சிந்தனை தந்த இந்திர ஜாலம்
#078. நெருப்பில் நெய்
அசுர குருவின் ஒரே அருமை மகள்
அசுரர்களில் அழகியான தேவயானி.
தந்தையின் அன்பில் திளைத்தவள்,
தன்னையே எண்ணி கர்வமுற்றாள்.
சர்மிஷ்டா அசுர அரசிளங்குமரி.
தர்மவான் அசுர அரசனும், அவளும்
சென்றனர் குலகுரு ஆஸ்ரமத்துக்கு,
அன்றொரு நாள், மன விருப்பத்துடனே.
சென்றனர் நீராட இவ்விளம்பெண்கள்,
மன்னன், குலகுருவின் அனுமதியுடன்.
களைந்த ஆடைகள் காற்றில் பறக்கவே,
விரைந்து அணிந்தனர் உடைகளை மாற்றி.
குலகுரு மகளோ பெரும் கோபக்காரி;
குலத்தின் இளவரசியை அவள் பழிக்கவே,
கோபம் கொண்ட இளவரசியும், அவளைப்
பாவம் பாராமல் கிணற்றில் தள்ளினாள்.
வழியே வந்த அரசன் யயாதியின்
விழிகளில் பட்டாள் குருவின் பெண்;
கணத்தில் காத்த அரசனிடம், தன்னை
மணக்கும்படிக் கோரினாள் தேவயானி.
குல வேறுபாடுகள் ஒரு புறம்; மற்றும்
குலகுருவின் அதீதக் கோபம் மறு புறம்.
பயந்த அரசன் மறுத்துவிட்டான்; மேலும்
தயங்கியபடியே அவன் சென்றுவிட்டான்.
பிடிவாதக்காரி தேவயானி; அதனால்
விடவில்லை அத்துடன் விஷயங்களை.
அரச குமாரியைத் தன் சேடி ஆக்கினாள்;
அரசன் யயாதியை மணந்து கொண்டாள்.
தேவயானிக்கு உண்டு இரண்டு மகன்கள்;
தேவயானிக்குத் தெரியாமல் யயாதி
மணந்துகொண்ட அதே அரசகுமாரிக்கு,
குணவான்கள் மூன்று மகன்கள் உண்டு.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்;
பலவான் அரசனின் வேடம் கலையவே,
தந்தையைக் கொண்டு சபித்துவிட்டாள்,
தாளாத முதுமையை அரசன் அடையும்படி.
தள்ளாத கிழவன் ஆனபோதும், மனம்
கொள்ளாத காம வசப்பட்ட மன்னன்,
இளமையைத் தந்து, ஒரு மகனேனும் தன்
முதுமையை பெறும்படிக் கெஞ்சினான்.
நான்கு மூத்த மகன்கள் மறுத்துவிடவே,
முன்வந்தான் கடைக்குட்டி புரு என்பான்.
மன்னனின் தள்ளாமையைத் தான் பெற்றுத்
தன் இளமையைத் தன் தந்தைக்குத் தந்தான்.
கேளிக்கைகளில் காலம் கழித்த மன்னன்,
தெளிவடைந்து அறிந்தான் ஒரு திருநாளில்,
ஆசைகளை நிறைவேற்றுவது என்பது
ஓசையுடன் எரியும் தீயில் இடும் நெய்யே!
மகனுக்கு மீண்டும் இளமையைத் தந்து,
மன்னனாக மணி மகுடமும் சூட்டினான்.
ஒரு முள்ளை, ஒரு முள்ளால் எடுக்கலாம்,
நெருப்பை, நெய்யால் அழிக்க முடியுமா?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
#078. FIRE AND GHEE.
Devayani was the daughter of Sukracharya-the kula guru of the asurAs. CharmishtA was the princess, the daughter of the asurA king.
One day the king and his daughter visited the guru’s ashram. The two girls went out for a bath. A fierce wind blew and their dresses got mixed up.
Devayani who was very proud and arrogant, scolded the princess for this mix up. The princess too got angry, pushed her into a dry well and went away.
Devayani was saved from the well by king YayAti. She requested him to marry her, but he was afraid of the terrible wrath of the Guru and went away.
Devayani was an adamant girl. She would always manipulate her father and have her way. She got married to king YayAti and made the princess Charmishta one of her maid servants.
Devayani got two sons. The princess Charmishta – who was reduced to a mere maid servant – met the king in private and told him her sad tale. YayAti married her also secretly and they had three sons.
One day the King’s treachery was exposed and the kula guru cursed him to attain premature old age. Later he took pity on the king and said that he could exchange his old age with someone’s youth.
YayAti begged all his five sons to give their youth in exchange for his old age. Four of the five sons bluntly refused while the youngest son Puru agreed for this weird exchange.
The king becomes young once again an enjoyed the pleasure of life with his two wives. But he never really felt satisfied or contented.
One fine day it dawned on him that desires are like a roaring fire and enjoyment was like pouring ghee on the fire.
Can ghee ever extinguish a fire?
He returned his youth to Puru and accepted his old age. Puru was made the new king and ruled the land wisely.