த அன்னை!


இப்பொழுது ஒரு முதியோர் இல்லத்தில் அமைதியாக வாழும் அவர், தன் காலம் முடிந்ததும், சொத்து முழுவதும் ஓர்

அனாதை இல்லத்திற்கே என்று பதிவு
ம் செய்துவிட்டார்!
 
I admire the smart mother and disgusted with the ungrateful son.. there are so many stories.. someone I know adopted his brother's son and after all the years, the mother remains and she who lived like a queen has been pushed into old age home where it is not the best of all places.. it is nothing she was used to.. but she seems to prefer staying back there, only because she does not have to listen to this ungrateful son's curse and angry words day in and out " when are you going to die" he tried to break her spirit by isolating her away from people who care for her and I admire her guts to face all that has happened to her..
 

Latest posts

Latest ads

Back
Top